
அத்தியாயம் 4
இளம் பெண் கொலை வழக்கில் கைதாகிய முன்னாள் அமைச்சரின் மகன் சாய்நாதன் குற்றத்திற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார்.
அன்றைய நாளின் பரபரப்பு செய்தி அதுதான்.
அனைவருக்கும் குழப்பம். இதெப்படி சாத்தியமென்று.
இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் சாய்நாதன் அரசயிலில் பெரும் புள்ளியின் மகன் என்பதால் விசாரணை சாய்நாதனுக்கு ஆதரவாக கொண்டு சென்று முடித்திட வாய்ப்பு இருக்கிறது என்பதால், அரசாங்கத்தின் சார்பாக இவ்வழக்கினை விசாரணை செய்ய தகுந்த காவல்துறை அதிகாரியை நியமிக்க வேண்டுமென்று அரசாங்க பொது வழக்கறிஞர் நீதிபதிகளிடம் மனு கொடுத்திருக்க… அவர்களுக்கும் அது சரியெனப்பட பாரி காவல்துறை தலைமை இயக்குனாராக இருந்தபோதும் யாருக்கும் அடிபணிந்திடாத நேர்மையால் அவனிடம் அவ்வழக்கு ஒப்படைகப்பட்டது.
களமிறங்கி சாய்நாதனுக்கு எதிராக அனைத்தையும் திரட்டிவிட்டான். இன்று யாவற்றையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிட்டால் அவனுக்கு தண்டனை என்கிற நிலையில்…
“சாய்நாதன் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை” என்றவன் அவனுக்கு ஆதரவான சாட்சியங்களை அளித்திட… இவ்வழக்கு ஆரம்பிக்கப்பட்ட போதே சாய்நாதன் தான் குற்றவாளியென பரவலாக தெரிந்திருக்க… இப்போது பாரி இப்படியொரு ரிப்போர்டினை கொடுக்க அங்கே பலத்த அதிர்ச்சி.
‘மகன் இதிலிருந்து தப்பிக்கவில்லை என்றால் பல பேருக்கு பதில் சொல்ல வேண்டியிருக்குமே! உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும் அபாயம் உள்ளதே!’ என பாரியை எதிர்க்க முடியாத தன்னிலையை நொந்தபடி நீதிமன்றத்திற்கு வந்த வேலுநாதனுக்கு பாரியின் இந்த செயலுக்கான காரணம் புரியாவிட்டாலும், தன் மகன் வெளியில் வந்துவிடுவான் என்று நிம்மதியாக இருந்தது.
அடுத்து இவர் தான் குற்றவாளியென பாரி ஒருவரை கை காட்டிட… எவ்வித விசாரனையுமின்றி சாய்நாதனை விடுவித்து புதியவனுக்கு தண்டனை வழங்கியது நீதிமன்றம்.
அனைத்தும் முடிந்து எல்லோரும் களைந்திட… தனது இருக்கையிலிருந்து எழுந்த நீதிபதி பாரியை பார்த்து கண் மூடி திறந்தவராக வெளியேறினார்.
பாரி வெளியில் வர அவனுக்காகக் காத்திருந்த வேலுநாதன்…
“என்னை பகைச்சிக்க வேணாம் நினைச்சிட்டப்போல?” எனக் கேட்டார். அவரின் குரலில் அத்தனை நக்கல்.
சிறு சிரிப்போடு தன்னுடைய கூலர்ஸை எடுத்து அணிந்த பாரி…
“டெல்லி வரைக்கும் என்னால போராட முடியாது. உங்களுக்குத்தான் மறைமுக செல்வாக்கு அதிகமே!” என்றவன் மேற்கொண்டு அவர் பேசிட அங்கு நிற்கவில்லை.
தன்னுடைய நீண்ட வேக எட்டுக்களுடன் சென்று காரிலேறியிருந்தான்.
தலைக்கு வந்த கத்தி காணமல் போன ஆசுவாசத்தில் பாரியின் இத்தகைய செயலுக்கு பின்னால் காரணமேதும் இருக்குமென ஆராயாது போயினர் இரு நாதன்களும்.
பாரி காரில் அமர்ந்ததும்…
“சார்” என்று இழுத்தார் அழகப்பன்.
“சொல்லுங்க அழகப்பன்?”
“அது வந்து சார்” என்று இழுத்த அழகு, “நேத்து நானேதான் சாய் நாதனோட கேஸ் டீட்டெயில் எல்லாம் உங்ககிட்ட கொடுத்தேன்” என்று அதற்கு மேல் சொல்ல முடியாது பார்த்தார்.
