
காதலொன்று கண்டேன்!
தேடல் 32
தங்கியிருந்த விடுதிக்கு மீளவும் வந்ததாயிற்று.யாருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.
அதுவும்,யாழவள் எந்த முரண்டும் பிடித்திடாமல் அமைதியாய் கிளம்பி வந்தது,வேறு யோசனையைக் கிளப்பிட,டாக்டருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
“எனக்கும் அந்த பையன் ஏமாத்தற மாதிரி தோணல சித்து..கொஞ்சம் விசாரிச்சு பாரு..” என்று அகல்யாவும் அவன் பக்கம் பேச,சத்தியமாய் எந்த முடிவுக்கும் வர முடியாமல் தடுமாறினான்,டாக்டர்.
மனம் நிலை கொள்ளாமல் தவிக்க,கொஞ்சமாவது அழுத்தம் நீங்கட்டும் என்று குளிக்கச் சென்றிருந்தான்,அவன்.
குளித்து விட்டு வெளியே வருகையில்,அலறல் சத்தம் கேட்க,அங்கு மயங்கி விழுந்து இருந்தாள்,யாழவள்.
அகல்யாவும் மித்ரஸ்ரீயும் அவளுக்கு தண்ணீர்த் தெளித்து எழுப்ப முயன்ற போதிலும்,அவள் விழிகளை திறவாது இருக்க,டாக்டருக்கு அவளின் நிலமை புரிந்தது.
“யாழ்..யாழ் எந்திரிடி..” என தோழியவள் கன்னத்தில் தட்டிய போதிலும்,அவளுக்கு விழிப்புத் தட்டாது இருக்க,பரிசோதித்து டாக்டருக்கு மருத்துவமனை கொண்டு செல்வதே உசிதம் எனத் தோன்றிற்று.
“அகல் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாம்..” என்று அவளை மருத்துவமனை அழைத்துச் சென்று அனுமதிக்க,தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தனர்,அனைவரும்.
“ரொம்ப ஸ்ட்ரெஸ்..ஒழுங்க சாப்டும் இருக்க மாட்டா போல..அதான் மயங்கி விழுந்து இருக்கா..ஹாஸ்பிடல் கூட்டிட்டு வர்ரது பெட்டர்ங்குறதால தான் கூட்டிட்டு வந்தேன்..பயப்பட்றதுக்கு ஒன்னுல்ல..”
பதறியவர்களுக்கு பதில் மொழிந்த ஆறுதல் படுத்தியவனுக்கு,இவளுக்கு ஏன் இந்த நிலமை என்றே தோன்றிற்று.
வாசுவோ,அகல்யாவின் மகனைத் தோளில் போட்டு தட்டிக் கொடுத்தவாறு இருக்க,அப்போது தான் கவனித்தான்,அவனின் அலைபேசியும் பர்ஸும் அகப்படாததை.
தங்கியிருந்த அறையில் விட்டு வந்தது,நினைவில் எழ குழந்ததையும் தூக்கிக் கொண்டே கிளம்பியிருந்தான்,எடுத்து வர.
“நா இவனயும் கூட்டிட்டு போய் எடுத்துட்டு வர்ரேன்..இவன் என் கிட்டவே இருக்கட்டும்..நீ ஏதாச்சும் அவசரம்னா ஸ்ரீயோட ஃபோன்கு கால் பண்ணு..நா அத எடுத்துட்டு போறேன்..” என்று கூறிக் கொண்டு கிளம்ப,சரியென்று தலயைசைத்து இருந்தான்,டாக்டர்.
அவன் போகும் போது அந்த வாண்டு விழித்து கேள்வி கேட்க,அதை சமாளித்தவாறு மீண்டும், தவற விட்ட தன் பொருளை எடுக்கையில் வெளியில் இருந்து ஒரு குரல் கேட்டது.
“யாரு..? யாரு வேணும்..?”
“இந்த ரூம்ல முன்ன இருந்தவங்க எங்க..?” விழிகள் ஆராய முன்னிருந்தவன் வினவிட,வாசுவுக்கு இருந்த எரிச்சல் கோபமே மேலிட்டது.
“நாங்க தான் இருந்தோம்..நாங்க தான் இப்போ காலி பண்ணிட்டு கெளம்பப் போறோம்..என்ன விஷயம்..?”
