Loading

சக்கரை தழுவிய நொடியல்லவா! 

அத்தியாயம் 13

ஆனந்தியோ காலையில் பட்டு வேட்டி அணிந்து இவன் கல்யாணத்து செல்ல, வீட்டில் ஒரு இரணகலத்தையே உண்டாக்கி விட்டவர், இளங்கோவை அனுப்பியதே அவனை இழுத்துக்கொண்டு வரத்தான்.

எங்கே மகன் அண்ணன் மகளை அதுவும் சீக்குகாரியை கல்யாணம் செய்து மாலையும், கழுத்துமாக வந்துவிடுவானோ என்ற பயம் தான் அவருக்கு. கல்யாணத்துக்கு போன புருஷனையும், புள்ளையையும் காணாமல் இங்குப் புலம்பிக் கொண்டிருக்க, வாயிலில் மகன் மட்டும் வந்து நிற்கவும் தான் அவருக்கு உயிரே வந்தது. பாவம் அதற்கு ஆயுள் குறைவு எனத் தெரியவில்லை.

“நீ இன்னாத்துக்கு சித்தார்த்து அந்தாண்ட எல்லாம் போற? அம்மாக்கு டர்ராயிடுச்சு தெரியுமா? வா.. வா.. வந்து உட்காரு” என அவனை அழைக்க, அவன் மனதிலோ ‘எது நடக்கக்கூடாதுனு நீ நினைச்சயோ அத நடத்திக்காட்டிட்டேன் நான். இனி என்ன பண்ண போறனு பார்க்கிறேன்’

என நினைத்து அவரை ஒரு முறை நன்றாகப் பார்த்து, நக்கல் சிரிப்பு ஒன்றை சிந்திவிட்டு அவனது அறைக்குள் நுழைந்து கொண்டான். இதுவரை சிந்துவின் அறையாக இருந்த அறையை இந்த இரு நாட்களில் அவனறையாக மாற்றியிருந்தான்.

மண்டபத்திலிந்து அவன் பின்னாடியே லொங்கு லொங்குனு ஓடி வந்த இளங்கோ அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தார்.

“எங்கடி அவன?”

“இன்னாயா அவன இஸ்துக்குனு வானு உன்னைய அனுப்பினா.. அவன அனுப்பிவிட்டுட்டு நீ அந்தாண்ட உறவு கொண்டாடிட்டு வந்தீயோ?” எனக் கேட்க,

“அவன் இன்னா செஞ்சானு தெரியுமா?”

“இன்னா செஞ்சிருப்பான்? கண்ணாலத்த பார்த்துட்டு கைய நினைக்காம வந்துட்டான் அதான? சோத்துக்கு இல்லாம நீ போய் அங்க கைய நனை.. எம்புள்ள என்னை மாதிரியே ரோசக்காரன்”

“ஆமாம் ரோசக்காரன்ந்தேன். அதான் அந்தப் புள்ளை கழுத்துல தாலிய கட்டிபோட்டு இந்தாண்ட வந்து குந்திக்கினான்”

“யாத்தீ! இன்னாயா சொல்ற? தாலி கட்டிட்டானா?”

“ஆமா”

“தெரியும்யா இப்படி என்னமானது நடக்கும்னு அதான் நானும் வரேனு மல்லுக்கட்டினேன். நல்லா ஏமாத்தீட்டிலயா நீ.. நம்பவச்சி ஏமாத்திட்டல” என அவர் சட்டையை பிடித்துக்கத்த,

“நான் இன்னாடி பண்ணேன்? உன் புள்ள பண்ணதுக்கு என்னாண்ட சட்டைக்கட்டினீருக்க?” என தள்ளிவிட, தடுமாறி தரையில் அமர்ந்து,

“படுபாவி பய என் நெஞ்சில தீயள்ளி போட்டுட்டானே.. அந்தச் சிறுக்கி என் வூட்டுக்கு வரக்கூடாதுனு நான் எம்புட்டு பாடுபட்டேன்? அம்புட்டையும் ஒன்னுமில்லாம ஆக்கிட்டானே.. அவன் வாழ்க்கைய அவனே நாசமாக்கிக்கினானே” எனக் கோபத்தில் தலையிலும், மாரிலும் அடித்துக்கொண்டு கத்த, வீட்டு வாயிலில் அன்பழகன் மொத்த குடும்பத்துடன் மகளையும் அழைத்துக் கொண்டு வந்து நின்றார்.

