
“உனக்கு எப்படி நிஹா தெரிஞ்சது????” என வசும்மா நிஹாரிகாவிடம் கேட்டார்…
“எனக்கு பதினெட்டு வயசு ஆனா வாட்டி ரத்தம் டொனேட் பண்ண ஹாஸ்பிடல் போவேன்…. என் பர்த்டே அன்னிக்கு முதல பண்ண போனேன்…. அடுத்து ஆறு மாசம் முடிஞ்ச வாட்டி போன மாசம் நிவேதாவ நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போன ரெண்டு நாள்ல திரும்பியும் ஹாஸ்பிடல் போனேன்… ரத்தம் குடுத்துட்டு வந்த உடனே அப்பா வந்து என்ன பார்த்தாரு…. எல்லாரையும் அலட்சிய படுத்துற எனக்கு அவரை சின்ன வயசுல இருந்து பிடிக்கும் அந்த ஆளு (ஜனகராஜ சொல்றா) அப்பா கிட்ட போகவே விட மாட்டாரு…..
அதனால அந்த ஆளு இல்லாத அப்ப தான் அப்பா கிட்ட பேசுவேன…. ஹாஸ்பிடல்ல பார்த்த உடனே உடம்புக்கு ஏதாவதுனு பதறி போய் கேட்டேன்… எனக்கு தெரியும் அம்மாக்கு மனநலம் பாதிக்க பட்டு இருக்குனு…. அம்மாக்கு முடியலையோன்னு போய் கேட்டேன்…. அங்கிள்னு தான் எப்பயும் கூப்பிடுவேன்…. அவர்கிட்ட போய் “அங்கிள் உடம்புக்கு முடியலையா… ஆன்ட்டி நல்லா இருக்காங்களா…. எதுக்கு ஹாஸ்பிடல் வந்து இருக்கீங்கனு ” கேட்டேன்….
அதுக்கு அவரு “உடம்புக்கு எதுவும் இல்லை ம்மா உங்கிட்ட ஒன்னு சொல்லணும் அது நீ எப்படி எடுத்துபியோனு பயமா இருக்கு ம்மா என்ன நம்புவியானு” கேட்டாரு… அவரு கேட்குற அப்பயே பயந்து பயந்து தான் கேட்டாரு ….
நானும் ரொம்ப பெரிய விஷயம் அப்டினு யோசிச்சி வேற எங்கயோ போய் பேசலாம்னு சொன்னேன்…. அதுக்கு அவரு அந்த டாக்டர் வீட்டுக்கு தான் கூட்டிட்டு போனாரு…. நான் யாரு வீடுனு கேட்டேன் அதுக்கு அவரு சொல்றேன் ம்மானு சொல்லி எல்லா விசயத்தையும் சொன்னாரு….
என்னால நம்ப முடியல அப்டியே உட்காந்துட்டேன்…… எதுவும் பேசல…. அந்த டாக்டர் பாட்டியும் எல்லா விசயமும் சொன்னாங்க…. நான் அழுதேன் நல்லா அழுதேன்….. என் வாழ்க்கைல அப்டி நன் அழுததே இல்ல….
அப்பா வந்து என் பக்கத்துல உட்காந்தாரு…. “என்ன நம்பலையா டா???” அப்டினு கேட்டாரு…..” எப்படி நம்பாம இருக்க முடியும் அது தான் எல்லா ஆதாரமும் காட்றிங்களே எப்படி நம்பாம இருக்க முடியும்னு” கேட்டேன்…
நான் எப்படி பெரியம்மா கேட்க முடியும்…. எனக்கே அந்த சந்தேகம் இருந்ததே நான் இவங்க பொண்ணா அப்டினு…. அதுனால தான் எப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்போலாம் நிவேதாவை அம்மாக்கு எதிரா திருப்பி விட்டேன்… எங்க அவ மேல பாசம் வெச்சி என்ன வெறுத்து ஒதுக்கிடுவாங்களனு தான் அம்மாகிட்ட அவளை மாட்டி விடுவேன்” என்று கூறி அழுதாள்….
