Loading

நைதுருவன் மருந்துவமனையில் சேர்க்கப்பட்டு இன்றுடன் ஐந்து நாட்களானது. ஐந்து நாட்களும் வெளியே காவலுக்கு ஆட்கள் போடப்பட்டிருந்தன. 

கை , கால் , தலையில் அடிப்பட்டிருக்க, அவ்விடத்தில் கட்டுகள் போடப் பட்டிருந்தன.  மூன்று நாள் மயக்கத்திலே இருந்தான். நான்காம் நாள் மயக்கம்  தெளிந்து கண் விழித்தான். 

அவனைச் சுற்றி அவனது குடும்பம் மொத்தமும் இருந்தது. அவனது சித்தி ராதாவை தவிர அனைவரும் அமைதியாக  நின்றிருந்தனர். அவர் மட்டும் அழுது கொண்டிருந்தார்.

“அம்மா, யார் அவங்க? என்னை ஏன் அட்டாக் பண்ணாங்க? அவங்க யார்னு கண்டு பிடிச்சீங்களா? கில் தெம் மாம். அவனுங்க உயிரோட இருக்கக் கூடாது “என்று வலியுடன் பல்லைக் கடித்தப் படிச் சொன்னான். 

“துருவ், கூல். அம்மா இருக்கேன்ல. அம்மா பார்த்துகிறேன். நீ ரெஸ்ட் எடு !” என்றார் வீரமதி. வெறும் தலையை மட்டும் அசைத்தான். 

தன்னை கண்டு கண்ணீர்  வடிக்கும்  ராதாவைக் கண்டவன், “பச் ராதாமா, நான் நல்லா இருக்கேன், இப்போ ஏன் அழறீங்க? ஐ ஆம் ஓகே ப்ளீஸ் என் முன்னாடி அழாதீங்க” என்றான் கடுப்புடன்.

“ராதா …”என வீரமதியின் வார்த்தைக்கு அவரது அழுகை நின்று கண்ணீரும் உள்ளே சென்றது. 

“இப்போ வலி எப்படி இருக்கு துருவ்?” நைதுருவனின் அண்ணன் ருத்ரன் அருகில் வந்து கேட்டான். “நாட் ஓகே ப்ரோ. ரொம்ப வலிக்குது. தலை அதுக்கு மேலே வலிக்குது. என்னால வலிய பொறுத்துக்க முடியல” என்றான் முகம் சுழித்து. 

“டாக்டர வரச் சொல்லி பெயின் கில்லர்  போட சொல்லவா துருவ்…” என சித்தப்பா விஸ்வேஸ்வர் மறுபக்கம் வந்து கேட்க, “ஏதாவது பண்ணுங்க சித்தப்பா. வலி பொறுக்க முடியல !” என்றதும் அவர் மருத்துவரை அழைத்து வருமாறு காவலாளியை ஏவல் செய்தார். அவன் விழிகள் கலங்கி இருந்தன. அதனை கண்ட நந்தனுக்கு சிரிப்பு வந்தது.

“மா, சித்தப்பா இஸ் கரையிங்”என்றான் அவனது அன்னை நிக்கிதாவிடம்.” ச்சு…” அவனை அடக்க, “உனக்கு அடிபட்டு வலிச்சா அழ மாட்டீயா டா?” 

“என் வயசுக்கு  நான் வலி தாங்க முடியாம அழறேன். உன் வயசுக்கு என்ன மேன்? சின்ன புள்ள போல அழற, ஷேம்மா இருக்கு உன்னை என் சித்தப்பானு சொல்லிக்க… ” என்று தலையில் அடிக்க,  அனைவருக்கும் சிரிப்பு வர வாயை மூடிக் கொண்டனர்.  வீரமதிக்கும் உதட்டின் ஓரம்  புன்னகை பூத்தது. 

“யூ…  என்ன டா ரொம்ப பேசற?  உன் மண்டையை உடைச்சு கைகால்ல உடைச்சு , அதுல கட்டு போட்டு இருந்தா தான் தெரியும் என் வலி என்னானு. வேடிக்கைப் பார்க்கிற உனக்கு எப்படி டா என் வலி தெரியும்? எப்படி வலிக்குது தெரியுமா?”என கேட்டு முகத்தை சுருக்கினான்.

