Loading

மதியம் இரண்டு மணி ஆகியும் இன்னும் அறுவை சிகிச்சை நடந்து கொண்டு இருந்தது நிவேதாவிற்கு… சாப்பிட யாரும் எதுவும் வேணாம் எனக் கூறினர்… அரசுவின் அம்மா தான் அனைவரையும் வற்புறுத்தி உணவை உண்ண கொடுத்தார்… அவரின் வற்புறுத்தலுக்கு இணங்கி அனைவரும் கொஞ்சம் உணவை உண்டனர்…

ஆனால் அதி இன்னும் பச்சை தண்ணி கூட குடிக்கவில்லை நேற்று இரவில் இருந்து…… எங்கே அவனுக்கு எதுவோ ஆகி விடுமோ என அனைவரும் அஞ்சினர்… மாறன் தான் கட்டாய படுத்தி  ஒரு டம்ளர் ஜூஸ்  குடிக்க வைத்தான்…

அதி எந்த உணர்வையும் வெளிக்காட்டவில்லை…. ஆனால் மனதினுள் “அம்மு அம்மு”என்று மந்திரம் போல் உச்சரித்து கொண்டு இருந்தான்…. அனைவரும் நிவேதாவுக்கு அறுவை சிகிச்சை செய்யும் அறையை தான் பார்த்து கொண்டிருந்தனர்…

நீண்ட நேரம் காத்திருப்புக்குப் பின் மருத்துவ குழு அந்த அறையை விட்டு வெளியே வந்தது…. அனைவரும் அவர்களை சூழ்ந்து கொண்டனர்…

மருத்துவர் அவர்களிடம் “பயப்பட ஒன்னும் இல்ல…. சக்ஸஸ்புள்ளா ஆபரேசன் பண்ணியாச்சு… நல்லவேல இதயத்துல புல்லட் படல… கொஞ்சம் கீழ தான் பட்டு இருக்கு.. அதுனால ஈஸியா ஆபரேசன் பண்ணியாச்சு…

அப்பறம்  தலைல கொஞ்சம் அடி…. எல்லாம் ஸ்கேன் பண்ணி பாத்தாச்சு… அங்கேயும்  எந்த ப்ரோபலமும் இல்ல…  வெளிய மட்டும் அடி…

நாளைக்கு வரைக்கும் ஐசியூல இருக்கட்டும்…. அதுக்கு அப்பறம் நார்மல் ரூம்க்கு ஷிப்ட்  பண்ணிடலாம்  கொஞ்ச நேரம் கழிச்சி ரெண்டு  மட்டும் போய் பாத்துட்டு வாங்க…. ரொம்ப நேரம் வேண்டாம்”  என்று கூறி அவர்கள் விடைபெற்று கொண்டனர்…

அப்போது  தான் அனைவருக்கும் மூச்சே வந்தது…. அனைவரும் அதியை போய் பார்த்து வர கூறினர்… ஆனால் அவன் அந்த இடத்தை விட்டு அசையவில்லை….

வசும்மாவும் சிவாம்மா மட்டும் உள்ளே போய் பார்த்துவிட்டு வந்தனர்… வாடிய கொடி போல் மயக்கத்தில் படுத்து இருந்தாள்… தலையில் கட்டு போட்டு இருந்தனர்…

அதி எதுவும் யாருடனும் பேசவில்லை… தலையை தன் கைகளால் தாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தான்….  பிறகு என்ன நினைத்தானோ அங்கிருந்து வேகமாக எழுந்து வெளியே சென்றுவிட்டான்…..

 மருத்துவரிடம் போய் மீண்டும் எந்த பிரச்சனையும் இல்லையே என்று கேட்டு தெளிவு படுத்திகொண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறிவிட்டான்….

அரசு சிறிதுநேரம் முன்பு தான் மருத்துவமனை வந்து இருந்தான்…. அவன் வந்ததை கூட கவனிக்காமல் அரசுக்கு அழைத்து  “சூர்யா எங்க இருக்க…. ஹாஸ்பிடல் பக்கத்துல இருக்க பார்க் வா… பத்து நிமிஷத்துல இங்க இருக்கனும்” என கூறி வைத்துவிட்டான் அவனை பேசவே விடாமல்….

