Loading

“என்ன டா டாக்டர் படிக்கணும்னு யோசிச்சிட்டு இருந்தா ..ஏன்? அந்த அளவுக்கு மார்க் வரலையா? .கட் ஆஃப் பத்தலையா ?” என்று நிவி கேட்க.

 

“இல்லடி ,அவ டாக்டர் படிக்கலன்னு சொல்லிட்டு  இருக்கா.. அவங்க வீட்டுலயும் கேட்டு பார்த்து இருக்காங்க..

 

அவ ஒரே வார்த்தையா நான் டாக்டர் படிக்கல..எனக்கு விருப்பமில்லைனு  சொல்லி இருக்கா..”

 

“இது யார் சொன்னா உனக்கு.. ?”

 

“பிரேம் சொன்னான்.? அவங்க வீட்டுக்கு பக்கத்து வீடு தானே ..!”

 

“சரி நீ கேட்க வேண்டியதுதானே!”

 

” என்னால பேச முடியல .. அவளுக்கு எக்ஸாம் ஆரம்பிச்சதுல இருந்து நான்  அவ கிட்ட பேசவே இல்ல சரியா..

 

அவளோட எக்ஸாம் நம்பர் எனக்கு தெரியும்ன்றதால நானே போன்ல போட்டு அவளோட மார்க் எவ்வளவுன்னு தெரிஞ்சுகிட்டேன்..

 

ஆனா,இப்போ பிரேம் தான் சொன்னான். அவங்க வீட்ல ஏதோ கத்திட்டு இருக்காங்கன்னு சொல்லிட்டு, அவங்க அம்மா இவங்க அம்மா கிட்ட சொல்லிட்டு இருந்தாங்களாம் ..

 

சாக்லேட் எல்லாம் அவங்க அப்பா வாங்கி கொடுத்து தெருவுல இருக்க எல்லார் கிட்டயும் என் பொண்ணு நல்ல மார்க் எடுத்து இருக்கா, டாக்டருக்கு படிக்க போறா அப்படின்னு சொல்லி இருங்காங்கனு ..ஆன இந்த கூறுகெட்டவ கடைசி நேரத்துல நான் டாக்டருக்கு படிக்க மாட்டேன்னு சொல்லிட்டு திரியுறானு புலம்பி இருக்காங்க…”

 

“சரிடா அவகிட்ட நீ பேசி என்னன்னு கேளு!” என்றாள்.

 

“சரி” என்று இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்திருந்தார்கள்.

 

அன்று இரவே நவி வனிதாவிற்கு போன் செய்து இருந்தான்.

 

“சொல்லு” என்று கேட்டாள்.

 

“ஏன் டி டாக்டர் படிக்க மாட்டேன்னு சொல்லி இருந்தியோ உங்க வீட்ல “என்று காட்டமாகக் கேட்டான்..

 

“ஆமா.. அதுக்கு என்ன இப்போ ?”என்றாள், வனிதாவும்..

 

“இல்லை நீ டாக்டர் படிக்க தான ஆசைப்பட்ட.. அப்புறம் என்ன ?இப்போ உனக்கு மார்க்கும் இருக்கு.. கட் ஆப் மார்க் இருக்கே! சீட் கிடைக்குமே !வேற என்ன உனக்கு பிரச்சனை ..?”

 

 

“எனக்கு இப்போ டாக்டர் பிடிக்க விருப்பமில்லை. டிகிரி பண்ணலாம்னு இருக்கேன். வீட்ல இருந்து காலேஜ் போற மாதிரி யோசிச்சு இருக்கேன்!” என்றாள் முடிவாக.

 

“லூசாடி நீ! டாக்டர் படிக்கணும்னு ஆசைப்பட்ட ..அதுக்கு தானே கஷ்டப்பட்டு படிச்ச அப்புறம் ஏன் ? இந்த திடீர் முடிவு, மாற்றம்?” என்று கேள்வி எழுப்பினான்..

 

“இப்போ எனக்கு டாக்டர் படிக்கிறது முக்கியமா? இல்ல நீ முக்கியமா? என்று  பார்த்தா எனக்கு நீதாண்டா முக்கியம் ” என்றாள் சிறிது விம்மலுடனே..

 

 

இங்கு நவிலனுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை.. “லூசு மாதிரி பண்ணாத வனி .. வாழ்க்கை வேற .. உன்னுடைய ஆம்பிஷன் வேற..! புரிஞ்சுக்கோடி

நீ விருப்பப்பட்டத படி!.. உன்னுடைய எதிர்காலத்துக்கு நான் எப்பவும் தடையா இருக்கக் கூடாது.” என்றான்..

