அத்தியாயம் 27 :
நினைவிலிருந்து மீண்ட பாரிக்கு இன்றும் அன்றைய நாளின் தாக்கம் சொல்ல முடியாத வேதனையை அளித்தது.
முயன்று அனைத்தும் ஒதுக்கினான்.
எத்தனை நேரம் அந்த கல் மேடையில் அமர்ந்திருந்தனரோ… காய்ச்சலால் ஏற்பட்ட சோர்வின் காரணமாக, கடந்த காலத்தில் பயணித்துக் கொண்டிருந்த பாரியின் முகத்தையே பார்த்திருந்த பூ எப்போது அவனது மடியிலே தலை வைத்து உறங்கியிருந்தாளோ! தன்னைப்போல் அவனின் கரம் அவளை தட்டிக்கொடுத்தபடி இருந்தது.
பாரியின் இதழில் சன்னமான புன்னகை.
இன்னும் எத்தனை நடந்தாலும், பாரிக்கு பூவின் மீதிருக்கும் அக்கறையும் அன்பும் எந்த காலமானாலும் குறையாது. அக்கணம் அது அவனுக்கும் தெள்ளென விளங்கியது.
சற்று நேரத்திற்கு முன் பூவுடன் பேசிய வார்த்தைகளை நினைவு கூர்ந்தான்.
“என்னால நீயில்லாம இருக்க முடியாதுன்னு தெரியும். ஆனால் உன்னை மனைவியா? எனக்குத் தெரியல பூ” என தன் புருவத்தை கீறியவாறு கூறினான். ஆனால் நிகழ் மீண்ட அவனுக்கு தற்போது அவள் மனைவியாக மட்டுமே தெரிந்தாள். கடந்த கால பயணத்தில் அவளை காதலியாக பார்க்க தவறவிட்ட கணங்கள் தற்போது நெஞ்சுக்குள் பளிச்சிட்ட உணர்வாய் இருக்கலாம்.
“நீ என்னை லவ் பன்றன்னு அவி சொன்னான். அதை என்னால அவன் சொன்னப்போ நம்ப முடியல. ஆனால் எல்லாத்தையும் நினைத்து பார்க்கும்போது அப்படியும் இருக்குமோ தோணுது.”
பூவின் முகத்திலேயே நிலைத்துவிட்ட பார்வையுடன் கூறியவன் கடந்த காலம் சென்று வந்திருந்தான்.
அப்போது புரியாத பூவின் காதல் இப்போது இதயத்தில் ஏதோ ஓர் புள்ளியில் புரிவது போலிருந்தது.
ஆனால் எதையும் அனுமானத்தின் அடைப்படையில் ஏற்க அவனுக்கு விருப்பமில்லை.
பூவே அவளின் காதலின் பக்கத்தை சொல்ல வேண்டுமென்று எதிர்பார்த்தான்.
உறங்கும் பூவின் முகத்தையே ஆழ்ந்து பார்த்தவன்…
“உன்னை நான் காதலிக்கிறேனா பூ?” எனக் கேட்டிருந்தான்.
கடந்த காலத்தில் பரிதி, அவி கூறியவையெல்லாம் நிகழ்காலத்தின் நினைவில் அவன் பூ மீது கொண்ட அளவில்லா நேசம் காதலெனும் வரையறைக்குள் அடக்கப்பட்டதென்று சொல்லாமல் சொல்லியது.
அன்று என்னால் உன்னை வேறாக பார்க்க முடியாது என்று சொல்லி… தான் சொல்வதைக் கேட்காது சம்மதம் சொன்னாள் என்ற கோபத்தில்… பூவுடனான நட்பிற்கு கலங்கம் உண்டாகிவிட்டதாக அனைத்தையும் வெறுத்து துறந்து சென்றவனுக்கு இந்த நான்கு வருட பிரிவு கோபத்தை குறைக்கவில்லை என்றாலும் பலவற்றை அவனுக்கு புரிய வைத்தது.
அந்த புரிதலே பாரியின் இன்றைய நிதானத்திற்கு காரணம்.
“உனக்கு ஒன்னுன்னா என் இதயம் வேகமாகத் துடிக்குதே அதுதான் காதலா மலரே.” கேட்டவனுக்குள் மெல்லிய இதம். அவனது இதழ் கூட மந்தகாசமாக விரிந்தது.
‘இத்தனை வருஷம் இது புரியாம… உன்னையும், எல்லாரையும் எவ்ளோ கஷ்டபடுத்திட்டேன்.’ தன் பின் மண்டையில் தட்டிக்கொண்டான்.
‘இத்தனை வருஷம் நட்புங்கிற வார்த்தையை தடையா வச்சு எதையுமே சரியான கோணத்துல பார்க்காம விட்டுட்டேன்.’ மனதோடு புலம்பினான்.
‘ஆனால் அந்த நாளுக்கான என் வலி நிஜம். எந்த புள்ளியோடத் தொடக்கத்துல உன்னை மனைவியா நினைக்க ஆரம்பிச்சனோ… இப்போ உன்னை நினைச்சாலே அன்னைக்கு வேண்டா வெறுப்பா கட்டுன தாலியும், மனைவிங்கிறதும் தான் முந்திக்கிட்டு மனச நிரப்புது. அன்னைக்கு அம்மா தாலி கட்டினால் சரியாகும்ன்னு இதைத்தான் சொன்னாங்களா?’
‘உனக்காகன்னு அமிர்தாவோட காதலை ஏத்துக்கிட்டதில் கூட உன் மேல நான் வச்சிருந்த அன்பு தான் காரணம் இப்போ நினைக்கும் போது தெரியுது. இதுதான் லவ்வா மலரே.’
‘போலீசாக இருந்து சரி செய்யவே முடியாத பல வழக்குகளை தீர்த்து வைத்த எனக்கு என் காதல் வழக்கில் சரியெது தப்பெதுன்னு தெரியாம போயிட்டேன்.’ குனிந்து அவளின் நெற்றியில் மெல்ல முட்டினான்.
அதில் அவளிடம் அசைவு.
பதற்றத்தில் பாரி வேகமாக தட்டிக்கொடுத்திட… பூ விழித்துவிட்டாள்.
“தூங்கிட்டேனா?” என்று கேட்டபடி எழுந்து நிமிர்ந்து அமர்ந்தாள்.
“நீ ஏதோ யோசிச்சிட்டே இருந்தியா… அதான் தூங்கிட்டேன் போல” என்றாள் பூ.
“டூ யூ லவ் மீ மலரே?”
பாரி இப்படி ப(ச)ட்டென்று கேட்பானென்று அவள் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் அவனுக்கு அதற்கான பதில் இப்போதே தெரிந்துகொள்ள வேண்டுமென இருந்தது.
ஏனென்றால் பூ தன்னுடைய காதலை வெளிப்படையாக பாரியிடம் சொல்லியிருந்தாள் தேவையில்லாத பல நிகழ்வுகளை அவர்களது வாழ்வில் தடுத்திருக்கலாம்.
