Loading

சமுத்திரா – 27:

கையில் கத்தியும், வாளும் ஏந்தியவாரே அமரனையும் ரங்காவையும் சுற்றி வளைத்திருந்தனர் கொள்ளைக்கார மாலுமிகள். ‘எந்த வழி தப்பி செல்ல முடியும்?’ என ரங்கா மற்றும் அமரனின் விழிகள் சுற்றியும் ஆராய்ந்தன.

“நீங்கள் எங்களை தேடி எங்கள் கப்பலுக்கு வந்தது எனக்கு முன்பே தெரிந்து விட்டது. ஆகையால் தான் அந்த விளையாட்டு உங்கள் கண்ணில்படும் படி வைத்தேன். நான் எதிர்பார்த்தது போல், மீன்களை போல் நீங்களே என் வலையில் விழுந்து மாட்டிக் கொண்டீர்கள்..” என உச் கொட்டியப்படியே ஆரலி அவளின் திட்டத்தினை அவர்களிடம் விவரித்தாள்.

அமரனும் ரங்காவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, “அடிப்பாவி! இது உன்னோட பிளான் தானா? அதான பார்த்த, அந்த கேம் போர்ட் ஒரு பெட்டிக்குள்ள இருந்துச்சே? அதெப்படி வெளிய வந்துச்சுன்னு யோசிச்சேன்.” என ப்ரதீப் சொல்ல, “டேய் அமைதியா இரு டா. எங்களை யோசிக்க விடு..” என பல்லிடுக்கில் சொல்லிய ரங்கா,

“அமர். சுத்தி இருக்க நாற்பது கொள்ளைக்காரங்க கூட சண்டை போடுறது ரிஸ்க் தான். சோ நாம இவங்க கிட்ட இருந்து தப்பிக்க தான் பார்க்கணும்..” என அமரனிடம் ஆங்கிலத்திலேயே சொன்னான்.

“ஆமா ரங்கா. நீ ஒருபக்கம் ஓடு. நான் ஒரு பக்கம் ஓடுறேன். அவங்கள சுத்தல்ல விட்டுட்டு நாம எஸ்கேப் ஆகணும்..” என அமரனும் ஆங்கிலத்தில் உரையாடினான்.

“நீங்கள் இருவரும் எந்த மொழியில் பேசி கொண்டிருக்கிறீர்கள்?” என கள்ளிராணி அவர்களின் முன்னே வந்தாள். அவளை ஒரே தள்ளாக தள்ளிவிட்ட ரங்கா சமுத்திரா பெட்டியை சுமந்தப்படி பின்னே திரும்பி ஓடினான்.

அவனுக்கு எதிர்புறமாக ஓடினான் அமரன். “அவர்களை பிடியுங்கள்..” என கத்தியபடி ஆரலியும்  அமரனின் பின்னே ஓடினாள். “டேய் இப்ப நான் யார்கூட டா ஓடனும்..” என்று புலம்பிய ப்ரதீப் அமரனை பின் தொடர்ந்தான்.

கொள்ளைகார்களிடம் சிக்கினாலும் அவர்களை தாக்கி விட்டு ரங்காவும் அமரனும் கடலில் நிறுத்தி வைத்திருக்கும் அவர்களின் கப்பல் இருந்த திசைக்கு ஓடினர். “டேய் சீக்கிரமா வாங்க டா. நாம எஸ்கேப் ஆகிடலாம்..” என்ற ப்ரதீப் இருவருக்குமே குரல் கொடுத்தான்.

முன்னே வந்த ரங்கா சமுத்திரா பெட்டியை மார்ட்டினிடம் தூக்கி போட்டவன் அமரனுக்காக காத்திருந்தான். ஆனால் அமரனின் பின்னே அவனிடம் அரை வாங்கியவன் பெரிய வாளுடன் வர, நொடியும் யோசிக்காத ரங்கா அவனை தடுக்க செல்ல ரங்காவின் கையில் வெட்டு பட்டது.

“ஸ்ஸ்ஸ்.. அப்பா..” என ரங்கா கையை உதற, “டேய் உதறாத டா. இரத்தம் அதிகமா போகும்..” என்ற அமரன், ரங்காவை வெட்டியவனின் கன்னத்தில் மீண்டும் ஒரு அரைவிட்டு அவனை கீழே தள்ளி மிதித்தான்.

