

#அன்பின்_அதீதம்
குடும்பத்து உறவுகளுக்கு இடையே, அன்பின் அதீதத்தால் மட்டுமே இணைந்திட்ட இரு நெஞ்சங்களின் காதல் கதை.
அன்பின் அதீதம் – பிரியதர்ஷினி S – விலை 320rs (நேரடி புத்தகம்)
Pre order availabe : 8124489417
புத்தகம் வாங்க பிரியா நிலையம்:
+91 94444 62284
Nivitha distribution
99940 47771 / 99623 18439
For srilanka orders (local courier charges only apply)
0777315574
*****************
காலை கனவினில் காதல் கொண்டேன்
அத்தியாயம் 1
‘அவள் என்னவள் அல்ல…
ஆனால், அவளால் மட்டுமே என்னுள் ஆயிரமாயிரம் யுத்தங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன!’
நித்தம் ஒரு கனவு
அவளுடன் நான் சேரவே!
கனவுக்குள் மட்டுமே…
அவளுடனான என் காதல் வாழ்வு!
கனவுக்குள் மட்டுமே…
நானும் அவளும் காதல் கொள்கிறோம்!
நிஜத்தில் சொல்லவே முடியாத என் காதலை…
தினம் தினம் கனவில்,
அவள் சொல்லிட நான் கேட்கிறேன்!
ஒருமுறையேனும் நிஜம் உயிர் கொள்ளுமா? (கொல்லுமா?).
***********************
‘ஃபிரண்ட்ஸ் இவன்ட் மேனேஜ்மென்ட்.’
“என்னடா இன்னுமா லைட் செட் பண்ற?”
“இன்னும் கொஞ்ச நேரத்துல பொண்ணு வந்திடும் பூபேஷ். எப்போ அந்த நேம் போர்ட்ல ஃப்ளவர் டெக்கரேட் கம்ப்ளீட் பண்ணுவ?”
“நேம் பிக்ஸ் பண்ணாம வேற இருக்கு!”
“பொண்ணு நடந்து வர ஆர்ச் பாத் வே’க்கு (Arch path way) பர்பிள் கலர் டாலியா பூங்கொத்து அங்கங்க வைக்க சொன்னேன். அதை பண்ணாம இங்க என்ன பண்ணிட்டு இருக்க தான்யா?”
அங்கிருக்கும் அனைவரையும் அதீத வேகத்தில் வேலைகள் செய்ய வைத்துக் கொண்டிருந்தான் அவன்.
இரவு எட்டு மணி.
“பீச் சைட் வொர்க் முடிஞ்சுதா யாஷ்?”
“இப்போ நீயேன் டென்ஷன் ஆகிட்டு இருக்க?” என்ற யாஷ், “கொஞ்சம் சில்லாகு மச்சி. பீச் சைட் எல்லா செட்டப்பும் பக்கா! கேண்டில் லைட்ஸ் மட்டும் ஆன் பண்ணா போதும்” என்றான்.
“உண்மையை சொல்லு… இது யாருக்கான இவன்ட்?” என்றான் பூபேஷ்.
“டேய்… என்ன டவுட் உனக்கு?” என்றான் அவன்.
“இந்த செட்டப்பில் கஸ்டமைஸ் பண்ண பிளவர், கலர்ஸ், கேக் பிளேவர் எல்லாமே உன்னோட பேவரைட்” என்றான் யாஷ்.
“அதுக்கு?” என்றவன், “இந்த மாதிரி டேஸ்ட் வேற யாருக்கும் இருக்காதா?” என்றான்.
“மே பீ” என்ற பூபேஷ், “அவள் வந்தா தெரிஞ்சிடும்” என்றான்.
“இந்த லாஸ்ட் மினிட் வொர்க் எதுக்கு அக்செப்ட் பண்ணடா? அதுவும் லவ் ப்ரொபோஸல் இவன்ட். புதுசா இருக்கு” என்றாள் தான்யா.
“புதுசாதான் இருக்கு. பட் அன்வி கேட்கும் போது நோ சொல்ல முடியல. யாரோ அவளோட ஃபிரண்ட் போல” என்ற அவன், “இதுக்காக நாம எக்ஸ்ட்ரா பண்ணது ஃப்ளவர்ஸ் வர வைச்சதுதான். வேறென்ன? நாம சொல்றதை செய்ய ஆளிருக்கு. இதோ இப்போ எல்லாம் செட் பண்ணியாச்சே” என்றான்.
“அன்வியை எதுவும் சொன்னா உடனே சப்போர்ட்டுக்கு வந்திடுவியே” என்ற பூபேஷ், “இனிமே இந்த மாதிரி கடைசி நேர இவன்ட் எதுவும் ஒத்துக்காதடா… ரெண்டு மணி நேரத்தில் எவ்ளோ பண்ணியிருக்கோம் பாரு. நம்ம வொர்க்கர்ஸ்க்கும் ஏகப்பட்ட வேலை” என்றான்.