அன்று பூவின் சம்மதத்திற்கான காரணம்… தன் மீது அவள் கொண்டுள்ள காதல் தான் என்று இன்று அவனால் யூகிக்க முடிந்தது. அதனால் அன்று அவனின் அதீத கோபத்திற்கு காரணமாக இருந்த அவளின் சம்மதம் இன்று அவனின் கோபத்தை போக்கியிருந்தது.
அதனால் அனைத்தையும் இன்றே தெரிந்துகொள்ள வேண்டுமென ஏதோ ஒரு உந்துதலில் பட்டென்று கேட்டுவிட்டான்.
“நான் அவி வீட்டுக்கு வந்ததும்… நீ அவனுக்கு கால் பண்ணி என்னை விசாரிச்ச. அப்போவே நீ என்னை ஃபாலோ பண்ணிட்டு இருக்கன்னு கெஸ் பண்ணிட்டேன். என்ன தான் நான் உன்னை வெறுத்தாலும் நீ என்னை விட்டுடலன்னு அப்போவே மனசுக்குள்ள சின்னதா ஒரு சந்தோஷம்.
அதுவும் உன்னை ஜென் வீட்டு சன்னல்ல பார்த்தப்போ… எனக்குள்ள அவ்ளோ சந்தோஷம். ரொம்ப நாள் கழிச்சு என் பூவை பார்த்த ஹேப்பி. ஆனால் அந்த நாளுக்கான கோபம் உன்மேல கொஞ்சமும் இல்லாம, உன்னை பார்த்ததும் என் மனசு பழையபடி பூ’ன்னு உன் பின்னால வந்ததை தடுக்க முடியாமதான் கோபம் போல காட்டிட்டு நகர்ந்து போயிட்டேன்.
அப்பவும் உன்னை திரும்ப ஒருமுறை பார்க்கணும்னு உள்ள ஒரே குடைச்சல்… கொஞ்ச நேரத்துல மனச ஆட்டி வச்சிட்ட… அதான் ஜென்கிட்ட டைரி வாங்க வர மாதிரி வந்தேன். அப்பவே நான் எப்பவும் உன் பக்கமுன்னு புரிஞ்சிக்கிட்டேன்.
அடுத்த நாள் அவியோட உன்னை வண்டியில பார்க்கும்போது அப்படியே அவி மண்டயை பொலக்கணும் போல இருந்துச்சு.
அப்போதான் நான் இன்னும் பூவுடைய பழைய வேந்தனாவே இருக்கேன்னு எனக்கு தெளிவாச்சு.
ஆனால் அந்த பழைய கோபம்… என்னை பார்த்து நீயா என்கிட்ட பேசலயேங்கிற வருத்தம், இது ரெண்டும் தான் உன்னை மழையில பார்த்தும் அப்படியே போக வச்சது. அது தப்புன்னு தெரியும். ஆனா அன்னைய கோபத்தையே எப்படி காட்டுறதுன்னு தெரியாம இருந்த எனக்கு கொஞ்சமாவது காட்டிட்டா, நான் கொஞ்சம் அமைதியாவேன் தோணுச்சு. அதான் அப்படி நடந்துக்கிட்டேன். இருந்தாலும் பூ விஷயத்துல பாரி அப்படி கிடையாதே! வீட்டுக்கு வந்து அவியும் ஜென்னும் என்னைத் திட்டினாலும், உன்னை அப்படி விட்டு வந்தது என்னவோ மாதிரி இருந்துச்சு, அதான் வந்தேன்.
ஆனால் உனக்கு இப்படியாகும் நினைக்கல.
இத்தனை வருஷ தனிமை… என் கோபத்தை வெகுவா குறைச்சிருந்தது முற்றிலும் உண்மை. ஆனால் அந்த நாள்… என் பக்கமிருந்து யாரும் யோசிக்கலயேங்கிற ஆதங்கம், என்னை இத்தனை நாள் விலகியிருக்க வச்சிடுச்சு.
அதுவும் இங்க வந்த அப்புறம் உன்கிட்ட சாயுற மனச என்னால நம்பவே முடியல. அந்த சமயம் தான் அமிர்தா டைரி எனக்கு கிடைச்சது… கேஸுக்கு எதாவது கிடைக்கும் அப்படின்னு தான் அதை படிச்சேன். ஆனால் அதுல முழுக்க உன்னையும் என்னையும் தான் அவள் எழுதியிருந்தா. அவள் நம்மகிட்ட பொறாமை பட்ட விஷயம் எல்லாம் எழுதி… இதெல்லாம் எனக்கு கோபத்தை உண்டாக்குதுன்னு எழுதியிருந்தா. அந்த விஷயம் தான் எனக்கே என் மனசுல புரியாத பல பக்கங்களை புரிய வச்சது.
*இப்பவும் இது தான் காதலா தெரியல.*
ஆனால், என் வாழ்க்கையில ஒரு பெண்ணுக்கு இடமிருக்கு அப்படின்னா அது உனக்குத்தான்னு எனக்கு நல்லா தெரிஞ்சிடுச்சு.
நீயில்லாம நானோ நானில்லாமல் நீயோ வாழலாம். ஆனால் சந்தோஷம் நிச்சயம் இருக்காது.”
அன்று யோசிக்காது விட்ட அனைத்தும் இன்றைய நினைவில் தெளிவாகப் புலப்பட்டது. அவன் மனதில் பூவுக்கான இடமும்.
தன் மனதில் இருப்பது… தன் மாற்றத்திற்கான காரணமென எல்லாவற்றையும் பூவிடம் மனம் திறந்து கூறியவன்…
“இனியாவது நமக்குள்ள எந்தவொரு மறைத்தலுமில்லாம உண்மையான சந்தஷத்தோட நாம வாழனும், அதுக்காக கேட்கிறேன்…
டூ யூ லவ் மீ?” என்றான். அவளின் கண்களை நேருக்கு நேர் சந்தித்து. ஆழ்ந்து அழுத்தமாக.
பாரி பேசிய அனைத்தையும் உள் வாங்கிய பூ…
“என்மேல கோபம் போயிடுச்சா வேந்தா?” எனக் கேட்டாள்.
“அந்த நாளுக்கான கோபம் இருக்கு. இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனால் நான் கேட்ட கேள்விக்கு நீ சொல்லுற பதிலில் தான் கோபம் போகுமா அதிகமாகுமான்னு தெரியும்” என்றவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து முன் சென்று அவளுக்கு முதுகுக்காட்டி நின்றான்.
ஆனால் பாரி இத்தனை நேரம் சொல்லியதை வைத்தே அவனுக்கு தன்மீதுள்ள அன்பு காதல் எனும் வரையறைக்குள் நுழைந்ததா என்று தெரியாவிட்டாலும், மனைவியாக ஏற்க ஆரம்பித்துவிட்டான் என்று கண்டுகொண்ட பூ… இனி தன் காதலை சொல்லிட தடையில்லை. சொன்னாலும் அவன் நட்பை காரணம்காட்டி மறுக்க மாட்டானென்று நினைத்து தன் காதலை மொழிந்தாள்.
