
ரிசப்ஷன் முடிந்த மூன்றாவது நாள்..
இரண்டு நாட்களாக ரிசப்ஷன் வேலையாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தவன். இரவு வேளை மட்டுமே வீட்டிற்கு வந்தான்.
அன்று மனைவியின் அருகில் உட்காந்தபடி ,ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டவன் ..தனது தோழிக்கு அழைத்திருந்தான் .
“எவ்ளோ டா செலவாச்சு? ஏதாவது பணம் வேணுமா ?அவர்கிட்ட கேட்டு பாக்கட்டா?” என்று மீண்டும் கேட்டாள்.
“அதெல்லாம் எதுவும் வேணாம். இப்போ தான் கொஞ்சம் ஃப்ரீ ஆனேன் ..”
” சொல்லுடா? சாப்பிட்டியா?”
“ஆச்சு டி..நீ.. தம்பிக்கு ஓகேவா ?”
“ஓகே!”
“சாப்பாடு எப்படி இருந்துச்சு?”
” நல்லா இருந்துச்சு டா. காளான் பிரியாணில தான் பட்டரவங்கம் அதிகமா போட்டுட்டாங்க போல எரிச்சிட்டு இருந்துச்சு..
மத்தபடி எல்லாம் ஓகே தான்”
“ஹம்..”
“யார் சாப்பாடு?”
“கீழ்ப்பட்டு காரங்க தாண்டி..”
“ஹம்.. அவர் கூட அப்படித்தான் சொன்னாரு…”
சிறிது நேரம் பேசிவிட்டு செலவுகள் பற்றியும் ,பேசிவிட்டு வைத்தாள் ..
பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்தவள்.. ” வெளிய வேலையா இருக்கும் போது பேச வேண்டியது தான? அது ஏன் என் கண்ணு முன்னாடி பேசுற ? அது என்ன நீ சாப்பாடு எப்படி இருந்துச்சுன்னு கேக்குற ? சரி நல்லா இருந்துச்சுன்னு ஒரு பேச்சுக்கு கூட சொல்லாம. குத்தம் சொல்றது”
” அவ உண்மைய சொல்றா. இதுல என்ன இருக்கு..”
“என்னமோ பண்ணு போ”என்று
கடந்து விட்டாள்.
நாட்கள் அதன் போக்கில் சென்றது . நேரம் கிடைக்கும் பொழுது, வீட்டில் இருக்கும் வேளையில், மதிய உணவிற்கு வரும்போது நிவேதாவிற்கு அழைத்து பேசிக்கொண்டான்.
அவ்வப்போது எப்போதாவது பேசினால் கூட ,அது வனிதாவிற்கு சிறு கஷ்டத்தை கொடுத்தது ..
ஒவ்வொரு முறை பேசும்போதும் அவளுக்கு ஏதோ போல இருக்க.. ஒரு நாள் கேட்டு விட்டாள் .
அவனிடம் வாதாட ஆரம்பித்தாள்.. “நீ வெளியே வேலையா இருக்கும் போதோ? இல்ல, வேலையில் இருக்கும் போது உன் பிரண்டுக்கு போன் பண்ணி பேச வேண்டியதுதானே! ஏன் வீட்டுக்கு வந்து மதிய நேரத்தில் என் பக்கத்துல இருக்கும்போது தான் பேசுவியோ?”
” உன் பக்கத்துல உக்காந்து தானே பேசுறேன்..இதுல என்ன தப்பு. உனக்கு தெரியாம , பேசலையே?”
“நான் தப்புன்னு சொல்லல. எனக்கு பிடிக்கல. எனக்கு கரெக்ட்டா சொல்ல தெரியல. ஜெலஸ் ஆகுது “
சிரித்து விட்டான். “அவ கிட்ட ஜெலஸ் ஆக என்ன இருக்கு?”
“உனக்கு ஆயிரம் பிரண்ட்ஸ் இருக்காங்க. ஏன் கல்யாணத்துக்கு வந்த எல்லார்கிட்டயும் பேசின. அவ கிட்ட பேசல ..க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்ன்னு சொன்னா வெளிய யாருமே நம்ப மாட்டாங்க. அப்படி இருக்கு உங்களோட நடவடிக்கை எல்லாம் .ஆனா, நீ எல்லா விஷயத்தையும் அவகிட்ட சொல்றேன்னு நான் சொல்ல மாட்டேன் .
