Loading

நிவேதா மனதில் ஆயிரம் சஞ்சலங்களுடன்  தனது ஊருக்கு செல்லும் பேருந்தில்  பயணம் செய்தாள்.

 

வீட்டிற்கு சென்றவுடன் அவளது அம்மா ,”இவ்வளவு நேரமா?” என்று முறைத்துக் கொண்டிருக்க .

 

“லேட்டாயிடுச்சுமா ! நான் வரும் பொது பஸ் வேற இல்ல.. கொஞ்ச நேரம் கழிச்சு தான் பஸ் வந்துச்சு.. பஸ் எடுக்கவும் லேட்டாயிடுச்சு “என்று பொய் உரைத்தாள்.

 

“சரி” என அமைதியானர் .

 

அவள் பஸ் ஸ்டாப்பிற்கு வந்தது வேண்டுமானால் நேரம் கழித்து இருந்திருக்கலாம் ..ஆனால், அவள் சொன்னதில் உண்மையாகவே பாதி உண்மை.. அவள் ஊரில் இருந்து டவுனுக்கு செல்லும் பஸ்சை பார்த்துக் கொண்டுதான் இருந்தார்.. அவளின் அம்மா கவிதா..

 

பஸ் உண்மையாகவே இங்கிருந்து நேரம் கழித்து சென்றமையால் ,அவள் பஸ் ஸ்டாண்ட்க்கு வருவதற்கு பத்து நிமிடத்திற்கு முன்பு தான் அவள் ஊருக்குச் செல்லும் பஸ்ஸும் பஸ் ஸ்டாண்டில் வந்து நின்றது .. ஆகையால், பஸ் வந்த சிறிது நேரத்திலே இவளும் பஸ் ஸ்டாண்டிற்கு வந்திருக்க.. பஸ் பிடித்து விட்டோம் !என்று சந்தோஷத்தில் அமைதியாக ஏறிக்கொண்டாள்.. அவளின் நல்ல நேரமோ என்னவோ பஸ் லேட்டாக தான் எடுக்கப்பட்டது..

 

கிட்டத்தட்ட ஒரு வாரம் சென்று இருக்கும். ஒரு வாரத்திற்கு பிறகு அவர்களுக்கு இரண்டாம் இடை பருவ தேர்வு  ஆரம்பமாகி இருக்க.

 

மதியத்திற்கு மேல் அவர்களுக்கு பரீட்சை என்று இருக்க . காலையில் வெளியே கிரவுண்டில் ரிவிஷன் வைத்திருந்தார்கள்.. இங்கு வந்து படிக்க சொல்லி அவர்களது வகுப்பு ஆசிரியர் சொல்லி இருந்தார்

 

அப்பொழுது நிவேதா காலையில் பள்ளிக்கு வந்திருந்தவள். மதியம் 12 மணி போலயே சாப்பிடுவதற்கு டைம் கொடுத்திருந்ததார் ஆசிரியர். 2 மணிக்கு தான் பரீட்சை .

 

இன்னும் 2 மணி நேரம் டைம் இருப்பதால், மதியம் அங்கு 2 மணி நேரம் தனியே இருக்க பிடிக்காமல்,  சரண்யா வீட்டிற்கு சென்றிருந்தாள்.

 

அப்பொழுது நவிலனும் அங்கு வந்திருந்தான் .

 

அவனை பார்த்தவள். கண்டும் காணாமல்  கீழே குனிந்து கொண்டு சாப்பிட செய்தாள் .

 

நவிலன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“டேய் நீ ஏன்டா அவளையே சீண்டிகிட்டு இருக்க. ?ஏற்கனவே அவளே பயந்து போய் கிடக்கா “என்று சரண்யா சொன்னாள் .

 

“நான் என்ன உன் பிரண்டை கடிச்சா தின்னுடுவேன். எதுக்கு எடுத்தாலும் பயந்தால் எப்படி வாழ முடியும்” என்றான் நவிலன்.

 

“உங்களுக்கு என்ன வந்துச்சு ,எங்க வீட்ல என்னதான் தப்பா பேசுவாங்க. நான் லவ்வுன்னு வந்த நின்னா. சுத்தி இருக்கவங்க .எங்க அம்மாவையும் , எங்க அம்மாவோட வளர்பையும் தான்  தப்பா பேசுவாங்க .

