Loading

மதியம் மூன்று மணி…

அதியின் வீட்டில் அனைவரும் இருந்தனர்… அப்போது தான் சாந்தா நிஹாரிகா இருவரும் நிவேதாவை தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல வசும்மா வீட்டிற்கு வந்து இருந்தனர்… வசும்மா வீட்டில சென்று பார்க்கும் பொழுது யாரும் இல்லை…. பக்கத்து வீட்டில் சத்தம் கேட்டதால் அங்கு சென்று பார்த்தனர்….

அங்கு தோட்டத்தில் நிவேதாவும் அதியும் தாரா பாப்பா மற்றும் அகிலை தூக்கிக் கொண்டு நின்று இருந்தனர்…. மற்றவர்கள் அங்கு வாயிலில் நின்று இருந்தனர் அதி நிவேதாவை விரும்புவதை அறிந்த பாட்டியும் மீனாட்சியும் அவர்களை ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தனர்… மற்றவர்களுக்கும் அது தவறாக தெரியவில்லை….

ஆனால் சாந்தாவுக்கும் நிஹாரிகாவுக்கும் அது தவறாக தெரிந்தது…. சாந்தாவுக்கு  அவள் வேறு ஒருவருடன் தனியாக சிரித்து பேசுகிறாள் என கோவமாக பார்த்துக் கொண்டு இருந்தார்…. நிஹாரிகாவுக்கு அவள் அழகாக இருக்கும் ஒரு பையனிடம் நின்று பேசுகிறாளே என்ற வெறுப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்…

மற்றவர்கள் வாயிலில் நின்றதால் அவர்களை சாந்தா மற்றும் நிஹாரிகா பார்க்கவில்லை…

சாந்தா கோவமாக நிவேதாவை அடிக்க சென்றார்… உள்ளே நுழைந்தவுடன் நிவேதாவை அடிக்க ஆரம்பித்து விட்டார்… திடீரென அவர் அப்டி வருவார் , அடிப்பார் என யாரும் நினைக்கவில்லை…. நிவேதாவும் அந்த தாக்குதலை எதிர் பார்க்கவில்லை…. முதுகில் நான்கு ஐந்து அடிகள் நன்றாக அடித்து விட்டார்…

ஒரு நிமிடம் யாருக்கும் எதுவும் புரியவில்லை, அதியும் அப்டியே நின்றுவிட்டான்… அவள் அந்த அடியில் நிலை குலைந்து தாரா பாப்பாவுடன் கீழே விழ சென்றாள்… அப்போது தான் அதி தெளிந்து தாரா பாப்பா மற்றும் நிவேதாவை பிடித்து தன் கை வளைவுக்குள் நிற்க வைத்து விட்டு சாந்தாவை ஒரு அறை வைத்தான்…. ஒரு அறைக்கே அவர் கீழே விழுந்து விட்டார்… நிஹாரிகா அவரை தூக்கி விட சென்றாள்….

அதற்குள் அனைவரும் அங்கு வந்து விட்டனர்…. அதி தாரா பாப்பாவை மீனாட்சியிடம் குடுத்து விட்டு நிவேதாவை தன் கை வளைவிலே வைத்து இருந்தான்…. நிவேதாவும் பயத்தில் வலியில் யாரிடம் இருக்கிறோம் என தெரியாமல் அவனுடன் ஒன்றி இருந்தாள்….

அனைவருக்கும் புரிந்தது அவள் பயத்தில் அதியுடன் ஒன்றி இருக்கிறாள் என… ஆனால் சாந்தா அதி அடித்த கோவத்தில் காச் மூச் என கத்த ஆரம்பித்து விட்டார்….

“அக்கா அங்க பாரு அவ யாருக்குடயோ சிரிச்சி பேசிட்டு இருக்கா…. அத பாத்து அடிச்சா இவன் என்னயே அடிக்குறான்… இப்ப கூட பாரு அவன் கூட தான் ஒட்டிக்கிட்டு நிக்குறா…. எவளோ திமிரு இருக்கனும்…. இங்க வந்ததுனால தான் இப்டி இருக்கா நான் இவள என்கூட கூட்டிட்டு போறேன்…. அப்ப தான் இவளுக்கு கொழுப்பு குறையும்” என்று வசும்மாவிடம் கத்திக் கொண்டு இருந்தார்….