“இங்க சித்தார்த்ங்குறது..”என்று அவன் இழுக்க,”நாந்தான் என்ன விஷயம்..?” கடுகடுத்தான்,அவன்.
“நா தான்..ஆரி துருவோட ஃப்ரெண்ட்..” என்க,அடக்கப்பட்ட சினம் வாசுவின் விழிகளில்.
“யாரு அந்த கேடு கெட்டவனோட ஃப்ரெண்டா..? அவன் ஃப்ரெண்ட் எதுக்கு இங்க வந்துருக்க..? அவள அழ வச்சது போதாதா..?இன்னும் அழ வக்கனுமா..?” அவன் சீற,கஷ்டப்பட்டு தன் கோபத்தை அடக்கினான்,சத்யா.
“சும்மா சும்மா வாய விடாதீங்க மிஸ்டர்..” அவன் எகிற,இங்கு வாசுவுக்கு உச்சகட்ட கடுப்பு.
“செய்றத எல்லாம் செஞ்சிட்டு பேசற பேச்சப் பாரு..பைத்தியக்காரனுங்க..” இதழ்கள் கடுகடுத்தவனோ,அவனை கடந்து செல்ல முனைய,வழி மறித்தான்,பையனின் தோழன்.
“என்ன விஷயம் மிஸ்டர்..? எதுக்காக இப்போ சும்மா என்ன வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கீங்க..?”
“கொஞ்சம் பேசனும் சித்தார்த் உங்க கூட..” என்றவனோ,நம்பி விட்டிருந்தான் வாசுவின் பொய்யை.
“ஒரு மண்ணும் தேவல..” அவனின் பேச்சை கேட்க விருப்பமின்றி,வேக நடையுடன் வெளியேற,அவனைதி துரத்திப் போனாலும்,அது தோல்வியின் முடிவடைய தளர்ந்து போயிருந்தான்,தோழன்.
இங்கோ,
அகல்யாவுக்கும் மித்ராவுக்கும் ஏதேனும் வாங்கி வருவதாய் கூறி,சிற்றுண்டிச்சாலைக்குள் நுழைகையில் எதிர்ப்பட்டான்,டாக்டரின் தோழன்.
அவன் பணிபுரியும் மருத்துவமனை என்று தெரிந்ததால் தான்,யாழவளை இங்கு கூட்டி வந்தது.அவனோ,சத்திரசிகிச்சையொன்றில் இருக்க,சிறிது நேரத்தில் வருவதாக கூறியிருந்தான்.
“என்ன சித்து..அட்மிட் பண்ணிட்டியா..? நார்மலாவா இருக்காங்க..?” ஸ்டெத்தை கழற்றியவாறு வினவ,பெருமூச்சுடன் தலையசைத்தான்,டாக்டர்.
“ம்ம்…ஸ்ட்ரெஸ்ல மயங்கி விழுந்து இருக்கா..அவ சரியா சாப்டவும் இல்ல..ரெண்டு மூனு நாளா..இப்போ ட்ரீட்மண்ட் பொய்ட்டு இருக்க..கண் விழிச்சுருவா சீக்ரம்..சரி எதுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்க..?ட்யூட்டி டைம் முடிஞ்சது தான மதி..?”
“ஒரு பேஷண்ட் மீட் பண்ண வர்ரேன்னு சொல்லி இருக்காரு..அதுக்கு தான்..” என்று அவன் கூறி முடிக்கும் முன்னமே,கையில் கோப்புகளுடன் பையன் வந்திட,அவனின் பார்வை டாக்டரை அனலுடன் தொட்டது.
“கும் மார்னிங் டாக்டர்..”
“வாங்க ஆர்யா..குட் மார்னிங்..” என்றவனோ,டாக்டரிடம் தலையசைப்புடன் விடைபெற குழம்பிப் போய் நின்றான்,அவன்.
இருபது நிமிடங்கள்.மொத்தமாய் இருபது நிமிடங்கள் கடந்திட,கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவாறு அமர்ந்து இருந்தான்,மதியழகனின் பிரத்தியேக அறைக்கு முன்னர்.
