
மேலூர் ஊருக்கு நடுவில் உள்ள பெரிய வீட்டில்… “மாமா சீக்கிரம் எந்திரிங்க … உங்க மச்சான் வரானாம்… மாமா எந்திரி” என்று தன் கணவனை எழுப்பிக் கொண்டு இருந்தாள் தங்க மீனாட்சி..
“சரிடி அவன் வரட்டும்.. அது வரைக்கும் என்ன கவனி…” என்று அவளை இழுத்து தன் மீது போட்டு கொண்டான் மாறவர்மன்…
“ஐயோ மாமா .. பாப்பா எழுந்துவா.. என்ன விடு… அவன் வேற வந்துடுவான்” என்று அவனிடம் இருந்து விடு பட போராடி கொண்டு இருந்தாள்…
“போடி வர வர என்னை நீ கண்டுக்கவே மாட்டிங்குற… எப்ப பாத்தாலும் பாப்பாவ கட்டிட்டு அழுவுற… இல்லனா வீட்ட கட்டிட்டு அழுவுற.. என்கிட்ட நின்னு பேச கூட மாட்டிங்குற… போ நான் கோச்சிக்கிட்டு அந்த ரூம்க்கு போய் தூங்குறேன் ..” என்று அறையை விட்டு வெளியே செல்ல முயன்றான்…
“மாமா…”
“என்ன டி” என்றான் திரும்பாமல்…
“ம.. ச்… சா.. ன்…” என்று மீனாட்சி கூப்பிட்டவுடன்..சட்டென திரும்பி “தங்கம்” என்று அவளை அணைத்து நெற்றியில் முத்தம் இட்டான்…
அதற்குள் வீட்டுக்கு வெளிய வண்டி சத்தம் கேட்குது… “அவன் வந்துட்டான்… பாரு மாமா… வந்த உடனே உன்ன தான் கூப்பிடுவான்…”
அவள் சொன்ன மாதிரி “மாமா மாமா… எங்க இருக்க… அக்கா மாமா எங்க..”
“டேய் உன் அக்காக்காரி இங்க இருக்கேன்.. நீ என்ன டா உன் மாமன தேடுற..”
“பே…. மாமா…” என்று அவன் கத்த ஆரம்பிக்க “டேய் நில்லுடா வரேன்…”என்று அறையை விட்டு வெளியே வந்தான் மாறன்…
“நான் உன்ன மிஸ் பண்ணுவேன் மாமா…” என்று அணைத்துக் கொண்டான்…
“சரி டா… அங்க போய் சூதானமா இருக்கனும் டா….. அங்க போய் உன் சேட்டயை காட்ட கூடாது சரியா…. “
” சரி மாமா… அக்கோய் மாமாவை பாத்துக்கோ.. சரியா… “
“போடா டேய் நான் என் புருஷன பாத்துப்பேன்…”
வீரா.. விளையாட்டுக்கு சொல்லல டா…. உன் ரவுச அங்க கூட்டாத…. சொல்லிட்டேன்… சூதானமா இரு.. அங்கபோய் எல்லாத்து கிட்டயும் சுல்லு சுல்லுனு பேசாத சரியா….”
“அதி நில்லு காபி போடுறேன் குடிச்சிட்டு போடா.. “
“இல்ல க்கா வேணாம் வர அப்ப குடிச்சிட்டு தான் வந்தேன்..”
“சரி மாமா கிளம்புறேன் க்கா..தாரா குட்டிய பார்த்துகுங்க…”
“சரிடா.. “
“லீவு கிடைச்சா பறந்து வந்துவேன் மதுரைக்கு.. கிளம்புறேன் க்கா… வரேன் மாமா….”
“வீரா…”
“என்ன மாமா …” என்று திரும்பாமல் கேட்டான்…
“இங்க வா… “என்று கை விரித்து நின்றான் மாறவர்மன்….
இவனும் சிறுபிள்ளை போல் போய் அணைத்து விட்டு … அனைவரிடமும் பிரியாவிடை பெற்று சேலம் நோக்கி தன் புல்லட்டை விடுத்தான்
.
