
சமுத்திரா – 28:
ரங்கா எவ்வளவு அழைத்தும் மேலே செல்ல எண்ணம் இல்லாத விலோ, “நா..நான் மேல வரல ரங்கா. ப்ளீஸ் இங்கயே இருக்கேன்.” என சொல்லியவள் மீண்டும் கைகளுக்குள் தலையை புதைத்தப்படி அமர்ந்துக் கொண்டாள்.
அதில் இழுத்துவைத்த பொறுமையையிழந்த ரங்கா, “விளையாடாத விலோ. நீ என்ன சின்ன குழந்தையா? அங்க உனக்காக தான் எல்லாரும் வெயிட் பண்ணுறாங்க..” என அதட்ட தொடங்கினான்.
அதில் விலோவின் அழுகை மேலும் அதிகரித்தது. ரங்காவின் சத்தத்தில் அமரனும் ப்ரதீப்பும் கூட அவர்களிடம் வந்தனர். “எப்பவும் போலீஸா முஞ்சில முள்ளுக்கட்டுன மாதிரியே இருக்காத ரங்கா..” என்ற அமரன், “விலோ..” என மென்மையாக அவளை அழைத்தான்.
அவளுக்கு தெரியும் அமரன் அவ்வளவு சீக்கிரத்தில் ரங்காவின் முன்பு அவளிடம் பேச மாட்டான். ஆனால் அவனே அழைக்கும் பொழுது அவளால் அவனை நிராகரிக்க முடியாமல், “என்னால நிற்க கூட முடியல அமர்.” என மேலும் அழுக,
“விலோ!” என்று ஒன்றாக வந்த மூன்று அடவரின் குரல்களிலும் தலையை குனிந்தவள், “நான்..எனக்கு..” என சொல்ல முடியாமல் தவித்தாள்.
அவளின் நிலைமையை பார்த்தவர்கள், “ஷிவன்யாவை அழைத்து வரலாமா..” என யோசிக்க துவங்கினர். ‘ஆனால் அவளாலும் நடக்க இயலாதே!’ என்று நினைத்தவர்கள், “என்னாச்சு விலோ..” என மீண்டும் ரங்கா கனிவாக கேட்டான்.
“நான்.. த.. தவளையா மாறிட்டு வரேன் ரங்கா.” என்றவள் மீண்டும் அழ தொடங்கினாள்.
‘அவள் சரியாக தான் சொன்னாளா..?’ என்ற சந்தேகம் மூவருக்கும் எழ, “வாட்! என்ன சொன்ன விலோ? திருப்பி சொல்லு..” என்று ப்ரதீப் தான் முதலில் தெளிவு படுத்த கேட்டான்.
“நான் ஃப்ராக் (தவளை) மாதிரி மாறிட்டு இருக்கேன். என்னால அதை உணர முடியுது..” என்றவள் குனிந்து கொண்டாள்.
“எனக்கு புரியல விலோ. நாங்க போகும் பொழுது நீ நல்லா தான இருந்த? எப்படி திடீர்னு இப்படி மாற முடியும்?” என்ற ரங்காவிற்கு விலோ சொன்ன அதிர்ச்சியில் இருந்து அவனால் மீள முடியவில்லை.
“சுறா வந்துட்டு போனதுல இருந்தே எனக்கு காலும் இடுப்பும் ரொம்ப வலிச்சது. நான் கூட ஈரத்தில இருக்குறதாலன்னு நினைச்சேன். ஆனா என்னோட முதுகெலும்பு கொஞ்சம் கொஞ்சமா வலைஞ்சு இப்ப என்னால நிமிரவே முடியல. காலையும் நீட்டி உட்காரவோ நிற்கவோ என்னால முடியல..” என்றவள் அவளின் கைகளையும் மூவருக்கும் காட்டினாள். கைகளின் தோள்கள் சொரசொரப்பாக மாறியிருந்தது.
“சரி மேல வா விலோ. என்ன பண்ணலாம்னு பாக்கலாம். இங்கயே இருந்து என்ன பண்ண போற?” – ரங்கா.
