
முதல் நாளே, ஜெஸி தன் தாயிடம் அவப்பெயர் வாங்க வேண்டும் என்று அழுத்தமான எண்ணத்துடனே இருந்தான் நைதுருவன்.
பள்ளியிலிருந்து கல்லூரி வரைக்கும் தன்னுடன் பயின்று, தான் செய்த அனைத்து சேட்டைகளும் குறும்புகளுக்கு சில பல பாவச் செயலுக்கும் துணையாக நின்ற நெருங்கிய தோழனான வித்யாசாரை இதற்கும் துணைக்கு அழைத்தான்.
“நம் நண்பர்களுக்கு முன் நீ எனக்கு ‘ஷாக்கிங் சப்ரைஸ்’ கொடுக்க வேண்டும்”என்று துருவன் கட்டளையிட, அந்த மடச்சாம்பிராணியும் சரியென்று தலையை ஆட்டி, அதை செய்யவும் துணிந்தான்.
அதுவும் அவன் தன்னுயிரை பணையம் வைத்ததுக் கூட தெரியாமல்’நண்பனுக்காக உயிரையும் கொடுப்(பே)பான்’ என்று இருவரது ரீதியில் இந்த திட்டம் செயல் பட இருந்தது.
ஆனால் குறுக்க ‘இந்தக் கௌசிக் வந்தா’ என்பது போல ஜெஸி நின்றாள்.
புலிக்காக விரித்த வலையில் புலியே அவனை சிக்க வைத்து சிரித்தது. அவனது நண்பர்கள் மத்தியில் ஜோக்கராக்கி விட்டுப் போனது.
திட்டம் தோல்வி அடைந்த வேகத்தில் சினத்தோடு செல்ல இருந்தவனை தடுத்தவள்,” நீ கூப்பிட்டேன்னு உனக்காக வந்தவங்கள பாதிலே விட்டுட்டு போறது நல்லதுக்கு இல்ல போய் சாப்பிடு !!! “என்று கண்ணைக் காட்டினாள்.
அதிகாரம் செய்யும் தாயிடம் கோபத்துடன் அடங்கிப் போகும் சேயாய் மேசையில் சென்று அமர்ந்து உண்ண ஆரம்பித்தான். அவனது நண்பர்களும் அவளது பார்வையில் உண்ண ஆரம்பித்தனர்.
“ஸ்ரீ ! என்ன வாய் பார்க்கற சாப்பிடு ! நீயும் ஆடர் பண்ணி சாப்பிடு ரவி !! ” என்று தனக்கு ஒரு’ எக் ரைஸை’ சொல்லிக் கொண்டாள்.
“நல்ல வேள மேம், அவர் கிளம்பினதும் எனக்கு திக்னு ஆச்சு!!!” என்று நெஞ்சில் கைவத்தான் ஸ்ரீ.
“ஏன்??” என்று வாயில் மீன் துண்டை அதக்கியபடி கேட்டாள் தன்யா.
“பின்ன வகை வகையா நான் வேற ஆடர் பண்ணிட்டேன். இன்னும் வேற என்ன’லாம் ஆடர் பண்ணலாம் நினச்சிட்டு இருந்தேன். நடந்த களேபரத்துல எங்க அவரு கோபப்பட்டு ‘நீங்களே ‘ பே ‘ பண்ணுங்கனு சொல்லிட்டு போயிடுவரோனு பக்குனு ஆயிடுச்சி!!! இன்னைக்கி தான் எனக்கு வேலைக்கு முதல் நாள். கையில் காசு வேற இல்ல. எங்க இந்த ஹோட்டல்ல மாவாட்ட விட்டுடு வாங்களோனு பயந்துட்டேன்” என்றவனை கண்டு நால்வரும் சிரித்தனர்.
“ச்ச… உன்னை மாவாட்ட எல்லாம் விட மாட்டாங்க ஸ்ரீ !!! அதுக்கு எல்லாம் இங்க மிஷின் இருக்கு. வேணும்னா உன்னை மேசைய துடைக்க சொல்லலாம் நினக்கிறேன்” என்று ஜெஸி சொல்ல மற்றவர்கள் சிரிக்க, ஸ்ரீயோ வாயை பிளந்தான்.
அனைவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. “மேம், ஜஸ்ட் இமாஜின். இவன் இருக்க ஹைட்டுக்கும் வெயிட்டுக்கும் டேபிள க்ளின் பண்ணா எப்படி இருக்கும்???”என்று அதை கற்பனை காட்சியாக கொண்டு வந்தாள் தன்யா
“ஆமா, அவனை துடைக்க சொல்வாங்க, மேடம் உங்கள பணம் கொடுக்கலேன்னு கல்லாப்பெட்டியில உட்கார வைப்பாங்க… நீயும் தான் மா டேபிள தொடைக்கோணும் ” என்ற அசோக் தன் நண்பனுக்காக அவளை வார,
“நண்பேன்டா!!! “என்று அவனை ஒற்றை கையால் அணைத்துக் கொண்டான். அவளோ இருவருக்கும் பழிப்பு காட்டினாள்
“ஓகே ஓகே ஒருத்தக்கொருத்தர் கலாய்ச்சிக் கிட்டது போதும். இது போக வேற என்னவேணுமோ ஆடர் பண்ணி சாப்பிடு ஸ்ரீ!! இன்னைக்கி என் ட்ரீட், நான் தான் பில் பே பண்ண போறேன் நீ தைரியமா சாப்பிடலாம். நீங்களும் தான்” என்றிட அங்கே மூவரும் கத்தி ஆரப்பாட்டம் செய்தனர்.
அவர்களின் அரவம் கேட்டு நண்பர்கள் கூட்டம் திரும்பி அவர்களைப் பார்த்தனர். துருவனும் சிரித்துக் கொண்டிருக்கும் ஜெஸியைத் தான் பார்த்தான்.
அவளது சிரிப்பு கண்ட பின் உடம்பில் பூச்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஊர்வது போல இருந்தது. அதையெல்லாம் கண்டு சகிக்க முடியாதது போல அவளது சிரிப்பையும் சகிக்க முடியவில்லை.
அவளது தொண்டைக்குள் உணவு இறங்க, அதை கண்டவனின் தொண்டையில் உணவு இறங்க வில்லை. மீன் முட்களும் எலும்பு துண்டுகளும் உணவு பாதையில் போராட்டம் நடத்தினது போல் இருந்தது.
எதை செய்தால், அவள் சிரிப்பதை நிறுத்த முடியும். அவள் கண்களில் கண்ணீரை காண முடியும் என்று யோசிக்க ஆரம்பித்தான்.
நண்பர்கள் அனைவரும் உண்டு முடிக்க, தன் கடமையான, வெயிட்டர் கொண்டு வந்து கொடுத்த பில்லை செட்டில் செய்ய பணத்தை எடுத்தான்.
அதில் இரண்டு பில்கள் இருக்க, ‘இதென்ன தனி பில் ?’ என அவனும் கேட்க, “மேம் தான் தனியா கொண்டு வர சொன்னாங்க”என்று அந்த டேபிளுக்கு சென்றான்.
பணத்தையும் டிப்ஸையும் வைத்து விட்டு எழுந்தான். அதே நேரம் அவளும் பணத்தையும் வைத்து விட்டு எழுந்தாள்.
“இந்த ட்ரீட் என்னோடது நீ, நீங்க ஏன் பே பண்றீங்க ஜெஸி???” என்று பல்லைக்கடிக்க,
“வயிறார சாப்பிட வர்றவங்களுக்கு மனசார வாங்கிக் கொடுக்கணும். மனசுல வஞ்சகத்த வச்சிட்டு வாங்கி கொடுக்கற உணவு விஷத்துக்கு சமம். அத உன் பிரண்ட்ஸ்க்கு நீ வேணாம் கொடுக்கலாம். ஆனா என் பசங்களுக்கு நான் தர விடமாட்டேன். போலாமா????”எனக் கேட்டு வாசலை காட்டவும், மௌனமாக அவன் முன்னே நடக்க இவள் பின்னால் நடந்தாள்.
அந்த பயணம் அமைதியாக கழிய வீடு வந்ததும் அறைக்குள் சென்று அடைந்தவன் தான். அவள் வீட்டிற்கு செல்லும் வரை அவனை பார்க்கவே இல்லை… ராதாவிலிருந்து நந்தன் வரைக்கும் அழைத்து விட்டனர் ம்கூம் வெளியே வந்த பாடு இல்லை. அவளும் வீரமதியிடம் சொல்லிக் கொண்டு ஸ்ரீ, ரவியை காவலுக்கு வைத்து விட்டு அசோக் தன்யாவை அழைத்து கொண்டு போனாள்.
