

அதிகாலை வேளையில் அதி அவனின் அம்முவோடு அவனின் கனவு உலகத்தில் சந்தோசமாக சஞ்சரித்து கொண்டு இருந்தான்….
அதை கெடுக்கவே அவனின் அலைபேசிக்கு அவனின் சூர்யா(அன்பரசு) அழைத்து இருந்தான்… அலைபேசி சத்தத்தில் உறக்கத்திலிருந்து எரிச்சலாக எழுந்து அமர்ந்தான்…..
அலைபேசியில் பெயரைப் பார்த்ததும் “இந்த நாயி எதுக்கு கூப்புடுறான்??” என்று கேட்டு கொண்டு அழைப்பை ஏற்று பேசினான்….
“சொல்லுங்க மிஸ்டர் அன்பரசு எதுக்கு இந்த நேரத்துல கால் பண்ணியிருக்கிங்க… எதோ முக்கியமான விஷயமா???” என்று கேட்டான்
“ப்பா இவனை பாருங்க அன்பரசு சொல்றான்… எப்பயும் போல கூப்பிட சொல்லுங்க” என்று அரசு அவனின் அப்பாவிடம் எகிறினான்…
“டேய் தம்பி அமைதியா இரு…” என்று கூறிவிட்டு “அதி” என்று அழைத்தார்…… அவன் அமைதியாக இருந்தான்… மீண்டும் “அதி” தற்போது “சொல்லுங்க ப்பா” என்று மெதுவாக கூறினான்…
அதை கேட்டு சந்தோசமாகி விட்டு தான் சொல்ல போகும் விசயத்தை நினைத்து பெருமூச்சு விட்டார்….
“அதி ஜனகராஜ் இஸ் நோ மோர்….” என்று கூறினார் மணிகண்டன்….
“வாட்?!?!” என கத்தியிருந்தான்… அவனுக்கு மிச்சம் இருந்த தூக்கமும் போயிருந்தது…. “என்ன சொல்லுறிங்க ப்பா எப்படி…???” என்று கேட்டான் அதி…..
“ஜனகராஜ் கூட அரெஸ்ட் ஆனா ரெண்டு பேரும் சேர்ந்து கொன்னுட்டாங்க…. அடிச்சே கொன்னு இருக்காங்க…. ஜெயிலர் போய் பாக்குற அப்ப கொஞ்சம் உயிர் இருந்து இருக்கு…. பட் ஜெயில் டாக்டர் வந்து பாக்குற அப்ப உயிர் போயிடிச்சு…”
“சத்தம் வெளிய வரக்கூடாதுனு ஒரு துணிய வெச்சி வாய கட்டி போட்டு அடிச்சி இருக்காங்க….ரொம்ப கொடூரமா அடிச்சி இருக்காங்க…. ஒவ்வொரு இடமும் ரொம்ப டேமேஜ் ஆகி இருக்கு…. வார்டன் ரவுண்ட்ஸ் போற அப்ப பார்த்து ஜெயிலர கூட்டிட்டு வந்து இருக்காங்க…”.
“ஜனகராஜ் பார்ட்னர்ஸ் ரெண்டு பேரையும் தனி தனி ரூம்ல போட்டு இருக்காங்க… நானும் அரசுவும் அங்க போறோம்… நீ அந்த நிதிஷ் தம்பிகிட்ட சொல்லிட்டு வா அங்க” என்று கூறி வைத்துவிட்டார்…..
ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு நேராக சிவாம்மா அறைக்கு சென்றான்…அவரை எழுப்பி விசயத்தை சொல்லிவிட்டு அவரையும் அழைத்து கொண்டு வசும்மா வீட்டுக்கு சென்றான்….
நிதிஷிற்கு அழைத்து மேலோட்டமாக விசயத்தைக் கூறி தற்போது கதவைத் திறக்குமாறு கூறினான்…. பிரியாவும் விழித்துவிட்டாள்.. என்னவென்று கேட்டாள்….