அதி பேசியதை கேட்டு அரசு தலையில் அடித்து கொண்டான்… அதை பார்த்து மாறன் மற்ரும் நிதிஷ் இருவரும் அவனிடம் கேட்டனர்…

” இல்ல மாமா நான் ஹாஸ்பிடல் வர அப்ப அவன தாண்டி தான் வந்தேன்… கூப்பிட கூப்பிட காது கேட்காத மாதிரி போயிட்டு இப்ப எங்க இருக்க அப்டினு கேட்குறான்.. நான் கூட என்மேல இருக்குற கோவத்துல தான் போறான்னு பாத்தா எங்கயோ வேற ஒரு உலகத்துல இருக்குற மாதிரி போறான்” என்று சலித்து கொண்டே கூறினான்…

மாறனும் அவனிடம் “பாப்பாவை பாக்க போடானு சொன்னா இடத்தை விட்டு அசையவே இல்லை….  அப்பறம் பாத்தா எங்கயோ வேகமா எழுந்து போயிட்டான்… கூப்பிட்டா திரும்பிகூட பாக்கல” என்று கூறினான்…

“சரி டா நீ போ அவன் கூப்பிட்டான்ல… எப்படியும் அந்த பொண்ணு அந்த எம்எல்ஏவை பத்தி தான் கேட்க போறான்… பயங்கர கோவத்துல இருப்பான் அதுனால அவனை பாத்துக்கோ” என்று மாறன் அரசுவிடம் கூறினான்……

அந்த எம்எல்ஏவை கைது செய்ததற்குப் பயங்கர போராட்டம் சேலம் முழுவதும் நடந்து கொண்டிருந்தது…  கட்சி மேலிடத்தில் இருந்து அழுத்தம் குடுத்து கொண்டிருந்தனர் அந்த எம்எல்ஏவை விடுவிக்க சொல்லி… ஆனால் நிதிஷ் மற்றும் சுந்தரப்பா இருவரும் தங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி அதை தடுத்துவிட்டனர்….

அரசுவும் அதி சொன்ன பார்க்கிற்கு சென்றான்… அங்கு பேசவேண்டாம் என நினைத்துவிட்டு அதியின் வீட்டிற்கு இருவரும் அரசுவின் காரில் சென்றனர்…இருவரும் அமைதியாக சென்றனர்….  வீட்டிற்கு சென்றவுடன்  அதியும் அரசுவும் எதுவும் பேசாமல் தாங்கள் சேகரித்த விசயத்தைப் பார்வையிட்டனர்…..

அதை அரசுவின் அப்பா எஸ்பி மணிகண்டனுக்கு அனுப்பி அவர் ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்துவிட்டு கட்சி மேலிடத்துக்கும் மீடியாவுக்கும் அனுப்ப பட்டது…  தற்பொழுது எம்எல்ஏவை ஆதரித்து நடந்த போராட்டம் மாறி எம்எல்ஏவை எதிர்த்து போராட்டம் துவங்கியது…

கட்சி மேலிடம் அந்த எம்எல்ஏவை கட்சியில் இருந்து நீக்கி இருந்தது… அப்படி என்ன அந்த எம்எல்ஏ செய்தார்… ( இனிமே என எம்எல்ஏ பேரு சொல்லியே சொல்லிடலாம்)  வாங்க வாங்க அந்த பால்பாண்டி என்ன பண்ணான் அப்டினு பாக்கலாம்….

சாதாரண கிராமத்தில் பிறந்து சிறு வயதுலேயே  திருட்டு போன்ற பல வேலைகளை பார்த்து கட்சியில் தொண்டனாக சேர்ந்து கூட இருந்தவர்களின்  முதுகில் குத்தி ஐந்து வருடத்தில் கவுன்சிலராக ஆகி மாவட்ட தலைவர் பதவிக்காக அந்த பதவியில் இருந்தவரை கொன்று அதை தற்கொலையாக மாற்றி அந்த பதவிக்கு வந்தான்…

பிறகு அந்த தொகுதி எம்எல்ஏவுடன் ஒரு நிகழ்ச்சிகாக சென்னை சென்றுவிட்டு திரும்பிவரும் போது வேண்டுமென்றே காரை ஆக்சிடென்ட் செய்து அந்த எம்எல்ஏவை கொன்று அவனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை போல் அனைவருக்கும் காட்டி பரிதாபத்தில் எம்எல்ஏ  ஆகினான்….   சேலத்தில் பத்து வருடமாக எம்எல்ஏவாக உள்ளான்….