“எத்தனை நாளுக்குத்தான் நேர்மையாவே இருக்கிறது அழகு. அந்த ஆளு ரொம்ப பெரிய இடம். அவனை பகைச்சிக்கிட்டு என்ன செய்ய. அவனை ஜெயிலில் போட்டாலும் மேல் முறையீடுன்னு ரெண்டு மாதத்தில் வெளியில் வரத்தான் போறான். நமக்கு எதுக்கு அலைச்சல்?” என்ற பாரியை நம்பாது பார்த்தார் அழகப்பன்.
“இல்லை சார் நான் நம்ப மாட்டேன்” என்று அழுத்தமாகக் கூறிய அழகு, “நீங்க வேறெதோ பிளான் பண்ணியிருக்கீங்க!” என்றான்.
அதற்கு பாரி சிரித்தானே தவிர எதுவும் சொல்லவில்லை.
அலுவலகம் சென்றவன் மெடிக்கல் லீவ் என்று இரண்டு மாத காலம் விடுப்பு எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
வீடு வந்த பாரி இருக்கையில் தளர்ந்து அமர, சத்யாவிடமிருந்து அழைப்பு.
“சொல்லு சத்யா?”
“எல்லாம் ஓகேவா பாரி?”
“பக்கா!” என்ற பாரி “லீவ் எடுத்திருக்கேன். முடிச்சிடனும்” என்றான்.
“கண்டிப்பா” என்ற சத்யா “வாட்ச் பண்ணிட்டேதான் இருக்கேன். எப்படியும் சூட்டோட முடிக்கணும்” என்றதோடு, “ஈவ்னிங் வீட்ல ஒரு பார்ட்டி பாரி. நீ கட்டாயம் வரணும். உனக்கு ஒரு குட்டி ஃபபேன் இருக்காங்க. அவங்களை நீ மீட் பண்ணியாகனும். நீதான் அவங்களுக்கு நான் கொடுக்கும் சர்ப்ரைஸ் கிஃப்ட்” என்றான்.
“யாருடா?”
“வந்து தெரிஞ்சிக்கோ மச்சான்” என்ற சத்யாவின் பேச்சு பாரிக்கு ஒரு யூகத்தை கொடுத்தது.
“நான் மார்னிங் வந்து வீட்டில் இன்வைட் பண்ணிட்டேன் பாரி. நீ பசங்களை டிராப் பண்ண ஸ்கூல் போயிருக்கன்னு அம்மா சொன்னாங்க. அதான் உனக்கு தனியா சொல்றேன்” என்றான்.
“ஹேய் நீ வான்னு சொன்னா வரப்போறேன். எதுக்கு இந்த பார்மாலிட்டிஸ்?” என்ற பாரி, “காவ்யா எங்கிருக்காங்க?” எனக் கேட்டான்.
“என்னோடதான் மச்சான். ஃபைவ், சிக்ஸ் மன்த்ஸ் இருக்கும். அப்பாவோட செட் ஆகல போல வந்துட்டாள். அச்சீவர்ஸில் தான் புரோகிராம் ஹெட்டா ஜாயின் பண்ணியிருக்காள். அவி சொல்லலையா உன்கிட்ட?” எனக் கேட்டான்.
பாரியிடம் யோசனையுடன் கூடிய அமைதி.
“நாம நம்ம ஜாப்காக அடிக்கடி மீட் செய்றதில்லையே பாரி அதான் நானும் சொல்லாம விட்டுட்டேன்” என்ற சத்யா, “என்னடா காவ்யா பற்றி கேட்கிற?” என்றான்.
“ஈவ்னிங் பார்ட்டியில் பேசிக்கலாம் சத்யா” என்று அழைப்பை வைத்தவன் முன் சூடாக காபியினை வைத்தார் பார்வதி.
“என்ன பாரி இப்படி பண்ணிட்ட?”
பார்வதி கேட்கும்போது அங்கு வந்தார் தில்லை.
அவரும் மகனிடம் அக்கேள்விக்கான பதிலை எதிர்பார்த்தார்.
“புரியலம்மா?”
“நடிக்காதடா” என்ற பார்வதி “அந்த பொண்ணை கொன்னது அவன் தான்னு எல்லாருக்குமே தெரியும். அவனை ஏன் பாரி தப்பிக்க விட்ட?” என்று ஆதங்கமாகக் கேட்டார்.