“எனக்கு ஒரு மாதிரி இருக்கு..”, என மெல்லிய குரலில் விலோ சொல்ல,
“மேல ஷிவ் இருக்கா. அவகிட்ட பேசுனா நீ சரியாகிடுவ வா. நீ நடக்க வேண்டாம். நாங்க தூக்கிக்கிறோம்” என ரங்கா அவளை சமாதான படுத்தினான்.
“ஆமா விலோ. வா நான் உன்னை தூக்கிக்குறேன். நாம ஒண்ணா இருந்தா எல்லாம் சரியாகிடும்.” என்ற அமரன் பேசியபடியே அவளை தூக்கிக் கொண்டான். குத்தவைத்து உட்காரும் பொழுது வலி தெரியாமல் இருந்தாள் விலோ. இருகைகளால் அமரன் அவளை தூக்கியதும் வலியில் துடித்தவள் கண்ணை இறுக்கிக் கொண்டாள்.
“டூ மினிட்ஸ் விலோ. மேல போய்டலாம்.” என அவ்வறையில் இருக்கும் படிகளின் வழியே மேலேறி சென்றனர்.
விலோவை தூக்கி வந்த அமரனை பார்த்த சக்தி, “விலோக்கு என்னடா ஆச்சு? அவளுக்கும் அடி ஏதாவது பட்டிருக்கா?” என சக்தி அமரனை நெருங்கினான்.
சக்திக்கு பதில் சொல்லாமல் விலோவை நேராக ஷிவன்யாவின் அருகில் இறக்கிவிட்டான் அமரன்.
“ஷிவ் உனக்கு ஒண்ணுமில்லையே?”
“விலோ உனக்கு என்னாச்சு?” என இரு தோழிகளின் குரலும் ஒரே நேரத்தில் வந்தது.
“நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க நாங்க வரோம்.” என்று அமரன் சொல்ல, ஆடவர்கள் அனைவரும் பெண்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு நகர்ந்தனர்.
“எனக்கு ஒண்ணுமில்லை விலோ. அடி பட்டிருக்கு பட் சரியாகிடும்.” என வலியை மறைத்து விலோவிடம் பேசினாள்.
“இல்ல ஷிவ் எவ்ளோ ப்ளட் உனக்கு போச்சு.. ரொம்ப வலிக்குதா? எல்லாம் என்னால தான்.” என விலோ மீண்டும் தொடங்கினாள்.
“அப்படி பார்த்தா இந்த கேமை பர்ஸ்ட் போட்டது நான் தான். நான் என்ன சொல்ல..?” என விலோவை இடையிட்ட ஷிவன்யா,
“உனக்கென்ன ஆச்சு? ஒழுங்கா உட்காரு முதல்ல..” என விலோவை பார்த்தபடியே சொன்னாள்.
“நாம சின்ன வயசுல ப்ராக் ரேஸ் (Frog Race) விளையாடுவோம்ல? அதை மாதிரி தான் என்னால உக்கார முடியுது. நான் தவளையா மாறிட்டேன் ஷிவ்..” என்ற விலோ, அவள் தவளையாய் மாறிய கதை முழுவதையும் சொன்னாள். அவளின் நிலையை உணர்ந்த ஷிவன்யா, “சரி விடு. ஒருஒருவருக்கு ஒரு ஒரு நிலைமை. கேமை முடிச்சிட்டா எல்லாமே முடிஞ்சிடும்..” என அவளை தேற்றியவள் ஆடவர்களை அருகில் அழைத்தாள்.
இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க, நடந்த அனைத்தையும் ஆடவர்கள் அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.
“ரொம்ப வலிக்குதா விலோ..” என முதல் ஆளாக அங்கே வந்த சக்தி அவளை விசாரித்தான்.
“முன்னாடி தான் ரொம்ப வலிச்சிது. இப்ப தான் நான் தவளை மாதிரி தான உட்கார்ந்து இருக்கேன். சோ வலிக்கல..” என்றாள் விலோ.
“இருந்தாலும் அந்த கேமை நீ கலைச்சு விட்டதுக்கு இப்படி உன்னை தவளையா மாத்துனது கொஞ்சம் அதிகம் தான்.” என ஷிவன்யா சொன்னாள். ஏனோ அனைவரும் அவளின் அருகில் இருக்கும் பொழுது கால் வலி கூட அவளை பாதிக்கவில்லை.
