
காலை 10 மணி அளவில் காலை உணவிற்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தான் நவிலன்.
அவன் வரும்பொழுது பெரிதாக வீட்டில் உறவினர்கள் கூட்டம் என்று எதுவும் கிடையாது. நேற்று மாலையே ஒரு சிலர் கிளம்பி இருந்தனர்..ஒரு சிலர் காலை காபி குடித்துவிட்டு தங்கள் இருப்பிடத்தை நோக்கி கிளம்பி விட்டார்கள்..
முக்கால்வாசி உறவினர்கள் அருகில் இருப்பதால் ரிசப்ஷனுக்கு நேராக மண்டபம் வந்து விடுவதாக கூறிவிட்டு கிளம்பி விட்டார்கள்.
திருமணத்திற்கு நவிலனின் அண்ணன் முருகனையும் அண்ணியையும் வர வைப்பதற்கு படாத பட வேண்டி இருந்தது..
” ஓ! இவ்வளவு செலவு பண்ணி கல்யாணம் பண்ண காசு இருக்கோ ?”என்று அவன் அண்ணி புலம்பி தீர்த்தாள்..
” என் புள்ள அவன் வாழ்க்கையாக இப்போ தாண்டி இருந்து இருந்து அவனுக்காகனு ஒரு விஷயம் ஆசைப்பட்டு இருக்கான். அவனை சந்தோஷமா வாழ விடுங்கடி.. உங்க வைத்தெரிச்சலை என் பிள்ளை வாழ்க்கையில் திணிக்காதீங்க.. ஒவ்வொருத்தங்களும்..” என்று சத்தம் போட்டு விட்டே வந்தார்..
நவிலன் தான் இறங்கி சென்று, “என்னை ஒரு மனுஷனா , உங்க கொழுந்தனா மதிச்சீங்கன்னா , நினைச்சீங்கன்னா கல்யாணத்துக்கு வந்து முன்னாடி நின்னு எனக்காக எடுத்து கட்டி கல்யாணத்தை நடத்தி கொடுங்க… காசு பணம் கேட்கல.. அம்மா கூட ஒத்தாசைக்கு உறுதுணையா கூட நில்லுங்க…
எனக்கு உறவாய் நின்னு கல்யாணத்தை நல்லபடியா முடிச்சு கொடுக்க சொல்றேன்.. அவ்வளவுதான்! என்னால சொல்ல முடியும் … ரத்த உறவா நினைச்சா வாடா!” என்று தன் அண்ணனிடமும் சொல்லிவிட்டு கிளம்பி இருந்தான்.
அவனின்
அண்ணன், அண்ணி குழந்தைகள் என அனைவரும் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வந்து, அவ்வப்போது இங்கு இருக்கும் ஒரு சில வேலைகளை அமைதியாக பார்த்துவிட்டு, உறங்குவதற்கு மட்டும் தன் வீட்டிற்கும் சென்று , திருமணத்தையும் நல்ல முறையில் நடத்திக் கொடுத்தார்கள்..
காலை உணவிற்கு உட்காரும்போது சுந்தரி விடயத்தை கூற,
” சரி மா இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சுக் கிளம்புறேன் ” என்றான்.
அவனின் கையை சுரண்டி, கீழே குனிந்து, அவனுக்கு மட்டும் கேட்கும் படியாக,” இப்போ நம்ம அங்க போகணுமா?” என்றாள் கேள்வியாக,
அவளை லேசான புன் சிரிப்புடன் ஏறிட்டவன் ,”உன்னோட பிறந்த வீடு போகணும் தான்.. இது என்ன கேள்வி ? ரொம்ப தங்க முடியாது. நாளைக்கு காலை சாப்பாடு சாப்பிட்டுட்டு கிளம்புற மாதிரி இருக்கும்..வந்து ரிசப்ஷன் வேலை எல்லாம் பாக்கணும். என்னதான் கூட இருக்கவங்க பாத்துக்கிட்டாலும் நம்ப பாக்குற போல சரிப்பட்டு வராது.. “என்றான் .
“சரி.” என்றவள் அமைதியானாள் .
காலை உணவு இங்கு முடித்துக்கொண்டு , மதிய உணர்விற்கு வனிதாவின் வீட்டிற்கு சென்று இருந்தார்கள்.
அங்கு யோகபோக வரவேற்பு தான் இருவருக்கும் ..சுகந்தி முகத்தை தூக்கினாலும், அதை பெரிதாக நவிலன் கண்டுகொள்ளவில்லை.