அர்த்தமாக சிரித்த பாரி…
“சும்மாம்மா” என்றானேத் தவிர எதுவும் சொல்லாது எழுந்து கொண்டான்.
மாடியேறும் அவனை புரியாது பார்த்தனர் பெற்றோர்.
“டூ மன்த்ஸ் மெடிக்கல் லீவ் போட்டிருக்கேன்” என்று திரும்பியும் பாராது சொல்லியவனாக மேலேறியிருந்தான்.
மாலை போல் கீழே வந்தான்.
பள்ளி விட்டு வந்த பிள்ளைகளுக்கு இளா சிற்றுண்டி கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“அண்ணா வரலையா?” கேட்டவனாக சின்னுவிற்கு அருகில் அமர்ந்தான்.
“வருவாங்க பாரி. சத்யா வீட்டு பார்ட்டிக்கு போகணுமே! பசங்களையும் கிளப்பி நானும் கிளம்பணும். அதான் ஏர்லியா வந்துட்டேன்” என்ற இளா, “அந்த பையன்கிட்ட பேசிட்டியா பாரி? என்ன சொன்னான்?” என்று கேட்டாள்.
“சின்னுவோட பிரண்ட் அபி தெரியும் தானே உனக்கு?”
“ம்ம்ம்… டூ த்ரி டைம்ஸ் ஸ்கூலில் பார்த்திருக்கேன்” என்றாள் இளா.
“அவன் தான்” என்று பாரி சொல்லியதும் இளா ஆச்சரியமாக சின்னுவை ஏறிட்டாள்.
“சாரிம்மா” என்ற சின்னு, “நான் அபி தான்னு சொன்னால், அவனை திட்டுவீங்களோன்னு பயந்துட்டேன்” என்றாள். முகத்தை சுருக்கி.
“தப்பு பண்ணா திட்டதான் செய்வாங்க சின்னு” என்று மகளை அதட்டிய இளா, “சின்னு அபி பற்றி சொன்னதெல்லாம் வச்சு ரொம்ப நல்ல பையன் நினைச்சேன் பாரி. அவன் எப்படி?” என்றாள்.
சின்னுவையே பார்த்திருந்த பாரி…
“அவன் தெரிஞ்சு ஆரிஷிடம் அப்படி சொல்லல இளா… அவனுக்கு லாங்வேஜ் ப்ராப்ளம்” என்ற பாரி அவனைப்பற்றிக் கூறினான்.
“அப்புறம்… அபி சத்யா சிஸ்டர் காவ்யாவோட சன்” என்றான்.
“வாட்?”
“ஆமா இளா. எனக்கும் இன்னைக்குத்தான் தெரியும்” என்று பாரி சொல்ல…
“உண்மையாவா பாரி? காவ்யா பையனா அவன். குட்டியா சத்யா கல்யாணத்தப்போ பார்த்தது” என்றார் பார்வதி.
“அப்போ சத்யா வீட்டில் நைட் அபியை பார்க்கலாம் அத்தை” என்றாள் இளா.
“அப்போ அபிக்கு தான் இன்னைக்கு பர்த்டேவா?” எனக் கேட்டார் தில்லை.
“ம்ம்ம்… காலையில சத்யா வந்தப்போ தங்கச்சி பையனுக்குன்னு தான சொன்னான்” என்றார் பார்வதி.
“அவனை நாங்க திட்டக்கூடாதுன்னு ஏன் நினைச்ச?” பாரி சின்னுவிடம் கேட்டான்.
“ஹீ இஸ் மை ஃபிரண்ட் சித்தா.” நொடியும் தாமதிக்காது சொல்லியிருந்தாள் சின்னு.
“அப்போ ஏன் அவனை அவாய்ட் பண்ண?”
“அது…” என்ற சின்னுவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
“ஃபிரண்ட்ஷிப் பேமிலி பேக்ரவுண்ட் பார்த்து வராது சின்னு. அவ்ளோ சீக்கிரம் ஒரு நல்ல ஃபிரண்ட்ஷிப் அமையாது. உனக்கு கிடைச்சிருக்கு. உன்னோட ஃபிரண்ட்ஷிப் அவனுக்கு அவ்ளோ பிடிச்சிருக்கு. அதான் நீ வேணுன்னு அப்படி பிஹேவ் பண்ணியிருக்கான்” என்ற பாரி, “ஹீ லைக்ஸ் யூ லாட் அண்ட் ரெஸ்பெக்டிங் யுவர்ஸ் ஃபிரண்ட்ஷிப்” என்றான்.
