Loading

காலை கனவு 30

அவன், அவள் தேநீருடன் சிறு நேரம்…

ஆழ்மனதின் மொழிகள் யாவும்
இரு இதயங்களுக்கே உரித்தானவையாக… நீளும் அந்தகாரம்.

சொல்ல முடியா வார்த்தைகள்
சர்க்கரையாய் கரைந்திட,
வலியின் கசப்புகள்
தேநீரின் மென் கசப்பில்
மெல்ல குறைய…

இருவரின் பகிர்தல்களும் நிறைவு கொண்டன.

****************

நள்ளிரவு கடந்த வேளை,

சாலையோரம் வண்டியை நிறுத்திவிட்டு, பேனெட்டின் மேல் அன்விதா அமர்ந்திருக்க, சாய்ந்து நின்றவனாக ஆர்விக்.

இருவரின் கரங்களும் தேநீர் கோப்பையை தழுவியிருந்தன.

அவனிடத்தில் அமைதியான பருகல்.

வீட்டில் நடந்ததை சக்தி பேசியதென அனைத்தும் ஆர்விக்கிடம் அன்விதா சொல்லி முடித்தும் இருவரின் தேநீர் கோப்பையில் சில துளிகள் மிச்சமிருந்தன.

“கௌதம் பார்ட் ஓவர்… அவ்ளோதான். மொத்தமா தூக்கிப்போட்டுட்டு அடுத்து என்னன்னு பாரு” என்றான்.

“ஹ்ம்ம்… நானும் அண்ணா பேசினதுமே எண்ட் போட்டுட்டேன்” என்ற அன்விதா, “அவன் லிவ்விங்கில் இருந்திருப்பான் நினைக்கல” என்றாள்.

“அதைவிடு” என்ற ஆர்விக், “கிளம்பலாமா?” எனக் கேட்டு இருவரின் காகிதக் கோப்பையையும் சாலையிரமிருந்த குப்பைத்தொட்டியில் சென்று போட்டுவிட்டு வந்தான்.

உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து குதித்து இறங்கிய அன்விதா…

“உனக்கு என்கிட்ட எதாவது சொல்லணுமா ஆர்வி?” எனக் கேட்டாள்.

“இப்போதைக்கு ஒண்ணுமில்லை. அதான் நேத்து நைட் உன்னை பிக்கப் பண்ணப்போவே, வீட்டுக்கு வரதுக்கு முன்ன எல்லாமே சொல்லிட்டனே” என்றான்.

நேற்று மாலை நெருங்கும் வேளையில் சென்னை கிளம்பிய அன்விதா பாதி இரவிற்கு மேல் வந்துசேர, அவளை வழக்கம்போல ஆர்விக் தான் பேருந்து நிலையம் வந்து அழைத்துச் சென்றான்.

வீட்டிற்கு வரும் வழியிலேயே ஒரு வார கதைகள் அனைத்தும் சொல்லியிருந்தான். இனியாவின் பகுதியைத் தவிர்த்து.

அவளிடம் சொல்லக்கூடாதென்றில்லை. தனக்கே வேண்டாமென்ற ஒன்றை பேசவும் அவனுக்கு விருப்பமில்லை. அதனாலே அவளிடம் அதைப்பற்றிக் கூறவில்லை.

அன்றிரவு நிதாஞ்சனியுடன் ஆர்விக் வீட்டில் தங்கிக்கொண்டவள், காலையில் அனிதாவின் நலம் விசாரித்து அந்நாள் முழுக்க அவருடன் தான் சுற்றிக் கொண்டிருந்தாள்.

மதியத்திற்கு மேல் நிதாஞ்சனி அலுவலகம் செல்லக் கிளம்பிட,

“உங்களுக்கு ஒன்னு கொண்டு வந்தேன்” என சமையலறை உள்ளே சென்ற அன்விதா, நிதாஞ்சனியின் அருகில் வரும்போது அவளின் கையில் ப்ளூ பெர்ரி பழங்கள் இருந்தன.

“வாவ் அன்வி…” பழங்களைப் பார்த்ததும் நிதாஞ்சனியின் கண்கள் சந்தோஷத்தில் அகல விரிந்தன.

