கீழே மூவரும் லிஃப்ட் உதவியுடன் வந்தனர்.
அங்கே டைனிங் டேபிளில்
பொங்கல், சப்பாத்தி, இட்லி, பூரி,பன்னீர் பட்டர் மசாலா, சாம்பார், சட்னி, சன்னா மசாலா, பால் பாயாசம், என நிறைய உணவு வகைகளை செய்து இருந்தார் நம்ம ராஜி.
(வாங்க நாமலும் போய் சாப்பிட்டு வந்துருவோம்)
டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தனர் மூவரும்
Ak ‘ என்ன வாசனை ஆல தூக்குது … இன்னைக்கு செம சாப்பாடு தான்…
கிருஷ் ‘ எச்சி வழியுது துடைச்சிக்க ஏற்கனவே இங்க உன் எச்சி ல மிதந்துட்டு இருக்கேன்.. மூழ்கி செத்துட போறேன்..
Ak’ டேய் அங்க மட்டும் என்ன கிழிக்குது உன்னோட எச்சி தான்டா ரொம்ப வழியுது .. நான் தான்டா உன்னோட எச்சி ல மிதந்துட்டு சாக போறேன் என்று பேசிக் கொண்டு இருக்கும் போதே
ஆதி’ டேய் இரண்டு பேரும் செத்து தொலைங்கடா … இல்ல நானே gun எடுத்து ஷுட் பண்றேன்…. னு கத்த
கிருஷ் Ak (m.v) அடி யாத்தி பயபுள்ள கான்டு ஆகிட்டான்…
அந்த சமயத்தில் ராஜி வந்தார்
என்ன பசங்களா நல்லா வயிறு நிறைய சாப்டுங்க ….. ஆதி ஐ பார்த்து ராஜி
‘ஆதி கண்ணா நல்லா சாப்டு பா…. உனக்கு புடிச்ச பால் பாயாசம் செஞ்சு இருக்கேன் சாப்டு கண்ணா’என்று ஒரு பௌலில் ஊற்றி கொடுத்தார்.
ஆதி அதை தூக்கி எறிந்து விட்டு ரூமிற்கு சென்று விட்டான். அதை பார்த்த ராஜி கண்ணீர் மல்க பயத்துடன் நின்று இருந்தார்.
கிருஷ் ‘ அம்மா அவன பத்தி தான் தெரியும் மா… நீங்க கவல படாதிங்க மா என்று சமாதானம் செய்தான்.
ஆனால் ராஜி கண்ணீருடன் சென்று விட்டார்
Ak ‘ என்னடா இவன் இப்படி பன்றான்…. எப்ப தான் திருந்த போறானோ தெரியலையே டா என்று கிருஷ் இடம் வருத்தப்பட்டு கூறினான்.
கிருஷ் ‘தெரில டா! சரி வா போய் அவன் என்ன பன்றானு பாப்போம்.
இருவரும் ஆதி ரூம்மிற்கு சென்றனர்.
இங்க வாங்க ஹீரோயின் இன்ரோ கொடுத்துடுவோம்.
சென்னை:
பரபரப்பான சென்னை யில் திநகரில் பெரிய பரப்பளவில் அழகான வீடு அதாங்க நம்ம ஹீரோயின் வீடு..
அழகான செதுக்கப்பட்ட முகம்… மிகவும் வெண்மை நிறம் கொண்ட தேகம்.. அழகான மீனை போன்ற கண்கள், கூர் மூக்கு, இயற்கையாகவே அமைந்த சிவந்த செவ்விதழ்கள். இடை வரை கூந்தல்… மொத்தத்தில் இவள் ஒரு தேவலோக மங்கை என்று சொல்லும் அளவிற்கு பேரழகி… பைரவி
தாத்தா -அருணாச்சலம், பாட்டி-பார்வதியம்மாள்
கௌதமும் மீராவும் காதலித்து திருமணம் செய்தவர்கள். கௌதமின் குடும்பம் ஆதரித்தும் மீராவின் குடும்பம் எதிர்த்தும் வந்தனர். இதனால் கௌதமின் குடும்ப ஆதரவோடு திருமணம் செய்து கொண்டனர்.
கௌதம் – மீரா விற்கு காதலின் சாட்சியாக பிறந்தவள் தான் பைரவி
ஆனால் மீரா பிரசவத்தின் போது அதிக இரத்த போக்கால் உயிர் துறந்தார்.
தன் ஆசை மனைவி மீரா இறந்ததை கௌதமால் ஜீரணிக்க முடிய வில்லை… தாங்கவும் முடியவில்லை.
இதற்கு காரணம் பைரவி என்று அறிந்து அந்த குழந்தை பிறந்த நொடியில் இருந்து அடியோடு வெறுக்க ஆரம்பித்தார்.
இதை அறியாத பைரவி தன் தந்தையை உயிரினும் மேலாக நினைத்து வந்தாள்.
சிறு வயதிலிருந்தே தந்தையின் வெறுப்புக்கு ஆளானாள். அதனால் தந்தையின் முன்னே நிற்கவே பயந்து தந்தை வரும் முன் அவள் ரூமிற்கு சென்று விடுவாள்.
இதை பார்த்த பாட்டி பார்வதியம்மாள் மனம் வருந்தினார்.இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று யோசித்தார்.
அப்பொழுது அவருடைய கணவர் அருணாச்சலம் ஆழ்ந்து யோசித்து கொண்டு இருந்த மனைவியை பார்த்து
‘அப்படி என்ன யோசனை நான் வந்தது கூட தெரியாம.. ம்ம்
பார்வதி’நம்ம பைரவி பாவம்ங்க இப்படி பெத்த புள்ளைய வெறுக்குறான். அம்மா பாசமும் கிடைக்கல.. அப்பா ஒட அரவணைப்பும் கிடைக்கல… அதுனால நம்ம கௌதம்க்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கலாம் னு முடிவு எடுத்து இருக்கேன்.
அதைக் கேட்ட அருணாச்சலம் அதிர்ச்சி அடைந்தார்.