“தவறு சிரியதோ பெரியதோ. அனைத்திற்கும் தண்டனை உண்டு.” என அங்கே வந்தாள் கடற்கன்னி. அனைவரும் அவளை தான் பார்த்தனர்.
“ஹே ஏஞ்சல்!” என ப்ரதீப் வாயை பிளக்க,
“அவகிட்ட என்னை மேல கூட்டிட்டு போக சொன்னா முடியாதுன்னு சொல்லிட்டா தெரியுமா?” என விலோ சிறுகுரலில் சொன்னாள்.
“தவறு செய்தவர்களுக்கு நான் உதவ மாட்டேன். உங்களுக்கு உதவி புரிய வேண்டுமென்றால் எனக்கு கட்டளை வர வேண்டும்.” என்றவள் அங்கிருந்து அகன்றாள்.
“நான் முதல்ல இருந்தே இவளை நம்பாதீங்கன்னு சொன்னேன். நீங்க தான் கேட்கவே இல்லை..” என ஷிவன்யா கடற்கன்னியையே பார்த்தப்படி சொன்னாள்.
“எல்லாம் இருக்கட்டும். உன்மேல எதுக்கு டி சரக்கு ஸ்மெல் வருது?” என விலோ கேட்க, சக்தி திருதிருத்தான். ஷிவன்யாவை அவனை தீயாக முறைத்தாள்.
அவர்களை கவனித்த அமரன், “என்னாச்சு ஷிவ்?” என்றான்.
“உங்க பிரண்ட் சக்தி. என்னால வலி தாங்க முடியலனு இந்த மதுவை என்னை குடிக்க வெச்சிட்டாரு. உவக்! அதுல இருந்து வாயெல்லாம் கசக்குது வாந்தி வர மாதிரியே இருக்கு..” என சக்தியை முறைத்தபடியே சொன்னாள்.
அதானி கேட்ட அனைவரும் சிரித்துவிட்டனர். “அந்நேரம் எனக்கு என்ன பண்ணனு தெரியல. அவ வேற குளிருல நடுங்கிட்டு இருந்தா. அதான் இதை கொடுத்தேன். இப்ப எவ்ளோ தெம்பா இருக்கா நீங்களே பாருங்க..” என்ற சக்தியை அனைவரும் வியப்பாக பார்த்தனர். ‘தேவையை தவிர அதிகம் பேசாத சக்தி இப்பொழுது பேசியது அவர்களுக்கு வியப்பு தான்!’
“சரி விடு ஷிவ். இதெல்லாம் நம்ம வரலாறுல வரும்..” என்ற விலோ, “நீ ஏன் ப்ரதீப் அமைதியாவே இருக்க?” என்றாள்.
“நீ எதுக்கு தவளையா மாறிருக்கனு நான் கண்டுபுடிச்சிட்டேன் விலோ” என நீண்டநேரம் அமைதியாக இருந்த ப்ரதீப் வாயை திறந்தான்.
“அதான் அவ விளையாட்ட கலைச்சு விட்டதால் தான டா?” என ரங்கா கேட்க,
“அதுக்கு அவ மீனா கூட மாறலாமே? எதுக்கு தவளையா மட்டும் மாறனும்?” என ப்ரதீப் கேட்க,
“ஏதோ சொல்ல வர. நீயே அதை சொல்லி தொலை.” என்றான் அமரன்.
“‘தவளை தன் வாயால் கெடும்’ ன்னு சொல்லுவாங்கல? அதை மாதிரி விலோ அவளுக்கு அவளே ஆப்பு வெச்சிகிட்டதால அவ தவளையா மாறிட்டா..” என சிரித்தான்.
“ச்ச. காத்தோட இருக்குறதால எங்க அடில இருந்து மிஸ் ஆகிட்ட..” – அமரன்.
“நான் தவளையா இருந்தாலும் எனக்கு ஒரு உருவம் இருக்கு. அதைவிட்டுட்டு உருவமே இல்லாத நீயெல்லாம் என்னை பத்தி பேச கூடாது.” என விலோவும் ப்ரதீப்பை வாரினாள்.
“யாரோ மேல வர மாட்டேன்னு அழுதாங்க ரங்கா. நீ அவங்களை பார்த்தியா?” – ப்ரதீப்.