தன் வீட்டு வாயிலில் வந்து நின்ற ஆட்களைப் பார்த்த ஆனந்திக்கோ ஆத்திரம் தலைக்கேற,

“ஆரும் என் வூட்டு வாசப்படி மிதிக்கக் கூடாது. ஒட்டும்மில்ல ஒரவுமில்லனு அத்துவிட்டுக்கின்னேனே, அப்புறம் என்னாத்தீக்கு என் முறைவாசலுக்கு வெட்கமில்லாம வந்து நிக்கிறீங்க?”

இளங்கோ “இந்தா பாருடீ வாய மூடல இப்ப.. நான் உன் வாய உடச்சேபுடுவேன். பொம்பளயா நீ பஜாரியாட்ட நின்னு கத்தீனுக்கீற? அவங்களுக்கு ஒன்னியும் உன்கிட்ட வந்து நிக்கனும்னு அவசியமில்ல, ஆனா உன் புள்ள பண்ணிவச்ச வேலைக்குத் தான் இந்தாண்ட வந்து நிக்கிறாங்க”

“அவனே அம்போனு வுட்டுபோட்டு வந்துட்டியானே.. பின்ன இன்னாத்துக்கு இப்படி வந்து நிக்கனும்றேன்? போகச் சொல்லுயா அந்தாண்ட. வூட்டுக்குள்ள ஆரும் கால வச்சா மரியாதை கெட்டுப்போவும்” எனப் பஜாரியாட்ட கத்தினார். அம்மாவும், புள்ளையும் செய்கிற செயலில் என்ன செய்வதெனத் தெரியாமல் முழித்த இளங்கோ,

“அன்பு! நிலைமை சரியில்லாமகீது. நீங்க வீட்டுக்குப் போங்க. அப்புறம் பொறுமையா பேசி, மகனை விட்டு மருமகள கூட்டிட்டு வந்துருக்கீறேன்” எனக்கூறவும், என்ன செய்வது எனத் தவித்தவர்களும் வேறுவழியின்றி வீடு திரும்ப எண்ணும்போது,

“அப்பா! நீங்க எல்லாரும் வீட்டுக்குப் போங்க. நான் இங்கயே இருந்துக்கிறேன்” என்றாள் மது.

அன்பு “மதும்மா! எப்படிடா இப்படியே விட்டுட்டு போகச் சொல்ற? அது சரி வராதும்மா..”

“சித்தத்து ஏற்கனவே கோபமா இருக்காங்க. ஆனாலும் என்னை விட்டுக்கொடுக்க முடியாம தான் இப்படி பண்ணினாங்க. இப்பவும் நான் அங்க வந்தா சரியா இருக்காதுப்பா. நான் இங்க இருக்குறது தான் நல்லதுப்பா”

“இல்ல அப்புறம் பொறுமையா பேசிட்டு வரலாம்மா” என அனைவரும் எவ்வளவோ சொல்ல, மது மட்டும் அசைந்தாளில்லை.

“நான் பார்த்துக்கிறேன். நீங்கக் கிளம்புங்க. அதான் மாமா, சித்தத்து எல்லாம் இருக்காங்களே! நான் பார்த்துகிறேன்ப்பா” என மது கூறவும் அனைவரும் வருத்தத்துடனும், கண்ணீருடனும் கிளம்பினர்.

அனைவரையும் அனுப்பிவிட்டு  வாசலுக்கு வர, மீண்டும் கத்தினார் ஆனந்தி.

“நில்லுடி! என் வூட்டுக்குள்ள யாரும் வரக் கூடாது”

“இந்த வீட்டை நீங்க உழைச்சு, சொந்தமா வாங்கினதா எனக்கு ஞாபகமில்லையேத்த. எப்போ வாங்கீனீங்க?” என்றாள் நக்கலாக.