“எனக்கா அன்வி” என்று ஒரு பழத்தை எடுத்து சுவைத்தவளுக்கு, அதனின் புளிப்பு சுவை கண்களை மூடச் செய்து நாவினை சப்புக்கொட்ட வைத்திட, அவளுக்கு சக்தியின் மீது பிடித்தம் வந்த நாள் நினைவில் தோன்றி மறைந்தது.

“செம டேஸ்ட் அன்வி” என்று விழிகள் திறந்த நிதாஞ்சனி, “உங்க தோட்டத்து பழம் மட்டும் எப்படி இவ்ளோ டேஸ்ட்டா இருக்கு?” என்று மீண்டும் ஒரு பழத்தை எடுத்து வாயில் போட்டாள்.

“அதுக்கு காரணம் எதுவும் இருக்கும்” என்ற அன்விதா, “பொறுமையா சாப்பிடுங்க. எல்லாம் உங்களுக்குத்தான். உங்களுக்கு மட்டும் தான்” என்று பொருள் பொதிந்து புன்னகைத்திருந்தாள்.

“தேங்க்ஸ் அன்வி” என்று நிதாஞ்சனி சொல்ல…

“பழம் எனக்கெல்லாம் இல்லையா?” என்றார் லட்சுமணன்.

“இது அவங்களுக்கு மட்டுமான ஸ்பெஷல் தாத்தா. உங்களுக்கு ஸ்ட்ராபெர்ரி கொண்டு வரவா. பப்ளிமாஸ் பழம் கூட இருக்கு” என்ற அன்விதா, நிதாஞ்சனியை ஓரக் கண்ணால் பார்த்திட…

அந்த பப்ளிமாஸ் எனும் வார்த்தையில் ஜெர்க் ஆகியிருந்தாள் நிதாஞ்சனி.

“என்னாச்சு?” அன்விதா கேட்க,

“நத்திங். நான் ஆபிசில் சாப்பிட்டுக்கிறேன். டைம் ஆச்சு” என்ற நிதாஞ்சனி பெரியவர்கள் இருவரிடம் சொல்லிவிட்டு வேகமாக வெளியேறியிருந்தார்.

“ஹேய் வாலு எதுக்கு அவளை ஓட விடுற” என்ற அனிதா, “உனக்கும் தெரிஞ்சிடுச்சா?” எனக் கேட்டார்.

“அப்போ உங்களுக்குத் தெரியுமா?” என ஆச்சரியமாக கேட்ட அன்விதா அனிதாவின் அருகில் அமர்ந்தாள்.

“காலேஜ் டைமிலே தெரியும்” என்ற அனிதா, “சக்தி என்ன சொல்றான்?” என்றார்.

“மேரேஜ் தான்” என்ற அன்விதா, “நம்ம கதையில் சொல்லாமலே காதல் நிறைய இருக்கும்போல” என்றாள்.

“ஆமா… ஆமா…” உடனடியாக சொல்லியிருந்தார் லட்சுமணன்.

“நீ யார் யாரோடதை மீன் பண்ற?” அனிதா கேட்க,

“நிதா அண்ணி, அண்ணா, தான்யா.”

“ஹ்ம்ம்” என்றவர் பார்வை தன்னுடைய தந்தையின் பார்வையோடு அர்த்தமாக படிந்து மீண்டது.

அன்விதா தங்களை கவனிப்பதை உணர்ந்து,

“அவகிட்ட அண்ணி சொல்ல முடியுமாதான், அக்கா சொல்லாம பேசுனியா?” எனக் கேட்டார்.

“நோட் பண்ணீங்களா? என்னவோ அவங்க லவ் தெரிஞ்ச பிறகு அக்கா சொல்ல வரல” என்ற அன்விதா, “சக்தி அண்ணா லவ் பண்ணுவாங்க நான் எக்ஸ்பெக்ட் பண்ணல?” என்றாள்.

“இப்போ அவன் லவ் பண்றேன்னு ஆர்விக்கிட்ட ஒத்துக்கிட்டதையே என்னால நம்ப முடியல” என்ற அனிதா, “நிதா ரொம்பவே வெயிட் பண்ணிட்டாள். ஒழுங்கா அவனை வீட்டில் பேசச்சொல்லு. மனசில் என்ன நினைக்கிறான் அப்படின்னே தெரியாது” என்றார்.