 

நான் அப்பா இல்லாத பொண்ணு எனக்கு தான் தெரியும். எங்க வீட்ல எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு என்னை வளர்க்கிறார்கள் என்று ..”கண்கள் கலங்க  குரல் கம்ம நா தழுதழுக்க  கூறினாள்..

 

 

அவளது அருகில் கீழே முட்டி போட்டு உட்கார்ந்து  ,அவளது கண்ணை உற்றுப் பார்த்துவிட்டு , “நான் உன்கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ணினேனா? ..

உனக்கு என்னை எத்தனை மாசமா தெரியும் ?” என்று பரிவாக கேள்வி எழுப்பினான்..

 

அவனையே பார்த்துக் கொண்டு, முழித்துக் கொண்டு இருந்தாள் .

 

அவனே மீண்டும் ஆரம்பித்தான் “லெவன்த் ஸ்டார்டிங்ல இருந்து என்னை உனக்கு தெரியும் ஆமா தானே!” என்றான்.

 

அவள்,” ஆமாம்” என்பது போல் தலையாட்ட .

 

“இதுவரை நான் உன்கிட்ட வந்து ஏதாச்சும் பேசினேனா இவ்ளோ நாள்ல..? இத்தனை மாசத்துல ஒரு நாள் ஆச்சு உன் கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ணி இருக்கேனா? ”

 

“இல்லை “என்பது போல் மண்டை ஆட்ட .

 

“உன்ன ஃபாலோ பண்ணி இருக்கேனா.?”

 

” நீ எங்கடா போய் அவளை ஃபாலோ பண்ணுவ ?”என்று சரண்யா சிரித்த முகத்துடன் கேட்க.

 

“லூசு என்னை கொஞ்ச நேரம் பேச விடு!” என்று சரண்யாவை முறைத்த நவிலன் ..நிவேதாவை  பார்த்து கொண்டே ,”நீ சைக்கிள்ல தான ஸ்கூலுக்கு வந்துட்டு போயிட்டு இருக்க. உங்க ஊர்ல இருந்து நீ ஸ்கூலுக்கு வர நேரத்துல உன்னை ஃபாலோ பண்ணலாம் இல்ல ..?”என்று புருவம் உயர்த்தினான்..

 

 

பயம் கலந்த பார்வையுடன் நிவேதா நவிலனை நோக்கி விழித்தபடியே இருந்தாள்.

 

 

 

“ஏனோ தெரியல !எனக்கு உன்ன பிடிச்சிருக்கு .! ஆனா அது லவ் எல்லாம் கிடையாது சரியா ? உன்னோட இன்னசென்ட் எனக்கு ரொம்பவே புடிச்சிருக்கு.. சரண்யா கிட்ட பேசுற மாதிரி, பிரேம் கிட்ட பேசுற மாதிரி உன் கிட்டயும் ஃப்ரீயா பேசணும்னு ஆசைப்படுறேன்.. அவ்வளவுதான் .!

 

அதை தாண்டி எல்லாம் நான் எதுவும் யோசிச்சது இல்ல ,அப்புறம் இன்னொன்னு என்ன சொன்ன அப்பா இல்லாத பொண்ணுன்னு சொன்ன இல்லையா ? லவ் பண்றதுக்கும் அப்பா இல்லாத பொண்ணு அப்படின்றதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது சரியா ?..

 

எனக்கும் தான் அப்பா இருந்தும் இல்லாம இருக்காரு “என்றான்.

 

அவள் அவனை வேகமாக நிமிர்ந்து பார்க்க .

 

“என்னோட அப்பா இருக்காரு .ஆனா குடிப்பாரு அம்மா மும்பையில வேலை செஞ்சுட்டு இருக்காங்க .

நான் எங்க அண்ணன் கூட இங்க இருக்கேன் .அண்ணனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு, அண்ணி இருக்காங்க அவங்களோட தான் நான் இருக்கேன். சரியா ..

 

அவங்க கூட இருந்தாலுமே ,நான் தனியா தான் என்னோட வேலைகளை பாத்துட்டு இருக்கேன். நானும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் தான் வாழ்ந்துட்டு இருக்கேன். எங்க வீட்ல மட்டும் என்ன கோடி கோடியா வா கொட்டி கிடக்கு

 

எனக்கும் கஷ்ட நஷ்டம் தெரியும். கஷ்ட நஷ்டம் புரிஞ்சு தான் வாழ்ந்துட்டு இருக்கேன் .அதுக்கும் பிரண்டா இருப்பதற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை..” என்றான்.