“அவனை அடிச்சது போதும் டா. வா போய்டலாம்..” என்ற ரங்கா அமரனை அழைத்துக்கொண்டு செல்ல, நூலிலையில் ஆரலியின் தாக்குதலில் இருந்து இருவரும் தப்பினர்.

அவர்கள் படகிற்கு வந்த உடனே மீட்பு கப்பலை செலுத்த துவங்கிவிட்டனர் மார்ட்டினும் விக்டரும். “உப்ப். டேய் அமர். அப்படி உன்கிட்ட என்ன டா இருக்கு. அந்த கள்ளிராணி இவ்ளோ பெரிய ப்ளான்லாம் போட்டுட்டு இருக்கா..” என ப்ரதீப் சொல்ல ரங்காவும் சிரித்துவிட்டான்.

“நம்ம கப்பலுக்கு போய் உனக்கு முதல்ல பர்ஸ்ட் எயிட் பண்ணனும்..” என்ற அமரன் ரங்காவின் கையை பிடித்துக் கொண்டான்.

“என்னிடம் இருந்து தப்பி விட்டிர்கள் என்று எண்ணாதீர்கள். எங்களின் கப்பலை திருப்பிக்கொண்டு உங்களிடம் மீண்டும் வருவோம்..” என சூளுரைத்த ஆரலி கப்பலை திருப்புமாறு ஆணையிட்டாள்.

*****

நடக்கவே முடியாமல் மெல்ல தவழ்ந்தபடி இருந்தாள் விலோ. நேரம் செல்ல செல்ல அவளின் முதுகு கொக்கி போல் வளைவதை அவளால் உணர முடிந்தது. அவளின் மென்மையான சருமமும் சொரசொரப்பாக மாற துவங்கியது.

அவளால், அவளுக்குள் நிகழும் மாற்றங்களின் வலியை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. சுத்தமாக நிமிர முடியாமல் போக தவழவே துவங்கிவிட்டாள்.

மெல்ல முயன்று அந்த பெரிய ஆமை இருக்கும் அறைக்கு வந்துவிட்டவளால் அதற்கு மேல் தாக்குப்பிடிக்க  முடியவில்லை. எனவே, அந்த ஆமையின் கால் பக்கத்தில் இருக்கால்களையும் கட்டியபடி அமர்ந்துவிட்டாள்.

*****

மெல்ல மயக்கத்தில் இருந்து விழித்த ஷிவன்யாவின் முன்னே சக்தி நின்றிருந்தான். காயத்தினால் இப்பொழுது அவளுக்கு காய்ச்சல் வேறு வந்திருக்க தலை கிருகிருவென சுத்தியது.

அந்த வலியிலும், “எ..என்ன வேணும்?” என அவனிடமிருந்து விலகினாள். ஆனால் பெண்ணவளின் தேகமோ குளிரில் மேலும் நடுங்கியது.

‘நான் பண்ண போறது மட்டும் மத்தவங்களுக்கு தெரிஞ்சிது என்னை பின்னி எடுத்துடுவாங்க..’ என்று எண்ணிக்கொண்டே அவளை நெருங்கினான்.

அவளின் அருகில் அமர்ந்தவன் ஷிவன்யாவின்

கன்னத்தை இடக்கையால் பற்றினான். அதில் அதிர்ந்து விழித்தவள் அவனின் மற்றொரு கரத்தை பார்த்தாள். அவன் என்ன செய்ய போகிறான் என புரிந்துக் கொண்டவள் அவனின் கரத்தை தட்டிவிட்டாள்.

“ப்ச். வேணும்னு பண்ணல. எவ்வளவு நேரம் இந்த குளிருள நீ இப்படியே நடுங்கிக்கிட்டே இருப்ப? ஆபத்துக்கு பாவமில்லை என அவளின் கையை இறுக்கி பிடித்தான்”

“நோ..” என அவள் தடுக்க தடுக்க அவளின் வாயிலே மது குடுவையை சரித்துவிட்டான் சக்தி. “இடியட்..” என திட்டியவள் அவனை தள்ளிவிட்டாள்.