“இதுக்கே இவ்வளவு  சீன் போடுறீயே  ! எட்வர்டு அங்கிள்’லாம் எத்தன முறை ஃபைட் பண்ணிருக்கார் தெரியுமா? அவருக்கு அடிபட்டா உன்னை போல வலிக்குது சொல்லவே மாட்டார். எதிர்த்து ஃபைட் பண்ணுவார். அவர் கிட்ட கத்துக்க, நான் பெரியவனாதும் அவர் கிட்ட ஃபைட் பண்ண கத்துப்பேன்”  என்றான் .

“அண்ணா, அவனை அமைதியா இருக்க சொல்லு . இல்ல தூக்கி தூர போட்டிருவேன். இவன் நமக்கு  வேணாம் நாம வேற குட் பாயா வாங்கிப்போம்…” என்றான்.

அதற்கு வாயை மூடி சிரித்த நந்தன்” உன் கையவே உன்னால் தூக்க முடியல இதுல என்னைய நீ தூக்கிப் போட போறீய காமெடி பண்ணாத சித்தப்பு ” விடாமல் அவனுக்கு கவுண்டர் கொடுக்க, அவனுக்கோ கடுப்பானது.

“மாம்…” என பல்லை கடிக்க, “நிக்கி” என்றதும் அவனை இழுத்துக் கொண்டு வெளியே போய்விட்டாள். டாக்டர் உள்ளே வர, அனைவரும் வெளியே வந்தனர்.

உள்ளே சென்ற மருத்துவரும் அவனுக்கு வலி குறைய ஊசி போட்டு விட்டு வந்தார். மீண்டும் மயக்கத்தில் சென்றான். மறுநாள் மதியம் வீட்டிற்கு அழைத்து செல்லப் பட்டான். 

****

“வாட்!!!  பாடிகார்ட்ஸா எனக்கா?? ஒய் மாம் ஒய்? ஏன் என் ஃபிரீடத்துல கை வைக்கிறீங்க… திஸ் இஸ் நாட் ஃபேர் மாம்” என்றவனுக்கு எங்குச் சென்றாலும்  துணையாகத் துப்பாக்கியுடன்  தூண்கணக்காக உடன் வரும் பாடிகார்ட்ஸை சுத்தமாகப் பிடிக்காது. தன் இறக்கையை நால்வர் பிடித்துக் கொண்டு தன்னுடன் பறப்பது போல  இருக்கும்.

அவன் மருத்துவமனையில் இருந்து வந்த  அடுத்த இரண்டு நாட்களும் வீட்டில் இருந்ததே அதிசயம். இதில் அடுத்து வந்த நாட்கள் அவ்வாறு இருப்பான் என்று எண்ணுவது பெரும் தவறு. அதனால் வீரமதி இன்று ஜெஸியை வர சொல்லிவிட்டு அவனிடம் பேசினார்.

“லிசன் துருவ்,நீ வீட்லே அடைஞ்சு கிடைக்க போறதில்ல. என்னால உன்னை தனியா எங்கயும் அனுப்பவும் முடியாது. பிஸ்னஸ்ல எனக்கு எதிரிகள் ஜாஸ்தி, அரசியல்ல உன் சித்தப்பாக்கு எதிரிகள் ஜாஸ்தி. நேருக்கு நேர் எதிர்த்து நிக்க முடியாதவன் எல்லாம் உன்னை தான் அட்டாக் பண்ண நினைப்பான். உன்னை   யாரும் ஏதாவது செஞ்சிடுவாங்களோனு பயமா இருக்கு.ஸோ உனக்கு பாதுகாப்பா பாடிகார்ட்ஸ் இருக்கிறது  எனக்கு கொஞ்சம்  நிம்மதியா இருக்கும் ” என்றார். 

“பிஸ்ன்ஸ்ல பணம் சம்பாரிக்க சொன்னா, நீங்க என்ன எதிரிகள சம்பாரிக்கிறீங்க? என்னை யாரும் கன்ட்ரோல் பண்ணக் கூடாதுன்னு நினைக்கறவன் நான். பாடிகார்ட்ஸ்  எல்லாம் டார்ச்சர் மாம்” தலையில் கைவைத்து சோபாவில் சாய்ந்தான்.

“துருவ், பாடிகார்ட்ஸ் உன்ன கண்ட்ரோல் பண்ண மாட்டாங்க. நீ எங்க போனாலும் ஜஸ்ட் உன் கூட தான் வருவாங்க… எனக்கு உன் உயிர் ரொம்ப முக்கியம் புரிஞ்சுக்க” என்றார் கடைசி வரியை அழுத்தி.