“புரியுதுடா… ஆனால் அன்வி” என்றவன் முடிக்கும் முன்னர், “லாஸ்ட் வீக் நீ கூட உன் ரிலேட்டிவ் ஒருத்தங்க பங்ஷன் அப்படின்னு கடைசி நேரத்தில்தான எல்லாம் பண்ணோம். அன்வியும் தவிர்க்க முடியாம ஓகே சொல்லியிருப்பாள். விடுங்க. அதான் எல்லாம் ரெடி பண்ணியாச்சே” என்றாள் தான்யா.
“ஆமா அன்வி எங்க?” என்றான் யாஷ்.
“கால் பண்ணேன். பக்கத்துல வந்துட்டேன் சொன்னாள்” என்றவன், “ப்ரொபோஸ் பண்ண செட் பண்ண இடத்தில் எல்லாம் சரியா இருக்கான்னு வன்ஸ் செக் பண்ணிட்டு வரேன்” என்று சென்றான்.
அவன் நகர்ந்திட அன்விதா அங்கு வந்து சேர்ந்தாள்.
“வேலை சொன்னதோட சரி. இப்போ வேலையெல்லாம் முடிஞ்சதும் வர” என்ற தான்யா, “எங்க உன்னோட அந்த ஃப்ரெண்ட்?” என்று அவளுக்கு பின்னால் எட்டிப் பார்த்தாள்.
“அவன் எங்க?”
“இப்போ தான் பீச் சைட் போனான்” என்றான் பூபேஷ்.
“நாமளும் போகலாம்” என்று அன்விதா நகர, யாஷ் அவளின் கரம் பிடித்து நிறுத்தியிருந்தான்.
“நில்லு… நாம போலாம் அப்படின்னா, உன் ஃப்ரெண்ட் எங்க? அவங்க லவ் சொல்லப்போற பையன் எங்க?” எனக்கேட்டான் யாஷ்.
“சொல்றேன்… சொல்றேன்…” என்ற அன்விதா, மற்ற மூவருடன் நடக்கவிருக்கும் நிகழ்வுக்கான இடம் ஆரம்பிக்கும் இடத்திற்கு வந்திருந்தனர்.
“ஃபயர் பலூன்ஸ் ரெடியா? வீடியோ யார் எடுக்கிறீங்க?” எனக் கேட்டாள் அன்விதா.
மூவரும் ஒன்றுபோல் அவளைப் பார்த்து நின்றனரே தவிர பதில் கூறவே இல்லை.
“என்னங்கடா?” என்ற அன்விதா, அங்கு மலர்களுக்கு நடுவில் வைக்கப்பட்டிருக்கும் சிறு பெயர்ப்பலகை அருகே சென்றாள்.
“நேம் நீயே வந்து செட் பண்றேன் சொன்னியாம்?” என்ற பூபேஷ், “என்ன நேம்?” என்றான்.
“பொண்ணுதான ப்ரொபோஸ் பண்ணப்போறாங்க… அப்போ பையன் நேம் தான் வைக்கணும்” என்றான் யாஷ்.
“எஸ் யூ ஆர் கரெக்ட்” என்ற அன்விதா, தன்னுடைய ஜீன் பாக்கெட்டிலிருந்து ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்களாக எடுத்து பலகையில் ஒட்டிட, பெயர் முழுமை பெறும் முன்னரே மூவரும் ஆச்சரியத்தில் விழிகள் விரித்து, அவள் வைத்த பெயரை உச்சரித்திருந்தனர்.
“எப்படியிருக்கு?” அன்விதா கேட்க,
“அன்வி” என்று விழிகள் விரித்தவர்கள்,
“ஆர் யூ சீரியஸ்?” என்றனர்.
“எஸ்” என்று கண்கள் சிமிட்டிய அன்விதா, “ப்ரொபோஸ் பண்ணிட்டு வரேன்” என்றாள்.
பலகையை கடந்து வளைவு அமைப்பில் நீண்ட பாதை. கடற்கரையில் அலை தொடும் இடம் வரை அமைக்கப்பட்டிருந்தது. அதில் குட்டி குட்டி வண்ண மின் விளக்குகள் ஒளிர ஆங்காங்கே ஊதா நிற டாலியா பூங்கொத்துகள், மற்றும் அவ்விடம் முழுக்க இளஞ்சிவப்பு நிற ஆர்க்கிட் மலர்கள் நிறைந்திருந்தன.
வளைவு முடியும் இடத்தில் சிறு மேடை. நான்கு புறமும் தூண் அமைத்து, வெள்ளை மற்றும் ஆகாய நீல நிறத்தில் துணிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேடையின் மையத்தில் வட்ட வடிவ மேசையும், இரு நாற்காலிகளும் போடப்பட்டிருக்க, மேசையில் இதய வடிவ கேக் வைக்கப்பட்டிருந்தது.
அம்மேடை சுற்றி மெழுகுவர்த்தி அமைப்பிலான மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. அதனை அவன் சரிப்பார்த்துக்கொண்டிருக்க, பட்டென்று வெடித்த ஒலியில் திரும்பிப்பார்த்தான்.
அன்விதா வளைவுக்குள் அடி வைத்ததும்…
“பூம் த கிராக்கர்” என்றாள்.
விண்ணில் சென்று வெடித்து பூவாய் தூவும் பட்டாசு ஒன்றினை யாஷ் வெடித்திட, அதன் சத்தத்தில் தான் அவன் இவர்கள் பக்கம் திரும்பியிருந்தான்.
