
காலை கனவு 16
நுரை பொங்கும் அலையில் தன்னுடைய மனம் ததும்ப நின்றிருந்த ஆர்விக்கின் மனம், கடல் தீண்டிய குளிர்காற்று தன்னை உரசிடும் தருணத்திலும் வெம்மை சுமந்திருந்தது.
பாதம் தழுவும் உப்பு நீரின் ஈரமும் அவளின் கண்ணீரின் ஈரத்தின் முன்பு சுடுவதை உணர்ந்திட்டான்.
கடல் அலையில் நின்றிருந்த ஆர்விக், வேகமாக அவள் முன்பு வந்து மண்டியிட்டு,
“அழாத அன்வி… ப்ளீஸ்” என்றான்.
ஆர்விக்கின் கண்களும் கலங்கியிருக்க, தொண்டை கமற, வார்த்தைகள் உடைந்து வந்தன.
ஆர்விக்கின் முகமும், குரலும் காட்டிய தவிப்பில் தன்னுடைய அழுகையை நிறுத்திய அன்விதா,
“அவங்க காதல் எப்படியோ? ஆனா என் காதல் உண்மையானதாச்சே! முடியலடா” என்று தனக்கு முன்பிருந்தவனின் சட்டையை ஒற்றை கையால் இறுகப் பற்றியவளாக அவனின் இதயத்தில் நெற்றி முட்டி விசும்பினாள்.
“அவன் உன்னோட இந்த லவ்வுக்கும், அழுகைக்கும் வொர்த் இல்லாதவன் அன்வி… நீ அழுது அவன் உனக்கு முக்கியம்னு காட்டாத!” என்றான் ஆர்விக்.
விலுக்கென ஆர்விக்கின் முகத்தினை அன்விதா நிமிர்ந்துப் பார்த்திட, கண்ணீர் கன்னம் உருண்டு நழுவியது.
“ஆர்வி…”
“எஸ்… உன்னோட இந்த கண்ணீர் அவனை நீ எவ்ளோ முக்கியமா பாக்குறன்னு காட்டுது” என்றான்.
“இல்லை நான் அழல… அவங்க எனக்கு முக்கியமில்லை. அன்னைக்கு கோவையிலே அவங்க மேலிருந்த காதலையெல்லாம் தூக்கிப் போட்டுட்டேன். அவங்க யாரோ” என்று படபடவெனக் கூறியவள், கண்களை இரு கைகளாலும் மாற்றி மாற்றித் துடைத்திட்டாள்.
கண்களை கசக்கி, கன்னத்தை அழுந்த தேய்த்தென அவள் செய்ததில் பதறிய ஆர்விக்,
“அன்வி என்ன பண்ற நீ?” என அவளின் இரு கைகளையும் பற்றி அவளின் செயலைத் தடுத்திருந்தான்.
“அழக்கூடாது நினைக்கிறேன்… ஆனால் வருதே! என்ன பண்ணட்டும் ஆர்வி?” என்றவள்,
“ஏமாந்தது வலிக்குதுடா” என்று ஆர்விக் பிடித்திருந்த கையின் மீதே முகம் சாய்த்தாள்.
அவளது கண்ணீரின் ஈரம் அவனது கைகளின் சுடும் தணலாய்.
“உன்னோட இந்த வலி அவன் எதிர்பார்த்தது அன்வி… தெரிஞ்சே உன்னை அழ வைச்சிருக்கான். அவன் இல்லைன்னா நீ உடைஞ்சு நிப்பன்னு தெரிஞ்சே இந்த நிலையை உருவாக்கியிருக்கான்… அவனுக்காக” என்ற ஆர்விக்,
கௌதம் உடனான உரையாடலை அவளிடம் பகிர்ந்தான்.
என்ன தான் கௌதமை அறிந்திருந்தாலும், ஆர்விக்குக்கு உள்ளுக்குள் பொங்கும் கோபத்தை எவ்வாறு தனிப்பதென்று தெரியவில்லை.
மூச்சினை ஆழ்ந்து வெளியேற்றி தன்னை நிலைப்படுத்த முயன்றான்.