அவனோ சிறிதுநேரம் அமைதியாக இருக்குமாறு கூறிவிட்டு அவளையும் அழைத்துகொண்டு அறையை விட்டு கீழே வந்தான்… பிரியாவைப் போய் வசும்மாவை எழுப்ப கூறிவிட்டு நிதிஷ் சென்று கதவை திறந்துவிட்டான்…
வசும்மாவும் எழுந்து வெளியே வந்தார்…. இந்த நேரத்தில் அதியும் சிவாம்மாவும் வீட்டுக்கு வந்ததைப் பார்த்து யாருக்கு என்ன ஆனதோ என்று பயந்துவிட்டார்… அதி தான் ஜனகராஜ் இறந்துவிட்டார் என்று கூறினான்… யாருக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை….
மீண்டும் அதியே அனைவரிடமும் பொதுவாக “நான் இப்ப ஹாஸ்பிடல் போறேன்…. நிதிஷ் நீயும் வா” என அவனையும் அழைத்தான்….
சிவாம்மா அதை தடுத்து “தம்பி நீ போய் முதல்ல நிவிம்மாகிட்ட சொல்லு அப்புறம் ரெண்டு பேரும் போங்க என்ன பண்ணலாம்னு பாக்கலாம்” என்று கூறி அதியை நிவியின் அறைக்கு அனுப்பி வைத்தார்… மற்றவர்களும் மேலே சென்றனர்…. ஆனால் அறையின் உள் செல்லவில்லை….
கதவு தாழ் போடவில்லை… வெறுமனே மூடி தான் இருந்தது… அவள் தூங்கும் போது போட்டுவிட்ட சிவாம்மாவின் தாலாட்டு பாடல் இன்னும் ஓடிக்கொண்டு தான் இருந்தது….
அதை கேட்டுவிட்டு அவள் எந்த அளவிற்கு தாய் பாசத்திற்கு ஏங்கியிருக்கிறாள் என அனைவருக்கும் தெரிந்தது…. அதியை தவிர மற்ற அனைவரும் மீண்டும் கீழே சென்றுவிட்டனர்….
அதி மெதுவாக சென்று அவள் அருகில் நின்றான்…. கொஞ்ச நேரம் கழித்து அவளின் அருகில் அமர்ந்து அவளை எழுப்பினான்… “அம்மு அம்மு எழுத்துரு டா…” என்று அவளை எழுப்பினான்…
ஆனால் அவளோ “இன்னும் கொஞ்ச நேரம் பாவா”… என்று கூறிவிட்டு மீண்டும் உறக்கத்திற்கு சென்றுவிட்டாள்…
மீண்டும் அவளை உலுக்கி எழுப்பினான்… அவன் உலுக்கியதில் தான் அவளுக்கு உறக்கம் கலைந்தது…. அவனை பார்த்து பேந்த பேந்த முழித்தாள்… பிறகு அவனிடம் “அச்சோ பாவா என்ன பண்றிங்க இங்க… இந்த நேரத்துல….” என்று படபடவென பேசினாள்….
“அம்மு ரிலாக்ஸ்…. நான் சொல்றத பொறுமையா கேளு” என்று அவளிடம் பொறுமையாக விசயத்தைக் கூறினான்…..
“உன் அப்பா இப்ப உயிரோட இல்ல டா… அவரோட கூட்டாளிகளே அவரை கொன்னுட்டாங்க….” என்று கூறினான்….
அவளுக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை.. அவன் சொன்ன விசயத்தைக் கேட்டு அதிர்ந்து அமர்ந்து இருந்தாள்… இரண்டு மூன்று முறை அவளை அழைத்து தான் சுயநினைவிற்கு வந்தாள்…. எதுவும் பேசாமல் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்… அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது…. அவளை தட்டிகொடுத்து அவனின் முகம் பார்க்குமாறு நிமிர்த்தினான்….