“சீக்கிரமே பேசிடுவாங்க மேம்” என்ற அன்விதா, “ஒரு வாரத்துல என்னன்னு தெரியும்” என்றதோடு, “எத்தனைமுறை கூப்பிட்டிருப்பேன். அங்க வாங்கன்னு. வந்திருப்பீங்களா? எல்லாரும் அண்ணா மேரேஜ்க்குதான் அங்க வரணும் இருக்கு” என்றாள்.

“ம்ம்… முடிவாகட்டும். வந்து ஒரு மாசம் தங்கிடுவோம்” என்றார். மனதில் பல யோசனைகளை முன் வைத்தவராக.

“ஓகே மேம் நான் ஆபீஸ் போயிட்டு வர்றேன்” என்று அன்விதா எழுந்துகொள்ள…

“நீ ஓகேதான அன்வி?” எனக் கேட்டார் அனிதா.

“எஸ் மேம். அம் கூல்” என்றவள் கண்கள் சிமிட்டி, புன்னகையோடு வெளியேறினாள்.

அன்விதாவின் புன்னகை அவருள், அவருக்கான எண்ணத்திற்கு பெரும் பலமாக இருந்தது.

*******************************

“இப்போ இவள் எதுக்குடா வந்திருக்காள்?” என்ற பூபேஷ், “இன்னைக்கும் சம்பவம் இருக்குமோ?” என்றான்.

“அடேய்… அமைதியா இருடா! ரியாக்ட் பண்ண வேண்டியவனே அமைதியா லெப்டாப்குள்ள தலையை விட்டுட்டு இருக்கான்” என்ற யாஷ், “உன் வேலையை பாரு” என்றான்.

“அதுவும் சரிதான்” என்ற பூபேஷ், “வீட்டில் பேசியாச்சு மச்சி” என்றான்.

“சூப்பர் டா!” என்ற யாஷ், “எப்போ மேரேஜ்” என்றான்.

“நெக்ஸ்ட் மன்த் எண்ட்.”

“ஹோ… ஏன் இவ்வளவு சீக்கிரம்?”

“நாள் நல்லாயிருக்கு. அவ்ளோதான்” என்ற பூபேஷ், கண்கள் ஒளிர சிறு முறுவலோடு, “அவளை பக்கத்திலே வைச்சிக்கணும் போல இருக்குடா” என்றான்.

“இப்பவும் நைட்டு தூங்கிற நேரம் தவிர்த்து ரெண்டு பேரும் ஒண்ணா தான்டா இருக்கீங்க” என யாஷ் சொல்ல, பூபேஷிடம் மெல்லிய வெட்கம்.

“ப்பா…” என்ற யாஷ், “டேய் ஆர்வி இவன் ஃபேஸ் பாரேன்! எம்புட்டு லைட்டிங்” என்றான்.

“அடேய்” என்று பூபேஷின் முறுவல் அதீதம் கொள்ள…

“லவ் பண்ணா வெட்கமெல்லாம் வருமாடா?” எனக் கேட்டான் யாஷ்.

“போடா ரொம்ப ஓட்டுற நீ?” என்ற பூபேஷ், “உனக்கும் ஒருநாள் லவ் வரும். அப்போ பார்த்துக்கிறேன் இரு” என்றான்.

“எனக்கு லவ் மேரேஜ் எல்லாம் இருக்காதுடா! இவனும் அன்வியும் லவ்வால பட்டதைப் பார்த்துமா அந்த தப்பை செய்வேன் நான்” என்றவன், “அனிதாம்மா பாக்குற பொண்ணு தான்” என்றான்.

“நானும் தானுவும் லவ் பண்றோமே! நல்லாதான இருக்கோம்?”

“எல்லாருக்கும் உங்களை மாதிரி அமையுமா? எதுக்கு ரிஸ்க்கு எனக்கு இந்த லவ் செட்டாகாது. இந்த லவ்வே வேணாம். கல்யாணத்துக்கு அப்புறம் பொண்டாட்டியையே லவ் பண்ணிக்கிறேன்.”

“உன் மாமா பொண்ணு என்னாச்சு?”

“கல்யாணமாச்சு?”

“சொல்லவே இல்லை!”

“எனக்கே சொல்லலையாம்” என்ற யாஷ், “கல்யாணம் முடிஞ்சு மாமா சொன்னார். அப்படியா அப்படின்னு கேட்டுக்கிட்டேன்” என்றான்.

