
காசி, உங்களுக்கு நல்லா தெரியுமா? இவன் தான் துருவனை அடிச்சானா? !”
“எனக்கு நல்லா தெரியும் மா ! இவனும் இவன் கூட இருந்த சில ஆட்களும் தான் துருவ் தம்பி கிட்ட வம்பு பண்ணினது. துருவ் தம்பிய அடிச்சவனுங்களோட முகத்தை என்னால மறக்க முடியாது மா !”என்றார்.
வீரமதியோ யோசனையில் மூழ்கிட, வாசன் தான் “அக்கா ! உன்னை யாரோ பலோவ் பண்றாங்க தோணுதுக்கா ! அதுவும் நிவாஸை பத்தி நல்லா தெரிஞ்சவங்களா தான் இருக்கணும்… அவனை கடத்திட்டு போக அவசியம் என்ன இருக்கு? இல்ல உன்னையும் உன் வளர்ச்சியையும் தடுக்க, மாமா விஷயத்தை கையில் எடுத்து யாரோ இப்படி பண்ண வாய்ப்பு இருக்கும் கா ! இனி நாம கொஞ்சம் ஜாக்கிறதையா இருக்கணும்க்கா. இல்ல மாமா சாவுக்கு நாம தான் காரணம்ன்ற உண்மை வெளிய வந்திடும்…”என்று எச்சரிக்கை விடுத்தார்.
“ம்ம்…”என்றவர் கண்கள் ஏனோ கலக்கத்துடன் கொஞ்சம் கலங்கி தான் போயிருந்தது.
“என்னக்கா?”
“எல்லாத்தையும் விட, நிவாஸ என்ன பண்ணினாங்க தெரியல வாசா ? அந்தப் பொண்ணு ஷர்மி, குழந்தைய வச்சிட்டு தவிக்கறாளோ ! நினைக்கவே நெஞ்செல்லாம் வலிக்குது வாசா ! எப்படியாவது என் புள்ளைய கண்டு பிடிக்கணும்… இவன் யாரு, எதுக்கு என் துருவனை தாக்கணும? எதுக்கு என் நிவாஸை கடத்தனும்…?இவன் பின்ன யாரு இருக்கானு கண்டு பிடிக்கணும் “என்றவள் தன்னாட்களை வைத்து அவனை தேடச் சொன்னார்.
“இந்த முறை முகம் சரியாக இருக்கு, நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது, இவனை என் முன்னாடி கொண்டு வந்து நிருத்தல… யாரெல்லாம் பொணமா போவீங்க தெரியாது !”என்று மிரட்டி விட்டு காரில் ஏறினார் உடன் வாசவும் ஏறிக் கொண்டார்.
“அக்கா ! பதட்டப்படாத ! இதுவே நம்மலை கண்காணிக்க எதிரிக்கு ஒரு வாய்ப்பாகிடும்…”என்றார்.
“எப்படி வாசா ? நிவாஸ் நல்லா இருந்தால் கூட எப்படி யாவது எங்கயாவது இருக்கான் தேதிக்கலாம்… ஆனா இப்போ அவன் சுயம் இல்லாம இருக்கான். வயசு பொண்ணு குழந்தைங்கள வச்சிட்டு என்ன பண்ணுவளோ !”என்று புலம்பிட,
“அக்கா ! கடத்தினவன் கண்டிப்பா நம்ம கிட்ட டிமாண்ட் வைப்பான். அதை வச்சு கண்டுபிடிக்கலாம்… டிமாண்ட் இல்லாம அவங்களை கடத்தி வச்சி என்ன பண்ணுவான்…? இருந்தாலும் நம்ம வழியில கொஞ்சம் ஆட்களை வச்சு தேட சொல்லுங்க…!”என்றார். அவரும் ஆமோதித்தார்.
அவர்களது பேச்சு அமைதி நிலைக்கு போனது… வீரமதி யோசனையில் இருக்க, வாசன் அவர் முகத்தை பார்ப்பதும் தயங்குவதுமாக இருந்தார். முதலில் யோசனையில் மூழ்கி இருந்தவர் இதை கண்டுக்காமல் இருந்தார்.