பையனோ,வழமை போல் தலை சரித்து கழுத்தை வருடியவாறு அவனை கடந்து செல்ல,அவன் கிளம்பியதும் அனுமதி கேளாமாலே உள்ளே வந்தான்,சித்தார்த்.
“மதி இது யாரு..? இந்தாளுக்கு என்ன ப்ராப்ளம்..?”
“யாரு இந்தாளா..? ஆர்யாவ ஏன்டா அப்டி சொல்ற..?அவரும் உன்ன பாத்து மொறச்சிகிட்டே இருக்காரு..ஏதாச்சும் ப்ராப்ளமா..?”
“ப்ச்ச்..அதெல்லாம் இல்ல..இவருக்கு என்ன ப்ராப்ளம்..? எதுக்கு ட்ரீட்மண்ட்கு வர்ராரு..?” அவசரப் படுத்தினான்,அவன்.
“ப்ராப்ளம் எல்லாம் இல்ல..ரீசன்டா ஆக்சிடன்ட் ஆச்சு..நல்ல அடி தலைல..கொஞ்ச வருஷத்துக்குள்ள நடந்தது எதுவும் ஞாபகம் இல்ல..அதான் அடிக்கடி வந்து செக் அப் பண்ணிட்டு போவாரு..அதான்..”என்க,அவன் விழிகள் தெறித்து விரிந்தன.
“நெஜமானா சொல்ற..?”
“நா எதுக்குடா உன் கிட்ட பொய் சொல்லப் போறேன்..அதான் அடிக்கடி வந்து செக் அப் பண்ணிட்டு போவாரு..”
“அவருக்கு சொந்தபந்தம்னு யாரும் இல்லியா..?”
“டேய் இருக்காங்கடா..அவரு அப்பா இருக்காரு..அவங்க வேற ஊர்ல இருக்காங்க..முன்ன இந்த ஊர்ல இருந்தாங்க..ஆக்சிடன்ட் ஆனதுக்கு அப்றம் தான் வேற ஊருக்கு போனாங்க..என் கிட்டவே ட்ரீட்மண்ட் எடுத்ததால அப்பப்போ இங்க வந்து தங்கி செக் அப் பண்ணிட்டு போவாரு..”
“எப்போ அவருக்கு ஆக்சிடன்ட் ஆச்சு..?”
“இப்போ ஒரு டூ இயர்ஸ் இருக்கும்..நீ ஏன்டா இதெல்லாம் கேக்கற..?”
“அவருக்கு பழசு ஞாபகம் வந்துரும் தான..” மருத்துவன் என்பதை மறந்து அவனிடம் கேட்டு,சிரிப்பு வந்து மதிக்கு.அவன் பதில் சொல்லாமல் மழுப்பியதையும் கவனித்தான்.
“நீயும் டாக்டர் தானடா…?”
“நீ தான இந்த ஃபீல்ட்ல ஸ்பெஷலிஸ்டு..சொல்லு மதி..ரிப்போர்ட்ஸ் எல்லாம் பாத்தா என்னன்னு தோணுது..?”
“ஞாபகம் வரவும் சான்ஸ் இருக்கு..வராம இருக்கும் வாய்ப்பு இருக்கு..நீ ஏன் டா இதெல்லாம் கேக்கற..?” துருவியவனுக்கு பதில் சொல்லாமல் வெளியே வந்திருந்தான்,டாக்டர்.
யாழவள் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு முன்னே செல்ல,அவள் இன்னும் கண் விழித்திருக்கவில்லை.ஆழ்ந்து உறங்கியவாறு இருக்க,டாக்டரோ மித்ராவின் அருகில் வந்து,”ஸ்ரீ” என்றான்.
“சொல்லுங்கண்ணா..”
“உனக்கு அந்த ஆர்யாவ முன்னவே தெரியுமா..?இல்ல இப்போ தானா..?”
“முன்னவே தெர்யும்..நாங்க படிச்ச காலேஜ்ல தான் படிச்சாரு..எங்க சீனியர் அவரு..”
“ம்ம்..”
“தென்றல் அப்போ இருந்து லவ் பண்றாளா இல்ல..? அவங்க வீட்ல பேசுனதுல இருந்தா..? இவ்ளோ தூரம் போய் இருக்காதே அப்டின்னா..?”