“ஏன் சொல்லல உன்கிட்ட?”

“எங்க அத்தைக்கு நான் வேண்டாத சுமை” என்ற யாஷ், “அதை விடுடா” என அப்பேச்சினை முடித்துக் கொண்டவனாக,

“நாம இவ்வளவு பேசுறோம் இவன் என்ன ரொம்ப சைலண்ட்டா இருக்கான்” என ஆர்விக் செய்து கொண்டிருப்பதை எட்டிப் பார்த்தான்.

“என்னடா பாக்குற?”

“இந்த ஐடி யாரோடதுன்னு பாக்குறேன்” என்ற ஆர்விக், “ஒயிட் மூன்… யாருடா இது?” என இன்ஸ்டாவில் ஒரு ஐடியை காண்பித்தான்.

“யாராயிருந்தா என்னடா?” என பூபேஷும் பார்த்தவனாக வினவினான்.

“லாஸ்ட் நாம மேனேஜ் பண்ண இவன்ட் பிக்ஸ் அப்லோட் பண்ணேன் இப்போ!”

“சரி அதுக்கென்ன?” என்றான் யாஷ்.

“இந்த ஐடியிலிருந்து அப்லோட் பண்ண பிக்ஸ்க்கு லைக் வந்திருக்கு” என்று ஆர்விக் முழுதாய் சொல்லும் முன்பு,

“லைக் வரதுல என்னடா பிரச்சினை. நம்ம பேஜ் ஃபாலோ பண்ற ஆளா இருக்கும்” என்றான் யாஷ்.

ஆர்விக் முறைத்திட,

“அவனை சொல்ல விடுடா” என்றான் பூபேஷ்.

“சரி சொல்லு… கேட்போம்!” என யாஷ் கூற,

“உன்னை கொல்லப்போறேன்” என அவனின் கழுத்தினை பிடித்து ஆட்டி விடுத்த ஆர்விக், “இப்போ டென் பிக்ஸ் அண்ட் த்ரீ வீடியோஸ் அப்லோட் பண்ணேன். இன்ஸ்டா அண்ட் யூ ட்யூபில் ஃபுல் லென்த் வீடியோ ரெண்டு” என்றான்.

“எப்பவும் ஒரு இவன்ட் முடிஞ்சா நாம பண்றதுதானடா” என்ற யாஷ் இம்முறை ஆர்விக் பார்த்தப் பார்வையில்,

“இனி வாய் திறந்தா என்னன்னு கேளுடா” என்றான்.

“அப்லோட் பண்ண ஃபோட்டோசில் நீயிருக்க ஃபோட்டோஸ்க்கு மட்டும் ஹார்ட் விட்டிருக்கு” என்ற ஆர்விக், “அந்த இவன்ட் ஈவ்வினிங் முழுக்க கவர் பண்ணது பூபேஷ். நைட் நீ! சோ, ஈவ்வினிங் அண்ட் நைட் அப்படின்னு செப்பரெட்டா அப்லோட் பண்ண ரெண்டு வீடியோசில் நீ இருக்க வீடியோக்கு மட்டும் லைக். இன்ஸ்டாவிலும் அப்லோட் பண்ண த்ரீ வீடியோசில் நீ இருந்த டூ வீடியோஸ்க்கு லைக்” என்றான்.

“இதுல என்னடா இருக்கு” என அசட்டையாகக் கேட்ட யாஷ், மேசை மீதிருந்த பேப்பர் வெயிட்டை உருட்டினான்.

“ஆமா இதுல ஒண்ணுமில்லைதான்” என்ற ஆர்விக், “அப்லோட் பண்ணதும் தொடர்ந்து அந்த ஐடி லைக் பண்ண நோட்டிஃப்பிக்கேஷன். சோ யாருன்னு கவனிச்சா… உனக்கு மட்டும் லைக் போட்டிருக்கு. சாதாரணமா நினைச்சாலும் என்னவோ நோட் பண்ணேன். ஆரம்பத்திலிருந்து நாம அப்லோட் பண்ணியிருக்க அத்தனை போஸ்ட்லயும் நீயிருக்க பிக்ஸ் அண்ட் வீடியோஸ்க்கு மட்டும் ஹார்ட் பிறந்திருக்கு” என்றான்.