“ஏய்! இன்னாடி திமிரா? இது என் புருஷன் வூடு”

“அப்போ இது எனக்கும் புருஷன் வீடு தான். உங்களுக்கு இங்க இருக்க ரைட்ஸ் இருக்குற மாதிரி எனக்கும் இருக்கு” எனக் கழுத்தில் உள்ள தாலியை கையில் பிடித்துக்கொண்டு இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் ஆட்டிக் கொண்டே கூறினாள்.

இளங்கோ “சபாஷ் சரியான பதில்” எனக்கூறியவர் ‘என் மருமகளுக்கு ஆரத்தி எடுக்கக் கூட ஆளில்லையே’ என நினைத்து, தானே ஆரத்தி கரைத்து எடுத்து வந்தார்.

ஆனந்தியை எடுக்கச் சொல்ல அவருக்கு என்னா கிறுக்கா பிடிச்சிருக்கு? ஆதலால் வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கும் அக்கம் பக்கத்தினரை அழைக்க, அவர்களோ ஆனந்தியின் வாய்க்குப் பயந்து ஒதுங்க, அதில் ஒருத்தி தானே முன்வந்து,

“கொண்டாங்க சித்தப்பா. என் கொலுந்தியாளுக்கு நானே எடுக்குறேன்” என இளங்கோவின் தூரத்து அண்ணன் மகள் ஆரத்தியை எடுத்தாள்.

இளங்கோ “மதும்மா! சோத்தாங்காலை எடுத்து வைச்சு உள்ள வாம்மா” எனக் கூற, “இந்தாருய்யா” என ஆனந்தி ஆரம்பிக்கும் போதே,

“இனிமேல் அந்த வீட்டுக்குப் போகமாட்டானா.. இனிமேல் அந்த வீட்டோட உறவு கொண்டாட மாட்டானா.. உள்ள வரச்சொல்லுங்கப்பா. இல்ல இப்படியே அங்கயே போகட்டும் நிரந்தரமா..” எனக் கர்ஜிக்கும் குரலில் சித்தார்த் கூற,

அந்நேரம் வரை தைரியமாக இருந்த மதுவுக்குள் பூகம்பம் தான். பிறந்த வீட்டு உறவைவிடச் சொன்னால் எந்தப் பெண்ணுக்குத் தான் மனது வரும். ஒட்டு மொத்தமாக அத்தனை பேரையும் உதறிவிட்டு, வரசொல்லும் தன் கணவனை நினைத்துக் கோபம் ஒருபுறம் வந்தாலும், அவனது கோபத்திலும் நியாயம் இருப்பதால், இது தங்களுக்கான தண்டனையென நினைத்து, முழுமனதுடன் சித்தார்த்தின் மனைவியாக மட்டும் அந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்து உள்ளே வந்தாள் மது.

உள்ளே வந்தவளை கண்டுகொள்ளாமல் மீண்டும் தன்னறையில் சென்று கதவடைத்துக் கொண்டான் சித்தார்த். ஆனந்தி ஒரு அறையில் சென்று கதவடைத்துக் கொண்டாள். இளங்கோ தான் மருமகளை வீட்டின் கூடத்தில் அமரவைத்தவர், தன் சொந்தத்தில் உள்ள மூத்த பெண்மணியை அழைக்கச் சென்றார், அடுத்தடுத்த சம்பிரதாயங்களைச் செய்வதற்காக. அதற்குள் விஷயம் தெரிந்து அரக்க பரக்க ஓடிவந்தாள் சிந்து.

“எம்மா! எம்மா!” எனக் கூடத்தில் அமர்ந்திருந்த மதுவை கண்டுகொள்ளாமல் அறையிலிருந்த ஆனந்தியிடம் வந்தாள் சிந்து.