“அவளுக்கு அவரு மேல ரொம்ப மரியாத இருந்துச்சு காலேஜ் டைம்லயே..அப்போலாம் அது மட்டுந்தான்..ஆனா அவரு வந்து அவங்க வீட்ல கேக்கவும் பட்டுன்னு சரின்னு சொல்லிட்டா..அப்றம் தான் அவளுக்கு லவ் வந்து இருக்கும்னு நெனக்கிறேன்..”
“அப்போ வீட்ல சரின்னு சொன்னதுக்கு அப்றம் ரெண்டு பேரும் பழக தொடங்குனாங்களா..?”
“இல்ல..இல்ல..அவரு வந்து இவ வீட்ல பேசி சம்மதம் கேட்டாரு..அவளும் ஒத்து கிட்டா..அதுக்கப்றம் அவரோட அப்பாவுக்கு ட்ரீட்மண்ட்னு ஃபாரின் போனாங்க ஒரு வருஷத்துல வர்ரதா சொல்லிட்டு போனாரு..”
“இது எப்போ நடந்தது..?”
“அது அவ சம்மதம் சொல்லி ஒரு வாரத்துல..அந்த டைம் அவரோட அப்பா சீரியஸ் ஆகி ஹாஸ்பிடல்ல இருந்தாரு..இவளும் இவ அப்பாவும் பாக்க போனப்போ சொல்லியிருக்காரு..”
“அதுக்கப்றம்..?”
“அதுக்கப்றம் அவர் கிட்ட மெஸெஜ் கால்ஸ் எதுவும் வந்தததில்ல..இவளுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி பேசறதுல பெருசா விருப்பம் இல்லன்னு அவருக்கு தெர்யும்..அவர் கிட்டவும் அத சொல்லி இருக்கா..அதான் அவர் பேசாம இருக்காருன்னு இவ நெனச்சிட்டு இருந்துருக்கா..”
“அப்றம்..?”
“திடீர்னு அவருக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு அவங்கப்பாக்கு கால் பண்ணி அவரோட அப்பா சொல்லியிருக்காருன்னு தெரிய வந்துச்சு..ஆனா இவ தான் நம்பல..அவரு வரட்டும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தா..?”
“அப்போ பாக்க பேசாம ஒரு லவ்..?ஒரே ஒரு தடவ மீட் பண்ணியும் இருக்காங்க..ஐ மீன் காலேஜ் டைமுக்கு அப்றமும் நம்பற மாதிரியா இருக்கு இது..?” நம்பவேயில்லை,டாக்டர்.
“அப்டி இருக்கலாம்னா..” என்றவளுக்கு பையனின் மௌனமான காதலே நினைவில் வந்தது.
“காலேஜ்கு அப்றம் அப்டி தான்..ஒன்னு ரெண்டு தடவ அவர நாங்க பாத்து இருக்கோம்..சும்மா ஹாய் ஹலோ சொல்லிட்டு போய் இருக்கோம்..ஆனா அவ மீட் பண்ணது அன்னிக்கி கல்யாண விஷயம் பேசப் போய் தான்..”
“அந்த ஒரு மீட்ல இவளுக்கு லவ் வந்து..பாத்துக்காம பேசிக்காம அவனயே நெனச்சிட்டு இருந்தான்னு என்னால நம்ப முடில..இப்டி தெய்வீகக் காதல் எல்லாம் இருக்கா இந்த காலத்துல..பட் நம்புறேன்..” கொஞ்சம் கேலி வழிந்தது,அவன் குரலில்.
மித்ராவுக்கும் மறுத்துப் பேச வழியில்லை.அமைதியாகி விட்டாள்,ஆரி அவனின் காதல் அதிகராத்தை கண் கூடாகக் கண்டதால் உண்டான பக்குவம் போலும்.
“இப்போ என்னன்னா அவனுக்கு பழசு எல்லாம் மறந்து போச்சாம்..ஆக்சிடன்ட் ஆயிருக்கு..அவனுக்கு இவள ஞாபகம் இல்ல..” அவன் உரைத்திட,இவளின் விழிகளில் வலி தெரிந்தது.
“அதான் அப்டி பிஹேவ் பண்ணி இருக்கான்..”