“இது கொஞ்சமா குடிச்சா மருந்து மாதிரி தான். தற்காலிகமா உன்னோட குளிருக்கும் வலிக்கும் இது நிவாரணியா இருக்கும்.” என்றவன் அவளை விட்டு தள்ளி அமர்ந்தான்.

அவனை முறைத்தபடியே இருந்தாள் ஷிவன்யா. வாந்தி வருவது போல் இருக்க, கால் வலியும் படுத்தியெடுக்க அமைதியாக கண்ணை மூடி அமர்ந்துவிட்டாள்.

“நான் போய் விலோவை பார்த்துட்டு வரேன். நீ இங்க பத்திரமா இருப்பியா?” என ஷிவன்யாவிடம் கேட்டான்.

“ஹ்ம்ம். நீங்க போங்க.. நான் இங்கயே இருக்கேன்.” என்றவளை தனியாக விடவும் முடியாமல் முதலையை வெட்ட உபயோகித்த வாளை அவளின் கையில் பாதுகாப்பிற்கு கொடுத்துவிட்டு உள்ளே விலோவை தேடிச் சென்றான் சக்தி.

அவர்கள் சென்ற அந்த கதவின் வழியாக உள்ளே சென்ற சக்திக்கு விலோவும், ரிச்சார்டும் எங்கே சென்றனர் என புரியாமல் உள்ளே நடக்க துவங்கினான்.

அந்நேரம் அங்கே வந்த கடற்கன்னி, “உன்னுடைய தோழி உனக்கு கிடைக்க மாட்டாள்.” என சொன்னாள்.

அவள் சொல்வதை சக்தியால் கிரகிக்கவே முடியவில்லை. “நீ பொய் சொல்லுற.. விலோவுக்கு ஒன்னும் ஆகியிருக்காது..” என்றவன் அவளை தேடியபடியே உள்ளே சென்றான்.

*****

“ஒருவழியா இந்த கேமை எடுத்துட்டு வந்தாச்சு. எல்லாரும் மேல ஏறி வாங்க..” என்ற ப்ரதீப் முதலில் கப்பலுக்குள் வந்தான். அங்கு பாதி வெட்டப்பட்ட நிலையில் இருந்த முதலையை பார்த்தவன் பயந்தேவிட்டான். அங்கு யாரையும் காணாதது வேறு அவனுக்கு மேலும் பயத்தை கொடுத்தது.

ரங்கா, அமரன், மார்ட்டின், விக்டர் என அனைவரும் கப்பலில் மேல் தளத்திற்கு வந்துவிட்டனர். “என்னடா இப்படி இருக்கு.. சக்தி, விலோ, ஷிவ்வை காணோமே..” என் தேட துவங்கினர்.

அங்கு இருந்த சிறு படிகளில் ஷிவன்யா படுத்திருப்பது தெரிந்தது. “ஷிவ் அங்க இருக்கா டா..” என அவளிடம் சென்றவர்கள் அவளின் கால் காயத்தை பார்த்து அதிர்ந்துவிட்டனர்.

மெல்ல அவளை எழுப்பி என்ன நடந்தது என விசாரித்து தெரிந்து கொண்டவர்களுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை.

“முதல்ல சக்தி, விலோ ரெண்டு பேரையுமே தேடனும். ப்ரதீப் நீ போய் எங்க இருக்கங்கன்னு பார்த்துட்டு வா.” என ப்ரதீப்பை உள்ளே அனுப்பினர்.

சக்தியை தான் முதலில் பார்த்தான்.

“விலோ உள்ள இருக்கா டா.” என சக்தி சொல்ல,

“நான் போய் பார்த்துட்டு வரேன் டா. நீ மேல போ.” என அவனை கையுடன் கூட்டிக்கொண்டு வந்துவிட்டான் ப்ரதீப்.

பின் விலோவை தேடி சென்றான். அவனால் சுலபமாக அவளை கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக தான் ஆமை இருந்த அறைக்கு சென்றான்.

