Loading

ருசிப்பார்த்திட உள்ளங்கையைக்
குழியாய் மாற்ற
சூட்டுக்கோலைப் போல்
சுருட்டிவிட்டது குழம்பின் வெட்பம்!
இடக்கை உதறி
மீண்டும் சிலதுளிகள் சேர்க்க
மணம் மதியை
முக்குளிப்பு நடத்தியது!
மஞ்சளழகி
நிறத்தால் மனம் கவர
விழிகள் பருகின!
நா தீண்டலில்
இதழ்கள் சுளித்துப் பின்வாங்கியது
உவர்நீர் பூத்திருந்த முகம்!
செவ்விதழில்
காரம் கூட்டியிருந்தாள்
தேகச் சுருங்கலிலும்
விறைத்திருந்த பட்டமிளகாய்காரி!
விடை சொன்னது
முதல் சமையல்!
இன்னுமின்னும் பயிற்சி வேண்டுமென்று..!

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

7 Comments

  1. Muthal samayal
    Muthal muyarchi
    Muthal yuththam
    Muthal kaaththiruppu
    Muthal vetri
    Arumai sis!!!

  2. மிக aru👌👌👌♥♥வாழ்த்துக்கள் 💐💐💐

    1. முதன் முதலாக சமைக்க கற்று கொள்கையில் வரும் அனுபவத்தை அழகாய் சொல்லி இருக்கிறீங்க உங்க கவிதையில்..

      அருமை.. வாழ்த்துக்கள்..

  3. முதல் சமையல் அனுபவத்தின் கவிதை வரிகள் அருமை சிஸ்..
    நா தீண்டலில்
    இதழ்கள் சுழித்துப் பின்வாங்கியது
    உவர்நீர் பூத்திருந்த முகம்..
    அருமையான வரிகள் சிஸ்..சூப்பர்