“எப்போ எப்படின்னு தெரியாது வேந்தா. ஆனால் நான் உன்னை காதலிக்குறேன்னு தெரிஞ்சிகிட்டது ஸ்கூல் முடிச்ச அந்த கேப்பில் தான். அப்போ அதுதான் காதல் அப்படின்னுலாம் தெரியல. எப்போ உனக்கு அமிர்தா மேல ஒரு ஈர்ப்புன்னு சொன்னியோ அன்னைக்கு புரிஞ்சுது. எனக்குள்ள காதலா நீ எப்பவோ ஆழமா இறங்கிட்டன்னு. எனக்காகன்னு சொன்ன அப்போவே உனக்குள்ளிருக்க அன்பை நீ எப்பவும் காதல் அப்படிங்கிற எல்லைக்குள்ள கொண்டு போகவே மாட்டன்னு தெரிஞ்சிகிட்டேன்.
க்ரஷ் யாரா வேணாலும் இருப்பாங்க. ஆனால் லவ். அமிர்தா உனக்கு கிரஷ் மட்டும் தான்னு நீ தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடியே காதலுங்கிற கமிட்மெண்ட்க்குள்ள நுழைஞ்சிட்ட…
எனக்காக நீ எல்லாம் செய்யும் போது… உனக்காக நான் உன்னையே விட்டுக்கொடுக்க நினைச்சேன். அதுவும் உன் நிம்மதிக்காகத்தான். நீ தப்பா முடிவெடுத்துட்டியோன்னு வருந்தக்கூடாதுன்னு தான். என் காதலை சொல்லி உன்னை கஷ்டப்படுத்திடுவேனோ நினைச்சுதான் விலகிப்போனேன்.
அமிர்தாவும் நீயும் பிரிஞ்சிட்டிங்கன்னு தெரிஞ்சப்போகூட, இதுதான் சமயம் அப்படின்னு என் மனசு என் பேச்சைக் கேட்காம… உன்கிட்ட காதலை சொல்லிடுமோ, நம்ம நட்பை கலங்கப்படுத்திடுமோன்னு தான் விலகியே இருந்தேன்.
உன் மேலிருந்த காதலால் மட்டும் தான் அன்னைக்கு நான் கல்யாணத்துக்கு சரின்னு சொன்னேன். பாட்டிக்காகவோ, அத்தைக்காகவோ கிடையாது. உன்னோட என் காதல் சேரவே சேராதான்னு பலநாள் தூங்காம அழுதிருக்கேன். இந்த அழுகை நிரந்தரமாகிடுமோன்னு நினைச்சு பயந்திருந்த நேரத்துல தான் நம்ம குடும்பமே சேர்ந்து திட்டம் போட்டு உன்னையும் என்னையும் கார்னர் செய்தாங்க.”
இந்த இடத்தில் பாரியிடம் ஆச்சர்யம்.
‘திட்டமா?’ பிறகு கேட்டுக்கொள்ளலாம் என்று அவள் பேசுவதை கவனித்தான்.
“என் காதல் நிறைவேற எனக்கு கிடைச்ச வாய்ப்பை என்னால உதறி தள்ள முடியல. கல்யாணம் முடிஞ்ச அப்புறம் என் மனசை உனக்கு சொல்லி புரிய வச்சிடலான்னு தான் உன் பேச்சை மீறி சம்மதம் சொன்னேன். உனக்காக, உனக்காக மட்டும் தான் சம்மதம் சொன்னேன். நீ வேணும் எனக்கே எனக்குன்னு வேணும். அதுக்காக மட்டும் தான் சம்மதம் சொன்னேன்.”
அந்நொடி பாரியின் மனதிலிருந்த கோபமெல்லாம் காற்றில் கரைந்தது. மனதில் ஓர் நிம்மதி.
என்னைப்பற்றி யோசிக்காது குடும்பம் தான் முக்கியமென்று, என் நட்பை மதிக்காது தன்னை இரண்டாம் பட்சமாக்கிவிட்டு திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டாளே என்கிற அவனது இத்தனை நாள் கோபம் யாவும், அவள் தனக்காக தன்மீது கொண்டுள்ள நட்பிற்காக காதலையும் துறந்து விலகிச்சென்று, அது கிடைக்கும் போதும் தன்னை விட்டு பிரிய முடியாதென்றே சம்மதம் சொல்லியிருக்கிறாள் என்று தனக்குள் தன் பூவின் காதலில் சுகமாக ஆழ்ந்தவனின் கோபம் யாவும் வெயில் பட்ட பனியாய் அக்கணம் மறைந்திருந்தது.
“எல்லாம் முடிஞ்ச அப்புறம் தான்,
நான் எப்பவோ என் காதலை சொல்லியிருக்கணும் புரிஞ்சுது.
உன்கிட்ட என் காதலை சொல்லிடனும் நினைச்சுதான் டெல்லி வந்தேன். ஆனால் நீ எனக்கு பேசவே வாய்ப்பு தரல. அப்போ தான் நான் உன்னை எந்தளவுக்கு கஷ்டப்படுத்தியிருக்கேன்னு எனக்கு தெரிஞ்சுது. நீ செயினை கழுட்டி கொடுத்தப்போ என் உயிர் என்கிட்ட இல்லை வேந்தா.”
அவளின் கன்னங்களில் நீர் வழிந்தது.
“என்னை மொத்தமா நீ தூக்கிப்போட்ட உணர்வு. செத்தே போயிட்டேன்.”
பாரியின் உடலில் அதிர்வு. திரும்பி வேகமாக அவளின் அருகில் சென்றவன் அவளின் பின்னந்தலையில் கை வைத்து தன் மார்போடு அழுத்திக்கொண்டான்.
அவள் அழுதால் அவனால் ஏற்கத்தான் முடியுமா?
“உன்னால எப்படி வேந்தா என்னை தூக்கிப்போட முடிஞ்சுது. என்ன நடந்தாலும் நீ என்னை விட்டு போகமாட்டேங்குற என்னோட கர்வம் பலமாக அடிவாங்கின இடம் அது. அப்போ புரிஞ்சுது உன் கோபத்தோட வீரியமும், அளவும். அந்த நிலையில் உன்னை தடுத்து என் காதலை சொல்ல விருப்பமில்லாம திரும்பி வந்துட்டேன். ஆனால் உன்னை ஃபாலோ பண்றதை நிறுத்தல.”
மேடையில் அமர்ந்திருந்தவள் அப்படியே அவனின் இடையோடு கட்டிக்கொண்டாள்.
அவளின் தலையை அவன் மார்போடு வைத்திருக்க…
அவள் இதழ்கள் அவனின் மார்பை உரசிட…
“Badly Madly am loves You Vendha.”