நிவேதா சாந்தா சொன்னவற்றை கேட்டு அதியிடம் இருந்து விலக முயற்சித்தாள்… ஆனால் அதி அவளை விடவில்லை… அம்மணி பாட்டி தான் அதியிடம் தன் கண் பார்வையிலே தன்னிடம் விடுமாறு கூறி தன் கை வளைவில் நிற்க வைத்துக் கொண்டார்….

ஆனாலும் சாந்தா “அக்கா இவளால குடும்ப மானமே போயிடும் போல… அதுனால இவ இனிமே காலேஜுக்கு போக மாட்டா…. வீட்டுக்குள்ளயே கிடக்கட்டும்… நான் இப்பயே கூட்டிட்டு போறேன்”…

“ஏய் குண்டச்சி வா டி வீட்டுக்கு போனதும் உனக்கு இருக்கு… அப்ப எவன் உன்ன காப்பாத்த வரானானு பாக்குறேன்” என்று நிவேதாவை நோக்கி சென்றாள்…. ஆனால் அதை பார்த்து நிதிஷ் முரளி அதி மூவரும் நிவேதாவின் முன் வந்து நின்று கொண்டனர்….

அதை பார்த்து சாந்தா மேலும் கோவம் அடைந்து திட்ட ஆரம்பிக்கும் பொழுது வசும்மா “போதும் நிறுத்து சாந்தா” என கூறி “அஜய் நீ ஷாலு அகில் ரெண்டு பேரையும் கூட்டிட்டு உள்ள போ, மீனாம்மா நீ தாரா பாப்பாவை கூட்டிட்டு உள்ள போ பாரு பாப்பா அழுகுறா, அபர்ணாம்மா நீ நிவேதாவை உள்ள கூட்டிட்டு போ” என்று அவர்களிடம் கூறி விட்டு சாந்தாவை பார்த்து பேச ஆரம்பித்தார்….

“உனக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லனு அன்னிக்கே சொல்லிட்டு வந்துட்டேன் சாந்தா அவ இனிமே அந்த வீட்டுக்குள்ள வரவே மாட்டா…. எங்களுக்கு தப்பா தெரியாத விசயம் உனக்கு தப்பா தெரியுதுனா உன் பார்வையில தான் தப்பு…. அப்டியே ரெண்டு பேரும் பேசுனா என்ன தப்பு அதியும் நல்ல பையன் தான் இந்த ரெண்டு வாரமா பாக்குறேன்… உனக்கு என்ன வந்தது இனிமே நிவேதாவை பாக்க வீடு பக்கம் வந்துடாத” என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டார்….

அனைவரும் அவர்களை ஒரு மாதிரி பார்த்து உள்ளே சென்று விட்டனர்…. அதி மட்டும் அங்கேயே இருந்தான்…. அவர்களை நோக்கி தான் நடந்தான்… அவன் கிட்ட வர வர இவர்களுக்கு வேர்க்க ஆரம்பித்து விட்டது…. ஏன்னென்றால் நம்ம ஆளு அடித்த அடி அப்படி…..

இருவருக்கும் மட்டும் கேட்கும் குரலில் “என் அம்முவை அடிச்சிட்டல இனிமே என்ன பண்ண போறேன்னு பாரு…. என் வீட்ட விட்டு வெளியே போங்க” என்று கூறி உள்ளே சென்று விட்டான்…. இவர்களும் போகும் அவனையே முறைத்து விட்டு தன் வீட்டிற்கு சென்று விட்டனர்….

வீட்டினுள் “அம்மா மன்னிச்சிடுங்க என் தங்கச்சினால உங்க பேரனுக்கு அவமானம் ஆயிடிச்சு மன்னிச்சிடுங்க ம்மா” என்று மன்னிப்பை கேட்டார்….