‘வந்தாச்சுப்போல’ என நினைத்தவன், மேடையை விட்டு இறங்கிட முயல, பாதையில் அன்விதாவின் ஒவ்வொரு அடிக்கும் அவளைத் தொடர்ந்து விளக்குகள் ஒளிர்ந்திட… ஒன்றும் புரியாது அசைவற்று நின்றான்.
அன்விதா அவனை நெருங்கியதும்…
“என்ன அன்வி செக்கிங்கா” என்றவன், “கேண்டில் லைட்சும் செக் பண்ணிடலாம்” என்று திரும்பி அதற்கான பொத்தானை அழுத்திட அவ்விடம் நட்சத்திரங்களை கொட்டி குவித்த இடமாக ஜொலித்தது.
“ஆர்வி… ஆர்விக்” என்றழைத்த அன்விதா, அவன் திரும்பியதும், ஆர்விக் முன் ஒரு கால் குத்திட்டு மண்டியிட்டு, ஊதா வர்ண டாலியா பூங்கொத்தை ஒரு கையால் நீட்டி, மற்றொரு கை விரலை இதயம் போல் காண்பித்தாள்.
ஆர்விக் என்னவென்று யூகிக்கும் முன்னரே,
“லவ் யூ ஆர்வி… ஆர்விக்” என்றிருந்தாள்.
மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து நின்ற ஆர்விக்,
“என்னை ப்ரொபோஸ் பண்ண என்னையவே வேலை செய்ய வைச்சிருக்க” என்று தாடையை நீவினான்.
“டூ யூ லவ் மீ?” முகம் முழுக்க சிவந்து விழிகள் வழி அவனுள் காதலை மின்னலாய் செலுத்தியவளாகக் கேட்டாள்.
ஆர்விக்கின் மனம் முழுக்க அன்விதா மீது சொல்ல முடியா காதல் ஆழம் கொண்டிருக்க, அவளே இக்கணம் காதலைக் கேட்டு நிற்க, பதிலை சொல்ல முயன்ற நொடி…
ஒருபக்கம் தீ மூட்டிய பலூன்கள் பறந்திட, மற்றொரு பக்கம் படபடவென வான வெடிகள் விண்ணில் வெடித்தது.
திடீரென வெடித்த பட்டாசு சத்தத்தில் உடல் அதிர நின்றவன், செவி அருகே ஒலித்த வெடி சத்தத்தில் பதறி எழுந்திருந்தான். உறக்கத்தின் பிடியில் இமைகளை பிரிக்க முடியாது பிரித்தவனின் கண்கள் நிஜம் உணர்ந்து, இதழில் புன்னகையை படரவிட்டிருந்தான்.
ஆர்விக் முன் அன்விதா பலூன் ஊதிக் கொண்டிருந்தாள்.
‘இந்த பலூன் வெடிச்சு தான் கனவு கலைஞ்சுதா?’ கனவாக இருப்பினும் இதயத்தின் சில்லென்ற இதத்தை உள்ளங்கை வைத்து உள்வாங்கினான்.
“என்னடா கனவில் யாரு? தூங்கி எழும்போதே பளிச்சுன்னு சிரிச்சிட்டு இருக்க?” என்று அவனருகில் வந்தமர்ந்தாள் அன்விதா.
ஆர்விக்கிடம் முறுவல் விரிந்தது. பதிலில்லை.
வாயில் பலூனை வைத்து ஊதிய அன்விதா, பார்வையாலே என்னவென்று மீண்டும் வினவினாள்.
“நைட் ஸ்டேஜ் தீம் டிசைன் பண்ணிட்டு அப்படியே இங்கேயே கோச்சிலே தூங்கிட்டேன் போல” என்ற ஆர்விக், “நீயென்ன இப்போ பலூன் ஊதி வெடிச்சிட்டு இருக்க?” எனக் கேட்டான்.
“மறந்துட்டியா? நம்ம பார்ட்டி ஹால்ல த்ரீ இயர் ஓல்ட் பேபிக்கு பர்த்டே பங்ஷன். கேக் நம்மகிட்டவே ஆர்டர் பண்ணியிருக்காங்க. பேபிக்கு பலூன் ரொம்ப பிடிக்குமாம். கேக் டாப்பில் செட் பண்ண சொன்னாங்க. அதுக்குத்தான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன். பட் வெடிச்சிடுது” என்ற அன்விதா மீண்டும் கேக்கின் மீது பலூன் வைத்திட முயற்சித்தாள்.
“சாக்லெட்டில் பலூன் மாதிரி ரெடி பண்ணி, ஸ்டிக் பண்ணிடு அன்வி. இது எப்போ வெடிக்கும்னு கவனிச்சிட்டே இருக்கணும்” என்று ஆர்விக் சொல்ல…
“ஹீ இஸ் கரெக்ட்” என்று வந்தான் யாஷ்.
“குட் ஐடியா” என்ற அன்விதா, பேக்கிங் அறைக்குள் சென்றிட,
“நைட் வீட்டுக்கு போகலையா நீ? அம்மா கால் பண்ணப்போவும் எடுக்கலன்னு சொன்னாங்க” எனக் கூறினான் யாஷ்.
