Loading

வசந்த்  குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தான் .
‘சிறிய பெண் காலேஜ் படித்துக் கொண்டு இருக்கும் பெண்ணின் படிப்பையும் வீணாக்கி , அவளது வாழ்க்கையையும்  வீணாக்கி விட்டோமோ?..

இப்பொழுது தன்னால் ,தன் உயிரை சுமந்து கொண்டு வலியில் துடித்துக் கொண்டிருக்கிறாள் ‘ என்று மனதிற்குள் பெரும் போராட்டமே நடத்திக் கொண்டிருந்தான்.

அப்போது அவனது அருகில் வந்து அவனது தோளில் கை போட்ட வசந்தின் அண்ணன் ரஞ்சித்..  “ஒன்னும் இல்லடா ரெண்டு பேரும் நல்லபடியா திரும்ப வருவாங்க..” என்றான்.

அவளுக்கு வலி எடுத்து மருத்துவமனைக்கு அழைத்து வந்தவுடன், ரஞ்சித் வீட்டிலிருந்து அடித்து பிடித்து ஓடி வந்திருந்தான்.. என்ன இருந்தாலும், தான் ஆட விட்டாலும் ,தன் தசையாடும் அல்லவா ?அது போன்று தான்.. தம்பிக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்று தெரிந்தவுடன் முதல் ஆளாக மருத்துவமனைக்கு வந்து நின்றான்..

தம்பிக்கு தைரியம் சொல்லிவிட்டான்..ஆனால், ரஞ்சித்தின் கண்களும் சிறிது நேரத்திற்கு பிறகு கலங்க தான் செய்தது .உள்ளே இருந்த நிவேதாவின் அழுகுரலில்..

உள்ளிருந்த டாக்டர் தான்,” எக்ஸாம் வேற நெருங்குதுன்னு சொல்ற இல்ல.. உன்னால முடிஞ்ச அளவுக்கு நீ எங்களுக்கு கோ ஆபரேட் பண்ணா மட்டும்தான் நார்மல் டெலிவரி பண்ண முடியும்.

சிசேரியன் பண்ணா உன்னால எக்ஸாம் கூட அட்டென்ட் பண்ண முடியாது. படிக்கவும் செய்யணும் .குழந்தையையும் நல்லபடியா பெத்து எடுக்கணும்னா நீ எங்களுக்கு கோ ஆபரேட் பண்ணனும்.

முடிஞ்ச அளவுக்கு ட்ரை பண்ணு “என்று உள்ளே இருந்து டாக்டர் அவளுக்கு தைரியம் மூட்ட செய்தார்.

கிட்டத்தட்ட இந்த பத்து மாதங்களில் டாக்டரிடம் நல்ல உறவு முறையில் இருந்தாள் அவள்.. படித்துக் கொண்டிருக்கும் பெண் என்பதையும் , இப்பொழுது செமஸ்டர் எக்ஸாம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது வரை அனைத்தையும் தன்னை பற்றி மேலோட்டமாக கூறியிருந்தாள்..

ஆகையாலே , எதை கூறினால்  அவள் தங்களுக்கு ஒத்துழைப்பாள்  என்று எண்ணி கடைசி ஆயுதமாக அதை கையில் எடுத்திருந்தார்..மருத்துவர்..

ஏற்கனவே இரண்டு மூன்று முறை குழந்தை தலை வெளியே வந்து வந்து இவள் ஒத்துழைப்பு தராததால் உள்ளே சென்றது.. பனிக்குட  தண்ணீர் குடித்து விட்டால் குழந்தைக்கு ஆபத்து ..மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அவ்வாறு கூறினார்..

 

அவர் அவ்வாறு கூறியவுடன்,
அதன் பிறகு ,தன் படிப்பையும் முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தவள்.

தன் படிப்பு தன்னை மட்டும் சார்ந்தது அல்ல .இனி தன் கணவனையும் சார்ந்தது என்பதை மனதிற்குள் கொண்டு வந்தவள் ,முடிந்த அளவிற்கு வேகமாகவே முக்க செய்தாள். மருத்துவர் சொன்ன அனைத்தையும் வலியை பொறுத்துக் கொண்டு செய்தாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் அழகான பெண் குழந்தையை நிவேதா ஈன்றெடுத்தாள்.

குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் மேலே கையெடுத்து கும்பிட்டான் வெளியே இருந்த வசந்தத்தின் அண்ணன் ரஞ்சித்.

அத்தனை வலிகளையும் தாண்டி , லேசான மயக்கத்தில், டாக்டரிடம் “என்ன குழந்தை! “என்று கேட்டாள்  நிவேதா.

மலர்ந்த முகமாகவே,” நீயும் உன் புருஷனும் ஆசைப்பட்டதுப் போல பொம்பள புள்ள தான் பொறந்து இருக்கு.

உங்க வீட்டுக்கு மகாலட்சுமியே பிறந்திருக்கா! “என்று சிரித்துவிட்டு குழந்தையை நர்சிடம் சுத்தம் செய்ய கொடுக்க ..

“கொஞ்சம் பாப்பாவ காமிக்கிறீங்களா ?”என்றாள் ஆவலாக.

டாக்டர் பூவாய் மலர்ந்த முகத்துடன் நர்சிடம் கண்ணை காமிக்க.. .

நர்ஸ் நிவிவிடம் குழந்தையைக் காட்டினார்.

குழந்தையை ஒரு சில நொடி உற்றுப் பார்த்து விட்டு, சரி என்று தலையாட்டியவுடன் குழந்தையை சுத்தம் செய்ய எடுத்து சென்றார்கள்.

டாக்டர் வெளியில் வர , “என்ன குழந்தை டாக்டர் ?”என்று வெளியில் இருந்தவர்கள் கேட்டார்கள்.

ஆனால்,வசந்த் முந்திக்கொண்டு “அவளுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைல டாக்டர் ?நல்லா இருக்கா இல்ல?”  என்றான் பயமும் பதட்டமும் கலந்து.

டாக்டர் வசந்தைப்  பார்த்து புன்னகைச் சிந்தி விட்டு ,”ரெண்டு பேருமே நல்லா இருக்காங்க. நீங்க ஆசைப்பட்ட மாதிரி பொண்ணு தான் பொறந்திருக்கு.

கிளீன் பண்ணிட்டு இருக்காங்க. இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல கொண்டு வந்து தருவாங்க. இன்னும் கால் மணி நேரம் கழிச்சு நிவேதாவையும் ரூமுக்கு ஷிப்ட் பண்ணிடுவாங்க .

அதுக்கப்புறம் பாத்துக்கோங்க .ஒன்னும் பிரச்சனை இல்லை “என்றவர் அடுத்த பேஷண்டை பார்க்க நகர்ந்து விட்டார்.

குழந்தைப் பிறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மருத்துவமனை வந்த வசந்தா, தனது பேத்தியை தன் வீட்டு முதல் பெண் வாரிசை தன் கைகள் நடுங்க வாங்க செய்தார்.

குழந்தை தலை வெளியே வந்து வந்து இவள் ஒழுங்காக  முக்காததால் ஒத்துழைப்பு தராததால் உள்ளே சென்றதால் குழந்தை பனி கூட தண்ணீர் குடித்திருந்தது..

பனிக்குடம் தண்ணீர் குடித்ததால் மூன்று நாட்கள் குழந்தை டாக்டரிடம் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்.

சுகப்பிரசவம் என்பதால் நிவேதாவை இரண்டு நாட்கள் கழித்து பிரசவ ஹாஸ்பிடலில் இருந்து  டிஸ்சார்ஜ் செய்திருக்க .

குழந்தை தண்ணி குடித்ததால் மேலும் இரண்டு நாட்கள் குழந்தை மருத்துவரிடம் இருக்க வேண்டும் என்பதால் குழந்தை மருத்துவர் இருக்கும் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருந்தாள் .

குழந்தை ஹாஸ்பிடலுக்கு வந்த பிறகு தன் தாயிடம் இருந்து தனது போனை வாங்கிய நிவேதா தனது தோழி சரண்யாவிற்கு ஃபோன் செய்து ,இரண்டு நாட்களுக்கு முன்பாகவே பாப்பா பிறந்து விட்டதாக சொல்லி இருந்தாள்.

