
அடுத்த நாள் மாலை அதி தான் நிவேதாவை அழைத்து செல்ல அவளின் கோச்சிங் கிளாஸ்க்கு வந்து இருந்தான்… அவள் எதுவும் பேசாமல் காரில் பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள்…. அவனும் எதுவும் பேசவில்லை… காரும் எடுக்கவில்லை…. ஆனால் அவள் முகத்தையே பார்த்தபடி அமர்ந்து இருந்தான்….. ஆனால் அவள் அவனை பார்க்கவே இல்லை….
கால் மணி நேரம் ஆகியும் அவன் காரை எடுக்கவில்லை….. இவனின் பிடிவாதம் அறிந்து நிவேதா தான் இறங்கிவர வேண்டியதாய் போயிற்று…. அவள் இறங்கி முன்னாடி வந்து அமர்ந்த பின்னால் தான் காரை எடுத்தான்….
இவள் அவன் பக்கம் திரும்பவே இல்லை…. அவன் ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக பார்த்து காரை நிறுத்தினான்…. இவள் புறமாக திரும்பி உட்காந்து “நிவேதா என்ன பாரு” என்று கூறினான் அதி….
ஆனால் அவள் இன்னமும் தன் முகத்தை ஜன்னல் புறம் திரும்பி உட்காந்து கொண்டாள்….. நேற்று இரவு சிவாம்மாவிடம் அவனுக்கு சாதகமாக பேசியதால் அவளுக்கு கோவம் இல்லை என நினைத்தான் ….
அதனால் இரவு உறங்கும் போது வழக்கம் போல் அழைத்தான்… ஆனால் எடுக்கவில்லை…. வாட்ஸப்பில் மெசேஜ் செய்தான்…. அவள் பார்த்துவிட்டாள் என்பதற்கு அறிகுறியாய் இரண்டு நீல நிற டிக் காட்டியது…. ஆனால் அவள் பதிலுக்கு எந்த செய்தியும் அனுப்பவில்லை…. எனவே கோவமாக உள்ளாள் என தெரிந்து கொண்டான்…
இவனுக்கு அழைக்காமல் சிவாம்மாவிற்கு அழைத்து அவனை மாத்திரை போட்டு தூங்குமாறு கூறி விட்டு அவள் ஏற்கனவே சிவாம்மா பாடிய தாலாட்டை பதிவு செய்து வைத்து இருந்த பதிவைக் கேட்டு கொண்டே தூங்கி விட்டாள்….
சிவாம்மா அதை அதியிடம் கூறிவிட்டு அவர் அறைக்கு சென்று விட்டார் …. இன்னும் தாயும் மகனும் சண்டை போட்டு கொண்டு தான் இருந்தனர்…. நிவி வசும்மா வீட்டுக்கு சென்றவுடன் அவன் முதுகிலேயே ஒரு அடி வேகமாக போட்டார்…
அவர் அடித்தவுடன் “அம்மா என்ன அடிக்குற… நீ திட்டுனதுக்கே என் அம்மு திட்ட வேணாம்னு சொல்லிட்டு போறா… நீ அடிச்சன்னு தெரிஞ்சது அவளோ தான்…. நில்லுங்க என் அம்முகிட்ட சொல்றேன் நீங்க அடிச்சத” என்று கூறினான்….
“எதுக்கு டா அந்த புள்ளய திட்டுன…. அந்த புள்ள மொகமே காத்தால இருந்து வாட்டமா இருந்தது தெரியுமா… நான் தான் நைட் ரெண்டு தடவ போன் போட சொன்னேன்…” என்று திட்டினார் அவனை…..
“எதோ டென்சன்ல திட்டிட்டேன் இனிமே அவளை திட்டவே மாட்டேன் சரியா…” என்று கேட்டான்….
“உன் ஐயா பேசணும்னு சொன்னாரு அவர்கிட்ட பேசு” என்று கூறிவிட்டு அவர் அறைக்கு சென்று விட்டார்…. அதி சுந்தர் அப்பாக்கு அழைத்தான்… அவரும் அவரின் பங்குக்கு அதியை திட்டிவிட்டு வைத்துவிட்டார்….