“என்ன நிஹா சொல்ற உனக்கு ஏற்கனவே தெரியுமா????” என்று கேட்டார்
“நான் செவென்த் படிக்குற அப்ப எங்க ஸ்கூல்ல பிளட் பத்தி நடத்துனாங்க… அம்மா அப்பாவோட ரத்தம் தான் பிள்ளைங்களுக்கு இருக்கும்னு சொன்னாங்க… சரினு நானும் இவங்க கிட்ட கேட்டேன் இவங்களோட ரத்தம் ‘ஓ’ பாசிட்டிவ் சொன்னாங்க அந்த ஆளுக்கு ‘பி’ பாசிட்டிவ் சொன்னாங்க…. எனக்கு என்னம்மானு கேட்டேன் தெரியல அப்பாக்கு தான் தெரியும்னு சொன்னாங்க
நானும் போய் கேட்டேன் ‘ஓ’பாசிட்டிவ் சொன்னாங்க… எங்க ஸ்கூல்ல எல்லாருக்கும் டெஸ்ட் எடுத்தாங்க… எனக்கு ‘ஏ’ பாஸ்டிவ்னு சொன்னாங்க…. அப்ப என் மிஸ் கிட்ட கேட்டேன் எனக்கு நிஜமா ‘ஏ’ பாஸ்டிவானு… ஆமா உனக்கு அது தான் அப்படினு சொன்னாங்க…. அப்ப தான் இவங்க என் பெத்தவங்க இல்லனு தெரிஞ்சது….” என்று கூறி முடித்தாள்….
அந்த இடமே அமைதியாக இருந்தது… யாருக்கும் என்ன சொல்வது என தெரியவில்லை.. அதி தான் பாலய்யாவிடம் கேட்டான்… “ஏன் நீங்க போலீஸ் கம்பளைண்ட் இப்ப கொடுத்தீங்க….. முன்னயே கொடுத்து இருக்காலம்ல…”
“அந்த ஆளு சாட்சியை கலைக்கவா இல்லை எங்கள கொல்லவா ??? நானே இத நிதிஷ் தம்பிகிட்ட குடுக்கலாம்னு இருந்தேன்…. அதுக்குள்ள அந்த ஆளு கொலை பண்ணி உள்ள போயிட்டாரு… அதுனால நானே கம்பளைண்ட் குடுத்தேன்” என்று கூறினார்….
நிஹா வசும்மாவிடம் “பெரியம்மா இனிமே எங்களை தொந்தரவு பண்ண வேணாம்னு சொல்லுங்க….. நாங்க மூணு பேரும் அப்பாவோட சொந்த ஊருக்கு போறோம்…. அம்மாவை வேற இடத்துக்கு சேன்ஜ் பண்ணா கொஞ்சம் மாற்றம் இருக்கும்னு சொன்னாங்க….. அதுனால நாங்க அங்க போறோம் எனக்கு காலேஜ்ல செர்டிபிகேட், டிசி மட்டும் வாங்கி தாங்க ப்ளீஸ் பெரியம்மா” என்று கூறினாள்…..
சாந்தா அதிர்ச்சியோடு அப்டியே அமர்ந்து இருந்தார்…. அவர் பக்கம் சென்றாள்…. அவர் கையை பிடித்துக் கொண்டு “நீங்க என் மேல உண்மையான பாசம் தான் காட்டுனீங்க….. எனக்கு புரியுது…. உங்கள பிரியுறது கஸ்டமா தான் இருக்கு…. ஆனா இத்தனை வருசம் பெத்த பொண்ணு உயிரோட இருந்தும் தனிமையா இருந்து இருக்காங்க…. அவங்க கூட இருக்கணும்னு ஆசை படுறேன்…. இனிமே உங்கள பாக்க முடியாது…. ஆனா உங்கள என்னிக்கும் மறக்கமாட்டேன்…..” என்று கூறிவிட்டு அவரை அணைத்து “ஐ லவ் யூ அம்மா” என்று கூறி அவர் கன்னத்தில் முத்தமிட்டு எழுந்துக் கொண்டாள் …..
சாந்தா கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது….. அதை பார்த்து அனைவரும் வருந்தினர்… இருவரை தவிர…. வேற யாரு பிரியா மற்றும் அதி தான்….. பிரியா மைன்ட் வாய்சில் “ஐயோ உலக அதிசயம் நடக்குதே….. கிரேட் சாந்தா அழுவுறாங்களே” என்று பேசிக் கொண்டு இருந்தாள்….. அதி இதை எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை…..
