Loading

நடை பயிற்சி முடித்து விட்டு அறைக்கு சென்றவள் காலை எட்டு மணிக்கு குளித்து முடித்து சாமி அறைக்கு சென்றாள்…

அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் அவளுடைய கனவு வெற்றி அடைய வேண்டும் என வேண்டிக் கொண்டாள்…. வேண்டிக் கொள்ளும் போது அதியின் முகம் தோன்றி மறைந்தது அவள் தலையை உலுக்கி மீண்டும் வேண்டிக் கொண்டு இருந்தாள் ….

பிறகு சாமி பாடல் கொஞ்ச நேரம் பாடினாள் ….

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை கண்ணா

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா

கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிருக்க

வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

என்று பாடி முடித்தாள்…..

அவள் பாடி முடிக்கும் போது வசும்மா ,நிதிஷ், பிரியா என அனைவரும் பூஜை அறைக்கு வந்து இருந்தனர்….. அனைவரும் சாமி கும்பிட்டு விட்டு சாப்பிட சென்றனர்…. ஏற்கனவே வசும்மா சமைத்து முடித்து இருக்க நிவியும் பிரியாவும் சேர்ந்து எடுத்து வைத்தனர்….

அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டே சாப்பிட்டு முடித்து விட்டு நிதிஷ் நிவேதாவை கோச்சிங் கிளாஸ் விட சென்றான் ….

“ஆல் தி பெஸ்ட் குட்டிமா… நான் மூணு மணிக்கு வந்து கூட்டிட்டு போறேன்… நீ இதை மட்டும் கான்செண்ட்ரேட் பண்ணு ஓகே டா நான் வரேன் பை” என்று கூறி விடை பெற்றான்…. அவளும் தன் இலட்சியத்தை நோக்கி முதல் அடியை எடுத்து வைத்தாள் …. அவளுக்கு  தன் தாய் தந்தையை நினைத்து பயமாக இருந்தாலும் தன் அண்ணன் இருக்கும் தைரியத்தில் தெளிவாகவே கிளாஸ் சென்றாள்..

(என்ன டா அதி போலீஸ்னு சொன்னாலே அவனோட வேலை பத்தி எதுவும் வரலன்னு யோசிக்கிறீங்களா இனிமே பாக்கலாம் …..)

காலை தன் அலுவலகம் செல்ல தயாராகி கொண்டு இருந்தான்…. தயாராகி கீழே வரும் போது மீனாட்சி காலை உணவை தயார் செய்து டைனிங் டேபிளில் எடுத்து வைத்தாள்…. அஜய் தாரா பாப்பாவை தூக்கி வைத்து கொஞ்சி கொண்டு இருந்தான்…. அம்மணி பாட்டி பாப்பாவிற்கு ஊட்டிக் கொண்டு இருந்தார் ….

அவன் வந்தவுடன் மீனாட்சி “வா டா வந்து உட்காரு சாப்பாடு எடுத்து வைக்குறேன் சாப்புடு” என்று கூறினாள்…

“அக்கா எல்லாம் சாப்டாச்சா” என்று அதி மீனாட்சியிடம் கேட்டான்….

“இல்ல நீ சாப்பிடு அப்பறம் சாப்டுக்குறோம் எப்ப இவளோ நேரமா சாப்பிட்டு இருக்கோம்” என்று அவள் கூறிக் கொண்டு இருக்கும் போதே அவனுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது அவன் மேல் அதிகாரி தான் அழைத்து இருந்தார் ….

“ஹெலோ சார் குட் மார்னிங் ” என்று தன் வணக்கத்தை கூறினான்

“குட் மார்னிங் அதிவீரன் ஒரு முக்கியமான கேஸ் சோ என்னோட ஆபீஸ்க்கு வாங்க பேசிக்கலாம்….” என்று கூறினார்…

“ஓகே சார்” என்று கூறி வைத்து விட்டான்… சாப்பிட்டு முடித்து விட்டு மீனாட்சியிடம் வேலைக்கு சென்று வருவதாக கூறி விட்டு அஜயிடம் இருக்கும் தாரா பாப்பாவிற்கு முத்தம் கொடுத்து கொஞ்சி விட்டு அஜயின் தலையை கலைத்து விட்டு அவனிடம் கவனமாக இருக்க கூறி விட்டு பாட்டியிடம் “அப்பத்தா நான் கிளம்புறேன் பத்திரமா இருங்க” என்று கூறி கிளம்பிவிட்டான் தன் மேல் அதிகாரியை பார்க்க …..

எஸ்பி அலுவலகம்

அதி ஒன்பதரை மணிக்கு எஸ்பி அலுவலகத்தில் அவரின்  வரவிற்கு காத்துக் கொண்டு இருந்தான்…. அவரும் ஐந்து நிமிடத்தில் வந்து விட்டார் அவர் உள்ளே சென்று இரண்டு நிமிடத்தில் அதி உள்ளே அழைக்க பட்டான்….

