Loading

புதிதாக ஆரம்பிக்க போகும் கன்ஸ்டிரக்ஷன் கம்பெனியை மேப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் துருவன்…

அவனும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஆரம்பிக்க போகும் கம்பெனி அது. தன்னுடைய கனவுகளையும் லட்சியங்களையும்  சுமக்க போகும் கட்டிடத்தை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

உள்ளே சுவரில் பொறியியலை பற்றியும் பொறியாளர்களுக்கான சில தத்துவங்களும் சுவரில் செதுக்கப் பட்டிருந்தன. 

சுவரிலிருந்து மேசையில் வைக்க போகும் சிறு பேனா வரைக்கும் பார்த்து பார்த்து  அதில் கொஞ்சம் வித்தியாசத்தை சேர்த்து நண்பர்களுடன் கலந்து அனைத்தையும் செய்தான்.

வேலைக்கு சில ஆட்களை நியமிக்க, விளம்பரம் கொடுத்திருந்தான்…  அனுபவம் இல்லாத, ஃப்ரெஷ்ஷர்ஸ்’களை எடுக்க முடிவு செய்தான்… தேவையான கல்வி தகுதியோடு இருக்கும் புதிதாக வேலைக்கு செல்ல இருப்பவர்கள் வந்து அணுகவும், சில விளம்பரங்கள்  கொடுத்திருந்தான். 

அவன் எண்ணியது போல சிலர் அவனை அணுகி இருந்தனர். இதில் ஆண் , பெண்  என இரு பாலரும் இருந்தனர்.

தேவையான வேலையில்  அனுபவமுள்ள ஆட்களும்  தேவை என்றும் விளம்பரம் கொடுத்திருந்தான்.

கம்பெனியை நடத்த உரிமும் வாங்கி விட்டான். சில ஆடர்களையும் கையில் வைத்திருந்தான்.

கம்பெனியில் சில வேலைகள் நடந்துக் கொண்டிருப்பதால் இன்னும்  திறக்காமல் இருக்கிறது.

இதற்கிடையே அவனுடன் அவனது நண்பர்கள் நால்வரும் கூடி வேலை செய்யப் போகும் கம்பெனியை ஆசை தீரப் பார்த்து கொண்டிருந்தனர்.

“டேய் கனவு போல இருக்குல !”வித்யாவின் கண்கள் பளபளக்க, கம்பெனியை பார்த்துக் கொண்டே சொன்னான்.

அவன் அப்படி சொன்னதும் அவன் அருகே இருந்த துருவனோ அவன் இடுப்பை கிள்ள, துள்ளி விலகி அவனை ஒரு மாதிரி பார்த்து வைத்தான் வித்யாசாகர்.

“இது கம்பெனி தான். கனவு இல்லனு சொல்லக் கிள்ளினேன் மச்சான் !”என மீசையை தடவி சிரித்தவாறு சொன்னான்.

அவனோ அவன் கிள்ளிய அதிர்ச்சியிலிருந்து மீளாமல் தன்னை கண்டு சிரிக்கும் நண்பர்களை பார்த்து விட்டு, “டேய் இவன் சரி இல்லடா ! அதுவும் ஃபாரின் இருந்து வந்ததுல இருந்து இவன் சரியே இல்லடா ! என்னமோ பண்றான்…  அவன் பண்றதுக்கு என்ன நமக்கு தான் எதிர்விணை எல்லாம் காட்டுது ! இனிமே நீ எதுனாலும்  சொல்லிட்டு பண்ணுடா , கொஞ்சம் பிரிபேரா இருக்கோம்… இல்ல நெஞ்சு படக்குனு நின்னும்  போயிடும் டா பார்த்துக்க “என்று  எச்சரிக்க, 

“சரி சரி டா ! இனி அதிர்ச்சி தர எந்த விஷயத்தையும் செய்ய மாட்டேன்.  அப்படியே எதுவும் செய்ய இருந்தாலும் சொல்லிட்டே செய்றேன் என்ன?!” என அவன் தோளில் கையை போட்டு நக்கலடிக்க, அவனை கலவரத்தோடு பார்த்தான் வித்யாசாகர்.