“ஹ்ம்ம்… போறேன் டா” என்ற ஆர்விக்கின் முகம் இன்னும் ஒளிர்ந்திருந்தது.
“என்னடா இன்னைக்கும் அதே கனவா?”
ஆர்விக்கின் மின்னிய கண்களே யாஷ்க்கான பதிலை கொடுத்திருந்தது.
“டெய்லி இப்படி கனவு கண்டுட்டு இருக்கிறதுக்கு… நீயே அவகிட்ட ப்ரொபோஸ் பண்ணிடலாம்” என்றான் யாஷ்.
“எப்படிடா சொல்றது?”
கேட்ட ஆர்விக்கை முறைத்து வைத்த யாஷ்,
“நீ லேட் பண்ணதால தான். இன்னொருத்தன் குறுக்க வந்து புக் பண்ணிட்டான்” என்றான். கடுப்போடு.
“நான் சொல்லி அவள் ஓகே சொல்றதைவிட, அவள் சொல்லி நான் கேட்கணும்டா… அது இன்னும் ஃபீல் குட்டா இருக்கும். அதுக்காக வெயிட் பண்ணேன். அப்புறம் தான தெரிஞ்சுது அவள் மனசுல வேற ஒருத்தங்க இருக்காங்கன்னு” என்று ஆர்விக், “தினம் வர இந்த கனவு, கற்பனையா அவளோட ஒரு வாழ்க்கை. இதுவே நல்லாயிருக்கு யாஷ்” என்றான். ரசனையாக சிலாகித்து.
“முத்திப்போச்சு…” என்றான் யாஷ்.
“காதலிக்கிறதை விட காதலிக்கப்படுறது வேற மாதிரி ஃபீல் டா. அதெல்லாம் சொன்னா புரியாது. அதை எதிர்ப்பார்த்து வெயிட் பண்ணேன். இப்படியாகும் நினைக்கல” என்ற ஆர்விக், “யாருக்கு யாருன்னு இருக்கோ அதுதான் நடக்கும்” என்றான்.
“ஏழு வருஷ ஃபிரண்ட்ஷிப். அவளை பார்த்ததுலேர்ந்து லவ் பண்ணிட்டு இருக்க. சொல்றதுக்கு என்னடா? உனக்கு லவ் வந்ததும் சொல்லியிருந்தா… ஒருதலை ராகம் வாசிக்க வேண்டிய நிலைம வந்திருக்காது” என்ற யாஷிடம் பெரும் ஆதங்கம்.
“எது நடக்கணும் இருக்கோ அதுதான் நடக்கும்.” ஆர்விக்கின் புன்னகை கொஞ்சமும் மறையவில்லை.
“எவ்ளோ நாளுக்கு இப்படி கனவிலே லவ் பண்ணி வாழ்ந்துட்டு இருப்ப?” என்ற யாஷ், “அவளுக்கு அவனோட மேரேஜ் ஆகுற வரை லவ் பண்ணுவியா? அதுக்கு அப்புறம்?” என்றான். காட்டமாக.
“எனக்கும் என் காதலுக்கும் நான் பர்ஸ்ட் பார்த்த என் அன்வி போதும். இன்னொருத்தரை விரும்புற பொண்ணை நினைச்சிட்டு இருக்கிற அளவுக்கு என் காதல் தரம் இறங்கல. எப்போ அன்விதா மனசுல இன்னொரு பெர்சன் இருக்காங்கன்னு தெரிஞ்சிதோ அப்போவே என் காதலை எனக்குள்ள மறைச்சிக்கிட்டேன். இப்போ எனக்குள்ள இருக்கிறது என் அன்வி மட்டும் தான்” என்ற ஆர்விக், “கனவுல கூட என்னோட அன்விதான் என்கிட்ட லவ் சொல்றா! நானில்லை” என்றான்.
“உன் காதல் கண்ணியமானது தான். ஒத்துக்கிறேன். ஆனாலும் வெறும் கனவு மட்டுமே வாழ்க்கை இல்லை. அவளுக்கு அவளோட மாமா பையன் இருக்கான். நீ மொத்தமா உன்னோட காதல்ல இருந்து மூவ் ஆன் ஆகப்பாரு” என்றான் யாஷ்.
“ட்ரை பண்ணிட்டு இருக்கேன்” என்ற ஆர்விக் வார்த்தையை முடிக்கும் முன்…
“அந்த கனவு காணுறதை பர்ஸ்ட் நிறுத்து. ஈசியா ஓவர் கம் பண்ணிடுவ” என்று சிடுசிடுத்தான் யாஷ்.
“கனவு வரதை நான் எப்படிடா தடுக்கிறது?” என்ற ஆர்விக், “அதுக்கும் ட்ரை பண்றேன்” என்றான்.
“நீ அவளை நினைச்சு உருகாம தூங்கினாலே போதும்” என யாஷ் சிடுசிடுக்க ஆர்விக் புன்னகைத்தான்.