” மே ஐ கம் இன் சார்” என்று அனுமதி கேட்டான் அதிவீரபாண்டியன்….

” வாங்க அதிவீரன் உட்காருங்க” என்று இருக்கையை காட்டினார்… அவனும் “தேங்க் யூ சார்” என்று கூறி அமர்ந்தான் ….

“மிஸ்டர் அதிவீரன் ஒரு நாலு மாசமா ஏற்காடு மலைல அதிகமா ஆக்சிடென்ட் நடக்குது… அந்த ஆக்சிடென்ட் திட்டமிட்டு நடக்குதா இல்லை எதார்த்தமா நடக்குதா எந்த காரணத்துனால நடக்குதுன்னு கண்டு பிடிச்சி சொல்லுங்க அண்ட் உங்களுக்கு உதவியா டிஎஸ்பி அன்பரசு இருப்பாரு….”என்று கூறினர்

அந்த பேரை கேட்டவுடன் அவனின் முகம் இறுகியது இருந்தும் அத்தை வெளி காட்டி கொள்ளாமல் “ஓகே சார்… கண்டிப்பா கண்டுபிடிச்சிடுவேன்..” என்று கூறி அந்த கேஸ் பற்றிய தகவல் அடங்கிய கோப்பை வாங்கி கொண்டு வெளியேறினான் ……

இங்கு நிவேதாவின் வீட்டில்

அவள் அந்த வீட்டை விட்டு வெளியேறி ஒரு வாரம் மேல் ஆகி விட்டது …அவள் வீட்டில் இருந்த போது நேரத்திற்கு சாப்பாடு எப்போதும் இருக்கும்… அவள் இல்லாதனால் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் கடையில் தான்….

நிவேதாவின் அப்பா அவள் சென்று மூன்று நாள் கழித்து தான் வீட்டிற்கு வந்தார்…. அவர் வந்தவுடன் அவளை பற்றி சொல்லி வீட்டிற்கு அழைக்க சொன்னார் நிவேதாவின் அம்மா சாந்தா …. ஆனால் அவளின் அப்பா “போகட்டும் சனியன்… நிம்மதியா இருக்கலாம்….” என்று கூறி மறுத்துவிட்டார்….

“எங்க போனீங்க இத்தனை நாள் ஆளே காணோம், இப்ப கொஞ்சம் மாசமா தான் எங்கயோ போறீங்க, எங்க போறீங்க ????” என்று கேட்டார் சாந்தா….

அதற்கு நிவேதாவின் அப்பா ஜனகராஜ் சாந்தாவிடம் கொஞ்சம் எரிச்சலாக “கடை விஷயமா தான் வெளியே போறேன்…. இங்க பாரு உங்க ரெண்டு பேருக்கும் அங்க இருந்து புது நகை வாங்கிட்டு வந்து இருக்கேன் இந்தாங்க” என்று கூறி தந்தார் …

அதை வாங்கி வைத்து விட்டு “அப்டியாங்க போன விஷயம் நல்ல விதமா முடிஞ்சதா …???” என்று கேட்டார் சாந்தா…

“ம்ம் ரொம்ப நல்ல முடிஞ்சது” என்று கொஞ்சக் நக்கலாக கூறி “சரி எனக்கு அலுப்பா இருக்கு” என்று கூறி உள்ளே சென்றுவிட்டார் ….

அவர் வந்து நான்கு நாள் ஆகி விட்டது…. ஜனகராஜ் சாந்தாவிடம் “எத்தனை நாள் வெளியே சாப்புட்றது இன்னிக்கு வீட்டுலயே சமைங்க” என்று கூறி சென்று விட்டார்….

நிஹாரிகாவும் படிக்கும் வேலை உள்ளது என கூறி தன் அறைக்கு சென்று மூடி விட்டாள்…

சாந்தா சமையலறை சென்றே பல வருடங்கள் ஆகிறது என்ன சமைப்பது என தெரியாமல் சோறு பொங்கிவிட்டு பருப்புக்குழம்பு மட்டும் செய்து வைத்து விட்டு அவரும் உள்ளே சென்று விட்டார் …. செய்ததையும் அரைகுறையாய் தான் செய்து இருந்தார்….

ஜனகராஜ் வீட்டிற்கு வரும் போது சாந்தா நிஹாரிக்கா இருவரும் அறையில் இருந்தனர்… அவர் நேராக டைனிங் டேபிளுக்கு வந்து அமர்ந்து அங்கு இருக்கும் உணவை எடுத்து போட்டு சாப்பிட்டார் ஒரு வாய் வைத்தவுடன் சாப்பாடு தட்டை சுவற்றில் வீசி எரிந்து விட்டார் ….

அந்த சத்தத்தில் இருவரும் பதறி அடித்து கொண்டு வெளியே வந்தனர்…. “என்ன கருமம் பண்ணி இருக்கீங்க சாப்பாடு செய்ய சொன்ன என்ன எலவ பண்ணி இருக்கீங்க…. இத்தனை நாள் நல்ல தானு இருந்திச்சி இப்ப ஏன் இப்டி இருக்கு …. வாயில வைக்க முடில… உப்பு உரப்பு எதுவும் இல்லை… எந்த நியாபகத்துல செஞ்ச..” என்று கோவமாக கேட்டார்….

