
நெற்றிப் பொட்டில், துப்பாக்கியின் வாய் பதிய அழுத்திருந்தாள் அவள். நடுநெற்றியை மூடிய அந்தத் துப்பாக்கியைப் பார்த்தது எச்சில் விழுங்கிய படி சோபாவில் சாய்ந்திருந்தான் நைதுருவன்.
பச்சை நரம்புகள் பாய, கனலை தேக்கிய கண்களோடு அவன் நெற்றியைப் பதம்பார்க்கக் காத்திருந்தவள் போல துப்பாக்கியை அழுத்திருந்தாள்.
‘பேபி’ என்ற வார்த்தை ரத்த அழுத்தத்தை கூட்ட கொஞ்சமும் யோசிக்காமல் வேலைக்கு வந்த இடத்தில் அதுவும் சற்று முன் அவனது உயிரைக் காப்பாற்றுவேன் என்று வாக்கு கொடுத்து முழுதாக ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை. அவன் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து உயிரை காவு வாங்க துணிந்து விட்டாள்.
துணை இல்லாத வேளையில் தன்னை தற்காத்து கொள்ள பிற ஆண்களின் பார்வையிலும் பேச்சிலும் சிக்காமல் தன்னை இரும்பாக்கிக் கொண்டு வாழ்பவளிடம் இவ்வாறு பேசினால் துப்பாகியைத் தூக்காமல் என்ன செய்வாள்.
துப்பாக்கியைப் பற்றி கீழே இறக்கினான் துருவன். ஆனால் அவள் மீது படிந்த மிரட்சியானப் பார்வையை மட்டும் மாற்ற வில்லை. அவளும் அவனை சீற்றம் குறையாமல் பார்வையில் எரித்து கொண்டிருந்தாள்.
“ஒய்???” என கையை உயர்த்தி கேட்டான்.
“லிசன், என்னை பொருத்தவரைக்கும் நீ ஒரு லிவிங் திங்ஸ். அதுல நீ என்னவா வேணாம் இருக்கலாம். ஆனா உன்னை பாதுக்காக்கற பொறுப்பு என்னோடது. அந்த வேலை மட்டும் தான் நான் இங்க பார்க்க வர்றேன். அதை தவிர்த்து உனக்கும் எனக்கும் நடுவில்ல ஒண்ணுமில்ல. சோ ஸ்டே இன் யூர் லிமிஸ்ட்ஸ். அண்ட் மீ ஜெஸி கால் மீ ஜெஸி. அனாவசியமா இந்த பேபி , கிபினு எல்லாம் வாயில இருந்து வந்தது வையேன், இன்னைக்கிப் போல இதோ இப்படி எல்லாம் உன்னை வார்ன் பண்ணிட்டு இருக்க மாட்டேன். ஒரே அழுத்து தான். காட் இட் !!!” என்றாள்.
அவளது மிரட்டலில் மிடறு எச்சிலை விழுங்கியவன், தலையை அணிச்சையாய் ஆட்டிவிட்டு “ஓகே ஓகே… ஐ ஸ்டே இன் மை லிமிட். சும்மா ஃபனுக்கு பேசுறதுக்கெல்லாம் கன்ன தூக்கி வச்சு மிரட்ட’லாம் கூடாது மா. நீ எனக்கு பாடிகார்ட். என்னை காப்பாத்த தான் நீ துப்பாக்கி தூக்கணும், என்னைக் கொல்ல இல்ல, முதல்ல அதை உள்ள வை ” என்றான் பயத்தில்.
அவளும் அமைதியாகத் துப்பாக்கியைப் பின்னாடி சொருகிவிட்டு தன் இடத்தில் நின்று கொண்டாள். இன்னும் பயமகலாமல் அவளையே பார்த்து கொண்டு தான் இருந்தான்.
“வெளிய எங்கயாவது போகணுமா???” குரலை உயர்த்தி சற்று அதிகாரமாய் கேட்டாள்.
“என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட பேசிட்டு வந்து சொல்றேன்” என்றவன் அறைக்குச் செல்ல எழுந்தான். அவளும் எதுவும் சொல்லாது தன்னிடத்தில் நின்றிருந்தாள். அவளைப் பார்த்த படியே மாடி ஏறினான் துருவன்.