“”Only you, you’re the only thing I’ll see forever. In my eyes, in my words, and in everything I do, your sight is the only sight that will ever bring me peace!”
(“நீ மட்டும் தான், நான் பார்க்கும் யாவும் நீ மட்டும் தான். என் கண்களிலும், என் வார்த்தைகளிலும், நான் செய்யும் எல்லாவற்றிலும், உன்னை மட்டுமே காண்பேன். எனக்கு அமைதி தரும் இடம் நீ மட்டுமே!”)
அவளின் வார்த்தைகள் பாரியின் மனதை சில்லென்ற தென்றல் கொண்டு அடித்து வீழ்த்தியது.
பனியாய் குளிர் பரவும் இதம் அவனுள்.
“Love you from bottom of my heart.”
“Love you so much vendha. Love you more and more.”
தான் காதலை சொல்லாததால் தான் இவ்வளவும் என்று நினைத்தவள் தன்னுடைய காதலை சொல்லிக்கொண்டே இருந்தாள்.
அவளின் காதலில் அவன் சுகமாய் கரைந்துகொண்டே இருந்தான்.
“நமக்குள்ள இருப்பது வெறும் நட்பு மட்டுமல்ல அதையும் தாண்டி காதலுக்கும் மேலான ஒன்னுன்னு நான் புரிஞ்சிக்காம விட்டதுதான் இவ்வளவும்” என்ற பாரி தன்னவளை தனக்குள் அழுத்தமாக புதைத்துக் கொண்டான். இனி உன்னை விடமாட்டேன் எனும் விதமாக தனக்குள் பொத்திக் கொண்டான்.
பூ அவளின் காதலை சொல்லிட சொல்லிட… அவனுக்கும் அவன் காதல் புரிவதாய். அதுநாள் வரை அமிர்தாவிடம் கொண்டிருந்தது காதலென்பது மறைந்து அது ஒருவிதமான ஈர்ப்பு… க்ரஷ் எனும் வரையறைக்குள் உட்பட்டதென்று தெளிந்தான்.
அந்நொடி பாரியின் இதயம் முழுக்க பூ மீது அவன் கொண்டிருந்த அன்பு, காதலெனும் வரையறைக்குள் நுழைந்ததோ இல்லையோ மனைவி எனும் உறவில் இணைந்துவிட்டது என்பதை உணர்ந்தபோதும், ஏனோ அவனால் அத்தனை இலகுவாக பூவிடம் அதனை சொல்லிவிட வார்த்தை வரவில்லை.
ஒருவித இன்ப அவஸ்தையாக இருந்தது. அதுவும் அவனுக்கு பிடித்தே இருந்தது.
பல வருடங்கள் சொல்லத் துடித்த காதலை சொல்லிவிட்டதாலோ என்னவோ… பூவிற்கு அத்தனை அழுகை வந்தது.
வைக்கப்படும் அன்பைக் காட்டிலும், பெறப்படும் அன்பின் மகிழ்வு அலாதியானது.
அதில் மூழ்கியிருந்தவன் தன் ஆடை தாண்டி தன் மார்பை நனைத்திட்ட ஈரத்தில் தான் பூவின் கண்ணீரையே உணர்ந்தான்.
தன்னவளை தன் அணைப்பில் வைத்தபடியே அவளின் முகத்தை நிமிர்த்தி தன் முகம் பார்க்க வைத்தவன், ஒரு கையால் அவளின் கண்ணீரை துடைத்தான்.
“சில் மலரே! இனி அழ ஒன்னுமேயில்லை.”
எத்தனை வருடங்கள் ஆயிற்று அவனது சில் மலரே கேட்டு. அவன் பூ என்று சொல்வதைவிட, அவள் முடியாது இருக்கும் தருணங்களில் அவன் சொல்லிடும் அந்த மலர் என்ற அழைப்பு அத்தனை அழகாய் ஒலிக்கும். அவளுக்கு அத்தனை பிடித்தம் அதில்.
அதை இன்று அவன் சொல்லி கேட்டவள்…
உதட்டில் புன்னகை அரும்பிட… தன் தலையை அவனது மார்பில் முட்டி அணைப்பை இறுக்கினாள்.
“ஷ்ஷ்… வலிக்குதுடி” என்றவன் தன் நெஞ்சத்தை நீவிவிட…
“எனக்குத்தான் வலிக்குது. பாறையில மோதியது மாதிரி இருக்கு” என்று பூ முகம் சுருக்கிட…
அவள் வலிக்குது என்ற இடத்தில் முதல் முறையாக கணவன் எனும் உரிமையில் காதலாய் இதழ் பதித்தான்.
கிடைக்கவே கிடைக்காது என்று நினைத்திருந்த காதலை ஒற்றை முத்தத்தில் மொத்தமாகக் காட்டியிருந்தான்.
இதற்கு முன்பும் பாரி பூவின் நெற்றியில் ஓரிரு முறை முத்தம் வைத்திருக்கிறான். ஆனால் அவையாவும் ஆதுரமாக கள்ளமில்லாது ஒரு குழந்தைக்கு வைக்கும் முத்தம் போல். ஆனால் இப்போது அவன் வைத்தது மனைவி என்கிற உரிமையில். தற்போதைய தங்களின் உறவை பறைசாற்றும் நோக்கில் அழுத்தமாக வைத்தது. இரண்டுக்குமான வித்தியாசத்தை அவ்விருவர் மட்டுமே அறிந்திருந்தனர்.
“இது கனவில்லையே வேந்தா…”
“ம்ஹூம்.”
“நிஜமாவா?”
அவளின் எலும்பு நொறுங்கும் அளவிற்கு அணைப்பில் அழுத்தத்தை காட்டியவன்…
“இப்போ நம்புறியா?” என்றான்.
“இனி ஃபிரண்ட்ஸ்லாம் இல்லை புரியுதா?” மிரட்டும் தொனியில் கூறினாள்.
“எப்படியிருந்தாலும் என் பூ நீ கிடையாது” என்று சொல்லி வேண்டுமென்றே அவளை சீண்டினான்.
அவனிலிருந்து வேகமாக பிரிந்து அவனை முறைத்தாள்.
“ரிலாக்ஸ் மலரே” என்று சிரித்தவன், மீண்டும் அவளை இழுத்து தன் அணைப்புக்குள் வைத்துக்கொண்டான்.
“இது நல்லாயிருக்கு மலரே” என்றவன், “இப்போ நீ என் ஃபிரண்ட் பூ கிடையாது. என்னோட மனைவி. அது மட்டும் தான் ஆழமா மனசில் பதிஞ்சிருக்கு. அதோட இனி நமக்குள்ள இருக்கப்போற காதல். இதுவும் எனக்கு பிடிச்சிருக்கு” என்றவன்…
“I missed you so much malare!” என்றிட…
“டூ யூ லவ் மீ?” என்று அவன் கேட்டதையே அவள் திருப்பி கேட்டாள்.