“என்ன வசு இது நீ என்ன அம்மானு உண்மையா தானு கூப்புட்ற அப்பறம் ஏன் மன்னிப்பு கேட்குற….”

“சரி ம்மா இனிமே கேட்கல” என்று கூறினார்….

அப்பத்தா வசும்மாவிடம் “வசு என்கூட ஒரு நிமிஷம் அறைக்கு வா உன்கூட ஒன்னு பேசணும் என்று கூறி தன் அறைக்கு அழைத்து சென்றார்”…

இங்கு மாடியில் நிதிஷும் அதியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு இருந்தான்…. மீனாட்சி அறையில் பிரியாவும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு இருந்தாள்…..

அழுத களைப்பில் நிவேதா உறங்கி விட்டாள்…. கீழே இருக்கும் அறையில் குழந்தைகள் இருப்பதால் அபர்ணா நிவேதாவை அதியின் அறைக்கு தான் அழைத்து சென்றாள்…. அவள் உறங்கியவுடன் அபர்ணாவும் மீனாட்சி அறைக்கு வந்து விட்டாள்….

பிரியா அவளிடம் “அண்ணி ஏஞ்சல் என்ன பண்றா??? தூங்கிட்டாளா??? ரொம்ப அழுதாளா???”  என்று கேள்விகளை கேட்டுக் கொண்டு இருந்தாள்….

“பொறுமை பிரியா அழுதா… ஆனா இப்ப தூங்கிட்டா…. நல்லா தூங்கிட்டா கொஞ்ச நேரம் நல்லா தூங்குவா சரியா….”

மீனாட்சி அப்பத்தா அதி மூவரும் இவர்களிடம் அதியின் காதலை கூற முடிவு செய்தனர்…. காதல் என்ன கூறாமல் பிடித்து இருக்கிறது என்று கூறி பேசலாம் என்ன அப்பத்தாவும் மீனாட்சியும் முடிவு செய்தனர்…. கூறியும் முடித்து விட்டனர் ….

அப்பத்தா வசும்மாவிடம் “வசு என்ன இப்டி கேட்குறாங்க, ரெண்டு வாரம் தானு ஆகுது அப்டினு தப்பா எடுத்துக்காத…. அவனுக்கு பிடிச்சி இருக்கு எங்களுக்கும் பிடிச்சி இருக்கு நீ என்ன சொல்ற இப்பயே பேச வேணாம்…. இப்ப தான் பாப்பா எதோ கிளாஸ்க்கு போகுதாமே அதுக்கு அஞ்சு வருஷம் ஆகும்னு சொன்னாங்க… நீ பொறுமையா யோசி” என கூறினார்

மீனாட்சியும் அதையே கூறினாள் நன்றாக யோசித்து கூற கூறினாள்…. “அவ சிஏ முடிக்கட்டும் அதுல எந்த பிரச்னையும் இல்ல…. அதுக்கு அப்பறம் கூட இத பேசலாம் நீங்க மூணு பேரும் பேசிட்டு சொல்லுங்க…..”

“அண்ணி நீங்க என்ன நினைக்குறிங்க” என்று அபர்ணாவிடம் கேட்டாள்….

“இதுல யாரு என்ன சொன்னாலும் நிவேதா தான் கடைசில முடிவு எடுக்கணும்…. அவ பிரஸ்ட் சிஏ முடிக்கட்டும் அப்பறம் பேசிக்கோங்க” என அவள் கூறினாள்….

அதி நிதிஷிடம் அவன் நிவேதாவை முதலில் பார்த்தது , அவளின் அழுதமுகம் அவனை ஒரு மாதிரி செய்தது, முரளி வீட்டில் பேசியதை கேட்டது, மாறனிடம் பேசியது, அடுத்த நாளே அவளை நிதிஷ் வீட்டில் பார்த்தது என அவளை விரும்பியது பற்றி கூறினான்…..