“அவளை நான் லவ் பண்றது உண்மை” என கன்னத்தில் கை வைத்தபடி கௌதம் மீண்டும் சொல்லிட,
“ஷ்ஷ்ஷ்” என முகத்துக்கு நேரே சுட்டு விரலை ஆட்டிக் காண்பித்து…
“தொலைச்சிடுவேன்…” என கௌதமின் முகம் காண பிடிக்காதவனாய் வேறு பக்கம் திரும்பியிருந்தான்.
“நான் என்ன சொல்ல வரேன்னு முழுசா கேளுங்க ஆர்வி” என்று கௌதம் சொல்ல…
“என்னடா சொல்லப்போற நீ?” என்று சீறலாய் அவன் புறம் திரும்பிய ஆர்விக்,
“நான் ரொம்ப பொறுமையா இருக்கும்போதே என் கண்ணு முன்னாடியிருந்து போயிடு” என்று பற்களைக் கடித்தான்.
“ஆர்விக் நீங்க ரொம்ப சாஃப்ட்… கோபப்படாம நான் என்ன சொல்ல வர்றேன்னு புரிஞ்சிப்பீங்க நினைச்சுதான் உங்ககிட்ட பேசலாம் நினைச்சேன்… நீங்களே இவ்ளோ கோபப்பட்டா?” என்று கௌதம் நிறுத்த,
“நீ பண்ணியிருக்கிறது அப்படியான விஷயம்” என்ற ஆர்விக், “ஒரு பொண்ணை லவ் பண்றேன்னு ஹோப் கொடுத்து, அவள் காட்டுற காதலை ஃபீல் பண்ணிக்கிட்டே இன்னொரு பொண்ணை லவ் பண்ணியிருக்கேன் சொல்றது உனக்கு சாதரணமா இருக்கலாம். ஆனால் எங்களுக்கு இல்லை. இதுக்கு பேரு வேற” என்று வெடித்தவனின் கண்களில் அத்தனை அனல்.
அந்நேரம், அழைப்பு துண்டிக்கப்பட்டதால் சக்தியாக ஆர்விக்கு அழைத்தான்.
அழைப்பினை எடுத்த ஆர்விக்,
“நானே கூப்பிடுறேன் திரு” எனக்கூறி வைத்திட்டான்.
“யாரு சக்தி மாமாவா?”
“யாரா இருந்தா உனக்கென்ன?” என்ற ஆர்விக், “அவர்கிட்ட சொல்ல உனக்குத் தைரியம் இருக்கா?” என்றான்.
கௌதம் பார்வையை தாழ்த்திட…
“உன் வீட்ல முதலில் உன்னால் சொல்ல முடியுமாடா?” என்ற ஆர்விக், “ஒரு விஷயத்தை தைரியமா உன்னால சொல்ல முடியல அப்படின்னாவே அது தப்பான ஒண்ணுதான்” என்றான்.
“என் லவ் தப்பில்லை ஆர்விக்” என்ற கௌதம், “நான் ரெண்டு பேரையுமே லவ் பண்றேன். தீக்ஷா மேல எவ்ளோ லவ் இருக்கோ, அது அன்வி மேலயும் இருக்கு. நீங்களாவது புரிஞ்சிக்கோங்கா” என்றான்.
கௌதம் சொல்லி முடிக்கும் முன்பு அவனது வாயிலே குத்துவிட்ட ஆர்விக்,
“என்ன சினிமா டயலாக் விடுரியா? கொன்றுவேன்” என மீண்டுமொரு குத்து விட்டான்.
“அடிக்காம பேசுங்க. நான் பொறுமையாதான பேசுறேன்” என்ற கௌதம், வலித்த இடத்தை தொட்டுப் பார்த்தான்.
“நீ பேசுற பேச்சை நான் பொறுமையா வேற கேட்கணுமோ?” என்ற ஆர்விக், “இதுவே உனக்கு கம்மிதான். இதுக்கு முன்ன யாரையும் அடிச்சது இல்லையா? சோ, எப்படி அடிக்கணும் தெரியல” என மீண்டுமொரு குத்துவிட்டு கையினை உதறினான்.
“ஆர்விக் இது சரியில்லை” என பின்னால் நகர்ந்த கௌதம், “என் பக்க நியாயத்தை சொல்ல விடு” என்றான்.