“You are my happiness மலரே” என்றவன் இம்முறை அழுத்தத்திலும் அழுத்தமாக அவளின் கண்களில் இதழ் ஒற்றினான்.
°காலங்கள் தாண்டி காத்திருப்பேன்.
காதலை ஏந்தி காத்திருப்பேன்.
கனவுகளாய் காத்திருப்பேன்.
கரைந்திடும் முன்னே உன்னை காண்பேனே!°
அவளின் காத்திருப்பும் அவனின் தூய்மையான அன்பும் இருவரின் மனதோடு அழகாய் கரை சேரத் துவங்கியது காதல் எனும் வாழ்வில்.
_________________________
கடந்த காலத்தின் தாக்கம் இருவருமிடையேயும் சிறிதுமில்லை. எல்லாவற்றையும் பேசி முடித்ததால் வந்த தெளிவு அவர்களின் முகத்தில் ஒளியை கொடுத்தது.
அத்தோடு இருவருக்குள்ளும் இருக்கும் காதல் அவர்களை நீண்ட நெடு நாட்களுக்குப் பின்னர் மகிழ்வாகக் காட்டியது.
மொத்தத்தில் நிறைவாக ஒருவரின் காதலை மற்றொருவர் இயல்பாய் ஏற்றுக்கொண்டனர். அது தந்த நிம்மதி இருவருக்குள்ளும் இருந்த தயக்கம், தடுமாற்றம், இடைவெளி என எல்லாவற்றையும் சரி செய்திருந்தது.
ஒருவரின் அருகாமையில் மற்றவர் பழைய தாக்கம் ஏதுமின்றி இலகுவாக பொருந்தி போயினர்.
ஏற்கனவே நெருக்கமானவர்கள் என்பதால் இப்போது நெருங்கி உரிமையாய் பழகிட அவர்களுக்கு இயல்பாகவே வந்தது.
ஒரு இரவில் அனைத்தும் சரியாகியிருந்தது.
அடுத்த நாள் காலை மருத்துவர் பரிசோதித்து விட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று சொல்லியதும் பாரி பூவை வீட்டிற்கு அழைத்து வந்தான்.
வருகிறேன் என்று சொல்லிய அவி, ஜென்னை மறுத்துவிட்டான்.
இரு வீட்டிற்கும் பொதுவாக வண்டியை நிறுத்தியவன்…
“இப்போ என்னோட அவி இருக்கான். அவனைத் திரும்ப தனியா அவன் வீட்டுக்கு போக சொல்லணுமா?” என்றான்.
“நான் ஒன்னு சொல்லட்டுமா வேந்தா?” தயக்கமாகத்தான் கேட்டாள் பூ.
“சொல்லுங்க மேடம்.”
“அது வந்து… உன்னை நிறைய லவ் பண்ணனும் ஆசை. அது நடக்காமலே கல்யாணம் ஆகிருச்சு. இதுவரை அந்த ஆசை நிறைவேறவே இல்லை. கொஞ்ச நாள் நாம லவ்வர்ஸா இருப்போமா? கல்யாணம் ஆனது மறந்துட்டு.
அதற்குள் அவி, ஜென்னுக்கும் கல்யாணம் செய்துடலாம்” என்று பாரியின் முகம் காணாது கூறினாள்.
“அப்போ மேடமுக்கு என்னோட இருக்க விருப்பமில்லை…” என்று பாரி ஒரு மாதிரி குரலில் இழுக்க…
“அய்யோ… அப்படியில்லை” என்று வேகமாகக் கூறியவள்,
“வீட்டுக்கு தெரியாம உன்னை லவ் பண்ணனும். உன்னோட பைக்ல ஊர் சுத்தனும். நான் ஊருக்கு போயிட்டா நீ என்னை பார்க்க யாருக்கும் தெரியாம அங்க வரணும். வீட்டுல நம்ம லவ் சொன்னாலும் பிரச்சினை இருக்காது. இருந்தாலும் பெருசா கலாட்டா நடந்து… அதுக்கு அப்புறம் நாம சேரனும். கல்யாணம் ஆனதும் இன்னும் நிறைய நிறைய காதலிக்கணும். உன்னை கடைசிவரை லவ் பண்ணிக்கிட்டே இருக்கணும்” என்று முகம் முழுக்க எதிர்பார்ப்போடும் ஆசையோடும் சொல்லிக் கொண்டிருந்த பூவை முதல் முறையாக தன்னவளாக ரசித்து பார்த்திருந்தான். வண்டியில் கைகுற்றி முகத்தை தாங்கியவனாக இமை சிமிட்டாது பார்வையால் விழுங்கியபடி.
அவனின் பார்வையில் நாணம் எழ அதனை மறைத்தவளாக… அவனின் தோளில் தட்டினாள்.
“எல்லாம் ஓகே தான். ஆனால் நம்ம மேரேஜ் உன் ஆசைப்படி பெரிய கலாட்டாவுக்கு அப்புறம் தான் நடந்தது” என்று சொல்லிய பாரியிடம் அந்நிகழ்வை நினைத்தாலே வரும் பழைய கோபமில்லை. மாறாக சிரிப்புடனே கூறினான்.
“இப்போ மேடமுக்கு லவ் பண்ணனும். அவ்வளவுதான, பண்ணிடுவோம். எனக்கும் இந்த மலரு பொண்ணை லவ் பண்ணனும் தோணுதே” என்று அவளின் கன்னம் கிள்ளி சொல்லும்போது…
வண்டி சத்தம் கேட்டு நிமிடங்கள் பல கடந்தும் இருவரில் ஒருவர் கூட இன்னும் உள்ளே வரவில்லையே என ஜென்னும் அவியும் தத்தம் வீட்டிலிருந்து வெளியில் வர… பார்த்த காட்சியை நம்ப முடியாது அதிர்ந்து நின்றனர்.
“தேன்க்ஸ் வேந்தா” என்ற பூ வீட்டிற்குள் செல்லத் திரும்ப… அங்கு விழிகள் தெறித்து வெளியில் வருமளவிற்கு தங்களை அதிர்வுடன் பார்த்தபடி நின்றிருந்த ஜென்னை கண்டு பூ சத்தமாக சிரித்தாளென்றாள், அதே நிலையிலிருந்த அவியை கண்டு பாரி சிரித்தான்.
அவர்களின் சிரிப்பில் இருவரும் மீண்டனர்.
“என்னடா நடக்குது இங்க?” அதிர்வாய் கேட்டாலும் அவியிடம் சந்தோஷம்.
“எல்லாம் தான் நடக்குது மச்சான்” என்று வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிய பாரி அவியின் தோள் சுற்றி கைபோட்டான்.
“ரெண்டு பேரும் சேர்ந்துட்டிங்களா?” வாயில் கை வைக்காத குறையாக ஜென் கேட்டிருந்தாள்.
பூ சிவந்த முகமாக பாரியை பார்க்க… அவன் அவளை பார்த்து கண் சிமிட்டினான்.
அவியும் ஜென்னும் இருவரையும் அணைத்து ஆர்ப்பரித்தனர்.