“ஒகே மச்சி வேலை பாட்டுக்கு ஒரு பக்கம் போகட்டும் நாம எங்கயாவது டூர் போலாமா?!” துருவன் தான் தொடங்கினான்.

“டூரா ஆஆஆ !” என ஆஜித் ஆசையுடன் வாயை பிளக்க, அவன் வாயை அடைத்து விட்டு”இவன் இன்னும் திருந்தலடா ! டூர் சொன்னதும் வாய பிளக்குது பார் பக்கி !”என்றான் சிரித்துக் கொண்டு மற்றவர்களும் அசடு வழிந்த அவனை பார்த்து சிரித்தனர்.

அதில் ரிஷி தான் துருவனிடம்” எங்க மச்சி? “என்றான். “கோவா டா !”என்றான் மற்றவர்களை பார்த்து விட்டு. 

“வாவ் !!! கோவா வா ! மச்சி நான் போனதே இல்லடா !! போலாம் டா !”ஆஜித்  துருவனை  கெஞ்ச,

“மச்சி அங்க தான்டா போறோம். ஒரு பைவ் டேஸ் போயிட்டு வரலாம்  என்ன  சொல்றீங்க ?!”என்று மற்றவர்களையும் பார்த்து கேட்டான்.

அவர்களோ தயங்கி, “மச்சி, இருந்த எல்லாம் பணமும் கம்பெனி சேர்  உன் கிட்ட கொடுத்திட்டோம். இப்போ டூர் போக பணம் இல்லையடா !!”என்று தன்னிலையை ரிஷி சொல்ல, மற்றவர்களும் அதே நிலையில் இருக்க, நால்வரையும் தீயாக முறைத்தான் நைதுருவன் .

“நமக்குள்ள பணத்தை வச்சி நான் என்னைக்காவது வேறு பாடு பார்த்திருக்கேனா? இல்ல என் கிட்ட பணம் இருக்குனு. உங்க கிட்ட பிலிம் எதுவும் காட்டுறேனா? என்னால எதுவும் நீங்க ஹர்ட் ஆகிருக்கீங்களா  சொல்லுங்கடா?!”என அவன் சம்பந்தமில்லாமல் கேட்க, நண்பர்கள் நால்வரும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்து விட்டு அவனை பார்த்தனர்.

“என்னடா சம்பந்தம் இல்லாம பேசற நீ?”வித்யா அவனை நெருங்க கோபமாக விலகி நின்றான்.

“இல்ல உங்க கிட்ட நான் ஏதோ பகட்டா நடந்துக்கறது போல உங்களுக்கு  தோணுதா டா ! அதனால தான இவன் இப்படி பேசிட்டு இருக்கானா?” என விழி ஓரமாய் துளிர்த்த நீரை துடைத்துக் கொண்டான்.

“துருவா ! நீ எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும், எங்க கிட்ட ஒரு நாளும் அப்படி நடந்துக் கிட்டது இல்லடா ! இந்த இடத்துலே வேற ஒருத்தன் இருந்திருந்தானா , சத்தியமா எங்களை மதிக்கவே மாட்டான். ஆனா நீ காசு , பணத்தை தாண்டி எங்களை மதிக்கற மனுசன் டா உன்னை போய் அப்படி நாங்க நினைப்போமா டா !” ரிஷி அவன் தோளை தொட தட்டிவிட்டவன்

” அப்ப ஏன் டா காசு இல்லனு சொன்ன? உன்ட காசு கேட்டேனா?  டூர் போலாமா தான கேட்டேன். காசு எவ்வளவு இருக்குனா கேட்டேன்…? பணம் , காசை பார்த்தா நான் நண்பனா இருக்கேன் உங்க கிட்ட? பெருசா பேசற,  காசு இல்லன்னு முன்ன வந்து நின்னு தயங்கற! அவ்வளவு தான் நம்ம பிரண்ட்ஷிப் பா?!!” என கேட்டு சுருக்கென்று கோபம் கொண்டான்.

