Loading

நிவி அதன் பிறகு ,பரீட்சை எழுதுவதற்கும் படிக்க ஆரம்பித்து இருந்தாள். முதல் நாள் தனது அம்மாவுடன் தனது மகளை அழைத்துக் கொண்டு காலேஜுக்கும் சென்று இருந்தாள்.

அவள் பரீட்ச்சை தொடங்குவதற்கு முன்பு தனது தோழிகளிடம் நின்று தனது மகளை காண்பித்து சிரித்துப் பேசிக்கொண்டிருக்க.

அங்கு வந்து நின்றிருந்தாள் வனிதா .வேகமாக வந்தவள் குழந்தையை முதலில் தூக்கி கொஞ்சி விட்டு குழந்தையின் நெற்றியில் முத்தம் இட்டு விட்டு “உங்களுக்கு உடம்பு பரவாயில்லையா அக்கா ?”என்று கேட்டாள் .

வனிதாவை பார்த்த, நிவேதா சிரித்துவிட்டு “பரவாயில்ல .. வனிதா நார்மல் டெலிவரி தான்.. நல்லா இருக்கேன்.. ஒன்னும் பிரச்சனை இல்ல”

“பாப்பாக்கு  பால் எல்லாம் கிடைக்குதா?” என்று கேட்டாள்.

“ஹம் கிடைக்கிது.. ஒன்னும் பிரச்சனை இல்ல டா.. நீ ஏன் ஒரு மாதிரி இருக்க? முகம் வாட்டமா இருக்கிற மாதிரி இருக்கு” என்று  கேள்வி எழுப்பினாள்..

“ஒன்னும் இல்ல .. நான் எப்பவும் போல தான் இருக்கேன்.. ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறதால உங்களுக்கு அப்படி தெரியுது போல..” என்று சிரித்துவிட்டு,

” சரி கா நான் வரேன் பாத்துக்கோங்க” என்று விட்டு நகர .

“உனக்கு எப்போ எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுது  வனிதா” என்றாள்..

” எனக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு அப்புறம் தான் ஸ்டார்ட் ஆகுது கா ”

தனது அம்மாவும் அருகில் இருப்பதால் மேற்கொண்டு பேச முடியாமல் நிவேதா “சரி “என்று அமைதியாகி விட்டாள்.

எக்ஸாம் முடித்துக் கொண்டு மதியம் உடனே கிளம்பி இருந்தாள் .

மதியம் அவள் கிளம்புவதற்கு முன்பு அவளது அருகில் வந்த வனிதா அவளிடம் ஒரு சாக்லேட் கொடுத்தாள்.

“குழந்தை பிறந்த பச்சை உடம்பு காரி சாக்லேட் சாப்பிடக் கூடாது” என்று கவிதா சொன்னார்.

“சரி மா சும்மாதான் கொடுத்தேன் அக்காவுக்கு” என்று  சிரித்துவிட்டு நகர்ந்து விட்டாள்.

நிவேதா போகும் வனிதாவையே பார்த்துக்கொண்டு நின்றாள். வனிதா தனது கண்களை துடைத்துக் கொண்டு செல்வதை தூரத்திலிருந்து நிவேதா பார்க்க செய்தாள். அவள் சிரிக்கிறாள்.. ஆனால் , அவளது சிரிப்பில் உயிர்பில்லை என்பதை காட்டிக் கொடுத்தது அவளது வாட்டமான முகம்..

‘ ஏதோ ஒன்னு சரியில்லை .அவ முகமும் ஒரு மாதிரி இருக்கு..” என்று யோசித்து விட்டு,’ சரி நாளைக்கு பாக்கலாம். இல்லனா மெசேஜ் பண்ணி பார்க்கலாம்’ என்று எண்ணினாள் நிவேதா.

நிவேதாவிற்கு நாளையும் பரீட்சை இருந்ததால் ,நாளைக்கு வரும்படியாக இருந்தது .மாலை மெசேஜ் வனிதாவிற்கு செய்து “நாளைக்கு வந்து என்னை கொஞ்சம் பாரு  வனிதா.. என்னால உன்னை வந்து பார்க்க முடியாது .

நான் கார்லயே வந்துட்டு கார்லயே ரிட்டன் வீட்டுக்கு போயிடுவேன் ” என்று விட்டு அமைதியாகி விட்டாள்.

