
அத்தியாயம் 1
நட்பே துணையாக இருக்க,
அவர்களின் துணைகளே அவர்களது பலமாக…
இரு இதயங்கள் நட்பாய் நின்றாலும், நான்கு இதயங்கள் அதை காதலாய் காத்தன.
சந்தேகம் இல்லாத சிரிப்புகள்,
பொறாமை இல்லாத புரிதல்கள்…
அவர்களின் நட்பு ஒரு உறவாக மாற அவர்களின் துணைகள் தான் பாலமாக நின்றனர்.
அவன் நண்பி அவளாக இருந்தாலும், அவள் நண்பன் அவனாக இருந்தாலும், அந்த நட்பை காக்கும் அவர்கள் காதலே மிகப் பெரிய ஆசீர்வாதம். 🤍
இது நட்பு மட்டுமல்ல…
புரிதல், மரியாதை, நம்பிக்கை கலந்த ஒரு அழகான இரு நண்பர்களின் வாழ்க்கைக் கதை…
ஆண் பெண் நட்பு….
*****************************
அத்தியாயம் 1:
“ஏய்! இங்க ஏன் உட்கார்ந்து அழுது கிட்டு இருக்க..என்ன ஆச்சு..”என்றான் நவிலன்..
“ஒன்னும் இல்ல …”
“லூசு உனக்கு நான் அவ்வளவு சொல்லியும் என் மேல கூட நம்பிக்கை இல்லையா?
உட்கார்ந்து அழுதுட்டு இருக்க “.
“நம்பிக்கை இல்லாம இல்ல டா, இருந்தாலும் மனசு ஓரத்துல ஏதோ ஒரு பயம் இருக்கு. இப்போ இந்த கல்யாணம் எனக்கு தேவையா ?அப்படின்னு மட்டும் தான் எனக்கு தோணுது “.
“நான் கூட ஃபர்ஸ்ட் உனக்கு இவ்வளவு சீக்கிரம் இப்போ இந்த கல்யாணம் வேணாம்னு தான் யோசிச்சேன் . அதுக்கான ரீசன் உன்னோட வயசு மட்டும் தான் . ஆனா, நீ இந்த வீட்ல இருந்து வெளியே போனா நல்லது டி “என்று அவளது தோளில் கையை போட .
அவனைப் பார்த்து முறைத்தவள்.
” ஏன் நான் இருக்க வீட்டுக்கு என்ன ?” என்றாள் கோபத்துடன்.
“நீ இருக்கு இடத்துக்கு என்னன்னு நீயே நிதானமா கொஞ்ச நேரம் உட்கார்ந்து யோசிச்சா உனக்கே புரியும் . நீ நின்னா குத்தம், நடந்தா குத்தம், உட்கார்ந்தா குத்தம். நீ நல்லது செஞ்சாலும் குத்தம் ,கெட்டது செஞ்சாலும் குத்தம் . உன் வாழ்க்கையைப் பத்தி உனக்கே தெரியும் சரியா ?
அதுக்கு நீ வச்சிருக்க ஒரே காரணம், நான் அப்பா இல்லாம வளந்த புள்ள, அதனால தாண்டா என்னை இப்படி வளக்குறாங்க, மத்தபடி எனக்குன்னு எந்த கட்டுப்பாடும் விதிக்கல அப்படின்னு முடிச்சிடுவ. அப்படித்தானே…! ”
அவனை எரித்து விடுவது போல் பார்த்தவள் .அவனது கையை தட்டி விட்டு ,”சொன்னாலும் சொல்லாட்டியும் அது தாண்டா உண்மை”.
“சொல்லிக்கோ. நீயும் இன்னும் எத்தனை வருஷத்துக்கு இத சொல்லியே உன் மனசையும் நம்ப வச்சிக்கிறனு நானும் பார்க்கிறேன் சரியா? நீ சொல்றதால ,அது உண்மையாகிடவும் போறது கிடையாது .அதை நான் நம்ப போறதும் கிடையாது “என்றான்.
“நீ நம்பு, நம்பாட்டி போ. நீ நம்பினா என்ன? நம்பாட்டி எனக்கு என்னடா?” .
“சரி டி விடு. நீ கல்யாணம் பண்ணிக்கோ .”
“விளையாடுறியா? எனக்கு பயமா இருக்கு. பேய் கிட்ட இருந்து ,பிசாசு கிட்ட போய் மாட்ட சொல்ற? “என்றாள் கண்களை உருட்டி வயிற்றில் பயப்பந்து உருள.
சிரித்தான் நவிலன்.”இப்பதான் சொன்ன? நீ இருக்க இடம் ரொம்ப நல்ல இடம்னு “.
“நவி “என்றாள்.. சினுங்களுடன் நிவேதா ..
