
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 3
இன்று
காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை..
சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை..
வாழ்வு தந்த வள்ளல் வாங்கிக்கொண்டு போக..
வாழ்த்துச் சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக..
என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம்..
உன்னை எண்ணி வாழ்வதே என் இன்பம்..
என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம்..
உன்னை எண்ணி வாழ்வதே என் இன்பம்..
இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே எந்தன் காதல் வாழும்..
நீ வாழ்க.. நலமாக.. நீ வாழ்க.. நலமாக..
நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி..
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ..
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ..
நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி..
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாலோ..
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாலோ..
எனப் பாட்டுச் சத்தம் அஸ்வந்த் உபயத்தால் தெரு முழுக்க ஒலிக்க, அந்தத் தெருவில் கடைசி வீட்டிலிருக்கும் ஆனந்தியின் இரத்த கொதிப்பை ஏற்றியது.
“ம்வோவ்! இவனுங்க இன்னம்மா இன்னைக்கே இப்படி பாட்ட போட்டு அதிரவிடுறானுங்கோ? ஊருல இல்லாத அழகினு இந்தச் சீக்கு பிடிச்சவளுக்கு இம்பூட்டு மஜாவா பண்றானுங்கோ. அப்போ நாம நினைச்சதுனா புட்டுக்கிச்சா? இம்மா ஜாலியா இருக்குதுங்கோ.. எனக்குக் காண்டாக்கீதும்மா” என்றாள் ஆனந்தியின் மகள் சிந்து. சித்தார்த்தின் அருமை தங்கை.
“எனக்குந்தாண்டிக் காண்டாக்கீது. அந்த எழிலும், ஈகையும் என்னைப் பார்த்துக்கின்னே போய் அடுத்த வீட்டு வனஜா கிட்ட முகூர்த்தகால் ஊண்ட சொல்லிக்கினும்போது, அவளுங்க குடுமிய பிடிச்சு அறுக்கனும் போல எம்மா ஆத்திரம் வந்துச்சு தெர்யுமா?” என்றார் ஆனந்தி.
“இல்லாத்துக்கும் உன் நொண்ணாத்தையும், உங்கொம்மா கிழவியுந்தே காரணம். ஈகைத்தை சொல்றதத்தே அவிங்க அண்ணத்த கேட்குறாரு. நீ சொல்றத உன்நொண்ணத்த கேட்குறாரா இல்ல உங்கொம்மா கிழவி தான் கேட்குதா?”
“ஈகை நொத்தை.. அவளுக்கு மருவாத ஒன்னு தான் கொறைச்சல்.. தலையணை மந்தரம் போட்டு எங்கண்ணன வளைச்சு வச்சது போதாதுனு.. இன்னா சொக்குபொடி போட்டாளோ எங்காத்தாவும் அவ பேச்சத்தேன் கேட்குது”
“இந்த சீக்குக்காரிய கதற வச்சு பார்க்கனுன்னு நினைச்சேன்ம்மா.. ஆனா அவ எப்படிம்மா உடனே கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா?”
“அவ அந்தக் கைகாரி மவ தான.. அவளமாதிரி அவ மவளும் கைதேர்ந்த கைகாரித்தேன்”
“அவள்க குஜாலாக்கீறத பார்க்கும் போதெல்லாம் என் வயறு எரியுதும்மா.. என்னை அழவிட்ட அவளுங்க நாசமாத்தான் போவாளுங்கோ”
என அதீத சத்தத்தில் ஒலிக்கும் பாட்டையும் மீறிக் கத்திக்கொண்டிருந்தாள் சிந்து. அதைக் கேட்டபடியே அறையிலிருந்து வெளியே வந்தார் ஆனந்தியின் கணவர் இளங்கோ.
“இப்படி அடுத்தவங்கள நாசமாக்க நினைக்கிற நீங்கத்தேன் நாசமா போகப் போறீங்க. அந்தப் புள்ள வாழமுதலே ஆத்தாளும் மகளும் இம்மா சாபம் கொடுக்கீறீங்களே. அந்தாண்ட வூட்டுல துன்ன நன்றீக்கிதா இரண்டுபேத்துக்கும்.