“அம்முமா ஏன்டா எதுவும் பேசமாட்டிங்குற… எதோ சொல்லு டா” என்று அவளை அணைத்த வாக்கிலே கேட்டான்….
“எனக்கு என்ன சொல்றதுனு தெரியல பாவா… அவரு என் மேல பாசம் இல்லாம தான் இருந்தாரு… ஆனா அவர் இப்ப இல்லங்கறத ஏத்துக்க முடியல…. என்கிட்ட பாசமா இல்ல… என்ன ஒரு மனுசியா மதிக்கல…. எனக்காக அவரு ஒன்னுமே செய்யல…எனக்கு என்ன பண்றதுனு தெரியல பாவா… நீங்க என் கூடவே இருங்க ப்ளீஸ் ” என்று கூறி அவனை இன்னும் நெருங்கி அமர்ந்தாள்….
“ஓகே அம்மு எங்கயும் போகல ரிலாக்ஸ்” என்று கூறி அவளுக்கு தட்டிக் குடுத்தான்…. சிறிது நேரத்தில் நிவேதா தன்னை திட படுத்திக்கொண்டு அதியிடம் “பாவா நீங்க கிளம்புங்க… உங்களுக்கு ஒர்க் இருக்கும்ல போய் பாருங்க…” என்று அவனிடம் கூறினாள்….
“அம்மு நீ என்ன பண்ணலாம்னு இருக்க….” என்று அவளிடம் கேட்டான்..
சிறிது நேர மௌனத்திற்கு பிறகு “பாவா அவர் இறந்தது கஷ்டமா தான் இருக்கு…. பட் அவர் எனக்கு பண்ணத என்னால ஏத்துக்க முடியல…. நான் இங்க வீட்டுலயே இருக்கேன்…. நீங்க என்ன பண்ணணுமோ பண்ணுங்க…” என்று கூறி அவனின் தோளில் மீண்டும் சாய்ந்து கொண்டாள்….
அவளை தட்டிக் கொடுத்து தூங்கவைத்தான்…… அவளை மெதுவாக மெத்தையில் படுக்க வைத்துவிட்டு கீழே செல்ல பார்த்தான்… ஆனால் முடியவில்லை… அவனின் அம்மு அவனின் சட்டையைப் பிடித்து தூங்கிக் கொண்டிருந்தாள்….. மெலிதாக சிரித்துவிட்டு மெதுவாக அவளின் கையை எடுத்துவிட்டு அவளின் நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு கீழே சென்று விட்டான்….
கீழே சென்றதும் நிவேதா கூறியதை கூறிவிட்டு நிதிஷை அனைத்தும் பார்க்க கூறிவிட்டான்…. எனவே நிவேதா அதியை தவிர மற்ற அனைவரும் மருத்துவமனைக்கு செல்ல தயாராகினர்…. மின்மயானத்திலேயே ஜனகராஜின் உடம்பை எரித்துவிடலாம் என்று முடிவு செய்து இருந்தனர்…..
நிதிஷ் கூறிவிட்டான் வசும்மாவிடம்…. “ம்மா அந்த ஆளு பண்ணதுக்கு வீட்டுக்குக் கொண்டு வந்து எந்த காரியமும் பண்ண மாட்டேன்…. சொந்தம் அப்டிங்கறதுனால மின் மயானத்துல அந்தாளு உடம்ப வாங்கி எரிக்கலாம்… ஆனா வீட்டுக்கு கொண்டு வந்து சடங்கு காரியம் எதுவும் பண்ண மாட்டேன்…. உன் தங்கச்சி செத்து போனாலும் இது தான் பண்ணுவேன்” என்று அவனின் முடிவை கூறிவிட்டான்….