“எதே நியாயமா?” என்ற ஆர்விக், “சரி சொல்லு உன் நியாயத்தை… இன்னொரு பொண்ணை மேரேஜ் பண்ண நினைக்கிற நீ, அப்புறம் எதுக்கு அன்வியை லவ் பண்றேன்னு வீட்ல சொன்ன?” எனக் கேட்டான்.
“என்னை யாரும் தப்பா பேசிடக்கூடாதுன்னு” என்று கௌதம் சொல்லிடும் முன் அவனை அடிக்க கையை ஓங்கிய ஆர்விக், “ச்சைய்… உன்னலாம்” என்று காற்றில் உதறி கீழிறக்கியிருந்தான்.
“அன்வியை லவ் பண்றேன்னு முதல்ல சொன்னது நீதான?” என்ற ஆர்விக், “அப்புறம் எப்படிடா?” என்று முகம் இறுக முன்னால் இரண்டடி வைத்திட, கௌதம் தன்னைப்போல் பின்னால் நகர்ந்திருந்தான்.
“மேல கை வைக்காம கேளுங்க… சொல்றேன்!”
“சரி சொல்லு” என்ற ஆர்விக், தன்னுடைய சட்டை கையினை மடக்கி மேலேற்றியவாறு முன்னால் அடி வைத்திட, கௌதம் மிரண்டுப் பார்த்தான்.
“இல்லை நான் சொல்லல… கிளம்புறேன்” என கௌதம் திரும்பிட,
“இப்போ நீ சொல்லாமப் போனன்னு வைய்யீ… முழுசா வீடு போய் சேரமாட்ட. அப்புறம் ஒரே நேரத்தில் ரெண்டு லவ் பண்ணியும் வாழ்க்கையை வாழாமலே உன் கதை முடிஞ்சுது” என முகத்தில் தன்னுடைய கோபத்தை பிரதிபலிக்காது, வார்த்தைக்கு கொடுத்த அடர்த்தியில் கௌதம் ஆர்விக்கை மிரண்டுப் பார்த்தான்.
“நான் சாஃப்ட் சொன்னல நீ?” என்ற ஆர்விக், “நியாயம் நியாயம்னு சொன்னியே அதை சொல்லு” என்றான்.
“என்ன பயம் காட்டுறீங்களா?”
“பயப்படுற ஆளாடா நீ?” என்ற ஆர்விக், “பயமிருந்திருந்தா இப்படியொரு காரியத்தை செய்திருப்பியா? தைரியமா இங்க வந்திருப்பியா?” என்றான்.
கௌதம் அமைதியாக நிற்க…
“இவ்ளோ நேரம் எதோ சொல்றேன் சொல்றேன்னு சொல்லிட்டு இருந்தியே சொல்லு” என்றான் ஆர்விக்.
“இல்லை வேண்டாம்” என கௌதம் பின்னால் நகர,
“எனக்கு தெரியணுமே! நீயே லவ் சொல்லி, நீயே லவ் பண்ணி, நீயே கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்த காரணம் தெரியணும். சொல்லு!” என மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு ஆர்விக் நிமிர்ந்து நின்றான்.
“அடிக்காம கேளுங்க” என்ற கௌதம், ஆர்விக் கைக்கு எட்டாத வகையில் மேலும் சில அடிகள் பின் வைத்துக் கூறினான்.
“அன்வி எப்பவும் என்னோடதான் சுத்திட்டு இருப்பாள். திடீர்னு ஒருநாள் படிக்கிறேன்னு இங்க வந்துட்டாள். அவள் இல்லாம மனசுல என்னவோ பண்ணுச்சு. அதான் அவள்கிட்ட லவ் சொன்னேன். உண்மையாதான் லவ் பண்ணேன்…” என்ற கௌதம், ஆர்விக் பார்த்தப் பார்வையில் சட்டென்று ஓரடி பின் நகர்ந்திருந்தான்.
“அப்படியே பின்னாலே போய் கடலுக்குள்ள மூழ்கி செத்திடு” என்று ஆர்விக் சொல்லவே, அவனுக்கு நடுங்கியபடி முன் வந்திருந்தான் கௌதம்.
