
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 25
தினமும் மாலை ஆதவன் மதுவைப் பார்க்க வருவான். அவனிடமும் ஆனந்தி, சிந்து செய்வதை கூறவில்லை. இன்று அவன் வரும்வழியில் மதுவுக்கு பிடித்த சிக்கன் ரோல் கடையைப் பார்த்ததும் அவளுக்காக வாங்கிக்கொண்டு மதுவைப் பார்க்க வந்தான்.
அதை அவளிடம் கொடுக்க அவளுக்கு இருக்கும் பசியில் படாரென வாங்கி இரண்டு ரோலையும் நொடியில் சாப்பிட்டாள். அவள் சாப்பிடுவதை சந்தேகமாகப் பார்த்தான் ஆதவன். அவன் பார்வையை கண்டுகொண்டவளோ தலை கவிழ்ந்து கொண்டாள்.
“மது! சாப்பிடலயா நீ?”
“சாப்பிட்டு தானடா இருக்கேன்”
“மதியம் சாப்பிட்டயானு கேட்டேன்”
“ம்ம் சாப்பிட்டேனே”
“பொய் சொல்லாத.. நீ இப்படி சாப்பிடுற ஆள் இல்லையே! பஞ்சத்துல அடிபட்ட மாதிரி சாப்பிடுற”
“அப்படியேல்லாம் இல்ல. சிக்கன்ரோல் சாப்பிட்டே ரொம்ப நாள் ஆச்சுல அதான் வேரொன்னும் இல்ல”
“நம்புற மாதிரி இல்லையே! சரி இளங்கோ பெரியப்பாக்கிட்ட கேட்டுக்கிறேன் என்ன விஷயம்னு.. எதாவது பிரச்சனையா மட்டும் இருக்கட்டும் உன் புருஷர் கிட்ட போதும்பா சாமி நீ டிரைனிங் பண்ணது உன் பொண்டாட்டிய இங்க கொன்னுடுவாங்க போல, நீ வந்து உன் பொண்டாட்டிய பார்த்துக்கோனு சொல்லிடுறேன்”
“ஏய்! ஏய்! அவரே இப்போ தான் திரும்ப நல்லா பேசினார்.. நீ எதையாவது உலறிவைக்காத”
“அப்போ நீயே சொல்லு. இன்னைக்கு என்ன சாப்பிட்ட?”
“இன்னைக்கு சாதம், முள்ளங்கி சாம்பார், பாவக்காய் பொறியல்”
“நீ சமைச்சத கேட்கல.. சாப்பிட்டத கேட்டேன்”
“அதான் சாப்பிட்டேன்”
“என்னை டென்சன் ஆக்காத.. இடியே விழுந்தாலும் நீ பாகற்காயும், முள்ளங்கியும் சாப்பிட மாட்டனு எனக்குத் தெரியும்” எனக்கூற, தலைகவிழ்ந்தவள். அவளுக்குப் பிடிக்காது என்று தெரிந்து தான அவர்கள் இதைச் சமைக்க சொன்னது. கண்களில் கண்ணீர். கண்ணீருடன் இங்கு நடப்பதை அப்படியே ஒப்பித்துவிட்டாள் அவனிடம்.
அவனுக்கோ அத்தனை ஆத்திரம், இப்போ அவன் கையில் ஆனந்தியும், சிந்துவும் கிடைத்திருந்தால் மண்டையை உடைத்திருப்பான். ஆனால் அவர்கள் நல்ல நேரம் இருவரும் சிந்துக்கு மருத்துவம் பார்க்க மருத்துவமனை சென்றிருந்தனர்.