 

“அதை தான் நானும் சொல்றேன்.

நான் விருப்பப்பட்டதை படிச்சா நான் ஆசைப்பட்ட வாழ்க்கை எனக்கு சுத்தமாகவே கிடைக்காது.. என்னுடைய எதிர்காலமே நீதான் இனி..”

 

“பக்கத்துல இருந்தா பல்லு கில்லெல்லாம் பேத்திருவேன் டி நான் எங்கேயும் போயிட மாட்டேன் .. உன்ன விட்டு விலகிடுவேன் பயப்படுறியா?.” கடைசியில் இறைஞ்சும் குரலில்

 

“உன் மேல நம்பிக்கை இல்லாம கிடையாது .எனக்கு என் மேல நம்பிக்கை இல்லை, அப்படி கூட வச்சுக்கலாம்.என்னோட ஃபேமிலி என்னை மாத்திடலாம் ..”

 

“அடி வாங்க போற வனி! .. யார் என்ன சொன்னாலும் என்னோட வனிதா என்னை விட்டு போக மாட்டா என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு..”என்றான் அவளுக்கு புரிய வைக்கும் நோக்கத்தில் சிறு பிள்ளைக்கு புரிய வைப்பது போல்..

 

“அப்படி உனக்கு இருக்கலாம் சரியா ?நான் ஆசைப்பட்டேன்றதுக்காக டாக்டர் படிக்க என்னை அனுப்பிவிட்டா என்னோட லைஃப் ஸ்டைல் எப்படி வேணாலும் மாறலாம்.

 

எனக்கு என்னோட லைஃப் ஸ்டைல் மாறுவது முக்கியம் இல்லை. என் லைஃப் லாங் நீ என் கூட இருக்கணும் அதுதான் எனக்கு முக்கியம்!” என்று விட்டு நவி அடுத்த வார்த்தை பேசுவதற்கு முன்பாகவே போனை வைத்திருந்தாள் வனிதா.

 

வனிதா நவிலன் பேசுவதற்கு முன்பாகவே போன் வைத்திருந்தாள்.

 

அதன் பிறகு ,நவிலனும் போன் செய்து கொண்டே இருக்க ,அவள் எடுக்கவில்லை .

 

அவனும் பிரேம் வீட்டில் வைத்து அவளை சந்திக்க எவ்வளவோ முயற்சி எடுத்தான் .அனைத்தும் கைகூடவில்லை .

 

கொஞ்ச நாட்கள் கழித்து வனிதா போன் பேச செய்தாள். ஆனால் ,அதைப் பற்றி மேற்கொண்டு பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

 

அவனும்  ரொம்ப நாட்கள் கேட்டு பார்த்துவிட்டு,” சரி உன்னோட விருப்பம் “என்று அமைதியாகி விட்டான்.

 

ஜூன் மாதம் தொடங்கும் வேளையில் நிவேதா ,”சரி டா டாக்டருக்கு தான் படிக்கல.

எங்க காலேஜ் சேர்ந்து இருக்கா. ?வீட்ல இருந்து போற மாதிரினு சொல்ற என்ன டிபார்ட்மெண்ட் “என்று விவரம் கேட்க .

 

நவி முதலில் சிரித்தான்.

 

“டேய் லூசு சிரிக்காம பதில் சொல்லுடா ?எதுக்குடா சிரிக்கிற ?”என்றாள்.

 

“உங்க காலேஜ் தாண்டி சேர்ந்து இருக்கா “என்றவுடன்..

 

” எதே!” என்று ஒரு நிமிடம் தன்னையும் மீறி பதறினாள்..

 

 

“ஆமாண்டி உங்க காலேஜ் தான் சேர்ந்து இருக்கா ,..”

 

“என்ன டிபார்ட்மெண்ட் ?”

 

” இங்கிலீஷ் டிபார்ட்மெண்ட்  சேர்ந்து இருக்கா “என்றான்.

 

“சரி” என்று  அவள் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.

 

” ஏண்டி அமைதியா இருக்க.?”

 

“நான் ஒன்னும் அமைதியா இல்ல.. எனக்கு என்ன வந்தது ..அவ எங்க என்ன டிபார்ட்மெண்ட் எடுத்து படிச்சா எனக்கு என்ன ?” முறுக்கிக் கொண்டு,

 

“உனக்கு ஒன்னும் இல்ல.. ஆனா, எனக்கு தான் லேசா பயந்து வருது!” என்றான்  சிரிப்பை அடக்கிக் கொண்டு,

 

“ஏன் டா ..?”

 

“இல்ல உங்க ரெண்டு பேரையும் நினைச்சு தான் !” என்றான் பயந்தவனாக .