“சாரி பாரி. அவனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். போலீஸ் ட்ரெஸ்ஸில் நீ ஹீரோ மாதிரி இருக்கன்னு சொல்லுவான். நீ அவனோட அப்பாவை அரேஸ்ட் பண்ணப்போ கூட, உன் சைட் வேலிட் ரீசன் இருக்கும்ன்னு தான் சொன்னான். நான் தான் அக்யூஸ்ட்டோட பையன்கிட்ட ஃபீபிரண்ட்ஷிப் வச்சிக்கிட்டா உனக்கு பிடிக்காதுன்னு அவாய்ட் பண்ணேன்” என்ற சின்னு, “அபியை இக்னோர் பண்றது எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு சித்து” என்றாள்.
“அப்போ அவனோட பேசு. அபிக்கே அவனோட அப்பா பற்றி முழுசா எதுவும் தெரியாது. ஹீ இஸ் அ குட் கைய்” என்றான்.
முகமெல்லாம் புன்னகைக்க சந்தோஷமாக சரியென்றாள் சின்னு.
“இவங்க சண்டையில எனக்கு தான் ஹெவி லாஸா போச்சு டாட்” என்று அலுத்துக்கொண்டான் ஆரிஷ்.
“என்னடா சொல்ற?” தில்லை கேட்டிருந்தார்.
“அபி அண்ணா டெய்லி கேண்டனில் சாக்லேட், பப்ஸ், ஜூஸ்ன்னு வாங்கித்தருவாங்க. அதெல்லம் டூ மன்த்தா மிஸ் பண்ணேன்” என்றான் பாவமாக.
அவனை பாரி புருவம் உயர்த்தி பார்க்க…
“ஜஸ்ட் கூல் டாட். நானும் அண்ணாக்கு பாட்டி கொடுத்தனுப்புற ஸ்நாக்ஸ் கொடுப்பேன்” என்றான்.
“யாரு பாரி அபி அப்பா?”
“சாய்நாதன்.”
“என்னப்பா சொல்ற?” என அதிர்ந்தார் பார்வதி.
“அபி பிறக்கும் முன்னவே காவ்யா டிவோர்ஸ் பண்ணிட்டாங்கம்மா. இப்போ சத்யா கூடத்தான் இருக்காங்க” என்றான்.
“எதும் பிரச்சினை வந்திடாதே பாரி?” தில்லைக்கும் சாய் நாதனின் உயரம் தெரியுமே. லேசாகா பயம் எட்டிப்பார்த்தது.
“சத்யாவைப்பற்றி உங்களுக்குத் தெரியாதாப்பா” என்று மற்றவர்களை சமாதானம் செய்த பாரிக்குமே மனதிற்குள் பல கேள்விகள் இருந்தன. அதனை சத்யாவிடம் எப்படி கேட்பதென்று பல யோசனை.
ஏதும் சத்யாவிற்கு தவறாக பட்டுவிட்டால், தான் சந்தேகிப்பது போலாகிவிடும் அல்லவா? பாரிக்கு அந்த தயக்கமே!
“சத்யா அங்கிள் அபி மாமான்னு உனக்கு தெரியுமா சின்னு?”
“தெரியாது பாரி. அவனோட அம்மா மட்டும் தான் ஸ்கூல் மீட்டப்புக்கு வருவாங்க” என்ற சின்னு, “பட் அவனோட மாமா உன்னுடைய ஃபிரண்ட்ன்னு சொல்லியிருக்கான்” என்றாள்.
குழந்தைகளுக்கு அத்தனை விளக்கமாக அந்த வயதில் பேசிக்கொள்ளத் தெரியாதே. அது பாரிக்கும் புரிந்தது.
“இப்படியே பேசிக்கிட்டே இருந்தா எப்போ கிளம்புறது?” என்ற பார்வதி அனைவரையும் விரட்டி கிளம்ப வைத்தார்.
நடுவில் பரிதியும் வந்து கிளம்பியிருந்தான்.
அனைவரும் தயாராகி இருந்த போது வந்து சேர்ந்தாள் பூ. பாரியின் மீதான கோபத்தோடு.
பூ வந்ததும் கிளம்பியிருந்தவர்கள் நிற்க வேண்டாமென்று பிள்ளைகளுடன் புறப்பட்டுச் செல்ல, பாரி பூவுடன் வருகிறேனென தேங்கினான்.
பூவின் கண்களில் அத்தனை கோபம்.