இந்த பத்து வருடத்தில் பல வேலைகளை செய்து உள்ளான்… நில அபகரிப்பு, தனக்கு எதிராக இருந்த ஆட்களை கொன்றது, மக்களுக்கு தரப்பட்ட நிதியை சுருட்டியது….என பல வேலைகள் உள்ளன….

தற்போது அவன் கொலை செய்த குடும்பத்தினர் அவனுக்கு எதிராக போர் கொடி தூக்கி போராட்டம் செய்ய ஆரம்பித்தனர்…

அவனுக்கு எதிராக நடக்கும் போராட்டம் தெரியாமல் நாம் இங்கு இருந்து தப்பித்து போனால் மக்களிடம் நாடகம் ஆடி தப்பித்துவிடலாம் என நினைத்து சிறையில் இருந்து தப்பித்து இருந்தான் எக்ஸ் எம்எல்ஏ பால்பாண்டி….

சிறிது நேரத்தில் தன் உயிர் போக போகிறது என தெரியாமல்  தன்னுடன் இருந்த மற்ற இருவரிடம் நான் இங்கு இருந்து போய் உங்களை வெளியே கொண்டு வருகிறேன் என்று கூறி இவர்களை அடைத்து வைத்து இருந்த இடத்தில இருந்து தப்பித்து இருந்தான்…

அவர்களை ஆள் நடமாட்டம்  குறைந்த இடத்தில் தான் கைது செய்து வைத்து இருந்தனர்… அதனால் கொஞ்ச நேரம் நடந்து தான் ஆள் நடமாட்டம் இருக்கும் இடத்திற்கு வேண்டும்….

அங்கு வந்தவுடன் மக்கள் அங்கு அங்கு சேர்ந்து போராட்டம் நடத்தி கொண்டிருந்தனர்…. அதை பார்த்து தான் சிறைக்கு சென்றதால் இந்த போராட்டம் என நினைத்து அவர்கள்முன் போய் நின்றான்… அவ்வளவு தான் அங்கு போராட்டம் செய்து கொண்டிருந்த மக்கள் அவனை சூழ்ந்து கொண்டு அடித்தே கொன்றுவிட்டனர்…

அவன் இறந்துவிட்டான் என தெரிந்து அங்கிருந்தவர்கள் எல்லாம் துண்டை காணோம் துணியைக் காணோம் என தெறித்து ஓடிவிட்டார்கள்….

 அவன் தப்பித்துவிட்டான் என தெரிந்தவுடன் அதி அங்கிருக்கும் போலீஸ்காரர்களிடம் அந்த இடத்தில நிற்க வேண்டாம்.. அவனுக்கான தண்டனை மக்கள் பார்த்துகொள்ளவர்கள் என சொல்லி அந்த இடத்தில இருந்து போக சொல்லிவிட்டான்

அவன் கணிப்பின்படி மக்களும் அவனை தாங்களே கொன்றுவிட்டனர்…..  இதை கேள்விப்பட்டு அனாமிகாவின் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் ஆகி மருத்துவமனை கொண்டு செல்லும் போதே தன் உயிரை துறந்து விட்டார்….

அனாமிகா தன் அப்பா எப்படியும் தன்னை வெளியே கொண்டுவந்து விடுவார் என நினைத்து சந்தோசமாக இருந்தாள்….  அவளுக்கு தெரியவில்லை அவள் அப்பா அம்மா இருவரும் உயிரோடு இல்லை என… தெரிந்தால் அவள் நிலை?????

அதி அவளுக்கு தர போகும் தண்டனை என்ன…???? (அது இப்போ வேணாம் அடுத்த எபில பாக்கலாம்… ஒரே எபில எனக்கு அவளுக்கு தண்டனை தர விருப்பம் இல்ல…)

.

.

.

.

பதினைந்து நாட்கள்  சென்று இருந்தது….. நிவேதா ஐசியூவில் இருந்து நார்மல் அறைக்கு மாறி இருந்தாள்…. மாறன் அப்பத்தா தாத்தா அஜய் மற்றும் சுந்தர் அப்பா மட்டும் ஊருக்கு கிளம்பி இருந்தனர்…  சிவாம்மா மீனாட்சி தாரா பாப்பா மூவரும் சேலத்தில் இருந்துவிட்டனர் நிவேதாவை பார்த்து கொள்வதற்காக ….