துருவனின் அறையில் விளக்கு எரிவதை கண்ட ருத்ரன், தன் தம்பின் அறைக்குச் சென்றான்.
மெத்தையில் தலை கீழாகப் படுத்த படி விட்டத்தைப் பார்த்திருந்தான் துருவன், அவன் அருகில் அமர்ந்து ருத்ரன், “என்னடா இன்னும் தூங்கலியா???”
“தூக்கம் வரல அண்ணா !!! “
“ஏன் என்னாச்சி??? ரூம்ம விட்டும் நீ வெளிய வரல !! எனி பிராபலம்??” அக்கறையாகக் கேட்டான். அவனும் அண்ணனிடம் மறைக்காமல் விஷயத்தை சொன்னான்.
“ஆர் யூ மேட் துருவ்??? உயிர் விஷயத்துல ஏன் இவ்வளவு அஜாக்கிறதயா இருக்க நீ !!! உயிர பணைய வச்சுத்தான் நீ அவளை பழி வாங்கணுமா??… அதுக்கு நீ அம்மா கிட்ட சொல்லி ஜெஸிய பாடிகார்டா போட வேணாம்னு ஸ்ட்ராங் சொல்லிருக்கலாம். இப்படி உயிர் விஷயத்துல விளையாடாத துருவா !!! ஏற்கனவே அப்பாவ இழந்துட்டு மனசளவுல ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கோம். நீயும் எதையாவது செஞ்சு மேலும் கஷ்டத்தை கொடுக்காத, நான் வேணா அம்மா கிட்ட பேசவா???”
“நோ !!! இதை நானே டீல் பண்ணிக்கிறேன் அண்ணா !!! நீ அம்மா கிட்ட எதுவும் சொல்ல வேணாம்”என்றான்.
“கேர்ஃபுல் டா அவளை வேலை விட்டு தொறத்துறேன் சொல்லி உனக்கு நீயே செல்ஃப் ஆப்பு வச்சிக்காத “என்க, அவன் எந்த பதிலும் சொல்லவில்லை.
“துருவ் பேசாம, நாம பாடிகார்ட் மாத்திப்போமா??? உனக்கு தான் ஜெஸிய பிடிக்கலேல. எனக்கு பாடிகார்டா அனுப்பிடு !! நான் என் பாடிகார்ட உனக்கு வர சொல்றேன் இந்த டீல் ஒகேவா???” அல்பமாக கேட்க,
“கேவலமா இருக்கு !!! எதுக்கு உனக்கு ஜெஸி ???”
“தினமும் உங்க அண்ணி முகத்தை பார்த்து போர் அடிச்சி போச்சு அதான் கண்ணுக்கு குளிர்ச்சியா கூலர்ஸ் போல அப்ப அப்ப பக்கத்துல பாதுகாப்பு கொடுக்கறேன் நிக்கறவள சைட்டு அடிச்சா நல்லா இருக்கும்ல. ஐ மீன் கண்ணுக்கு நல்லா இருக்கும்ல…”என அசடு வழிய சொன்ன ருத்ரனை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு,” அண்ணி” என்று சத்தமாக அழைத்தான்.
ருத்ரனோ அவசரமாக வாயைப் பொத்தி” ஏன்டா !!! சும்மா உன் மைண்ட் மாத்த தான்டா சொன்னேன். நீ என்னடா!! என் குடும்பத்துல கொழப்படி பண்ணிடாத. நான் வரேன் சாமி” என்று ஓடி விட, வாய்விட்டு சிரித்தவன்,
அண்ணனும் இன்று தன் நண்பனும் சொன்னதை அசை போட்டவனுக்கு தேவதையாக கண் முன்னால் வந்தாள் ஜெஸி. ஆனால் அடுத்த நொடி அவள் தனக்கு இழைத்த அவமானத்தை நினைத்து பார்த்ததும் ராட்சியாக மாறிப் போனாள்,
இல்லம் நுழைந்த ஜெஸியை வரவேற்றது என்னவோ அவளது செல்ல மகன் டென்னிஸ் ஆரோன்.