சிறுவயதில் இருந்து திட்டுவிழும் அதிக்கு அவனும் அஜயும் செய்யும் சேட்டை அளவே கிடையாது….. அந்த திட்டை கேட்டு இன்னும் அதிகமாக தான் சேட்டை செய்வான்…. பெரியவன் ஆக ஆக சேட்டை கொஞ்சம் குறைந்தது… ஆனால் சேட்டையை விடவில்லை… வீட்டில் அனைவரும் ஒன்று கூடினால் இவனும் அஜயும் செய்யும் சேட்டை கண்டிப்பாக இருக்கும்
தற்போது தன் பெற்றவர்கள் திட்டை எதோ தாலாட்டு போல் ரசித்து கேட்டு கொண்டு இருந்தான்… ஏனென்றால் அவனின் தேவதைகாக தானே திட்டு வாங்குகிறான்…
அதை நினைத்து பார்த்துவிட்டு “அடியே அம்மு நாளைக்கு உன்னை பார்த்துக்குறேன்” என்று கூறிவிட்டு அவன் அடுத்த நாள் காலை எழுந்தது என்னவோ பத்து மணிக்கு மேல் தான்…. அதனால் நிவேதாவை பார்க்க முடியாமல் தற்போது அவளை அழைத்து வர வந்துவிட்டான் இந்த தேவதூதன்….
“என்ன கோவம் உனக்கு…. நேத்து என்னை அம்மா கூட திட்ட வேணாம்னு சொன்ன…. இப்ப ஏன் பேச மாட்டிங்குற….. அன்னிக்கு திட்டுனதுக்கு சாரி டா வேணும்னு திட்டல டா…. எனக்கு அடிபட்டது உனக்கு தெரிஞ்சா நீ கஷ்டப்படுவனு தான் டா சொல்லல…..”
“நான் நார்மலா பேசுனா என் வாய்ஸ்ல இருக்க சோர்வை கண்டுபிடிச்சிடுவ…. திட்டுனா நீ அத கண்டுபிடிக்க மாட்டல அதுனால தான் டா திட்டுனேன்… சாரி டா” என்று தன் பக்க விளக்கத்தைக் கூறி மன்னிப்பு கேட்டான்…..
அவன் தரப்பு விசயத்தைக் கேட்டுவிட்டு அமைதியாக தான் இருந்தாள் நிவேதா…. அவளின் அமைதியில் இவனின் பொறுமை தான் காற்றில் பறப்பது போல் இருந்தது…
“இப்ப பேசுறியா இல்லையா எதுக்கு அமைதியாவே இருக்கே…. வாய தொறந்து பேசேன்” என்று பல்லை கடித்து கொண்டு கூறினான்….
இவனின் கோவத்தை அறிந்து அவள் வாயை திறந்து பேசினாள்… ஆனால் அவள் கூறியதைக் கேட்டு அதி விழுந்து விழுந்து சிரித்தான்…. “சத்தியமா இதுக்கு தான் என்கூட பேசாம இருக்கியா” என்று கேட்டு மீண்டும் அப்படி சிரித்தான்…….
“பாவா சிரிக்காதிங்க” என்று கூறி கோவமாக திரும்பி கொண்டாள்….
அப்படி என்ன கூறினாள்…. வாங்க அவ சொல்றத கேட்கலாம்…. அதி அவளிடம் “நீ என்ன சொன்னனு இன்னொரு டைம் சொல்லு” என்று கேட்டான்…
“நீங்க ஏன் திட்டுற அப்ப நிவேதானு சொன்னிங்க…. அப்பறம் இப்ப வரைக்கும் நீங்க அம்முனே சொல்லல….. நிவேதானு சொல்றிங்க… இல்லை எதுவும் சொல்லாம சொல்ல வேண்டியதை மட்டும் சொல்றிங்க… அம்முனு ஏன் சொல்லல” என்று கேட்டாள்….
“ஐயோ என் தங்கமே உனக்கு இது தான் பிரச்னையா இதுக்கு தான் கோவமா இருந்தியா” என்று கேட்டான்….