நிவேதா மறுநாள் காலேஜ் வருவதற்கு முன்பாகவே , அவளுக்காக பஸ் விட்டு இறங்கியதில் இருந்து காத்துக் கொண்டிருந்தாள் வனிதா .

நிவேதா தனது அம்மாவிடம் சொல்லிவிட்டு ,” கொஞ்சம் சந்தேகம் இருக்கு மா..அதை என்னோட ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கேட்டுட்டு வரேன் அதுவரைக்கும் பாப்பாவ பாத்துக்கோ..”  என்று விட்டு வனிதாவை அழைத்துக்கொண்டு தனியாகச் சென்று,” ஏன் ஒரு மாதிரி இருக்க? “என்று அவளது கண்களை உற்று நோக்கினாள்.

“ஒன்னும் இல்லக்கா .. நான் எப்பவும் போல தான் இருக்கேன்..”என தோள்களை குலுக்கி விட்டு, “ஏன் என்ன பேசணும் நீங்க?” என்று கேட்டாள்..

“வனிதா என்னால அவன் கிட்ட பேச முடியல ,குழந்தை பிறந்த அன்னைக்கு வந்து பார்த்துட்டு வந்தான். உன் கிட்ட சொல்லி இருப்பான்னு நினைக்கிறேன் .

மேக்சிமம் அவன்  காலேஜ் முடிச்சிட்டு உடனே கிளம்பி இங்க வந்து இருக்கான்னு நினைக்கிறேன். அதனால எப்படியும் என்னைப் பார்த்துட்டு வந்து தான், உன்கிட்ட என்ன பார்க்க வந்ததைப் பத்தி சொல்லி இருப்பான்  இல்லையா? அதனால என் மேல எதுவும் கோவமா இருக்கியா?”என்றாள்.

வனிதா  சிரித்துக் கொண்டே, “நான்  ஏன் கா உங்க மேல கோவப்படப் போறேன் ?”.

“இல்ல உன் முகம் ஒரு மாதிரி வாட்டமா இருக்கு ,என்னால ஏதாவது சண்டையா உங்களுக்குள்ள ?”என்றாள் .

வேகமாக நிவேதாவைக் கட்டி அணைத்துக் கொண்டு அழுதாள் வனிதா.

“வனிதா என்ன ஆச்சு  ?”என்று கேட்டு கொண்டு இருக்கும் போதே.. வனிதா நிவேதாவை இறுக்கி அணைத்ததில் அவளது மார்பகத்தில் இருந்து உயிரமுது கசிய ஆரம்பித்தது.

“சாரிக்கா தெரியாம” என்றாள் தடுமாற்றத்துடன் கீழே குனிந்த படி..

“வனிதா என்னைப் பார்த்துப் பேசு.. என்ன விஷயம்னு சொல்லு ? உன்னுடைய செய்கையில எனக்கு எதுவும் புரியல.. ..ஆன, ஏதோ ஒன்னு சரியில்லைனு மட்டும் தெரியுது..என்னால அவன் கிட்ட இப்போ  மெசேஜ் பண்ணி பேச முடியாது அந்த அளவுக்கு சூழ்நிலையில் நான் இல்லை..

போன் பண்ணி பேச முடியாதானு  நீ கேட்கலாம் .ஒரு வார்த்தை மெசேஜ் பண்ண முடியாதா ? என்று கேட்கலாம்.ஒன்னு இரண்டு வார்த்தை பேசிக்கலாம் .

ஆனா , என்னால சாப்பிட்டியா? என்ன பண்ற ? அப்படின்னு ரெண்டு வார்த்தைல பேசிட்டு  வைக்க முடியாது .பேசினா அவன் கிட்ட பேசாத வரைக்கும் நடந்த எல்லாத்தையும் நான் சொல்லணும் சரியா? அவன் என்கிட்ட சொல்லணும்னு கூட நான் எதிர்பார்க்க மாட்டேன். நான் என் பக்கம் இருந்து என்ன நடந்துச்சுன்னு  எல்லாத்தையும் அவன் கிட்ட சொல்லியாகணும்.

எனக்கு எப்படியும்  அரை மணி நேரமாச்சு தேவைப்படும் .இரண்டு வார்த்தைல .நல்லா இருக்கியா சாப்டியா அதோட பேசிட்டு வைக்க முடியாது. எனக்கு எங்க உறவை உனக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியல.

ஆனா ,நீ ஏதோ ஒரு மாதிரி இருக்க என்னன்னு சொல்லு ?”என்றாள் பரிதவிப்புடன்.