இருவரிடத்தில் அமைதியே இருக்க, தீடிரென தம்பியை பார்த்தவர், புருவ முடிச்சிகளுடன் அவரிடம் என்னவென்று விசாரித்தார்.
“என்ன தம்பி என்ன தயங்கற? ஏதாவது வேணுமா?”
“இந்த நேரத்துல கேட்கணுமா தயக்கமா இருக்கு அக்கா !”என்றார் சங்கட்டமாய்..
“ஏன் கிட்ட என்ன தயக்கம் உனக்கு வாசா? நான் உன் அக்கா மறந்துட்டியா? உதவி கேட்டு வந்து தயங்கி நிக்கறவன் போல நடந்துக்கற நீ. நீ சொன்னா செஞ்சிட போறேன். உனக்கு என்ன என் கிட்ட தயக்கம்…?”
“இல்லக்கா! நீயே நிவாஸ் பத்தி பீல் பண்ணிட்டு இருக்க, இதுல நான் வேற, சுயநலமா இருக்கேனோ தோணுச்சு அதான்…!”என்று மென்று முழுங்க “என்ன விஷயம் சொல்லு வாசா?”
“இல்லக்கா மது படிச்சி முடிச்சிட்டா ! சென்னையில வேலைக்கு போறதா சொல்லிட்டு இருக்க ! சென்னையில் வேலை தேடி அலையிறதுக்கு நம்ம துருவ் கம்பெனியில வேலை பார்த்தா எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்… அவளும் உன் பாதுக்காப்புல இருப்பா அதை கேட்கத்தான் யோசனையா இருக்கு !”என்று தயங்க,
“இதுக்கு என்ன டா உனக்கு தயக்கம்? அக்கா மது சென்னைக்கு வர்றதா இருக்கா பாத்துக்க சொன்ன முடிஞ்சுட போகுது… இதுக்கு நீ ஏன் டா தயங்கற? அவன் என் மருமக உன்னை விட அன்பும் அக்கறையும் அதிகமாகவே இருக்கு நீ அனுப்பி வை நான் நம்ம வீட்ல தங்க வச்சி பாத்துக்கிறேன்”என்றவரை அன்போடு பார்த்தவர் “தேங்க்ஸ் கா ” என்றார். “பச் “என்று செல்லமாக சலித்துக் கொண்டார்.
அவரை தேனியில் இறக்கி விட்டு விமானம் பிடித்து சென்னை வந்து சேர்ந்தார் வீரமதி. ருத்ரனை அலுவலகம் அனுப்பி வைத்தவர் வீட்டிலே ஓய்வு எடுத்துக் கொண்டார் தனது காரியதர்சி தயாவை தனியாக அழைத்து அவனது புகைப்படத்தை கொடுத்து தேடச் சொல்லியிருந்தார்.
****
அலுவலகத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர் துருவ்வும் அவனது நண்பர்களும்… துருவ் , ரிஷி, அஜித் மட்டும் அலுவலகத்தில் வேலை செய்ய, சாகரும், அஜய்யும் சைட் விஷயமாக வெளியே சென்றிருந்தனர்.
இவர்கள் இங்கே வேலை செய்ய, மெய்காப்பாளர்கள் ஐவரில் மூவர் உள்ளே இருக்க இருவர் வெளியே நின்றிருந்தனர் . நிழலில் தான் நிற்கின்றனர்.
ஜெஸி தான் நிவாஸ் ஷர்மி நினைப்பில் மூழ்கி இருந்தாள். நிவாஸை நேரில் பார்க்க வேண்டும்..
நாளை விடுமுறை கேட்க வேண்டும் என்ன? எப்படி? கேட்க வேண்டும் என்ற சிந்தனையில் அவளிருக்க,
ரவி தனது லேப்டாப்பில் ஷேர் மார்க்கெட் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது இன்னொரு வேலையாக இதை வைத்துக் கொண்டு தினமும் ஏற்ற இறக்கம் லாப நஷ்டத்தை பார்த்தபடி அமர்ந்து விடுவான்.
தன்யா , மேற்கொண்டு எம்.ஏ தமிழ் கரஸ்ஸில் படிப்பதால் அந்த புத்தகத்தை வைத்து அமர்ந்துக் கொண்டாள். வெளியே ஶ்ரீயும், அசோக்கும் காவலுக்கு நின்றன்றிருந்தனர்.
