Loading

நவிலன் மதியம் மூன்று மணிக்கு வீட்டிற்கு வர ..

“இன்னைக்கும் இப்படி அலையனுமாடா புள்ள கூட கொஞ்ச நேரம் கூட இல்லாம ?” என்றார்  சுந்தரி கவலையாக..

சுற்றி ஒரு சில உறவினர்கள் மட்டும் இருக்க.. அவனிடம் மெதுவாக கேட்க செய்தார்.

தன் தாயை பாவமாக பார்த்தான் ..

அவனும் என்ன தான் செய்வான்.. என்று எண்ணியவர் ..”சரி ரூமுக்கு போ!” என்றார்..

“அங்க யாரும் இல்லையா ?இன்னும் பியூட்டிஷியன் வரலையா?”

“அங்க யாரும் இல்லடா . நீ சொன்னது என்னன்னு எனக்கு தெரியாது. அவ கிட்டயே கேட்டுக்கோ” என்றார்.

அதன் பிறகு தன்னரை நோக்கி சென்றான். அவள் அமைதியாக உட்கார்ந்து இருக்கவும்..” என்னடி யோசனை?” என்று அவள் தோளில் கை போட்டு அருகில் அமர்ந்தான்.

” உனக்கு ரொம்ப செலவு இழுத்து வைக்கிறேன் தான?”என்று அவன் தோளில் சாய்ந்தாள்.

“அம்மா எதுவும் சொன்னாங்களா ?”  என பதறினான்.

“இல்ல.. எனக்கு தான் கஷ்டமா இருக்கு.”

” பொய் சொல்லாம சொல்லு ..வேற யாராவது  ஏதாவது பேசினாங்களா? அம்மா கிட்ட யாரும் இத பத்தி பேசினார்களா?”என்றான்.

“இல்ல அத்தை. என்ன பெருசா யார்கிட்டயும் நெருங்கவும் விடல. என்ன பார்க்க யாரும் இங்க வரல..  அத்தை கிட்டயும் யாரும் பேசின மாதிரி நான் கேட்கல.. எனக்கு தான் கஷ்டமா இருக்கு”

“என்னடி ஆச்சு.. உனக்கு.. கல்யாணம் ஆகி இனி ஒண்ணா சேர்ந்திருக்க போறோம் அத நெனச்சு சந்தோஷப்படுடி..”

“இப்போ நீ வேலை வேலைன்னு அலையறியே என்னால தானே?”

“லூசா நீ.. இப்போ உன் கூட தாண்டி இருக்கேன்.. இனி ஆயுசுக்கும் உன் கூட தானே”

“ஆனா, ஸ்டார்டிங்ல இருக்க நெருக்கம் வேற ..போகப்போக இருக்க நெருக்கம் வேற..உன்ன ரொம்ப தேடுது.. உன்ன மிஸ் பண்ற மாதிரி இருக்கு. நீ எனக்காக தான் ஓடுற, அது கூட எனக்கு புரியுது ..ஆனா நிறைய செலவு இழுத்து வைக்கிறேன்.  உனக்கு நிறைய அலைச்சல் என்னாலனு உள்ளுக்குள்ள உறுத்திக்கிட்டே இருக்கு” என்று வேதனை அடைந்தாள்.

  அவள் நெற்றியில் ஆழ்ந்த முத்தமிட்டவன். அவள் கன்னங்களை கையில் ஏந்திக்கொண்டு ,  சிறிது நேரம் அவள் இதழ்களில் இளைப்பாறியவன்.

” கண்டதையும் யோசிக்காம ஃப்ரீயா இரு. நமக்காக செய்ற விஷயம் .இன்னைக்கு  ஒரு நாள் முழுசா நமக்கே நமக்கான  நாள் ஹேப்பியா இரு.. நாளைக்கு ஒரு நாள் அதுக்கப்புறம் ஃப்ரீ ஆயிடுவேன்”

” சரி” என தலையசைத்தாள் .

“சரி பியூட்டிஷியன் வர சொல்லி இருந்தேனே என்ன ஆச்சு?”

“நான்தான் அவங்களை நேரா மண்டபத்துக்கு வர சொல்லிட்டேன் போன் பண்ணி..”

“ஏனாம்?”

“நீ சாப்பிட வர லேட்டாகும். அவங்க வரும்போது நீ வீட்டுக்கு சாப்பிட வந்தா உன்கிட்ட பேச முடியாது இல்லையா அதான்..”

