Loading

அத்தியாயம் 3

மழை இன்னும் வலுக்க எங்கு சென்று தேடுவது என்று அரவிந்துக்கு தெரியவில்லை. அப்போது தான் பக்கத்தில் இருந்த பார்க்கை பார்த்து விட்டு வேகமாக அங்கு சென்றான்.

வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே செல்ல அந்த பார்க்கின் வாயிலில் இருந்த கூரையின் அடியில் நின்று கொண்டிருந்தாள் ஜானு. போன உயிர் அப்போது தான் திரும்பி வந்தது போல இருந்தது அரவிந்துக்கு.

விரைந்து அவளருகே சென்றவன் “ஜானு” என்றான்

மழையில் நனைந்து நடுங்கிக் கொண்டு இருந்த அவளுக்கு அவனது அழைப்பு கேட்கவில்லை. இன்னும் நெருங்கி வந்தவன் அவளது தோளில் கைவைத்து “ஜானு” என்க வேகமாக திரும்பியவள் “அரவிந்த்” என்றாள்.

“தாங்க் காட் ஜானு நான் எவ்வளவு பயந்து போய்ட்டேன் தெரியுமா உன்னை காணோம்னு…. மழை பெய்யுற மாதிரி இருக்குல வேமாவே வீட்டுக்கு வந்திருக்க வேண்டியது தான” என அவன் பேச பேச அவ திரு திருவென முழித்துக் கொண்டு இருந்தாள். அவனதே பதட்டத்தில் அவள் கொஞ்சம் மிரண்டாள் என்றே சொல்லலாம்.

“சாரி ஜானு வா வீட்டுக்கு போகலாம்” என்று அவளை அழைக்க அவள்  “நீங்க போங்க அரவிந்த் நான் வந்துக்கிருவேன்” என்றாள்.

அரவிந்த் வேகமாக “ஜானு எனக்கு அவ்வளவா கோபம் வராது.  அதை வர வச்சுராத” என்றான்

அவள் அப்போதும் நகராமல் இருக்க

“ஜானு நான் உன்கிட்டத்தான் சொல்லிட்டு இருக்கேன் இப்போ வந்து வண்டியில ஏறப் போறயா இல்லையா..வா ஜானு மழை ரொம்ப பெய்யுது. இதுக்கு மேல இங்க இருக்குறது சேஃப்டி கிடையாது. வரலை அப்படின்னா அப்பறம் என்ன பண்ணுவேன்னு எனக்குத் தெரியாது…வா” என்க

அதற்கு மேல் அவனுடன் போகாமல் இருக்க முடியாது என்பதால் அவனுடன் வண்டியில் செல்ல முடிவு செய்தாள்…

வீட்டிற்கு சென்றதும் வாசலிலே நின்று கொண்டிருந்த நித்யா ஓடிவந்து

“ஜானு வேகமா வந்திருக்க வேணாமா….இன்னைக்கும் அந்த பார்க்ல போய் உக்காரனுமா. ஏன் இப்படி இருக்க” என்றாள்

“நித்தி மொத ஜானுவ உள்ள கூட்டிட்டு போ. எவ்வளவு நேரமா நனைஞ்சுட்டு இருந்தாளோ” என்றான் அரவிந்த்.

“டேய் அரவிந்த் நீயும் உள்ள வா”

“இல்லை நித்தி. நான் கிளம்புறேன்”

“டேய் விளையாடுறயா? மழை ரொம்ப பெய்யுது டா எருமை”

“அதனால என்ன எருமைக்கு தான் மழைல நனையுறது ரொம்ப பிடிக்குமே.நான் அப்படியே நனைஞ்சுட்டே போயிடுவேன்.”

“அரவிந்த் உள்ள வாங்க” இம்முறை ஜானு கூப்பிட மறுக்காமல் உள்ளே வந்தான்.

அவள் உள்ளே சென்றதும் நித்தி அவனிடம் “டேய் எருமை நான் கூப்பிட கூப்பிட பெரிய இவன் மாதிரி வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு இப்போ அவ கூப்பிட்ட உடனே உள்ளே வந்துட்ட” என காய்ச்சி எடுத்தாள்.

“கூப்பிடுறது ஜானுன்னா நான் எங்க வேணும்னாலும் போவேன்…”

“படம் பாக்குறதை மொத குறை டா அப்போத்தான் இந்தமாதிரி சப்பை டயலாக் லாம் பேசாம இருப்ப.சரி இந்தா டவல்.. தலையை தொட டா.”