மணி பதினொன்று இருக்க, அங்கிருந்த ஐவருக்கும் டீ வந்தது… நான்கு டீ ஒரு ஜுஸ் என இருந்தன.
இரண்டு டீயை ரவி, ஜெஸி எடுத்துக் கொண்டவர்கள் ஜுஸ் யாருக்கென பார்க்க, அவரோ தன்யாவிடம்”ஜுஸ் எடுத்துக்கங்க மேடம்”என்றார்.
அவரை கேள்வியாகப் பார்த்த தன்யா “என்ன அண்ணா எனக்கு மட்டும் ஜுஸ்?”என்று வினவ,
“தெரியல மா ரிஷி தம்பி தான் கொடுக்க சொல்லுச்சு!”,என்று நகர்ந்து விட, அவளுக்கோ வெட்கமாக இருந்தது. தலை குனிந்தபடி ஓரக் கண்ணால் அவனை பார்க்க , அவளோ கண்ணாடி தடுப்பின் வழியே இவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
வெயிலை தாள முடியாமல் உள்ளே வந்த அசோக்கும் ஶ்ரீக்கும் இதைக் கண்டு பேரதிர்ச்சி…
“எதே ! வெயிலே கிடந்து காய்ஞ்சு போற எங்களுக்கு டீ ! உள்ள ஏசியில இருக்க உனக்கு ஜூஸா?! குடுடி இங்க !”என்று பிடுங்கி பாதி குடித்து விட்டு மீதியை அசோக் கிடம் கொடுக்க, அவனும் அதை பருகினான்.
அவளோ தவிப்பாக ரிஷியை அவனோ, அசோக் ,ஶ்ரீ யை தான் முறைத்துக் கொண்டிருந்தவன், இன்னொரு ஜூசை ஆடர் செய்து அவளிடம் கொடுக்க சொன்னான்.
இன்னொரு ஜூஸும் கொண்டு வந்து கொடுக்க,
“கொக்கா மக்க ! அவனவன் என்ன கொடுத்துக் கரெக்ட் பண்றான். ஆனா இவன் திங்கற ஐட்டமா கொடுத்து உன்னை கரெக்ட் பண்றான்டி… உன்னை பத்தி நல்லா புரிஞ்சு வச்சிருக்கான்…! இதை கொடுத்தா நீ கரெக்ட்டாவன்னு தெரிஞ்சே பண்றான் ” என ஶ்ரீ கேலி செய்ய அங்கிருந்த மூவரும் வாய்விட்டு சிரித்தனர்.
“மேம்…” அவனது கேலிக்கு சிணுங்கினாள் தன்யா.
இந்த முறை ஜுஸை ஜெஸி எடுத்து பாதிப் பருகி விட்டு தன்யாவிடம் நீட்டியவள், கண்ணாடி தடுப்பின் வழியே ரிஷியை கேலியாகப் பார்க்க, அவனோ உதட்டை பிதுக்கி பாவமாக பார்த்தான்.
“இங்க பார் உன் ஆளு கிட்ட சொல்லி வை ! இனி எது உனக்கு கொடுத்தாலும் அது எங்களுக்கும் சேர்த்து கொடுக்கணும்… இல்ல உங்க லவ்வுல மண்ணள்ளி போட்டுடுவோம்… பார்த்துக்க”என்று ஶ்ரீ விளையாட்டாக மிரட்ட,
“மச்சி ! எனக்கு ஒரு டவுட் சப்போஸ் அவன் அவளுக்கு முத்தம் கொடுத்தால், அதையும் நாலா கொடுக்க சொல்லுவீயா மச்சி !”என அசோக் கேட்டிட,
“ஐய ! “என முகம் சுழிக்க., வெட்கம் கொண்ட தன்யாவோ”ச்சீ.. போங்கடா “என்று புத்தகத்தை வைத்து அடித்து இருவரையும் வெளியே அனுப்பி வைத்தாள்.
உள்ளே இருந்த ரவியும் ஜெஸியும் சிரித்துக் கொண்டனர். இவளும் மீதி
ஜூஸை அவன் கண் பட, பருகினாள்.
அதை திருப்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி.