“துருவா ! நீ எங்களுக்கு செய்றது அதிகம் டா ! பிஸ்னஸ்ல காவாசி பங்கு தான் நாங்க போட்டிருக்கோம் முக்காவாசி நீ தான் எல்லாம்… இதுல டூருக்கும் நீயே செலவு பண்ணா, உன்னை உறிஞ்சு நாங்க வாழற பீல் வருதுடா !” என்றான்.

“சரிடா !!! இப்போ நீ உன் நிலமைய சொல்லிட்ட, இதுவே நாளைக்கு நீ கை  நிறைய  சம்பாதிச்சி, வாங்க டா நான்  செலவு பண்றேன்  எங்க முன்னாடி வந்து சொல்லும் போது, நாங்க இதே போல தயங்குனா உனக்கு எப்படி டா இருக்கும்? நீங்களாம் இதே நிலமையில இருக்க போறீங்களா? உங்க நிலமையும் மாறும் தான, அப்ப எனக்கு செலவு செய்ங்க டா, நான் உங்களை  போல தயங்கி நம்ம நட்ப கொச்சை படுத்த மாட்டான். இந்த பணத்தையும் தாண்டி எனக்கு நட்பு மட்டும் தான் முக்கியம்… இதுக்கு மேலே உங்க இஷ்டம்”என்று நகர இருந்தவனை நால்வரும் அணைத்துக் கொண்டனர்.

“சாரி மச்சி !இனி அப்படி நினைக்க மாட்டோம் டா ! எங்களுக்கும் உன் பணத்தை விட நட்பு தான்டா முக்கியம். நாம  டூர் போகலாம்”என்று அவனை அணைத்த படியே சொன்னார்கள். அவனும் அவர்களை அணைத்துக் கொண்டான் கண்ணீருடன்

****

மாலையில் வீட்டில் அனைவரும்  கூடியிருக்க, அவர்களுடன் வந்து அமர்ந்து கொண்டான் துருவன். 

“துருவா ! கம்பெனி வர்க் எல்லாம் எப்படி போகுது?”ருத்ரன் கேட்க, ” ம்ம்… நல்லா போகுது அண்ணா ! இன்னும் கொஞ்ச நாள்ல முடிஞ்சடும்… அடுத்து ஒரு நல்ல டேட்ல அம்மா தான் திறந்து வைக்க போறாங்க…”என்றான்.

“அப்ப ஒரு நல்ல நாள் பாருங்க ராதா மா ! அம்மாக்கு அந்த டேட் அவைலபிளா இருக்கா பார்ப்போம் !”என்றான் ருத்ரன்.

“ருத்ரா ! நம்ம குடும்பம் தான் முதல்ல அடுத்து  தான் எனக்கு மத்தது… நீங்க எந்த தேதியில் திறந்தாலும் அந்த தேதியில் என்ன இம்பார்டன்ட் வர்க் இருந்தாலும் நோ பிராபலம் எனக்கு துருவனோட ஃபங்ஷன் தான் முக்கியம்”என்றார் பாசமாக, 

“தேங்க்ஸ் மாம்… அப்படியே நம்ம ராதாமா கிட்டையும் கேளு அண்ணா, அவங்களும் அவைலபிளான்னு?”என துருவன் அவரை வம்பிழுக்க, 

அவர் முதுகில் அடியை போட்டவர் “நான் வீட்ல சும்மா தானே இருக்கேன் எனக்கு என்னடா ! நான் டேட் கொடுக்கணுமா?”என்றார் சிரித்துக் கொண்டு.