ஆர்விக் விளக்கமாக சொல்லியதும், அவன் எதை அர்த்தப்படுத்துகிறான் என்பது மற்ற இருவருக்கும் புரிந்தது.

“மே பீ என்னோட ஃபேனா இருக்கலாம். இதை ஏன் இவ்வளவு திங்க் பண்ற நீ?” என யாஷ் சொல்ல,

“நீ ஆக்டர் விஜய் பாரு… ஹார்ட் விடுறதுக்கு” என்றான் பூபேஷ்.

“டேய் நான் இன்ஸ்டா செலபிரிட்டி டா! இப்போலாம் ஆக்டர்ஸ் விட இன்ஸ்டா செலபிரிட்டிக்குத்தான் மவுசு” என்றான் யாஷ்.

“நெக்ஸ்ட் இயர் இன்ஸ்டா பேன் பண்றாங்களாம். அப்புறம் தெரியும் உங்க மவுஸ்” என்ற ஆர்விக், “இதை நீ சொல்ற மாதிரியும் எடுத்துக்கலாம் தான். ஆனா நம்ம இவன்ட் பேஜ் தவிர்த்து உன்னோட பெர்சனல் ஐடியிலும் ஃபாலோவில் இருக்கு” என்றான்.

அந்நேரம் அங்கு வந்த தான்யா,

“கேக் இவன்ட் பிளேஸ்க்கு கொண்டுபோகணும்டா! தினேஷ் அங்க இருந்து வந்து எடுத்திட்டுப்போறது கஷ்டம்” என்றாள்.

சன்னல் வழியாக அலுவலகத்தின் முன்னிருக்கும் சிறு பூங்கா கல் மேடையில் அமர்ந்திருந்த இனியாவைப் பார்த்த ஆர்விக்,

“நானே எடுத்திட்டுப்போரேன்” என எழுந்தான்.

“ஓகே” என்ற தான்யா, “நான் பேக் பண்றேன்” என நகர்ந்தாள்.

ஆர்விக்கும் அவளின் பின்னால் சென்றிட, ஆர்விக் அப்படியே வைத்துச்சென்ற மடிக்கணினியை தன் பக்கம் திருப்பியவனாக அந்த கணக்கின் பெயரை மெல்ல உச்சரித்தான் யாஷ்.

“பொண்ணா இருக்குமோ?” என்றான் பூபேஷ்.

“இருக்காதுடா!”

“எப்படி சொல்ற?” என்ற பூபேஷ், “ஜெனரலி… இந்த மாதிரி நிலா, மழை மீன் பண்ற மாதிரி பொண்ணுங்க தான் நேம் வைப்பாங்க” என்றான்.

“இருந்துட்டுப் போகட்டும்” என்ற யாஷ், “இது ஆர்வி யோசிக்கிற அளவுக்கு பெரிய விஷயமா எனக்குத் தோணல” என்றான்.

“ஹ்ம்ம்…” என்ற யாஷ், “அன்வி ஃபாலோ பேக் பண்ணியிருக்காள் அந்த ஐடி’யை” என்றான்.

“வேண்டாம் சொல்லிட்டு ஆராயுற” என்ற பூபேஷ், “கேர்ஃபுல் டா. சோஷியல் மீடியால யாரையும் நம்ப முடியாது” என்றான்.

“கரெக்ட்” என்ற யாஷ், “இதை இதோட நிறுத்திப்போம். தேவையில்லாம டீப் திங்க் பண்றோம்” என்றான்.

அப்போது வெளியில் பார்வையை பதித்த பூபேஷ்,

“அன்விடா” என்றான். அவள் இனியாவிடம் நின்றிருப்பதைப் பார்த்து.

“நான் மார்னிங்கே பார்த்துட்டேன்” என்ற யாஷ், அவர்களை கவனியாதவனாக காரில் ஏறிச் சென்ற ஆர்விக்கைப் பார்த்தான்.

“நாம எவ்ளோ பிளான் பண்ணாலும், இந்த இனியாவை ஓரம் கட்டினாதான் ஆர்வி லைஃப் பீஸ்ஃபுல்லா இருக்கும்” என்றான்.

“டெஃபனட்லி” என்ற பூபேஷ், அன்விதா உள்ளே வரவும்,

“வாடா! ஆல் ஓகே?” எனக் கேட்டான்.