“வா சிந்து. இங்க நடக்குற கொடுமைய பார்த்தீயா? இந்தப் பையன் இப்படி பண்ணிப்புட்டானே! என் நினைப்புல மண்ணள்ளி போட்டுட்டானே! அந்தச் சீக்குகாரியும் சட்டமா உள்ள வந்து குந்தீக்குனு வியாக்கானம் பேசுறா.. கட்டுன புருஷன் என்ன மதிச்சால பெத்த புள்ளை என்ன மதிக்கும்” எனக் கத்தி கூப்பாடு போட்டார்.

“நான் அம்மாந்தூரம் சொல்லிட்டு போனேன்ல. பால்ல தூக்க மாத்திரய கலந்து குடு. அவன் தூங்கிடுவான் கல்யாணம் முடிஞ்சிடும்னு. இன்னத்தம்மா பண்ணிக்கின நீ?” எனப் பல்லைக் கடித்தபடி மெல்லமாகக் கேட்க,

“நேத்து ராத்திரியே குடுத்துட்டேன் டீ. அப்புறமும் எப்படி முழுச்சிக்கினானு தெரியல. நீ இரண்ட தான கலக்க சொன்ன நான் மூணு கலக்கினேண்டீ. நல்லா தூங்கட்டும்னு. ஆனா எப்படி இப்படி நடந்துச்சுனு தெரியல” என்றார் முனுமுனுப்பாக.

“குடிச்சானா? அவன் குடிச்சத நீ பார்த்தீயா?”

“குடுத்தேன். சரி குடிக்கிறேன் சூடா இருக்குனு சொன்னான். அதேட வந்துட்டேன். கொஞ்ச நேரம் செண்டு போய்ப் பார்த்தேன் காலிடம்ளரு தான் இருந்துச்சு. குடிச்சானு நினைச்சு அசால்டா இருந்து போட்டேன்”

“அப்போ அவன் குடிச்சிருக்க மாட்டான். நீ எதோ சொதப்பிருப்ப, அவனுக்குச் சந்தேகம் வந்திருக்கும், கீழ ஊத்திருப்பான்” எனக்கூற முழித்தார் ஆனந்தி.

உண்மையிலுமே சிந்து சொன்னது தான் நடந்தது. ஆனந்தி பாலில் ஏதோ கலக்குவதை சித்தார்த் பார்த்துவிட்டான். அதில் சந்தேகம் வர, குடிக்கிறேன் எனக்கூறி பாலை வாங்கி வைத்தவன், அதைக் கீழே ஊற்றிவிட்டான். அதனால் தான் அம்மாவும், மகளும் போட்ட அத்தனை சதிதிட்டமும் தகடுபிடியானது.

இங்கு இளங்கோ தன் அண்ணி முறையில் உள்ள பெண்மணியை அழைத்துவந்தார். அவர் வந்து தான் மதுவை வீட்டில் உள்ள பூஜைஅறையில் விளக்கேற்றச் செய்து அதன்பின் செய்ய வேண்டிய அத்தனை சம்பிரதாயங்களையும் செய்தார். பால், பழம் மட்டும் கொடுக்கவில்லை அம்மாவும், மகனும் தான் அவரவர் அறையின் கதவுகளை அடைத்துக் கொண்டு வெளிவரவில்லையே!

மாலை மங்கி இரவும் விட்டது. யாரும் யாருடனும் பேசவில்லை. மதியம் ஊசியும் போடவில்லை சாப்பிடவும் இல்லை அதுவே மயக்கமாக இருந்தது. இரவிலாவது இன்சுலின் ஊசி போட வேண்டுமே, பின் சாப்பிட்டு மாத்திரைகளை எடுக்க வேண்டுமே! ஆனால் எதுவுமே இப்போதைக்கு இங்கு இல்லை. அனைத்தும் அங்கே அவள் வீட்டில் தான் இருந்தது.

“மாமா” என இளங்கோவை அழைத்தாள் மது.

“என்னம்மா?”