அனைவரும் சென்றதும் பாரியை பாராது மேலேறி அறைக்குள் நுழைந்தவள் அவன் வருமுன்னே குளியலறைக்குள் புகுந்திருந்தாள்.
பாத் ரோப் அணிந்து வெளியில் வந்தவள்… அவளுக்காக காத்திந்ருந்தபடி அலைபேசியில் மூழ்கியிருந்தவனை கண்டு…
“வெளிய போ வேந்தா” என்றாள்.
விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தவனின் பார்வையில் என்ன இருந்ததோ வெளியில் சென்றுவிட்டான். அவளுக்குத்தான் ஒரு மாதிரியாகிவிட்டது. இம்மாதிரி தருணங்களில் இப்படி அவள் அவனை வெளியேற்றுவது முதல் முறையல்லாவா? ஏன் வெளியில் போக சொன்னோமென்று அவளுக்குத்தான் வருத்தமாகிப்போனது.
“கோபத்தை காட்ட உனக்கு வேற வழியே தெரியலையா தமிழ்?” என்று கண்ணாடி முன்பு நின்றிருந்தவள் தன் நெற்றியிலேயே தட்டிக் கொண்டாள்.
வைன் நிற ஜார்ஜெட் வகை டிசைனர் புடவையில் படியிறங்கி வந்தவளை இமைக்காது பார்த்தவன்,
“லாஸ்ட்டா நீ எப்போ சாரீ வியர் பண்ணன்னே நினைவில்லை பூ. எப்பவும் காக்கி ட்ரெஸ்ன்னு ஆகிப்போச்சுல?” என்றான்.
“சாரி வேந்தா!”
அவள் எதற்காக மன்னிப்பு கேட்கிறாள் என்பது புரிந்த போதும் பாரி ஒன்றும் சொல்லவில்லை. சிறு தலலையசைப்போடு அவளின் கரம் பற்றி வெளியில் சென்றான்.
“வேந்தா நான் சாரி சொன்னேன்.”
காரில் அமர்ந்ததும் அவள் சொல்லிட,
“ம்ம்… கேட்டுச்சு” என்றவன் காரினை இயக்குவதில் கவனம் வைத்தான்.
“எதாவது சொல்லுடா?”
“என்ன சொல்லணும் பூ?” என்ற வேந்தன், “நான் எதுவும் டீப்பா மீன் பண்ணிக்கல. ஓகேவா? உனக்கு எதுக்கோ எம்மேல கோபம். அதை காட்டத் தெரியாம இப்படி பண்ணிட்ட. திரும்ப வீட்டுக்கு வந்து இதைப்பற்றி பேசிக்கலாம். சில் மலரே!” என்று அவளின் கன்னம் தட்டினான்.
எப்போதுமான அவனின் புரிதலில் நெகிழ்ந்த பூ அவன் பக்கம் சரிந்து அவனது கன்னத்தில் முத்தம் வைத்திட… அவனோ காரினை க்ரீச்சென்று நிறுத்தியிருந்தான்.
“எப்பவும் டிரைவிங்கில் தான் உனக்கு தோணுமா? கொடுத்து முடி. கிளம்புவோம்” என்று அவளுக்கு வாகாக தன் கன்னத்தைக் காட்டிட, அவளோ அவனது முகம் பற்றி இதழோடு இதழ் ஸ்பரிசித்து விலகினாள்.
“பூ…” என்று விழி விரித்தவன்,
“எவ்வளவு நாளாச்சு!” என்றான்.
“நடிக்காதடா நைட் கூட” என்றவள் அதற்கு மேல் சொல்லாது, அவனது குறும்பு சிரிப்பில் வாயினை மூடிக்கொள்ள…
“நைட் கூட…” என்று ராகம் இழுத்தான்.
அந்நேரம் பரிதியிடமிருந்து அழைப்பு.
“கிளம்பியாச்சா?”
“வந்துட்டே இருக்கோம் பரிதிண்ணா!”
அவ்வளவு தான், பரிதி அதிகமாக ஒரு வார்த்தை பேசாது வைத்துவிட்டான்.
“பரிதிண்ணா பர்ஸ்ட் டைம் எம்மேல கோபமா இருக்காங்க” என்ற பாரி காரினை செலுத்த, பூ என்னவென்று காரணம் கேட்டாள்.
“ஒரு குட்டி டிராமா பிளே பண்ணலாம் பிளான் பண்ணோம். நானும் சத்யாவும். அதுக்கு பரிதிண்ணா ஒத்துக்கல” என்று உதடு பித்துக்கினான்.
