
மதுரையில் இருந்து அனைவரும் சேலத்துக்கு வந்து இருந்தனர்… நிதிஷும் போன வேலையை அப்படியே விட்டுவிட்டு வந்து விட்டான் சேலத்துக்கு….. யார் முகத்திலும் ஒளி இல்லை… அனைவரும் சோகத்தின் மருவுருவமாக அமர்ந்து இருந்தனர்… அதி ஒரே இடத்தை வெறித்து கொண்டிருந்தான்… யார் என்ன சொல்லியும் அசையவில்லை….
அப்பொழுது நேரம் காலை பத்து மணி…. இரவு ஒன்பது மணியிலுருந்து அவன் அந்த இடத்தை விட்டு அசையவில்லை… இரவில் இருந்து ஒரு பொட்டு தூக்கமில்லை யாருக்கும் …. அரசு மற்றும் அவனின் பெற்றோர் தான் தாத்தா மற்றும் அப்பத்தாவை மட்டும் வற்புறுத்தி தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்று இருந்தனர்…
விஷயம் கேள்விப்பட்டு இரவே அனைவரும் கிளம்பி இருந்தனர்…. அதிகாலை மூன்று மணிக்கு அனைவரும் வந்துவிட்டனர்…. அதனால் வண்டியில் வந்தது அசதியாக இருக்கும் சிறிது ஓய்வு எடுத்துவிட்டு இங்கு வந்துவிடலாம் என வற்புறுத்தி அழைத்து சென்றனர்….
முரளி மற்றும் அபர்ணா இருவரும் நைட் வந்துவிட்டு செல்லும் போது அஜய் மற்றும் தாரா பாப்பாவை தங்களுடன் அழைத்து சென்றுவிட்டனர்….
பிரியா நிதிஷின் கைவளைவில் இருந்தவள் அழுதுகொண்டே இருந்தாள்… நிதிஷும் கண் கலங்கி தான் அமர்ந்து இருந்தான்…. அழுத சோர்விலேயே கொஞ்ச நேரம் முன் தான் தூங்கி இருந்தாள்…. வசும்மா சிவம்மா மீனாட்சி மூவரும் கோவிலுக்கு சென்றிருந்தனர்….
இரவு இங்கு தான் இருப்போம் என்று கூறிய கோபாலையும் வினோவையும் வசும்மா வற்புறுத்தி வீட்டுக்கு போக சொல்லிவிட்டார்… இருவரும் சோகமாகவே அங்கு இருந்து தங்களுடைய வீட்டுக்கு சென்றனர்… கோபால் முதலில் வினோவை அவள் வீட்டுக்கு விட்டுவிட்டு தன்னுடைய வீட்டுக்கு சென்றான்..
மாறன் மற்றும் சுந்தரப்பா தான் அங்கு நடப்பதை பார்த்து கொண்டனர்…. அரசு வேலையாக வெளியில் அலைந்து கொண்டிருந்தான்….
இங்கு இவர்கள் தவிப்பிற்கு காரணமானவளோ தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தாள்…. அவளுக்கு மருத்துவர்கள் தீவிரமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தனர்…..
நிவேதா ஏன் இப்படி இருக்கிறாள்…. அந்த மாணவன் என்ன ஆனான்… அனாமிகா எச்ஓடி இருவரும் எங்கே??? வாங்க பாக்கலாம்….
நிவேதா மற்றும் அந்த மாணவன் இருவரும் அருகருகே இருந்த போட்டோவை சமூக வலைத்தளங்களில் எல்லாம் பதிவேற்றி விட்டாள்…. ஆனால் அரசு அந்த போட்டோவை சைபர் கிரைம் உதவியுடன் போட்டோ பதிவேற்றிய அரை மணி நேரத்தில் நீக்கிவிட்டான்….
ஆனால் கல்லூரியில் இருக்கும் முக்கால்வாசி பேருக்கு தெரிந்து விட்டது… நிவேதாவையும் அந்த மாணவனையும் இணைத்து தவறாக பேச ஆரம்பித்து விட்டனர்…..
ஆனால் அவள் வகுப்பு மாணவ மாணவியர்கள் அதை உறுதியாய் மறுத்து நிவேதாவையும் அந்த மாணவனையும் எந்த தவறும் செய்து இருக்க மாட்டார்கள் என நம்பினர்….
அவர்கள் வகுப்பில் இருக்கும் ஹாஸ்டல் மாணவ மாணவியர்கள் அவர்கள் இருவருக்கும் மயக்கம் தெளிய வைக்க முயற்சி செய்தனர்…. ஆனால் இருவருக்கும் மயக்கம் தெளியவில்லை….
பிரியா அதற்குள் கல்லூரி வந்திருந்தாள்…. அவள் வந்து இரண்டு நிமிடத்தில் கோபால் வினோ இருவரும் வந்து விட்டனர்…. பிரின்சிபலும் வந்து இருந்தார்…. அவர் நிவேதா மற்றும் அந்த மாணவன் இருவரையும் மருத்துவமனையில் சேர்க்க கூறினார்…
ஆனால் அனாமிகா அதற்கு விடவில்லை… அவள் பிரின்சிபலிடம் “சார் நாங்க இவங்களுக்கு தண்டனை தர வரைக்கும் இவங்கள எங்கயும் கூட்டிட்டு போக அனுமதிக்க மாட்டோம்…. இது என்ன காலேஜா இல்ல வேற எதுவோவா????