“ஆமா ஆமா யாழ லவ் பண்ண முன்னாடி அவருக்கு பொண்ணுங்கன்னா பிடிக்காது..” என்றவளின் கூற்றில் சத்தியமாய் சிரிப்பு அவனுக்கு.
“அப்டி ஆக்சிடன்ட் ஆச்சுங்குறதலால தான் அவரு அப்பா ஃபோன் பண்ணி கல்யாணம் வேணாம்னு சொல்லி இருக்கலாமோ..”அவள் யோசித்த கோணமும் தவறாய்த் தோன்றவில்லை,அவனுக்கு.
“என்னன்னு சரியா தெரியல..பட் இப்போ போய் அவன் கிட்ட எல்லாத்தயும் எடுத்து சொல்லனும்..பழசு ஞாபகப்படுத்த ட்ரை பண்ணனும்..பட் அப்டி இல்லன்னா..?”
“அப்டி இல்லன்னா என்ன பண்றது..?”
“திரும்ப ரெண்டு பேருக்குள்ள லவ் வர வக்க வேண்டியது தான்..தெய்வீகக் காதல்ங்குற..ஞாபகம் இல்லாட்டியும் மனசுல ஃபீலிங்க்ஸ் இருக்கும்ல..கொஞ்சமாச்சும் ஏதும் தோணாதா..?” அவன் நக்கல் காட்ட,அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
“இவங்க லவ் உண்மயா இருந்தா அவன் பழச மறந்து இருந்தாலும் அது ப்ராப்ளம் ஆகாது..பாப்போம் என்ன நடக்குதுன்னு..” என்றவனோ,பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.
கும்மிருட்டில் புள்ளியொளியாய் ஒரு மார்க்கம் கிடைத்த திருப்தி.
இதற்குள் மித்ராவுக்கு வாசுவிடம் இருந்து அழைப்பு வர,மருத்துவமனையில் வாயிலுக்கு சென்றவளின் கையில் அகல்யாவின் மகனை கொடுத்து இருந்தான்,அவன்.
“பார்கவ்வும் இங்க வந்து இருக்கான்னு சொன்னேன்ல..அவன் ஆக்சிடன்ட் ஆயிட்டானாம்..பக்கத்து ஹாஸ்பிடல்ல தான் அவன அட்மிட் பண்ணியிருக்காங்க..நா அங்க போறேன்..” என்று அவன் கிளம்ப,டாக்டரிடமும் அதை தெரிவித்து இருந்தான்.
ஒற்றை ஆணாய் அனைத்தையும் கைளாய வேண்டிய நிலையில் அவன் இருந்தாலும்,பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.
சில மணி நேரங்கள் கழித்து,
மயக்கத்தில் இருந்து விழித்து எழுந்தவளோ,கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருக்க,அவளைக் கலக்கத்துடன் பார்த்தவாறு,பழச்சாறு தயாரித்துக் கொண்டிருந்தாள்,அகல்யா.
மித்ராவோ,அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து இருக்க,அகல்யாவின் மகன் துருவனோ,அவளின் பாதத்தின் அருகே அமர்ந்து அவளையே,விழிகளை உருட்டி திரட்டிப் பார்த்திருந்தான்.
அசாத்திய மௌனம் அவ்விடத்தில்.யாருக்கும் கலைத்திடவும் தோன்றாதிருக்க,சத்தம் கொடுத்தவாறு கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான்,சித்தார்த்.
அவனுக்கு யாழவளிடம் பேச வேண்டிய தேவை இருந்தது.அவன் வந்து கண்ணைக் காட்ட,குழந்தையை தூக்கிக் கொண்டு மற்றைய இருவரும் வெளியேற,அவளுக்கு அதில் சிறு அசௌகரியம்.ஆயினும்,அதைக் காட்டிக் கொள்ளவில்லை.
“உன் கிட்ட கொஞ்சம் பேசனும் தென்றல்..”
“சொல்லுங்கத்தான்..”
“மிஸ்டர்.துருவேந்திரனுக்கு ஏதோ ஆக்சிடன்ட் பழசு மறந்து போச்சாம்..” அவன் மெதுவாய் உரைத்திட,அவள் விழிகளில் கலக்கம் தோன்றி உடல் மொழியில் பதற்றம் தொற்றியது.