அறைக்குள் வந்ததும் படாரென்று கதவை அடைத்து விட்டு மியூசிக் சிஸ்டத்தை இயக்கியவன் “ஆஆஆஆ….” மனதில் எழுந்த கடுப்பை மறைக்கக் கத்தினான்.
அருகே இருந்த பொருட்களை எல்லாம் தட்டிவிட்டவன் ‘ ஹாவ் டார் யூ… என் நெத்திலே கன் வைப்பீயா??? இதுல கொலை மிரட்டல் வேற. இருடி உன்னை டார்ச்சர் பண்ணி எனக்கு இந்த வேலையே வேணாம் சொல்லி உன்னை ஓட வைக்கிறேன். ஆஃப்டரால் ஒரு பொம்பல கிட்ட இருந்து பயந்து தப்பிச்சு வந்திருக்கீயே துருவா !!! இந்த அவமானத்த உன் ஹிஸ்டரில இருந்து அழிக்கணும்னா நீ எதையாவது சாதிக்கணும். தெட் மீன்ஸ் உன்னை இன்சல்ட் பண்ணினவள நீ கண்டிப்பா ஜெயிக்கணும். தினமும் நீ கொடுக்கற டார்ச்சர்ல அவ பாடிகார்ட் வேலைய வேணாம் சொல்லிட்டு ஓடணும்… இது சபதம்’ என தனக்குள் ஒரு சூளுரை எடுத்தவன்.
தன்னுடன் பள்ளி, கல்லூரியில் யூஜி படித்த நண்பர்கள் அனைவரையும் வெளிநாட்டிலிருந்து வந்ததுக்காக ட்ரீட் என்று சொல்லி அழைத்தவன், தனக்குள் அவசர திட்டத்தை போட்டு விட்டு தன் நண்பர்களிடம் அதை பகிர்ந்தான். அவர்கள் செய்ய ஒத்துக் கொள்ள,
“லேட்ஸ் தி கேம் ஸ்டார்ட் பேபி!!!” என்றவன் வேகமாக கிளம்ப ஆரம்பித்தான். கூலர்ஸ் அணிந்து படிகளில் அவன் இறங்கிவர அரவம் கேட்டு திரும்பிப் பார்த்தாள். அவன் வந்து கொண்டிருந்தான்.
அவன் வருகைக்கும் தயாராக தான் இருந்தாள். அவளை நெருங்கியதும் அவன் எதுவும் சொல்லாமல் முன்னே நடந்தான்.
“மிஸ்டர் நைதுருவன், எங்க போறீங்க உங்க கார்ட்ஸ்க்கு நீங்க எங்க போறீங்கன்ற இன்ஃபர்மேஷன கொடுக்கணும். சும்மா சொல்லாம போனா என்ன அர்த்தம்??”என்று கேட்டவளை நக்கலுடன் கண்ணாடியை இறக்கி விட்டுப் பார்த்தவன்
“ஹலோ, இங்க நீ எனக்கு பாடிகார்ட். உன் கிட்ட சொல்லிட்டு போகணும் எனக்கு எந்தரூலும் இல்ல… பொத்திக் கிட்டு அமைதியா நான் எங்க போறேனோ அங்க என் கூடயே வரணும். எங்க போறீங்க ?ஏன் சொல்லாம போறீங்கனு ? பொண்டாட்டி மாதிரி கேள்வி’லாம் கேட்க கூடாது. வேர் ஐ வான்ட் டூ கோ, இஸ் நன் ஆஃப் யூர் பிஸ்னஸ். ஜஸ்ட் பலோவ் மீ” என்றவன் முன்னே நடக்க, எரிச்சலுடன் தான் அவனுடன் நடந்தாள்.
காரில் அவன் பின்னே அமர அவள் முன்னே அமர்ந்தாள். அவளது கடுகடுத்த முகத்தைப் பார்க்க பேரானந்தமாக இருந்தது அவனுக்கு. “அங்கிள் ***** போலாம்” என்றான். அதை கேட்டு தன் பின்னே காரில் வந்தவர்களுக்கு போகும் இடத்தை சொல்லிவிட்டு வெளியே வேடிக்கைப் பார்த்தாள்.