“உண்மையிலே அன்வி மேல எனக்கு ட்ரூ லவ் தான். நான் சொன்னதும் அன்வி அக்செப்ட் பண்ணுவான்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணல. சக்திக்கு பயந்து வேணாம் சொல்லுவாள் நினைச்சேன். ஆனால் உடனே ஓகே சொலிட்டாள். அவளோட லவ் எனக்கு செம ஃபீல் கொடுத்துச்சு. தினம் தினம் அவகிட்ட பேசுறதே அப்படியிருக்கும்” என்று சிலாகித்துக் கூறிய கௌதம் கண்களை மூடி, அவ்வுணர்வை இந்த நிமிடமும் உள்வாங்கியவனாக பிரதிபலிக்க…
ஆர்விக் பட்டென்று அவனுக்கு முதுகுக்காட்டி திரும்பியிருந்தான்.
இதயம் அவனுள் அதிகத்துக்கும் துடித்து அடங்கியது.
அவனுக்கான காதல் மொத்தமும் அவளுக்கானது.
ஆனால் அவளுடைய காதலை இன்னொருவன் அனுபவித்த உணர்வினைக் காட்டிட, நிச்சயம் கேட்கும் வலு ஆர்விக்கிடமில்லை.
துவண்டு நொறுங்கும் வதனத்தை கௌதமுக்கு காட்டிடப் பிடிக்காது விறைத்து நின்றான்.
“வேலைக்காக கோவை போய் அங்கவே தங்குற சிட்டுவேஷன். அப்போதான் என் ஆபீஸில் தீக்ஷாவைப் பார்த்தேன். பார்த்ததும் பிடிச்சது. அந்த பிடிப்புக்கும் காரணம் என்னன்னுலாம் தெரியல. அவளா வந்து என்னை லவ் பண்றேன்னு சொல்றவரை” என்று இடை நிறுத்திய கௌதம், “எனக்கும் அவள் லவ் சொன்னது, எனக்கு அன்வி ஓகே சொன்னப்போ வந்த ஃபீல் கிடைச்சது. லவ் சொல்றதைவிட, கேட்கிறது ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்கும் அப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன். ஏன்னா அன்விக்கிட்ட நான் தான் லவ் சொல்லியிருந்தேன். நான் காட்டுற காதலுக்கு பதில் காதல் காட்டுற அன்வியோட காதலைவிட, நான் விலகிப்போனாலும் என்னையே சுத்தி வந்த தீக்ஷா காதல் என்னை ஒரு மாதிரி ஹைய்யா ஃபீல் பண்ண வைச்சது. அதுக்காக அன்வியை பிரேக் பண்ணனும் தோணல. என்னால அது முடியல. ஆனால் தீக்ஷாவையும் ரொம்ப பிடிச்சுது. அன்வியை லவ் பண்றேன்னு தீக்ஷாகிட்ட சொல்லிட்டேன். அவள் விலகிப்போனாள். என்னால எதுவுமே செய்ய முடியல. அப்போதான் அன்வி என்கிட்ட பேசாமல் இருந்தா எவ்ளோ வருத்தமா இருக்குமோ, அதே வருத்தம் தீக்ஷா என்கிட்ட பேசாம இருந்தப்பவும் ஃபீல் பண்ணேன். அவளையும் என் மனசு விரும்புது தெரிஞ்சுக்கிட்டேன். அன்விக்காக நான் காதல் சொன்னதும் மறுத்த தீக்ஷாவுக்கு என்னோட காதல் வேணுமா இருந்துச்சு. ஸ்ட்ராங்கா என் காதலை அவளால மறுக்க முடியல. ரெண்டு பேரும் சேர்ந்து லவ் பண்ண ஆரம்பிச்சோம். எப்பவும் அன்விக்கிட்ட சொல்லிட சொல்லி தீக்ஷா சொலிட்டே இருப்பாள். ஆனால் என்னால அது முடியல. எனக்கு அன்வி என்கிட்ட பேசவே திணறி மெல்ட் ஆகுற லவ்வை விடவே தோணலை. அன்வியை விட முடியலன்னா என்னோடது உண்மையான லவ் தானே ஆர்விக்?” என்றான்.