.
.
.
இங்கு சேலத்தில் நான்கரை மணிக்கு வசும்மாவும் நிதிஷும் சாந்தா வீட்டிற்கு வந்தனர் ஆனால் வீடு பூட்டி இருந்தது.. “என்ன மீ வீடு பூட்டி இருக்கு குட்டிமா வர நேரம் இன்னும் ஆள காணோம்… கால் பண்ணு மா… “
“இல்ல வேணாம் என்ன பண்றாங்கனு பாக்கலாம்….”
ஐந்து மணிக்கு நிவேதா வீட்டிற்கு வந்தாள் அவள் கூடவே பிரியாவும் வண்டியில் வந்தாள்…
“என்ன ஏஞ்சல் வீடு பூட்டி இருக்கு…. “
“தெரியலடி…”
“நீ கெளம்பு நான் பாத்துக்குறேன்… “
“ச்சு… அமைதியா இரு நான் அவங்க வர வரைக்கும் இருக்கேன்.. அவங்க வர வரவு தனியா இருப்பியா….”
“சரி ஒரு ரெண்டு நிமிஷம்… வாசல் கூட்டிட்டு வரேன்”என்று பெரிய வாசலைக் கூட்டி கோலம் போட்டாள்… ஆறு மணி ஆனது அப்போதும் வரவில்லை இரண்டு பேரும்…..
“ஏஞ்சல் என்ன ஆச்சி ஏன் நெளியுற…”
“அண்ணிம்மா எனக்கு வயிறு ஒரு மாதிரி இருக்கு.. வீட்டுக்கு தூரம் ஆகிட்டனு நெனைக்கிறேன்.. இப்ப பாத்ரூம் போனும்… வீடு வேற பூட்டி இருக்கு..”
“சரி வா சாலு பாப்பா வீட்டுக்கு போலாம்….” என்று அவளை அழைத்து கொண்டு பக்கத்தில் இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்றாள் பிரியா…
“க்கா க்கா…” என்று அந்த வீட்டில் உள்ளவரை அழைத்தாள்..
“சொல்லு பிரியா… ” என அவரும் கேட்டவாரு வெளியில் வந்தார்…
“வா பிரியா…”
“க்கா வீடு பூட்டி இருக்கு.. இவ பீரியட்ஸ் ஆகிட்டா போல ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணனும்…”
“சரிடா உள்ள வா … எல்லாம் இருக்குல இல்லா போய் வாங்கிட்டு வரட்டா..”
“இல்லக்கா எல்லாம் இருக்கு”
“உள்ள போடா… பிரியா நீயும் உள்ள வா ..”
“இல்லக்கா ஒரு போன் பேசிட்டு வரேன்.. “
“சரி டா போ… உங்க ரெண்டு பேருக்கும்…. டீ வைக்குறேன்…. “
“இல்ல க்கா வேணாம்…. மாமாவ வர சொல்றேன் வீட்டுக்கு கூட்டிட்டு போக.. “
“சரி டா… நான் உள்ள போறேன்… ரெண்டும் ஹோம் ஒர்க் பண்ணாம அட்டூழியம் பண்ணிட்டு இருக்குங்க.. அத பாக்குறேன்…”
“சரி க்கா….” என்று கூறிவிட்டு நிதிஷிற்கு “ஹலோ மாமா எங்க இருக்க….”
“நீ எங்க இருக்கயோ அங்க தான் இருக்கோம் நானும் அம்மாவும்…”
“அப்டினா வாங்க வீட்டுக்கு போலாம் அவளை கூட்டிட்டு…”
“பொருமை டா… இன்னும் அவங்க யாரும் வரல நீ இருந்ததுனால சரி.. நீயும் இல்லனா என்ன ஆகி இருக்கும்..என்ன பண்றங்கனு பாக்கலாம்…”
“ம் சரி மாமா…”
“நாங்க ரெண்டு பேர் இருக்குறது யாருக்கும் தெரிய கூடாது….”
“ம்ம் ஓகே மாமா….”
