Loading

நவிலன் போன் வைத்தவுடன் நிவேதா ஒரு நிமிடம் தனது நண்பனை எண்ணி சிரித்துவிட்டு, தனது படிப்பில் கவனத்தை செலுத்தினாள்.

 

சிறிது நேரத்தில் அவள் இரவு உணவு செய்ய சென்றுவிட .அப்படியே அன்றைய பொழுது கழிந்தது .

 

எப்படியாவது நவிலனை பற்றி தனது கணவன் வசந்திடம் சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருந்தாள்.

 

ஆனால், ‘அவனை பற்றியும் ,தங்களின் நட்பை பற்றியும் சொன்னால் எங்கு தவறாக வசந்த் நினைத்து விடுவாரோ? ‘என்று தனக்குள் எண்ணி பயந்து கொண்டு இருந்தாள்.

 

ஆனால்,’ தனது கணவனிடம் சொல்லாமல் ,அதுவும் ஒரு ஆண் நட்பை வளர்த்துக் கொள்ள அவளுக்கு உள்ளுக்குள் தயக்கமாக இருந்தது .

தான் சொல்லி விட்டால் பரவாயில்லை.. ஆனால், அதுவே தானாக தெரிய வரும் பொழுது நட்பாக இருக்கும் உறவை தவறாக எண்ணிவிட்டால், சொல்லிவிட்டால் என்று யோசித்தாள்.

 

முதலில் இதைப் பற்றி நவிலனிடம் பேச வேண்டும் என்று நினைத்தாள்.

நாட்கள் அழகாக சென்றது .

 

கிட்டதிட்ட இருவருக்கும் திருமணம் ஆகி இரண்டு மாதங்களுக்கு மேல் சென்று இருக்கும் .

 

அப்பொழுது ஒரு நாள் நவிலனிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது. நவிலன் தினமும் எல்லாம் மெசேஜ் செய்ய மாட்டான்.

 

என்றோ ஒரு நாள் தான் மெசேஜ் செய்வான் மெசேஜ் வந்திருக்க.

 

நிவேதாவும் நவிலனை தினமும் எல்லாம் அழைக்க மாட்டாள் .

 

“சொல்லுடா ?”என்று கேட்டிருந்தாள் .

 

“நிவி நான் உன்ன பார்க்கா  வீட்டுக்கு வரட்டா?” என்று கேட்டான் .

 

அவனைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் ,ஆசையும் அவளுக்குள் இருந்தாலும் ,சிறிது யோசித்தாள்.

 

அவள் அமைதியாக இருக்கவும்,”சொல்லுடி?” என்றான் மீண்டும்.

 

“இல்லடா இன்னும் உன்ன பத்தி நான் அவர்கிட்ட சொல்லவே இல்ல. உன் கிட்டயும் இத பத்தி பேசணும்னு நினைச்சேன் .அதான் ..”

 

“சரிடி ..நான் வரேன். அவர்கிட்ட பேசுறேன்”.

 

“எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு டா”என்றாள் .

 

“சரி என்ன பண்ணலாம் சொல்லு?.இனி நீயும் ,நானும் பேசிக்க வேணாம் சரியா ?”என்றான் கோபத்தை அடக்கி அமைதியாகவே.

 

“நான் உன்ன பத்தி அவர்கிட்ட சொல்ல மாட்டேன்னு சொல்லல .ஆனா ,எப்படி எப்போ சொல்றதுன்னு எனக்கும் தெரியல. அப்படி மட்டும் தான் யோசிச்சேன்” என்றாள் தன் பக்கம் இருந்து தன் நிலையை உணர்த்தி,

 

“அவர் கிட்ட என்னைப் பத்தி சொல்ல இவ்வளவு தயக்கம் ஏன்? நம்ம உறவு தப்பானதுன்னு நீயே நினைக்கிற அளவுக்கு இவ்வளவு பயப்படுறியா? அப்போ… நமக்கிடையில இருக்கிறதே ஒரு தவறான உறவுன்னு நீ சொல்றியா?” என்றான் சினம் மின்ன..காட்டமாகவே.