வசும்மாவும் சரி எனக் கூறிவிட்டார்…. என்னதான் சாந்தா உடன்பிறந்த தங்கையாய் இருந்தாலும் சாந்தா செய்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது தானே… எனவே அவரும் நிதிஷின் முடிவுக்கு ஒத்துக்கொண்டார்……
வசும்மா சிவாம்மா பிரியா நிதிஷ் நால்வரும் மருத்துவமனைக்குப் புறப்பட்டு சென்றனர்….. அதி அரசுக்கு அழைத்து அவர்கள் வருவதை பற்றிக் கூறி வைத்துவிட்டான்…..
மீண்டும் நிவேதாவின் அறைக்கு சென்றான்…. அவனின் அம்முவோ ஆழந்த உறக்கத்தில் இருந்தாள்…. ஆனால் அவளின் முகமோ வேதனை சாயலில் இருந்தது…. அவளின் அருகே சென்று அவளின் நெற்றியை நீவிவிட்டான் ….
பிறகு நாற்காலியை கட்டிலின் அருகே அமர்ந்து உறங்கும் நிவேதாவை பார்த்தபடி உட்கார்ந்து கொண்டான்….
சிறிது நேரத்தில் அவளும் விழித்து கொண்டாள்…. எழுந்ததும் மீண்டும் அவனின் கையணைப்புக்குள் சென்றுவிட்டாள்…. எத்தனை மணிநேரம் அப்படியே இருவரும் அமர்ந்து இருந்தார்களோ தெரியவில்லை… அதியின் அலைபேசி சத்தத்தில் தான் இருவரும் நிகழ் உலகத்திற்கு வந்தனர்…. அந்த அழைப்பு நின்று இருந்தது…..
மணியை பார்த்தால் நண்பகல் ஒரு மணி… அதி நிதிஷிற்கு அழைத்து என்ன ஆனது கேட்டான்…. இன்னும் அரைமணி நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவோம் எனக் கூறி வைத்துவிட்டான்…..
அதி அவனின் வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு மீண்டும் வசும்மா வீட்டிற்கு வந்தான்… அதற்குள் நிவேதாவும் குளித்து முடித்து இருந்தாள்….. அதியை நிதிஷிற்காக உடையை எடுத்து வெளியில் இருக்கும் குளியலறையில் போட சொன்னாள்….. அவள் பிரியாவுக்கும் வசும்மாக்கும் உடையை போட எடுத்துவைத்தாள்…..
அதியிடம் “பாவா அத்தம்மாக்கு டிரஸ் எடுத்து வெச்சீங்களா??” என்று கேட்டாள்… அவன் இல்லை என தலை ஆட்டினான்… இவள் அங்கு சென்று சிவாம்மாவின் உடையை எடுத்து வெளி குளியறையில் போட்டாள்… அவர்களும் சிறிது நேரத்தில் வந்துவிட்டனர்….
சிவாம்மா அவர் வீட்டுக்கு சென்றுவிட்டார் குளித்துவர…. மற்ற மூவரும் குளித்துவருவதற்குள் நிவேதா அனைவருக்கும் உண்ண உணவு செய்துவைத்துவிட்டாள்… சிவாம்மாவும் குளித்துவிட்டு மீண்டும் வசும்மா வீட்டுக்கு வந்து விட்டார்… யாரும் அதை பற்றி பேசக்கூட இல்லை….
அனைவரும் உண்டு முடித்துவிட்டு ஹாலில் பேசிக் கொண்டிருந்தனர்…. வசும்மா அதியிடம் “தம்பி இத்தனை நாள் சாந்தா என்ன ஆனா அப்டினு நான் கேட்கல… இப்ப அவ புருஷன் இறந்து போய் இருக்காரு அத அவகிட்ட சொல்லனும்ல…. அவகிட்ட சொல்ல முடியுமா???” என்று கேட்டார்….
“இல்ல ம்மா நீங்க சொன்னாலும் அவங்க கேட்குற நிலமைல இல்ல… நாம கொஞ்ச நாள் தாமதிச்சி இருந்தாலும் அவங்களால ஒரு உயிர் போக கூட வாய்ப்பு இருந்து இருக்கு…. அவங்க மனநிலை பாதிக்கப்பட்டு தான் இருந்து இருக்காங்க…. ஆனா இப்ப கொஞ்ச நாளா அவங்க பைத்தியமாவே மாறிட்டாங்க….” என்று கூறினான்…..
