பூஜை அறையில் தான் தவறு ஒன்று செய்ததற்காக மன்னிப்பை வேண்டியும் அதே சமயத்தில் தன் மகன் ஆதி மனம் மாற வேண்டியும் கண்ணீர் உறுகி பிரார்த்தனை செய்தார் நம் நாயகனின் அம்மா ராஜலெட்சுமி.
அன்பு, பாசம் பொறுமை கொண்டு இருப்பவர். தான் செய்த ஒரு தவறுக்காக தன் மகனின் வாழ்க்கை திசை மாறியதை நினைத்து வருந்தினார். அந்த சமயத்தில் அவரின் தோளில் கை வைத்து ஆறுதல் அளித்தார். நம் நாயகனின் தந்தை ரகுவரன். வயது ஆனாலும் அதே கம்பீரம், அதே விவேகமாக இருக்கும் கணவரை பார்த்து கண்ணீர் சிந்தினார் நம்ம ராஜி(ராஜலட்சுமி)
“ஏங்க நம்ம புள்ள எப்ப தான் என்னைய வாய் நிரைய அம்மா னு கூப்பிடுவான்” என்று வருடங்கள் கடந்தாலும் மகனின் மனம் மாறும் என்று இதே கேள்வியை மறுபடியும் கணவரிடம் கேட்டார். அவரும் சலிக்காமல் “காலம் மாறும்டா மனசும் மாறும், நம்ம பையன் நம்மல சீக்கிரமாவே ஏத்துப்பான்”. என்று ஆறுதல் அளித்தார்.
ராஜி ‘இதே தான் சொல்லி என்னோட வாய அடைக்குரீங்க. கூடிய சீக்கிரம் அவனுக்குன்னு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க போறேன்”.
அதைக் கேட்ட ரகுவரன் வாய் விட்டு சிரித்து விட்டார் மகனின் குணம் அறிந்து
அதைப் பார்த்த ராஜி கண்களால் எரிப்பதைப் போன்று முறைத்தார்.
“நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு…. ம்ஹும்
ரொம்ப சிரிக்காதிங்க இருக்குற பல்லு கொட்டிட போகுது” என்று அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.மகனிற்காக ஆசையாக சமைக்க வேண்டி..
சோபாவில் அமர்ந்து தன் மனைவி போகும் திசையை பார்த்து விட்டு
ரகுவரனும் நம்ம மனைவி ஆசை நிறவேற கடவுளிடம் வேண்டிக் கொண்டு நியூஸ் பேப்பர் படிக்க ஆரம்பித்தார்.
ரகுவரன் -ராஜலெட்சுமி தம்பதிகளுக்கு இரண்டு ஆண் ஒரு பெண்
முதல்ல நம்ம ஹீரோ(27) இரண்டாவது வாசுதேவன்(வாசு)(23), மூன்றாவது மித்ரா (அவள் இப்போது உயிருடன் இல்லை பிறகு சொல்கிறேன்)
சிட்டி நடுவில் வீடு இல்ல இல்ல அரண்மனை….
நான்கு தளங்களை கொண்ட வீடு
வாசலில் இரண்டு காம்பவுண்டுகளிலும் பூத்து குலுங்கும் மலர் தோட்டங்கள்….
முதல் தளத்தில் கிட்சன் ,பூஜை அறை மற்றும் இரண்டு ரூம். இரண்டாவது தளம் முழுவதும் நம்ம வாசு உடையது.
மூன்றாவது தளம் வரவேற்பு அறை. நான்காம் தளம் முழுவதும் நம்ம ஆதி உடையது அதான் நம்ம ஹீரோ.
(வாங்க நம்ம ஹீரோ என்ன பன்றாருன்னு யாருக்கும் தெரியாம பார்த்து வந்துட்டு ஓடிரலாம்…. பின்ன யாரு அவன் கிட்ட குண்டு அடிப்பட்டு சாகுரது எனக்கு வாழ ஆச இருக்கு பா ஈஈஈஈஈஈஈ)
அடங்காத தேசம், பால் நிறம் கொண்ட தேகம். வில்லை போன்ற இரண்டு புருவங்கள் பாறை போன்று இருக்கும் அகன்று விரிந்த மார்பு, விடாது உடற்பயிற்சி செய்து வந்ததால் சிக்ஸ் பேக்ஸ் கொண்ட உடல், நரம்புகள் வெளியே தெரியும் அளவிற்கு முறுக்கு ஏறிய கைகள், அனல் கக்கும் கூர் விழிகள், கடந்த கால கசப்பான சம்பவத்தால் ஏற்பட்ட இறுக்கத்தால் சிரிப்பை மறந்து இருக்கும் அழகான இதழ்கள், ட்ரிம் செய்ய பட்ட அழகான தாடி … மொத்தத்தில் பேரழகன்…
தான் நம்ம ஆதித்ய ராகவ்
நம்ம ஹீரோ இருக்குற தளத்தில் ஜிம், இன்னர் ஸ்விம்மிங் பூல், ட்ரஸ்ஸிங் ரூம், ஆஃபீஸ் ரூம் இருந்தது.. மொத்தத்தில் ஒரு வீடு போன்று இருந்தது.. எல்லா வசதிகளும் இருந்தது அந்த ரூமில்.