“நிவி நான் சொல்றத பொறுமையா கேளு சரியா?.
மாமாவை பத்தி ஃபுல் அண்ட் ஃபுல் விசாரிச்சிட்டேன்”.
” யாருடா அது மாமா ?”என்றாள் புரியாமல்,
நவிலன் அதரங்களில் மென் புன்னகையுடன்,
“உன்னை கட்டிக்க போறவர் தான்” என்றான்.
“நவி விளையாடாத …?”என்றாள் அடக்கப்பட்ட கோபத்துடன்,
“நவியே தான். நான் விளையாடல உண்மையாவே அவர் கைக்கு நீ போயிட்டா நல்லாவே இருப்பனு
எனக்கு தோணுது. அவர் உன்னை நல்லா பார்த்துப் பாருன்னு உள் மனசு சொல்லுது..ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார் டி .
வாழ்க்கையில அடிப்பட்டு தான் மேல வந்திருக்காரு சரியா ,உனக்கும் அவருக்கும் ஏஜ் வித்தியாசமே கொஞ்சம் இல்ல நிறைய இருக்கு ,அதனால உனக்கு ஏதாவது ?”.
“லூசாடா நீ ? நான் எனக்கு இப்போ கல்யாணம் வேணுமானு மட்டும் தான் யோசிக்கிறேன். இன்னொரு விஷயம் நான் படிக்கணும் .இதைத்தாண்டி நான் வேற எதுவுமே யோசிக்கல. நான் எப்ப வாச்சு ஏஜ் பத்தி பேசி இருக்கேனா ? , ஏன் நவி நீயும் இப்படி பேசுற? வீட்ல இருக்கவங்க மாதிரி..” என்றாள் கண்கள் கலங்க நிவேதா.
“அப்புறம் என்னடி ஒத்துக்கோ. உன்ன உள்ளங்கையில வச்சு தாங்கலைனா கூட உன்னோட சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்.
உன்ன நல்லா பார்த்துப்பாரு. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.
நான் எனக்கு தெரிஞ்ச வரைக்கும் விசாரிச்சிட்டேன் .நல்ல இடம் தான் . ஏதாவது பிரச்சனை வந்தாலும் , நீ அங்க அட்ஜஸ்ட் பண்ணி வாழ்ந்துருவேன்னு நம்பிக்கையும் எனக்கு இருக்கு. என் நிவி பத்தி எனக்கு தெரியாதா ? எங்கையுமே அட்ஜஸ்ட் பண்ணி இருந்திடுவா .
நீ கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போனா போதும் ,அந்தப் பக்கம் மாமா நிறையவே விட்டுக் கொடுப்பாரு கொஞ்சம் புரிஞ்சுக்கோ நிவி ஒத்துக்கோ.
உனக்கு உங்க அம்மா இதுவரைக்கும் பண்ண நல்லதுலையே பெரிய நல்லதுனு பார்த்தா இதுவா தான் இருக்கும்”.
“நவி!”என்று அவனது தோளில் இரண்டு போட ,..
“எனக்கு தெரியல நீ சொல்ற மாதிரி கூட உன் குடும்பம் இருக்கட்டும் நான் தப்பு சொல்லல.
அப்பா இல்லாத பொண்ணு அப்படின்னு ஊர் உலகம் ஏதாச்சும் பேசும்னு கூட நினைச்சு இருக்கட்டும்.
அதனால, உன்னை சின்ன சின்ன விஷயத்துக்கும் அடக்கியதா கூட இருக்கட்டும் .உன்னோட சின்ன சின்ன ஆசையை கூட அவங்க நிறைவேற்ற மாதிரி கூட இருக்கட்டும் .
ஆனா இந்த இடத்துக்கு போனா நீ நீயா இருப்ப ,ஒத்துக்கோ அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும் .இதுக்கு அப்புறம் உன்னோட விருப்பம் .
நீ ஒரு நாள் காலேஜ் பஸ் விட்டு லேட்டா போனதுக்கே, நீ எவன் கூடவோ ஓடிப்போயிட்ட கல்யாணம் பேச்சை எடுத்த உடனேனு முடிவு பண்ண குடும்பம்.அதுக்கப்புறம் உன் விருப்பம்”.
“சரிடா விடு “என்று விட்டு அவனது தோளில் கையை போட்டு நடந்து சென்றாள் நிவேதா .
இருவரும் பல கதைகள் பேசிக்கொண்டே நடந்து சென்றார்கள்.
அடுத்தடுத்து நாட்கள் வேகமாக செல்ல ஒரு வாரம் சென்று இருந்தது.
அன்று நிவேதாவை மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண் பார்க்க வந்திருந்தார்கள் .