“சரி யார் எனக்கு பாடிகார்ட்ஸா வர போறாங்க?” என்று விருப்பம் இல்லாமல் கேட்டான்.

“ஜெஸி அண்ட் ஹேர் டீம்மை தான் உனக்கு பாடிகார்ட்ஸா அப்பாய்ண்ட் பண்ணிருக்கேன்”என்றதும்  நீள் விருக்கையில் சாய்ந்திருந்தவன் படக்கென்று எழுந்து, ” வாட் தி ஹெல்   ஒரு லேடியா எனக்கு பாடிகார்ட்? ச்ச.. உங்களுக்கு வேற பாடிகார்ட் டீமே கிடைக்கலையா… ஒரு பொம்பளையா என்னை காப்பாத்த போறா? ” என்றதும் பெண்ணாய் அவருக்கு கோபம்  சுருக்கென்று வர பல்லைகடித்து

“பொம்பலையா, என்ன பேசற துருவ்?? உன் அம்மா ஒரு பொம்பலை தான் மறந்திடாத, பொம்பலைங்கனால எல்லாத்தையும் சாதிக்க முடியும். எப்பையும் அவங்கள குறைச்சி மதிப்பிடாத ” என்றதும்  ” ஸாரி மாம்” என்று மன்னிப்பு கோரினான். 

“ஜெஸி, பிரில்லின்ட் உமன்.  நூறு ஆம்பளைக்கு சமம் வீரத்துல. தி பெஸ்ட் டீம்மை  தான் உனக்கு அரேஞ்சு பண்ணிருக்கேன். எனக்கு ஜெஸி மேல முழு நம்பிக்கை இருக்கு உன்னை பத்திரமா பார்த்துப்பா !” என்று அவளை புகழ, இதழை வளைத்து அதனை அசட்டைச் செய்தவனுக்கு சராசரி ஆணாய் அவனுக்குள்  பொறாமையும் புகைச்சலும் எழுந்தன.

வீரமதியின் காரியதர்சி வந்து  ஜெஸி வந்திருப்பதாகக் கூற ” வர சொல்லு” என்றார். அவளை அவன் பார்க்கும் முன்பே பிடிக்காமல் போக, அவளைத் தவிர்க்க செல்லில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான். 

“மே ஐ கமின் மேம்” என்று கேட்டு  வெளிய நின்றவளை உள்ளே அழைத்தார் அவர். உள்ள வந்தவள் அவருக்கு சலியுட் அடித்து “குட் மார்னிங் மேம்”என்று கைகள் இரண்டையும் பின்னே கட்டிக் கொண்டு விறைப்பாக நின்றாள்.

“குட் மார்னிங்” என்றவர் தனக்கு எதிரே இருந்தவனைக் காட்டி, ” இவன் தான் என்னோட இரண்டாவது பையன்  நைதுருவன். இவனுக்கு தான்  நீ பாடிகார்டா இருக்கணும்” என்றார்.

“கண்டிப்பா மேம். எங்க வொர்க்ல நாங்க சின்சியரா இருப்போம். டோன்ட் வொர்ரி வி வில் டேக்கேர் ஹிம். எங்க உயிரை கொடுத்தாவது உங்க சன்ன பாதுகாப்போம்”என்றாள் நிமிர்வுடன். ஆனால் அவளே அவனை கொல்ல போகிறாள் என்று அறியாமல்.

அதற்கு அவன் கேலியாக நகைக்க அவனை அடக்கியவர் “ஓகே, டேக் கேர் ஹிம். வர்றேன் துருவ்” என்று அவர் சென்றுவிட” பை மாம்” என்றவன் செல்லில் கண்ணை பதித்திருந்தவாறே அவளை பார்க்காமல் ” வெல் நீ தான் எனக்கு பாடிகார்டா என் கூட வர போற ரைட்” என்றான்.

“எஸ் ஸார்” என்றாள்.

“என்னை யாராவது அட்டாக் பண்ண வந்தால் என்ன பண்ணுவ?” 

“கன் எடுத்து, முட்டிக்கு கீழ ஒரே சூட் ஸார். அப்றம் அவனை அரஸ்ட் பண்ணி போலீஸ் கிட்ட ஹாண்ட் ஓவர் பண்ணுவேன்” என்றாள்.