மாலை ஐந்து மணி பக்கம் ஆனது….. நிதிஷிற்கு எங்கும் நகர முடியா சூழல்…. நிவேதாவை அழைத்து வர முரளியை அழைக்க ஒரு வேலை விஷயமாக ஈரோடு வந்துவிட்டேன் என கூறினான்…. என்ன பண்ணுவது என யோசித்து கொண்டு இருக்கும் போது வசும்மாவே அதியை போய் அழைத்து வர முடியுமா என கேட்டார்…..
அவனுக்கு லட்டு திங்க கசக்குமா “கண்ணா லட்டு திங்க ஆசையா!!!” என மைன்ட் வாய்சில் கூறி விட்டு நிதிஷின் கார் சாவியை வாங்கிக் கொண்டு போனான்….. அதை பார்த்து வசும்மா மற்றும் நிதிஷிற்கு அதியின் மேல இருந்த நம்பிக்கை அதிகமாகியது….
நிதிஷ் தனக்கு தெரிந்த இடத்தில் பேசி நிஹாவுக்கு டிசி வாங்க ஏற்பாடு செய்துவிட்டான்….. நாளை சென்று வாங்கி கொள்ளுமாறு கூறிவிட்டான்…. அவளுக்கு ஏற்கனவே செமெஸ்டர் தேர்வு முடிந்து இருந்தது…. அதனால் டிசி வாங்க பிரச்னை இல்லாமல் போனது…..
அவள் அனைவரிடமும் சொல்லிவிட்டு வசும்மாவிடம் “பெரியம்மா நிவேதாகிட்ட நான் சாரி கேட்டேன்னு சொல்லிடுங்க….. அவளை என்னோட பயத்திலேயே ரொம்ப கஸ்டபடுத்தினேன் அவ கிட்ட நான் சாரி சொன்னேன்னு சொல்லிடுங்க ப்ளீஸ்” எனக் கூறினாள்…..
“அவகிட்ட நீயே சொல்லிட்டு போ அவ வந்துடுவா” என்று வசும்மா கூறினார்…
“அத்தம்மா அதுலாம் வேணாம் அவ கஸ்ட படுவா” என்று பிரியா கூறினாள்……
“எப்படியும் அவளுக்கு தெரிய தான் போகுது இப்பயே தெரியட்டும்” என்று பிரியாவிடம் கூறிவிட்டு “அவ வர வரைக்கும் மட்டும் இருங்க” என நிஹாவிடம் கூறினாள் நிஹாவின் அம்மா ருக்மணி சோபாவி்லேயே தூங்கி இருந்தார்….
“அவங்கள கொஞ்ச நேரம் ரூம்ல தூங்க வைங்க” என்று பாலய்யாவிடம் கூறினார்….
“இல்ல ம்மா இருக்கட்டும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவோம் அதுனால இங்கயே தூங்கட்டும்” என்று கூறிவிட்டார்….
அங்கு ஒருத்தன் கண்ணா லட்டு திங்க ஆசையான்னு போனானே அவனை பாக்கலாம் வாங்க……
நிவேதாவை அழைக்க அவளின் கோச்சிங் சென்டருக்கு சென்றான்… அவன் செல்லும் போது தான் நிவேதா வெளியே வந்தாள்…. அவளுக்கு தன் கையைக் காட்டி அவன் பக்கம் அழைத்தான்…. நிதிஷ் வராமல் இவன் வந்ததை பார்த்து குழம்பி போய் அவனிடம் வந்தாள்…. இதுவரை தன்னிடம் காலை வாக்கிங் செல்லும் போது மட்டும் பேசும் ஒருவன் தற்போது தன்னை அழைத்து போக ஏன் வந்தான் என்று யோசனையோடு அவனிடம் வந்தாள்…..
“ரொம்ப யோசிக்காதீங்க வேதா…. உங்க அண்ணா ஒரு வேலையா இருக்காரு… முரளி அண்ணாவும் ஊருல இல்ல… அதுனால தான் நான் வந்தேன்…. வாங்க போலாம்” என்று கூறி அவளை அழைத்து சென்றான்….