“உன் ஆள கவனிக்கற வேலை முடிஞ்சதுன்னா ! இருக்கற வேலையை கொஞ்சம் கவனிக்கலாமே !”என்று துருவனின் குரலுக்கு கேட்டதும் பிடரியை தேய்த்து வழிந்து கொண்டே தன் இருப்பிடத்தில் அமர்ந்து வேலையை பார்த்தான்.
அன்றைய நாள் கூத்தும் கேலியுமா செல்ல, இரவு துருவனை வீட்டில் விட்டு கிளம்பும் வேளையில் ஜெஸி துருவனிடம்,
“நாளைக்கு எங்க சபையில இருந்து சின்ன பிரேயர் இருக்கு… என்னால வர முடியாது.பசங்க இருக்காங்க பாத்துப்பாங்க உனக்கு ஓகே தான ! நான் லீவ் எடுத்துக்கலாம்ல !”என தயங்கி கேட்டாள்.
அவனும் உள்ளே அதிர்ந்து , தவித்தவன்,”சரி ஓகே ஜெஸி ! லீவ் எடுத்துக்கோ ! எனக்கும் ஒன்னும் இல்ல… நாளைக்கு பெரிய ஸ்கெடுல் எல்லாம் இல்ல… ஆபிஸ் ல தான் அவங்க பார்த்துக்கட்டும் நீ போயிட்டுவா !”என்றான் உயிர்ப்பில்லாமல்…
அவளும் அவனிடம் சொல்லி விட்டு செல்ல இருந்தவளை தடுத்தது அவனது குரல்..
குரல் கமற அதை சரி செய்தவன்” அடுத்த நாள் வந்திடுவ தான?”என்றான்.
அவளோ அவன் தவிப்பை புரிந்து கொள்ளாமல்வந்துடுவேன்… என்னாச்சி உனக்கு?”என்றாள் குழப்பமாக
“இல்ல நத்திங் ! சும்மா கேட்டேன். குட் நைட்”என்றான், அவளும் “குட் நைட்” என்று சென்று விட, இவனுக்கு தான் அவனால் அவளில்லாத நாளை ஏத்துக்க கொள்ள முடியாது என்பது போல தவித்தான்.
இரவில் தனது மடிக்கணினியில் வேலை செய்துக் கொண்டிருந்தவனுக்கு அஜய்யிடமிருந்து அழைப்பு வர, அவன் சென்ற இடத்தையும், நிலத்தையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.
அவனும் அவனிடம் சில விடயங்களை கேட்டுக் கொண்டிருந்தான்.
எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொண்டவன், இரவு வணக்கம் சொல்லி அழைப்பை வைக்கும் தருணம் நியாபகம் வந்தவனாக, “அஜய், நாளைக்கு நீ ஆபிஸ்க்கு வருவீயா?”என வினவினான்.
“நாளைக்கு நான் எங்கடா போக போறேன்? இன்னைக்கியே சைட் வர்க்க பார்க்க சொல்லி நீ தான் அனுப்பின ! மறுபடியும் நாளைக்கும் போகணுமா அங்க ?”என இவன் சந்தேகமாக வினவ,
“இல்லடா ! உன் சபையில நாளைக்கு ஏதோ முக்கியமான பிரேயர் சொல்லி ஜெஸி லீவ் கேட்டா ! நீயும் அதே சபை தான, நீயும் பிரேயருக்கு போவ தான ? அதான் கேட்டேன்”என்றான்.
“அந்த பிரேயர தான் வேற டேட்ல மாத்திட்டாங்களே டா ! நாளைக்கு அந்தப் பிரேயர் இல்லைடா !”உண்மையை போட்டு உடைத்தான்.
“உனக்கு தெரியாம எதுவும் பிரேயர் நடக்குமா?”
“எனக்கு தெரியாம எப்படி நடக்கும் டா?எதையும் தெரிவிக்காமல் எங்க சபையில எதுவும் பண்ணிக்க மாட்டாங்க… ஜெஸி லீவ் எடுக்க , உன் கிட்ட இப்படி ஏதாவது ரீசன சொல்லிருக்கலாம். பட் ஆனா நாளைக்கு எங்களுக்கு பிரேயர் இல்லடா !” என்றான்.
“சரி டா பாய் ! “வைத்தவனுக்கு, குழப்பங்கள் தான்.