“ஆது இத யார் கிட்டயும் சொல்லாத எல்லாரும் வருத்தப்படுவாங்க. சித்தத்துக்கிட்டயும் சொல்லாத அவரே இப்போ தான் நல்லா பேசினார். எனக்கு அவரோட இருக்க இந்தச் சந்தோஷத்த இப்போ இழக்க விரும்பம் இல்ல பிளீஸ்” எனக் கெஞ்சினாள்
“சொல்லாதயா? இது என்ன சின்ன விஷயமா சொல்லாம இருக்க. உனக்கு சுகர் இருக்குடி தினமும் நீ இப்படி பட்டினி கிடந்தா உடம்பு ஒன்னுமில்லாம போய்டும். உன்கிட்ட என்ன பேச்சு நான் உன் புருஷர் கிட்ட பேசிக்கிறேன்” எனச் சித்தார்த்துக்கு அழைக்கபோக, அவன் போனைப் பிடிங்கி வைத்துக்கொண்டு,
“சித்தத்து கிட்ட சொல்ல மாட்டேனு என் மேல சத்தியம் பண்ணு. இல்லனா என்ன பண்ணுவேனு தெரியாது. சத்தியம் பண்ணு” என மிரட்டி அவன் வாயை அடைத்துவிட்டாள் மது.
“உன் அத்தை மண்டைய உடைக்கிற அளவுக்கு ஆத்திரமா வருது. அந்தம்மா பண்றதுக்கு எல்லாம் ஏன் எல்லாரும் இப்படி பயப்படுறீங்க..”
“மாமாக்காகடா.. அவர் என்னை நல்லா பார்த்துக்கிறார்டா. காலையிலயும், நைட்டும் எனக்காக எனக்கு ஏத்த மாதிரி சாப்பாடு தான் அவரும் சாப்பிடுறாரு. என்னோட சேர்ந்து தான் சாப்பிடுறாரு. எனக்கு என்ன வேணும்னு கேட்டுக் கேட்டுச் செய்றார். தினமும் எனக்கு என்ன வேணும்னு கேட்டுட்டு போய் நைட் வரும்போது அத வாங்கிட்டு தான் வரார். அவருக்காகவாது அத்தையை கொஞ்சம் சகிச்சுக்கலாம் தப்பில்ல”
“என்னவோ போ. அப்போ நாலு நாளா மதிய சாப்பாடு சாப்பிடாம இருந்திருக்க”
“பால் குடிச்சேண்டா”
“வாய்ல நல்லா வருது. நான் கிளம்புறேன் இங்க இருந்தா கோபம் கோபமா தான் வருது” எனக்கூறி கிளம்பிவிட்டான்.
அவன் கிளம்பியதும் மீண்டும் சித்தார்த்திடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. பேசினார்கள் பேசினார்கள் பேசிக் கொண்டே இருந்தார்கள். சில நேரம் காதலாக, சில நேரம் ஏக்கமாக, சில நேரம் கெஞ்சலாக, சில நேரம் கொஞ்சலாக. ஆனால் பேச்சு மட்டும் முடிவதில்லை.
சங்கீத சுவரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்..
என் வீட்டில் இரவு.. அங்கே இரவா? இல்ல பகலா? எனக்கும் மயக்கம்..
மறுநாள் மதியம் சரியாக மதிய உணவு வேலையில் வந்தான் ஆதவன் கையில் சாப்பாட்டுடன். டேபிளில் அமர்ந்து சிந்துவும், ஆனந்தியும் சாப்பிட்டுக் கொண்டுருந்தனர். அவர்களை முறைத்துக்கொண்டே வந்தான்.
ஆனந்தி “இன்னாடி தினத்திக்கும் சாயந்தரம் தான கூத்தடிப்பானுங்க இப்போ மதியமே கூத்தடிக்க வந்துட்டான் வெட்கங்கெட்டபய” எனக்கூற, அறையிலிருந்து மது வந்துவிட்டாள்.
“என்ன ஆது? இந்நேரத்துல”
“நீ பொங்கி வைக்கிறதெல்லாம் சில பேயும், பிசாசும் திண்டுட்டு போயிடுதுங்கல. அதான் நான் சாப்பாடு வாங்கிட்டு வந்தேன்”
“அடேய் ஆரபார்த்து பேய்ங்கின? நாக்க இழுத்துவைச்சு அறுத்துடுவேன். உன்னை வூட்டுக்குள்ள விட்டதுக்கு என்ன பேய்னுவ” என ஆனந்தி கத்த,
“அதானா எங்கள எப்படி நீ பேசலாம்?” எனச் சிந்துவும் சண்டைக்கு வந்தாள்.