“ஆமா யாரு வேதா?” என்று கேட்டாள் அவள்…..
“நீங்க தான் நிவேதா…. நி.. வேதா…. ‘வேதா’ வருதுல அதுனால வேதா” என்று அவன் கூறினான்….
“இது வரைக்கும் யாருமே அந்த நேம்ல கூப்பிட்டது இல்லை அதுனால தெரியல” என்று அவள் கூறினாள்….
வீட்டில் இருந்து கோச்சிங் சென்டர் அரை மணி நேர பயணம்…. அரை மணி நேரம் ஆகும் என்பதால் அவளுக்கு சாப்பிட வாங்கி குடுத்து தான் அழைத்து சென்றான்…. ஏன்னென்றால் அங்கு தான் பூகம்பம் உள்ளதே என்ன வேண்டும் என்றாலும் ஆகலாம் அதனால் அவள் மறுத்தும் சாப்பிட வைத்து தான் அழைத்து சென்றான் அந்த தேவதையின் தேவதூதன்….
“வேதா உங்க கிட்ட ஒரு விசயம் சொல்லுவேன்… நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க தெரியல…. ஆனா வீட்டுல நீங்க தடுமாற கூடாதுனு இப்பயே எல்லா விஷயமும் சொல்லிடுறேன்” என்று கூறினான்……
“நிஹாரிகா உங்க தங்கையே இல்ல…. உங்க கடையில வேல பார்த்த மேனேஜர் பாலய்யாவோட பொண்ணு” என்று கூறி அவளுக்கு தேவையான விசயம் மட்டும் கூறினான்….. நிவேதா என்ன சொல்ல வேண்டும் என்று கூட தெரியாமல் அமர்ந்து இருந்தாள்…..
“அங்க வீட்டுக்கு போய் தெரிஞ்சா உங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கும்னு தெரியும்…. அதுனால தான் நானே சொன்னேன்” என்று கூறினான்….
“வேதா வேதா” என இருமுறை அழைத்தான்… அவள் திரும்பவே இல்லை….. “அம்மு” என அழைத்தான்… அதற்கும் அவள் அசையவில்லை.. அவள் கையைப் பிடித்து அசைத்தான்… அப்போது தான் அசைந்தாள்….
“என்ன ஆச்சி வேதா…?? ஏன் அப்டியே அசையாம உட்காந்து இருந்த…..?????” என்று நிவேதாவிடம் கேட்டான்….
“இல்லை அவரு இத்தனை வருசத்துல எனக்கு மட்டும் தான் உண்மையா பாசமா இல்லனு நினைச்சேன்…. ஆனா அவரு யாருக்குமே உண்மையா இல்லல” என்று கூறினாள்….
“ஓகே கூல் வேதா… இனிமே உன்னோட லைப் நீ பாக்கணும்… சின்ன வயசுல இருந்து பயந்து எல்லாத்துக்கும் திட்டு வாங்கிட்டு அடி வாங்கிட்டு தானு உன் லைப் போச்சி… உன்ன பத்தி அவ்ளோவா தெரியாது… உன் அண்ணா, முரளி அண்ணா, அபர்ணா அண்ணி சொன்னது வெச்சி தான் எனக்கு தெரியும்… இனிமே உனக்கான லைப் உனக்கு பிடிச்சு நீ சேர்ந்த சிஏ கோர்ஸ் போற நல்லா படிக்கணும்… உனக்கான வெல் விசரா எப்பயும் இருப்பேன்.. “என்று கூறினான்
“தேங்க்ஸ்”… என்று கூறினாள்…
“எதுக்கு இந்த தேங்க்ஸ்” என்று நிவேதாவிடம் கேட்டான்….
“இங்க வந்தவாட்டி நான் கொஞ்சமா மாறினேன்…ஆனா இத கேட்ட வாட்டி கொஞ்சம் அப்செட் ஆனேன்…. ஆனா நீங்க பேசுனவாட்டி இன்னும் கொஞ்சம் தைரியமா பெட்டரா பீல் பண்றேன்… அதுக்கு தான் தேங்க்ஸ்” என்று கூறினாள்… அவன் அவளை பார்த்து சிரித்து விட்டு காரை ஓட்டினான்…..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1