அவன் சிரித்தபடி தலையை துவட்டிக் கொண்டு இருக்க உள்ளே இருந்து ஜானு வந்தாள்.

“நித்தி இரு காபி எடுத்திட்டு வர்றேன்” என்றாள் அவள்.

“நான் அப்பவே போட்டுட்டேன் ஜானு ப்ளாஸ்க்ல இருக்கு” என்று நித்யா சொல்ல அவள் அதை எடுத்து வந்து அவர்களுக்கு குடுத்து விட்டு தானும் குடிக்க ஆரம்பித்தாள்.

“ஏன் ஜானு”

“சொல்லு அரவிந்த்”

“இத்தனை நாளும் நீ ஸ்கூல் போய்ட்டு லேட்டா வந்தது பரவாயில்ல. ஆனா இன்னைக்கும் லேட்டாதான் வரணுமா? மழை பெய்யுற மாதிரி இருக்குன்னு தெரியுதுல. அப்பறமும் அங்கேயே உக்காந்து இருந்தா என்ன அர்த்தம்.இதுல நான் வந்து கூப்பிட்டும் வரமாட்டேன்னு அடம் வேற. அறிவு இருக்குற யாரும் இப்படி பண்ண மாட்டாங்க ஜானு.” என்றான் அர்விந்த் கோபமாக

“ஸ்டாப் இட் அரவிந்த். திஸ் இஸ் நாட் ஃபேர். எனக்கு அறிவு இல்லைதான்.ஒத்துக்கிறேன் ஆனா நீங்க எல்லாம் இப்படி நிக்க வச்சு பேசுற அளவுக்கு இங்க எதுவுமே நடக்கல. நீங்க கூப்பிட்ட உடனே பைக்குல வந்தே ஆகவேண்டிய கட்டாயம் ஒன்னும் இல்லையே. நித்தி உங்க கூட வர்றான்னா நீங்க அவளோட ப்ரண்டு ஆனா நான் யாரு உங்களுக்கு. நீங்க யாரு எனக்கு. அப்படி இருக்கும் போது நான் ஏன் உங்க கூட வரணும் தான் யோசிச்சேன். ஆனா இப்போத்தான் தெரியுது உங்க கூட வந்துருக்கவே கூடாதுன்னு” என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள்.

அவள் கோபத்தை கண்டு அரவிந்தும் நித்யாவும் அதிர்ச்சியாக நோக்கினார்கள். காரணம் இதுவரை ஜானு அதிகமாக பேசியது கூட கிடையாது. அப்படி இருக்கையில் அவள் கோபம் புதிதாய் தெரிந்தது.

“டேய் அரவிந்த் என்னடா இப்படி திட்டிட்டு போறா”

“பேசவே மாட்றான்னு நினைச்சுட்டு இருந்தேன். பரவாயில்ல நல்லாத்தான் பேசுறா. எனக்கு பிடிச்சிருக்கு.” என்றவன் “சரி நித்தி நான் கிளம்புறேன் மழை வேற விட்டுருச்சு” எழுந்துக் கொண்டான்.

“விட்டுத்தான ஆகணும் ஏன்னா இப்பத்தான புயல் ஒன்னு கரையை கடந்து போச்சு”

“அடுத்த புயல் வராம பாத்துக்கோ பாய்” என்றவன் தன் வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றான்….

மயங்கிய நிலையில் கிடந்த அபியும் தன்நிலைக்கு வந்தான். அவன் இமைகள் இரண்டும் கனமாக இருந்தது. எதிரில் மங்கலாக இரண்டு உருவம் தெரிந்தது. கண்ணை மூடி மீண்டும் பார்க்க அவனது அப்பா அம்மா…அவர்களை பர்த்ததும் அவன் கண்களை நன்றாக தேய்த்தான்.

“அபிம்மா எப்படிடா இருக்கு இப்போ” என்றார் அம்மா

“நீங்க எதுக்கு இங்க வந்தீங்க”

“நீ மயங்கி கிடக்கிறன்னு அதி சொன்ன உடனே உன்னை பார்க்க வந்தேன் டா”

“அதான் நல்லா ஆகிட்டேன் ல இனி நீங்க உங்க வேலையை போய் பாருங்க..”