“அப்படி என்ன பிளான்?”
“கோர்ட் என்னை சஸ்பெண்ட் பண்றது?”
“வாட்?” பூவுக்கும் மிதமிஞ்சிய கோபம் எழுந்தது.
“ஆர் யூ மேட்… கோர்ட் உன்னை மார்க் பன்றாங்கன்னா… இந்த சொசைட்டி, பீப்புள் உன்னை எப்படி பார்ப்பாங்க தெரியுமா? இத்தனை வருஷ நல்ல பெயர் மொத்தமும் காலியாகிடும்” என்று வெகுண்டு விட்டாள்.
“ஹேய்… ஹேய்… ரிலாக்ஸ் மலரே!”
பாரியின் இந்த வார்த்தைக்கு நொடியில் தனிந்திடுவாளே பூ. அவள் ஆசுவாசமானதும், அவளது தோள் தட்டியவன்,
“இதே டோஸ் தான் பரிதிண்ணாவும்” என்றான்.
“அல்ரெடி நீ டூ மந்த்ஸ் மெடிக்கல் எமெர்ஜென்சி சொல்லி லீவ் எடுத்திருக்க. அது தெரிஞ்சுதான் கோபமா வந்தேன். பரிதி மாமா கோபப்பட்டதால் தான் சஸ்பென்ஷன் போயி மெடிக்கல் லீவ் வந்திருக்கா?” என்று கேட்டாள்.
“ம்ம்ம்ம்” என்றானேத் தவிர ஏனென்று சொல்லவில்லை.
“ஹை ரிஸ்க் எடுக்கிறன்னு தெரியுது. சாய்நாதனை நீ தப்பிக்க விட்டப்பவே வேற எதிலோ அவனை மொத்தமா தூக்கப்போறன்னு புரிஞ்சுது. கேர்ஃபுல் வேந்தா” என்று அவனின் பாதுகாப்பை வலியுறுத்தியவளும் மேற்கொண்டு என்ன திட்டமென்று எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
*********
குடும்பமாகிய நண்பர்கள் மட்டுமே அங்கு சத்யாவின் வீட்டை நிறைத்திருந்தனர்.
பாரியையும் பூவையும் கண்டதும்…
வெகு நாட்களுக்கு பின்னர் அனைவரும் ஒன்று கூடிய தருணத்தை வட்டமாக சூழ்ந்து கைகள் கோர்த்து குதித்தென ஆர்ப்பாட்டம் செய்துவிட்டனர்.
பாரி, பூ, ஜென் இவர்கள் மூவர் மட்டுமே பணி நிமித்தமாக அடிக்கடி சந்திக்க நேரிடும். பணிச்சுமை காரணமாக மற்றவர்கள் எல்லோரும் இப்படி யார் வீட்டின் விசேட நாட்களிலாவது தான் ஒன்று கூடுவர்.
“நீ மட்டும் எப்படி மச்சான் வயசு ஆக ஆக யங் ஆகிட்டே போயிட்டு இருக்க?” அவி பாரியின் காதில் ரகசியமாகக் கேட்க, “நீ மட்டும் என்னவாம்… ஆபிஸில் புராஜெக்ட் விஷயமா வந்த ஃபாரின் க்லைன்ட் உன்னை டேட் பண்ண கூப்பிட்டாங்களாமே?” என்று பாரியும் அவனைப்போலவே மெல்லொலியில் கேட்க…
“தெரிஞ்சிடுச்சா” என்று அவி அப்பாவியாக வினவ…
“எங்க எல்லாருக்கும் தெரியும்” என்று மொத்த நண்பர்கள் பட்டாளமும் ஒருசேர கூறிட, அவி தன் அசட்டினை பாரியின் தோளில் மறைத்தான்.
“சரி சரி உங்க பேச்சை அப்புறம் வச்சிக்கோங்க… முதலில் பர்த்டே பாயை விஷ் பண்ணுங்கடா” என்று பரிதி பாரியை பாராது சொல்ல…
“பரிதிண்ணா நீங்க நேரா இங்க வந்துட்டிங்களா?” என்று அவனை அணைத்துக்கொண்ட பாரி…
“ஒழுங்கா என்கிட்ட பேசிடுங்க. இல்லை, இப்படித்தான் பண்ணுவேன்” என்று அவனின் கன்னத்தில் முத்தம் வைக்க… பரிதி தன் கோபத்தை இழுத்து பிடித்து பாரியை முறைத்தான்.
