Loading

குளிர் ஊசி – 8 ❄️

“அம்மா …. “

அச்சத்தத்தில் தன்னை மறந்த அனந்தன் தன்னை மீட்டுக் கொண்டு எப்பொழுதும் யாரின் முன்பும் காட்டாத கண்ணீரை உள்ளிழுத்து தனது முகத்தில் எவ்வித பாவனையும் தெரியாதவாறு மனதை ஒரு நிலைப்படுத்தி அறையை விட்டு வெளியில் வந்தான்.

அங்கோ பாலா தான் மல்லாந்து படுத்துக் கொண்டு விட்டத்தை பார்த்து கொண்டிருந்தான். அவனையும் அவனின் செயலையும் ஒரு சேரக் கேவலமாக பார்த்து விட்டு நகர எத்தனிக்கும் நொடி “அய்யோ அம்மா ” என்று மறுபடியும் அலறினான்.

அதில் திரும்பி பார்க்க, பாலாவின் கண்கள் சிவந்து ,உதடு சிரிப்பதை கண்டு சிரிப்பு பீறிட்டது. அதனைக் கட்டுக்குள் கொண்டு வந்து பாலாவின் அருகில் நிற்க , அங்கு ஒருவன் இல்லாதது போன்று பாவானை செய்ய, இவனும் வீம்புக்கென்றே அவனின் அருகில் உள்ள சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட, குப்புற படுக்க, மல்லாந்து படுக்க என்று வித விதமாக போஸ் கொடுத்தான்.

அதில் கடுப்பாகிய பாலா “அதான் விழுந்துட்டேனு தெரியுதுல . அப்புறம் தூக்கி விட வேண்டியது தான? “

அனந்தனும் “அதான் விழுந்துட்டனு தெரியுதுல. அப்புறம் தூக்க சொல்ல வேண்டியது தான ? ” என்று இறுமாப்புடன் கூறினான்.

“சரி …. ஆபத்துக்கு பாவம் இல்லை ” என்று நினைத்து ” ஆமா ….. தூக்கு ” என்று முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு கேட்டான். அப்பொழுதும் நகராமல் அப்படியே நிற்க , ” எப்பா சாமி .. கீழே விழுந்துட்டேன் கொஞ்சம் உதவி செய்றீங்களா? “

அவன் இப்பொழுதும் கை கட்டி நிற்க, ” தயவு செய்து தூக்கி விடுமய்யா . முடியல ” என்று சொன்ன பின்பு தான் அவனைத் தூக்கி உதவி செய்தான். பின்பு , அவன் வேலையைப் பார்க்க செல்ல , பாலாவின் முகத்தில் திடீரென்று குழப்ப ரேகைகள்  பரவியது. வேகமாக அந்த ஃபிரேமின் முன் நின்று, தனது அலைபேசியையும் ஆராய்ந்தான்.

பின்னிருந்து ” ஆமா இவரு பெரிய சிஐடி . இவரு கண்டுபிடிக்க வந்துட்டாரு “

தன் கவனத்தை சிதறவதற்கு தான் இவ்வாறு பேசுகிறான் என்று நினைத்து தனது காரியமே கண் என்று எதையோ தேடிக் கொண்டிருந்தான் .

ஆனால் அனந்தனோ “என்ன தெரியனும்னு சொல்லு நானே சொல்லுவேன்ல? “

அப்படியும் அவன் கவனிக்காமல் அலைபேசியை நாடியவன். தான் தேடுவது கிடைக்காமல் போக, அக்கடுப்பினில் திரும்பி பார்க்க, ப்ளு ஹேசல் விழியவன் சிரித்துக் கொண்டிருந்தான்.

அவனை உற்று நோக்கி முறைக்க, தனது லென்சை கழற்றினான் . அதில் அவன் விழி ப்ரவுன் ஹேசலாக இருந்தது. பாலா தலையில் கை வைத்து அமர, தனது வேடிக்கையை கைவிட்டு அவனுடன் சேர்ந்து அமர்ந்தவன் “வேற வழி இல்லை பாலா ” .

“என்ன மித்ரா நீயும் விளையாடுற? அனந்தன் எங்க தான் போறான் ? இப்படியா இருக்கிறது ? அவனுக்காக நீ லென்ஸ்லாம் வச்சிருக்க “

“சார்லிக்காக ” என்று கூறி எதையோ வெறித்து நோக்கினான். இதற்கு மேல் பேசினால் இவனது மனநிலையை தானே கெடுத்து விடுவோம் என்று நினைத்து இருவரும் உண்டு தத்தமது வேலைக்கு சென்று விட்டனர்.