“ஷ்ஷ்… இது போலீஸ் குவார்ட்டர்ஸ். யாரவது வரப்போறங்க” என்று பாரி தான் இருவரையும் அடக்கினான்.
“ரொம்ப சந்தோஷம் பாரி” என்ற அவி,
“நான் திரும்பவும் தனியா போகணுமா?” என்று சோகமாகக் கேட்டிட… அவனின் தனியாக என்ற வார்த்தை ஜென்னை வெகுவாகத் தாக்கியது.
“இப்போதைக்கு நீயெங்கயும் போக வேண்டியதில்லை… இப்போ வா உள்ள போவோம்” என்று அவியை தள்ளிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்த பாரி… வெளியில் எட்டிப்பார்த்து,
“டேக் ரெஸ்ட் மலரே” என்று சொல்லி அவளின் தலையாட்டலுக்கு பின்னரே முழுதாக உள் சென்றான்.
“உங்களுக்கு மேரேஜ் ஆகிருச்சு. இப்போ ஒன்னும் சேர்ந்தாச்சு. அப்புறம் ஏன் தனித்தனியா இருக்கணும் பாரி. நான் இங்கிருந்து போகணுன்னாலும் பிரச்சினை இல்லை” என்ற அவியை முறைத்த பாரி,
“நான் வெளியில சொன்னது தான்” எனக்கூறி “என்னோட இருக்க உனக்கு கஷ்டமா இருக்கா?” என்று கேட்டிட…
“அப்படியெல்லாம் இல்லை. எனக்கும் தனியா இருக்க கஷ்டம் தான் யாருமேயில்லாம” என்றவனின் சோகத்தில் மூழ்கி நொடியில் சரியானது.
“உனக்கு நாங்க இருக்கோம் மச்சான்” என்று அவனின் முதுகில் தட்டிய பாரி,
“அமிர்தா கேஸ் முடியுற வரை பூ ஜென்னோடவே இருக்கட்டும். நானும் தனியா இருக்கிறது தான் பெஸ்ட். இல்லைன்னா என்னை கார்னர் பண்ண பூவை எதுவும் செய்ய வாய்ப்பிருக்கு” என்றதோடு “என்னோட இருக்க… கொஞ்சம் கேர்புல்லா இருடா. ரொம்ப பெரிய தலை ஒன்னு வேறவொரு மேட்டர்ல இன்வால்வ் ஆகியிருக்கு.”
“ம்ம்ம் சரிடா.”
“அதுக்குள்ள உனக்கும் ஜென்னுக்கும் மேரேஜ் பண்ணனும்” என்று பாரி சாதரணமாக சொல்லிவிட்டு அறைக்குள் சென்றிட… அவிக்கு ஜென்னிடம் கொட்டு வாங்கிய உணர்வு.
பாரியின் பின்னாலே அறைக்குள் நுழைந்த அவி…
“வாழ்க்கை முழுக்க எனக்கு கொட்டு வாங்கி வைக்கலாம் பிளான் பன்றியாடா?” எனக் கேட்டான்.
“ஒருமுறை பிரிவு வலிக்க வச்சிட்டா… திரும்ப எப்பவும் பிரிவு வரவிடமாட்டோம் அவி. உன்னோட விலகல், பிரிவு ஜென்னிற்குள்ள உன்னை ஆழமா இறக்கியிருக்கும். இனி உன்னை அவள் பார்க்கும் பார்வையே மொத்தமா மாறியிருக்கும். அதோட அவளுக்குன்னு உறவா அவள் நினைக்க இந்த உலகத்தில் நீ மட்டும் தான் இருக்க… அதனால உன்னை அவள் பொத்தி வச்சுப்பா(ள்). உனக்கும் அப்படித்தான்” என்று தான் அனுபவத்தால் உணர்ந்த பாடத்தை தன் நன்பணுக்கு கற்றுக்கொடுத்தான்.
அனுபவம் மிகச்சிறந்த பாடம். கற்றுக்கொள்வதை காட்டிலும் கற்றுக்கொடுப்பதில் இன்னும் நிறைய கற்றுக்கொடுக்கும்.
“பின்றியே மச்சான்.”
“அவசரப்பட்டு கோவத்தால எதையும் தொலைச்சிடாத அவி. திரும்ப நம்ம கைக்கு அவ்வளவு ஈசியா வந்துடாது. இடையில் நிறைய வலியை கடக்க வேண்டியதா இருக்கும்” என்ற பாரிக்கு இப்போதும் தான் பூவை மனைவியாக ஏற்றுக்கொண்டதை நம்ப முடியவில்லை.
ஆனால் அவனது மனம் முழுக்க வெறுப்பின் போதுகூட அவள் மட்டுமே மொத்தமாக நிறைந்திருந்தாள். விருப்பு வெறுப்பு இடையில் உள்ள அந்த நுனியளவு பிடிப்பே… இன்று அவனுள் அவள் மீது விருட்சமான அன்பாய் (காதலாய்) வளர்ந்து நிற்கிறது.
அதனை புரிந்து கொண்ட தருணம்… கடந்த காலத்தில் நிகழ்ந்த யாவையும் எளிதாக அவனை கடக்கச் செய்திருந்தது.
இப்போது அதையே அவிக்கு உணர்த்திட முயன்றான்.
“பல பிரிவு எளிதா வரும் அதை கடந்து போறது தான் வாழ்க்கை. அதை எனக்கு பூ புரிய வச்சிட்டா(ள்).”
அடுத்த இருபது நிமிடத்தில் காக்கி உடையில் கிளம்பி வந்தவனை பார்த்து…
“ஸ்டேஷன் போறீயா பாரி” எனக் கேட்டான் அவி.
“நீ ஆபிஸ் போகலையா?”
அவனது கேள்விக்கு பதில் சொல்லாது அவனை வினவினான்.
“தமிழை இவ்வளவு சீக்கிரம் டிஸ்சார்ஜ் செய்வாங்கன்னு தெரியாது பாரி. அதான் எனக்கும் அவளுக்கும் சேர்த்து லீவ் மெயில் அனுப்பிட்டேன்” என்ற அவி பாரியை சாப்பிட அழைத்தான்.
“நீ எடுத்து வைடா… இதோ வந்துடுறேன்” என்றவன் ஜென்னின் வீட்டிற்கு நீண்ட எட்டுக்கள் வைத்துச் சென்றான்.
கதவு தாழிடப்படாது மூடப்பட்டிருக்க… தட்டுவதற்காக பாரி கை வைத்ததும் திறந்து கொண்டது.
வீட்டிற்குள் நுழைந்தவன்…
“பூ… ஜென்…” என்று அழைத்திட,
“டூ மினிட்ஸ் வேந்தா” என்று மூடிய அறைக்குள்ளிருந்து பூ சத்தம் கொடுத்தாள்.
குளித்திருப்பாள் போலும்… புத்தம் புது மலராக சொல்லிய நேரத்தில் வெளியில் வந்தாள்.