“டேய் அபி இப்படியே பேசிட்டு இருந்தா….இதுக்கு என்னதான்டா முடிவு” என்றார் அப்பா

“அவ திரும்பிவர்றது தான் ஒரே முடிவு.வரட்டும் அவ மொத என்னை மன்னிக்கட்டும் அதுக்கப்பறம் தான் நீங்க நினைக்குற முடிவுக்கு என்னால வர முடியும் . அதுவரைக்கும் என்னை தொந்திரவு பண்ணாதீங்க.”

அப்போது உள்ளே நுழைந்த அதிசயன் “ஏய் அபி என்னடா இது இப்படித்தான் அப்பா அம்மா கிட்ட பேசுவயா டா”

“அவங்ககிட்ட ஏன் சொன்ன…”

என்று அதிசயனை அபி திட்ட

அபியின் அப்பா “சரிடா அபி உன் மனசு எப்போ சரியாகுதோ அப்ப வந்து எங்க கிட்ட பேசு டா நாங்க கிளம்புறோம்.” என்று அவனது அம்மாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார் அப்பா.

“உடம்பு சரியில்லாத இந்த நிலையில கூட ஏன்டா இப்படி பேசுற” என்று அதிசயன் ஆதங்கப்பட்டான்

“சரி இந்தா இந்த மாத்திரை எல்லாம் சாப்பிடு” என்று தந்தான் அதிசயன்.அவன் சாப்பிட்டு முடித்ததும் “இப்போ தூங்கு டா அபி இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்னு டாக்டர் சொல்லியிருக்காங்க….” என்று சொன்னதும் கட்டிலில் படுத்தான் அபிமன்யு

இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததாலும் காய்ச்சலினால் ஏற்பட்ட உடல் சோர்வாலும் அவளால் ஏற்பட்ட மனச் சோர்வாலும் விரைவிலே உறங்க ஆரம்பித்தான் அபி…

உறங்கியதும் அருகில் அமர்ந்து அவனை பார்த்து கொண்டிருந்த அதிசயனின் மனம் கடவுளே அவனோட உத்ராவை அவன்கிட்ட கொண்டு வந்து சேர்த்துரு. ப்ளீஸ் என்று முதன்முதலாக வேண்டிக் கொண்டான்.

அவனை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டி வந்தான் அவனது நண்பன்.

“டேய் அதி என்னால உனக்குத்தான் நிறைய கஷ்டம்.”

“அப்போ கஷ்டம் தராத…”

“என்ன பாக்குற…நான் என்ன சொன்னாலும்  நீ எப்படியும் கேக்காமல் கஷ்டத்தை தான் தரப்போற.அப்பறமும் எதுக்கு இந்த பார்மாலிட்டி எல்லாம்….எனக்குத் தேவையில்லை. நீ உள்ள போய் தூங்கு நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வர்றேன்” என்று வெளியே சென்று விட்டான் அதிசயன்.

சாப்பாடு வாங்கி வந்தவன் அவனது அறைக்குச் செல்ல அறையில் இருந்த அவனது பொருட்கள் அனைத்தும் தாறுமாறாக சிதறி கிடந்தது

அடப்பாவி இதை எப்போ தூக்கி எறிஞ்ஞான்னு தெரியலயே.இப்போ வந்து கோபத்துல எறிஞ்சதா இல்லை எப்பவோ எறிஞ்சதா என்று அவனைத் தேட ரெஸ்ட் ரூமில் இருப்பது தெரிந்தது.

உடனே கீழே இறைந்து கிடந்த பொருட்களை எடுத்து அதன் அதன் இடத்தில் எடுத்து வைத்தான் அதிசயன்.

அப்போது தான் நிறைய போட்டோக்கள் வரிசையாக சிதறி கிடந்ததை கண்டு எடுத்தவன் திருப்பி அதை பார்க்க அதில் இருந்தவன் அபி தான்.

அழகான சிரிப்புடன் கொள்ளை கொள்ளும் அழகுடன் வசீகரமாக நின்றிருந்தான் அந்த போட்டோவில். அதற்கடுத்து அவன் மற்றொரு போட்டோவை எடுக்க அதில் இருந்தது உத்ரா….