உனக்கு எது இம்பார்டன்ட் தோணுதோ அதெல்லாம் அவ கிட்ட நீ சொல்ற .நான் ஏன் சொல்றேன்னு கூட கேட்கல.. ஆனா, நீங்க பேசுறது எல்லாம் எனக்கு ஒரு மாதிரி இருக்கு. என் கண்ணு முன்னாடி பேசாமா, தனியா கூட பேசலாம் இல்ல..”
“நீ யாரோ கிடையாது டி. என்னோட பாதி.. என்னுடையவள் .. நீ ஏண்டி மத்தவங்க மாதிரி எங்களை வெளியே இருந்து பார்க்கிற? எங்க நட்ப உள்ளுக்குள்ள வந்து பாருடி. எங்களுக்குள்ள வந்து பாருடி அப்போ தெரியும் ..அந்த ஜெலஸ் எல்லாம் தூக்கி போட்டுட்டு உள்ள வா டி..”
“உனக்கு பேசுறது ஈசியா இருக்கும் நவி. ஆனா,எனக்கு எல்லாமே அவ்வளவு ஈஸி கிடையாது.. என் இடத்திலிருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு.. தன்னோட துணை எதிர் பாலினத்தவரிடம் பேசும் போது எப்படி இருக்கும்னு..”
“அப்ப எங்களை தப்பான நோக்கத்தில பார்க்கிறாயா? “
“நான் அப்படி சொல்லவே இல்ல..”
வேகமாக எழுந்து விட்டான். அவர்களுக்குள் சண்டை கூட ஆரம்பித்தது என்று தான் சொல்ல வேண்டும் ..
இரண்டு நாட்கள் அமைதியாக சென்றது ..
அவனும் முதலில் வீம்புக்கு பேசாமல் நின்றவன் ..அதன்பிறகு அவளிடம் இறங்கி போனான்.
“நீ யோசிக்கிற அளவுக்கு அப்படியெல்லாம் இல்லடி..” என்றான்.
“நான் என்ன சொல்ல வரேன்னு உன்னால புரிஞ்சுக்க முடியல நவி. என் இடத்தில் இருந்து யோசிச்சா மட்டும் தான் தெரியும்..” என்றவள் அமைதியானாள்.
மேலும் நாட்கள் கடந்து இருந்தது.. அவள் அவ்வளவு கூறியும் கூட மதிய உணவுக்கு வீட்டிற்கு வந்திருந்தவன் போன் செய்து நிவேதாவுக்கு பேசினான்..
அவளோ எடுத்த எடுப்பிலே,” எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு டா.. இனி அடிக்கடி எல்லாம் போன் பண்ணாத .தம்பியை பாக்கணும், வீட்டு வேலை செய்யணும். எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேணும்.. எதாவது முக்கியம்னா மெசேஜ் பண்ணு..” என்று அவள் கூறிக் கொண்டிருக்க..
போனை வேகமாக பிடுங்கி ஸ்பீக்கரில் போட்டு இருந்தாள் வனிதா..
அவன் ,”ஏ ..”என்று கத்த தொடங்கும் போதே அவன் வாயை பொத்தி “உஷ்!”என்று வாயில் விரலை வைத்து இருந்தாள் .
அவளை முறைத்தான் நவி..
“ஹலோ..! கேட்குதா நவி”
“இப்போ பேசு..”என்றாள் வனி..
“சொல்லு நிவே…”
“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அடிக்கடி கால் பண்ணாத தம்பிக்கு வேற அடிக்கடி உடம்பு சரி இல்லாம போது. அவன பாத்துட்டு வீட்டு வேலை செய்றது கஷ்டமாக இருக்கு..” என்றாள் மீண்டும்..
“
இத நீ உனக்காக யோசிச்ச மாதிரி தெரியலையே..”
