Loading

நாட்கள் வேகமாக செல்ல.

 

வசந்த் ,நிவேதா திருமணத்திற்கு தேவையான ஒவ்வொரு வேலைகளும் கடகடவென்று நடைபெற ஆரம்பித்தது.

 

ஒரு மாதத்தில்  வளர்பிறை முகூர்த்த தேதியாக பார்த்து இருவருக்கும் பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.

 

நிவேதாவும் தனது புகுந்து வீட்டில் காலடி எடுத்து வைத்தாள்.

 

நிவேதாவிற்கு திருமணத்திற்கு விருப்பமில்லை என்பது வசந்தை பிடிக்காமல் இல்லை .

 

திருமணம் இப்பொழுது தேவையில்லை என்ற காரணத்தினால்,..

 

 

நிவேதாவின் ஜாதகத்தில் ஏதோ தோஷம் இருக்கு என்று சொல்லி திருப்பதி செல்லும் வழியில் இருக்கும் காளஹஸ்தி கோவிலுக்கு சென்று வர சொல்லி இருக்க .

 

திருமணம் முடிந்த கையோடு  வசந்த் ,நிவேதா இருவரையும் இன்னும் மூன்று பெரியவர்களோடு கோவிலுக்கு அனுப்பி வைக்க.

 

அனைவரும் காரில் காளஹஸ்தி செல்ல.

 

செல்லும் வழியெங்கும் வசந்த் நிவேதாவை அவ்வப்போது திரும்பித் திரும்பி பார்த்தான்.. அவள் ஒரு வார்த்தையாவது தன்னிடம் பேசிவிட மாட்டாளா ? என ஏக்கம் வழியும் கண்களால் அவளைத் தழுவிப் பார்த்தான்.

 

 

அவர்களது பயணம் லேசான உரசலுடனும்  செல்ல.

 

நிவேதா தான் ,’முன்ன பின்ன பொண்ணையே பார்த்திருக்க மாட்டானா ?’என்று மனதிற்குள் அவனது செயலை எண்ணி கருவிக்கொண்டாள்.

 

ஆனால் ,வசந்த் என்னவோ அந்த அளவிற்கு எல்லாம் ஒட்டி உரசவில்லை .

 

சாதாரணமாக தான் உட்கார்ந்து இருந்தான் .ஆனால் நிவேதாவின் உணர்வுகள் தான் அப்படி அவளை உணர செய்தது.

 

கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு காளஹஸ்தி கோவிலில் இருந்து இரவு உணவு சாப்பிட்டு விட்டு கிளம்ப .

 

இரவு 12 மணி போல் தங்களது இருப்பிடத்தை நோக்கி வந்தார்கள்.

 

இரவு வரும் வேளையில் இப்பொழுது உண்மையாகவே வசந்த் ,நிவேதாவின் அருகில் நெருங்கி உட்கார.

 

இங்கு நிவேதாவிற்கு தான்  வயிற்றில் பயப்பந்து உருள ஆரம்பித்தது. அவள் திருமணத்தைப் பற்றியே யோசிக்கவில்லை .

 

அதன் பிறகு , ஏற்படும் உறவுகளைப் பற்றியோ ,உணர்வுகளைப் பற்றியோ அவள் யோசிக்கவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்பொழுது இரவு வேளையில் பெரியவர்கள் இருக்கும்பொழுதே தன் அருகில் நெருங்கி உட்கார்ந்து இருக்கும் வசந்தை நினைத்து அவளுக்கு பயம் ஏற்பட ஆரம்பித்தது.

 

வசந்த் இரவு காரில் தூங்கி விழும் பொழுது கூட நிவேதாவின் தோள்பட்டையில் அவன் சாய்ந்திருக்க .

 

நிவேதாவிற்கு தான் என்ன செய்வது என்று புரியவில்லை.

 

வசந்தின் தலையை தூக்கி விடவும் பயமாக இருந்தது .

 

சுற்றி தன் வீட்டு பெரியவர்களும் இருக்க. அவர்கள் ஏதாவது தவறாக எண்ணி விடுவார்களோ என்று பயந்தாள்.

 

அப்படியே அவளுடைய பயணம் சென்றது.