 

“நீ பக்கத்தில இல்ல நவி… உண்மையாவே ரொம்ப பேசுற…” என்றாள், அவன் வார்த்தைகள் அவளை ஆழமாகக் காயப்படுத்த.

 

“பின்ன? நீ பேசறத நான் எப்படி எடுத்துக்கணும்?”

 

“நீ எப்படியும் எடுத்துக்க வேணாம்” என்று விட்டு அவள் மெசேஜ் செய்யாமல் விட்டு விட்டாள்.

 

ஒரு அரை மணி நேரம் கழித்து திரும்பி நவிலனிடமிருந்து போன் வந்தது .

 

“நான் உங்க வீட்டுக்கு கொஞ்சம் பக்கத்துல தான் இருக்கேன்..  நீ சரின்னு சொன்னா வீட்டுக்கு வருவேன் .இல்லன்னா வரமாட்டேன் ”

 

அவன் இவளிடம் சண்டை இட்டு விட்டு, கோபத்தில் மேற்கொண்டு மெசேஜ் செய்யாமல் விட்டிருந்தாலும் கூட, அவளை பார்க்கும் ஆர்வத்தில் வந்திருந்தான் என்று தான் சொல்ல வேண்டும் .

 

இந்த இரண்டு மாதத்தில் நவிலனை பார்க்கவில்லை .இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் அளவிற்கு இல்லை தான் .

 

ஆனாலும் அவ்வபோது  பேசிக்கொள்வார்கள். மேக்ஸிமம் அவர்களது உரையாடல் மெசேஜில் தான் இருக்கும்.

 

போன்ல அந்த அளவிற்கு பேசிக் கொள்ள மாட்டார்கள். எப்போதாவது ஏதாவது முக்கியமான விஷயமாக இருந்தால் மட்டுமே ஃபோனில் பேசிக் கொள்வார்கள் .

 

மற்றபடி ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் பார்க்க நேரிட்டால் தூரத்திலிருந்து ஒரு சிரிப்பும், தலையசைப்போடும் சென்று விடுவார்கள்.

 

அவ்வப்போது மற்ற நண்பர்கள் வீட்டில் சந்தித்துக் கொள்ளும் அளவிற்கு இருந்தது அவர்களின் நட்பு.

 

நவி போன் செய்து அவளிடம் கேட்டு விட்டு ,அவளின் பதிலுக்காக காத்திருக்க .

 

நிவேதாவிடம் ஒரு சில நொடி அமைதி.

 

“என்னடி வீட்டுக்கு கிளம்பட்டா?”என்றான்.

 

சிறு இடைவெளிக்குப் பின், நிதானமாக யோசித்துவிட்டு , “இல்ல நீ வா டா. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்” என்றாள் தைரியத்தை வர வைத்துக் கொண்டு.

 

“உண்மையா தான் சொல்றியா ?அப்புறம் என்னால பிரச்சனை வந்திடப் போது” என்றான் சிறு அச்சத்துடன். ஆனால், தோழியின் கணவருக்கு தெரியாமல் நட்பை வளர்த்துக் கொள்வதில் அவனுக்கு விருப்பமில்லை..

 

அதே சமயம் தங்களின் நட்பை பற்றி கணவனிடம் அவள் சொல்ல நிறையவே யோசிப்பாள் , பயப்படுவாள் அவளைப் பற்றி அறியாதவனா? ஆகையால் தான், தானே நேரடியாக சென்று தங்களின் உறவைப் பற்றி கூறுவது சரியாக இருக்கும் என்று எண்ணினான்..

 

 

அதே சமயம், அவளை பார்த்தும் நிறைய நாட்கள் ஆகிறது, அதனால்தான் அவள் வீட்டிற்கு செல்வதை பற்றி யோசித்தான்..

