Loading

சங்கரும் தன் மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வீட்டில் உள்ள அனைவரையும் அமைதியாக பார்த்தவர், சாப்பிட்டுவிட்டு எழுந்து கொள்ள..

“இப்போ சொல்லுங்க! என்ன விசியம்..”என்றார் ஹாலில்  உட்கார்ந்த படி சங்கர்.

“அப்பா அவ மேல படிக்கட்டும் பா. இப்போ என்ன அவசரம்.அப்படி என்ன வயசு ஆகிடுச்சு அவளுக்கு” என்றான் ஒரு நல்ல அண்ணனாக..

“என்னங்க விளையாடுறீங்களா? என்ன அவளுக்கு கல்யாண வயசு ஆகல. அவ வயசுல உங்களுக்கும், எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சு அதை மறந்துடாதீங்க?”என்றாள் முந்திக்கொண்டு சுகந்தி..

“அது உங்க வீட்டுல விருப்பப்பட்டு, நீயும் விருப்பப்பட்டு, உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆச்சு. அவ விஷயம் அப்படி ஒன்னும் இல்ல ?அவ மேல படிக்க ஆசைப்படுறா அதை ஏன் கெடுக்க நினைக்கிற ? “என்றான் முறைப்பாக அடக்கப்பட்ட கோபத்துடன்,

“அவ காதல் விவகாரம் தெரிஞ்சும் நீங்க இப்படி பேசுறீங்க பாத்திங்களா?”என்று வேண்டும் என்று உசுப்பேத்தி விட..

அவளை அனல் கக்கும் விழிகளுடன் எரிக்கும் பார்வை பார்த்தவன். அவள் மீது கட்டு கடாங்காத  கோபத்துடன் பேச ஆரம்பித்தான்.” அவ விஷயத்துல நீ ரொம்ப தலையிட செய்ற சுகந்தி? இது நல்லதுக்கு இல்ல”.

“ஏன் அவ விஷயத்துல நான் தலையிடக்கூடாதோ?” என்றாள் இவளும் வீம்பாக,

“நீ உன்னோட வாழ்க்கையை மட்டும் பத்தி யோசி. அவ வாழ்க்கையைப் பத்தி நீ யோசிக்க வேண்டாம். அவ வாழ்க்கைய பத்தி யோசிக்க அப்பா, அம்மா இருக்காங்க. அண்ணன்  நான் இருக்கேன் “என்றான் எரிச்சலாக,

“என்ன மாமா எனக்கு உங்க பொண்ணோட வாழ்க்கையில எந்த சம்பந்தமும் இல்லை. அவளோட வாழ்க்கை சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் நான் பேச கூடாதுன்னு உங்க பையன் சொல்லிட்டு இருக்காரு. நீங்க அமைதியா வேடிக்கை  பாத்துட்டு இருக்கீங்க?” என்று இப்போது தனது மாமனாரை தூண்டி விட்டாள்.

“இப்போ அவரை  எதுக்கு டி தூண்டி விட்டுட்டு இருக்க?” என்றான் பற்களை நரநரவென கடித்த படி,

“டேய் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. இப்ப எதுக்கு நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க?”என்றார் சங்கர்

“அப்பா இவ சொல்றானு நீங்க நம்ப வனிக்கு கல்யாணம் பண்ணனும்னு யோசிக்கதீங்க.. அவ லவ் பண்ணது என்னவோ உண்மை தான்.ஆன இப்போ ரெண்டு வருஷமா அமைதியா தான இருக்கா..அந்த பையனை பாக்கறது, பேசறது எதும் இல்ல பா..இந்த ஒரு காரணத்துக்காக எதுக்கு பா.அவ லைஃப்பா ஸ்பாயில் பண்ணனும்..படிக்கிற புள்ள பா..படிக்க வேண்டிய வயசு..வயசு கோளாறில் ஏதோ பண்ணிட்டா..

அப்படி  ஒன்னும் அவளுக்கு கல்யாண வயசு ஆகல. அவ மேல நம்பிக்கை வைப்போம் பா. நம்ப வீட்டு பொண்ணு பா..உங்க செல்ல மக பா..அதுக்காக நான் அந்த பையனுக்கே இவளை கட்டி கொடுக்க சொல்லல. மேற்கொண்டு படிக்க வைப்போம். அவ விருப்பப்பட்ட போல படிக்கட்டும்”என்றான் கெஞ்சலாக ..

அவளும்,தனது  அப்பாவின் கையை பிடித்துக் கொண்டு,” ப்ளீஸ் பா. நான் மேற்கொண்டு படிக்கணும்.உங்க மானம் போகுற போல  எந்த ஒரு தப்பான விஷயமும் பண்ண மாட்டேன். என்ன நம்புங்க பா..நான் உங்க வளர்ப்பு”என்று அழுதாள்.