அவ்வபோது முகம் சுருங்கியது என்னவோ வனிதா தான். அதையும் அப்படி இப்படி பேசி அவளை சரி கட்டி இருந்தான்..
சுகந்தியின் பெற்றவர்கள் சம்மந்தி என்பதால் நாளை மாலை ரிசப்ஷன் முடித்துக் கொண்டே வீட்டுக்கு செல்லலாம் என்று அங்குதான் இருந்தார்கள்.
மதிய உணவை முடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் போது, இருவருமே நவிலனிடம் இன் முகமாக பேசினார்கள்..
” பரவால்ல நவிலா கல்யாணத்தை ஜாம்ஜாம்ன்னு நடத்திப்புட்ட!” என்று பெருமை பொங்கினார்கள்..
வனிதாவிற்கு மனதிற்குள் சந்தோஷம் அப்படி ஊற்றெடுத்தது..
தனது அண்ணியை தான் பார்த்தாள்.. ஆனால், சுகந்தியோ எனக்கென வந்தது என்பது போல் நகர்ந்து விட்டாள்..
“சரியா சாப்பிட்டீங்க இல்லையா.. கொஞ்ச நேரம் போயிட்டு ஓய்வு எடுங்க! ” என்று பெரிய மனிதர்களாக அவர்களுக்கு தனிமை தர எண்ணி அனுப்பி வைத்தார்கள்..
“சரி” என்றவர்கள் ரூமுக்கு சென்றனர்..
ரூமுக்குள் நுழைந்தவுடன் அவனது மடியில் படுத்து விட்டாள்..
“தூக்கம் வருதா டி ?ரொம்ப டயர்டா இருக்கா ? ரொம்ப படுத்தி எடுத்திட்டனா?” என்றான் உண்மையான வருத்தத்துடன்..
லேசாக சிரித்தவள்,” அப்படி இல்லடா நவி.ஆன ஒரு மாதிரி இருக்கு.. சொல்ல தெரியல..”
” அப்போ இப்போ ஒரு ரவுண்ட் போவோமா…?” என்று அவளிடம் நெருங்க..
அவன் கன்னத்தில் கடித்து வைத்தாள்..
” அடியே! “என்று கன்னத்தை தேய்க்க…
“வலிக்குதா?”என்றாள் உண்மையான அக்கறையுடன்…
“அந்த அளவுக்கு உன் அளவுக்கு எல்லாம் வலிக்கல..” என்று அவள் நெற்றியில் முட்டி சிரித்தான்.
சிறிது நேரம் அங்கு காதல் விளையாட்டுகள் செல்ல..
” சரி இருடி!” என்றவன் அவளை விட்டு சிறிது நகர்ந்தபடி போன் எடுத்து யாருக்கோ அழைத்தான்..
எதிர்முனையில் எடுக்கப்பட்டவுடன் ,”வேலையா ?ப்ரீயா ?” என்றான்..
“
சொல்லுடா எப்படி இருக்க புது மாப்பிள்ளை?” என்றாள் புன் சிரிப்புடன் நிவேதா..
“கல்யாணம் எப்படி போச்சு?” என்றாள் மீண்டும் குதூகலமாக..
“உன் பிரண்டா..!” என்று அவன் இடுப்பில் கிள்ளி இருந்தாள் வனி.
“கம்முனு இருடி!” என்றான்..
அந்த பக்கம் எதிர்முனையில் இருந்த நிவிக்கு கேட்க தான் செய்தது..
“சார் இங்க போன் போட்டுட்டு அங்க ஏதோ பேசுற மாதிரி இருக்கே?” என்றாள் சிரிப்புடன்..
“அப்படி எல்லாம் இல்லடி.இப்போ தம்பிக்கு எப்படி இருக்கு ?”
” பரவால்லடா. நல்லா தான் இருக்கான்.. இப்போ ஒரு ரெண்டு மூணு நாளா .. கல்யாணம் எப்படி போச்சு?”
அவனும் ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டான்.. “நாளைக்கு சாயங்காலம் ரிசப்ஷன் இருக்குடி ஞாபகம் இருக்கா?”
சிரித்துக் கொண்டே,” இருக்கே..!” என்றாள்..
” சரிடி சரி பார்த்துக்கோ..” என்றவன் சிறிது பேசிவிட்டு வைக்க..