“அது வந்துங்க இத்தனை நாள் அவ தா சமைச்சா அது தான் அவளை கூட்டிட்டு வரலாம்னு சொன்னேன்… ” என்று தயங்கி தயங்கி கூறினார்..

இதை கேட்டவுடன் கோவம் அதிகரிக்க சாந்தாவை ஓங்கி அடித்துவிட்டார்…. இரண்டு மூன்று முறை அறைந்தவர்  “என்ன சொன்ன இத்தனை வருஷமா அந்த விளங்காதவ பண்ண சாப்பாடு தான் சாப்பிட்டு இருந்தேனா…. உங்கிட்ட சொன்னேனா இல்லையா அவ மூச்சு காத்து பட்ட எந்த பொருளும் என்கிட்ட வர கூடாதுனு ஆனா நீ அவளை சமைக்க சொல்லி இருக்க என்ன தைரியம் உனக்கு” என கேட்டு மீண்டும் அடித்து விட்டு சென்றுவிட்டார் …..

தன் கன்னத்தில் கை வைத்து அப்டியே நின்றுவிட்டார் …. நிஹாரிகா ஜனகராஜ் திட்டும் பொழுதே மீண்டும் அறைக்கு ஓடி சென்றுவிட்டாள்…. அவளை திட்டி விட்டால் என்ன செய்வது என்று எண்ணி ஓடி விட்டாள் தன்னை கணவன் அடிக்க நிவேதா தான் காரணம் என அவளை  மனதிலேயே திட்டிவிட்டு உறங்க சென்று விட்டார் ….

மதுரையில்

சிம்பாவும் கருடனும் அஜய் மற்றும் அதியை காணாமல் வீட்டை நோக்கி கத்திக் கொண்டு இருந்தனர்… எப்போதும் அவர்கள் இருவர் தான் இருவருக்கும் உணவு வைப்பர்…. இன்று காணாமல் கத்த ஆரம்பித்து இருந்தனர்…. அதி கூட எதோ ஒரு நாள் தான் செய்வான்… ஆனால் அஜய் போட்டிக்கு செல்லும் நாள் தவிர்த்து அவன் தான் வைப்பான்… தாத்தா தான் இருவரிடமும் “டேய் உங்க அண்ணாங்க ரெண்டு பேரும் வெளி ஊருக்கு போய்ட்டாங்க …. வந்துடுவாங்க அதுனால கத்தாம இருங்க… நாங்க வெச்சா சாப்பிட மாட்டிங்களா….” என்று கூறி அந்த வாய் இல்லா ஜீவன்களின் தலையை தடவி கொடுத்தார் ….

அவருக்கும் அஜய் இல்லாதது சலிப்பாக தான் இருந்தது… அதி கூட வெளியே சென்று விடுவான்… ஆனால் அஜய் தாத்தாவை   தான் எப்போதும் சுற்றி   வருவான் …  அதுனால் தான் அவருக்கு அவன் இல்லாதது குறையாக இருந்தது ….

அந்த நேரம் மாறனும் வீட்டினுள் வந்தான்… “வா மாறா உள்ள வா பேசலாம்… என்று கூறினர்….

“இல்ல தாத்தா உங்க கிட்ட ஒன்னு பேசணும்….” என்று கூறினான்….

“என்ன சேதி சொல்லு கேட்கலாம் ….” என்று கேட்டார் ஆர்வமாக….

“அது தாத்தா வீராக்கு ஒரு பொண்ணை பிடிச்சி இருக்கு ” என்று கூறி தனக்கு தெரிந்த அனைத்து விசயத்தையும் கூறினான் ….

“விடு மாறா நல்லதே நடக்கும் அந்த பொண்ணு நல்ல பொண்ணா தான் இருக்கு ரெண்டு வருஷம் போகட்டும் பாக்கலாம்… அந்த பொண்ணோட விருப்பத்தை கேட்கனும்… இப்ப வா உள்ள வந்து சாப்புடு” என்று கூறி சாப்பிட அழைத்து சென்றார்…

மாறனும் சாப்பிட்டு முடித்து வீட்டிற்கு கிளம்புவதாக கூற அங்கு யாரும் விடவில்லை…. இங்கேயே தங்க கூறினர்…. ஆனால் அங்கு வேலை உள்ளது என கூறி அவன் வீட்டிற்கு கிளம்பிவிட்டான்…. வீட்டினரும் சொன்னாலும் கேட்க மாட்டான் என கூறி அவனை வழி அனுப்பி வைத்தனர்….

நிவேதா மீண்டும் அவள் அம்மாவால் அவள் வீட்டிற்கு அழைத்து செல்ல படுவாளா?????

அவளின் லட்சியம் நிறைவேறுமா ????

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்