ஒற்றை மகள்..அவள் மீது உயிரையே வைத்திருக்கும் சங்கர். தலையாட்டி ,தன் மகள் மேற்கொண்டு படிப்பதற்கு என்ன செய்யணுமோ அதை தன் மகனிடம் செய்ய சொல்லிவிட்டு நகர்ந்தார்.

“என்ன மாமா இப்படி சொல்றீங்க?”என்று சுகந்தி மீண்டும் ஆரம்பிக்க..

சுந்தர் தான் சத்தம் போட செய்தான். “என்ன டி நினைச்சுட்டு இருக்க. அவளோட வாழ்க்கையில் விளையாடுவதையே ஒரு பொழப்பா வச்சிட்டு இருக்க. அன்னைக்கு அவ அந்த பையன லவ் பண்றானு வந்து சொன்னியே தப்பு இல்ல. ஆனா, இப்பவே கல்யாணம் பண்ற அளவுக்கு ஒன்னும் அவசரம் இல்லை. இவ்ளோ  சிக்கிரம் கல்யாணம் பண்ற அளவுக்கு எந்த ஒரு தப்பான விஷயத்தையும் என் தங்கச்சி பண்ணல..முதல்ல அவ லைஃப் ல தலையிடுற வேலையை இதோட நிறுத்திக்கோ.!அவளை இந்த வீட்டை வீட்டு அனுப்ப நினைச்சா நீ தான் உன் அப்பன் வீட்டுக்கு சிக்கிரம் போற நிலமை! வரும் ” என்று எச்சரிக்க..

எரிச்சலும், கோபமும் போட்டி போட, “எதே! நான் என் வீட்டுக்கு போகணுமா? ஆமா ஆமா உங்க தங்கச்சி எந்த தப்பும் பண்ணல தான்..கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பையனை தனியா பார்த்து கை பிடிச்சு பேசறது தப்பே இல்லையே இல்லையா? லவ் பண்றது தப்பு இல்லையோ?” என்று நீட்டி முழகினாள்

எரிச்சல் மண்ட,”லவ் பண்றது ஒன்னும் அவ்வளவு பெரிய கொலை குத்தமில்ல சரியா? இனி அவளை சீண்டுற வேலை வேணாம்..” என்று வேகமாக கத்தி விட்டு, அதே சமயம் கோபமாக கிளம்பி  விட்டான்.

“என்ன லவ் பண்றது தப்பு இல்லையா ?”என்று இவளும் வரிந்து கட்டிக் கொண்டு வர.

கோமதி அமைதியாக இருந்தார். “என்ன அத்தை அமைதியா இருக்கீங்க? அவர் அவ்ளோ பேசிட்டு போறாரு “

” அப்புறம் என்ன டி பண்ண சொல்ற அப்பனும் மகனும்  முடிவெடுத்ததுக்கு அப்புறம். இதுல நான் சொல்ல என்னடி இருக்கு?”என்றார்.. அவருக்கு தன் மகளை இப்பொழுது திருமணம் செய்து வைப்பதில் விருப்பமில்லை.

அவள் வயதில் இருக்கும் பெண்கள் காதல் என்று சொல்லி வீட்டில் ஒத்து கொள்ளவில்லை என்றாள் உடனடியாக ஓடி போய் திருமணம் செய்து கொள்ள..அது போல் இதுவரை தன் மகள் எதுவும் செய்யாமல், அமைதியா இருப்பதை உணர்ந்து, அவள் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்று எண்ணுவதால், அதுவும் தனது கணவனும் சம்மதம் தெரிவித்த பிறகு, தான் குட்டையை குழப்ப வேண்டாம் என்று எண்ணி அமைதியாகி விட்டார் .

அவளுடைய அண்ணன் சுந்தர் அவளை அதே காலேஜில் பிஜி சேர்த்து விட்டான்.. அமைதியாக இப்போது படிப்பு தான் முக்கியம் என்று சந்தோசமாக காலேஜ் செல்ல ஆரம்பித்தாள்.

நவி வேலை நன்றாக கற்றுத் தெரிந்து கொண்ட பின்பு, வாடகைக்கு இடம் எடுத்து அங்கு சொந்தமாக வேலை எடுத்து செய்ய ஆரம்பித்து இருந்தான்.

வனிதாவை அவள் வீட்டில் காலேஜில் மேற்கொண்டு முதுகலை படிக்க சேர்த்து விட்டிருந்த  விஷயம் வனிதா அம்மா கோமதி மூலம் பிரேம் அம்மா கனகாவிற்கு தெரிய வர..

அவர் பிரேமிடம் சொல்ல. அது அப்படியே நவியிடம் சென்றது.

அவள் மேற்கொண்டு படித்தால் சந்தோஷம் என்று அமைதியாகிவிட்டான்.