இப்பவே இவங்கள டிஸ்மிஸ் பண்றிங்க… இல்லனா நாங்க யாரும் இந்த காலேஜில் படிக்க மாட்டோம்” என்று கூறினாள்….
அவளுடன் அந்த காலேஜில் படிக்கும் வேறு சில வசதியான மாணவ மாணவிகளும் இதையே தான் கூறினர்…. அனாமிகா அவர்களிடம் எதை எதையோ கூறி அவர்களை தன் பக்கம் பேசுமாறு கூற வைத்துவிட்டாள்…..
அந்த கல்லூரியில் படிக்கும் நூறு மாணவர்களை தன்பக்கம் இழுத்துவிட்டாள்…. அவர்கள் நூறு பேரும் அவர்கள் இருவரையும் டிஸ்மிஸ் செய்து விட்டு வேறு எந்த கல்லூரியிலும் சேர முடியாதபடி செய்யவேண்டும் என்று கூறி போராட்டம் நடத்த ஆரம்பித்து விட்டனர்….
அப்போது திடீரென ஒரு சுவரில் ப்ரொஜெக்டர் உதவியுடன் ஒரு வீடியோ ஓட ஆரம்பித்தது… அந்த வீடியோவில் அனாமிகா நிவேதாவை மயக்கம் ஆக்கியது முதல் அவள் அவர்கள் இருவரும் அருகருகே இருக்குமாறு போட்டோ எடுத்தது வரை ஓடி கொண்டிருந்தது….
போனில் வீடியோ எடுத்ததும் இருந்தது… சிசிடிவி காட்சிகளும் ஓடியது… பிரியா அவளை ஓங்கி அடித்தாள்… அனாமிகா மீண்டும் பிரியாவை அடிக்க பார்த்தாள்…. ஆனால் ஒரு கை அவளை தடுத்து நிறுத்தியது….
நிதிஷ் தான் அங்கு ருத்ர மூர்த்தியாக நின்று இருந்தான்… அவனே அனாமிகாவை ஓங்கி அறைந்தான்….. அந்த எச்ஓடி நிதிஷிடம் பாய்ந்து வந்தான்… “நிதிஷ் நீ எப்படி அடிக்கலாம்… நீ ஒரு சாதரண ப்ரோபசர்” என்று எகிறி கொண்டு வந்தான்…..
நிதிஷ் அவனை ஓங்கி இரண்டு மூன்று அறை அறைந்தான்…. பின் அவனிடம் ஒரு பேப்பரை எறிந்தான்.. அதை பார்த்துவிட்டு பேய் அறைந்ததை போல் நின்றுவிட்டான்…. அவனை பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு சிரித்துவிட்டு அனாமிகாவிடம் திரும்பினான்…..
ஆனால் அவன் திரும்பிய நொடி அனாமிகாவிற்கு நான்கு ஐந்து அறை அவள் சுதாரிப்பதற்குள் விழுந்தது…. அவளை அடித்தது யார் என்று பார்த்தால் அவளின் அப்பா தான்….
“உன்னை ஒரே பொண்ணுனு செல்லங்கொடுத்து வளர்த்தது எவ்ளோ பெரிய தப்பு ஆகிடிச்சி….. இப்படியா உன்ன வளர்த்தேன்…” என்று அவளை அடித்து தன் நடிப்பை ஆரம்பித்தான்….
வசும்மாவும் அங்கு தான் இருந்தார்… அந்த எம்எல்ஏவிடம் நிதிஷ் ” யோவ் பால்பாண்டி அன்னிக்கே என்ன சொன்னேன்… உன் பொண்ண அமைதியா இருக்கனும்னு சொன்னேனா இல்லையா… ஆனா உன் பொண்ணு என்ன பண்ணி இருக்கா பாத்தியா என்று மிரட்டினான்…
அனாமிகாவோ “டேய் நீயே சாதாரண ப்ரோபஸ்சர் என் அப்பாவையே மிரட்டுறியா” என்று நிதிஷிடம் எகிறினாள்…
நிதிஷ் அந்த எம்எல்ஏவை ஒரு பார்வை பார்த்தான்… அவன் அனாமிகாவை ஒரு அறை அறைந்து “ஏய் வாய மூடு… அவர் யாரு தெரியுமா… சேலம்ல முதல் அஞ்சு பணக்காரங்கல இவரும் ஒருத்தர்…. இந்த காலேஜ் அப்புறம் என்ஜினீயர் காலேஜ் இருக்கு…. வாய மூடிட்டு இரு” என்று மிரட்டி அமைதியாக இருக்க கூறினான்…
இவர்கள் அனைவரும் ஸ்டோர் ரூம் வெளியே நின்று பேசிக் கொண்டு இருந்தனர்…. அங்கு கூடிய மாணவ மாணவியர்களை கலைத்து அனுப்பிவிட்டனர்…….