“நீங்க யோசிங்க நான் அம்…” அம்மு என கூற வந்து “நிவேதா கிட்ட இத பத்தி பேச மாட்டேன்… அவ சிஏ முடிக்கட்டும் அவளை டிஸ்டர்ப் கூட பண்ண மாட்டேன்” என கூறினான்…. ஆனால் மூவரும் நிவேதாவிடம் தற்போது கூற வேண்டாம் என கூறி விட்டனர்…

நிதிஷ் எதுவும் பேசலாமல் முரளியிடம் மட்டும் கூறி சென்று விட்டான்…. அதிக்கு தெரியும் அவன் அப்டி தான் செய்வான் என… அவன் வசும்மா பிரியா அழைத்துவிட்டு நிவேதாவை தன் வீட்டில் தூங்க வைத்து விடுவதாக கூறி அழைத்து சென்று விட்டான்….

“சாரி ண்ணா அன்னிக்கு வேணும்னு நீங்க பேசுனத கேட்கல…. சாவி மறந்து வெச்சிட்டு வந்துட்டேன் அது தான் எடுக்க வந்தேன்… அப்ப தான் நீங்க பேசுனது கேட்டுச்சு….”

“பரவால்ல அதி பட் இந்த விஷயம் வேற யாருக்கோ தெரியுமா…” என்று கேட்டான்…

“தெரியும் ண்ணா மாமா அக்கா கிட்ட சொல்லி இருப்பாரு, மாமா தாத்தா கிட்டயும் சொல்லி இருப்பாரு, அவரும் அப்பா அம்மா கிட்ட சொல்லி இருப்பாரு, அக்கா அப்பத்தா கிட்ட சொல்லிட்டாங்க, இப்ப அப்பத்தாவும் அக்காவும் நிவேதாவ தவிர மத்தவங்க கிட்ட சொல்லி இருப்பாங்க” என கூறினான்…..

“சரி கொஞ்சம் பொறுமையா இரு… கொஞ்ச நாள் கழிச்சு பேசு…. இப்ப எதுவும் பேசாத நான் வரேன்” என கூறி சென்று விட்டான்…. கீழே சென்று அபர்ணா குழந்தைகளை அழைத்துக் கொண்டு அப்பத்தா மீனாட்சி அஜயிடம் கூறிக் கொண்டு தன் வீட்டிற்கு சென்று விட்டான்…..

நிவேதா வீட்டில்

சாந்தாவும் நிஹாவும் கோவத்தில் இருந்தனர்….இருவரும் அங்கு இருந்து வந்து எதுவும் பேசாமல் தங்களுடைய அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டனர் …

சாந்தா அதி தன்னை அவமானம் படுத்தி அனுப்பியதை நினைத்து கோவமாக இருந்தார்…. நிஹா அவளை திரும்பி பார்க்கவில்லை… தன்னை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என நினைத்து கோவத்தில் இருந்தாள்…. நிஹா பார்ப்போரை இன்னொரு முறை திரும்பி பார்க்க வைக்கும் பேரழகி…. அவளுக்கு எப்போதும் தன் அழகின் மேல் ஒரு பெருமை இருக்கும் ஆனால் அதி அவளை பொருட்டாக கூட நினைக்கவில்லை…. அதனால் அவனை தன் பின்னால் சுற்ற வைக்க வேண்டும் என நினைத்து கொண்டாள்…

வசும்மா வீட்டில்

நிதிஷ் நிவேதாவை அவள் அறையில் உறங்க வைத்து விட்டு வசும்மா அறைக்குள் சென்றான்…. ஏற்கனவே பிரியா அங்கு தான் இருந்தாள்… வசும்மா தான் முதலில் பேச்சை ஆரம்பித்தார்…. “உங்க ரெண்டு பேரு கிட்டயும் மீனாட்சியும் அதி தம்பியும் சொல்லி இருப்பாங்கன்னு நினைக்குறேன் நீங்க என்ன சொல்லறீங்க”

“அம்மா கொஞ்ச நாள் போகட்டும் இத பத்தி பேச வேணாம் அதியும் நல்லவர் தான் அவங்க வீட்டு ஆளுங்களும் நல்லவங்களா தான் இருக்காங்க ஆனா இப்ப பேச வேணாம்” என்று நிதிஷ் வசும்மாவிடம் கூறினான்…

“பிரியா ம்மா நீ என்ன சொல்ற???”