 

தோழியையும் , தோழியின் கணவனையும் வெளியே பார்த்து பேசினால் சரியாக இருக்காது.. ஆகையாலே இந்த முடிவு எடுத்திருந்தான்..

 

“உன்னால பிரச்சனை வருமா ?வராதா ? இதெல்லாம் எனக்கு தெரியாது .அப்படி வந்தா சமாளிச்சு தான் ஆகணும் “என்றாள் ஒரு முடிவு எடுத்தவளாக..

 

“லூசு மாதிரி பேசாத நிவி” என்றான்.

 

“நீ இங்க வந்து நிக்கிறது என்ன பாக்குறதுக்காக..எனக்காக டா. என்ன பாக்கவும், நீ அவர் கிட்ட அறிமுகம் ஆகவும், நம்மளோட உறவை அவருக்கு தெரியப்படுத்தவும் வந்திருக்க.. இதெல்லாம் நீ சொல்லி எனக்கு புரிய வேண்டியது கிடையாது ..அப்படி இருக்க, என்னால உன்ன அவ்வளவு சீக்கிரம் எல்லாம் யாருக்காகவும் தூக்கி போட முடியாது . எனக்கு உன்னோட பிரண்ட்ஷிப் என்னோட லைஃப் லாங் வேணும் . அவருக்கு தெரியாம நம்ம பிரண்ட்ஷிப் வளர்ந்தா.. அது தப்பா போய்டும்.

அதுக்கு அவருக்கு தெரிஞ்சு நான் உன்கிட்ட பேசுறது எவ்வளவோ நல்லது தான்” என்றாள் விளக்கமாக தன் மனதில் இருக்கும் அத்தனையும் கொட்டி விட்டாள்.

 

“சரிடி!” என்றவன் அடுத்த ஐந்து நிமிடங்களில் அவள் வீட்டில் நின்றான்.

 

நவிலன் வரும்போது வசந்த் வீட்டில் இல்லை, பெரியவர்கள் மட்டுமே வீட்டில் இருந்தார்கள்..

 

நிவி வீட்டில் இருந்தவர்களிடம் தனது அண்ணன் என்று சொல்லியிருந்தாள் அவனை.

 

வீட்டில் உள்ள பெரியவர்களும்” சரி” என்று விட்டு அமைதியாகி விட்டார்கள் .

 

வசந்த் அண்ணி இளவரசி தான் “வந்த தம்பிக்கு டீ கொடு நிவி !”என்று சொல்ல.

 

“சரி” என்ற நிவேதா டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

 

அதை வாங்கிக் கொண்ட நவிலன், “நிவி  உனக்கு டீ போட தெரியுமா? சொல்லவே இல்லை ?”என அவள் காலை வாரினான்..

 

அவனது தலையில் கொட்டியவள். “பச்சை தண்ணி மாதிரி இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ எருமை” என்றாள்.

 

” பச்ச தண்ணி இல்ல டி…

சுடுதண்ணி “என்று சொல்லி கலகலவென்று சிரித்தான்..

 

அப்போது ,வசந்த் வீட்டிற்குள் நுழைந்தான் .

 

வசந்தை பார்த்தவுடன், நவி எழுந்து நின்றான் .

 

“வாங்க மாமா!” என்று நவி வரவேற்றான். (வந்திருப்பதோ அவனது வீட்டிற்கு.. ஆனால் ,வீட்டிற்கு சொந்தக்காரனையே வரவேற்கிறான்..)

 

நவிலனை மேலும் கீழும் பார்த்த  வசந்த், அவன் யார் ?என்று புரியாமல் நிவேதாவை கேள்வியாகப் பார்த்தான்..

 

“என்னோட பிரண்ட் பேரு நவிலன் “என்றாள் சிறிது கலக்கத்துடன் அதேநேரம் திடமாக .