‘ஏன் பிரேயர்ன்னு சொல்லிட்டு லீவ் போடணும்? உண்மைய சொல்லி லீவ் கேட்டு இருக்கலாமே , ஏன் ஜெஸி பொய் சொல்லி லீவ் கேட்டா?’ தனக்கு தானே கேட்டுக் கொள்ள,
‘ ஐயோ !!’ என்றானது மனதிற்கும் மூளைக்கும், ‘ நைட்டான போதுமே ! ஜெஸி ஜெஸி ஜெபிக்க ஆரம்பிச்சிடுவீயே ! ஏன்டா ஏன்?”என்பது போலானது மூளைக்கும் மனதிற்கும்..
அவனும் விடாமல் காரணத்தை தேடி தேடி கலைத்து போய் உறங்கி விட்டான்.
***
மறுநாள் விடிய, மகனை பள்ளிக்கு கிளப்பியவள், மாமியார் மாமனாரிடம் கேரளாவில் தோழியை பார்த்து விட்டு வருதாகச் சொல்லி, மகனை அழைத்துக் கொண்டு போனாள்.
அவனை பள்ளியில் விட்டு விட்டு நேராக எட்வர்டு வீட்டிற்கு வந்து காரை நிறுத்தினாள். அவளை அவனது பெற்றோர்கள் வரவேற்றனர்.
எட்வர்டும் ரெக்ஸ்லினும் அவளுக்காக தயாராக தான் இருந்தனர். மூவரும் விமான நிலையத்திற்கு சென்று விமானம் வழியே கேரளாவிற்கு சென்றனர்.
திருவனந்தபுரத்தில் இறங்கியவர்கள் காரை அமர்த்தி, நிவாஸ் இருக்கும் இடத்திற்கு சென்றனர்.
நிவாஸ் இருக்கும் இடம் நெருங்க நெருங்க, மனதில் சிறு பதற்றம் தொற்றிக் கொண்டது மூவருக்கும்..
அதுவும் ரெக்ஸ்லினுக்கும் ஜெஸிக்கும் சொல்லவே வேண்டியதில்லை… சிறு வயதிலிருந்தே ஒன்றாக ஒரே ஆசிரமத்தில் வளர்ந்ததால் அவர்களுக்குள் பாசப்பிணைப்பு அதிகமாக இருந்தது. உடன் பிறந்தவர்களாக, ஒரே குடும்பம் போல மூவரும் இருந்தனர்.
இவர்களுடன் தாமதமாக இணைந்தது ஆரோன், ஷர்மி, எட்வர்டு தான். பத்து பதினைந்து ஆண்டுகளாக அவர்களது நட்பு தொடர, இடையில் ஆரோனின் இறப்பு தான் நிவாஸை அவர்களிடமிருந்து பிரித்தது.
ஆறு மாதங்கள் கழித்து இப்போது தான் நிவாஸை பார்க்க போகின்றனர் மூவரும்..
நிவாஸ் , ஷர்மி தங்கி இருக்கும் இடமும் வந்தது. மூவரின் இதயமும் வேகமாக துடித்தன.
வீட்டின் முன் காரை நிறுத்தினார்கள்… ஷர்மி தான் மூவரையும் வரவேற்றாள். ஜெஸியையும் ரெக்ஸ்லினைக் கண்டதும் தாவி அணைத்துக் கொண்டாள் ஷர்மி.
“எப்படி டி இருக்க?”ரெக்ஸ்லின் ஷர்மியிடம் நலம் விசாரிக்க, அவளால் பொய் சொல்ல முடியவில்லை… உண்மையை சொல்லவும் முடியவில்லை தொண்டை அடைத்தது.
கதறி அழுது விட்டாள்…
“ரெக்ஸ் ! அவளை உள்ள கூட்டிட்டு போ வெளிய நிண்ணு பேசறது சேப்டி இல்ல…!”எட்வர்டு சொன்னதும் மூவரும் உள்ளே சென்றனர்.
குழந்தைகள் இருவரும் விளையாடிக் கொண்டிருக்க, “நந்து? நந்தனா?”என ஜெஸி அழைத்தாள்.
“ஐ ஐஐ… ஜெஸி அத்தை !”என்று நந்தனா ஓட, அவளுடன் நந்துவும் ஓடி வந்தான்.
