Loading

கண்ணீரை பரிசாக அளிக்கும்
வெங்காயத்தை நறுக்கும் நிமிடமெல்லாம்
உன் நினைவே…!!

எண்ணெய்யில் கடுகு வெடித்து
கோபத்தை காட்டுகிறது

என் முகத்திலோ முத்திரையை
பதிவிட்டு செல்கிறது

உனக்காக நான் வாங்கிய
முத்திரைகள் என்றால்
முகம் முழுவதும் ஏற்றுக்கொள்வேன்
முத்திரைகளை….!!!

என் விரல்களுக்கு சமையல்
சூட்டை பரிசாக அளித்தாலும்
எனக்கு புன்னகையே மலரும்….!!!

நீ கூறும் ஒற்றை வார்த்தையில்
இல்லாத சந்தோசம்
உன் புன்னகையில் ஆயிரம் வார்த்தைகளாக…….!!!

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. நினைவுகளில் மலர்ந்த கவிதை.. இன்னும் கொஞ்சம் வார்த்தைகள் சேர்த்திருக்கலாமோ அப்படி எனக்கு தோன்றியது..

    அழகாக கவிதை எழுதி இருக்கிறீங்க. வாழ்த்துக்கள் மா..👍👍👍

    1. Author

      கண்டிப்பாக சகி😊 முயற்சி செய்கின்றேன்….🙏மிக்க நன்றி….

  2. என் விரல்களுக்கு சமையல் சூட்டை பரிசாக அளித்தாலும் என் முகத்தில் புன்னகையே மலரும்.. அற்புதமான வரிகள் சிஸ்..