“ச்ச…. அவளோ த்ரில்லா இல்லயே !அவனை கொல்லாம, அரேஸ்ட் பண்ணி ஜெயில்ல  போடுவீயா ? லுக் என்னை அட்டாக் பண்றவன் உயிரோடவே இருக்க கூடாது ஸ்பார்ட் அவுட் பண்ணிடனும் புரியுதா?” என்றான், “எஸ் ஸார்” என்றாள் வேண்டா வெறுப்பாக,

“ஸார்… உங்க டெய்லி ஸ்கெடுல்ஸ் சொன்னீங்கன்னா எங்க டீம் உங்களுக்கு அதுக்கு ஏத்தது  போல பாதுகாப்பு கொடுக்க ரெடியா இருப்பாங்க”

காலையில் ஜாக்கிங்கில் ஆரம்பித்து இரவில் கொட்டமாடிக்கும் பப் வரைக்கும் சொன்னவன் கடைசியாக “லாஸ்ட்டா என்னுடைய ஸ்கெடுல்ல , உன்னை சைட் அடிக்கிறதையும் சேர்த்துக்க” என்றான். செல்லில் தட்டிக் கொண்டிருந்தவள், சட்டென விரல்களை  நிறுத்தி அவனை பார்த்தாள்.  

செல்லின் திரையிலிருநந்து கண்ணை விலக்கியவன் அவளைப் பார்க்க, தன்னை அவன் பார்க்க வில்லை என்றெண்ணியவளுக்கு தெரியவில்லை அவள் உள்ளே வந்ததுமே கண்டு கொண்டவன் அவளிடமிருந்து அகல மறுத்த கண்களை கஷ்டப்பட்டு அலைபேசியின் பக்கம் திருப்பினான் என்று.

“வாட் தி ஹெல்” என்றவளை மயக்கும் வசீகரச் சிரிப்போடு அவள் அருகில் நெருங்கி வந்தவன், 

“இப்படி ஒரு அழகான லேடி பாடிகார்ட் பக்கத்துல  வச்சிட்டு சைட் அடிக்காம இருக்க நான் என்ன குருடனா?” எனக் கேட்டவனை கொல்லும் அளவுக்கு உள்ளுக்குள் கோபம் வந்தது .

அவளை கீழிலிருந்து மேல் வரை பார்த்தவன், “இந்தக் கஸ்டியும் ஓகே தான். பட் அப்படியே மார்ட்னா டிசைனர் சாரில வந்து நின்னேன்னு வையேன். ஐ காண்ட் கண்ட்ரோல்  மை செல்ப் பேபி”என்று அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டே போக, 

சட்டென அவளுக்கு அவளது கணவனின் வார்த்தைகளே  வந்து அவளை ஆக்கிரமித்திருந்தன.

தன் வலிய கரத்தால் அவளை வளைத்து நெஞ்சோடு சேர்த்து இருக்கியவன்,  அவள் கன்னக் குழியில்  உதடுகளை அழுத்தி முத்துங்களால் நிரப்பி நெற்றி முட்டி,

“எப்பப்பாரு விறப்பா  இருக்காதடி, சேலையக் கட்டி தலை நிறைய பூ வச்சி தழுக்கி குலுக்கி வந்து மாமன மயக்கற வேலைய பார்க்கறத விட்டுடு வேற என்ன வேலை கிடக்கிது உனக்கு” என செல்லமாக கடிந்து அவளை அள்ளி கொஞ்சிய நாட்கள் மனதை ரணமாக தாக்க,  கண்களை மூடித்திறந்தவள். துருவனின் எல்லை மீறிய பேச்சுகளை சகிக்க முடியாமல் “ஸ்டாபிட்  “எனக் கத்தினாள்.

அவளது கத்தலில் அதிர்ந்தவன் “வாட் பேபி” என்றான் அவனது ‘ பேபி’ என்ற அழைப்பு அவளுக்கு  தீயாக எரிய, பட்டென அவனது பொட்டில்  தன் துப்பாக்கியை வைத்து, “இன்னொரு வாட்டி பேபின்ன நானே உன்னை கொன்னு போட்டு போயிட்டே இருப்பேன்”என்றவளை மிரட்சியுடன் பார்த்தான் அவன்

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்