“கேடி!”என அவள் கன்னம் கிள்ளி சிரித்து விட்டு,” சரி குளிச்சிட்டு ரெடியாகு மண்டபத்துக்கு “என்றான்.

“நீ சாப்பிடலையா?”

“சாப்பிடணும் தான்..”என்று அவளை ஏற இறங்க பார்க்க..

“கொன்றுவேன் வா. பசிக்குது” என்றாள்.

” நீ இன்னும் சாப்பிடலையாடி ?” என்றான் முறைப்பாக..

“உன் கூட சாப்பிட தான்..”என முத்து பற்கள் தெரிய சிரித்தாள்.

“சரி குளிச்சிட்டு வா.. நேரம் ஆகுது”

அவள் குளித்துவிட்டு வந்தவுடன், இவனும் குளித்துவிட்டு வர.. இருவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டுவிட்டு இங்கிருந்து நான்கரை மணி போல் மண்டபத்திற்கு கிளம்பினார்கள்.

  5 மணி அளவில் மண்டபத்திற்கு நெருங்கிய உறவினர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்து விட,

அக்கம்பக்கம் , உறவினர்கள், நண்பர்கள் என ஒவ்வொருவராக வர..

மெதுவாக அவனிடம் நெருங்கி கேட்டாள்..” இப்பயும் உன் பிரண்டு வர மாட்டாங்களோ ?”என..

அவளை முறைத்தவன். “ரிசப்ஷனை என்ஜாய் பண்ணுடி! இது நமக்கான நாள்..”

“அவளை பத்தி பேசினா மட்டும் வாய் திறக்காத…” என்று முனகி கொண்டாள் .

அவனும் சிரித்துக்கொண்டே அமைதியானான்.

தன் தோழிகள் படை சூழ மாலை ஆறு இருபது போல் மண்டபத்திற்குள் நுழைந்தாள் நிவேதா. மகள் சன்விகாவை மட்டும் அழைத்துக் கொண்டு வந்திருந்தாள்..

மகனை கணவனின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு வந்திருந்தாள்.

இப்பொழுது தான்  மருத்துவமனையில் இருந்து விட்டு வந்தமையால் அவனை அழைத்துக் கொண்டு வரவில்லை.

அது மட்டும் இல்லாமல் அவனை அழைத்துக் கொண்டு வந்தால் அவள் தனக்கென சிறிது நேரம் ஒதுக்கி சந்தோஷமாக இருக்க முடியாது என்பதால் வசந்த் தான் வைத்துக் கொள்வதாக கூறியவன்.. அவளை அனுப்பி வைத்தான்.

நிச்சயத்திற்கு நாள் குறித்த பொழுதே ,தன் கணவனிடம் நிவேதா நவிலனின் திருமணத்தைப் பற்றி கூறியிருக்க.

” பார்ரா! ஒருவழியா கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சோ?”என்று தன்னவளை சீண்டினான்.

“ஏன் அவனுக்கு லாம் கல்யாணம் ஆகாதோ?”

“நான் அப்படி சொல்லலையே. லவ் பண்ண பொண்ணா? இல்ல எப்படி வேறயா?”

“அவன பாத்தா எப்படி தெரியுது உங்களுக்கு?”என சண்டைக்கு நின்றாள்.

“சும்மா டி.பரவாயில்லையே லவ் பண்ண  பொண்ணையே எப்படியோ பேசி கல்யாணம் வரைக்கும் போயிட்டான் ..அது வரைக்கும் சந்தோஷம் ..”

“அவன பத்தி என்ன நினைச்சீங்க ?  “

“கழட்டி விட்டுருவான்னு நினைச்சேன்..” என்றவுடன், தன் கணவனை அவள் மறைக்க.

” சும்மாடி ..ஆனா ,ஏனோ எனக்கு பிடிக்கல அவனை..”

” உங்களுக்கு பிடிச்சா என்ன? பிடிக்கலைன்னா என்ன? நீங்களா கட்டிக்க போறீங்க ? கட்டிக்க போறவளுக்கு அவனை  புடிச்சா சரி “

சிரித்துக் கொண்டே வசந்த் ,’இனியாவது  அவன் பொண்டாட்டிக்கு நேரம் ஒதுக்கி என்  பொண்டாட்டியை மறந்துடுவானா?’ என மனதில் நினைக்க..

நீங்க என்ன நினைச்சு சிரிக்கிறீங்கன்னு எனக்கு தெரியும் !” என்றாள் புன்னகையுடன்,

“கொன்றுவேன் போடி!”என்று முறைத்தான்.