“வீட்டுல என் மாத்திரை, ஊசி, என் மொபைல், மாத்துறதுக்கு டிரெஸ் எல்லாம் எடுத்துட்டு வரனும்”

“சரிம்மா. நான் போய் வாங்கீனு வாரேன்” எனக்கூறி இளங்கோ சென்று வாங்கி வந்தார். இப்போதைக்கு இரவுக்கும், காலையில் மாத்துவதற்கு மட்டுமே அவசரத்துக்கு கொடுத்துவிட்டனர். வரும் வழியில் வீட்டில் உள்ள அனைவருக்கும் கடையில் உணவையும் வாங்கிக் கொண்டுவந்தார்.

அதன் பின் தான் உடையைக் கூடத்திலிருந்த குளிக்கும் அறையில் மாற்றி, ஊசியைப் போட்டாள். அரை மணி நேரத்தில் சாப்பிட வேண்டும். கல்யாணம் ஆனதிலிருந்து அவனும் சாப்பிடவில்லை, அவன் இல்லாமல் சாப்பிட அவளுக்கு விருப்பமுமில்லை. அதனால் அவனறை வாயிலுக்குத் துணிந்து சென்றாள்.

“சித்தத்து” எனக் கதவைத்தட்ட, எதோ ஒரு பொருள் பறந்து வந்து, கதவில் மோதிக் கீழே விழுந்த சத்தம் கதவுக்கு வெளியில் நிற்கும் அவளுக்குத் தெள்ளத் தெளிவாகக் கேட்க, அவனை அழைக்கும் முறையை மாற்றி “என்னங்க” என்றாள். கதவு திறந்த பாடில்லை. பின் விடாமல் தட்ட ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் படாரெனக் கதவு திறந்து ஒருகை அவளைப் பிடித்து உள்ளே இழுத்து சுவரோரம் தள்ளியது.

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
16
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. என்னடா சித்தத்து இப்படி பண்ற … கல்யாணம் பண்ணிட்டு பழிவாங்க போறியா … பாவம் மது … பொண்ணுங்களுக்கு தான் எல்லா பக்கமும் பிரச்சனை … இன்னும் என்னெல்லாம் நடக்குமோ … மது நீ சூப்பர் மா … அவனுக்காக இவ்ளோ தூரம் இறங்கி வந்துட்ட பாரு …

    1. Author

      பழிவாங்குறதுக்கு எல்லாம் இவன் வொர்த் இல்ல🤪🤪

      கோபத்துல எதாவது கிறுக்கு தனம் பண்ணுவான் அவ்ளோதான்

      மிக்க நன்றி😍😍

  2. தனது அம்மாவும் தங்கையும் எது நடந்து விடவே கூடாது என்று நினைத்து நாடகம் போட்டார்களோ அதையே சிறப்பாக நடத்தி காட்டிவிட்டான் சித்தார்த்.

    ஆனந்தி மகன் ரொம்ப ரோசக்காரன் தான் 🤣🤣
    யார் முகத்தையும் பார்க்காம, ஏன் பொண்ணோட முகத்தை கூட பார்க்காம ரோஷமா தாலி மட்டும் கட்டிட்டு விருட்டுனு வீடு வந்து சேர்ந்துட்டான்.

    மதுதாரா அவனை, அவனது கோபத்தை, அதன் நியாயத்தை புரிந்து, “பிறந்த வீட்டினருடன் எந்த உறவும் இருக்க கூடாது” என்று சொன்ன அவனது கட்டளையை, அவர்கள் செய்த தவறுக்கான தண்டனையாக நினைத்து ஏற்றுக்கொண்டு புகுந்த வீட்டிற்குள் நுழைந்து விட்டாள்.

    மது மன தைரியத்துடன் நடந்து கொள்வாளா பார்ப்போம்.

  3. நான்கூட கல்யாணம் முடிஞ்ச கையோட வந்தது பார்த்துட்டு ஆன்டி ஹீரோவோனு நினைச்சுட்டேன். கோவத்துல கதவை திறந்து வெளிய போடினு விரட்டுவானு பார்த்தா உள்ளுக்குள்ள இழுக்குறான்…
    வில்லினு நினைச்சுட்டிருந்த ஆனந்தியை இப்படி காமெடி பீஸாக்கிட்டீங்தளே ரைட்டர் ❤️✨