உங்கண்ணன் உனக்கு எம்மா செஞ்சிருப்பாரு. அது வேணும் இது வேணும்னு போய்க் கேட்டுக் கேட்டு வாங்கும்போது எங்கண்ணே மகராசன்.. நல்லா இருக்கனும்னு சொன்ன வாய் நாரவாயாடி? நன்றி கெட்ட ஜென்மோங்க! இத்தனை வன்மம் ஆவாது ஒரு பொம்பளைக்கு” என திட்டியவர் மகளை பார்த்து,
“அல்லாத்துக்கும் காரணம் நீதேன். ஒழுங்கா இப்ப உன் புருஷன் வூட்டுக்கு கிளம்புறீயா இல்லையா? இத்தெல்லாம் உன் புருஷனுக்கு தெரிஞ்சா இன்னாகும்னு தெர்யும்ல? உன் வாழ்க்கையில நீயே மண்ணள்ளி போட்டுக்கினாத கிளம்பு” எனக் காட்டமாகக் கூற கண்ணைக் கசக்கினாள் சிந்து.
“இன்னாத்துக்குய்யா இப்போ எவ்வூட்டுக்கு வந்த புள்ளைய போவ சொல்ற நீயி. பெத்த பிள்ளை மேல உனக்கே ஆசாபாசம் இல்ல, இதுல அடுத்தவகளுக்கு எங்கிருந்து வரும்? போயா அந்தாண்ட.. என்புள்ள போறப்ப தான் போவா”
“இவ இப்படி கண்ண கசக்கி கசக்கி தான் நம்மூட்டுக்கு வர இருந்த மகராசி வேற வூட்டுக்குப் போறா. இதுனால நொந்துபோய் நிற்கப் போறது யாரு தெர்யுமா உம்மகன் தான்”
“இந்தாருய்யா இந்தக் கலியாணம் பத்தி அவனுக்கு மூச்சுவிடக் கூடாது ஆமா சொல்லிட்டேன். என் மவனுக்கு நான் ரிச்சு பொண்ணா பார்த்துக் கட்டிவைப்பேன். இப்போ என்மவன் போலீஸ் தெரியும்ல?”
“நான் இன்னாத்துக்கு அவன் கிட்ட சொல்லப் போறேன்? சொன்னா அவன் இன்னா செய்வானு எனக்குத் தெரியாது. அப்புறம் அந்தப்புள்ள தான் உங்களாண்ட மாட்டிக்கிட்டு நாயா பேயா அல்லல்படனும். அதுக்கு அந்த புள்ள அந்தாண்ட வூட்டுல அது ராணியா இருந்துட்டு போகட்டும்”
“எவளோ எக்கேடு கெட்டோ போவட்டும் ஆனா எவ்வூட்டுக்கு எந்தச் சிறுக்கியும் வரக் கூடாது. என் மகனுக்கு அழகு புள்ளைய பார்த்துக் கட்டிவைப்பேன்”
“அப்புடி நடந்தா எனக்கும் சந்தோஷந்தேன். என்மகன் வாழ்க்கை நல்லா இருந்தா சந்தோஷப்படுற முதல் ஆளும் நான்தேன். அதுக்கு நீ இன்னா பாடுபடனும் தெரியுமா? உன் மகன் லேசுல அந்தபுள்ளைய மறப்பானா?”
“அது அவள்க போட்ட சொக்குபொடில தான் என் மவேன் அவகிட்ட மயங்கிக் கிடந்தான். இனி அவளுக சங்காத்தமே வேணாம்னு அவனே வந்துருவான்”
“ச்சை நீ திருந்தவே மாட்ட.. எக்கேடு கெட்டும் போ” எனக் கோபமாக வீட்டை விட்டு வெளியேறிச் சென்றார்.
“ம்மா.. அப்பா ஏன்ம்மா இப்டீக்காரு? அவ அந்த மது என் வாழ்க்கைய நாசமாக்கீனவ.. ஆனா அவளுக்கு ஏத்துக்கினு என்னாண்ட கத்திகினு போறாரு..
அவ நான் வாழ வேண்டிய வாழ்க்கைய என்னாண்ட இருந்து பறிச்சவமா.. இப்போ இன்னாதான் என் புருஷன் என்னை நல்லா பார்த்துக்கினாலுமே அவ என்னாண்ட இருந்து புடுங்கினது மழைமானி என் முன்னாலக்கீது.. அது எம்மா வேதனையாக்கீது தெர்யுமா?”என அழ ஆரம்பித்தாள் சிந்து.
அவள் குணமே இது தான். தாய் தன் மீது வைத்திருக்கும் பாசத்தை தனக்கு சாதகமாக எவ்வாறெல்லாம் பயன்படுத்த முடியுமோ அவ்வாறெல்லாம் பயன்படுத்திக் கொள்ளும் சுயநலவாதி.