அவளும் சிரித்துக் கொண்டே நகர்ந்து விட்டாள்.

ரிசப்ஷன் அன்று மாலை அவளை சரண்யா வீட்டில் விட்டு விட்டு வசந்த் கிளம்பிவிட்டான்.

அப்போது மாமியார் வசந்தாவிடம் கௌஷிக் இருந்தான்.. இரவும் தானே வந்த அழைத்து செல்வதாக கூறியிருந்தான் .

“சரி” என்று தலையசைத்தவள் வேறு எதுவும் கூறவில்லை..

மண்டபத்திற்குள் நுழைந்ததும் பிரேம் தான்  அனைவரையும் பார்த்தவன் .. வரவேற்று “உள்ள போங்க” என்றான்

” நீ  பாரு டா. நாங்க போய்கிறோம் ” என்று கூறியவர்கள் உள்ளே சென்று ஒரு இடத்தில் உட்கார்ந்து விட்டார்கள்.

சிறிது நேரத்திற்கு பிறகு மேடை ஏறிய பிரேம் நிவேதா வந்திருப்பதாக கூற.

“கூட்டம் இருக்கு . அவங்கள சாப்பிட்டு வந்து உட்கார சொல்லு”

என்று கூறியிருந்தான்.

தன்னவனை  முறைத்தாள் வனிதா.

பிரேம் சரண்யாவிற்கு போன் செய்து நவி கூறியதை கூற,

” சரி “என்று சரண்யா மற்ற தோழிகளிடம் கூற ,அனைவருக்கும் அதுவே சரி என பட சாப்பிட சென்றார்கள்..

ஒரு முறை மணமக்களை திரும்பி பார்த்தபடி நிவேதாவும் மற்ற தோழிகளுடன் சாப்பிடும் இடம் நோக்கி சென்றுவிட்டாள்.

சாப்பிட்டுவிட்டு  வெளியில் வந்து, ஐஸ்கிரீம், பீடா என சாப்பிட்டுவிட்டு ஒரு சில போட்டோக்கள் எடுத்துக் கொண்டு வந்து உட்கார.

அடுத்து 10 நிமிடத்தில் சரண்யாவின் போன் அலறியது .. பிரேம் தான் மீண்டும் போன் செய்து இருந்தான்.

” இப்ப கொஞ்சம் கூட்டம் குறைஞ்சிருக்கு.. இனி சாப்பிட்டு வரவங்க ஒவ்வொருத்தவங்களா வந்துகிட்டே தான் இருப்பாங்க.. அதனால நீங்க மேடைக்கு போங்க”என்றான்.

  தோழிகள் நால்வரும் மணமக்களை வாழ்த்த மேடை எறினார்கள்.

மொத்தம் நான்கு தோழிகள் திருமணத்திற்கு வருகை தந்திருந்தார்கள் ..அதில் இவளுடன் வந்த இன்னொரு பெண்  தன் குழந்தையை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள் .இன்னொருத்தி புதிதாக திருமணம் ஆனவள் ..சரண்யா மட்டுமே திருமணமாகாதள்.

ஆகையால், ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டாம். இங்கு இருந்து அவர்கள் ஊருக்கு கிளம்புவதற்கு நேரம் ஆகும் என்பதாலே அவ்வாறு கூறினான்.

மேடை ஏறியவுடன்… “ஹாப்பி மேரீட் லைஃப் போத் ஆஃப் யூ!” என்று சொல்லவும் ..

நவி சிரித்தானே தவிர வேறு எதுவும் கூறவில்லை .. மற்றவர்களும் “ஹாப்பி மேரேஜ் லைப்!” என்று கூற..

சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்டான். வனிதா தான் அனைவருக்கும் நன்றி தெரிவித்தாள்.

அனைவருடனும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.

” உன் பக்கத்தில் கூட நிக்க வச்சு போட்டோ எடுத்துக்க மாட்டியா?” என வனிதா  கீழே குனிந்து அவன்  கையை கிள்ளி கேள்வி கேட்க.

“அமைதியா இரு டி” என்றான்..

வனிதாவின் அருகில் சரண்யா நின்று கொள்ள. சரண்யாவை ஒட்டி வேறு ஒரு தோழி மூன்றாவதாக தான் நிவேதா.

  அருகில் கூட வந்து நிற்கவில்லை.. பெரிதாக பேசிக்கொள்ளவும் இல்லை.. நிவேதா வாழ்த்தியதோடு சரி.. அவளும் வேறு எதுவும் பேசவில்லை..