கண்களில் ஈரம் தேங்கிய நிலையில் வனிதா,”இப்போ உங்களால என்கிட்ட பேச முடியுமா ?உங்களுக்கு டைம் இருக்கா?” என்று மென்மையாக கேட்டாள்.

“நான் வாட்ச் கட்டி இல்ல  வனிதா டைம் என்ன?”

தனது கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவள்..” 9:00 மணி கா .”என்க

“டைம் இருக்கு நீ சொல்லு”..

“நீங்க படிச்சிட்டீங்களா எக்ஸாமுக்கு ?”என்றாள் கேள்வியாக .

“ஒன்னும் பிரச்சனை இல்ல நீ சொல்லு ”

“நேத்து எப்படி எக்ஸாம் பண்ணீங்க  ?”.

அவளின் செயல் எரிச்சலை ஏற்படுத்த,
“வனிதா, உண்மையாவே கோபப்படுத்தாத… விஷயத்தை நேரா சொல்லு!” என்றாள்.

கண்களில் ஒரு மெல்லிய சோகம் மிதக்க, ஒரு கணம் மௌனமாக நிவேதாவின் கண்களை உற்றுப் பார்த்து விட்டு, சற்று தயக்கத்தோடு, அமைதியை உடைத்தபடி , “அவர்கிட்ட நான் பேசி  இருபது நாளுக்கு மேல ஆகுது கா,” என்று மெதுவாக கூறினாள்.

வனிதா சொன்ன வார்த்தையைக் கேட்டு , எதிர்பாராத அந்த உண்மையால் நிவேதா திகைத்து,அதிர்ச்சியில் வார்த்தைகள் இன்றி, அவளை நோக்கி கண்களைப் பெரிதாக்கி ,வெறித்துப் பார்த்துக் கொண்டே நின்றாள்.

வனிதா கோபப்பட்டு போன் எடுக்காமல் இருந்ததில் இருந்து சொல்ல ஆரம்பித்தாள் .

குரல் தளர, வார்த்தைகள் இடற,
“உங்களை பார்த்துட்டு வந்தார்னு சொல்லிட்டு… நான் அவர்கிட்ட பேசாம கோபமா இருந்தேன். உங்களை பாக்க வந்ததுக்காக இல்ல… என்கிட்ட சொல்லலன்றதுக்காக,” என்றாள்.

ஒரு மெல்லிய  மூச்சை இழுத்து விட்டபடி, “எனக்கு புரியும்” என்றாள் நிவேதா..அதன் பின் மௌனமே பதிலாக இருந்தது.

இனிமேல் தாமதிக்கக் கூடாது என்பதை உணர்ந்தவளாக, வனிதா விஷயத்தை நேரடியாகவும் சுருக்கமாகவும் சொல்ல ஆரம்பித்தாள்.

“அன்னைக்கு அவர் பேசிட்டு காலேஜுக்கு போயிட்டாரு… அதுக்கப்புறம் நான் பேசல. அவர் போன் பண்ணினப்பவும் கோவத்துல எடுக்கல. ஒரு வாரம் இப்படியே போச்சு… அதுக்கப்புறம் பிரேம் அண்ணா போன்ல இருந்து பேசச் செஞ்சாரு. அப்பவும் நான் பேசல,” மனதளவில் சோர்ந்து சொன்னாள்..

ஒரு வாரம் கழிச்சு அவர் பிரேம் அண்ணா வீட்டுக்கு வந்து என்னை பார்க்க வந்தாரு. ஆனா அப்பவும் நான் அவாய்ட் பண்ணிட்டேன். அதுக்கப்புறம் பேசவே இல்ல அக்கா. முதல் ஒரு வாரம் தான் பேச முயற்சி பண்ணாரு. அதுக்கப்புறம் ரெண்டு வாரமா மெசேஜ் கூட இல்ல,” என்று வருத்தத்துடன் குரல் தளர்ந்து கூறினாள்.

அவள் மேலோட்டமாக விஷயத்தைக் கூறி முடிக்க…

வனிதாவை அடிக்க நினைத்து கை ஓங்கிய நிவேதா, அவள் அருகில் சென்றதும் மனம் மாறி கையைத் தாழ்த்தினாள்.

குரலில் சற்று கடுமை கலந்து,
“போன வாரம் புதன்கிழமை கூட
அவன்கிட்ட பேசவே இல்லையா?”என்று வினவினாள்..