“மா…” என காலை கட்டிக் கொண்டவனை தூக்கிச் சுற்றியவள், அவனது மகிழ்ந்த முகத்தை கண்டு விட்டு, சோபாவில் அமர வைத்தவள், பத்து நிமிடம் அவனிடம் கால அவகாசம் கேட்டு குளித்து உடை மாற்றி விட்டு வந்தாள்.
அவளது மாமனார் மாமியாரும் பேரனை நடுவில் வைத்து அவன் செய்வதை பாராட்டி பெருமிதமடைந்து புகழ்ந்தனர். இவள் வந்ததும் அவளிடம் அவன் தாவிக் கொள்ள, முகம் முழுதும் முத்தம் வைத்து கொஞ்சி கலைத்து போனாள்.
“வேலை எப்பிடி மா இருக்கு??? கஷ்டமா இருக்கா??? உனக்கு ஓகே வா ??? ” அக்கறையாக விசாரித்தார் ஆப்ரஹாம்.
“எங்க வேலைய பத்தித் தான் உங்களுக்கு தெரியுமே மாமா!!! கொஞ்சம் ரிஸ்க் இருந்தாலும், ரொம்ப கஷ்டமெல்லாம் இல்ல மாமா !!” என்றாள்.
“ஏன்மா ரிஸ்க்னு தெரிஞ்சும் இந்த வேலைக்கு போகணும்??? இந்த வேலையால ஒரு உயிரை பறி கொடுத்தது போதாதா??? இன்னொரு உயிரையும் கொடுக்கணுமா??? வேற வேலைக்கு போலாமே டா”தாயாகக் கெஞ்சினார் அரோக்யா.
“ஸாரி அத்தை . ஒரு சில காரணதுக்காக தான் இந்த வேலைய நான் செய்ய வேண்டியது இருக்கு. சீக்கிரமா போன காரியத்தை முடிச்சிட்டு நீங்க சொன்னது போல வேற வேலைக்கு போயிடுவேன். கொஞ்ச நாளைக்கு மட்டும் இந்த வேலைய பார்க்கிறேனே …. “என்று கெஞ்ச, மருமகள் மேல் அழாதி அன்பும் நம்புக்கையும் வைத்த அப்பெரியவர்கள் அவள் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்தனர்.
அடுத்த வந்த நேரங்களில் எல்லாம் மகனுடனே செலவழித்தாள். அவனுடன் கதை பேசிய படியே உணவை ஊட்டி விட்டு தானும் உண்டவள், மகனை மெத்தையில் போட்டு தட்டிக் கொடுத்த படி, அவன் கூறும் கதைகளை ‘ ம் ‘ கொட்டி கேட்டவளின் எண்ணம் எல்லாம் தன் கணவனாகத் தான் இருந்தான் .
மகனை நடுவில் போட்டு கதைக் கேட்ட படி கண்ணால் காதல் செய்த நாட்கள் ஏராளம்… நடுவில் மகன் கிடந்தாலும் கண்களால் பேசி விரல்கள் ஐந்தையும் கோத்து பாத்தாக்கி , ஒருவர் மேல் ஒருவர் காலைப் போட்டு சரசம் செய்த படி கிடந்த நாட்களை எண்ண, கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு. மகனுக்காக அடக்கினாள்.
வெற்றிடமாக இருக்கும் கணவனின் இடத்தை பார்த்தபடி கிடந்தாள்.
மகன் உறங்கி விட, காதில் காதோலிப்பானை மாட்டி கடைசியாக தன் கணவன் பேசிய வாய்ஸ் மெசேஜ் கேட்டாள். அதில் அவன் கூறிய விஷயத்தை மீண்டும் மீண்டும் போட்டு கேட்டாள். அதில் அவனுரைத்த மூன்று நபரிகளில் ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. மீதி இருவரின் பெயரை ஏற்கனவே எழுதி வைத்தவள், அதன் மீது ‘x’ போட்டாள்.
அவர்கள் தான் தன் கணவனைக் கொலை செய்திருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பியவள், அதற்காக காரணங்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தன்னால் தக்க தண்டனை கொடுக்க காத்திருக்கிறாள் ஜெஸி
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1