தன் மருமகளை தூக்கி ஆசை தீர கொஞ்சினாள். ரெக்ஸ்லினும் நந்துவை தூக்கிக் கொண்டு கொஞ்சினாள்.
“பரவாயில்ல ரெண்டு பேரும் நம்மலை நியாபகம் வச்சிருக்காங்களே !”ரெக்ஸ்லின் நந்துவை கொஞ்சிக் கொண்டே சொல்ல,
“ஆறு மாசம் தான்டி ஆகுது நாம பிரிஞ்சி ! அவனுக்கு சொந்தம் சொல்லிக்க இருக்கிறது நீங்க தான எப்படி நாங்க மறப்போம்”என்று கண் கலங்கிட, ஜெஸி அவளை ஒற்றை கையால் அவளை அணைத்துக் கொண்டு தேற்றினாள்.
அங்க வந்ததும் எட்வர்டு தனது முதன்மை வேலையான கண்காணிக்கவும் மற்றும் அந்த இல்லம் பாதுகாப்பானதா என்று சோதனை போட ஆரம்பித்தான்.
அவர்களை அமர்த்தி இருக்கற இடம் மிகவும் பாதுகாப்பானது தான் அவனது நண்பனும் அவனது மனைவியும் சொன்னதும் அவனுக்கு திருப்தியே வந்தது.
நிவாஸ் மாத்திரை போட்டுக் கொண்டு உறங்குவதால் அவனை தொந்தரவு செய்யாது அறைக்குள் நுழையாமல் கதவை கூட திறக்காமல் விட்டு விட்டனர். சிறு சத்தம் கேட்டாலும் பதறி அடித்துக் கொண்டு எழுந்து மறுபடியும் பழைய பல்லவியை பாடுவான்.
அவனது நிலமை இப்போது கைக்குழந்தையை போல தான்… அவனை தூங்க வைத்தால் தான் இவளால் நிம்மதியாக அடுத்த வேலையை பார்க்க முடியும்… சிறு சத்தம் கேட்டாலும் எழுந்து அமர்ந்து அழ ஆரம்பித்திடுவான்.
அதனாலே அவன் தூங்கினாலே சத்தமே வராத வேலையை பார்ப்பாள்.. அவன் விழித்திருக்கும் போது தான் சத்தம் எழுப்பும் வேலையை செய்வாள், சரியான ஓய்வும் இவளுக்கு இல்லை.
மூவரும் பின் பக்கமாக சென்று பேச ஆரம்பித்தனர்.. குழந்தைகள் அங்கு தான் விளையாடினார்கள்…
“ஏன் எங்க கிட்ட கூட சொல்லாம தனியா போனீங்க? நிவாஸ் இப்படி இருக்கான் ஏன் ஒருவார்த்தை கூட சொல்லல நீ?” ரெக்ஸ்லின் ஆதங்கத்துடன் கேட்டாள்.
“ஆரோன் இறந்ததுக்கு அடுத்த இரண்டு நாள் எதையோ வெறித்த மாதிரி இருந்தான் நிவாஸ். பிரண்டு இறந்ததுல டிப்ரஷன்ல இருக்கான் நானும் நினைச்சேன்… தூக்கத்துல எழுந்து நான் கொல்லல நான் கொல்லல சொல்லிட்டே இருந்தான்.
அடுத்து வந்த நாட்கள்ல அவனை நினைச்சு எனக்கே பயமா போயிடுச்சி ! உங்க கிட்ட சொல்லலாம் தான் நினைச்சேன். ஆனா நீங்க ஆரோன் இழந்த துக்கத்துல இருக்கும் போது இதை சொல்லி மேலும் கஷ்டப்படுத்த வேண்டாம் தான், நானே டாக்டர் கூட்டிட்டு போலாம் முடிவெடுக்கும் போது வீரமதி அத்தை வந்தாங்க… முதலாளியாக வந்து நான் உனக்கு உதவி பண்றேன் சொல்லி, எனக்கு தெரிஞ்ச டாக்டர் கொடைக்கானல் ஸ்பெசலிஸ்ட் இருக்காங்க சொன்னாங்க… அங்க உனக்கு எல்லா வசதியும் செஞ்சு தர்றேன் கூப்பிட்டாங்க… என் பிரண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டு வர்றேன் சொன்னேன்.