“இளங்கோ பெரியப்பாக்கிட்ட நீங்கப் பண்றத சொல்லட்டா?” எனக்கேட்க, இருவரும் கொஞ்சம் பம்ப,
“நீ உள்ள வா ஆது.. சண்டை வளர்க்காத” என ஆதவனை இழுத்துச் சென்றாள் மது.
“எதுக்கு இந்நேரம் வந்து அவங்க கிட்ட நீ சண்டை பண்ணிட்டு இருக்க ஆது?”
“அப்புறம் டெய்லி மதியம் உன்னைப் பட்டினி போட்டா.. கொஞ்சுவாங்களா? நான் இன்னும் சண்டை போடவே இல்ல அதுக்குள்ள உள்ள இழுத்துட்டு வந்துட்ட நீ”
“இதுக்கு தான் உன்கிட்ட ஒன்னும் சொல்றது இல்ல. நீ சண்டை வளர்க்காம கிளம்பு”
“இந்தா சாப்பாடு இருக்கு. பிரியாணி நம்ம கடையில இருந்து தான் எடுத்துட்டு வந்தேன் சாப்பிடு” என அவன் கடையிலிருந்து மதிய சாப்பாடு கொண்டு வந்து குடுத்தான்.
“எதுக்கு டா இது? இன்னைக்கு சாப்பாடு போட்டு உள்ள கொண்டு வந்துட்டேன். இதோ பாரு” என மூடியிருந்த சாப்பாடு தட்டைக் காட்ட அதில் ஒரு செத்த கரப்பான் பூச்சி கிடந்தது. இருவருக்கும் அதிர்ச்சி.
“இது.. எப்படி? மூடித் தான வச்சிருக்கேன்”
“எல்லாம் அந்த இரண்டு பேரு வேலையா தான் இருக்கும். அதுங்கள” எனக் கிளம்பியவனின் கையைப் பிடித்து இழுத்து,
“ச்ச.. போய்ட்டு போதுங்க விடு. இன்னும் ஒரு இருபது நாள் தான் அப்புறம் சித்தத்து வந்துருவாரு. இப்போ பிரச்சனை பண்ணாத” எனக்கூற கடுப்புடன்,
“இந்தா இத சாப்பிடு. தினமும் நானே கொண்டு வாரேன். அவங்க சாப்பாடு எடுக்காத” எனக்கூறினான்.
“ம்ம்ம்”
“சரி சாப்பிடு. நான் கிளம்புறேன்” என அவன் வீட்டுக்குக் கிளம்பிவிட்டான் ஆதவன்.
செல்லும் அவனின் மனம் முழுவதும் ‘எப்படி இவர்கள் இவ்வளவு கீழ்த்தரமாக இருக்கின்றனர். இந்தக் கஷ்டம் எல்லாம் வரக்கூடாதுனு தான வீட்டில எல்லாரும் நினைச்சாங்க.. என்னால தான் இப்போ மது கஷ்டப்படுறாளா? அப்படியாயிருந்தா நான் அமைச்சுக் கொடுத்த இந்த வாழ்க்கையில அவளுக்குப் பக்க பலமா எப்பவும் நின்னு அவள வாழவைப்பேன்’ என நினைத்துக் கொண்டே சென்றான்.
சித்தார்த் வீட்டிக்கு ஆதவன் கையில் உணவு பொட்டலங்களுடன் செல்வதையும், அதைக் கொடுத்து விட்டு வெளியேறி வருவதையும் பார்த்தார் ஈகைச்செல்வி. அவளருகில் வந்த ஆதவனை நிறுத்தினார். திருமணத்திற்கு பிறகு ஈகையையும், அன்பையும் பார்க்காமலே சுத்திக் கொண்டிருந்தான் ஆதவன். அவர்களை நேருக்கு நேர் பார்க்கும் தைரியம் இல்லை அவனுக்கு. இன்று அத்தையிடம் வசமாகச் சிக்கிக் கொண்டான்.