அதை கண்டவனின் நெஞ்சம் கொந்தளித்தது. இவளால் தான் அபி இந்த அளவுக்கு வேதனையில் தினம் தினம் வாடுகிறான் என்று நினைத்தபடி அதைப் பார்த்துக் கொண்டு இருக்க வந்து சேர்ந்தான் அபி.

“என்னடா அதி” என்றவனை பார்த்த அதிசயன்

“அதை நான் தான் கேட்கனும் என்னடா பண்ணி வச்சுருக்க. இது என்ன ரூமா..இல்லை வேற எதுவுமா.எல்லாத்தையும் தூக்கி எதுக்கு இப்படி போட்டு வச்சுருக்க… அப்போ எப்போ பார்த்தாலும் இந்த போட்டோவை வச்சு வச்சுத்தான் பாத்துட்டு இருக்கயா. பையித்தியமா அபி நீ….”

“மாறிட்டே இருக்கேன்…கூடிய சீக்கிரம் கன்பார்ம் ஆகிடும் அதிசயா கவலைப் படாத…”

“அது நான் இருக்கும் வரைக்கும் நடக்காது டா. வா சாப்பிடலாம். மாத்திரை போடணும்‌.”

அவனுக்கு சாப்பாட்டை எடுத்து வைத்துவிட்டு அதிசயனும் சாப்பாட்டை போட்டு சாப்பிட ஆரம்பித்தான்.ஆனால் அபிமன்யு சாப்பிடாமல் தட்டை பார்த்தபடியே இருந்தான்.

“அடேய் அபி சாப்பிடு டா” என்றான்

“பசிக்கல டா அதி”

“கொடு நான் ஊட்டி விடுறேன்” என்று அவனுக்கு ஊட்டி விட மறுப்பு சொல்லாது சாப்பிட்டான் அபி….

“சரி அபி இந்தா மாத்திரை சாப்பிட்டு நல்லா தூங்கு…அம்மா அங்க தனியா இருப்பாங்க நான் கிளம்பட்டா டா. இல்லன்னா அம்மாட்ட சொல்லிட்டு இங்கேயே இருக்கவா.”

“இல்லடா நீ போய்ட்டு வா அம்மாவை பாத்துக்கோ. நான் இப்போ நல்லா இருக்கேன். என்னைப் பத்தி கவலைப் படாத…”

“சரி அபி ஆனா நீ நல்லா தூங்கணும். நேத்து மாதிரி நைட் ஃபுல்லா தூங்காம முழிச்சிட்டு இருக்காதா. அப்பறம் நாளைக்கும் ஹாஸ்பிடல்ல இருக்க வேண்டி இருக்கும்.ஓகே வா டா. எதைப் பத்தியும் நினைக்காம நிம்மதியா தூங்கு அபி… பாய் குட்நைட்….”என்று அவன் சொல்லி விட்டு சென்று விட்டான்.

அங்கு நித்யாவோ ஜானுவைத் தேடி உள்ளே செல்ல அவளது புலம்பலை கேட்டதும் அப்படியே நின்று விட்டாள். இத்தனை நாட்களில் அவள் அநாவசியமாக டென்சன் ஆகி பார்த்ததில்லை. தேவையில்லாமல் பேசியும் பார்த்ததில்லை. அப்படி இருக்கையில் இன்று அரவிந்திடம் அவள் பேசிய பேச்சுக்கள் நித்திக்கு எதுவோ சரியில்லை என்ற சந்தேகத்தை தோற்றுவித்தது. சரி என்று இப்போது வந்து பார்த்தால் எதை எதையோ பேசி புலம்பிக் கொண்டிருக்கிறாள் ஜானு.ஏன் என்று அவளுக்கு புரியவில்லை. இப்போது அவள் இருக்கும் மனநிலையில்  அரவிந்த் பற்றி பேசுவது நல்லது அல்ல என்பதால் நித்தி வெளியே சென்று விட்டாள்….

உள்ளே இருந்த ஜானுவோ இன்னும் புலம்பிக் கொண்டிருந்தாள்.

யாருக்கு அறிவில்லை எனக்கா எனக்கா என்று சந்திரமுகி போல சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டு இருந்தாள்.

அவளது நினைவுக்குள் மங்கலாக ஓர் உருவம் “அறிவே இல்லையா உனக்கு” என்று அவளைப் பார்த்து திட்டியது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அரவிந்த் வேற லவ் பண்ணுகிறான். ஜானு மறந்து விட்டாளா?.