பொறுமையாக எடுத்துக் கூறினாலும் கௌதமுக்கு விளங்க வைத்திட முடியாதென அக்கணம் உணர்ந்திட்டான் ஆர்விக்.
“ஒரு பொண்ணை லவ் பண்ணும் போதே இன்னொரு பொண்ணை லவ் பண்றது தப்புன்னு தோணலையா?” ஆயசமாகக் கேட்டிருந்தான் ஆர்விக். கௌதமின் பதில் என்னவாக இருக்குமென்று தெரிந்து.
“வரக்கூடாதுன்னு எதுவும் சட்டமில்லையே! ஒரு நேரத்தில் ஒருத்தர் மேல தான் லவ் வரும் அப்படின்னா, மத்த உறவு மேல நமக்கிருக்க அன்பெல்லாம் பொய்யுன்னு தானே அர்த்தம்?” என்று கௌதம் கேட்டதில், கை விரல்களை குவித்து தன்னுடைய ஆத்திரத்தை மட்டுப்படுத்தினான் ஆர்விக்.
அதற்குமேல் அவன் சொல்லும் நியாயத்தைக் கேட்கும் பொறுமையின்றி நகர்ந்த ஆர்விக்,
“ரெண்டு பேரையும் லவ் பண்ற ஓகே! அப்போ ஏன் மேரேஜ் பண்ணனும் நினைச்சதும் அன்வி வேண்டாம்னு முடிவு பண்ண? அந்தப் பொண்ணை வேண்டாம் முடிவு பண்ணியிருக்கலாமே?” என நின்று திரும்பிக் கேட்டிருந்தான்.
“அன்வியை உண்மையா லவ் பண்ணும்போதே எனக்கு தீக்ஷா மேல லவ் வந்துச்சு… அப்போ தீக்ஷாவை தானே எனக்கு அதிகமா பிடிக்குதுன்னு அர்த்தம்” என்ற கௌதமை அருவெறுப்பாகப் பார்த்து வைத்தான் ஆர்விக்.
“அன்வியை லவ் பண்ணும்போதே, இன்னொரு பொண்ணை பிடிக்குது அப்படின்னா… உனக்கு அன்வி மேல காதலே இல்லைன்னு புரியலையா?”
“நீங்க சொல்ற மாதிரி இல்லை. என்னை உங்களால புரிஞ்சிக்க முடியல” என்ற கௌதம், “இப்பவும் அன்வியை உண்மையா லவ் பண்றேன்” என்றிட…
“உண்மைங்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமாடா உனக்கு?” என்ற ஆர்விக், “இன்னொருவாட்டி உண்மைன்னு சொன்ன… சாவடிச்சிடுவேன்” என்று அதட்டினான்.
“ஒரு நேரத்தில் ஒருத்தர் மேல தான் லவ் வரும். அது லைஃப் லாங் அப்படியே இருக்கும் அப்படிங்கிறதெல்லாம் அந்த காலம் ஆர்விக்… நீங்க எந்த காலத்தில் இருக்கீங்க. ஒரே நேரத்தில் நாலஞ்சு லவ் பண்ற இன்ஸ்டா காலம் இது. கரெண்ட் ட்ரெண்டுக்கு அப்டேட் ஆகுங்க பாஸ்” என்று கௌதம் மிதப்பாகப் புன்னகைக்க…
“ஒழுங்கா ஓடிடு. என்கிட்ட அடி வாங்கி செத்துப்போயிடாத” என்ற ஆர்விக், “நீ சொல்றதெல்லாம் கேட்டு நிக்கிற நான் போய் விழனும்… இந்த தண்ணிக்குள்ள” என்று காலால் அலையை உதைத்தான்.
“மேரேஜ்க்கு எதுக்கு ஏற்பாடு பண்ண?”