“என்ன மருமகனே! கண்ணுலயே படாம ஒளிஞ்சு மறைஞ்சு திரியுறிங்க போல” எனக்கேட்க, ஏற்கனவே குற்ற உணர்வில் வந்து கொண்டிருந்தவனுக்கு மனதில் பாரமேறிய உணர்வு.
“சாரி அத்தை” என்றான் பாவமாக.
“ஏண்டா? சண்டை, சச்சரவு எதுவும் இருக்கக் கூடாதுனு தானடா நாங்க இந்த ஏற்பாட பண்ணினோம். கோவில்ல எங்க கூட மதும்மா பேசிட்டானு கோபத்துல சித்து அவளை விட்டுட்டே போய்ட்டான்டா. எங்க பிள்ளைய கண்ணால கூடப் பார்க்க முடியாம போச்சே எங்க நிலைமை” எனத் தெருவென்று கூடப் பாராமல் அழுதார் ஈகை.
பைக்கிலிருந்து இறங்கியவன் அவரைத் தோளோடு அணைத்துக் கொண்டு, “சாரி அத்தை! கொஞ்ச நாள் தான் எல்லாம் சரியாகிடும். ஆரம்பிச்சு வச்ச நானே இத முடிச்சும் வைக்கிறேன். கல்யாணம் பண்ணி உங்க கிட்டு பிரிச்ச உங்க பொண்ணையும், மாப்பிள்ளையையும் திரும்பி உங்க கூடச் சேர்த்துவச்சிட்டு, நான் காவி கட்டிக்கிட்டு சன்னியாசம் போகப் போறேன்” என ஆறுதலாக ஆரம்பித்துக் கடைசியில் கைகளை மேல் நோக்கிக் கும்பிடு போட்டுக் குறும்பாகப் பேசி ஈகையை சிரிக்க வைத்து விட்டான் ஆதவன்.
“சன்னியாசம் போறானாம் சன்னியாசம். பேச்ச பாரு” என அவன் முதுகில் செல்லமாக அடித்துச் சிரித்தார் ஈகை.
“ஹான் இப்படி சிரிச்சுட்டே இருங்க என் செல்ல அத்தை” என அவரின் கன்னம் கிள்ளி கொஞ்சினான்.
“அது சரி இப்போ என்ன சாப்பாடோட மது வீட்டுக்குப் போய்ட்டு வர?” எனக்கேட்க, ஏற்கனவே வேதனையில் இருப்பவரிடம் இதைக்கூறினால் இன்னமும் வேதனை அதிகரிக்கும் என நினைத்தவன்,
“அந்த வீட்டுல சமைக்குற சாப்பாடு டேஸ்ட் மேடம்க்கு பிடிக்கலயாம். அத சாப்பிட மாட்டாங்களாம் அம்மணி. அதுனால தினமும் மதியம் எனக்குக் கால் பண்ணி பிரியாணி வேணும்னு ஆர்டர் பண்றா. அதான் நானே டெலிவரிபாயா மாறி டெலிவர் பண்ணிட்டு வாரேன்.
அவளுக்கு இருக்குற குசும்ப பார்த்தீங்களா அத்தை.. சாப்பாடுக்கு மட்டும் காசு தான் தருவேன், டெலிவரி காசு, டிப்ஸ் எல்லாம் தர முடியாது, என் புருஷன் காச இப்படி எல்லாம் செலவு பண்ண முடியாதுனு நக்கல் வேற பண்றா உங்க பொண்ணு.
நான் தான் சாப்பாடுக்கு கூடக் காசு வேணாம் தாயே! உன் புருஷர் காச நீயே வச்சுக்கோனுட்டு வாரேன்” எனக் கற்பனையாக ஏதோ கதையைக் கூறி அவரிடமிருந்து மறைத்தான்.