“பர்ஸ்ட் இப்படி சிரிக்கிறதை நிறுத்துடா” என்ற யாஷ், “உன்கிட்ட இதைப்பத்தி பேசினா எனக்குத்தான் தலைவலி வரும். நான் போய் வேலையை பாக்குறேன். நீ வீட்டுக்கு கிளம்பு” என்று நகர,
அன்விதா விட்டுச் சென்ற அவளின் அலைபேசி ஒலித்தது.
திரையில் ஒளிர்ந்த, “கௌதம்” எனும் பெயரில் யாஷ் கடுகடுவென ஆர்விக்கை பார்க்க…
ஆர்விக்கின் அதரம் எப்போதுமான புன்னகையை சிந்தியது.
தன்னுடைய அலைபேசியின் ஒலியில் உள்ளிருந்து ஓடி வந்த அன்விதா, அழைப்பினை ஏற்று,
“ஹாய் மாமா” என்று ஆர்ப்பரிப்பாய் துள்ளி குதித்திட…
மனதில் மூண்ட வலியை, தன்னை முறைத்துக் கொண்டிருந்த யாஷ்க்கு காட்டாது வெளியேறியிருந்தான் ஆர்விக்.
“ஹாய் மாமா” என்று உற்சாகத்தில் துள்ளி குதித்த அன்விதாவை விரக்தியோடு பார்த்த யாஷ் செல்லும் நண்பனின் வலியை உணர்ந்தவனாக அவ்விடம் விட்டு அகன்றான்.
“என்ன மேடம் காலையிலே ரொம்ப குஷியா இருக்கீங்க?” கௌதம் கேட்டிட,
“நைட்டு ஊருக்கு கிளம்புறேன். நாளைக்கு ஏர்லி மார்னிங் உங்களை பார்த்திடுவனே! அதுக்குத்தான்” என்றாள்.
“ஹான்” என்ற கௌதம், “நாளைக்கு நீ வரும்போது நான் இங்க இருக்கமாட்டேன் நினைக்கிறேன்” என்றான்.
“ஏனாம்?” சட்டென்று அவளின் உற்சாகம் எல்லாம் வடிந்துவிட்டது.
“எனக்கு லீவ் கிடைக்கல அன்வி” என்றான்.
“ஆமா ஆமா கிடைக்காதுதான். லாஸ்ட் மினிட்ல போய் கேட்டா எப்படி லீவ் கிடைக்கும்?” என்ற அன்விதா, “எயிட் மன்த் ஆச்சு மாமா உன்னை பார்த்து” என்றாள்.
“அப்படியே பார்த்ததும் ஹக் பண்ணி நச்சுன்னு கிஸ் பண்ணுவ பாரு… ரொம்பத்தான் உருகுற போடி” என்றவனிடத்தில் அவளுக்குக் காட்டிடாத புன்னகை கன்னம் குவிந்தது.
“இந்த டைம் கொடுக்கலாம் நினைச்சேன்…” என்று சத்தமின்றி சிரித்தவள், “மிஸ் ஆகிப்போச்சு. அதான் நீ வரலையே! இனி எனக்கு எப்போ தோணுதோ?” என்று இழுத்துக் கூறினாள்.
“அடேய்… இதெல்லாம் அநியாயம் டா” என்ற கௌதம்,
“மிஸ் யூ டி” என்றிருந்தான். ஆயிரமாயிரம் உணர்வுகள் சுழன்று நின்றது அவனின் அவ்வார்த்தைகளில்.
“நானும்” என்றவள், “நான் வேணுன்னா ஊருக்கு போகாம நேரா அங்க வரட்டுமா?” எனக் கேட்டாள்.
“வீட்ல என்ன சொல்லுவ?” என்றான் கௌதம்.
“லாஸ்ட் மினிட் பெரிய இவன்ட் புக் ஆகியிருக்கு. சோ, வர முடியல” சொல்லுவேன்.
“மாம்ஸ் கிட்ட பொய் சொல்லிடுவியா நீ?” என்றான்.
“ஆமால… அண்ணாகிட்ட பொய் சொல்ல முடியாதே” என்றாள். அவளின் சுருங்கிய வதனம் பாராமலே அவனுக்குத் தெரிந்தது.
“அந்த முகத்தை ரொம்ப சுருக்காதடி” என்ற கௌதம், “இந்த டைம் இல்லன்னா என்ன? அப்புறம் பார்ப்போம். அதான் வீடியோ காலில் தினம் பாக்குறமே” என்றான்.
“போடா” என்ற அன்விதா, “மிஸ் யூ” என்றாள்.
“இந்த டைம் வீட்ல சொல்லலாம் நினைச்சேன்” என்ற கௌதம், “வைஷ்ணவிக்கு கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சா நல்லாயிருக்கும்” என்றான்.
“ம்ம்… பார்ப்போம். மாமா முடிவெடுக்கணுமே” என்றாள்.
“உன் மாமா இல்லை… என் மாமா, அதான் உன் அப்பா மாம்ஸ்க்கு கல்யாணம் பண்ணனும் முடிவெடுத்தா போதும்” என்ற கௌதமின் பேச்சு அன்விதாவுக்கு புரியவில்லை.
“வைஷூக்கு கல்யாணம் நடக்க, அண்ணா கல்யாணம் பத்தி அப்பா ஏன் முடிவெடுக்கணும்?”