 

வசந்த் எதுவும் சொல்லாமல், தலையாட்டிவிட்டு,” வாப்பா!” என்றான். அவனது அருகில் உட்கார்ந்து கொண்டு  ,”ஏதாச்சு கொடுத்தியா ?”என்றான் வசந்த்.

 

“இப்போ தான் மாமா டீ குடிச்சேன்.. கொடுத்தாங்க “என்றான்.

 

“சரிப்பா” என்றவனுக்கு மேற்கொண்டு என்ன பேசுவது என்று புரியவில்லை..

 

” சரி மாமா.. பார்த்துட்டு போலாம்னு தான் வந்தேன் . கல்யாணத்துக்கு வந்திருந்தேன் .உங்களுக்கு அன்னைக்கு ஞாபகம் இருந்து இருக்காது…”

என்றவன்..

 

ஒரு சின்ன கிப்ட் பாக்ஸும், ஒரு சாக்லேட் பாக்ஸும் கொடுத்தான்.

 

ஒன்றும் புரியாமல் வசந்த் யோசனையில் ஆழ்ந்த படி இருக்க .

 

“அதான் கல்யாணத்துக்கு கிப்ட் கொடுத்திட்டியே டா ..அப்புறம் இது என்ன ?” என்றாள் வேகமாக ஏதோ ஒரு ஆர்வத்தில்.. எப்போதும் போல,

 

தனது கணவன்  தன்னை முறைப்பதை பார்த்துவிட்டு அமைதியாக நின்றாள்.

 

“இது கல்யாணத்துக்கு இல்ல. உனக்கு பர்த்டே வருது இல்லையா ?அதுக்கு தான் “என்றான்.

 

அவள் அவனை முறைக்க.

 

“சரி  வரேன் மாமா ..உங்களுக்கு இவளோட பர்த்டே தெரியாது இல்ல. இன்னும் ரெண்டு நாள்ல இவளோட பர்த்டே வருது அதனால தான். நாளைக்கு நான் காலேஜ்  போயிடுவேன்.நான் திருச்சியில படிக்கிறேன்.அதான் ” என்றான் சிறிது தன்னைப் பற்றியும் கூறி, அவளின் பிறந்த நாளையும் அவனுக்கு நினைவு படுத்திவிட்டு,

 

“நிவி பாத்துக்கோ!” என ஒரு தலையசைப்போடு இருவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பி விட்டான் .

 

அவன் போன பிறகு, வசந்த் அவளைக் கடுமையாக உற்றுப் பார்த்தபடி ,பார்வையால் எரித்துவிட்டு”அந்த பையன் சிகரெட் பிடிப்பான் போல?” என்றான்.

 

“என்ன?” என்று கோபம் ஒளிரும் கண்களால் வசந்தை உற்றுப் பார்த்தாள் நிவேதா.

 

“இல்ல உதடு கருப்பா இருக்கு இல்ல..அதனாலதான்”..

 

“அவனே கருப்பா தான் இருக்கான்.. அப்புறம் உதடு மட்டும் சிவப்பா இருக்குமா என்ன? .. உதடு கருப்பா இருந்தா சிகரெட் குடிப்பாங்கன்னு அர்த்தமா என்ன ? ஒரு சில பொண்ணுங்களுக்கு கூடத்தான் உதடு கருப்பா இருக்கு .. அதுக்குன்னு அவங்க சிகரெட் பிடிப்பாங்கனு சொல்வீங்களா?”

என சற்றே சினம் கலந்த பார்வையை அவன் மீது வீசினாள் நிவேதா.. நண்பனைப் பற்றி பேசியதும் கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது..

 

அவளை அமைதியாக பார்த்தவன்..”எப்போ இருந்து அவனை உனக்கு தெரியும் ?”என்றான்.