“யாப்… எவ்வரித்திங் இஸ் குட்” என்ற அன்விதா, “என்னடா மேட்டர் இது?” என இனியவை காண்பித்து, “என்கிட்ட ஏதோ பெர்சனலா பேசணும் கூப்பிடுறாள்” என்றாள்.

“பேசணும் அப்படின்னா போய் பேசிட்டு வா” என்றான் யாஷ்.

“ம்ம் பேசிட்டு வர்றேன்” என்று தன்னுடைய அலைபேசி மற்றும் கைப்பையை மேசை மீது வைத்துவிட்டு அன்விதா வெளியேறி அங்கு அவளுக்காகக் காத்திருந்த இனியாவுடன் கடற்பகுதியை நோக்கி நடந்தாள்.

அந்நேரம் பூபேஷ் பணியாளர் வேலை சம்மந்தமாக அழைக்கவே எழுந்து சென்றிட… அன்விதாவின் அலைபேசி ஒலித்தது.

யாரென்று பார்த்த யாஷ், திரை ஒளிர்ந்த பெயரில் புருவம் சுருக்கினான்.

“ஒயிட் மூன்.” அவனது இதழ்கள் பிரிந்தன.

***********************

அன்விதா இனியாவிடம் பேசிவிட்டு வரும்போது ஆர்விக் தான் சென்ற வேலையை முடித்துக்கொண்டு திரும்பி வந்திருந்தான்.

“என்னவாம்?” தான்யா தான் இனியாவை குறித்துக் கேட்டிருந்தாள்.

“நான் ஏன் சொல்லணும்?” என்ற அன்விதா, “நீங்க நாலு பேரும் எல்லாமே என்கிட்ட சொல்றீங்களா?” என்றாள். ஆர்விக்கின் மீது விழிகளை அழுத்தமாகப் பதித்தவளாக.

“தேவையான விஷயம் அப்படின்னா அதைப்பற்றி பேசலாம்” என்ற ஆர்விக்,

“ஒரு ஆர்டர். நைட்டே புது தீம் ட்ராஃப்ட் கேட்டு இருக்காங்க” என பேச்சினை தொழில் சார்ந்து மாற்றியிருந்தான்.

அடுத்து ஐவரும் அதில் மூழ்கிட… நேரம் சென்றதே தெரியவில்லை.

இரவு ஒன்பது மணிக்கு மேல் அனிதா அழைக்கவே சுற்றம் உணர்ந்தனர்.

“நீங்கலாம் கிளம்புங்க. நான் தான் வன் வீக் ஒர்க் எதுவும் பாக்கல. ஆல்மோஸ்ட் ஓவர் தான, முடிச்சு அவங்களுக்கு அனுப்பி வைச்சிடுறேன்” என்றாள் அன்விதா.

“இதுக்குமேல நீதான் பண்ணியாகனும். லாஸ்ட் தீம்மே கலர் காம்பினேஷன் நீ சூஸ் பண்ற மாதிரி எலக்கெண்டா வரல” என்றாள் தான்யா.

“ஹ்ம்ம்… ஷீ இஸ் கரெக்ட்” என யாஷும் சொல்ல, “அப்போ நீங்க கிளம்புங்க. வேலையெல்லாம் முடிச்சிட்டு அன்வியை பிஜியில் ட்ராப் பண்ணிட்டு நான் வர்றேன்” என்றான் ஆர்விக்.

“ஓகே டா” என மற்ற மூவரும் கிளம்பிட,

அன்விதா மடிக்கணியை பார்ப்பதும், ஆர்விக்கை பார்ப்பதுமாகவும் இருந்தாள்.

“என்ன அன்வி?”

அன்விதாவிடம் கேட்டிருந்தாலும் ஆர்விக் பார்வை கணினித் திரையில் தான் இருந்தது.

“என்கிட்ட நீ ஹைட்லாம் பண்ணுவியாடா?” எனக் கேட்டாள்.

“அப்படிலாம் இல்லையே!” என ஆர்விக் கூறிட,

“நீ இப்படிலாம் கேட்டா சொல்லமாட்ட… டீ குடிக்கலாமா?” என்றாள்.

அவளின் முகம் பார்த்த ஆர்விக்,

“குடிக்கலாமே” என்றதோடு, “ஃபர்ஸ்ட் இந்த ஒர்க்” என அவளின் தலையை மடிக்கணினி பக்கம் திருப்பினான்.