” வேற யாருக்காக யோசிச்சேன்.. “
“
பொய் சொல்லாதடி.. யாராவது ஏதாவது சொன்னாங்களா?” என்று தன்னவளை முறைத்தப்படி கேட்க ..
“யார் என்ன என்கிட்ட சொல்ல போறாங்க? ஆனா எனக்கே தோணுது ..”
“என்ன தோணுது?” என்றான் காட்டமாக,
” நவி நான் ஒரு விஷயம் சொல்றேன். தப்பா எடுத்துக்காத.. இதுக்கு முன்னாடி நம்ம பேசுனது வேற .. “
“புரியல… அது என்ன முன்னாடி பேசினது? இப்போ பேசுறது..?”
“இப்போ உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு ..நீ குடும்பஸ்தன் ஆகிட்ட..”
“ஆமா அதுக்கு என்ன? இப்போ?”
“நான் பேசுறத. முதல்ல அமைதியா பொறுமையா கேளு, அப்பறமா பேசு.. கோபப்படு.. உன் பக்கம் இருந்து மட்டும் யோசிக்காதே.. எனக்கு கல்யாணமான பிறகு நீ என்கிட்ட கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ண. என்ன விட்டு கொஞ்சம் விலகி போன அது என்னோட பர்சனல் லைஃப்க்காக.. அதே தான் உனக்கும்…
உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு .உனக்குன்னு ஒரு தனிப்பட்ட லைப் இருக்கு. உனக்குன்னு ஒரு பர்சனல் இருக்கு ,உன்ன நம்பி ஒருத்தி வந்து இருக்கா, அவளுக்கு ஸ்பேஸ் குடு.. நீ அவ கூட இருக்குற நேரத்துல எனக்கு கால் பண்ணி பேசுறன்னு எனக்கு தோணுது”
“நான் தினமும் கால் பண்ணலையே..?”
“நீ தினமும் கால் பண்ணல தான். ஏதாவது இம்பார்டன்ட் .. இல்ல பேசணும்னு நினைச்சா தான் பேசுற.. நான் இல்லன்னு சொல்லல. வீட்டுக்கு வந்துட்ட பிறகு அவளுக்கான நேரத்தில நீ என்கிட்ட பேசுறது எனக்கு சரிப்பட்டு வரல..”
” புரியல என்ன சரிப்பட்டு வரல ?அவளுக்கான நேரத்தை நான் கொடுத்துட்டு தான் இருக்கேன் . அவளுக்கு எந்த அளவுக்கு இம்பார்ட்டண்ட் தரணும்னு எனக்கு தெரியும்.. யாருக்கு எப்போ நேரத்தை ஒதுக்கனும்னு தெரியாத அளவுக்கு நான் ஒன்னும் கூமுட்டை கிடையாது…”என்றான் சீற்றமாகவே,
“
நான் உன்ன தப்பு சொல்லல. ஆனா, ஒரு பொண்ணா அவளோட இடத்துல இருந்து யோசி..”
” புரியல. அவளோட இடத்திலிருந்து என்ன யோசிக்கணும்.. அப்ப நம்ம ஃப்ரெண்ட்ஷிப் தப்புன்னு சொல்றியா? இப்போ அவ நம்ம பிரண்ட்ஷிப்பை தப்பா நினைச்சாளா ?”
“இல்ல டா. நான் அப்படி மீன் பண்ணல .ஆனா, ஒரு பொண்ணா தன்னோட துணை opposite gender கிட்ட க்ளோசா பேசுறத பாக்கும்போது லைட்டா ஜெலஸா ஆகிறது தப்பான விஷயம் கிடையாது.. அதுக்காக அவ நம்ம உறவை தப்பா நினைக்கிறானு அர்த்தமும் கிடையாது..
நீ எனக்கு கல்யாணம் ஆன புதுசுல பேசாம அவாய்ட் பண்ணும் போது சொன்ன காரணமும் இதுதானே. அப்போ அவருக்கு பொறாமை வருவதில் தப்பு இல்லை என்ற பட்சத்துல இங்க வனிதாவுக்கும் பொறாமை வர்றதுல தப்பில்லையே…
அவ உன்னையோ என்னையோ பேச வேணாம்னு சொல்லலையே . நமக்கான ஃப்ரீடம் கொடுத்திருக்கா, நம்ம மேல நம்பிக்கை வச்சியிருக்கா.