வேணாம் இவனுக்கு கியூர் ஆனதும் சொல்லிக்கோ சொன்னாங்க… எனக்கு சரினு பட, அவங்களோட போயிட்டேன்.
முதல்ல முதலாளியா நடந்தவங்க கொஞ்சம் கொஞ்சமா உரிமையா பேசுனாங்க, உறவு முறை சொல்லி கூப்பிட சொன்னாங்க… நிவாஸ் அணைச்சு அழுதாங்க… எனக்கு சந்தேகமா இருந்தது. அவங்க கிட்டையே கேட்ட போது உணர்ச்சி வசத்துல அவன் என் புள்ளை உண்மைய சொல்லிட்டாங்க… போக போக அவங்க புள்ளைய காப்பாத்த எங்களுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தாங்க… எங்களை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க.. எங்கயும் விடல, உங்களுக்கு போன் கூட பண்ண கூடாது ஸ்ட்ரிக்ட் சொல்லிட்டாங்க… மூச்சு கூட விட முடியல… இவங்களை ஸ்கூலுக்கு விட , கூட்டிட்டு போகும் போது தான் வெளி உலகத்தையே பார்ப்பேன் அதுவும் கார்ல் போகும் போது, என்னால இடையில எங்கேயும் இறங்க முடியாது…
போன் இல்ல… அதையும் வாங்கி வச்சுட்டாங்க… எனக்கு பைத்தியம் பிடிச்சிடும் போல இருந்தது… ஆனா அன்னைக்கு ஒரு நாள் நிவாஸ் புலம்பலுக்கு பதில் தெரிஞ்சது.
நிவாஸ், அவங்க அம்மா வீரமதியோட சேர்ந்து தான் அந்த அமைச்சர கொன்று இருக்கணும், அங்க ஆரோனும் இருந்திருக்கான் அவனையும் சேர்த்து கொன்றுக்கணும், தன் நண்பனோட சாவை நேர்ல பார்த்ததால் இவன் இப்படி ஆகிருக்கலாம்.. ஆனா இவன் ஏன் வீரமதி கூட சேர்ந்து அவரை கொல்ல நினைக்கணும் தெரியல, அனாதை ஆசரமத்துல இருந்த இவனை எப்படி கண்டுபிடிச்சாங்க… ஏன் அவங்க புருஷனை கொல்லனும் இவங்க ரெண்டு பேரும் நினைச்சாங்க? எல்லாம் மர்மா இருக்கு ஜெஸி ! என் நிவாஸ் கொலை பண்ற அளவுக்கு போவானான்னு என்னால நம்ப முடியல !”அவள் அழுது கொண்டே சொல்ல,
“அவ பாஸ்ட் எதுவும் உன் கிட்ட சொல்லிருக்கான ஷர்மி !”
“இல்ல அண்ணா சொன்னது இல்லை… ஆனா சில நேரங்கள் தனியா போய் உட்கார்ந்து இருப்பான்… நானும் ஏன்னு காரணம் கேட்பேன்… அழுத்தமா இருந்துட்டு சொல்ல மாட்டான்… நானும் எவ்வளவு முறை கேட்டும், பதில் சொன்னதே இல்லை… வீரமதி, இவன் என் புள்ளை சொன்னதால தான் கொஞ்சம் உண்மை எனக்கு விளங்குச்சு… இல்ல எதையும் தெரிஞ்சுக்காம இவனை போலவே நானும் புலம்பிட்டே இருந்திருப்பேன்…”என்று விரக்தியுடன் சொன்னாள்.
“வீரமதி மேம்மை தவிர வேற யாரும் இவனை தேடி வந்தது இல்லையா ஷர்மி?”வாசனை பற்றி தெரிந்து கொள்ள கேட்டாள்.
“ம்ம்… ஒருத்தர் வருவார், அவர் பேர் சீனிவாசன்… இவரோட மாமான்னும் வீரமதி மேம் தம்பி சொல்லிட்டு… அவர் கிட்ட கூட கேட்டேன் அக்காவை மீறி என்னால எதுவும் சொல்ல முடியாது சொல்லிட்டார்”என்றாள்.