❄️❄️❄️❄️

சரணுடன் சென்று தனது கம்பெனியின் வாசலில் அரை மணி நேரமாக அவள் நின்றதோடு அவனையும் நிற்க வைத்திருந்தாள். அதில் கடுப்பாகிய சரண் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

முறைக்க மட்டுமே முடிந்தது. ஏனென்றால், சரணும் ஜனனியும் அவளின் கம்பெனி முன் நின்றவுடன் நிமிர்ந்து பார்த்த ஜனனி தாம் பெரிய கம்பெனியில் வேலை செய்ய போகிறோம் என்று ஆர்வத்துடன் உள்ளே வந்தவள் அவளின் அப்பாய்மெண்ட் ஆர்டரை வாங்கி பார்த்த ரிசப்ஷனிஸ்ட் அவளை வேறு ஒரு இடத்திற்கு செல்ல சொன்னர்.

அவர்களும் அவர்கள் கூறிய இடத்திற்கு செல்ல, அவர்களை வரவேற்றது விலாசமான கடலும், அதனின் புள்ளியாக ஒரு ஓரத்தில் இருக்கும் குடிலும், தத்தமது வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையாட்களும் தான்.

“ஏய் படிச்சது நேவி இன்ஜினியர். அப்போ கப்பலுக்கு போய் தான ஆகனும் ” சரண் கடுப்புடன் கேட்டான்.

“ஆனா, நான் அவன்ட்ட கேட்டேன். என்ன கப்பலுக்கு அனுப்ப மாட்டீல . எனக்கு கம்பெனில தான வேலைனு . அவன் மண்டையை டிங்கு டிங்குனு ஆட்டிட்டு இப்படி பண்ணிருக்கான் “

“இப்பவும் உனக்கு கம்பெனில தான் வேலை ” என்று மாயா கூறினாள் வீடியோ காலில்.

சரண் ஜனனியின் நிலைமை புரிந்து உடனே மாயாவிற்கு தான் அழைத்தான். அதனால், அவளும் சமாதானம் செய்ய முற்பட்டாள்.

“எது அது கம்பெனியா ? ” முகத்தை சுளித்து கொண்டு கேட்டாள்.

“எதுக்கு இப்போ சந்திரமுகியா மாறுற ? உனக்கு ஆபிஸ் னா என்ன ? “

ஏசி இருக்கனும்
தனியா எனக்கு ரூம் இருக்கனும்
ஆனா , ரூம்குள்ளேயே இருக்கக் கூடாது.
கேண்டின் இருக்கனும்.
அதுல வித விதமா சாப்பாடு இருக்கனும்

” ஆக மொத்ததுல நீ வேலை பாக்க போகல ” சரண் நொந்து கொண்டு கூற, மாயா சிரித்தாள்.

” வேலைக்கும் தான்.
ஆனா நான் வேலைப் பாக்க கூடாது. மத்தவங்க வேலைப் பாக்குறாங்களானு பாக்குற வேலையா இருக்கனும் ”

“எதே ” என்று அதிர்ந்து சரண் கேட்க, மாயா சிரித்தே விட்டாள்.

பின்னிருந்து இவளின் அழகை ரசித்துக் கொண்டிருந்த ப்ளு ஹேசல் கண்கள் அவளின் பேச்சில் திருப்பதியின்மை பெற்றது. அதில் முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்து விட்டான்.

பின்பு, மாயாவும் சரணும் ஏதேதோ பேசி அவளை சமாதானம் செய்து அவளை அனுப்பி வைத்து விட்டு சரணும் சென்று விட்டான்.

இவள் வேண்டா வெறுப்பாக அருகில் போய்க் கொண்டிருந்தவரிடம் ஆபிஸ் எங்குள்ளது என்று கேட்க , அவர் காட்டிய இடத்தில் அதிர்ந்தே விட்டாள்.

பின்பு, மனதிற்குள்ளேயே திட்டிக் கொண்டு அந்த டென்டில் நுழைய ஃபிளைட்டில் பார்த்த மாயவன் கூலர்ஸ் அணிந்து வேலை செய்துக் கொண்டிருந்தான்.

“வாவ்…….. “

“வாட்……. “

கீர்த்தி ☘️

ஹலோ மக்களே ! இந்த கதையில் அனந்தன் மித்ரன் இரண்டு பேரு . அனந்தனுக்கு ப்ளு ஹேசல் கண், மித்ரனுக்கு பிரவுன் ஹேசல் கண். ஆனால், மித்ரன் அனந்தனின் கண் போல் லென்ஸ் வைத்து கொள்வான். சோ, அனந்தன், மித்ரன் அப்படினு பேரு சொன்னா அவர்களை கரெக்ட்டா சொல்லுறேனு அர்த்தம். ப்ளு ஹேசல்னு சொன்னா அது யாருனு சஸ்பன்ஸ்ஸா தான் போகும். புரியும்னு நினைக்கிறேன் . பாய்…. மறக்காமா கமெண்ட் அண்ட் லைக் போடுங்கோ ! 😉

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்