“ஆனா ,உனக்கு ரொம்ப தைரியம் தாண்டா ..என்ன வெச்சிட்டே உன் பிரண்டு கிட்ட பேசுற பாத்தியா?” என்று அவன் கையில் கிள்ளினாள் .
“ஏன் இதுல என்ன இருக்கு? அவ கிட்ட தானே பேசுறேன். தப்பா பேசலையே..”
” அது சரி..” என்று சிரித்தவள்..
” கல்யாணத்துக்கு உன் பிரண்டு வரவே இல்ல..?”
” நான் கூப்பிடவே இல்லையே..” என்று தோள்களை குலுக்கினான்.
அவனை முறைத்தவள். “பொய் சொல்லாத “
“இப்ப கூட அவளை ரிசப்ஷனுக்கு வர சொல்லி நான் கூப்பிட்டேனா? ரிசப்ஷன் இருக்குன்னு சொன்னேன். அவ்வளவுதான்.. பையனை பெட்ல வச்சிருந்தாங்க மறந்துடாத.. நீ தான் சொன்ன நான் பேசும் போது பெட்ல இருக்கறதா சொன்னாங்கன்னு சொன்ன.. சொல்ல போனா நான் கிட்டத்தட்ட இப்ப ஒன் வீக் மேல ஆகுது பேசி ..எனக்கு கல்யாண வேலை இருந்துச்சு..”
அமைதியாக கேட்டுக் கொண்டாள். ” ரிசப்ஷனுக்கு உன் பிரண்ட் வருமா? இல்ல வராதா ?”
“மே பி வருவா. ஆனா, தெரியல ?தம்பிக்கு ஹெல்த் எப்படி இருக்கோ அதை பொறுத்து..”
” அது சரி பிரண்டு பிரண்டுன்னு உசுரையே விடுற.. எத்தனை பேர் கிட்ட பேசிட்டு இருந்தாலும், இவ தான் முக்கியம்னு ..ஆனா, பிரண்டோட கல்யாணத்துக்கு கூட வர முடியாத அளவுக்கு இருக்கு உங்க பிரண்ட் ஷிப்..”
“ரிசப்ஷனுக்கு மத்த பிரண்ட்ஸும் வருவாங்க”பேச்சை மாற்றினான்.
“எல்லாரும் வருவாங்க. இவ வருவாளா ?”
“எனக்கு ஒரு சின்ன டவுட் டி.. அவ கிட்ட பேசும்போது மரியாதையா அண்ணி, வாங்க போங்கன்ற. என்கிட்ட பேசும் போது வார்த்தைக்கு வார்த்தை எப்படி டி அவ இவனு? வருது..”
“அதெல்லாம் எனக்கு தெரியல.. சாதாரணமா உன் பிரண்ட்ட எனக்கு புடிச்சிருக்கு. உன் பிரெண்டா பாக்கும்போது பத்திகிட்டு எரியுது.. அது ஏன் எல்லாம் கேட்டா தெரியாது” என்று உதட்டை சுழித்தாள் .
அவள் சுழித்த உதட்டை பிடித்து தன்னுடைய வேலைகளை காட்டத் தொடங்கி இருந்தான்.. அங்கு அதன் பிறகு மற்ற பேச்சு வார்த்தைகளுக்கு இடமில்லை..
அன்று இரவு அங்கு தங்கி விட்டு, மறுநாள் காலை உணவை முடித்துக் கொண்டு அவன் “கிளம்புகிறேன்!” என்று கூறினான்..
” மதியம் சாப்பிட்டு போகலாம் இல்ல “என்று சங்கரும் கோமதியும் கேட்க .
“இல்ல மாமா . ரிசப்ஷன் வேலை எல்லாம் இருக்குல்ல ..மண்டபம் போக ஒரு சில வேலைகள் எல்லாம் பாக்கணும்.. “
” நம்ம பக்கம் இருந்தும் ஆளுங்க இருக்காங்க டா நவிலா பார்த்துப்பாங்க” என்றார் சங்கர் .
“இருக்கட்டும் மாமா. நானும் பார்க்கணும் இல்லையா ?”
“பாக்கணும் தான்” என்று சுகந்தி வர..
சங்கர் எதிரில் இருக்கும் தனது சம்பந்தியை அவளுக்கு கண் காட்ட..
வாயை இறுக்க மூடி கொண்டாள் சுகத்தி..