“ஹேய்… என் அப்பாவுக்கு மாமாக்கு வைஷூவை மேரேஜ் பண்ணி வைக்கத்தான் விருப்பம். பொண்ணு வீட்ல எப்படி பையன் கொடுங்க கேட்பாங்க. உங்க அப்பா தான வந்து கேட்கணும். அதுக்கு சொன்னேன்” என்று கௌதம் விளக்கிட,
“இதுல நம்மளோட விருப்பம் எதிர்ப்பார்ப்பு தாண்டி, அண்ணாவுக்கும் வைஷூக்கும் சம்மதம் இருக்கணும்” என்றாள் அன்விதா.
“இல்லாம எப்படி இருக்கும்? நீயும் நானும் லவ் பண்ணலையா? அப்போ அது மாதிரி அவங்களுக்கும் விருப்பம் இருக்கலாம்” என்றான்.
“எப்படி நீயா சொல்ற?” என்ற அன்விதா, “ஒருத்தவங்க கூடவே இருக்காங்க அப்படிங்கிறதுக்காக லவ் வருமா? பிடிக்குமா?” என்றாள்.
“யாரோ ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு நம்ம கூடவே வளர்ந்த, நமக்கு நல்லா தெரிஞ்ச பெர்சன கல்யாணம் பண்ணிக்கிறது நல்லது தான” என்ற கௌதமின் கூற்று அன்விதாவுக்கு ஏற்புடையதாக இல்லை.
“நல்லா தெரியும் அப்படிங்கிறதுக்காக மேரேஜ் பண்ண முடியுமா மாமா?” எனக் கேட்டிருந்தாள்.
“உன் அண்ணாவே ஓகே சொன்னாலும் நீ ஒத்துக்கமாட்ட போல” என்ற கௌதம், “பெரியவங்க முடிவு பண்ணா ஓகே சொல்லித்தான ஆகணும். அரேஞ்ச் மேரேஜ்ஜெல்லாம் அப்படித்தான நடக்குது” என்றான்.
“எஸ்… பட் அரேஞ்ச் மேரேஜ்லயும் பொண்ணு, பையனோட விருப்பம் முக்கியம்” என்றாள். அழுத்தமாக.
“இப்போ நமக்குள்ள எதுக்கு ஆர்க்யூ… வேண்டாம் விடு. பொண்ணும், பையனும் நம்ம வீட்லே இருக்கும்போது, பெரியவங்களுக்கே அவங்களை தான் ஜோடி சேர்க்கணும் தோணும்” என்றான்.
“அப்போ நமக்கும் கல்யாணம் பண்ணி வைக்க அவங்களுக்கே தோணுமா?” என வினவினாள் அன்விதா.
“மே பீ” என்ற கௌதம், “கிளம்பிட்டு மெசேஜ் பண்ணு” என்றவனாக அழைப்பை வைத்திருந்தான்.
இவர்கள் சாதரணமாக பேசிக்கொண்ட இந்த விடயம் தான் குடும்பத்திற்குள் பெரும் சூறாவளியை ஏற்படுத்த இருக்கிறது.
*******************************
ஆர்விக் வீட்டிற்கு வந்துசேர…
அவனின் அன்னை அனிதா தன்னுடைய பணிக்குச் செல்ல கிளம்பியிருந்தார்.
“குட்மார்னிங்ம்மா” என்று அவரின் கழுத்தை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தம் வைத்தவன், “நான் ட்ராப் பண்றேன்” என்றான்.
“வேண்டாம் ஆர்வி. நான் போய்க்கிறேன். நீ நைட் வொர்க் பண்ணி டயர்டா இருப்ப. சாப்பிட்டு போய் தூங்கு. இன்னைக்கு ஹாஃப் டே தான் லெக்ச்சர். ரெண்டு மணிக்கெல்லாம் வந்திடுவேன்” என்றார்.
“இட்ஸ் ஓகேம்மா!” என்ற ஆர்விக், “ஆபீஸ்லே தூங்கினேன். டயர்டெல்லாம் இல்லை” என்றவன், “உங்களை காலேஜ் ட்ராப் பண்ற சாக்கில் கலர்ஃபுல்லா நாலு பொண்ணுங்களை சைட் அடிச்சிக்கிறனே” என்று ஒற்றை கண்ணடித்தான். இதழில் தேக்கிய சிறு புன்னகையோடு.
“அடிச்சிட்டாலும்” என்று அவனின் கன்னத்தில் கை வைத்தவர், “இன்னைக்கு என்ன ட்ரீம்?” என்றவராக வீட்டை பூட்டிக்கொண்டு அவனுடன் வெளியேறினார்.
“இப்போ கொஞ்சநாளா ஒரே ட்ரீம் தான் அனி!” என்றவன், “பட் நடக்காதுன்னு தெரியும். சோ, எக்ஸ்பெக்ட் எதுவும் வச்சிக்கல” என்றான்.
“ஹ்ம்ம்” என்ற அனிதா, “யாஷ் கூடவே இருக்கான். ஆனால் மத்த மூணு பேரும் வீட்டுக்கு வந்தே டூ மன்த்ஸ் ஆகுது. இந்த வீக்கென்ட் வரச்சொல்லு” என்றார்.