“நான் தீக்ஷாவை கல்யாணம் பண்ணிக்கப் போறேன் அப்படின்னா, அன்வி சும்மா இருந்தாலும் சக்தி விடமாட்டாங்க. அவங்களுக்கு எங்க லவ் தெரியும். அன்வியே என்னை வேணாம் சொல்லணும். ஆனா என்மேல தப்பு வரக்கூடாது. அன்வி என்னை வேணாம் சொல்லிட்டதால நான் தீக்ஷாவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் நினைக்கணும். அதுக்காகத்தான் எங்க மேரேஜ் விஷயம் ஏற்பாடு பண்ண வைச்சு சக்தியை என் தங்கச்சி விஷயத்தில் கார்னர் பண்ணி, அன்வியை நோ சொல்ல வைக்க எல்லாம் பிளான் பண்ணேன்” என்ற கௌதம், “வீட்ல நிச்சயித்துக்கு நாள் குறிச்சிட்டாங்க. அதை வைச்சு, சக்தி வெண்மதியை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சாதான் நமக்கு நிச்சயம், கல்யாணம் எல்லாம் சொல்லி அன்வியை ஒரு மாதிரி யோசனைக்குள் கொண்டுவர நினைச்சுதான் இங்க வந்தேன். ஆனால் வரும்போது சக்தி எனக்கு கால் பண்ணாங்க. அதுல அன்வி என்னை பார்க்க கோவை வரை வந்திட்டு பார்க்காமலே வந்துட்டது தெரிஞ்சது. அப்போவே அவளுக்கு என்னோட தீக்ஷா லவ் தெரிஞ்சிடுச்சுன்னு கெஸ் பண்ணிட்டேன். இங்க வந்ததும் அவள் என்னை போகச் சொன்னதுல கன்ஃபார்ம் ஆகிடுச்சு. இனி மறைச்சு யூஸ் இல்லை. அதோட அன்வி நான் அவளை உண்மையா லவ் பண்ணல நினைச்சு ஃபீல் பண்ணிடக்கூடாதே! அதுக்காக என் பக்கத்திலிருந்து எல்லாமே சொல்லிடனும் தோணுச்சு. உங்ககிட்ட சொல்லிட்டேன். வர்றேன்” என்று சில அடிகள் முன் வைத்தவன்,
இறுதியாக ஒன்றைக் கூறிட…
அவன் சொல்லியதெல்லாம், அதிலும் நியாயப்படுத்தியப் பேச்சுக்களைக் கேட்டு எப்படி இதனை உணர்ந்து பிரதிபலிப்பதென தெரியாது நின்றிருந்த ஆர்விக்,
“டேய்” என்று கௌதமின் கழுத்தினைப் பிடித்து இரண்டு இன்ச் மேல் தூக்கியவனாக, தன்னுடைய பிடியை இறுக்கிட, கௌதமின் கண்கள் மேல் சொருகுவதை உணர்ந்து தண்ணீருக்குள் தொப்பென்று போட்டிருந்தான்.
மீண்டும் கௌதம் தன்னை நியாயப்படுத்தி மற்றொன்றைக் கூறிட
“உன்னை” என்று ஆர்விக் முன் வைத்த அடியில் எழுந்து திரும்பிப் பார்க்காமல் ஓடியிருந்தான் கௌதம்.
“இப்போ சொல்லு அவனுக்காக நீ உன்னை வருத்தி அழனுமா?” என்ற ஆர்விக், அவளின் கன்னத்தை துடைத்து…
“அவன் பண்ணது லவ்வே இல்லைடா!” என்றான்.
“ஆர்வி…” அன்விதா உதடுகள் துடிக்கப் பார்த்தாள்.
“காதல்ங்கிறது அன்பு தான் அப்படின்னாலும்… அதுக்கான தனித்தன்மை புரியாதவனுக்காக நீ இவ்ளோ ஃபீல் பண்ண வேண்டியதில்லை” என்ற ஆர்விக்,
“இதோட இது நிக்கப்போறதில்லை. உன் ஃபேமிலில பெரிய பிரச்சினையை கிரியேட் பண்ணும். அதையெல்லாம் தைரியமா ஃபேஸ் பண்ண வேண்டாமா நீ” என அவளின் கைகளில் அழுத்தம் கொடுத்தான்.