அந்த ஸ்டோர் ரூம் இருந்த இடத்தில் உள்ளே நிவேதாவை பிரியா எழுப்பிக் கொண்டிருந்தாள்… அந்த மாணவனை ஒரு பெண் எழுப்பிக் கொண்டிருந்தாள்….
அந்த மாணவனுக்கு தலையில் சிறிதாக அடிபட்ட காராணத்தால் கோபால் அங்கு இருந்த மாணவனுடன் அவனை மருத்துவமனையில் அனுமதித்தான்….
அவன் மருத்துவமனை செல்லும் நேரத்தில் அரசு அங்கு இருந்தான்… அவன் உதவியுடன் அனுமதித்து விட்டு அவனுடன் வந்த மாணவனையும் அடிபட்ட மாணவனை எழுப்பிக் கொண்டு இருந்த மாணவியும் மருத்துவமனையில் விட்டுவிட்டு கோபால் மற்றும் அரசு இருவரும் மீண்டும் கல்லூரி சென்றனர்….
ஆனால் அவர்கள் செல்லும் அங்கு அனைவரும் நிலைகுழைந்து போய் இருந்தனர்…..
ஆம் அனாமிகா தான் கொண்டு வந்த துப்பாக்கியால் நிவேதாவை இதயத்தில் சுட்டு இருந்தாள்….
நிவேதாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் தெளிந்தது…. அவள் எழுந்து உட்கார முயற்சி செய்தாள்… பிரியா அவளுக்கு உட்கார உதவி செய்து குடிக்க தண்ணீர் எடுக்க சென்றாள்….
அதை பயன் படுத்திக்கொண்டு அனாமிகா அவள் கொண்டு வந்த அவள் தந்தையின் துப்பாக்கியை கொண்டு நிவேதாவை இரண்டு முறை சுட்டு இருந்தாள்….
நிவேதா கீழே சரிவதற்கும் அதி அந்த இடத்திற்கு வருவதற்கும் சரியாக இருந்தது….
அதி “அம்ம்ம்முமுமு” என்று கத்திக் கொண்டே நிவேதாவை தாங்கினான்… அனாமிகா மீண்டும் தாக்குவதற்குள் நிதிஷ் அவளை தாக்கி இருந்தான்….
நிதிஷ் அவளிடம் இருந்து துப்பாக்கியை வாங்கிக் கொண்டு அவளை அப்போது தான் அங்கு வந்த காவல்துறையினரிடம் ஒப்படைத்தான்…
அனாமிகாவுடன் அந்த எச்ஓடி… எம்எல்ஏ அனைவரும் கைது செய்யப்பட்டனர்…. அனாமிகா கூட இருந்தவன் எப்பயோ தப்பித்து ஓடிவிட்டான்….
அதி யாரையும் கண்டுகொள்ளாமல் நிவேதாவைத் தூக்கி கொண்டு அரசுவிடம் “சூர்யா காரை எடு” என்று கூறிக்கொண்டு ஓடினான்…. அரசுவும் மின்னல் வேகத்தில் காரை எடுத்தான்….
அவளை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு வெறித்த பார்வையுடன் அமர்ந்தவன் தான் இன்னும் அந்த பார்வையில் தான் அமர்ந்து இருந்தான்…..
அந்த மாணவனும் அதே மருத்துவமனையில் தான் அனுமதிக்க பட்டுயிருந்தான்…. வசும்மா அவனின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டார்…. அவன் பெற்றோரும் அதை பெரிது படுத்தாமல் நிவேதாவைப் பார்க்குமாறு கூறிவிட்டனர்….
அந்த மாணவி அவனின் தாயின் தோளில் சாய்ந்து அமர்ந்து தூங்கியிருந்தாள்…..
வசும்மா மீண்டும் நிவேதா அனுமதிக்க பட்டு இருந்த அறைக்கு வந்தார்…. யாரும் இரவு தூங்கவில்லை….
நிவேதாவிற்கு இதயத்தின் அருகில் தோட்டா பாய்ந்து இருந்ததால் அவளை காப்பாற்றுவது கடினம் எனக் கூறி விட்டார் மருத்துவர்…
கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் எங்களால் முடிந்த அளவு நாங்களும் முயற்சி செய்கிறோம் என்று கூறி அறுவை சிகிச்சை செய்ய சென்றுவிட்டார்…
விடிந்தவுடன் வசும்மா சிவாம்மா மீனாட்சி மூவரும் கோவிலுக்கு சென்றுவிட்டனர்…… தாத்தா அப்பத்தா இருவரும் அரசுவின் பெற்றோருடன் காலையில் வந்துவிட்டனர்…
நிவேதா உயிர் பிழைப்பாளா ???? அனாமிகா அந்த எச்ஓடி மற்றும் அவளின் தந்தைக்கு என்ன தண்டனை குடுப்பான் அதி???? அடுத்த அத்தியாத்தில்………
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1