புரியாமல் புருவம் சுளித்தபடி,
“போன வாரம் புதன்கிழமைன்னு ஏன் கேட்கிறீங்க?” என்று கேட்டாள்.

கோபம் குரலில் வெளிப்பட,
“அவனுக்கு செமஸ்டர் ஸ்டார்ட் ஆயிடுச்சு… அதாவது  உனக்கு தெரியுமா? இல்ல ஞாபகத்துலயே இல்லையா?” என்றாள். ..

தலை தாழ்த்திக்கொண்டு,சற்றுத் தயக்கத்துடன், “இல்ல கா… உண்மையாவே எனக்கு ஞாபகம் இல்ல” என்று மெதுவாக சொன்னாள்.

“போதும் நிறுத்து, வனிதா… ஏற்கனவே நான் அவன்கிட்ட பேசுறது இல்ல. நான் அவனோட கடைசியாக பேசி ஒரு மாதத்துக்கு மேலாயிட்டுச்சு, உண்மையா. உனக்கு இத எப்படி புரிய வைக்கறதுன்னு எனக்கும் தெரியல. உன் கோபம் நியாயம் தான். நான் இல்லன்னு சொல்ல மாட்டேன், சரியா?” என்றாள்.

“நீ என்ன காரணமா வைத்து அவன்கிட்ட கோபப்படலன்னு நான் ஒத்துக்குறேன். ஆனா அவனுக்கு எக்ஸாம் இருந்த நேரம் அது. அந்த சமயத்துல நீ கோபப்பட்டது சரியா? அவன் தன்னோட வலியையும் கஷ்டத்தையும் யார்கிட்டயும் ஷேர் பண்ண மாட்டான்.  இதை நான் உனக்கு விளக்க வேண்டிய அவசியமே இல்லன்னு நினைக்கிறேன்.”

“மேக்சிமம் என்கிட்டவே நிறைய விஷயத்தை சொல்ல மாட்டான். அவனுக்கு பர்சனல் அப்டின்னும்போது அது பெர்சனல தான் வச்சுக்குவான் .. வெளிப்படையா எல்லா விஷயத்தையும் சொல்லிட்டு இருக்க மாட்டான் .

நானும் பேசாமல், நீயும் பேசாம  அவன் வேலையும் செஞ்சுட்டு , வேலைக்கு நடுவுல உன்ன பத்தி யோசிக்கணும், என்ன பத்தியும் யோசிக்கணும் ,அவங்க அம்மாவையும் யோசிக்கணும் .. இது எல்லாமே நான் உனக்கு புரிய வைக்க வேண்டியது இல்ல.

அவங்க குடும்ப சூழ்நிலை எப்படின்னு உனக்கும் தெரியும். அப்படி இருந்தும் அவனுக்கு எக்ஸாம் இருக்குன்னு தெரிஞ்சும் அவனை அவாய்ட் பண்ணி இருக்க இல்லையா ?இப்போ கூட ஃபர்ஸ்ட் பேச ட்ரை பண்ணவன்.. இப்ப பேசலன்னு வந்து என்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிட்டு இருக்க. அப்போ ஃபர்ஸ்ட் நீ பேசல அப்படின்றது உனக்கு தெரியல சரி .

இப்ப அவன் பேசாட்டி கூட இருக்கட்டும்.. ஏன் அவனுக்கு நீ கூப்பிட்டு இப்ப பேசி இருக்க வேண்டியதுதானே?

கோபம் கலந்த குரலில்,
“இப்ப ஒரு வாரம் கழிச்சு  உன்னை அவாய்ட் பண்ணிட்டான் ..உன்னை விட்டுட்டான்னு அப்படின்னு யோசிக்கிறியா?” என்றாள்.

வார்த்தைகள் சரியாக வராமல், குரல் சற்றே இடற, “நான்… நான் அப்படியெல்லாம் யோசிக்கல கா,” என்றாள்.

“போதும்..! ஆனா, அவன் எக்ஸாம் எப்படி பண்ணினான்னு தெரியல. உண்மையா, அவன் எக்ஸாம் சரியாக எழுதி இருக்க வாய்ப்பும் இல்ல, சரியா?”

“அவன் பக்கம் தப்பு இருக்குன்னு தெரிஞ்சதும், அதுக்குப்புறம் அவனுக்கு மேலும் கஷ்டமா இருந்திருக்கும்.. எனக்கு சொல்ல தெரியல,” என்று சொல்லும்போதே சரண்யா குரல் கடுமையாக அதிர்ந்தது.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்