கதவு திறக்கும் சத்தத்தில் திரும்பிய பாரி, தன்னவளை பார்த்தது பார்த்தபடி நின்றான்.
“என்னடா அப்படி பார்க்குற?” என்ற பூ அவனின் அருகில் வந்து கேட்க…
“இத்தனை வருசமா நீ இவ்வளவு அழகுன்னு தெரியாது மலரே” என்றான் இமை சிமிட்டாது.
“போடா” என்றவள் தன் முகச்சிவப்பை அவனுள் மறைத்தாள்.
“பயங்கர வாசமா இருக்க மலரே. லவ் திஸ் ஃபிராக்ரன்ஸ்” என்றவன், அவளை அணைத்தபடி நின்றான். அவனுக்கு அது பிடித்திருந்தது. இளைப்பாற இடம் தேடி களைத்தவனுக்கு பரந்த நிழல் கிடைத்த சுகம்.
இருவருக்குமே இப்போது அவர்களுக்குள் நடக்கும் அனைத்தும் புதிது. ஆனால் தயக்கமோ தடையோ எதுவுமில்லை.
காதலுக்குள் நட்பு உள்ளது. காதலர்கள் நண்பர்களாக இருப்பதாலேயே இங்கு பல காதல்கள் நிலைக்கின்றன. நட்பு மறைந்து போகும் வேளையில் தான் காதலும் தன் பிணைப்பை துறக்கிறது. நிதானமாக காதலை ஆழ்ந்து நோக்கும் போது கரை கடந்த நட்பின் வெளிப்பாடே காதல் என்று உணர்ந்திட முடியும். (இது காதலின் வழி சொல்லப்பட்டதே! நட்பின் வழி மாறுபடலாம்.)
இவர்களது காதலும் நட்பின் வழி வந்ததாலோ என்னவோ… அனைத்தும் இயல்பாக நடந்தது. அதனை மனதார உணர்ந்தே ஏற்கத் தொடங்கியிருந்தனர்.
“என்ன காக்கிச்சட்டைக்கு ஸ்டேஷன் போற ஐடியா இல்லையா?”
“நல்லாயிருக்கு மலரே!”
“எது?”
“இது… இப்படி நிக்கிறது. உனக்குள்ள நான்.”
“உனக்குள்ளதான் நான் நிக்கிறேன். சரி எதுக்கு கூப்பிட்ட” என்ற பூவின் கேள்வியில் தான் எதற்கு வந்தோம் என்பதை நினைவு கூர்ந்தவன், அவளை தள்ளி நிறுத்தினான்.
“அங்க வா போகலாம்” என்றவன் அவளை கவனித்தவனாக,
“ஹாட் வாட்டரில்தான குளிச்ச?” என்று கேட்டான்.
“ம்.”
“ஜென் கிளம்பிட்டாளா?”
“அப்பவே. நாம வந்ததும்.”
இருவரும் அவனது வீட்டிற்குள் வந்திருந்தனர்.
“எப்படா போன நீ…” அவி பாரியை முறைத்தான்.
“சாரி மச்சான்” என்றவன் “நடுவில் ஒரு முக்கியமான வேலை” என்று சொல்லி பூவை பார்த்து கண் சிமிட்ட அவள் விரல் நீட்டி பத்திரம் காட்டினாள். அத்தோடு அவியை கண் காண்பித்து அவனை அடக்கினாள்.
“நான் எதுவும் பார்க்கல… ரெண்டு பேரும் வாங்க சாப்பிடலாம்” என்ற அவி மூவருக்கும் தட்டு வைத்து பரிமாற… சாப்பிட அமர்ந்தனர்.
உணவினை கையிலெடுத்த பாரியும் பூவும் வாயிற்கு கொண்டு செல்லாது அப்படியே பார்த்திருக்க…
“என்னடா?” என்ற அவியின் கேள்வியில்…
கையிலெடுத்த உணவை ஒருவர் மற்றொருவருக்கு கொடுத்தனர். கண்களில் நீரும், உதட்டில் புன்னகையும் உறைந்தது.
எத்தனை வருடங்கள் ஆகிற்று.
அவிக்குமே பார்த்த காட்சி மனதில் கனத்தை ஏற்படுத்தியது. அவர்களின் ஆத்மார்த்தமான அன்பை அருகிலிருந்து பார்த்தவனாயிற்றே.
அன்று தான் இருவருக்குமே நீண்ட நாட்களுக்கு பின்னர் உணவின் சுவை மனதை நிறைத்தது போலிருந்தது.
“செம டேஸ்ட் அவி.” பூ.
“நான் குக் பண்ணா நல்லாத்தான் இருக்கும்.”
“போடா… இட்லி சட்னி செய்துட்டு பிரியாணி செய்த எபெக்ட் குடுக்குற” என்ற பூ பாரி ஊட்ட ஊட்ட உண்டுகொண்டே அவியிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தாள்.
இடையில் தானும் சாப்பிட்டு முடித்து எழுந்த பாரி…
“பூ மறக்காம அங்க போய் டேப்லெட் போடு. இவனோட அரட்டை அடிச்சிட்டு இருக்காம ரெஸ்ட் எடு” என்றவன்,
“டேய் அவளை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணாத” என்று அவியிடம் சொல்லி அவனிடமிருந்து இலவச முறைப்பையும் பெற்றுக்கொண்டு… “வர்றேன்” என இருவருக்கும் பொதுவாக சொல்லியவாறு தன் வண்டியை வெளியில் தள்ளி நிறுத்தி அமர்ந்தவன், பூவை அருகில் அழைத்தான்.
“என்ன வேந்தா” என்று பக்கம் வந்தவளின் கன்னத்தில் அவளே எதிர்பாராது சட்டென்று இதழ் பதித்தவன் மின்னலென மறைந்திருந்தான்.
செல்லும் பாரியின் செயலை நம்ப முடியாது… கன்னத்தில் கை வைத்து ஆச்சரியமாக நின்றிருந்த பூவிடம் வந்த அவி…
“இந்த பாரி ரொம்ப புதுசா தெரியுறான் தமிழ்” என்றான்.
பூவின் தலை மேலும் கீழும் ஆடியது.
“இங்க வந்த முதல் நாள் அவனை நீ பார்த்திருக்கணுமே… முகத்தில் அத்தனை இறுக்கம். பார்க்கவே கடினமா இருந்தான். சிரிப்பையே மறந்துட்டான்னு நினைச்சேன்” என்ற அவிக்கு பாரியை இப்படி காண்பதற்கு மனம் நிறைந்தது.
“இன்னும் கொஞ்சம் முன்னமே அவன்கிட்ட போயிருக்கலாம். அடிச்சாவது அவனை நான் சொல்றதை கேட்க வச்சிருக்கலாம். நிறைய வருஷத்தை வேஸ்ட் பண்ணிட்டோம் அவி.” பூவின் குரலில் இழந்த நாட்களின் ஏக்கம் அப்பட்டமாகத் தெரிந்தது.