“நான் கோவமால இல்ல…” என்று கூறினாள்…. அவள் கூறியதை கேட்டு சிரித்து விட்டு அவளை தன்புறம் திருப்பி அமர்த்திக் கொண்டு அவளின் கையை பிடித்து பேச ஆரம்பித்தான்…
“அச்சோ அம்மு உனக்கு அது தான் பிரச்சனையா… நான் திட்டுனதுல உனக்கு கோவம் இல்லையா????” என்று கேட்டான்…
அவள் இல்லை என தலையை ஆட்டிவிட்டு “என் மேல தானு பாவா தப்பு நீங்க வேல இருக்குனு சொல்லியும் நான் திரும்ப திரும்ப போன் போட்டா உங்களுக்கு டிஸ்டர்ப்பா இருந்து இருக்கும்”…. என்று கூறினாள்…
அவள் அப்படி சொன்னவுடன் தன்னுடைய கார் சீட்டினை பின்னால் நகர்த்திவிட்டு நிவேதாவை ஒரே தூக்காக தூக்கி தன் மடியில் அமர்த்தி கொண்டான் அதிவீரபாண்டியன்…. அவன் தூக்கியதும் முதலில் பயந்து பதறி பிறகு அவனிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டாள்…
“ஐயோ பாவா விடுங்க… என்ன பண்றிங்க….” என்று கெஞ்சினாள் அவனிடம்…
“ச்சு அம்மு அமைதியா இருந்தா பேசிட்டு விட்ருவேன்… இல்லனா வீடு வரைக்கும் உன்ன என் மடி மேல வெச்சி தான் கார் ஓட்டுவேன்” என்று கூறியவுடன் அமைதியாகி விட்டாள்… அதற்கு மேல் பேச அவள் என்ன முட்டாளா… சமத்து பிள்ளையாக அவனின் மடியில் வாகாக உட்காந்து கொண்டாள்….
அவன் அவளின் உச்சியில் முத்தம் கொடுத்துவிட்டு பேச ஆரம்பித்தான்….
“அது அப்ப எதோ வேகத்துல பேசிட்டேன்….. அதுக்கு அப்பறம் நீ கோவமா இருக்கனு பேசல டா அம்முமா…. நீ கோவமா இருந்ததுனால அந்த டென்சன்ல அம்முனு சொல்லல…. அவ்வளவு தான் டா… இதுக்கு தான் பேசாம இருந்தியா அம்மு….” என்று கூறி மீண்டும் அவளின் உச்சியில் முத்தம் கொடுத்தான்…..
அவள் எதுவும் பேசாமல் அவனின் மார்பின் மேல் சாய்ந்து கொண்டாள்… அவனும் அவளை அணைத்து கொண்டு அமைதியாக இருந்தான்….
“அம்மு உன்னை திட்டுனதுனால ஐயா பயங்கர திட்டு தெரியுமா….. இனிமே கண்ணம்மாவை திட்டுன தொலச்சிடுவேன்னு சொன்னாரு டா…. அம்மா ஒரு படி மேல போயி என்னை அடிச்சிட்டாங்க தெரியுமா…!!”
“எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு அம்மு… சின்ன வயசுல இருந்தே அவங்க பண்ண கூடாதுனு ஒரு விசயத்துக்கு திட்டுனா அவங்க திட்டுனதுக்காகவே அந்த விசயத்தை செய்வேன்”
“ஆனா இப்ப என்னை திட்டுனது அவளோ சந்தோசமா இருக்குடா… ஐயா அவளோ என்னை திட்ட மாட்டாரு… அம்மா தான் திட்டும்…. ஆனா இப்ப உன்ன திட்டுனதுக்காக திட்டி இருக்காரு… அங்க வீட்டுல எல்லாரும் உன்மேல பாசமா இருக்காங்க டா… அத பாக்க ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு தெரியுமா” என்று கூறினான் ….
சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்… பிறகு அவளை அவளின் சீட்டில் உட்கார வைத்துவிட்டு மகிழுந்தை இயக்கினான்…. அவனின் தோளில் சாய்ந்து கொண்டு பேசிக் கொண்டு வந்தாள்….
அப்போது அதி நிவேதாவிடம் “அம்மு ஏன் பிரியா கூட பேச மாட்டிங்குற…. ” என்று கேட்டான்… அவளிடம் பதிலில்லை …. “அம்மு கேட்டா பதில் சொல்லனும் அமைதியா இருக்க கூடாது…” என்று கூறினான்…..