“என்ன பாரி பரிதிண்ணா மேல பாசம் ஓவர் ஃப்ளோ ஆகுது. தமிழும் இளாவும் முறைக்கிறாங்க” என்று தீபன் கூறியதால் அவ்விடம் மீண்டும் ஆர்ப்பரிப்பில் மூழ்கியது.
“இவனுங்க ஒன்னு சேர்ந்தாவே இப்படித்தான் காவ்யா. நீ போ அபியை கூட்டிட்டு வா… நாம கேக் கட் பண்ண ரெடி பண்ணுவோம்” என்ற பார்வதி காவ்யாவுடன் அங்கிருந்த அறைக்குள் நுழைந்தார்.
அனைவரின் பிள்ளைகளும் அங்கு தான் அபியின் அறையில் கூடியிருந்தனர்.
ஒரே பள்ளி என்பதால் மற்ற பிள்ளைகள் சின்னுவுக்கு உறவினர்கள் எனுமளவில் தெரிந்து வைத்திருந்த அபிக்கு… மற்றவர்களை முறையாக அறிமுகப்படுத்தி வைத்து “இனி அபியும் நம்முடைய கேங்” என்றாள் சின்னு.
அபிக்கு புதிய நண்பர்கள் கிடைத்ததை காட்டிலும், அவனுடைய சின்னு பழையபடி பேசுவது தான் அவனுக்கு அதீத சந்தோஷமாக இருந்தது.
எல்லோருமே அபிக்கு ட்ரெஸ் எடுத்து வந்திருக்க…
“அண்ணா இதை போடுங்க,”
“அது நல்லாயிருக்கு,”
“இந்த கலர் உங்களுக்கு நல்லாயிருக்கும்,”
“இது சூட் ஆகாது” என ஆளாளுக்கு ஒன்றை காண்பித்து அபியை போட்டுக்க தங்களின் கருத்தினை கூற… அவனோ சின்னுவை பார்த்தான்.
“உனக்கு பிடிச்சதை போட்டுக்கோ ஜித்” என்றாள் சின்னு.
நட்பின் முதல் நிலை நம் விருப்பத்தை தெரிவிப்பதைவிட, நம்முடைய தோழனோ தோழியோ அவர்களின் விருப்பத்திற்கு முதலில் மதிப்பளிப்பது. அதனையே சின்னு இங்கு செய்தாள். அபிக்கும் புரிந்திட தனக்கு விருப்பமான ஆடையை கையில் எடுத்திருந்தான்.
“ஜித் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணட்டும் நாமெல்லாம் கார்டனில் விளையாடலாம்” என்று சின்னு மற்றவர்களை கூட்டிட்கொண்டு அறையிலிருந்து வெளிவரும்போது தான் காவ்யாவும், பார்வதியும் உள் வந்தனர்.
“நதியா இருந்தாளே… திடீர்னு ஆளை காணோம்?” பார்வதி கேட்டார்.
நதியா சத்யாவின் மனைவி. மகள் நிவிஷா. நிவிஷா… மிதுன் மற்றும் மித்ராவுடன் மூன்றாம் வகுப்பு படிக்கின்றாள்.
“அண்ணி கேக் ஐசிங் பண்ணிட்டு இருக்காங்கம்மா” என்றாள் காவ்யா.
“ஆமால, ஆறு மாசத்துக்கு முன்னாடி வந்திருந்த எங்க கல்யாண நாளுக்குக்கூட நதியா தான் கேக் பண்ணி கொடுத்தாள்” என்ற பார்வதி, “ரெடியாகிட்டிங்களா நீங்க?” என அபியை பார்த்து கேட்டார்.
“ம்ம்ம் பாட்டி. கோம்ப் பண்ணனும்” என்றவன் கண்ணாடி முன்பு நின்று சொன்னதை செய்திட…
“பாரி சொன்னான்… ரொம்ப ஸ்மார்ட்ன்னு” என்றார் பார்வதி.
“அங்கிள் வந்துட்டாரா பாட்டி. மாவையா சொன்னாங்க. அங்கிள் வருவாங்கன்னு” என்ற அபி பார்வதி பதில் சொல்வதற்கு முன்பு பாரியை தேடி ஓடியிருந்தான்.
“ஹாய் அங்கிள்…”
அவி, பரிதி, சத்யா, தீபன், ஆகியோருடன் தோட்டத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த பாரியை கண்டதும் அனைவருக்கும் நடுவில் புகுந்து பாரியிடம் சொல்லியிருந்தான் அபிஜித்.