“பின்ன அம்மா விட பிசியா  இருக்கறது நீங்க தான். வேலைக்காரங்க இத்தனை பேர் இருந்து எங்க ஒவ்வொருத்தருக்கும் பார்த்து பார்த்து சமைக்கறது  நீங்க தான ராதா மா ! நம்ம குடும்பத்திலே அதிக வேலை பார்க்கறது நீங்க தான். நம்ம குடும்பத்தையே கவனிச்சிக்கறதும் நீங்க தான் சோ..  உங்க டைம் ல கொஞ்சம் எனக்காக ஒதுக்கி கம்பெனி திறப்பு விழாவிற்கு சீஃப் கெஸ்ட் வந்து கம்பெனி திறந்து வைக்கணும்”என்று அருகே இருந்த ஃபிளவர் வாசிலிருந்து ஒற்றை பூ வை எடுத்து வந்து அவரிடம் நீட்டி யாசிக்க, அவருக்கோ கண்களில் கண்ணீர் குளம் கட்ட, அதை துடைத்து விட்டு “நான் எதுக்கு டா ! அதான் அக்கா இருக்காங்கல அவங்க திறப்பாங்க “என்றார்.

“ம்கூம்…  என்னை வளர்த்ததுல உங்களுக்கும் பங்கு உண்டு அதை யாராலும் மறுக்க முடியாது ராதாமா. எனக்காக நீங்களும் முன்ன வரணும்… நீங்களும் அம்மாவும் சேர்ந்து இந்தக் கம்பெனிய திறக்கணும்”என்று அவர் கையை ஏந்திக் கெஞ்ச , அவர் தலையை கோதி நெற்றியில் முத்தம் வைத்தார்.

“நானே சொல்லணும் இருந்தேன், அவனே முந்திக் கொண்டான். பெத்தது மட்டும் தான், வளர்த்தது எல்லாம் நீ தான் ராதா , அவன் நல்லது கெட்டதுல உனக்கும் பங்கு இருக்கு, நீயும் நானும் சேர்ந்தே திறந்து வைக்கலாம் .. அவனுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கும் “என்றார் வீரமதி. அதற்கு பின் ராதாவிடம் மறுப்பு ஏது ஒத்துக் கொண்டார் ..

“அப்புறம்மா !  இன்னும் கம்பெனி வர்க் முடிய நாளாகும் அதுக்குள்ள நானும் என் பிரண்ட்ஸ் டூர் போலாம் பிளான் பண்ணியிருக்கோம் மா. பைவ் டேஸ் தான் போயிட்டு வரட்டுமா?”என்று கொஞ்சம் தயங்க,

“எங்க?”என்றார்.

“கோவா மா !”

“ம்ம்… சரி பார்த்து போயிட்டு வா ! எந்த பிரச்சனையும் வர்றாம பார்த்துக்க…”என்றார் கண்டிப்புடன். 

“தேங்க்ஸ் மா ! நான் கேர்ஃபுல்  இருப்பேன் மா “என்றான்.

“ஜெஸி கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடு ! அவ பாடிகார்ட்ஸ் அரெஞ்சு பண்ணி உன் கூட அனுப்பி வைப்பா !”என்றார்.

“வாட் ? அங்கயுமா?”

“எஸ்!  இன்னும் உன்னை அடிச்சவன் யாருன்னு கண்டு பிடிக்கல உனக்கு பாதுக்காப்பு  அவசியம் துருவா ! டூர்க்கு அவங்கள்ள ரெண்டு பேரையாவது கூட்டிட்டு போய் தான் ஆகனும் இது என்னுடைய ஆடர்…”என்று சன்னமாக சொல்ல, தலையை  தொங்கப் போட்டான். 

வீரமதி , ஜெஸியை அழைத்து வர சொல்ல, அவளும்  அவர்கள் முன் வந்து வணங்கி நின்றாள்.

“ஜெஸி, இவன் கோவா டூர் பிளான் பண்ணிருக்கான், அவன் கூட போக, நீ தான் பாடிகார்ட் செலக்ட் பண்ணி அனுப்பி வைக்கணும்… நீங்க செலக்ட் பண்றவங்க, இவனை  கேர் ஃபுல் பார்த்துக்கணும் மா ! ” என வீரமதி  அவளிடம் சொல்ல, 