வனிதா தினமும் காலேஜ் சென்று வர ஆரம்பித்தாள். தினமும் நவிலனை  தூரத்தில் இருந்து பார்த்துக் கொள்வாள்.

அவன் இவளை பார்ப்பதற்கு எந்த மெனக்கிடலும் பெரிதாக எடுக்கவில்லை. இவளும் இப்போதைக்கு எதுவும் பிரச்சனை இழுத்து வைத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டாள்.

தன்னை நம்பி தானே தனது அண்ணனும், அப்பாவும் வீட்டில் பேசி தன்னை படிக்க அனுப்புகிறார்கள். ஒழுங்கா படிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.

அவனை தூரத்தில் இருந்து பார்த்து ரசிப்பதோடு சரி. அவ்வப்போது ரோட்டில் எங்காவது பார்க்க நேர்ந்தால், உண்டு..இல்லை பிரேம் வீட்டிற்கு வரும்போது பார்த்தாள் உண்டு. ஆனால், ஓர் அளவிற்கு நெருக்கத்தில் பார்க்கும் அளவிற்கு இருவருக்கும் நேரம் அமையவில்லை.

  இருந்தாலும், தூரத்தில் பார்த்தே, தங்களது காதலை வளர்த்துக் கொண்டார்கள்..

இருவரும் போன் வழியாகவோ இல்லை ,நேரடியாகவோ பேசிக் கொள்ளவில்லை. நாட்கள் மெல்லிய தூறலாக நகர்ந்தது.

இங்கு நிவேதா தனது கணவன் குழந்தை என்று தன் வாழ்க்கையை நகர்த்தினாள்.

அவ்வப்போது கணவர் வீட்டினரால் ஏற்படும் பிரச்சனைகளை தன்னால் முடிந்த அளவு சமாளித்து, அதை பெரிதாக கண்டு கொள்ளாமல், அவளின் கணவன் வசந்த் இடமும் பெரிதாக எதையும் சொல்லாமல் அமைதியாக கடந்து சென்றாள்…

இந்த இரண்டு வருடங்களில் நிவேதா வாழ்க்கையில் நிறைய கசப்பான சம்பவங்கள் நிகழ்ந்து ஏறின…

அவளின் வாழ்க்கை பாதை சிறிது மாற்றத்தை வேறு கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்..

பிறந்து வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு குழந்தையுடன் வந்ததிலிருந்து குழந்தை வளர்க்க தெரியவில்லை என்று அவளது குழந்தை வளர்ப்பில் ஆயிரம் குத்தங்களை வசந்தின் அண்ணிஇளவரசியும், மாமியார் வசந்தாவும் நிறைய குற்றச்சாட்டுகளை வைத்தார்கள்..

மூத்தார் அமைதியாக இல்லாமல் குழந்தை ஊரிலிருந்து வரும்போது எம்புட்டு சிவப்பா இருந்துச்சு.. இப்ப கருப்பா ஆயிடுச்சு..ஒழுங்கா குளிக்கக்கூட வைக்க தெரியல ..என்று கூற..

தன்னை குற்றம் சொல்லும் போது அமைதியாக இருந்தவள்.. தன் மகளை, தன் தாய்மையை  குற்றம் சொல்வதை தாங்கிக்கொள்ள முடியாமல் ,”எங்க ஊர் தண்ணிக்கு புள்ள சிவப்பா இருந்துச்சு.. உங்க ஊர் தண்ணில குளிச்சு தான் கருப்பாயிடுச்சு.. நான் நல்லா தான் குளிக்க வச்சிட்டு இருக்கேன்” என்று சொல்ல ..

“அங்கிருந்து வரும்போது புசுபுசுன்னு இருந்துச்சு ..”என்று என்னென்னமோ சொன்னான் ரஞ்சித் கூட..

அனைத்தையும்  கண்டும் காணாமல் கடந்து விட்டாள் நிவே..

தன் கணவனிடமும் பெரிதாக எதுவும் சொல்லவில்லை.. இதை வைத்து எதுவும் பிரச்சினை செய்ய அவள் விரும்பவில்லை. அதுதான் உண்மையும் கூட..

ஒருமுறை குழந்தை சன்விகாவுக்கு இரவு வேளையில் ரொம்ப ஜுரம் அடித்து உடல் கொதிக்க..

ஏற்கனவே அவள் தாய் வீட்டில் இருக்கும் போது ஜுரம் அடித்தப் போது அவளுடைய  அம்மா ஈரத்துணி வைத்து தொட்டு துடைத்து விட்டது. ஞாபகம் வந்து அதை செய்தாள் ..

அந்நேரத்தில்  குழந்தையைப் பார்ப்பதற்காக வந்த ரஞ்சித் இதனை பார்த்து விட்டு, “ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகலையா?” என்று கேள்வி எழுப்பினான்.