 

12 மணி போல் வீட்டிற்கு வந்து இருக்க. அந்த நேரத்தில் கூட வசந்தின் அண்ணி இளவரசி இரவு சடங்கிற்கு அனைத்தும் ஏற்பாடு செய்திருக்க .

 

நேரத்தை பார்த்தாள் நிவேதா..

 

அவள் வீட்டுப் பெரியவர்களும் இரவு சடங்கு  முதலிரவுக்கு தேவையான அனைத்தையும் செய்து விட்டு இளவரசியிடம் ஒரு மொழம் பூ கேட்க.

 

இளவரசியும் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க .நிவேதாவின் அத்தை தனம் அதை அங்குள்ள பெட்டில் அலங்கரித்து விட்டு நிவேதாவை பார்த்து சிரித்துவிட்டு.

 

“பார்த்து பத்திரமா இரு .ஒழுங்கா நடந்துக்கோ காலையில சீக்கிரமா எழுந்திருக்கணும்.

 

நீ தான் வாசல் கூட்டி கோலம் போடணும் “என்று மட்டும் சொல்லிவிட்டு,” நீ ஒழுங்கா நடந்துப்ப என்ற நம்பிக்கையில் தான் போறோம் “என்று விட்டு அருகில் உள்ள அவர்களது இன்னொரு வீட்டிற்கு சென்று விட்டார்கள்.

 

இங்கு நிவேதாவிற்கு தான் கை ,கால் உதறல் எடுக்க ஆரம்பித்தது.

 

அவள் பதற்றத்துடனே உட்கார்ந்து இருக்க .அந்த அறைக்குள் நுழைந்தான் வசந்த் .

 

 

வசந்த் அவளை நோக்கி ஒரு மெல்லிய சிரிப்பை வீசிவிட்டு, ஒரு சொல்லும் பேசாமல் விளக்கை அணைத்தான்.

 

 

அந்த நிமிடமே நிவேதாவின் உள்ளத்தில் திடீரென்று அச்சம் ஊடுருவத் தொடங்கியது. ஆனால் அவள் அதை வெளிக்காட்டாமல் அமைதியாகவே இருந்தாள்.

 

 

அவளது அருகில் உட்கார்ந்த வசந்த் அவளது கையைப் பிடித்துக் கொண்டு,” உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை என்று எனக்கு தெரியும் .

 

இருந்தாலும், போக போக எல்லாம் சரியாயிடும் என்ற நம்பிக்கை மட்டும் தான். எங்க அம்மாவுக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை.

 

அவங்க நம்ம கல்யாணத்துல இல்லவும் இல்ல. என்னோட அத்தை வீட்ல இருக்காங்க.

 

எப்படியும் ரெண்டு மூணு நாள்ல வந்துருவாங்க. அவங்க ஏதாவது பேசினா எனக்காக அதை பெருசா எடுத்துக்காத கொஞ்ச நாளைக்கு ..அதுக்கப்புறம் சரி ஆகிடும் “என்றான் .

 

நிவேதாவிற்கு மனதிற்குள் மட்டுமே பேச தைரியம் இருந்தது .’உங்க அம்மாவுக்கு விருப்பம் இல்லமா  எதுக்குடா கல்யாணம் பண்ண?’ என்று கேட்டு விடலாம் என்று தோன்றியது .

 

ஆனால் ,வெளியே கேட்கவில்லை .”சரி தூங்கலாமா?” என்று வசந்த் கேட்க.

 

தூங்க தான் போகிறோம் என்று நம்பிக்கையில் சரி என்று நிவேதாவும் சொல்ல.

 

அடுத்த நொடி அவளை இறுக்கி அணைத்து இருந்தான் வசந்த்.

 

நிவேதா பதற்றத்துடனே இருக்க. அவளை கட்டிலில் சாய்த்தான். “இ..இல்லை எ…எனக்கு வேணாம் “என்று நிவேதா திக்கித் திணற .

 

அவளைப் பார்த்த வசந்த் அமைதியாக நகர்ந்து படுத்து விட்டான்.

 

நிவேதாவும் பெருமூச்சுடன் சிறிது இடைவெளி விட்டு படுக்க.