“அத்தம்மா மாமா சொல்றது சரிதான் கொஞ்ச நாள் ஆகட்டும் அவங்க கூட பேசலாம் பழகலாம் இந்த விசயத்த பத்தி பேச வேண்டாம் சரியா அப்பறம் ஏஞ்சல் கிட்ட இத பத்தி பேச வேண்டாம்” என்று கூறி விட்டாள்….

சிறிது நேரத்தில் அஜய் அங்கு எடுத்து சென்ற பாத்திரத்தை குடுக்க வந்து இருந்தான்… குடுத்து விட்டு அவன் வீட்டிற்கு சென்று விட்டான்…

மாலை ஐந்து மணி அளவில் மாறன் சேலம் வந்தான்…. மாறனுடன் மீனாட்சி அஜய் தாரா பாப்பா மட்டும் கிளம்பினர்…. அப்பத்தா சேலத்திலேயே இருப்பதாக கூறி விட்டார்…. ஆறு மணி அளவில் அதி மற்றும் அப்பத்தாவிடம் விடை பெற்றுக் கொண்டு மதுரை நோக்கி சென்றனர்…. செல்லும் பொது மாறனின் பார்வை வசும்மா வீட்டிற்கு சென்று விட்டு அதியின் முகத்தை பார்த்தது…. அவன் முகம் ஒரு மாதிரி இருப்பதை கண்டு கொண்டான் எதுவும் கேட்கமால் மதுரையை நோக்கி மகிழுந்து புறப்பட்டது….

காரில் அஜயும் தாரா பாப்பாவும் உறங்கி விட்டனர்….. மாறன் மீனாட்சியை ஒரு பார்வை தான் பார்த்தான்….. மீனாட்சி மதியம் நடந்தது அனைத்தையும் சொல்லி விட்டாள்….. அனைத்தையும் கேட்டு விட்டு மாறன் அமைதியாக இருந்தான்…. “மாமா என்ன பாரு ஏன் எதுவும் சொல்ல மாட்டிங்குற…..???”

“என்ன சொல்றது அதி எதுக்கு அந்த அம்மாவை அடிச்சான்…. அந்த அம்மா அதுக்கும் நிவேதாவை தான் எதோ பண்ணும்….. வசும்மா இல்லன்னா நிதிஷ் அந்த அம்மா கிட்ட பேசி இருக்க மாட்டாங்களா…. எதுவும் யோசிக்காம பண்ணி இருக்கான்… இனிமே ஒழுங்கா இருக்க சொல்லு…. நீங்க அந்த விசயத்தை சொன்னது பிரச்சனை இல்ல…. அவங்களுக்கு கொஞ்சம் நாள் ஆகும் யோசிக்க…. அமைதியா இருக்க சொல்லு அவனை…. ஆனா நிவேதாவை பத்திரமா பாத்துக்க சொல்லு…. அந்த பொண்ணோட அம்மாவால இல்லனா தங்கச்சியால பிரச்னை வரும் பாத்துக்க சொல்லு….”

“நீங்களே அவன் கிட்ட பேசுங்க….”

“நான் எதுக்கு பேசணும் அது தான் தொரை உங்க போன் மூலமா கேட்குறாரே…. அது போதாதா நாங்க தனியா சொல்லனுமா…. சூதானமா இருக்கா சொல்லு அவளோ தான் சொல்லுவேன்…. முதல்ல கட் பண்ணு” என்று கூறி சாலையை பார்த்து ஓட்ட ஆரம்பித்து விட்டான்…

இவளும் போனை கட் செய்து விட்டு தூங்க ஆரம்பித்து விட்டாள்….

ஏற்காடு மலை பகுதியில்

“சீக்கிரம் வேலைய பாருங்க அந்த காரு இன்னும்  அரை மணி நேரத்துல வந்துடும் எல்லாம் கரெக்டா இருக்கா இனிக்கும் சொதப்பாம பண்ணிடனும்” என்று ஒரு குரல் கேட்டுக் கொண்டு இருந்தது….

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்