காலேஜ் செல்ல மாட்டேன் என சொன்ன பிரியாவை வற்புறுத்தி கல்லூரிக்கு அனுப்பி விட்டனர்… நிதிஷ் எம்டியாக  கல்லூரிக்கு சென்றான்… நிவேதாவுக்கு உதவிய அந்த பேராசிரியரை எச்ஓடியாக பதவி உயர்வு குடுத்து விட்டான்…. எம்டியாக  இருந்தாலும் அவன் அவன் வகுப்பும் எடுத்து கொண்டு தான் இருந்தான்….

மதுரையில் இருப்பவர்கள் தினமும் வீடியோ கால் பேசிவிடுவர்.. சேலத்தில் இருப்பவர்கள் தினமும் ஒரு தடவை பார்த்துவிட்டு செல்வர்… தாரா பாப்பா அகில் மற்றும் ஷாலுவுடன் நெருங்கிவிட்டாள்… எனவே அவள் மீனாட்சியை தேடுவது இல்லை..

பதினைந்து நாள் மருத்துவமனையில் இருந்துவிட்டு பிறகு வீட்டிற்கு செல்லலாம் என மருத்துவர் கூறிவிட்டார்… வீட்டிற்கு சென்றும் ஒருவாரம் வீட்டில் ஓய்வு எடுத்து விட்டு அன்றாட பணியினை செய்யலாம் எனக் கூறிவிட்டார்….

அவளுக்கு  தலையில் போட பட்டு இருந்த கட்டு  நீக்கி இருந்தனர்… ஆபரேசன் செய்த இடத்தில எல்லாம் கரெக்டாக உள்ளதா என ஆய்வு செய்துவிட்டு அவளை டிஸ்சார்ஜ் செய்து விட்டனர்…

அவளை அழைத்து செல்ல அனைவரும் வந்து விட்டனர்… மதுரையில் இருந்து கூட வந்துவிட்டனர்… அஜய் மற்றும் தாத்தா இருவர் மட்டும் வரவில்லை… அஜய்க்கு பள்ளி இருந்ததால் அவன் வரவைல்லை… அவனுக்கு துணையாக தாத்தா இருந்துவிட்டார்…

அவளுக்காக அனைவரும் வந்துவிட்டனர்… ஒருவனை தவிர… அது வேறு யாரும் இல்லை அவளின் பாவா தான்…  ஆபரேசன் செய்த தினத்தில் சென்றவன் தான் அதன்பிறகுக்கு மருத்துவமனை வரவில்லை… யார் என்ன திட்டியும் அவன் மருத்துவமனை செல்லவில்லை… வசும்மாவிற்கு மட்டும் அழைத்து அவளின் உடல்நலத்தை கேட்டுவிடுவான் நாள் தவறாமல்….

நிவேதா தான் அவனை எதிர்பார்த்து ஏமாந்து போவாள்…. நாள் போக போக அவன் வராமல் இருக்கும் காரணத்தை தெரிந்து கொண்டு அமைதியாகி விட்டாள்… அவனை திட்டும் சிவாம்மா மீனாட்சியை கூட திட்டவிடமாட்டாள்….

அனைவரும் வீட்டில் இருந்தனர்…  நிதிஷ் பிரியா வசும்மா மீனாட்சி தாரா பாப்பா ஒரு காரிலும் சிவாம்மா நிவேதா இருவரும் அரசுவின் காரில் வந்தனர்… மற்றவர்கள் வீட்டிலேயே இருந்து கொண்டனர்….

அவர்கள் வருவதற்கும் அதி வெளியே சென்றுவிட்டு வருவதற்கும் சரியாக இருந்தது… ஆனால் அதி காரை விட்டு இறங்க வில்லை… நிவேதா அவன் காரையே பார்த்து கொண்டு உள்ளே சென்றாள்… அதன்பிறகு தான் அதி உள்ளே நுழைந்தான்…. அவனுடன் அரசுவும் உள் நுழைந்தான்….

ஆனால் அங்கு நிவேதாவுடன் பேசிக் கொண்டு இருந்தவளைப் பார்த்து ஒருவன் திருட்டுமுழியுடன் நின்றுவிட்டான்…..

யார் அவள்??????  அவளை பார்த்து யார் முழித்தனர் அதியா???  அரசுவா????  அதி ஏன் நிவேதாவை பார்க்க மருத்துவமனை செல்லவில்லை?????????

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்