‘வீரமதி’ அந்தக் கட்டித்தைப் போல கம்பீரமாக பொறிக்கப் பட்டிருந்தது அந்த எழுத்துக்கள். ‘வீ’ என்று சொல்லப்படும் பெண்களுக்கு தேவையான மையிலிருந்து ப்ரக்ஞன்சி பேட் வரைக்கும் அத்தனையும் தயாரிக்கும் தொழிற்சாலை அது. இந்திய அளவில் மட்டுமல்ல வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்கிற அளவுக்கு பேர் பெற்ற ப்ரோடைட் அவர்களுடையது. அதிகம் இயற்கை சார்ந்த பொருட்களை வைத்து தான் தயாரித்து வருகின்றனர்.’ நல்ல பிராடைக்ட்’ என்று விரல் விட்டு என்ன கூடிய பெயர்களில் இந்த’ வீ ‘ பிராடைக்ட்டும் வந்திடும்.
‘எதிலும் எங்கேனும் தனது ஆளுமையே ‘ என்று கர்வத்தில் அமர்ந்து கோப்பையை புறட்டிக் கொண்டிருந்தார் வீரமதி. கதவைத் தட்டி உள்ளே வர அனுமதி கேட்டான் அவருடைய காரியதர்சி தயாளன்.
“கம் மின்…” என்றார்.
“குட் மார்னிங் மேம்…”என உள்ள வந்தவன், அவருக்கென வைத்திருந்த செய்தியைச் சொல்லி அவர் கையெழுத்திட வேண்டிய கோப்பைகளையும் அவர் முன்னே வைத்தான். இன்று அவர் செல்ல வேண்டிய மீட்டிங் பட்டியலையும் விவரித்தான்.
“ஓகே தயா, பார்த்துக்கலாம். அப்றம் நான் சொன்ன வேலை என்னாச்சி? கண்டுபிடிச்சிங்களா அந்த மூணு பேரையும்???”
“தேடிட்டு இருக்காங்க மேம்… அவனுங்க யாரும் சென்னைய சேர்ந்தவங்க இல்ல மேம். மூணு பேரும் வெளியூர் தான். சென்னையில் இருக்க அத்தனை ரவடிங்களோட போட்டோஸ் எல்லாம் தம்பிக்கு அனுப்பிட்டோம் மேம். தம்பி யாருமில்லனு சொல்லிட்டார். அதான் வெளியூர்காரர்னா தான் இருக்க முடியும் எனக்கு தோணுது மேம். அங்க சீ சீடிவி கேமரா கூட இல்ல.
எனக்கு என்னவோ இந்த இன்சிடெண்ட் எந்த மொட்டிவேசனும் இல்லாம பண்ணினது போல தான் தோணுது மேம்” என்று தனக்கு தெரிந்ததைச் சொன்னான் தயாளன். புருவ முடிச்சிகளுடன், ‘ஏன்???’ என்று கேள்வியோடு பார்த்தார் அவனை.
“இத்தனை நாள் வீட்ல இருக்க யாரையும் அட்டாக் பண்ணாதவங்க. ஃபாரின்ல இருந்து வந்த துருவ் சார் மட்டும் ஏன் அட்டாக் பண்ணனும்??? உங்களை அழிக்க, உங்களை அட்டாக் பண்ணிருக்கலாம். இல்ல ருத்ரன் சார் கூட அட்டாக் பண்ணிருக்கலாம், ரொம்ப நாள் கழிச்சி பாரின்ல இருந்து வர துருவ் சார ஏன் அட்டாக் பண்ணனும்???
அவர் வரப் போறது உங்க ஃபேமிலி இருக்கிறவங்களுக்கு தவிர யாருக்கும் தெரியாது . இதெல்லாம் வச்சி பார்க்கும் போது மோட்டிவேசன் இல்லாம வெறும் கை கலப்பா தான் இருக்கும் நினைக்கிறேன் மேம்…” என்றான்.