“இப்..இப்போ ஒன்னுல்ல தான..?” அவ்வளவு தவிப்பு அவள் குரலில்.அவனைக் கண்டிருந்தாலும்,அந்த செய்தியைக் கேட்கையில் அவளுக்குள் பயம் வியாபித்ததை மறுக்க இயலாது.
அவனை தற்சமயமே பார்த்து நலமறிய வேண்டும் என்கின்ற ஏக்கம் மனதை நிறைக்க,அதன் நிச்சயமின்மையில் மனதை கனம் அடைத்தது.
என்ன பைத்தியக்காரத் தனமான தவிப்பென்றே தோன்றிற்று,டாக்டருக்கு.நேற்று அவனைக் கண்டு விட்ட வந்த பின்பும் அவள் பதறித் தவிப்பது விசித்திரமாகவே இருந்தது,அவனுக்கு.
“நத்திங் டு வாரி..” என்றான்,மருத்துவனாய்.
“நெஜமா தான..?” அவள் நம்பவில்லை.மீளவும் அவனைப் பார்த்து,அவனை அலசி தன் விழிகளுக்குள் நிரப்பினாளே ஒழிய,அவள் முழுதாய் நம்பப் போவதில்லை என்று டாக்டருக்கு தெரிய வாய்ப்புமில்லை.
“நா எதுக்கு தென்றல் பொய் சொல்லப் போறேன்..டோட்டலி ஹீ ஈஸ் ஃபைன்..இப்போ பதறாம இரு..நா சொல்றத கொஞ்சம் கேளு..”என்றாலும்,அவள் முகம் முற்றாய் தெளியவில்லை.
“நாளக்கி போய் அவர மீட் பண்ணி எல்லாத்தயும் சொல்றோம்..”
“பழச ஞாபகப்படுத்துறதால அவருக்கு ஏதாச்சும் ப்ராப்ளம் வருமா அத்தான்..?”அவள் கேட்டதில் சத்தியமாய் பொய்யே இல்லை.அவன் மீதான காதலே,விழிகளில் மிதமிஞ்சி தெரிந்தது.
அவளின் வார்த்தைகளும் விழிமொழியும் டாக்டருக்கு சிறு புன்னகையைத் தர,அவன் மனம் கனிந்தது.
“ரொம்ப யோசிச்சு ஸ்ட்ரெய்ன் பண்ணிக்க கூடாதுன்னு சொல்லுவாங்க..பட் நார்மலா பேசறதுல இஷ்யூ இல்ல..என்ன இருந்தாலும் நாம சொல்றத நம்ப மாட்டாரா கொஞ்சமாச்சும்..அப்டியே அத கல்யாணம் வர கொண்டு வந்தா சரி..”அவன் சாவகாசமாய் சொல்ல,இவள் மனம் அடித்துக் கொண்டது.
மறுநாள்,பையனை சந்திக்க அதே இடத்துக்குச் செல்ல,அவன் அவ்விடத்தில் இல்லை.
வாசுவும் இல்லாதிருக்க,டாக்டருக்கு திண்டாட்டமானது.வீட்டினரிடம் எதையும் கூற முடியாது.
ஏதோ ஒரு வழி பிடிபடும் என உணர்ந்தவனோ,யாழவளிடம் விடயத்தை உரைக்காமல் அவன் இருப்பை உறுதி செய்ய வந்தது,வசதியாகிற்று.
என்ன செய்வதென்கின்ற யோசனையுடன் வண்டியோட்டியவனோ,ஒரு திருப்பத்தில் வளைத்து நிறுத்த,அங்கு எதிர்ப்பட்டான் பையன்.அவளருகில் ஒருத்தி இருந்தாள்,நிறைமாதமாய் வயிற்றை தள்ளிக் கொண்டு.
காதல் தேடும்.
2025.04.28
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஹையோ இதென்ன ட்விஸ்ட் மேல ட்விஸ்ட். இதல்லாம் நான் சத்தியமா எதிர்பார்க்கல. இதான் உண்மையா. இல்ல ஆர்யா கூட சேர்ந்து அந்த டாக்டரும் போய் சொல்றாரா.
Sprr eagerly waiting for next episode 😊