“நீ தான் டா எங்க கண்ணுக்கு தெரியல..” என ரங்கா சொல்ல,
“சரி சரி நாம கேமை மறுபடி கண்டினு பண்ணலாமா? இதுக்கு மேல என்ன வரும்னு பயமா இருக்கு..” என்றாள் ஷிவன்யா.
“என்ன வந்தாலும் பார்த்துக்கலாம்.” என்ற அமரன் அந்த விளையாட்டு போர்டை பிரித்து வைத்துவிட்டு சக்தியை அழைத்தான்.
“சக்தி, நீ என்னோட உயிர் நண்பன் தான? ஆறு போடு ப்ளீஸ்..” என ப்ரதீப் கூற,
“வந்தா போட மாட்டேனா டா..” – சக்தி.
“இரு சக்தி நானே எனக்கு மந்திரம் போட்டுக்குறேன்.” என மனத்திற்குள்ளே ஏதேதோ வேண்டிக் கொண்டான் ப்ரதீப்.
“நீ இப்படியெல்லாம் பண்ணா வர்றதும் வராம போய்டும் டா..” என விலோ முடிக்கும் பொழுது சக்திக்கு ஐந்து என பகடையில் விழுந்தது.
“உன்னால தான் விலோ. பாஸிடிவா பேசுனா தான? ஐயோ! கூட ஒன்னு எக்ஸ்ட்ரா வந்திருக்க கூடாதா..” என ப்ரதீப் புலம்ப தொடங்கினான்.
ஏற்கனவே ஏழில் இருந்த சக்தியின் பச்சை நிற குட்டிக்கப்பல் ஐந்து கட்டங்களை கடந்து பன்னிரண்டில் சென்று நின்றது.
“சக்தி நியும் மூணு போட்டா கேம் முடிஞ்சிடும்.” என்றாள் விலோ.
“இப்ப என்ன வந்திருக்குன்னு முதல்ல படிங்க..” என்று ஷிவன்யா சொல்ல அனைவரின் கவனும் அங்கு குமிழில் தோன்றிய எழுத்துகளிடம் சென்றது.
கொடி கொடியதாகும்!
சிக்காமல் இருந்தால்
சிரமமிருக்காது!
என வந்ததை வாசித்தனர்.
“கொடியா?” என விலோ கேட்க, “அப்படி தான் போட்டிருக்கு. அதுல என்ன ஆபத்து வரும்?” என்றாள் ஷிவன்யா.
அப்பொழுது ஆள் கடலில் இருந்து மெல்ல கப்பலில் படர்ந்தபடியே கொடூரமாக வளர்ந்திருந்த கொடி ஒன்று அவர்களை நோக்கி வந்தது.
“ஓ இதுதான் கொடியா? ஆனா ரொம்ப பெருசா தடியா இருக்கே!” என அதனை பார்த்தவர்கள் சொல்ல, மலைப்பாம்பு போல் திடமாகவும் பலமாகவும் இருந்த கொடி அவர்கள் கப்பலின் மேல் தளத்தில் இருந்த மரமேசையை அப்படியே சுருட்டிக் கொண்டு கடலிற்குள் சென்றது.
“அத்தாடி கொஞ்சம் பயங்கரமா தான் இருந்துச்சு. அதான் அது போய்டுச்சே.. ஷிவ் நீ தான் அடுத்து போடணும்.” என்று நினைவு படுத்தினான் ப்ரதீப்.
“ஆமா.” என்ற ஷிவன்யா பகடையை கையில் எடுத்தாள்.
அந்நேரம் அனைவரையும் அச்சுறுத்தும் விதமாக கடலிற்குள் இருந்து பல கொடிகள் ஒன்றொண்டொன்று பின்னி பிணைந்தபடி கப்பலில் படர துவங்கியது.
“நம்ம கேம்ல வந்த குறிப்புபடி நாம அதுங்க கிட்ட சிக்க கூடாது. அப்ப தான் நமக்கு எந்த பிரெச்சனையும் இருக்காது. எல்லாரும் கொஞ்சம் கவனமா இருங்க.” என்ற அமரன் அனைவரையும் எச்சரித்தான்.
– சமுத்திரா வருவாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
5
+1
1
+1