” சரிப்பா கல்யாண செலவு எவ்ளோ ஆச்சுன்னு சொல்லு ரெண்டு பேருக்குமே பங்கு தான பாதிக்க பாதி ” என்றார்.
அதுவரை சிரித்த முகத்துடன் பேசிக்கொண்டிருந்தவன்.” இல்ல மாமா ரிசப்ஷன் முடியட்டும் பேசிக்கலாம்..” என்றான்.
” அப்ப தான மொத்தமா சுருட்ட முடியும் ..”என்று அப்போதும் வாய் வைத்துக் கொண்டு இல்லாமல் சுகந்தி சொல்ல..
வனிதா தனது அண்ணனை பார்த்தாள்..
சுந்தருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அவளை அப்படியே தூக்கி போட்டு மிதித்து விடலாமா ?என்று கூட தோன்றியது. ஆனால், சுற்றம் உணர்ந்து அமைதி காத்தான்.
“இல்லடா இப்ப உனக்கு ரிசப்ஷன் செலவுக்கு காசு தேவைப்படுமில்ல..”
” இருக்கு மாமா பார்த்துக்கலாம்..”
“என்னடா கல்யாணத்துக்கு முன்னாடி காசு தரேன் வட்டிக்கு கடனா கூட என்று கேட்டதுக்கும் , இல்ல வேணாம் அது நம்ம உறவை முறிச்சிடும் . சரிப்பட்டு வராதுன்னு சொன்ன.. வெளியே வாங்கிருந்தாலும் கஷ்டம் தானடா. இப்போ என்கிட்ட வாங்கினா.. ரிசப்ஷன் செலவுக்கு பார்க்க வசதியா இருக்கும் இல்ல”
“இப்போ கையில பணம் இருக்கு மாமா பார்த்துக்கலாம் “என்றவன் வேறு எதுவும் பேசாமல் தன் மனைவியை அழைத்துக் கொண்டு தன் தன் வீட்டிற்கு கிளம்பி இருந்தான்.
அங்கு சென்றவுடன் ,”ஈவினிங் மூணு மணி போல மேக்கப் பண்ண ஆள் வந்துருவாங்கடி நீ மண்டபத்துக்கு போயிடுறியா ? இல்ல இங்க வர சொல்லட்டா?”
என்ன நினைத்தாளோ வேகமாக கட்டி அணைத்து அவன் கன்னங்களை கைகளில் ஏந்தி முத்தம் மழை பொழிய தொடங்கினாள்.
“என்ன? என் பொண்டாட்டிக்கு என் மேல லவ் அதிகமாயிடுச்சு போல..”
“அதெல்லாம் எப்பவுமே அதிகமாக தான் இருக்கு. ஆனா, ரொம்ப செலவு இழுத்து வைக்கிறேனாடா ” என்றாள் கண்கள் கலங்க,
அவளை நேருக்கு நேராக பார்த்தவன்..” லூசு குட்டி கண்டதையும் யோசிக்காத! இது நமக்கான நேரம் ..ஹாப்பியா இரு! என்ஜாய் பண்ணு ,எதையும் யோசிக்காத சரியா?” என்றான் நெற்றியில் இதழ் பதித்து,
“ந..நவி.. அ..அது” என்று தடுமாறினாள்.
” எதுவும் இல்ல டி ..ஃப்ரீயா இரு” என அவள் இதழோடு இதழ் பொருத்தி உறவாட விட்டான்..
சிறிது நேரம் அவள் இதழ்களில் இளைப்பாறியவன்..
நேரமாகவதை உணர்ந்து அவள் கன்னத்தில் தட்டிக் கொடுத்துவிட்டு,” ஏதாவதுனா கால் பண்ணு ஓகேவா ..ரொம்ப இம்பார்டன்ட்னா எடுக்கலைன்னா மெசேஜ் பண்ணு .நான் பார்க்கிறேன் “என்று கூறிவிட்டு அவளுடன் சிறிது நேரம் பேசிவிட்டு வெளியில் வந்து,
தன் தாயிடம் வந்தவன் ,”சாமி ரூம்ல பழம் இருக்கு ..மாலை, பூ ஃப்ரிட்ஜ்ல இருக்கு. ஏதாவதுனா கால் பண்ணு. நான் எடுக்கலைன்னா பிரேமுக்கு கால் பண்ணு மா “என்று தன் தாயிடமும் ஒரு சில விஷயங்களை கூறிவிட்டு கிளம்பி இருந்தான்..