 

அவள் படுத்த சிறிது நேரத்தில் அவளது  இடுப்பில் கை வைத்து அவளை நெருங்கி படுத்திருந்தான் வசந்த் .

 

நான் வேண்டாம் என்று சொல்லியும் நெருங்குகிறான் என்றால் இவனுக்கு உடல் மட்டும் தானே தேவை என்று நிவேதா அமைதியாகவே இருந்தாள்.

 

நிவேதா அமைதியாக இருக்க. “கொஞ்சம் புரிச்சுக்க .நான் ஒன்னும் இதுக்கு அலையுறவன் கிடையாது. ஆனா ,இது மட்டும்  எனக்கு உன் கிட்ட தேவையும் இல்லை. நீ சொல்றதுக்காக ரோஷப்பட்டு ,கோவப்பட்டு நான் உன்கிட்ட இருந்து விலகியும் போக முடியாது.

 

இனி உனக்கு நான் ,எனக்கு நீ “என்றவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க .

 

நிவேதா எதுவும் பேசாமல் கண் மூடி படுத்து இருந்தாள். அடுத்த நொடி அவளது உடைகளை கலைக்க ஆரம்பித்து இருந்தான் வசந்த்.

 

அடுத்தடுத்து ஒவ்வொன்றாக அவளது வாழ்வில் அரங்கேறியது .

 

முழுமையாக அவளை ஆட்சி செய்து இருந்தான் .அதில் நிவேதாவிற்கு விருப்பமா ?என்று கேட்டால் விருப்பமில்லை என்றும் சொல்ல முடியாது .

 

விருப்பம் என்றும் சொல்லிவிட முடியாது. வசந்த் பேசிய பேச்சில் அமைதியாக இருந்தாள் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

 

அடுத்த நாள் காலை பொழுது விடிய.

 

நேரத்தில் எழுந்த நிவேதா குளித்துவிட்டு வாசல் தெளித்து பெருக்கினாள் அவள் முன்ன பின்ன கோலம் போட்டது கிடையாது.

 

இருந்தாலும் தனக்கு தெரிந்த அளவிற்கு எதையோ இழுத்து விட்டது  போல கோலம் போட்டுவிட்டு வந்தாள்.

 

தனம் ,அவளது அருகில் வந்து,” சீக்கிரமா எழுந்துட்ட போல டி ?இனி தினமும் இதே போல எழுந்துக்க பழகிக்கோ” என்றார்.

 

தனது அத்தையை முறைத்தவள். எதுவும் பேசாமல் இருக்க. அவளது அருகில் வந்து,” நைட் எல்லாம் சரியா முடிஞ்சிடுச்சு தான?” என்றார் கேள்வியாக.

 

அவள் தனது அத்தையை முறைக்க .

 

“என்னடி முறைக்கிற நான் கேட்க வேண்டியதை , நான் கேட்டு தான் ஆகணும் .”

 

நிவேதா எதுவும் பேசாமல் நகர்ந்து விட்டாள்.

 

தனதுக்கு உள்ளுக்குள் பயம் திருமணத்திற்கு சம்மதமில்லை என்று சொன்னாளே.. உள்ளே சென்று இரவு சடங்கிற்கும் விருப்பமில்லை என்று வசந்த்திடம் சொல்லி இருப்பாளோ? என்று எண்ணினார்.

 

ஆனால் ,அடுத்த பத்தாவது நிமிடத்தில் தனத்தின் அருகில் வந்த வசந்த் ,”இது நிவேதா ஓட செயின் . பெட்ல இருந்துச்சு எடுக்கல “என்று கொடுத்துவிட்டு சென்றுவிட .

 

தனத்திற்கு லேசான திருப்தி என்று கூட சொல்லலாம் .

 

‘அவள் கழட்டி கூட வைக்காமல் இருந்திருப்பாள் ,இரவு வேலையில் அதுவாக கழண்டு இருக்கும்’ என்று அனுபவத்தில் புரிந்து கொண்டவர்  அமைதியாக நகர்ந்துவிட்டார் .

 

அதற்கு அடுத்து மறு வீடு அழைப்பு என்று ஒவ்வொன்றும் சிறப்பாக நடந்தேற.