“உன்னை வேணாம் சொல்ல வைச்சு, அவனை நல்லவனா காட்ட நினைச்சிருக்கான். இதுல நீ அவனோட உறவுங்கிற அடிப்படையிலான அன்பு கூட உன்மேல இல்லைன்னு புரியாத அவனுக்காக உன்னோட உணர்வுகளை வீணாக்காத” என்ற ஆர்விக்,
“கௌதம் கிட்ட நான் பேசும்போது, திரு லைனில் தான் இருந்தாங்க. கௌதம் அவன் சைட் பேசும்போது கால் கட் பண்ணிட்டேன். ஆனாலும் இதுதான் விஷயம் அப்படின்னு திருவுக்குத் தெரியும். இப்போ உன்னை நினைச்சு உடைஞ்சிப் போயிருப்பார். இங்க கிளம்பி வந்தாலும் வரலாம். உன்னை நினைச்சு தவிச்சு வரவர் முன்னாடி, இந்த விஷயம் என்னை ஒண்ணுமே பண்ணல… நான் வீக் ஆகிடலன்னு தைரியமா நின்னு காட்டு. அதுதான் நல்லாயிருக்கும்” என்றான்.
“ஆர்வி…”
“முடியலன்னு சொல்லவே சொல்லாத அன்வி… இங்க நம்மளால முடியாது அப்படிங்கிறது எதுவுமே இல்லை. காலம் எல்லாத்தையும் ஹீல் பண்ணும். கொஞ்சநாள் போனால் உனக்கே கௌதம் உன்கிட்ட காட்டியதெல்லாம் காதலே இல்லைன்னு புரியும். அப்போ, இப்போ நீ அழுதது, பெயின் ஃபீல் பண்ணதெல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம்ன்னு தோணும். அப்படித் தோண வைக்கப்போற ஒரு விஷயத்துக்காக இப்போ நமக்கான நேரத்தை ஏன் வீணாக்கணும்?” என்ற ஆர்விக்கின் வார்த்தைகள் மெல்ல மெல்ல அவளின் காயம்பட்ட மனதினை ஆற்றுப்படுத்தியது.
“ஒரு நாள்ல மனசு விட்டுப்போற விஷயம் இதில்லைன்னு தெரியும்” என்ற ஆர்விக் தன்னுடைய ஆழ் மன உணர்வுகளை மறைப்பதற்காக வார்த்தைகளற்று மௌனித்தான்.
அவனும் உயிர் சுமக்கும் காதலை மறந்து துறக்க முடியாதுதானே திணறுகிறான்.
அந்நிலையில் இருந்துக்கொண்டே அவளுக்கு எப்படி மறத்தல் குறித்து வலியுறுத்திட முயல்வான்.
இமை தட்டலில் மனதின் ஓசையை அடங்கச் செய்து…
“ஆரம்பத்தில் அன்வியை கௌதம் மிஸ் பண்ணது அஃபெக்ஷன்… அன்வியோட பழகுனது இன்ஃபாக்சுவேஷன்… அன்வியை விட முடியாமல் தடுமாறுவது அவனுக்குள்ள உருவான குற்ற உணர்வு… அவள் மீதான பரிதாபம்… இவ்ளோ தான்… அவனோட லவ்” என்று நன்கு அன்விதாவுக்கு புரியும் வகையில் எளிதாகக் கூறியிருந்தான்.
அதுவரை மனதை சுழன்றடித்துக் கொண்டிருந்த பெரும் தவிப்பின் சுழல் அழுத்தம் குறைந்து வலுவிழந்ததை உணர்ந்தாள்.
“தேங்க்ஸ் ஆர்வி” என முழுதாக முடியாவிட்டாலும், மென் முறுவலை இதழில் காட்டியிருந்தாள்.
“குட்… திஸ் இஸ் மை அன்வி” என்று அவளின் கன்னத்தில் தட்டிய ஆர்விக்,
“போலாமா?” என எழுந்து நின்றான்.
அக்கணம் அவனுக்கு சக்தியிடமிருந்து அழைப்பு வந்தது.
“சொல்லுங்க திரு… எங்க இருக்கீங்க? பிக்கப் பண்ண நான் வரணுமா?” என்று ஆர்விக் கேட்க,
“என்னடா பண்ணி வைச்சிருக்க?” என்று சக்தி கேட்டதில் ஆர்விக்கின் இதழ் கடையோரம் நெளிந்து கன்னத்தில் குவிந்து நின்றது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
36
+1
1
+1
3