அடுத்த இரண்டு மணி நேரம் இருவரின் கவனமும் வேலையில் தான்.

முடித்து நிமிர்ந்திட பனிரெண்டை நெருங்கியது நேரம்.

இருக்கையிலிருந்து எழுந்த ஆர்விக் அயர்வாக கைகள் உயர்த்தி சோம்பல் முறித்திட…

“இப்போ டீ குடிப்போமா?” என்றாள் அன்விதா.

ஆர்விக் பார்த்திட,

“உனக்கு இருக்கோ இல்லையோ எனக்கு உன்கிட்ட சொல்ல நிறைய இருக்கு” என எழுந்தாள்.

“ஹ்ம்ம்… என்கிட்டயும் நிறையவே டைம் இருக்கு. குடிக்கலாம், பேசலாம்” என்றான்.

அலுவலகம் விட்டு வெளியில் வந்தவர்கள், வழக்கமாக தேநீர் பருகும் அச்சாலையில் இருக்கும் கடை மூடியிருக்க…

கொஞ்சம் முன் வந்தனர்.

இரவு நேர தேநீர் சைக்கிள் ஒன்று கடந்திட, வண்டியை நிறுத்தியிருந்தான் ஆர்விக்.

தேநீரின் சுவையோடு இருவரின் பேச்சும் துவங்கியிருந்தது.

தான் சொல்ல வேண்டிய அனைத்தும் சொல்லி முடித்த அன்விதா,

“இனியா என்கிட்ட என்ன பேசினா கேட்கமாட்டியா ஆர்வி?” என்றாள்.

ஆர்விக் விளங்கா உணர்வோடு பார்த்திட,

“நமக்கு தேவையில்லாததுன்னு சொல்லாத” என்றாள் அன்விதா.

“உண்மையிலே ஷீ இஸ் அன்வான்டட் திங் இன் மை லைஃப்” என்ற ஆர்விக் சாலையிலிருந்து கடல் நோக்கி அடி வைத்திட, அன்விதாவும் உடன் சென்றாள்.

அந்நேர சூழலின் ஒலிக்கு நடுவில் இருவரிடமும் அமைதி.

“நீ ஏன் இனியா லவ்வை கன்சிடர் பண்ணக்கூடாது ஆர்வி?”

பாதம் மோதிட வரும் அலைகளை தட்டி விளையாடிக் கொண்டிருந்த ஆர்விக் அன்விதாவின் கேள்வியில் தலையை மட்டும் திருப்பி அவளைப் பார்த்தான்.

“அவள் பண்ணதெல்லாம் தெரிஞ்சுமா… இப்படி சொல்ற?” அவனிடத்தில் உணர்வற்ற பாவனை.

“உன்னை எப்படி லவ் பண்ண வைக்கிறதுன்னு தெரியாம… இம்மெட்சூர்டா ஏதேதோ பண்ணிட்டாள். எல்லாம் உன் மேலிருக்க லவ்வால தான ஆர்வி. உன்னை விட்டுக்கொடுக்க முடியாமதான? நாம வேணும்னு எதையும் செய்ய நினைச்சு எந்த எல்லைக்கும் போற பெர்சன் கிடைக்கிறதெல்லாம் ஈசியில்லை.”

“எஸ்… நமக்காக என்னவும் செய்ற பெர்சன் கிடைக்கிறது ஈசியில்லை தான்” என்ற ஆர்விக், “நானும் ஒரு பொண்ணுக்காக அப்படித்தான்” என்றான்.

“வாட்?”

“எஸ்… எனக்கும் ஒருத்தி இருக்காள். காதல் அப்படிங்கிறது தாண்டி அவளுக்காக நானும் எந்த எல்லைக்கும் போவேன். ஆனால் அவள் எனக்கில்லை. அதிலிருந்து மூவ் ஆன் ஆகிட்டு இருக்கேன். வெளி வந்திட்டாலும் இனியாக்கு நோ தான்” என்றான்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 54

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
42
+1
1
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. Anvi ku epa tha arviyota love purium sis.. Anitha plan arvi and anvi ku marriage panratha sis..

    1. Author

      சீக்கிரமே எல்லாம் கிளியர் ஆகிடும் சிஸ் 😊😊😊