“அத ஏண்டி இன்னிக்கு தான் சொல்ற ?”என்று கேட்டதற்கு,

“ரெண்டு நாளா பேசுற அளவுக்கு எல்லாம் நான் இல்ல .இப்பதான் கொஞ்சம் நார்மலாகி இருக்கேன்” என்று சொன்னாள் நிவி.

“எந்த ஹாஸ்பிடல்ல இருக்கீங்க ?”என்று விவரம் கேட்டாள் சரண்யா.

அவளும் மருத்துவமனையின் பெயரை சொல்ல .சரி என்று விட்டு வைத்து விட்டாள் .

சரண்யா நிவியிடம் போன் பேசி வைத்து விட்டு, அடுத்த நொடி நவிலனுக்கு  போன் செய்து விஷயத்தை சொல்லி இருந்தாள்.

“சரி டி நீ இப்போ காலேஜ் போயிட்டு வா ..நான் சாயங்காலம் வரேன் .நம்ம ரெண்டு பேரும் சாயங்காலமாக போய் அவளை ஹாஸ்பிடல்ல பார்த்துட்டு வரலாம் “என்றான்.

“உனக்கு இவ்ளோ தைரியம் இங்கிருந்து டா வருது .அவங்க அம்மா கூட இருப்பாங்களே ?” என்றாள் கேள்வியாக.

“அதுக்காக தான் துணைக்கு உன்னை கூட்டிட்டு போறேன் டி” என்று  மலராய் சிரித்தான் .

“ஆக மொத்தம் என்னை கோர்த்து விடாமல் இருக்க மாட்டீங்க அப்படித்தானே!” என்று புன்னகைப் பூத்தாள் .

“லூசு உண்மையா தான் வரேன்” என்றான்.

“சரிடா வா சாயங்காலமா போயிட்டு பாத்துட்டு வந்துடலாம்.. காலேஜ் போய்ட்டு தானே கிளம்புவ ?”என்று கேட்டாள்.

“ஆமாம். நான் காலேஜ் போயிட்டு மதியத்துக்கு மேல தான் கிளம்புவேன். நீ காலேஜ் விட்டு வர நேரத்துக்கு நான் வந்துருவேன்” என்று சொல்லிட்டு போன் வைத்திருந்தான் நவி.

நிவி சரண்யாவிற்கு காலை 7:00 மணி போல் தான் போன் செய்து விஷயத்தை சொல்லி இருந்தாள் .ஆகையால் சரண்யா உடனடியாக நவிக்கு போன் செய்து  விஷயத்தை சொன்னாள்.

மாலை 5:00 மணி போல் நவிலன் தனது சொந்த ஊருக்கு வந்து விட்டான்..அவனுக்கு அரை நாள் தான் காலேஜ் என்பதால்.. மதியத்திற்கு மேல் கிளம்பி இருந்தான்..

காலேஜ் பஸ் செல்வதை பார்த்தவன்.. கால் மணி நேரம் கழித்து சரண்யாவிற்கு ஃபோன் செய்து இருந்தான் .

“டேய் இப்பதான் வீட்டுக்கு வந்து இருக்கேன் .கொஞ்சம் பிரஷ்ஷாக டைம் கொடு..  பிரஷ் ஆகிட்டு வரேன்.. அதுக்கப்புறம் போகலாம் “என்றாள் .

சரி என்றவன் ஒரு அரை மணி நேரம் அமைதி காத்தான். மாலை 6:00 மணி போல் நவிலன் சரண்யா வீட்டிற்கு வந்து  அவளை அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்று நிவேதா பெண் குழந்தைக்கு இருவரும் ஆளுக்கு ஒரு டிரஸ்  எடுத்துக் கொண்டு ,பழங்கள் கொஞ்சம் வாங்கிக் கொண்டு பிரட் வாங்கிக் கொண்டு குழந்தையைப் பார்க்க ஹாஸ்பிடல் சென்று இருந்தார்கள்.