 

“முழுசா சொல்லித் தொலை டா..புரியல..!”

 

“சண்டை போட்டுக்க மாட்டீங்க இல்ல?” என்றான் கேள்வியாக.

 

“நான் ஏன்டா போய் அவ கூட சண்டை போட போறேன்.?”

 

“இ..இல்ல அ..அது…” என்று தயங்கினான்..

 

“அவ உன்ன  லவ் பண்றதால நான் உன்கிட்ட பேசறது அவளுக்கு பிடிக்காமல் இருக்கும் .ஏற்கனவே அவளுக்கு என்னை பிடிக்காது என்று எனக்கு தெரியும் தானே .

 

பொசசிவ் இருந்தா  நல்லது தான். பொசசிவ் இல்லாம இருந்தால்தான் அங்கு க்ளோஸ் ரிலேஷன்ஷிப் இல்லைன்னு  அர்த்தம் விடு ..!

 

நான் எதுவும் சண்டை போட மாட்டேன். அவகிட்ட..”

 

“அப்போ மேடமுக்கு என் மேல பொசசிவ் இல்லையா?  ” என்றான் நக்கலாக..

 

“எனக்கு ஏன்டா உன் மேல பொசசிவ் வரப்போகுது ” என்றாள் சிரித்துக் கொண்டே ..

 

“அப்போ இல்ல உனக்கு ..”

 

“டேய் நீ நிறைய பொண்ணு கிட்ட பேசுறியே டா.. எனக்கு முன்னாடியே நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களே உனக்கு .”

 

“நான் உன்னை அத கேட்கல.. ஆனா, நான் வேற யார்கிட்டயும் பேசறது உனக்கு பொசசிவ்வா இருந்தது இல்லையா ?”.

 

“அப்படி சொல்ல முடியாது .இருந்தாலும், “…

 

“சரி விடு!” என்று சிறிது நேரம் பேசி விட்டு வைத்திருந்தான் .

 

இருவரும் இரண்டாம் ஆண்டு முடித்து இருந்தார்கள். வனிதா முதலாம் ஆண்டு கல்லூரியில் அடி எடுத்து  வைத்திருந்தாள் .

 

நிவேதா வரும் அதே காலேஜ் பஸ்ஸில் தான் வனிதாவும்  சரண்யா பஸ் ஏறும் ஸ்டாப்பில் பஸ் ஏற செய்தாள்.

 

ஒரு வாரம் சென்று இருக்கும் வனிதா காலேஜ் வந்து பெரிதாக  வனிதா நிவேதாவையும் ,நிவேதா வனிதாவையும் கண்டு கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும் .

 

ஒரு வாரத்திற்கு பிறகு நிவேதாவிற்கு ஏழாவது மாதம் தொடங்கி இருக்கிறது என்று சொல்லி அவள் ஏற்கனவே உட்கார்ந்து இருந்த இடம் பின்னாடி இருக்கிறது என்பதால் மாசமாக இருப்பதால் முன்னாடி உட்கார வைக்கும்படி ஏற்கனவே கேட்டு இருந்ததால், இப்பொழுது காலேஜ் ஆரம்பித்த ஒரு வாரம் பிறகு உட்கார  வைத்தார்கள் .

 

வனிதா தனது தோழியிடம்,” ஏன் மேடமுக்கு மட்டும் ஸ்பெஷல் சீட் ?”என்று கேட்க .

 

சரண்யா அவளை முறைத்துவிட்டு ,”அவ பிரகனண்ட் டா இருக்கா வனிதா . உனக்கும் அவளுக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கட்டும். அதை பத்தின கவலை இங்க தேவையில்லை.

 

மனிதாபி மானத்தோடு நடந்துக்கோ. அதுக்காக அவளுக்கு தனி சீட் கொடுத்திருக்காங்க..

 

அவளுமே இப்போ எந்த ஃப்ரெண்ட்ஸ்ஷும் பக்கத்துல இல்லாமல் தனியா தான் உட்கார்ந்துட்டு வரப்போற ஓகேவா .

 

அவ பிரகனண்ட் டா இருக்கா என்ற ஒரே ரீசன் மட்டும் தான் !”என்று விட்டு அமைதியாகி விட்டாள்.

 

நிவேதாவிற்கு ஏழாவது மாதம் இறுதியில் வளைகாப்பு செய்வதாக முடிவு செய்யப்பட்டு வளைகாப்புக்கு தேவையான அனைத்தும் நடந்தேறிக் கொண்டிருந்தது..

 

அப்போது இரண்டு நாட்களுக்கு முன்பாக சரண்யாவிடமிருந்து நிவேதா  வனிதா நம்பர் வாங்கினாள்.