“என்ன தம்பி சொல்றிங்க…. அவளை ஒரு தடவ மட்டும் பாக்கலாமா” என்று கேட்டார் வசும்மா….
அவனும் சிறிது நேரம் யோசித்துவிட்டு யாருக்கோ அழைத்து பேசிவிட்டு வசும்மாவிடம் சம்மதம் சொன்னான்…. நிதிஷ் அதி வசும்மா மட்டும் சாந்தாவை காண அவர் இருக்கும் இடத்திற்கு சென்றனர்….
(வாங்க வாங்க சாந்தாவை பாக்க போலாம் !!!)
ஒரு இருட்டு அறையில் மூலையில் உட்கார்ந்து கத்திக் கொண்டு இருந்தார் சாந்தா…. “ஏய் வசுந்தரா நீ உன் புள்ள மருமக எனக்குன்னு ஒன்னு பொறந்ததே அது எப்படி நல்லா இருக்கீங்கன்னு பாக்குறேன்… என் கையிலேயே உங்களை எல்லாத்தையும் கொல்லுறேன்…. முதல்ல உன்ன தான் வசுந்தரா…. ஹா ஹா ஹா” என்று கூறி சிரித்துவிட்டு யாரையோ கழுத்தை நெறிப்பதை போல் செய்து “ஹே வசுந்தரா நீ செத்து போயிட்ட…. அடுத்து உன் பின்னாடியே எல்லாரும் வரிசையா வருவாங்க” என்று கூறி அகோரமாக சிரித்து கொண்டிருந்தார்…
இதை பார்த்து வசும்மா அதிர்ச்சியாகி விட்டார்… இவள் இப்படி வெறுத்துப்போவது போல் நாம் என்ன செய்தோம் என்று நினைத்தார்…
அதி தான் “ம்மா இப்ப நீங்க உள்ள போனாலும் அவங்களுக்கு அடையாளம் தெரியாது….. ரெண்டு நாள் அமைதியா இருந்து இருக்காங்க… அப்பறம் இப்படி தான் கத்துறாங்க” என்று கூறினான் …..
வசும்மா அழுது கொண்டே அங்கு இருந்து சென்றுவிட்டார்…. அவர் பின்னே நிதிஷ் அதி இருவரும் சென்றுவிட்டனர்….
காரில் அமைதியே ஆட்சி செய்தது…. வசும்மா அறைக்குச் சென்றுவிட்டார்… நிதிஷ் தான் அங்கு நடந்த விசயத்தை மூவரிடமும் கூறினான்…. யாரும் எதுவும் பேசவில்லை…. நிவேதா நிதிஷிடம் அதியின் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சிவாம்மா அதியுடன் அந்த வீட்டிற்கு சென்று விட்டாள்….
ஒருவாரம் அனைவரும் நடந்ததை பற்றியே சிந்தித்து கொண்டு இருந்தனர்… பிறகு மெது மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பினர்….. ஒரு மாதம் யாருக்கும் காத்துக் கொண்டில்லாமல் காற்றாய் பறந்தது….
அன்று ஒருநாள் எம்எல்ஏவின் மகளைக் காணவில்லை என காவல் துறைக்குச் செய்திவந்தது…. அதி தான் அந்த வழக்கை விசாரித்தான்…. இந்த வழக்கால் நிவேதாவிற்கு பெரிய ஆபத்தும் அதி நிவேதா இடையில் சண்டை வரும் என்று தெரிந்து இருந்தால் அதி இந்த வழக்கை விசாரித்து இருக்க மாட்டானோ ?!?!?!……..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
2
+1
+1



காற்றாய் நுழைந்தாள் என்னுள்ளே - மேக வாணி