“கைகலப்புனாலும் அவனுங்க அடிச்சது என் மகன தயா. சும்மா மன்னிச்சு விட தெரசா இல்ல இந்த வீரமதி. அவனுங்கள ஏதாவது பண்ணி தான் ஆகணும். எவ்வளவு தைரியம் இருந்தால் இந்த வீரமதி பையன் மேலே கை வைப்பாங்க. எனக்கு அவனுங்க வேணும் உயிரோட இல்ல பிணமா இருந்தாலும் பரவாயில்லை சீக்கிரம் கண்டு பிடிங்க”என்று கட்டளையிட்டார். அவனும் “சரி” என்று அவ்விடத்தை விட்டுச் செல்ல, எழுந்த கோபத்தை அடக்க முயன்றார் வீரமதி.
பெயர் பெற்ற அரசியலில் குடும்பத்தின் மூத்த மருமகள் தான் வீரமதி. ஆனால் அவருக்கு அரசியலில் பெரிதும் நாட்டமில்லை. அதனால் கணவனின் உதவியால் தொழிலொன்றை நிறுவி அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருகிறார். அவரது கணவர் பிரகதீஸ்வர் மத்திய மந்திரியாக இருந்தவர் எதிர் கட்சி ஆட்களால் கொல்லப்பட்டு இறந்துப் போனார். மாறி மாறி சுட்டுக் கொண்டு இறந்து விட்டனர் என்று வழக்கை முடித்து விட்டனர். அதன் பின்னனியை ஆராயாமல்.
பிரகதீஸ்வரரின் தம்பியும் விஸ்வேஸ்வரும் கல்வித்துறை அமைச்சராக இருக்கிறார். அவரது மனைவி ராதா அவர்களுக்கு மகள் மகனனென இரண்டு பிள்ளைகள். மகள் லோசினி, மகன் லோகித். ருத்ரன், நைதுருவன் என வீரமதிக்கு இரண்டு மகன்கள் மூத்தவன் வீரமதிக்கு தொழிலில் துணையாக இருக்கிறான்.
நைதுருவனோ, வெளிநாட்டில் எம் எஸ் முடித்துவிட்டு தாயகம் திரும்பி இருக்கிறான். ருத்ரனின் மனைவி நிக்கிதா, அவர்களது கல்லூரியிலே ஆசிரியராகப் பணியாற்றுகிறாள்.
வீரமதி என்னும் பெண் சிங்கத்தால் ஆளப்படுகிறது அந்த இல்லம். அவரது அனுமதியின்றி துரும்பும் கூட அசையாது. எல்லாம் அவரது கட்டுபாட்டில் தான் இருக்கிறது. அவரது சொல்தான் வேதவாக்கு. அதை யாரும் இதுவரை மீறினதே இல்லை அவர் மேல் பயமிருந்தாலும், அதில் பாசமும் அடங்கி இருக்கும் மிகவும் அன்பானவர் தான். இரக்க குணமுள்ளவர் . ஆனால் துரோகத்தின் நெடியை நுகர்ந்தாலும் அவரை போல கொடூர குணம் கொண்டவர் யாருமிலர். போகப் போகப் கதையில் காணலாம்.
****
பதற்றத்தோடு தன் நண்பனை நெஞ்சில் சாய்த்து கொண்டவன் அவனை எழுப்ப முயன்றான். வாயில் எதையோ மென்றபடி அலட்சியமாக அவனருகில் வந்து நின்றாள் ஜெஸி. அவளை பார்க்க அவனுக்கு பத்திக் கொண்டு வந்தது.
“துப்பாக்கி உன் கையில் இருந்தா யாரை வேணா சுடுவீயா??? இது என் பிரண்ட் அவனை ஏன் சூட் பண்ண??? ” என சீற்றம் கொண்டு கத்தினான்.
அவனது கத்தலில் காதை குடைந்தவிட்டு “ஏன் கத்துறீங்க??? நீங்க தான என்னை யாரும் அட்டாக் பண்ண வந்ததா அவங்களை சூட் பண்ணி கொல்லணும் சொன்னீங்க. நீங்க சொன்னத தான் செஞ்சேன். ஆனா எனக்கு ஒரு டவுட் உங்கள ஏன் உங்க ஃப்ரெண்ட் அட்டாக் பண்ண வரணும்????”எனக் கேட்டு அவனை மடக்க,
அவனோ எச்சில் விழுங்கியபடி தன் நண்பனையும் அவளையும் மாறி மாறி பார்த்தான். அவனது திட்டத்தை அறிந்து கொண்ட கர்வத்தில் நின்றாள் ஜெஸி
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1