“எஸ் மேம்… ரவி, அசோக், ஶ்ரீ  மூணு பேரையும் அனுப்பி வைக்கிறேன்.  அவங்க பார்த்துப்பாங்க மேம்… ட்ரஸ்ட் மீ ” என அவள் சொன்னதும், தொங்க போட்டிருந்த தலையை நிமிர்த்தி”வாட்,  அவங்களை என் கூட அனுப்பி வச்சிட்டு நீங்க  என்ன இங்க பண்ண போறீங்க? உங்க கிட்ட தான் என் அம்மா என்னை பார்த்துக்க சொன்னாங்க… நீங்க என்ன பொறுப்பை வேற யார்கிட்டையோ கொடுக்கறீங்க முடியாது நீங்களும் வரணும்… இல்லேனா எனக்கு பாடிகார்ட்ஸ் வேணாம் நான் தனியா போயிக்கிறேன்” என்று அடம்பிடிக்காத குறையாக சொன்னான்.

அவளோ, ” சாரி மேம், என்னால டூருக்கெல்லாம் போக முடியாது ! என் பாய்ஸ் உங்க பையன பத்திரமா பார்த்துப்பாங்க… அதுக்கு நான் கிரேண்டி தரேன் “என்று சன்னமாக  நின்றவள் சொல்ல,

“ஏதே பிரீத்திக்கு நான் கிரேண்டி போல சொல்றீங்க… இது என் உயிர் சம்பந்த பட்ட விஷயம், போச்சுன்னா உடனே உங்களால் அதை திருப்பி தர முடியுமா? இல்ல காம்பன்சியேட் தான் பண்ண முடியுமா? சோ எனக்கு பாதுக்காப்பு அவசியம்… நீங்களும் வந்து தான் ஆகணும்…”என்றான்.

“மூணு பேர் பத்தாத உனக்கு அவளும் வரணுமா? அவளுக்கும் பேமிலி இருக்கு துருவா !”

“அப்போ மாம்…  அந்த மூணு பேருக்கும் பேமிலி இல்லையா?  இவங்களுக்கு பேமிலி இருக்குன்னா எதுக்கு இந்த வர்க் மாம்…? இந்த வேலை வேணாம் எழுதி கொடுத்துட்டு போக சொல்லுங்க… வேலை பார்க்க முடியாது சொல்றவங்களுக்கு எல்லாம் எதுக்கு வீராப்பு … எழுதி கொடுத்துட்டு  ஸ்கூல் பொண்ணுகோ பையனுக்கோ பாடிகார்ட் வேலை பார்க்க சொல்லுங்க அவங்களுக்கு எல்லாம் அதான் சரியா இருக்கும்…”என நக்கலாக பேசி அவளது கோபத்தை மேலும் ஏற்றி விட வேறு வழியில்லாமல் ,

“மேம், ஹீ இஸ் கரெட், பேமிலி முக்கியம் தான். பட் வர்க்ன்னு வந்தா பேமிலிய சொல்லி தட்டி கழிப்பது தப்பு தான்.  நானும் சார் கூட பாதுகாப்புக்காக போறேன் ” என ஒத்துக் கொண்டாள் ஜெஸி. துருவனோ விஷமமாய் சிரித்து கொண்டான்..

இரவில் வீட்டிற்கு  செல்ல  ஆயத்தமாக இருந்தவளை வழி மறித்த துருவனோ, “ஹலோ மேடம், கோவாக்கு போறோம் கேர்ள்ஸ் இல்லாம போனா எப்படி? பை தி வே, நீங்க எனக்கு பாடிகார்ட் தான், அதுக்காக ஃபோர்மலா வரணும் அவசியம் இல்ல இன்ஃபோர்மலா கூட வரலாம்… நிறைய பீச் இருக்கு பிக்னி ட்ரெஸ் கூட ஓகே தான்… கொஞ்சம் கண்ணு குளிர்ச்சியா இருக்கும்…”என அவன் சொன்னதும் அவள் பட்டென அவனை எரிப்பது போல பார்க்க, நான் பிளேஸ சொன்னேன்.. பீ ரெடி டூ என்ஜாய் வித் மீ பேபி !”

என்று கூலர்ஸை இறக்கி கண்ணடித்து விட்டு செல்ல, அவனை எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் கிளம்பி சென்றாள்.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்