நிவேதாவின் அம்மா கவிதா முன்னாடி நாள் இரவு தான் நாளை உன்னை பெண் பார்க்க வருகிறார்கள். ஆகையால், நீ நாளை காலேஜ் செல்ல வேண்டாம் என்று சொல்ல .
தன் தாயை முறைத்து பார்த்த நிவேதா,” எல்லாம் உங்க இஷ்டத்துக்கு தான் பண்ணுவீங்க இல்ல ?.
நான் இங்க இருக்கிறது கூட உங்களுக்கு வர வர பாரம் ஆயிடுச்சு “என்று தன் தாயை பார்த்து சினத்துடன் முனகி விட்டு அமைதியாக நகர்ந்து விட்டாள்.
அவரை மீறி மேற்கொண்டு எதுவும் செய்யும் அளவிற்கு அவளுக்கு மனதில் தைரியம் இல்லை என்பது தான் உண்மை .
அந்த இரவு அவளுக்கு முழுவதும் கண்ணீருடன் சென்றது.
மறுநாள் பொழுது புலர்ந்தது .
கவிதா தன்னிடம் இருக்கும் ஒரு சில நகைகளை தன் மகளிடம் கொடுத்து போட்டு கொள்ள சொல்ல.தன் தாயை வெறுமென பார்த்தவள் அமைதியாகப் போட்டுக் கொண்டாள் .
அவளுக்கு என்று எடுத்து வைத்திருந்த நகைகள் அடகில் இருக்க, அக்கம் பக்கத்தினரிடம் இரண்டு மூன்று நகைகளை வாங்கி போட்டுக்கொள்ள சொல்ல .
நகையில்லைனா வர மாப்பிள்ளை வேணாம்னு சொல்லிடுவாங்களா ?என்றாள்.
இதற்கு முன்பு வரை நிவேதா தன் தாயிடம் இப்படி வார்த்தைக்கு வார்த்தை கூட பேசியது இல்லை.
தன் தாய் எது சொன்னாலும் சரி என்று கேட்டுக் கொள்ளும் ரகம் .
ஆனால், இந்த கல்யாணப் பேச்சு எடுத்ததிலிருந்து ஒவ்வொரு விஷயத்துக்கும் தன் தாயிடம் வார்த்தையை விட்டுக் கொண்டுதான் இருக்கிறாள்.
அவள் அப்படி பேச வேண்டும் என்று அவளும் விரும்பவில்லை .
ஆனால், இந்த வயதில் தனக்கு திருமணம் வேண்டாம் என்பதில் மட்டும் அவள் குறியாக இருக்கிறாள் .
இன்னும் 18 வயது கூட பூர்த்தி அடையவில்லை. 17ஆவது வயது இறுதியில் இருக்கிறாள்.
‘இப்பொழுது இந்த வயதில் தனக்கு திருமணம் வேண்டுமா ?’ என்ற எண்ணம் மட்டுமே அவளது மனதில் ..
ஆனால், அதற்கு அவளுடைய தாயும் ,உறவினரான அத்தை தனமும் கூறிய ஒரே காரணம் அப்பா இல்லாத பொண்ணுடா நல்லவரன் வந்திருக்கு அம்மாவும் பாவம் இல்லையா? என்றார் .
“ஏன் ?அத்தை உங்க பொண்ணு ஓடிப் போயிடுச்சுன்னா நானும் அந்த மாதிரி ஓடிப் போயிடுவேன்னு என்னையும் நினைச்சிட்டீங்க இல்லையா?” என்று வருத்தத்துடன் நிவேதா கேட்க.
தனம் தன் கண்ணில் துளிர்த்த கண்ணீரை துடைக்க.
“சாரி அத்தை நான் வேணும்னு கேக்கல “என்றாள் நிவேதா.
“விடு நிவேதா நான் தப்பா எடுத்துக்கல. ஆனா அந்த காரணத்துக்காக உன்னை கட்டி கொடுக்கலடா இது நல்ல வரன்.
நமக்கு தெரிஞ்ச வரணும் , தூரத்தில் எங்கேயோ கொடுத்துட்டு, கண் காணாத இடத்தில் நீ எப்படி வாழறியோ என்பதை விட நமக்கு தெரிஞ்ச இடத்தில கொடுப்பது எவ்வளவு நல்ல விஷயம் தானே .
அது மட்டும் தான் நான் யோசிச்சது .இப்ப கூட உங்க அம்மாவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை.நானும் ,மாமாவும் வற்புறுத்தி தான் சம்மதிக்க வச்சிருக்கோம் .
மாப்பிள கட்டினா உன்ன தான் கட்டுவேன்னு சொல்லிட்டு இருக்கறதால”,..
“ஏன் அந்த மாப்பிள்ளைக்கு ஊருல வேற பொண்ணே கிடைக்கலையோ ?”என்று சிரிப்புடனே நிவேதா கேட்க .