“ரொம்ப இருந்தா போலாம் மாமா..இப்போ தான் லைட்டா பாப்பாவுக்கு ஃபீவர் அடிக்கிது..அதான்..”

” சரி என்ன பண்ணிட்டு இருக்க?” என்றான் ரஞ்சித்.

“ஈரத்துணி வைத்து துடைச்சு விட்டுட்டு இருக்கேன்”..

” எந்த ஊர்லயாச்சும் ஜுரம் அடிக்கிற பிள்ளைக்கு பச்ச தண்ணி வச்சு தொடச்சு விடுவாங்களா?” என்று சத்தம் போட்டான்.

அவன் சத்தம் போட்டதில் அவனுடைய தாயும் ,மனைவியும் வந்துவிட..

அவர்களும் ரஞ்சித்தைப் போல கூமுட்டையாகவே கேள்வி எழுப்ப..

‘குழந்தை வளர்ப்பை பற்றி பெரிதாக எதுவும் தெரியாத  வசந்த்தும் இவர்களின் கூச்சலில் அரண்டு  தன் மனைவி தான் தவறு செய்து விட்டாளோ?  ஒரு வேலை உடல்நிலை சரியில்லாத குழந்தைக்கு பச்ச தண்ணி வச்சு தொடச்சி விடக்கூடாது போல இவ தான் தெரியாம தொடச்சி விடுற போல ‘என்று எண்ணி அவளை முறைத்தான் ..

அவளோ எதுவும் பேசாமல்  அமைதியாக நின்றாள்..

இறுதியில் குழந்தை சன்விகாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக..

ஃபீவர் சிரப் முதலில் கொடுத்த மருத்துவர்..

“ரொம்ப ஜுரம் அடிச்சுச்சுன்னா அஞ்சு மணி நேரத்துக்கு ஒரு முறை இந்த சிரப்  கொடுங்க.. அப்பவும் விடாம ஜுரம் விட்டுவிட்டு அடிச்சா ஈரத்துணி வச்சு உடம்பு முழுவதும் துடைச்சு விடுங்க.. “என்றார்.

  மருத்துவரின் இறுதி வார்த்தையில் தன் கணவனை ஓர் பார்வை பார்த்தவள்.. அமைதியாக மேற்கொண்டு மருத்துவர் கூறுவதை கேட்க ஆரம்பித்து விட்டாள் ..

வீடு வரும் வரை நிவேதா எதுவும் பேசவில்லை.. வசந்துக்கு தான் சிறிது குற்ற உணர்வு ஆனது.. வீட்டுக்கு வந்த பிறகு அவளிடம் மன்னிப்பு வேண்டினான்.

“எனக்கு குழந்தை வளர்க்கறத பத்தி முழுசா தெரியாது தான் ஒத்துக்கிறேன்.. நானும் இப்பதான் கத்துக்கிட்டு வரேன் ..அப்படி தப்புனாலும் தப்புன்னு சொல்றதுல பிரச்சனை கிடையாது.. எனக்கு தான் குழந்தை வளர்ப்பது பத்தி தெரியாது.. ஆனா, உங்க அண்ணி ரெண்டு புள்ள பெத்தவங்கதானே..?  ரெண்டு பிள்ளை வளர்த்திருக்காங்க இல்ல.. உங்க அம்மா ஒன்னுக்கு மூணு பிள்ளை வளர்த்தவங்க தானே ?ரொம்பவே அனுபவமானவங்க தானே ?பச்ச தண்ணி வச்சு துடைச்சி விட்டா இன்னும் ஜுரம் அதிகம் ஆகும்னு சொல்றீங்க பாத்தீங்களா ? உங்களை மாதிரி ஒரு ஆள பாத்ததில்ல.. எனக்கு குழந்தை  ஒழுங்கா வளர்க்குத் தெரியல. பராமரிக்க தெரியலன்னு எல்லாம் நீங்க சொல்றீங்க ?உங்களுக்கு ரொம்ப குழந்தை வளர்ப்பு தெரிஞ்சி இருக்கு தான் விட்ருங்க.. ஆனா, உங்களை நம்பி என் பிள்ளையை வளர்க்காத வரை  சந்தோஷம்.. உங்க வீட்ல இருக்கவங்க யாரும் என் புள்ளையை வளர்க்கிறது கிடையாது.. சும்மா எட்டி பாத்துட்டு போறவங்க.. நான் குளிக்கிற நேரம் கூட பார்த்துக்க  உங்களுக்கெல்லாம் நேரம் கிடையாது ..இதுல பேச்சு மட்டும் நிறைய பேசுறாங்க இல்ல ..”என்று முதல்முறையாக வாய் திறந்து  இவ்வளவு நீளமாக பேசிவிட்டு நகர்ந்தாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்