 

வசந்திடம் பட்டும் படாமல் பேசிக் கொண்டும் , அவனது தேவைகளை இரவு வேளையில் பூர்த்தி செய்து கொண்டும் இருந்தாள்.

 

ஒரு வாரத்திற்கு பிறகு அவள் மீண்டும் காலேஜ் செல்ல.. இளவரசி உடன் கூடமாட ஒரு சில வேலைகளை செய்து கொண்டு காலேஜ் செல்ல ஆரம்பித்தாள் நிவேதா .

 

நாட்கள் அழகாக சென்றது. இருவருக்கும் கல்யாணம் ஆகி ஒரு மாதத்திற்கு மேல் இருக்கும்.

 

இப்போது எல்லாம் நிவேதா வசந்திடம் ஓரளவிற்கு பேச ஆரம்பித்திருந்தாள் .

 

வசந்த்  நிவேதாவிற்கு திருமணம் ஆன  ஒரு வாரத்தில் புதியதாக போன் ஒன்று வாங்கி கொடுத்திருக்க .

 

மாலை வேளையில் நிவேதா காலேஜ் முடிந்து வந்து படித்துக் கொண்டிருக்க.

 

அவளது போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது .அதை படித்த நிவேதா லேசாக  சிரித்தாள் ..

 

மெசேஜ் நவிலனிடமிருந்து வந்திருந்தது .

 

திருமணத்துக்கு பிறகான முதல் மெசேஜ் .

 

நவிலன் திருமணத்திற்கு வந்திருந்தான்.

 

ஆனால் நவிலன் யார் என்று வசந்த்திற்கு தெரியாது.

 

“சொல்லுடா?” என்று மெசேஜ் செய்திருக்க.

 

“என்ன மேடம் என்ன மறந்தீட்டீங்க போல.? கல்யாணம் ஆகி  ஒரு மாசம் ஆகுது. யாரோ கல்யாணத்துக்கு விருப்பம் இல்லைன்னு சொன்னாங்க .

ஒரு மாசமா ஒரு பேச்சு வார்த்தை கூட காணோம் .நடுவுல ஒரு சில நாள் வெளியே பார்த்தேன் .

 

ஆனா நீங்க என்ன பார்த்த மாதிரியே தெரியல .ஜோடியாவே தான் சுத்துறீங்க போல. அடிக்கடி வெளியே எல்லாம் போயிட்டு வரீங்க போல?” என்று மெசேஜ் வந்திருக்கு .

 

“டேய் போதும் நிறுத்துறியா ?”என்றாள்.

 

“நான் என்ன டிரெயின்னா ஓட்டிட்டு இருக்கேன்” என்று ஸ்மைலி ஓட நவிலனிடம் இருந்து மெசேஜ் வந்திருக்க.

 

“உண்மையாவே பாக்கல டா “என்றாள் .

 

“சரி சரி அதை விடு.. சந்தோஷமா இருந்தா சரி. என்ன பண்ற ?”என்றான்.

 

“இப்போ என்ன பண்ணிட்டு இருக்கேன் .போன்ல  உனக்கு தான் மெசேஜ் பண்ணிட்டு இருக்கேன் “.

 

“அது எங்களுக்கும் தெரியுது .நான் மெசேஜ் பண்றதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்த?”

 

“படிச்சிட்டு இருக்கேன் டா பக்கி”.

 

“சரிடி நீ பாரு.. ஒழுங்கா காலேஜ் போ! படிப்பில் கவனத்தை வை.

மாமாவை பத்திரமா பாத்துக்கோ “என்றான்.

 

“ஏன் உங்க மாமாவை நீ வந்து பார்த்துக்கிறது” என்று சிரித்தாள்.

 

“பாத்துட்டா போச்சு.. அதுக்கு என்ன ? அதான்

நீ இருக்கியே அவரை பார்த்துக்க அப்புறம் என்” என்று விட்டு ,” சரி டி நீ பாரு  ..”என்று விட்டு அவன் ஆஃப்லைன் சென்று விட்டான்.

 

இவளும் தனது நண்பனை எண்ணி சிரித்துவிட்டு அமைதியாகி விட்டாள்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்