 

“எதுக்குடி அவ நம்பர் உனக்கு .?அவளுக்கு தான் உன்னை கண்டாலே ஆக மாட்டேங்குதே “என்றாள் எரிச்சலாக.

 

“சும்மாதான் விடு! பார்த்துக்கலாம் “என்று விட்டு நம்பர் வாங்கி  மாலை வேளையில் வனிதாவிற்கு ஃபோன் செய்திருந்தாள்.

 

“ஹலோ  வனிதா நான் நிவேதா பேசுறேன் “என்று சொல்ல .

 

‘நிவேதா வா’ என்று ஒரு நொடி யோசித்தவள் .

 

“சொல்லுங்க அக்கா .என்னோட நம்பர் ஏது ?”என்றாள்.

 

“சரண்யா கிட்ட வாங்கினேன்” என்றாள்

 

“சரி சொல்லுங்க .எனக்கு இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வளைகாப்பு ..”

 

“சரி கா .அது அவன் வளைகாப்புக்கு வரானா? என்று கேட்டு விட்டு, பின்பு திருத்திக் கொண்டு, அவர் வளைகாப்புக்கு வராரா ?”என்று வனிதா கேட்டாள்.

 

நிவி சிரித்துக்கொண்டே ,”இல்ல வனிதா அவன் வளைகாப்பு எல்லாம் வரமாட்டான் ..நான் உன்கிட்ட பேச தான் கூப்பிட்டேன்.”

 

“என்ன சொல்ல வரீங்க சொல்லுங்க எனக்கு புரியல “என்றாள் அமைதியாகவே..

 

“இல்ல நான் வளைகாப்பு முடிஞ்சு அம்மா வீட்டுக்கு போவேன், ஒரு வாரம் அங்க தான் இருப்பேன்..  மேக்ஸிமம் போன்  பேச முடியாதுன்னு நினைக்கிறேன்” என்றாள் .

 

“இப்ப நான் என்ன பண்ணனும் உங்களுக்கு? எனக்கு புரியல நீங்க பேசறது என்ன சொல்ல வரீங்க நேரடியா சொல்லுங்க .”

 

“அவன் என்னோட வளைகாப்புக்கு எல்லாம் வரமாட்டான், இப்போ தான வந்துட்டு போனான் “என்றாள்.

 

“ஆமா உங்களை கூட  பஸ் ஸ்டாப்ல வந்து பார்த்தாரே அப்புறம் என்ன அக்கா..?”

 

“அவன் வந்து நாலு நாளைக்கு முன்னாடி பஸ் ஸ்டாப் வந்து நின்றது  “என்று தயங்கினாள்.

 

“உங்கள பாக்க தான் வந்து நின்னாரு எனக்கு தெரியும்.. அதுக்கு என்ன இப்போ? நான் எதுவும் சொல்லலையே ,”

 

“நீ ஏதும் தப்பா எடுத்துக்கல இல்ல ..?”

 

“இப்போ அதுக்கு தான் கால் பண்ணி இருக்கீங்களா ? இல்ல நான்  அவர்கிட்ட என்ன பேசுறேன்  முதற்கொண்டு உங்க கிட்ட சொல்லிட்டு இருக்காரா ?” என்றாள் லேசான எரிச்சலுடன் ..

 

“இல்ல நான் அப்படி சொல்ல வரல ..”

 

“சரி இருங்க!” என்று விட்டு கான்ஃபரன்ஸ் கால் வனிதா போட்டு  விட்டாள்.

 

இங்கு நிவேதா தன் தலையிலேயே தட்டிக் கொண்டாள் .

 

“சொல்லுடி என்ன இந்த நேரத்தில் கால் பண்ணி இருக்க வேலையா இருக்கேன்” என்று அந்த பக்கம் நவிலன்  சொல்ல.

 

“இப்போ பேசுங்க நீங்க என்ன பேசணும்னு நினைக்கிறீங்களோ ?” அதை” என்றாள் சிறிது கோபத்துடன்..

 

“யார்கிட்ட டி பேசுற ..? யார் செகண்ட் கால்ல இருக்கா..?”

 

“உன்னோட பிரண்டு தான்!” என்று கோபமாக வனிதா சொல்ல.

 

ஒரு நிமிடம் கண்ணை மூடி திறந்த நவி  ,”நிவி! “என்றான் .

 

நிவேதா அமைதியாக இருக்க,

 

“பேசி தொலை டி லூசு!  இவளுக்கு எதுக்கு நீ இப்போ கால் பண்ணி இருக்க .? இவளோட நம்பர் யார் கிட்ட வாங்கின ?”என்று கத்தினான் .

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்