சரண்யா உடன் நவிலனும்  ஹாஸ்பிடல் வந்து நின்றான். ஹாஸ்பிடல் வந்துவிட்டு எந்த ரூம்ல இருக்கீங்க ?என்று கேட்பதற்காக சரண்யா போன் செய்திருந்தாள்..

நிவேதாவும் தான் இருக்கும் ரூம் நம்பரை சொல்லி இருந்தாள்.

ஆனால், அவள் இங்கு நவிலனை  எதிர்பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அவனைப் பார்த்தவுடன் நிவிக்கு லேசாக கண்கள் கலங்க ஒரு மாதிரி ஆகி விட்டது.

அருகில் இருந்த துண்டை  மட்டும் எடுத்து தன் மேல் போட்டுக் கொண்டாள்.. நவிலனைப் பார்த்துவிட்டு ,

நவிலன் அமைதியாக வந்து நின்றான்.

கவிதா தான்,” இது யாரு சரண்யா ?”என்று கேட்டார் புருவம் உயர்த்தி கேள்வியாக.

“என்னுடைய அண்ணன் தான் மா” என்றாள்.

“ஓ! சரி “என்று விட்டு அமைதியாகிவிட்டார் கவிதா. அதன் பிறகு, குழந்தையை தூக்கி கொஞ்சி விட்டு ஒரு கால் மணி நேரம் பேசிவிட்டு குழந்தை கையில் 500 ரூபாய் பணத்தையும் திணித்துவிட்டு வாங்கிக் கொண்டு வந்த பழங்களை கொடுத்துவிட்டு நவிலன் தன் கையில் இருந்த சாக்லேட்டை நிவேதாவின் அருகில் வைத்தான் கவிதா அறியாத வண்ணம்.

அதை அமைதியாக எடுத்து வைத்துக் கொண்டாள் நிவியும் .சரண்யா, நவிலன் இருவரும் வரும்பொழுது வசந்த் அங்கு இல்லை .

இருவரும் வரும் பொழுது  மாலை 7  மணி இருந்திருக்கும் .
பார்த்துவிட்டு ஒரு அரை மணி நேரத்தில் இருவரும் சென்று இருந்தார்கள்.

நிவேதாவும் மெசேஜ் செய்யும் நிலைமையில் இல்லாததால் வீட்டிற்கு சென்று எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம் என்று அமைதியாக இருந்தாள்.

நவிலன்  ஹாஸ்பிடலுக்கு வருவதற்கு முன்பாகவே வனிதா அவனுக்கு போன்   செய்திருந்தாள்.

“டேய் உன்  பிரண்டுக்கு குழந்தை பிறந்திருக்கு.. பெண் குழந்தை சரண்யா அக்கா சாயங்காலம் தான் சொன்னாங்க” என்றாள் சந்தோஷ கூச்சலுடன்.

“தெரியும்!” என்றான் ஒற்றை வார்த்தையில்.

“ஓ! சரண்யா அக்கா உன்கிட்ட சொல்லிட்டாங்களா.. ? சரி எப்போ வர குழந்தையை பார்க்க ? வருவ தான ?”என்று கேட்டாள் .

“நான் வந்துட்டேன் டி.. குழந்தையை  பார்க்க .அங்க தான் போயிட்டு இருக்கேன். உனக்கு வந்துட்டு போன் பண்றேன்” என்று விட்டு போன் வைத்திருந்தான்.

இங்கு வனிதாவிற்கு நவிலன் மீது கோபம் கண் மண் தெரியாமல் எகிறியது..

‘தன்னிடம் தான் இங்கு வந்து இருப்பதையும் சொல்லவில்லை. குழந்தையை பார்க்க போவதாகவும் சொல்லவில்லை .

என்ன தான் அவர் பிரண்டுக்கு குழந்தை பிறந்து இருப்பதாக  கூட இருக்கட்டும் .அதுக்குன்னு என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாதா ?’என்று அவளுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது .

அவன் தன் தோழியை பார்க்க போவதில் அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை .ஆனால், அவன் வந்ததையோ ,இல்ல வர போகிறேன் என்பதையோ தன்னிடம் சொல்லவில்லை என்பதுதான் அவளுக்கு குறையாக தெரிந்தது .

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்