அதை எட்வர்டும் ஜெஸியும்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “அப்போ அந்த வாசன், வீரமதி, நிவாஸ் மூணு பேரும் சேர்ந்து அமைச்சரோட என் புருஷனையும் கொலை பண்ணிருக்காங்க…” என ஜெஸி இறுகிய முகத்துடன் சொல்ல, ஷர்மிக்கு சுறுக்கென தைத்தது.
“நிவாஸ் வேணும்னே ஆரோன கொன்றுருக்க மாட்டான் ஜெஸி… உள்ளே ஏதோ சதி நடந்திருக்கும்… நிவாஸ் அப்படி பண்றவன் இல்ல ஜெஸி !”என கணவனுக்காக மன்றாட , அவளது நிலமை பாவமாகிப் போனது. அவளை அணைத்து தேற்றினாள்.
உள்ளே ஏதோ சந்தேகம் கேட்க,வேகமாக நால்வரும் விரைந்தனர். நிவாஸ் தான் தூங்கிக் கொண்டிருந்தவனின் கனவில் ஆரோனின் முகத்தை கண்டதும் படக்கென்று என்று எழுந்து அமர்ந்து மீண்டும் புலம்ப ஆரம்பித்தான்.உள்ளே வந்தது அவனது நிலயை கண்டதும் உருக்குலைந்து போனார்கள் மூவரும்..
ஜெஸி தான் அவன் கையை பற்றி அழ, ஆரம்பித்தாள்… “நான் உன் ஜெஸி வந்திருக்கேன் பாரு நிவாஸ் ! என்னை பாரு டா !”என அழுது கொண்டே கெஞ்ச, அவனும் சொன்னதே சொல்லிக் கொண்டு இருந்தான்.
“நீ ஆரோன் கொன்னு இருக்க மாட்ட, நான் உன்னை நம்புறேன் டா ! ப்ளீஸ் டா பழைய நிவாஸ் பேசுடா !”எனக் கெஞ்ச, அவனோ சொன்னதை தான் சொல்லிக் கொண்டிருந்தான். அவள் எட்வர்டை பார்க்க, அவனை அவள் தோளில் கை வைத்து கண்ணை மூடி திறந்தான்.
அவனை அழைத்துக் கொண்டு தெரிந்த மருத்துவரிடம் செல்ல, இயற்கை முறையில் மருத்துவம் பார்க்க சொல்லி விட்டார். அவர் மூலமாக இயற்கை முறை மருத்துவம் பார்க்கு இடத்திற்கு அழைத்து சென்றனர்.
அவர்களும் குணப்படுத்திடலாம் என்று நம்பிக்கை அளிக்க, இவர்கள் நால்வருக்கும் ஆசுவாசமாக இருந்தது . குழந்தைகளுக்கு நல்ல பள்ளியில் சேர்த்து விட்டு அவர்களுக்கு இதர வசதிகளை நண்பர்கள் மூவரும் செய்து கொடுத்து விட்டு காவலுக்கு ஆளை வைத்து விட்டும் சென்னை வந்து சேர்ந்தனர்.
மறுநாள் ஜெஸி வழக்கமாக வேலைக்கு வர, கண்டிப்பான ஆசிரியர் போல அவள் முன்னே கைகட்டி நின்றவன், கேள்வியாக,
“என்ன பிரேயர் எல்லாம் நல்ல படியா முடிஞ்சதா?”நக்கல் தொனியில் கேட்டு வைத்தான். அவளுக்கு அவனது கோபம். கொஞ்சமும் புரியவில்லை..
“ம்ம்… முடிஞ்சது… எதுக்கு இவ்வளவு கோபம்…?”
“ம்ம்… பொய் சொல்லி லீவு கேட்டவங்களை பார்த்து கட்டி பிடிச்சி முத்தமா கொடுக்க முடியும்?”என்றவனை விழுக்கென நிமிர்ந்து பார்க்க, அவனோ ஒற்றை புருவத்தை உயர்த்தி ‘ எதுக்கு பொய் சொன்ன?’என்பது போல பார்க்க, அவளோ ‘என்ன பதில் சொல்லி இவனை சமாளிக்கலாம்’ என்று யோசனையில் இறங்கினாள்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
3
+1
1
+1