ஆனா அத நம்ப எந்த அளவுக்கு வச்சிக்கனும்னு இருக்கு அவ்வளவுதான்! என்னால சொல்ல முடியும்.. திரும்பத் திரும்ப ஏதாவது சொல்ல வச்சுட்டே இருக்காத.. அவளோட இடத்துல இருந்து பாரு ..அவளுக்கும் டைம் கொடு. அவளுக்கு நீ டைம் குடுக்கலனு நான் சொல்லல .அவ முன்னாடி நீ பேசுறது நம்ம ரிலேஷன்ஷிப்பை தப்பா நினைப்பானும் சொல்லல..
நம்ப ரிலேஷன்ஷிப்பை அவ்வளவு மதிக்கிறா .. அதே அளவுக்கு நாமும் அவளுக்கு மதிப்பு கொடுக்கணும். இப்போ சின்னதா பொறாமையா ஆகுற விஷயம், பின்னாடி பெருசா பூதாகரமா வெடிக்க கொஞ்ச நாள் ஆகாது.. சரியா ? அதுக்காக அவ சந்தேகப்படுவா என்று அர்த்தம் கிடையாது.
அவளுக்கான நேரத்தில என்கிட்ட பேசிட்டு இருக்க ஆரம்பிச்சா..அவ என்ன வெறுக்க ஆரம்பிச்சிடுவா ..இது இயல்பு ..அவ என்ன வெறுக்க ஆரம்பிச்சா கூட பிரச்சினை கிடையாது..
உன்னை வெறுக்க ஆரம்பிச்சுட்டா அது நம்ம ரிலேஷன்ஷிப்பை சிதைச்சிடும்.. அதை தாண்டி உங்க ரிலேஷன்ஷிப்பை சிதைச்சிடும் அதை இப்ப இல்ல எப்பவும் நான் விரும்ப மாட்டேன்.அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும் ..”என்று கூறியவள் வைத்து விட்டாள்.
இப்பொழுது தன்னவளைத் தான் பார்த்தான்.
“நான் அவங்களுக்கு உண்மையிலேயே போன் போடல நம்பு நவி..” என்றாள்.
” நீ அவளுக்கு போன் போட்டனு நான் சொல்லவே இல்லையே..” என்றான் குறுகுறுப் பார்வையோடு,
“இப்ப எதுக்காக போனை ஸ்பீக்கரில் போட்ட?”என்றான் கோபத்தை அடக்கி,
“இல்லடா நான் இப்படி ஒன்ன உண்மையாவே அவங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கல .. அது… நானு…”
நவி
எதுவும் பேசாமல் மதிய உணவை கூட தவிர்த்து விட்டு கிளம்பி விட்டான்..
இவளுக்கு தான் சங்கடமாகியது. மேலும் நாட்கள் உருண்டோடியது..
ஆரம்பத்தில் அவளிடம் பேசாமல் இருந்தவன் அதன் பிறகு அவளிடம் எப்போதும் போல் பேச இவளுக்கு தான் கவலை உண்டாகியது..
” சாரி நவி..”
“இன்னைக்கு சொல்றது தான் ஒரே ஒரு விஷயம் சொல்லிக்கிறேன் .உன் மனசுல எந்த இடத்துல அவ இருக்கான்னு எனக்கு தெரியாது.. எனக்கு எத்தனையோ பிரண்ட்ஸ் இருக்கலாம் . இவளுக்கு முன்னாடியும், பின்னாடியும் ஆனா இதுவரைக்கும் என்னை சாப்டியான்னு யாரும் கேட்டது கிடையாது ..அம்மாவுக்கு அப்புறம் என்ன சாப்டியா என்று கேட்டது இவ தான்.. சாப்பிடலன்னா நேரத்துக்கு சாப்பிட சொல்லி அதட்டியதும் இவதான்..