அவளை சிரித்த முகமாக பார்த்த தனம் ,”நான் அப்படி சொல்லல டி” என்று அவளது தோளில் தட்டி விட்டு நிவேதாவிற்கு நகையை அணிவித்தார்.
சிறிது நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்து விட .
பெண் பார்க்கும் படலும் ஆரம்பமாகியது.
மாப்பிள்ளையின் அண்ணன் ,அண்ணன் மனைவி மொத்தம் மூன்று பேர் மட்டும் வந்திருக்க.
மாப்பிள்ளைவின் அப்பா ,அம்மா இருவரும் வரவில்லை .
ஒரு சிலர் ஏன் அப்பா அம்மா வரவில்லையா? என்று பெண் வீட்டின் அருகில் உள்ள அக்கம் பக்கத்தினர் கேட்க .
மாப்பிள்ளையின் அண்ணன் தான் அப்பாவால் எழுந்து நடக்க முடியாது .
பக்கவாதம் வந்து இருக்காரு .அவருடைய தேவையை அவர் பார்த்துப் பாரு .மத்தபடி வெளியே போக வர கஷ்டமாக இருக்கும்.
அம்மாவுக்கு என்று விட்டு ஒரு சில நொடி தயங்கியவர் ,பின்பு தனது தம்பியை பார்த்துவிட்டு அம்மாவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல.
அதை முன்கூட்டியே சொல்லிட்டோம்னு நினைக்கிறேன் என்று விட்டு அமைதியாகிவிட்டார் .
இப்பொழுது நிவேதா நிமிர்ந்து இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்த மாப்பிள்ளையின் அண்ணனை பார்த்தாள்.
அவளுக்கு சிறிது அதிர்ச்சி .
‘எப்படியாவது தன் திருமணம் தடைப்பட்டு விடாதா ?’என்று ஒரு சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தது .
ஆனால் ,அருகில் இருந்த மாப்பிள்ளையின் அண்ணியை பார்த்தவள்.
ஏதோ பார்த்த மாத்திரத்திலேயே அவரை பிடித்து விட .
‘இந்த வீட்டுக்கு நான் போனால் , இவங்க என்ன அவங்க தங்கச்சி போல பார்த்துப்பாங்களா? ‘என்ற எண்ணம் மனதில் தோன்றி மாப்பிள்ளையின் அண்ணியை தலை முதல் கால் வரை பார்க்க செய்தாள் நிவேதா .
எத்தனையோ முறை நிவேதா பல பெண்களை இப்படி பார்த்து ரசித்திருக்கிறாள் .
அதேபோல் மாப்பிள்ளையின் அண்ணி இளவரசியை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தாள்.
இளவரசி சிரித்து முகமாக நிவேதாவை பார்க்க ,எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டாள்.
பின்பு திருமணத்திற்கும் ,
நிச்சயதார்த்தத்திக்கும் தேதி குறித்து விட்டு மாப்பிள்ளை விட்டார்கள் கிளம்பி விட்டார்கள் .
கிளம்பும்போது மாப்பிள்ளை ஒரு சில நொடி தயங்கி நிற்க .
நிவேதா அதை கண்டும் காணாமல் இருந்தாள்.
அப்பொழுது நிவேதாவின் அம்மா கவிதா தான் “நிவேதா! ” என்றார் .
தன் தாயை முறைத்துவிட்டு எதுவும் பேசாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றுவிட .
கவிதா தான் சங்கடமாக, “இ..இல்லப்பா அ..அது” என்றார் . தயக்கத்துடன்..
“ஒன்னும் பிரச்சனை இல்ல. போகப்போக எல்லாம் சரியாகிடும் .உங்க பொண்ணுக்கு தான் இதுல விருப்பம் இல்லனு நீங்களே ஏற்கனவே சொல்லி இருந்தீங்களே! .
இதெல்லாம் எனக்கு புதுசு ஒன்னும் இல்ல.. பழகிடும்!” என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றுவிட .
நிவேதாவிற்கு எங்கேயோ அடி வாங்கிய உணர்வு.. அன்று தனது நண்பன் சொல்லியது அவளது மனதில் வந்து சென்றது.
‘சின்ன வயசிலிருந்து ரொம்ப கஷ்டப்பட்டவரு , கஷ்டப்பட்டு தான் மேல முன்னேறி
வந்திருக்காரு .
நீ அவரோட வாழ்க்கைக்குள்ள போனா அவருடைய வாழ்க்கையும் நல்லா இருக்கும் . உன்னோட வாழ்க்கையும் நல்லா இருக்கும் .’
இத மட்டும் மனசுல வச்சுக்கோ என்று சொன்னதை இன்று மனதில் நினைத்து பார்த்தாள் நிவேதா.