 

அவனை பார்த்தவள்.. “இருந்தாலும் ,வெளியே இருக்கவங்க பார்த்தா தப்பா பேசுவாங்க இல்ல.?”

 

“அதுக்காக ஒவ்வொரு விஷயத்துக்கும் ,அவங்க பாத்தா தப்பா எடுத்துப்பாங்க ,இவங்க பார்த்தா தப்பா எடுத்துப்பாங்க அவங்க ஏதாச்சும் சொல்லுவாங்க இவங்க ஏதாச்சும் சொல்லுவாங்கன்னு வாழ முடியுமா ?..

 

அப்போ உன்னோட வாழ்க்கையை எப்ப வாழ்வ..? உங்க அம்மாவுக்காக உங்க அம்மாவுக்காகனு யோசிக்காத சரியா ?. உனக்குன்னு ஒரு லைஃப் இருக்கு, உனக்கு என்ன பிடிக்குமோ அது படி அதுக்கு ஏத்த மாதிரி இரு .

 

அதுக்காக அம்மா , பேமிலியை பற்றி யோசிக்காம சுயநலமா இருன்னு சொல்லல சரியா  ?”என்று அவளது தலையில் கை வைத்து ஆட்டிவிட்டு,” நேரம் ஆகுது கெளம்புங்க எனக்கும் நேரம் ஆகுது “என்றவன் .

 

சரண்யாவை பார்த்துவிட்டு பிரேமை  அழைத்துக் கொண்டு தங்களது  பள்ளி நோக்கி சென்று விட்டான் .

 

“லூசு எழுந்திரு டி.. அவ்வளவுதான் அவன் உனக்கு புரியிற மாதிரி சொல்லிட்டான் .இதுக்கு மேல அவன் கிட்ட நீ பேசுறதும் பேசாம இருக்கறதும் உன்னோட விருப்பம்.. வா போலாம் !”என்று சரண்யா நிவேதாவை பள்ளிக்கு அழைத்து சென்றாள்.

 

நாட்கள் அழகாக சென்றது .

 

அதன் பிறகு ,நிவேதா நவிலனை பார்க்க நேரிட்டாலும் சினேகமாக புன்னகைப்பாள்.

 

அப்படியே அவர்களது பேச்சுவார்த்தை நீண்டது .

ஒரு கட்டத்தில் போன் நம்பர் பரிமாறு கொள்ளும் அளவிற்கு வந்து நின்றது.

 

போன் நம்பர் பரிமாறியவுடன் நிவேதாவே ,நவிலனனுக்கு அவ்வப்போது மெசேஜ் செய்வாள். அதற்கு அவனும் ரிப்ளை செய்வான்.

 

எப்போதாவது ஒரு நாள் தான் போனில் பேசிக்கொள்வார்கள். மேக்ஸிமம் மெசேஜில் மட்டும் டெய்லி பேசும் அளவிற்கு வந்து நின்றது அவர்களது நட்பு .

 

அதன் பிறகு ,விடுமுறை நாட்களிலோ இல்லை, அரை நாள் பள்ளி இருக்கும் வேலையிலோ சரண்யா வீட்டில் பார்த்துக் கொள்வார்கள்.

 

பேசிக் கொள்வார்கள். சுற்றி இருந்த மற்ற நண்பர்களுக்கு எல்லாம் இவர்களின் நெருக்கம் தெரிய வந்தது .

 

சரண்யா  நவிலனிடம்  ஒரு நாள்,” நீ என்கிட்ட பேசுறதை விட அவகிட்ட க்ளோசா பேசுற மாதிரி இருக்கு ? ஒரு வேலை அவ பயந்த மாதிரி நீ அவளை லவ் பண்றியா ?”என்றாள் .

 

முதலில் சரண்யாவை எரிமலை சீற்றத்துடன் பார்த்தவன்..பிறகு சிரித்துக் கொண்டே ..”லூசு அவகிட்ட க்ளோஸ் ஆயிட்டேன்னு சொல்லு .. அதுக்காக அவளை லவ் பண்றேன்னு சொல்லாதா? இது லவ் எல்லாம் கிடையாது.