“ஹாய் சாம்ப்” என்ற பாரி அபிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற, நன்றி தெரிவித்தான் அபி.
“நான் சொன்னேன்ல பாரி… உன்னுடைய குட்டி ஃபேன். இவன் தான் காவ்யா பையன்” என்றான் சத்யா.
“தெரியும். மார்னிங் ஸ்கூலில் மீட் பண்ணோம்” என்று பாரி சொல்ல…
மற்றவர்களுக்கு புரிந்தது.
அந்நேரம் சின்னுவின் குரல் கேட்க, அனைவரும் ஒன்றாக திரும்பி பார்க்க, அணிந்திருந்த பாவாடை தடுக்கி கீழே விழயிருந்தவளை ஆரிஷ் விழாது பிடித்திருந்தான்.
வேகமாக அவளருகில் சென்ற அபி,
“பார்த்து நட ஆர்னா. உனக்கு ஸ்கூல் ஸ்கர்ட்டே செட் ஆகாது. உன்னை யாரு லெகங்கா போட சொன்னது?” என்றவன் “ஆண்ட்டி” என்று இளாவை அழைத்திருந்தான்.
இளா அவர்கள் அருகில் வந்ததும்,
“ஆர்னாவுக்கு ஸ்பேர் ட்ரெஸ் கொண்டு வந்திருக்கீங்களா?” எனக் கேட்டான்.
ஜென் மற்றும் லீயுடன் பேசிக்கொண்டிருந்த இளா காரணம் தெரியாவிட்டாலும்…
“ம்ம்ம் இருக்கு அபி” என்றாள்.
“என்ன ட்ரெஸ்?”
“ஜீன்.”
“வெல்” என்றவன் “நீ சேன்ஜ் பண்ணிக்கோ ஆர்னா. பிளே பண்ணும் போதெல்லாம் இதை தூக்கி பிடிச்சிக்கிட்டே இருக்கணும்” என்றான்.
ஆர்னாவும் அபி சொல்லியதும் சரியென்று ஆடை மாற்ற ஓடிவிட்டாள்.
இளா என்னடா இதென்று பார்க்க,
“அக்கா விழுந்திருப்பாங்கம்மா” என்று ஆரிஷ் நடந்ததை விவரித்தான்.
“எனக்கு இன்னொரு பாரி, தமிழ் பார்க்கிற மாதிரியே இருக்குடா!” அவி சொல்லிட மற்றவர்களும் ஆமோதித்தனர். பாரியின் கண்கள் நட்போடு தன் பூவை ஆரத் தழுவின.
அக்கணம் தான் நதியாவோடு பூ கேக்கினை அங்கு எடுத்து வந்து கொண்டிருந்தாள்.
பாரியின் பார்வையை உணர்ந்தவள் என்ன எனும் விதமாக புருவத்தை உயர்த்திட… அவனோ பார்வையால் கன்னம் தீண்டியிருந்தான்.
“போடா.” உதட்டை மட்டும் அசைத்தவள் முன் திரும்பிக் கொண்டாள்.
“வாவ் பெரிய கேக்.” பிள்ளைகள் சுற்றி ஆரவாரம் செய்தனர்.
ஆர்னா ஆடை மாற்றி வர, அபி அனைவரின் கைதட்டலோடும் வாழ்த்தோடும் வெட்டிய கேக்கின் முதல் துண்டை ஆர்னாவிற்கு தான் ஊட்டினான்.
“இவன் ஆர்னா ஆர்னான்னு சுத்துவான் போலிருக்கேடா!” தீபன் முணுமுணுக்க…
மற்றவர்கள் பாரியைத்தான் பார்த்தனர்.
அவன் இன்னமும் பூ என்று சுற்றிக் கொண்டிருக்கிறானே!
சத்யா குழந்தைகள் விளையாடுவதற்கு பல விளையாட்டு உபகரணங்களை ஏற்பாடு செய்திருக்க… அனைத்தும் முடிய சிறியவர்கள் விளையாட சென்றுவிட, பெரியவர்கள் பேச்சில் மூழ்கிவிட்டனர்.
இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால் தில்லையும், பார்வதியும் வீட்டிற்கு கிளம்பியிருந்தனர்.
சிறிது நேரத்திற்கெல்லாம் பாரியும் சத்யாவும் தனியாக நகர்ந்து சென்றிட, சாய் நாதன் அங்கு வருகை புரிந்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
                +1
	                                4        
	+1
	                                24        
	+1
	        	+1
	                                1        
	