இரவு ஏழு மணி ஆனது அப்பயும் இரண்டு பேரும் வரவில்லை… ஏழே கால் மணிக்கு ப்ரியா நிவேதா உறங்கும் அறைக்குச் சென்றாள்.. அங்கு நிவேதா அரை மயக்கதில் இருந்தாள்…
“நிவிம்மா என்ன டா ஆச்சி…”
“அண்ணிம்மா ரொம்ப வயிறு வலிக்குது…ரொம்ப ப்ளீட் ஆகுது ம்மா.. மயக்கமா இருக்கு ம்மா.. என்னால முடியல…”
“உன் அண்ணாவும் வசும்மாவும் வெளிய கார்ல தான் வெயிட் பண்றாங்க..
“பிரியா போய் அம்மாவையும் தம்பியம் கூட்டிட்டு வா..”
“இல்ல க்கா… இவ அம்மாவும் தங்கச்சியும் இன்னும் வரல… அவங்க வந்ததும் இவள வீட்டுக்குக் கூட்டிட்டு போறேன்.. ஒரு வாரம் அவள நல்லா பாத்துக்கணும்”
“சரி டா நில்லு உங்களுக்கு டின்னர் ரெடி பண்றேன்..”
“இல்ல க்கா இவளுக்கு ரொம்ப வயிறு வலிக்குது போல.. போற அப்ப ஹாஸ்பிடல் போயிட்டு தான் போனும்… சரி க்கா இப்ப இவ தூங்கிட்டா… நான் போய் கார்க்கு போறேன்… அவங்க பேரு வந்தது அவங்களுக்குத் தெரிய வேணாம் ..”
“சரி டா இப்பயே ரெண்டும் தூங்கிடிச்சிங்க நான் போய் அவங்க கூட இருக்கேன்.. நீ போ”
“சரி க்கா” என்று கூறி காருக்குச் சென்றுவிட்டாள்
இரவு எட்டு மணி…
காலை மால் சென்றவர்கள் எட்டு மணிக்கு தான் வீடு திரும்பிகிறார்கள்…. “ம்மா மா அவ வந்து இருப்பால ம்மா…”
“வரட்டும் டி… வெளிய உட்காந்து இருக்கட்டும்…. கொழுப்பு ஒன்னும் குறைய போறது இல்ல… “
“ம்ம் மா…”
“ம்மா அங்க பாரு… பிரியா ஓட ஸ்கூட்டி இருக்கு.. “
“அடியே அண்ணினு சொல்லு அவளுக்கு கேட்க போகுது..”
“கேட்டா கேட்கட்டும் எனக்கு என்ன….. அம்மா அவங்க ரெண்டு பேரும் காணோம்…. பாக் ஸ்கூட்டி மட்டும் இருக்கு …”
“எங்கயோ போய் இருப்பாங்க… நில்லு… சித்ரா சித்ரா…”
“ஹான் அக்கா சொல்லுங்க…”.
“எங்க டி அந்த குந்தாணி…. “
“அக்கா அந்த அபர்ணா புள்ள வீட்டுல இருக்கு… கூட உன் அக்கா மருமகளும்.. ஆனா அவ இப்பதா எங்கயோ வெளிய போனா ..”
“அப்டியா… அப்டின்னா அந்த குண்டச்சிக்கு இருக்கு…”
“அடியே குண்டச்சி வீடு அடங்கி இருக்க மாட்டியா…. எங்கடி தெரு பொறுக்க போன…. உன்ன எவனும் பாக்கவும் மாட்டா…. ஹே கூப்புடுறது கேட்கலையா… செவிட்டு முண்டம்…..வெளிய வா…”
“அவ வரமாட்டா இனிமே உன் வீட்டுக்கு வர மாட்டா என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ.. இவளோ நேரம் நீங்க ரெண்டு பேரும் எங்கயோ போய்ட்டு பாப்பாவைத் திட்டுற..நித்தி போய் கார் எடுத்துட்டு வா.. பிரியா போய் பாப்பாவ கூட்டிட்டு வா…”
“அத்தம்மா இங்க வாங்க…”
“நித்தி இங்கேயே இரு.. நாங்க வரோம்..”