காலையில் எப்போதும் போல் எழுந்து கிட்ட தட்ட ஒரு மணி நேரமாக உடற்பயிற்சி செய்து வியர்வை வழிய நின்றான் ஆதி. அந்த சமயத்தில் அவனுடைய நண்பர்கள் அஷோக் குமார்(AK) (கிரிமினல் லாயர்), கிருஷ்ணா (எ) கிருஷ் ஆதியின் ஆபீஸில் வேலை செய்கிறான்
இருவரும் ஆதி ரூம் வந்தனர். இவர்கள் மட்டும் தான் ஆதியின் தளத்திற்கும் ரூம்மிற்கும் வரவும் போகவும் முடியும்.
வேலை செய்ற குறிப்பிட்ட நபர்கள் மட்டும் தளத்திற்கு வர அனுமதி உண்டு.
மற்றவர்களுக்கு அனுமதி இல்லை
இவர்கள் மூவரும் பள்ளிகால நண்பர்கள்
கிருஷ் ‘ டேய் ஏண்டா இப்படி எக்ஸ்ஸர்சைஸ் பன்னிட்டு யாருக்காக டா உடம்ப வருத்திக்குற’
Ak’ அவன் வர போற பொண்டாட்டிக்காக அவன் உடம்ப அழகா வச்சிருக்கான் ‘உனகென்னடா வந்துச்சு வென்ன!?
கிருஷ் ‘டேய் உனக்கு எதிரி யாரும் இல்லடா ‘ என்று பேசி முடிக்குறதுக்குள்ள
Ak ‘நாங்களாம் யாரு மச்சி கிரிமினல் லாயர் டா… இப்படி பேசினாதான் கேஸ் ல ஜெயிக்க முடியும் டா என் சிப்சு!
அப்படியே கூடிய சீக்கிரம் கல்யாணம் பன்னி மிங்கிள் ஆகனும்டா அதான் என் ஆசை னு
காலர தூக்கி காமிச்சு கெத்தா சொன்னான்.
கிருஷ் ‘அறிவு கெட்டவனே மிங்கிள் ஆகுரதுக்குள்ள சிங்கிளா சாக போறடா?
Ak ‘உனக்கு பொறாம டா! நா சாக மாட்டேன் டா! நான் லவ் பன்னி கல்யாணம் செஞ்சு குழந்தைகளாம் பெத்து அத பாத்து நீதான் டா சாக போற! னு வெக்க பட்டுகிட்டே சொன்னான்..
கிருஷ் ‘ டேய் கருமம் புடிச்சவனே! என்னடா! இந்த கன்றாவிலாம் பாக்கணும் னு என் தலையெழுத்து டா! அடேய்!உன் வாய் தா டா உனக்கு சனி…லூசு படிச்சேனே உன் உயிர காப்பாதிக்க டா! என்று அவன் காட்டிய திசையில் Ak பார்த்தான்.. அங்கு ஆதி கோபத்தின் உச்சியில் இருந்தான்.
Ak(m.v) ‘ இவன் எதுக்கு இப்படி பார்குறான் …. ஆஹா?! நம்ம யார் முகத்துல முளிச்சோம்…நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு நம்ம வாய் சும்மாவே இருக்காது..என்ன பண்ணோம் னு யோசிக்கவே பொறி தட்டியது கிருஷ் அய் பார்த்தான்
கிருஷ் ‘ காலிடா இன்னைக்கு நீ னு Ak காதில் கிசு கிசுத்தான்
Ak இன்னைக்கு செத்தோம் னு . நினைச்சுகிட்டு
நைசா அங்க இருந்து நழுவ போகும் போது ஆதி தாவி அவனை அடி அடி என்று வெளுத்து விட்டான்.
கிருஷ் ‘ டேய் விடுடா ஆதி.. செத்துட போறான்…வா போய் சாப்டலாம்
Ak ‘ டேய் சோத்துக்கு பொறந்தவனே இங்க நா உயிர் போக அடி வாங்கிட்டு இருக்கேன் காப்பாத்தாம சோறு முக்கியம் னு போற’ என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வலியும் கோபமும் கலந்து சொன்னான்.
கிருஷ் ‘ போடா! எனக்கு சோறு தான் முக்கியம்… வாய திறந்து பழிப்பு காட்டினான்.
ஆதி ‘ டேய் வாய மூடுங்கடா! சின்ன புள்ள மாதிரி சண்ட போட்டு கிட்டு இரண்டு பேறு வாங்க சாப்ட போலாம். இல்ல சாப்பாடு கிடையாது.
Ak ‘ஹீஹீஹீ அப்படிலாம் சொல்லக் கூடாது என்று அசடு வழிந்தான்.
கிருஷ் ‘சோறு னு சொன்ன உடனே வெக்கமே இல்லாம வா வெக்கங்கெட்டவனே
Ak ‘ அத நீ சொல்லாதடா நல்லவனே
கிருஷ் ‘ போடா என்று மறுபடியும் சண்டை போட ஆரம்பித்தனர்
ஆதி ‘
டேய்! என்று கத்தவும் இருவரும் வாய மூடிக் கொண்டனர்.
பின் மூவரும் கீழே சென்றனர்.