என்னோட தப்பை மூஞ்சிக்கு நேரா என்கிட்டே சொல்றதும் இவதான். தப்ப திருத்திக்கோ அப்படின்னு சொன்னதும் இவ தான்..மத்த பிரெண்ட்ஸ் எல்லாம் நான் தப்பு செஞ்சாலும் எனக்கு ஜால்ரா அடிச்சு இருக்காங்க.. ஆனா இவ தப்புனா தப்புனு மூஞ்சிக்கு நேரா சொல்லி இருக்கா.
நான் நிறைய விஷயத்துல தவிச்சு நின்ன அப்போலாம் இவ எனக்கு உறுதுணையாக இருந்திருக்கா. நான் அம்மாகிட்ட ஷேர் பண்ண முடியாத ஒரு சில விஷயத்தை கூட இவ கிட்ட ஷேர் பண்ணி இருக்கேன்.
புரியாத வயசுல வெளி உலகமே தெரியாத வயசுல என்னை நம்பி இருக்கா.. அவ ஃபேமிலி பத்தி சொல்லி என்கிட்ட இருந்து விலக முயற்சி செஞ்சு இருக்கா .நானா தான் அவகிட்ட போய் பேசினேன். அவளுக்கு முதலும் கடைசியுமா இருக்க பசங்க பிரண்ட்ஷிப்னா அது நான்தான்… இப்ப வரைக்குமே என்கிட்ட அவளுக்கு சின்ன தயக்கம் இருக்கத்தான் செய்யுது.
காசு பணத்தால உருவாகுறது இல்ல ஃப்ரெண்ட்ஷிப்.. அவ எனக்கு காசு பணம் கொடுத்து தான் உதவனும்னு அவசியம் கிடையாது .நான் இருக்கேன்னு ஒவ்வொரு சிட்டுவேஷன்லையும் வார்த்தையா இல்லாம செயாலா நிரூபிச்சு இருக்கா..
உனக்கு நான் இன்னும் எப்படி தான் சொல்லி புரிய வைக்கிறதுனு எனக்கு தெரியல.”என கண்களில் நீர் வழிய கூற..
அவனை தன்னுள் புதைத்துக் கொண்டாள் ..
“நான் உங்க பிரண்ட்ஷிப்பை சந்தேகப்படல நவி .. ஆனால்..”என்று கூறும்போதே,
“எதும் வேணாம்டி … நீ நீயா இரு. அவளை நீ நீயா தான் புரிஞ்சுக்கணும். நான் சொல்லி புரிஞ்சிக்கிறதுல இல்ல உறவு . அங்க தான் ரிலேஷன்ஷிப் நிலைச்சு நிக்கும்…”என்றான்.
மாதங்கள் உருண்டோடு இருந்தது . சித்திரை மாதத்தில் ஒரு நாள் கணவன் போனிலிருந்து நிவேதாவிற்கு அழைத்து இருந்தாள் வனிதா..
அவளும் போன் எடுத்து,” சொல்லுடா?” என்க …
ஒரு சில நொடி அமைதிக்கு பிறகு, “அண்ணி நான் வனி பேசுறேன்..” என்றாள்..
“சொல்லு வனி”
“அது…”என்று தயங்கினாள்..
“வனி நாள் தள்ளி போயிருக்கா என்ன?” என்றாள் சந்தோஷ கூச்சலுடன்.
“ஆமா அண்ணி..”
“ஹேய் சூப்பர்! ஹாஸ்பிடல் போனீங்களா? என்ன சொன்னாங்க,?”
“இல்ல இன்னும் ஹாஸ்பிடல் போகல.. வீட்ல மட்டும் கிட் வாங்கி பார்த்தேன்..”
“ஓ! சரி..இனி ஒழுங்கா சாப்பிடு நேரத்துக்கு.. வெயிட் எதுவும் பெருசா தூக்காத.. ஹாஸ்பிடல் போயிட்டு வந்து சொல்லு?” என்றாள்..
சிறிது நேரம் பேசிவிட்டு வைத்திருந்தாள்.
நிவேவும் நவிலனிடம் போன் கொடுக்க கூறவில்லை. அவன் எங்கு என்றும் கேட்கவில்லை. நவிலனும் நான் பேச வேண்டும் என்று சொல்லவில்லை..