“ஷ்யூர்… அவளுக்கு நீங்க செய்யுற வட்டலாப்பம் சாப்பிடணும் போல இருக்குன்னு டூ டேஸ் முன்னாடி சொன்னாள். நான் தான் மறந்துட்டேன்” என்றான்.
“சண்டே செய்திடலாம்” என்ற அனிதா, காரினை செலுத்திக் கொண்டிருந்த மகனின் முகத்தையே பார்த்திருந்தார்.
முதல் முறை கனவென வந்ததும் அனிதாவிடம் தான் சொல்லியிருந்தான்.
“காலையில எழும்புறதுக்கு முன்ன ஒரு கனவும்மா. நல்ல சில் பிளேஸ். எல்லா பக்கமும் கலர் கலர் பிளவர்ஸ். என்னை ஒரு பொண்ணு கூப்பிடுறாள். நான் திரும்பி பார்க்கிறேன், முகம் தெரியவே இல்லை. டக்குன்னு மறைஞ்சிட்டாள். தூக்கமும் போயிடுச்சு” என்றான் ஆர்விக்.
அப்போதுதான் அவன் கல்லூரி முதல் வருடம் சேர்ந்திருந்தான்.
ஆர்விக் கனவை சொல்லியதும், மெல்லியதாக சிரித்த அனிதா,
“உன் வயசுக்கு இப்படித்தான் கனவு வரும்” என்றதோடு, “காலேஜில் யாரையும் சைட் அடிக்கிறியாடா?” எனக் கேட்டார். மகனைப் பற்றித் தெரிந்தும் குறும்புடன்.
“போங்கம்மா… அப்படிலாம் எதுவுமில்லை. அப்படி யாரும் இருந்தா வந்து சொல்றேன்” என்று சொல்லியிருந்தான்.
அன்று முதல் எப்போதாவது இதுபோன்று கனவு வரும். ஆனால் ஒருபோதும் கனவில் வரும் பெண்ணின் முகத்தினை ஆர்விக் பார்த்தது இல்லை.
அப்போதெல்லாம் சாதரணமாக ஏதோ கனவென ஒதுக்கி வந்த அனிதாவால், சில மாதங்களுக்குப் பின்னர், “என் ட்ரீம் கேர்ள் பார்த்துட்டேம்மா. பார்த்ததும் லவ் வந்திருச்சு நினைக்கிறேன்” என்று சொல்லியவனை ஆராய்ந்துப் பார்த்தார்.
அவன் விளையாடவில்லை என்பது அவனது முகம் காட்டிய தீவிரம் உணர்த்தியது.
அன்று உணர்ந்த அதே தீவிரம் இப்போதும் ஆர்விக்கின் முகத்தில். ஆனால் அன்னையாய் அவனது இந்த தீவிரம் அவருக்கு பெரும் வலி.
மகன் விரும்புவது கிடைக்குமென்றால் மகிழ்வுகொள்ளலாம். ஆனால் இங்கு கிடைக்காதெனத் தெரிந்தும், அவனிடமுள்ள இந்த காதல் எப்படி முடிவுபெறும் என்ற பெரும் கலக்கம் அவருள்.
ஆனால் ஒருபோதும் தன்னுடைய கவலையை காண்பித்து, “இந்த காதலை நீ விட்டுவிடு” என்று அனிதா சொல்லியதில்லை.
அனிதாவுக்கு மகனின் வாழ்வு கிடைக்காத இந்த காதலில் தான் உள்ளதென்று தெரிந்தும், எப்படி வேண்டாமென்று சொல்லிட முடியும்.
அவரின் மொத்த உலகம் அவன் மட்டுமே! அவருக்கு அவனின் மகிழ்வு ஒன்றே சந்தோஷமாக இருந்திட, அவன் மகிழ்வுகொள்ளும் விஷயத்தை எங்கனம் மறுப்பார்.
நிச்சயம் இதிலிருந்து அவனாக வெளிவந்துவிடுவான் எனும் நம்பிக்கை மட்டும் புள்ளியளவில் அவரின் மனதின் ஓரம் தங்கியுள்ளது.
“காலேஜ் வந்திடுச்சும்மா” என்ற ஆர்விக், “நூன் டைம் கால் பண்ணுங்க. நானே பிக்கப் பண்றேன்” என்றான்.
“ம்ம்” என்ற அனிதா கார் கதவினை திறந்து இறங்க முயல, அவரின் கையை பிடித்து தடுத்த ஆர்விக்…
“வேணாம் நினைக்கவே தோண மாட்டேங்குதும்மா. அப்புறம் எப்படி மூவ் ஆன் ஆக முடியும்?” என்றான்.
“இப்போ யாரு வேணாம் நினைக்க சொன்னா?” என்ற அனிதா, “நீயா வந்து அம்மா எனக்கு பொண்ணு பாருங்கன்னு சொல்ற வரைக்கும் உனக்கு கல்யாணம் இல்லை. கடைசி வரை இப்படியே சிங்கிளாதான் இருப்ப அப்படின்னாலும் இருந்துக்கோ. நோ அப்ஜெக்ஷன்” என்றார்.