“அவ தான் புக் கிழிச்சி இருப்பா அப்படினு நான் நினைப்பேன்னு அவ எப்படி நினைக்கலாம் பாவா…. அவளை பத்தி எனக்கு தெரியாதா … ஆனா அவ ஏன் என்கிட்டயும் வசும்மாகிட்டயும் அழுதா அப்பறம் கெஞ்சுனா… நான் அந்த புக் கிழிக்கல அப்படினு…. என்னை நம்பலல…. அது தான் பேசல…. “
“ஆனா அவ கூட பேசாம நான் எங்க போவேன்… பேசுவேன்… இன்னும் கொஞ்சம் கோவம் இருக்கு… கோவம் குறையட்டும் நான் பேசுறேன்… அது வரைக்கும் என்கிட்ட அத பத்தி பேசாதீங்க பாவா” என்று கூறிவிட்டாள்….
வீடு வந்ததும் வசும்மா வீட்டுக்கு சென்று புக்கை வைத்துவிட்டு சிவாம்மா பார்க்க போவதாக சொல்லிக் கொண்டு அதியின் வீட்டுக்கு வந்து விட்டாள்… நேராக சிவாம்மாவிடம் சென்று “அத்தம்மா பாவாவ ஏன் அடிச்சீங்க” என்று கேட்டாள்
அதி அவளிடம் “அடிச்சது மட்டும் இல்ல அம்மு என்கூட பேசவே இல்லை என்னனு கேளு” என்று மேலும் போட்டு கொடுத்தான்…..
அவள் அதை கேட்பதற்குள் சிவாம்மாவே அவளிடம் “சரி உன் பாவாவ திட்டல அடிக்கல… ஆனா அவன் தப்பு பண்ணா என்ன பண்றது” என்று கேட்டார்….
அவர் கேட்டு முடிப்பதற்குள் நிவேதா அவரிடம் “என் பாவா தப்பு பண்ண மாட்டாங்க அத்தம்மா” என்று உறுதியாக கூறினாள்…..
“சரியான பாவா கோண்டு” என்று அவளை அணைத்து கூறிவிட்டு சமையலறை சென்றுவிட்டார்…..
“நான் எந்த தப்பும் பண்ண மாட்டேனா அம்மு….” என்று அதி கேட்டான்….
“இல்ல பாவா நீங்க எந்த தப்பும் பண்ண மாட்டிங்க…. நீங்க எது பண்ணாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும்” என்று கூறினாள்…
அவளின் வார்த்தைகளில் நெகிழ்ந்து நின்று விட்டான் அந்த காவல்காரன்……
“எப்படிடா இவ்ளோ நம்பிக்கை என் மேல” என்று கேட்டான்…
“தெரியலையே” என்று கூறிவிட்டு சிவாம்மாவிற்கு உதவ சமையலறைக்கு சென்று விட்டாள்…. சமையல் முடித்துவிட்டு மூவரும் சிறிதுநேரம் பேசிக் கொண்டு இருந்தனர்… பிறகு மதுரைக்கு வீடியோ காலில் பேசினர்…
நிவேதா சுந்தர் அப்பாவிடமும் “அப்பா பாவாவ இனிமே திட்டக் கூடாது நீங்க” என்று கூறினாள்….
அவரும் சரி எனக் கூறிவிட்டார்…..
மூவரும் ஒன்றாக சாப்பிட்டுவிட்டு நிவி வசும்மா வீட்டுக்கு சென்றுவிட்டாள்… கொஞ்ச நேரம் வசும்மா நிதிஷிடம் பேசிவிட்டு படிக்க போவதாக சொல்லிவிட்டு மேலே சென்றுவிட்டாள்… அனைவரும் அவரவர் அறைக்கு சென்றுவிட்டனர்…
அடுத்த நாள் அதிகாலை நான்கு மணிக்கு அதிக்கு அழைப்பு வந்தது… அதில் என்ன சொல்ல பட்டதோ “வாட் ??!!” எனக் கத்தி விட்டான்….
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
3
+1
+1



காற்றாய் நுழைந்தாள் என்னுள்ளே - மேக வாணி