“தினமும் வெளியே ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா அவளுக்கு உடம்புக்கு ஒத்துக்காதேடா..” என மகளின் நலனில் அக்கறையோடு அவர் கூறவும் தான் அவனுக்கு அந்த விஷயமே ஞாபகத்தில வந்தது. ‘இன்னைக்கு ஒரு நாள் என்றால் பரவாயில்லை ஆனா தினமும் அவளுக்குக் கடை சாப்பாடு கொடுக்க முடியாதே’ என யோசித்தவன்,
“அது சரி அத்தை. என் கடையில இருக்குறத தான நான் குடுக்க முடியும். உங்க சமையலை சாப்பிட்டு சாப்பிட்டு உங்க மகளுக்கு நாக்கு தடிச்சு போச்சு.. ஆனந்தி பெரியம்மா சமையல் அம்மணிக்கு பிடிக்கலயாம் அதான் கடையில ஆடர் போடுறாங்க” எனக்கூறி அவர் முகத்தையே பார்த்தான். அதில் பல எண்ணங்கள் ஓடியது.
“ஆது! இனி ஆடர் போட்டா என்கிட்ட சொல்லு நான் சமைச்சு தாரேன்.. நீ உன் கடையில இருந்து குடுக்குற மாதிரி குடு” எனக்கூற மனதில் குத்தாட்டம் ஆடினான். அவனும் இது அவர் வாயால் வரவேண்டுமெனத் தான இப்படி நடித்தான்.
“அதெப்படி எங்க ஆடர்ர நாங்க விடுறது. அதெல்லாம் முடியாது முடியாது. காம்படீஷன் ஜாஸ்தி ஆகுது இந்த க்ளவுட் கிட்சன் வந்தாலும் வந்துச்சு ஓவர் காம்படீஷன் பா. எல்லாரும் வீட்டு சாப்பாடு வாங்கி சாப்பிடுறாங்க அப்போ நாங்க தலையில துண்ட போடவா?”
“டேய் ஒழுங்கா நான் குடுக்குற கொண்டு போய்க் குடுக்குற.. இல்ல நானே ஒரு க்ளவுட் கிட்சன் ஆரம்பிச்சிடுவேன்” எனக்கூற,
“வேண்டாம் அத்தை.. தினமும் நீங்களே பேக் பண்ணி வைங்க. நான் வந்து வாங்கிட்டு போய் உங்க மகளுக்கு டெலிவர் பண்றேன். போதுமா?” எனக்கூற அதிலிருக்கும் உள்ளர்த்தம் ஈகைக்கு புரியவில்லை. மகளுக்குத் தன் கையால் ஒருவேலை சமைத்து கொடுப்பதே பெரும் பாக்கியம் என நினைத்துச் சந்தோஷமாகத் தலையசைத்து சென்றார். அவனும் சற்று மனநிம்மதியுடன் சென்றான் வீட்டுக்கு.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
12
+1
1
+1
⬅ Prev Episode
சக்கரை தழுவிய நொடியல்லவா! – அத்தியாயம் 24
Next Episode ➡
சக்கரை தழுவிய நொடியல்லவா! – அத்தியாயம் 26
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அவளுக்கு பிடிக்காது என்று தெரிந்து அதனை அவளையே சமைக்க செய்து அவளை சாப்பிட விடமால் செய்கின்றனர். எடுத்து வைத்த சாப்பாட்டிலும் உப்பை கொட்டி செல்கின்றனர்.
ஆதவ் கவனிக்கவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும். இதில் அவனிடம் சித்தார்த்திடம் சொல்லக்கூடாது என்று சத்தியம் வேறு வாங்கி கொண்டாள்.
அவள் கஷ்டப்படக்கூடாது என எண்ணியே திருமண ஏற்பாடு செய்தனர்.
தான் தாலி எடுத்து கொடுத்து தன்னால் நடத்திவைக்கப்பட்ட திருமணம் இதில் அவளுக்கு வரும் இன்னல்களை துணை நின்று களைய வேண்டும் என்று எண்ணுகிறான்.
இயல்பாய் பேசி அவரை சிரிக்க வைத்து தினமும் சாப்பாடு எடுத்து செல்லவும் வழி செய்துவிட்டான்.
மிக்க நன்றி😍
ஆது நீ ரொம்ப நல்லவன் பா .. அவனுக்கும் ஒரு ஜோடி போடலாம் .. மதுவுக்கு நல்லது பண்ணனும்னு நினைக்கிறான் .. ஆனா அது சித்துக்கு தெரிஞ்சா வினையாகிடுமே ..
மிக்க நன்றி😍😍