“ம்ம்மா…”
“உன்னை வருத்திக்கிற எதையும் செய்யின்னு என்னால சொல்ல முடியாது ஆர்வி” என்றவரை அணைத்து விடுத்தான்.
“போதும் போதும்… ரொம்ப உருகாம வீட்டுக்குப்போய் சாப்பிடு” என்றவர் இறங்கிச் சென்றார்.
அனிதா கல்லூரி பேராசிரியை. கணவர் இல்லை. ஆர்விக்கின் சிறு வயதிலேயே இராணுவத்தில் இறந்திருந்தார். நகரத்தின் முக்கிய பகுதியில் இரண்டு மாடி தனித்த வீடு அவர்களுடையது. கணவர் இறந்த பின்னர் சொந்தமென்று சொத்துக்காக நெருங்கிய அனைத்து உறவுகளையும் அனிதா தள்ளி நிறுத்தினார். அனிதாவின் தந்தை மட்டும் கிராமத்தில் வசிக்கின்றார். அடிக்கடி வந்து தங்கிச் செல்வார். இரண்டு மாடிகளில் ஒரு மாடியை வாடகைக்கு விட்டிருக்கிறார். வருமானத்திற்காக அல்ல… தனித்து இருக்கும் பாதுகாப்பிற்காக, அப்போது உடன் யாரும் இருப்பது அவசியமாகப் பட்டது. ஊரில் வயல்வெளிகளில் தினமும் பணி செய்தே பழகிய ஆர்விக்கின் தாத்தா லட்சுமணணுக்கு நகரத்தில் வெட்டியாகத் தங்கியிருக்க முடியவில்லை. அதனால் மகளின் துணைக்கென உடனிருந்தவர், அவரே நல்ல குடும்பமாக வாடகைக்கு குடியமர்த்திவிட்டு தன்னுடைய கிராமத்திற்கே சென்றுவிட்டார்.
மகளையும் பேரனையும் உடன் வைத்துக்கொள்ள அதிக ஆசை அவருக்கு. இருப்பினும், தன்னுடைய ஆசைக்காக மகளின் வேலையை விடவைத்து தன்னுடன் கிராமத்திற்கு அழைத்துச்சென்று வீட்டோடு வைத்திருப்பதில் மனமின்றி இங்கேயே தங்க வைத்துவிட்டார். அதோடு கணவனை இழந்த பெண் கிராமத்தில் வீட்டோடு வந்து தங்கிவிட்டால் சமுதாயத்தின் பார்வையும் பேச்சுக்களும் பலவிதமாக இருக்குமே! அதற்கு மகள் தனித்து சுயமாக இங்கேயே இருந்துவிடலாமென நினைத்துவிட்டார்
ஆர்விக் வளர்ந்த பின்னர் தான் அனிதா பயமின்றி வாழ ஆரம்பித்தார். மகன் இருக்கும் தைரியத்தில்.
தற்போது அவர்கள் வாடகைக்கு விடும் மாடியில் யாஷ் மட்டும் தங்கியிருக்கின்றான்.
அனிதா கல்லூரிக்குள் செல்வதையே பார்த்திருந்த ஆர்விக்கு, தன்னுடைய கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்தது.
அக்கல்லூரியில் தான் ஆர்விக் மற்றும் அவனது நண்பர்கள் படித்தனர்.
முதலில் ஆர்விக் வேறு கல்லூரியில் சேர்ந்திருந்தான்.
“உங்க காலேஜிலே சேர்ந்தா என்னால ஃப்ரீயா இருக்க முடியாது அனி… அஃப்கோர்ஸ் நீங்க என்னை கண்ட்ரோல் பண்ணமாட்டிங்க, பட் அங்க சேர்ந்தா உங்களை வைச்சு நான் எல்லாம் யோசிச்சு பண்ணனும்” எனக்கூறி வேறு கல்லூரியில் சேர்ந்திருந்தான்.
ஆனால் ஆர்விக்கின் முதல் வருடம் இரண்டாவது பருவத்தின் போது அனிதா கல்லூரியில் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே நெஞ்சில் வலி எழுந்து மயங்கி விழுந்திருந்தார். அதிக அளவிற்கு பயப்படும் படியாக ஒன்றுமில்லை என்றாலும், ஆர்விக் அதிகத்திற்கும் பயம் கொண்டிருந்தான்.
இந்த உலகில் அவனுக்கென அவர் மட்டுமே! இருவருக்கும் லட்சுமணன் மட்டுமே!
ஆதலால், ஆர்விக் தன்னுடைய கல்லூரியை விட்டு, எப்போதும் அன்னையுடனே இருக்க வேண்டுமென அனிதா பயிலும் கல்லூரியிலேயே தன்னுடைய படிப்பின் இரண்டாம் பருவத்தை தொடர்ந்தான்.
அனிதாவுக்கு உண்டான நெஞ்சுவலி, ஆர்விக்கின் கனவு பெண்ணை அவனிடம் சேர்ப்பிக்க காரணமாக இருந்ததுவோ!
அதுவரை முகம் காட்டாது கனவில் வந்து செல்லும் பெண் அடுத்தடுத்த நாட்களில் முகம் காட்டத் துவங்கியிருந்தாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
34
+1
+1
1