இவர்கள் இருவரும் உயிர் நண்பர்கள் என்று சத்தியம் பண்ணி கூறினால் கூட யாரும் நம்ம கூட மாட்டார்கள். அப்படித்தான் இருந்தது அவர்களின் செயல்களும் ,இங்கு மண்டை காய்ந்தது என்னவோ வனிதா தான்.

  தோழிகள் நால்வரும் ஒன்றாக சேர்ந்து வால் கிளாக் ஒன்று பரிசளித்து இருந்தார்கள். அதுவரை நிவேதா இன்னொரு கிப்ட் வாங்கிக் கொண்டு வந்திருப்பதாக மற்ற தோழிகளிடம் கூறவில்லை.

அவர்களுக்கும் தெரியாது . அனைவரும் வாங்கும் பொழுது தானும் அதில் சிறிது பணம் போட்டு வால் கிளாக் வாங்கினாளே தவிர , தனியாக எடுத்துக் கொண்டு வந்ததை அவளுடைய கைப்பையில் வைத்திருந்தாள்.

பையில் இருந்து எடுத்தவள் தன்மகள் சன்விகாவிடம் கொடுத்து இருவருக்கும் கொடுக்குமாறு கூற.. அப்போதுதான் அனைவருக்கும் தெரியும்.

” ஹாப்பி மேரீட் லைஃப் அத்தை மாமா!” என்று சொல்லிக் கொடுக்க ..அதன்படி குழந்தை சன்விகாவும் இருவரிடமும் கூறி கிப்டை நீட்ட..

“தேங்க்ஸ்!” என இன் முகத்துடன் வாங்கிக் கொண்டார்கள்.. வனிதா குழந்தையின் கன்னம் கிள்ளி கொஞ்சினாள்.

“சாப்டியா? தம்பி இப்போ எப்படி இருக்கான்? யார்கிட்ட விட்டுட்டு வந்தீங்க?” என்று அந்நேரத்திலும் நவி குழந்தை இடம் வினா தொடுக்க  .

“சாப்பிட்டேன் மாமா. அப்பா கிட்ட இருக்கான்..தம்பி”

“சரி”என்றவன் மேற்கொண்டு வேறு எதுவும் பேசவில்லை.” நேரம் ஆகுது பாருங்க கிளம்புங்க” என்றான் பொத்தாம் பொதுவாக..

வனிதா அவனை முறைக்க மட்டும் தான் செய்தாள். வேறு எதுவும் பேச முடியவில்லை .சுற்றி ஆட்கள் இருக்க  பேசவும் தோன்றவில்லை.. “ரொம்ப சேஃப் பண்ற போல!” என்று லேசாக முனக மட்டும் செய்தாள்.

“எங்க கூட தானடி வந்த? எப்போ கிப்ட் வாங்குன ?சொல்லவே இல்ல ?” என மற்ற தோழிகள் நிவேதாவை பிடித்துக் கொள்ள.

அவளோ அனைவரிடமும் பேசிக்கொண்டே நவி, வனிதா இருவரையும் பார்த்தபடி கீழே இறங்கிவிட்டாள்.

“அது வீட்டில் இருந்து வரும் போதே எடுத்துட்டு வந்தேன்” என்றாள்.

“ஓ! மேடம் தனியா கிப்ட்?”

“அப்படி இல்ல. ஆனா,” என்றவள் தயங்க..

“சொல்லுங்க மேடம்…”

அது உங்க கூட வாங்குனது ..இது வேற..” என்று அமைதியானாள்.

மற்றவர்கள்தான் அவளை குறுகுறுப் பார்வையோடு பார்த்துவிட்டு அமைதியானர்கள்.

” சரி அதுல என்ன இருக்கு ?”என்று கேட்க ..

“அப்புறமா தெரிஞ்சுக்கலாம் .”என்று அமைதியாகி விட்டாள் .

அதில் இருவரும் காதலிக்கும் பொழுது ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.

அது வனிதாவின் whatsapp டிபியில் இருக்கிறது .அந்த போட்டோவை யாரும் அவளுக்கு அனுப்பவில்லை.. வனிதா டிபியில் இருக்கும் போட்டோவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து, போட்டோ ஷாப்பிங் சென்று அதை போட்டோவாக செய்து தரச் சொல்லி வாங்கி இருந்தாள். அதுதான் அதில் இருந்தது..

ஏனோ, அவளுக்கு அது பிடித்து இருக்க ..அவர்களுக்கும் பிடிக்கும் என்ற எண்ணம் அவளுக்கு. அவர்களுக்கு பிடிக்குமா இல்லையா என்பது இல்லை விடயம். அவளுக்கு பிடித்திருந்தது அதை கிப்ட் செய்தாள்.