“பட் இட்ஸ் ஓகே… அதுக்கெல்லாம் ஈடு செய்யுற மாதிரி அவனை லவ் பண்ணனும் அவி” என்ற பூ பழைய பூவாக துள்ளலாய் மீண்டிருந்தாள்.
“ஓகே டா நீ டேப்லெட் போட்டுட்டு இங்க வந்தே ரெஸ்ட் எடு… தனியா இருக்க வேணாம்” என்ற அவி வீட்டிற்குள் சென்று லேப்டாப்பை திறந்து வைத்து அமர்ந்துகொண்டான்.
“என்னடா லீவ் போட்டிருக்கேன் சொன்ன?” என்றபடி ஐந்து நிமிடத்தில் வந்த பூ கேட்க…
“ஒரு மெயில் செக் பண்ணனும் தமிழ்” என்றவன் அவளுக்கு பாரியின் அறையை கை காட்டிவிட்டு தன் வேலையில் மூழ்கிவிட்டான்.
அறைக்குள் வந்தவள் அவனது மெத்தையில் உரிமையாக அமர்ந்தாள். அவ்வறை எங்கும் அவனது வாசம். ஆழ்ந்து உள்ளிழுத்தாள். அருகில் அவனிருக்கும் மாயம்.
“லவ் யூ வேந்தா.” தன்னைப்போல் முணுமுணுத்தாள்.
அந்நொடி அவனிடம் பேசும் ஆவல் அதிகரிக்க… அவனுக்கு அழைத்துவிட்டாள்.
அப்போது தான் ஸ்டேஷன் சென்று வண்டியிலிருந்து இறங்கியிருந்தான் பாரி.
“இப்போதானே வந்தேன்” என்று உள்ளே சென்றவாறே பாரி யோசனையாக அழைப்பை ஏற்றான்.
“காக்கிச்சட்டை ஸ்டேஷன் போயாச்சா?” ஹஸ்கி குரலில் கேட்டாள். அந்த குரல் அவனை என்னவோ செய்தது.
“ஜஸ்ட் நவ் மலரே” என்றவன், “இந்த வாய்ஸ் என்னவோ பண்ணுதுடி” என்றான் மறைக்காமல். அவளிடம் மெல்லிய சிரிப்பு. பின்னந்தலையை அழுந்த கோதினான். புதிதாக உடலில் உணரும் உணர்வு மாற்றத்தால்.
“என்ன பண்ணுது மிஸ்டர்.காக்கி?”
“அதை வீட்டுக்கு வந்து சொல்றேன். இப்படி வேலை நேரத்தில் இம்சை பண்ணாதடி ராட்சசி. மைண்ட் உன்கிட்ட தாவுது.”
“அப்போ எனக்கு தோணும் போது கால் பண்ணக்கூடாதா?” அதே குரல்.
‘கொல்லுறா!’
“டேய் மலரே! என்னை என்ன பன்ற நீ?” என்றவன் இதழில் விரிந்த புன்னகை அப்படியே நிலைத்துவிட்டது.
இவனா இத்தனை வருடம் தன்னுடைய காதலை கூட உணராது தள்ளியிருந்தான் என்று சொன்னால் பார்ப்பவர் யாரும் நம்ப மாட்டார்கள். அந்தளவிற்கு ஒரு நாளில் அத்தனை விதமான காதல் உணர்வுகளையும் அவனது பூவிடம் காட்டிக்கொண்டிருக்கிறான். அதை உணர்ந்து அவன் மீது அவனே ஆச்சரியம் கொள்கிறான்.
“என்ன பன்றாங்களாம்? ஹான்…”
“எனக்கே என்னை புதுசா பார்க்குற ஃபீல்.”
“அப்படியா?”
“அப்படித்தான். இப்போ நீ போனை வை.” அதற்கு மேல் அவனால் ஆர்ப்பரிக்கும் உணர்வுகளை கட்டுக்குள் வைக்க முடியுமென்று தோன்றவில்லை. இருக்கும் இடம் அவனை அடக்கியது.
” அவ்வளவு இம்சையா இருந்தா நீ வைக்க வேண்டியதுதான!”
“நீதான கால் பண்ண? அப்போ நீதான் வைக்கணும். நான் கட் பண்ணமாட்டேன்” என்றான் பிடிவாதமாக.
“அப்போ ட்யூட்டி பார்க்க வேணாமா?”
“பார்த்துகிட்டு தான் இருக்கேன்.”
பாரி காதில் சொருகப்பட்ட ப்ளூடூத் வழியாக அவளிடம் பேசிக்கொண்டே மேசையிலிருந்த கோப்பை ஆராய்ந்தான்.
“ஜென்” என்று அழைத்தான்.
“ஹேய் நிஜமாவே வொர்க்கில் இருக்கியா?” என்று பதட்டமாகக் கேட்டவள், “நீ கட் பண்ணாம இருக்கவும் ஃபிரீயா இருக்கன்னு நினைச்சிட்டேன்” என்றாள்.
“உன்னை கட் பண்ண சொன்னேன்.”
“ஓகே நான் வைக்கிறேன். சாரி” என்ற பூ அழைப்பை துண்டிக்க முனைய…
“வெயிட் மலரே” என தடுத்தான்.
பாரியின் அழைப்பிற்கு ஜென் உள்ளே வந்தாள்.
“ராயப்பன் அண்ட் சங்கரன் ரெண்டு பேரையும் நாளைக்கு விசாரணைக்கு வர சொல்லு ஜென். மார்னிங் ஷார்ப் டென் ஓ கிளாக்” என்றான் அழுத்தமாக. குரலே அத்தனை கம்பீரமாக ஒலித்தது.
இவ்வளவு நேரமும் தன்னுடன் பேசிய பாரி இவனில்லை என்று இணைப்பில் இருந்த பூவிற்கு புரிந்தது.
ஜென் வெளியேறியதும்…
“சொல்லு டா” என்றான்.
“என்ன சொல்லணும் காக்கிச்சட்டை?”
“கால் எதுக்கு பண்ணன்னு சொல்லாமலே கட் பண்ணப்போற மலரே” என நொடியில் பூவின் மென்மையான வேந்தனாக மாறியிருந்தான்.
இப்போது பூவிற்கு அவனளவில் உறவிலும் வேலையிலும் தெளிவாக இருக்கிறான் என்று விளங்கியது.
“சொல்லணுமா?”
“அஃப்கோர்ஸ் மலரே!”
“லவ் யூ மிஸ்டர்.காக்கி” என்றவள் சொல்லிய வேகத்தில் துண்டித்தும் இருந்தாள்.
இறுக்கமான இரும்பின் முகம் இதம் பரவி கனிந்து மென்னகை சிந்தியது.
அங்கே இருவரின் மனமும் மழை நின்றதும் சிந்தும் தூவானமாய் சிதறியது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
40
+1
2
+1
2
வாவ்
Wow wow wow