 

சிஸ்டர் பீலிங்னு சொல்லிட முடியாது. லவ்ன்னும் சொல்லிட முடியாது.

 

இது வேற மாதிரி.. ஃப்ரண்டு தான் ரொம்ப க்ளோசா.. ஏன்னு தெரியல .. அவளை புடிச்சிருக்கு .

அவ கிட்ட பேசணும் தோணுது .அவளோட அக்கறை ,அன்பு எல்லாம் புடிச்சிருக்கு .அப்படி வச்சுக்கோயேன் !”என்றான்.

 

“எதையோ சொல்ற ..ஆனா பார்த்து “என்றாள் சிரித்துக் கொண்டே .

 

நவிலனும் சிரித்து கொண்டே  நகர்ந்து விட்டான் . வருடம் ஓடியது.

 

அப்படி இருக்கும் தருவாயில் தான் அவர்கள் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆதம் பள்ளியில் அவர்களுக்கு ஒரு வாரம் கோச்சிங் கிளாஸ் போல் வைத்திருந்தார்கள்.

 

பத்தாம் வகுப்பு ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வைத்திருந்தார்கள்.

 

அப்பொழுதுதான்  மதியம் லஞ்ச் பிரேக்கில் அனைவரும் பெஞ்சில் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு வெளியே உட்கார்ந்து இருந்தார்கள்.

 

அப்பொழுது நிவேதா பீரியட் என்பதால் ரொம்ப பெயினாக இருக்கு என்று அருகில் இருந்த நவிலன் தோளில் சாய்ந்து படுத்து இருந்தாள்.

 

அதை பார்த்த வனிதா இருவரும் லவ்வர்ஸ் என்று அவளாகவே முடிவு செய்து ,”இப்படித்தான் என்னதான் காதலித்தாலும் அனைவரின் முன்பும் உட்கார்ந்திருப்பார்களா?” என்று கேட்டாள்.

 

அப்போது நவிலன் அவளுக்கு சமோசா வாங்க சென்றிருந்தான் .. அந்த நேரத்தில் வனிதா அவ்வாறு கூறியதால் அவள் கூறியது நவிலனுக்கு தெரியாது..

 

 

வனிதா பேசியதைக் கேட்ட நிவேதாவிற்கு ஒரு மாதிரியாக இருந்தது. இருந்தாலும் , அனைவருக்கும் நம் நட்பை புரிய வைத்துக் கொண்டிருக்க முடியாது ஆண் பெண் நட்பு என்றால் பலபேர் பலவிதமாக பேச தான் செய்வார்கள் என்று நவிலன் கூறியதை மனதில் வைத்துக் கொண்டவள்.

 

சரி என்று அமைதியாக கடந்து விட்டாள் .இருந்தாலும் உள்ளுக்குள் அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது..அவளது முகமே காட்டி கொடுத்தது . அவளின் வருத்தத்தை..

 

அப்பொழுதுதான்” என்ன ஆச்சு ?”என்று நவிலன் கேட்க.

 

“ஒன்னும் இல்லடா வலி அதிகமா இருக்கு  அதனால் தான்!” என்று நிவேதா நடந்ததை மறைக்க ..

 

சிறிது நேரத்திற்கு பிறகு பிரேம்  நடந்த அனைத்தையும் சொல்லி இருந்தான் .

 

நிவேதாவை முறைத்த நவி  .வனிதாவிடம் சண்டையிட  எழ..

 

” வேண்டாம் விடு சின்ன பொண்ணு டா. நீயே சொல்லி இருக்க தான.. ஆண் ,பெண் நட்பு என்று வரும்  போது பல பேர் பல விதமாக பேசுவாங்க என்று ..அப்புறம் ஏன்டா? இப்போ அவ கிட்ட சண்டை போட போற ?”என்று கேட்டாள் .

 

இருந்தாலும் ,அவனுக்கு கோபம் தீரவில்லை .அப்பொழுது பிரேம் தான்,” நம்ப டியூசன் தான் டா அங்க பார்த்து கொள்ளலாம் விடு!” என்றான்.

 

“சரி” என்று அமைதியான நவிலன் அன்று மாலையே டியூஷனில்  வைத்து அவளிடம் சண்டையிட..