“ம்ம் சரி ம்மா…”
“என்ன ஆச்சி பிரியா.. “
“அவளுக்கு ஓவர் ப்ளீட் ஆகுது போல.. மயக்கத்துலயே இருக்கா… காலைல நெறய வேல செஞ்சி இருக்கா.. அப்பறம் நடந்த காலேஜ் வந்தா… ஹாஸ்பிடல் போலாம் அத்தம்மா.. “
“நில்லு நிதிஷ கூப்புடறேன் தூக்க…”
“ரொம்ப நன்றி அபர்ணா ம்மா…”
“பரவால்ல ம்மா… ஆனா நிவி குட்டிய பாத்துக்கோங்க… இவளால நடக்க கூட முடியல ம்மா..ரொம்ப வலிக்குது போல….”
“சரி ம்மா போற அப்ப ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டு வீட்டுக்குக் கூட்டிட்டு போறேன்…இவளோட அம்மா கிட்ட பேசிட்டு வரேன்…”
“இனிமே இந்த குண்டச்சியோட தொல்லை இல்லாம சந்தோசமா இருங்க..உன்னோட பொண்ணுனு சொல்ல தேவை இல்ல… இனிமே உனக்கு ஒரு பொண்ணு தான்…அவளால நீ அவமானம் பட தேவை இல்ல..பிரியா ம்மா போய் டிரஸ் மாத்தி கூட்டிட்டு வா.. “
“சரி அத்தம்மா… போயிட்டு வரேன்….” என்று கூறியவள் உள்ளே சென்று நிவேதாவிற்கு உடை மாற்றி விட்டு “அத்தம்மா டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டேன்….”
“டேய் நித்தி போய் பாப்பாவ தூக்கிட்டு வா…”
“க்கா உனக்கு என்ன அறிவில்லையா.. இந்த குண்டச்சிய போய் தம்பிய தூக்க சொல்ற…”
“ஏய் அவளோ தான் பெத்த பொண்ண போய் இப்டி அசிங்க படுத்துற அதுவும் இத்தன பேரு முன்னாடி… போய்டு ஒழுங்கா… வீட்டு பக்கம் வராத…”
அதற்குள் நிதிஷ் நிவேதாவை காருக்குள் படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தான்… “பிரியா ம்மா நீயும் நிதிஸும் போய் பாப்பாவோட செர்டிபிகேட் அவளோட ஆதார் கார்டு அப்புறம் தேவையான எல்லா டாக்குமெண்ட்ஸ் எடுத்துட்டு வா டா..”
“சரி அத்தம்மா… இரண்டு பேரும் சென்று தேவையான பொருட்கள், உடைகள், மற்ற அத்தியாவசாயமான பொருட்கள் எல்லாம் எடுத்து வந்தார்கள்.. எடுத்து வந்த உடன்
“அபர்ணா ரொம்ப நன்றி மா.. நாங்க கெளம்புறோம்… வீட்டுக்கு அடிக்கடி வாடா.. “
“சரி மா…”
“டேய் தம்பி போற அப்ப நம்ம மீனாட்சி ஹாஸ்பிடல் போய்ட்டு போலாம்.. சரி மா” என்று கூறி காரை ஓட்டுக்கிறான்… பின்னால் பிரியாவும் அவளது ஸ்கூட்டியில் கிளம்பினாள்.
போகும் அவர்களையே முறைத்துப் பார்த்து கொண்டு இருந்தார்கள் சாந்தாவும் நிஹாரிகாவும் …
ஆனால் இனிமேல் தான் அவளுக்கு பிரச்சனை வர போகிறது என அவர்களுக்கு யார் சொல்வது???…. தேவதூதன் வருவானா…?? தேவதையை காக்க!!!
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


என்ன கடைசியில இப்படி சொல்லிட்டீங்க … அவ அங்க இருந்து தப்பிச்சு நிம்மதியா இருக்க போறான்னு நினைச்சோம்
நிம்மதியா தான் இருப்பா.. ஆனா அவங்க அம்மா தங்கச்சி இருக்க விடணுமே…… 🤷🏻♀️