அங்கே சென்று பார்க்க, அந்த பெரிய ஆமையின் காலினை கட்டியபடி அமர்ந்திருந்தாள் விலோ. முதுகுவலி ஒருபுறம். கால்வலி இடுப்புவலி என அனைத்தும் அவளை படுத்தியெடுக்க அழுதபடியே அமர்ந்திருந்தாள்.

“ஹே விலோ! உனக்கு என்னாச்சு எதுக்கு இங்க ஊர்கார்ந்திருக்க? வா மேல போகலாம். அமரும் ரங்காவும் அந்த கேமோட வந்துட்டாங்க..” என ப்ரதீப் ஆர்பாட்டமாக கூறினான்.

அவன் கூறுவது காதில் விழிந்தாலும் எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றாமல் அமர்ந்திருந்தவளை பார்த்தவன் மீண்டும், “விலோ எழுந்திரு, நாம மேல போகலாம்..” என்றான்.

இப்பொழுது விலோச்சனா குரல் வந்த திசையை பார்க்க, அவளின் கண் முழுக்க சிவந்து அழுததடையம் அப்பட்டமாக தெரிந்தது.

“வி..விலோ என்னாச்சு உனக்கு?” என்றான் ப்ரதீப் அவளை பார்த்தபடியே,

“ப்..ப்ரதீப்! எனக்கு.. நான்.. என்று தொடங்கியவள் மேலும் அழுகையில் இறங்க, அதில் பதறியவன், “என்னாச்சு?” என்றான் அவளை முழுதாக அராய்ந்தபடியே,

அழுதபடியே தலையை இடவலமாக அசைத்தவள், “நான் மேலே வரல.. என்..என்னால எப்படி வர முடியும்..” என்று மேலும் அழுகையில் கரைந்தவள் தலையை குனிந்து அமர்ந்துக் கொண்டாள்.

கால்கள் இரண்டையும் குற்றிவைத்து கைகள் இரண்டையும் ஒன்று சேர்த்து வயிற்றோடு இருக்கியபடி அமர்ந்திருந்தவளை பார்த்த ப்ரதீப் நொடியும் தாமதிக்காமல் மேலே வந்துவிட்டான்.

“ரங்கா” என்ற ப்ரதீப்பின் குரலில் அந்தந் திசையை பார்த்த ரங்கா,

“என்னடா விலோ எங்க? அவளை நீ பார்த்தியா?” என பதட்டமாக கேட்டான்.

“டேய் அவ அழுவுறா டா. மேல வரமாட்டேனு வேற சொல்லுற. நீ வந்து பாரு டா.”

“என்னடா சொல்லுற? எதுக்கு அவ வரமாட்டாளாம்..?” என்ற அமரனின் கேள்விக்கு,

“என்கிட்ட சொல்ல மாட்டேன்றா டா. ரங்கா நீ போய் கேட்டு பாரு. உன்கிட்ட அவ சொல்லுவா..” என்று ப்ரதீப் கூற அவனுடன் அமரனும் சென்றான்.

அங்கு சென்றதும், “நானும் ப்ரதீப்பும் இங்கேயே இருக்கோம் டா. நீ போ..” என்ற அமரன் தள்ளி நின்றுக் கொண்டான்.

விலோவை நெருங்கிய ரங்கா ஒருகாலை மடக்கி அமர்ந்தவன், “விலோ..” என அவளின் தலையை உயர்த்தினான்.

அதில் நிமிர்ந்து அவனை பார்த்தவள், “ர..ரங்ஸ்..” என்றபடி அவனின் மார்பில் புதைந்து அழுதவளின் முதுகை வருடி சமாதான படுத்த முயன்றவன், “மேல போகலாம் விலோ. சீக்கிரமா கேமை முடிச்சிடலாம்..” என அவளை தன்னில் இருந்து விலகியபடியே சொன்னவன் கலைந்திருந்த அவளின் முடியை சரி செய்தான்.

அப்பொழுது தான் அவனின் கையை கவனித்தவள், “ரங்ஸ்.. உங்.. உங்களுக்கு என்னாச்சு?” என அவனின் கையை வருடியபடியே கேட்க, “சின்ன காயம் தான். எழுந்திரு மேல போகலாம்..” என எழுந்து நின்றவன் அவளுக்கு கை கொடுத்தான்.

– சமுத்திரா வருவாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்