 

மறுநாள் ஆதம் ஸ்கூல்க்கு கோச்சிங் வந்திருந்த இடத்தில் வனிதா நேராகவே ,நிவேதா விடம் வந்தவள். சண்டையிட ஆரம்பித்தாள்.

 

அப்பொழுது நவிலன் வந்திருக்கவில்லை.

 

“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க .

நேத்து நீங்க நவிலன் அண்ணன்  தோளில் சாய்ந்து  படுத்திருந்தீங்க . அதனால இரண்டு பேரும் லவ்வர்ஸ் என்று சொல்லி நான் சொன்னேன் .

அப்படி இல்லன்னா, நேத்தே என்கிட்ட அப்படி ஒன்னும் இல்லைன்னு நீங்க சொல்லி இருக்கணும் .இல்ல ,அமைதியா கடந்து போயிருக்கணும் ..

 

அதை விட்டுட்டு அவரை டியூஷன்ல வந்து சண்ட போட சொல்வீங்களா?”  என்று சண்டைக்கு நின்றாள்..

 

 

 

நிவேதா ஒன்றும் புரியாமல் இருக்க .அப்பொழுது சரண்யா தான், நேத்தி டியூஷனிலில் நடந்த அனைத்தையும் சொல்ல.

 

“சாரி மா எனக்கு தெரியாது .உன் கிட்ட  அவன் வந்து கேட்டதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்றாள்

 

“ஓ! உங்களுக்கு தெரியாம தான் வந்து கேட்டாரோ? ,இங்கே வச்சு கேட்க வேணாம்னு அங்க கேட்க வச்சிட்டு இப்ப என்னம்மா நடிக்கிறீங்க  நீங்க?” என்றாள்  ஏளனமாக.

 

அப்பொழுதுதான் வந்த நவிலன் “ஆமா அவ நடிக்கிறா தான்  இப்போ அதுக்கு என்ன உனக்கு ?”என்றான்.

 

“நவி கொஞ்சம் அமைதியா இரு!” என்று அவனது கை பிடித்தாள்.

 

“கொஞ்ச நேரம் கம்முனு இருடி! எதை வேண்டுமானாலும் பேசிட்டே போகுமோ அந்த புள்ள..” என்றான்.

 

“இந்தப் புள்ள அந்த புள்ள எல்லாம் ஒன்னும் சொல்ல வேணாம் சரியா? நான் உங்களுக்கு மரியாதை கொடுத்து தானே பேசுறேன். நீங்களும் எனக்கு மரியாதை கொடுத்து பேசுங்க” என்றாள் வனிதா .

 

அப்பொழுது நிவேதாவிற்கு கோவம் வந்து.. “இப்ப என்னம்மா உனக்கு மரியாதை கொடுக்காமல் பேசினான்..வாடி போடின்னு சொல்லல இல்ல.அந்த புள்ளனு சொன்னான் தப்பா ஒன்னும்  சொல்லல இல்ல..” என்று எகிறினாள்..

 

இவ்வளவு நேரம் தன்னை  தவறாக சொல்லும்போது வராத கோபம் தனது நண்பனை தவறாக சொல்லும் பொழுது வந்தது..

 

நவிலன் சிரித்துவிட்டு ,”லூசு வா நம்ம எல்லாருக்கும் புரிய வச்சுக்கிட்டு எல்லாம்  இருக்க முடியாது “என்றான்.

 

“ஆமாமா நீங்க யாருக்கும் புரிய வைக்க வேணாம் . ஊர் முன்னாடி ஃபிரண்ட்ஸ் என்று சொல்லி சுத்துங்க.. என்னைக்காவது ஒரு நாள் லவ்வர்ஸ்னு வந்து நிற்கும்போது சுத்திருக்க எல்லோருக்கும் தெரிஞ்சுரும் “என்று  விட்டு நகர்ந்தாள் வனிதா.

 

நவிலன்  நாக்கை மடித்துக் கொண்டு சண்டைக்குப் போக .

 

“டேய்  எருமை வேணாம்  டா.. வா!” என்று அவனது கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள்.

 

நவிலன் எரிக்கும் பார்வையுடன் வனிதாவைத் திரும்பி பார்த்துக் கொண்டே  நிவேதாவுடன் சென்றான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்