வசந்த் கூட ,”பணம் தருகிறேன் வைத்து விடு” என்று கூறி அவளிடம் பணம் கொடுத்தான்..

“அதை அவன் விரும்ப மாட்டான் வேண்டாங்க “என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டாள். வசந்த் மீண்டும் அவளை வற்புறுத்தவில்லை.

அனைவரும் கீழே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க, அப்போது பிரேம் சரண்யாவிற்கு போன் செய்து ,”கிளம்புங்க நேரம் ஆகுது பாரு “என்றான்.

“ரொம்ப பாதுகாப்பா தான் பாத்துக்குற போல ? மத்த ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கூட பேசின போல. ஆனா, அவ கிட்ட பேசின மாதிரியே தெரியலையே..”

சிரித்தானே தவிர வேறு எதுவும் கூறவில்லை.

வெளியே வந்தவுடன் பிரேம் அவர்களின் அருகில் வந்தவன் நிவேதா கையில் வரவேற்புக்கு வந்தவர்களுக்கு திருமண தாம்பூலத்துடன், செடி ,மரம் வகைகள் கொடுக்கப்பட்டது..

  இரண்டு குண்டுமல்லி செடியும்,  ஒரு நெல்லிக்கண்ணும் எடுத்துக் கொடுத்த பிரேம்,” காட்டுல நட்டு வை” என்று கூற,

“ஏன் நாங்க எல்லாம்  நட்டு வைக்க மாட்டோமோ. அவளுக்கு மட்டும் தூக்கி தர ?”என்று மற்றவர்கள் கேட்க.

உங்களுக்கு எந்த செடி புடிச்சிருக்கோ எடுத்து வச்சுக்கோங்க. யார் வேணான்னு சொன்னா.. எத்தனை வேணாலும் எடுத்துக்கோங்க..” என்றான் பிரேம்.

“ஆனாலும் உங்க அலும்பு தாங்கலடா “என்று சிரிக்க..

அவனும் சிரித்து  விட்டான்..

“இல்ல பிரேம் பை எதுவும் எடுத்துட்டு வரல எனக்கு வேணாம்..”என்றாள் நிவேதா.

“இரு வரேன்” என்றவன் வேகமாக சென்று ஒரு கவர் எடுத்துக் கொண்டு வந்து  கொடுக்க..

மற்ற தோழிகளும் கவர் இல்லாமல் இருக்க , அவர்களுக்கும் ஒவ்வொரு கவர் நீட்டினான்..

தங்களுக்கு பிடித்த செடிகளை   எடுத்துக் கொண்டார்கள் ..அது மட்டும் இல்லாமல் தேங்காய் வைத்து தாம்பூலமும் கொடுக்கப்பட்டது..

அதையும் ஆளுக்கு ஒன்று எடுத்து கொடுத்தான்.

” இல்லடா காட்டுல தேங்காய் இருக்கே! எனக்கு வேணாம்” என்று நிவேதா கூற .

அவன் பார்த்த ஒற்றைப் பார்வையில் அமைதியாக வாங்கிக் கொண்டாள்.

” வேணாம்னா  என்கிட்ட கொடுத்திடு” என்று மற்ற தோழிகள் சிரிக்க…

தாம்பூல பையில் மணமக்களின் பெயர் இருக்கவும் .எதுவும் பேசாமல் தேங்காயை வேறொரு தோழிக்கு எடுத்து நீட்டியவள். தாம்பூலப் பையை எடுத்து தன் கைப்பையில் போட்டுக் கொண்டாள்.

மற்றவர்கள் சிரித்தபடி அமைதியாகி விட்டார்கள்.

“தம்பிக்கு இப்போ எப்படி இருக்கு? பஸ்ல தான் போகணுமா?” என்று பிரேம் கேள்வி தொடுக்க.

இல்லடா அவரு வராரு.. போன் பண்ணி இருக்கேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே,  தூரத்தில்  வசந்த் வர ..

“மாமா வந்துட்டாரு. நீ கிளம்பு.. பார்த்துப் போ.. தம்பியை பாத்துக்கோ..” என்றான்.

” நீ இங்க பாரு ஏதாவதுனா போன் பண்ணு..” என்றவள்  தன் தோழிகளிடமும் சொல்லிவிட்டு கணவனுடன் வீட்டுக்கு கிளம்பி விட்டாள்.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்