ஆனந்திக்கு மகனை விட மகளின் சந்தோஷமே முக்கியம். மகளுக்கு பிடிக்காதவளை தனக்கும் பிடிக்காது அது தன் அண்ணன் மகளாய் இருந்த போதிலும், தன் மகனின் உயிராய் அவள் இருந்த போதிலும். மகள் கண்ணை கசக்கி ஒன்றை கேட்டால் அது தவறாகவே இருந்தாலும் இல்லை என கூற வராது அவருக்கு அந்த அளவுக்கு மகள் மேல் குறுட்டுட்டனமான பாசம்.
அந்த பாசத்தை கொஞ்சமேனும் மகன் மேலும் வைத்திருக்கலாமோ! மகனையும் தான் தான் சுமந்து பெற்றோம் என்பதே ஆனந்திக்கு மறந்து விட்டது போலும். அவன் மனதைப் பற்றி சுத்தமாக கவலையின்றி அவன் உயிரையே வதைக்கும் காரியத்தை அநாயசமாக செய்து அவன் தலையில் சத்தமின்றி இடியை இறக்கிவைத்திருந்தார் ஆனந்தி.
முதலிலிருந்தே மனைவியையும், மகளையும் கண்டிக்க முடியாமல் விட்டுவிட்டு, இப்போது காலம் கடந்து சிந்திக்கிறார் இளங்கோ. தன்னுடைய இயலாமையால் தன் மகனுக்கு தானும் சேர்ந்து தீங்கிழைத்து விட்டோமோ என மனதுக்குள் நொந்தவாறு சென்றவரின் நினைப்பு முழுவதும் மகனிடத்திலும், கடைசியாக அவன் பேசிச் சென்ற வார்த்தையிலும் தான் ஓடியது.
“அப்பா உனக்கு மருமகனு ஒருத்தி இருந்தா அது அவதான். அவ இல்ல நான் இல்ல.. இந்த டிரைனிங் முடிச்சுட்டு, வேலைய கையில வாங்கிட்டு வந்து அவள பொண்ணு கேட்டுப் போவோம். தரமுடியாதுனு சொன்னா தூக்கிட்டு வந்துருவோம்”
என மகன் கூறிச்சென்றது மனதை தைத்தது. இந்தக் கல்யாணம் பத்தி மகனிடம் கூறாமல் இருக்க காரணம் அன்பழகனின் உடல்நிலையும், மதுவின் நல்வாழ்வும் தான் காரணம்.
தன் மனைவி என்றைக்குமே மதுவை நன்றாக வைத்துக் கொள்ளமாட்டாரெனத் தீர்க்கமாக நம்பினார் இளங்கோ. அதனால் தன் மகனிடம் இந்தக் கல்யாணத்தை பற்றி மூச்சு கூட விடவில்லை.
அங்கு அவர் மகனோ தனக்கு வந்த அந்தப் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். ஆத்திரம் அத்தனை பேர் மேலும் ஆத்திரம் தன் மாமா குடும்பம், தன் தகப்பன், தன் தோழன் என அத்தனை பேர் மேலும் ஆத்திரம்.
தான் ஊரிலிருந்து வரும்போது அவன் பெரிதும் மதிக்கும் இருவரான தன் அப்பாவிடமும், தன் மாமாவிடமும் அவன் கூறிவந்த வார்த்தைகள் தான் அவன் மனதிலும் திரும்ப திரும்ப ஓடியது.
தன் மாமனிடம் “நான் வேலைய வாங்கிட்டு திரும்ப வந்ததும் திருமணம் வைத்துக்கொள்ளலாம்” எனக் கூறிவிட்டு தான் வந்தான். தன் தகப்பனிடமும் தன் மனதை திறந்துவிட்டு தான் வந்தான். ஆனால் அத்தனை பேரும் சேர்ந்து நான் இல்லாத சமயம் பார்த்து அவளுக்கு வேறொருவனுடன் திருமணத்தை நடத்த முக்கிய காரணம் தன் தாயும், தங்கையும் என அறியாதவனும் இல்லை அவன். ஆனாலும் அவனுள் அத்தனை கோபம். இப்போது அவன் எதிரில் யார் வந்தாலும் சூரசம்ஹாரம் செய்து விடுவான்.
அதிலும் தன்னவள் மேல் அத்தனை கோபமும், வருத்தமும். அவள் மனத்திலும் தன்பால் உள்ள பிரியத்தை கண்கூடாக பார்த்திருக்கிறான். அவளைப் பற்றி முற்றும் முழுதாக அறிந்தவன் அதனால் அவள் மேலும் அளவுக்கு அதிகமான கோபம்.
கனவே நீ நான் விழிக்கவில்லை..
கலைவாய் என்றே நினைக்கவில்லை..