 

“அ..அது ..”என்று திக்கி திணறி

.. ” லெவன்த் படிக்கும் போது இருந்து தெரியும் . கிட்டத்தட்ட நாலு வருஷமா “என்றாள்.

 

வசந்த் வேறு எதுவும் பேசாமல், “சரி எடுத்து வச்சுட்டு  போய்.. வேலைய பாரு “என்று விட்டு வெளியே சென்று விட்டான் .

 

இங்கு நிவேதாவிற்கு தான் ஒரு மாதிரியாக   இருந்தது .சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்து இருந்தாள் .

 

தனது போன் அலறியுடன் ஃபோனை எடுத்தாள் .

 

நவி தான் ..”மாமா என்ன சொன்னாரு ? ஏதாச்சும் உன்ன திட்னாரா ?”என்றான்.

 

“எதுவும் சொல்லல பக்கி .இப்போ இதுக்கு தான் வந்தியா ? என்ன பாக்க வரலையா ?”சிறிது ஏமாற்றுத்துடன்.

 

“உன்ன பாக்க தாண்டி வந்தேன் .

அப்புறம் எதுக்கு வந்தனு கேக்கற?”

 

” நீ என்ன பார்க்க வந்த மாதிரி தெரியல .இத குடுக்க வந்த மாறி இருக்கு. சரி நாளைக்கு காலேஜ் கிளம்புறியா ?”.

 

“பின்ன இங்கேயே உட்கார்ந்து இருக்க சொல்றியா? காலேஜ் போகாம .இன்னைக்கு நைட் கிளம்பிடுவேன் டி ..அதனால தான் உன்னை பார்த்துட்டு போலாம்னு வந்தேன். சரி நீ பாரு “என்று அவன் வைத்து விட்டான்.

 

நிவேதாவும் சாக்லேட் பாக்ஸையும் அவன் வாங்கி கொண்டு வந்த கிஃப்ட்டையும் ஒரு இடத்தில் எடுத்து வைத்துவிட்டு அமைதியாக தன்னுடைய வேலையில் கவனத்தைச் செலுத்தினாள்.

 

அன்று இரவு வேளையில் இருவருக்கும் இருக்கும் தனிமை நேரங்களில் வசந்த் அவளிடம் நெருங்க.

 

“நீங்க என்ன தப்பா நினைச்சுட்டீங்களா ?” என்றாள் பயத்துடன்.

 

“இல்லையே !..ஏன் ?அப்படி கேக்குற ?”.

 

“இல்ல என் பிரண்ட் வரானு எனக்கும் தெரியாது .அவன் பக்கத்துல வந்துட்டு தான் நான் வீட்டுக்கு வரவானு போன் பண்ணி  கேட்டதால என்ன சொல்றதுன்னு தெரியாம வர சொன்னேன்” என்றாள் திணறலுடன்.

 

“போன்ல பேசுவியா ?”என்றான் புருவம் ஏற்றி..

 

அவளோ, திருதிருவென முழித்து விட்டு,  “இ..இல்ல டெய்லி எல்லாம் பேச மாட்டேன் . எப்பவாது ஒரு நாளு தான் .அடிக்கடி எல்லாம் பேச மாட்டோம். நம்ப கல்யாணத்துக்கு வந்ததோடு சரி.. நடுவுல ஒருநாள் பேசினோம்.இப்ப இங்க வரேன்னு சொல்லி போன் பண்ணான் அவ்ளோ தான் “என்றாள்.அவனது முகத்தையே பார்த்து கொண்டு…

 

வசந்த் அவள் முகத்

தில் ஓடும் ஒவ்வொரு உணர்வையும் கவனித்தபடி, “உங்க அம்மாக்கு தெரியுமா ?”என்று கேள்வி எழுப்பினான்.

 

நிவேதா அதிர்ச்சியில் உறைந்தபடி,தன் கணவனை விட்டு கண் எடுக்க முடியாமல் நின்றாள்.

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்