மறந்தாய் பிரிந்தாய் நியாயம் இல்லை..
தொலைந்தேன் தனியே யாருமில்லை..
நீ நிஜம்தானா..
இல்லை நிழல்தானா..
பதில் கேட்கிறேன் கிடைக்காதா..
நம் ஞாபகங்கள்..
அதை நினைத்திருப்பேன்..
எனைத் தேடியே திரும்பாதா.. ஆ.. ஆ..
காதல் நீ.. காயம் நீ.. நீ..
கானல் நீயே மறைந்தாயே..
வேஷம் நீ.. பொய்கள் நீயே..
மாற்றம் நீ.. நான் உடைந்தேனே..
“எப்படி டீ? எப்படி உன்னால இதுக்கு சம்மதிக்க முடிஞ்சது? இத்தனை நாளும் நமக்கிடையே இருந்த அன்பு, பாசம், நெருக்கம் எல்லாம் பொய்யா? அது காதல் இல்லையா? அப்போ நான் உன் மனசுல இல்லையா? என் காதலுக்கு மதிப்பே இல்லையா? நீ பிறந்ததிலிருந்து இந்தக் கைக்குள்ள பொத்தி பொத்தி வச்சேனே, நீயும் என் கைகுள்ளயே இருந்தீயே அப்போ அந்த உறவுக்குப் பேர் என்னடி?
உன் அண்ணன் கிட்டக்கூட நீ எல்லாத்தையும் சொல்லுவியானு எனக்குத் தெரியல ஆனா என்கிட்ட எதுவுமே மறச்சதில்லையேடி.. இப்போ இவ்ளோ பெரிய விஷயத்தை மறைக்கிற? நேத்து கூட உனக்குப் போன் போட்டேனே எடுத்துச் சொல்லிருக்க கூடாதா? அப்போ நீயும் இதுக்கு உடந்தை தானடி. எல்லாத்தையும் விட உன் அண்ணே அவன் மட்டும் என் கையில சிக்கினான் செத்தாண்டி”
என மனதுக்குள் தன்னவளையும், தன் தோழனுமான தன்னவளின் அண்ணனையும் சேர்த்து அர்ச்சித்தான். ஏனெனில் அவனிடமும் முற்றும் முழுதாக தங்களைப் பற்றி கூறிவிட்டு தான் வந்தான். அன்று இவனிடம் பச்சைக் கொடியைக் காட்டிவிட்டு இன்று கமுக்கமாக தன் தங்கைக்கு தன் மச்சினனை மாப்பிள்ளையாக்க நினைப்பவன் மேல் கொலைவெறியே வந்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
5
+1
+1
⬅ Prev Episode
சக்கரை தழுவிய நொடியல்லவா! – அத்தியாயம் 2
Next Episode ➡
சக்கரை தழுவிய நொடியல்லவா! – அத்தியாயம் 4
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நாங்களும் அந்த பொண்ணு இவங்க கிட்ட சிக்காம நல்லா இருக்கட்டும்னு தான் நினைக்கிறோம் … என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்
எல்லாமே நல்லா போய்ட்டா வாழ்க்கை சுவாரசியமா இருக்காதே! போராடி வெற்றி பெற்றா தான் சுகமே!
மிக்க நன்றி😍
சிந்து ஆனந்தி பேச்சு வழக்கு ஏன் வேறாக உள்ளது? 🤔
மகள் மேல் உள்ள பாசத்தில் மகனது வாழ்வை யோசிக்க மறுக்கிறார் ஆனந்தி. சாதாரண மாமியாரின் குணமே அதுதான் எனும்போது இங்கு ஏற்கனவே வாழ வந்த அண்ணியின் மீது பொறாமை கொண்டு முறுக்கி கொண்டு திரியும் இவர் எப்படி அவரது மகளையே மருமகளாக்க நினைப்பார். இது போதாது என்று அம்மாவிற்கு போட்டியாக அத்தை மகள் மீது பொறாமை குடோனாக இருக்கிறாள் மகள். அவள் வாழ வேண்டிய வாழ்வை தட்டிவிட்டாளா?
நாயகனது மனப்போராட்டம் மனதை கனக்க வைக்கின்றது.
விறுவிறுப்பாக கொண்டு செல்கிறீர்கள் எழுத்தாளரே. 👏🏼
சென்னையில் உள்ள வட்டார பேச்சு வழக்கு அவர்கள் அதிகம் பேசுவது.. அன்புகழன், பூபாலன் குடும்பம் தமிழை அழகாக பேச பழகினவர்கள்.
மிக்க நன்றி😍