Loading

வேலு அன்று இரவு தங்களது ரூமுக்கு வந்த பிறகு, “என்னடி தேவ் போற போக்கு சரி இல்லனு அப்பா வேற என்ன உட்கார வச்சு புலம்பிட்டு இருக்காரு “என்றான் கவலையாக,

 

“என்னன்னு சொன்னாரு ?”என்றாள் கேள்வியாக,

 

இரவு அவர்களது ரூமில்  நடந்து கொண்டிருந்த சம்பாசனைகள் இவை அனைத்தும்..

 

தன் காதல் மனைவியை குறுகுறுவென பார்த்தவன். “எப்போ டி அவன்  சொல்லுவான். அம்மா எப்ப எப்பனு நின்னுட்டு இருக்காங்க, அவனுக்கும் வயசு ஆகிட்டே போகுதா இல்லையா? அவனும் பேசாம ,நீயும் அவனா சொல்லுவான்னு அமைதியா இருங்கன்னு சொல்லிட்டு இருக்க?”

 

“அப்படி சொல்லுங்க .அதை விட்டுட்டு அவன் கேரக்டர் சரி இல்ல போல,அவன் ஏதோ தப்பு பண்ற போல சொல்றீங்க?”என்று அவனை முறைத்தாள் அவனின் பைங்கிளி.

 

” அவன் தப்பு பண்றானு நாங்க யாரும் சொல்லல டி”என்று அவளது விரல்களுக்கு நெட்டி முறித்தான்.

 

“எனக்கு தெரிஞ்ச வரை. மேபி அவன் இன்னும் அந்த பொண்ணு கிட்டயே சொல்லல நினைக்கிறேன்”

 

” அப்போ அவன் லவ் பண்றான் தானே !”என்றவுடன் ..தனது கணவனை முறைத்தவள்.

” பாருங்க இப்ப நீங்க கேட்டீங்க நான் பதில் பேசிட்டு இருக்கேன். குறுக்க குறுக்க நீங்க கேள்வி கேட்டா? எனக்கு மட்டும் என்னனு பதில் தெரியும். எனக்கு மட்டும் அவன் தனியா சொல்லவா செஞ்சான் .என்ன பொறுத்த அளவு அப்படித்தான் அப்படின்னு தான் நினைக்கிறேன்.. ன்..ன் என்று ராகம் இழுத்தாள்…பின்பு 100% கன்பார்ம்” என்றாள் கண்கள் மின்ன ..

 

அவனும் அவள் கண்களைப் பார்க்க… ” இன்னைக்கு அவ கூட தான் என்ன பேசிட்டு வரான். உங்க பையன் சொன்னதை பாத்தா மேக்சிமம் சீக்கிரம் அந்த பொண்ணு கிட்ட சொல்றதுக்கான வாய்ப்பு இருக்கு. “…

 

”  என்னடி சொல்ற?”

 

  அவளும், மாலையில் நடந்ததை குகன் கூறிய வரை அனைத்தையும் சொல்ல.

 

” அப்ப துபக்கடின்னு கேடி விழுந்தும் மீசையில மண்ணு ஒட்டாத மாதிரி நடிக்கிறான்”என்றான் புன்னகையுடன்..

 

” அப்படியே வச்சுக்கலாம் “என்று அவளும் சிரிக்க..

 

அவளிடம் நெருங்கி வந்த வேலு அவள் கன்னத்தை இரு கைகளிலும் தாங்கி நிற்க. 

 

“என்ன வேலு?”என்றாள் ஒருவித குழைவான குரலில் புருவத்தை உயர்த்தி,

 

“நீ வேலுன்னு கூப்பிடுறதே அதிசயம் தாண்டி “என்று அவள் கன்னத்தில் இதழ் பதித்தவன், கண்களையே உற்று பார்க்க ,

 

அவளும் கண் சிமிட்டி சிரிக்க ,நெற்றியில் ஆழ்ந்த முத்தமிட்டு, மெல்ல.. கண் ,மூக்கு என்று இறங்கி அவள் இதழ் தேனை பருகி விட்டு, அவளிடம் இருந்து விலகி நின்று சிரித்தான்.

 

அவளும் புன்னகைக்க,அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டவன் 

.”சீக்கிரம் சொன்னா பரவால்ல டி. அப்பாவும் கூட அவன்  கல்யாணம் தள்ளிப் போயிட்டே இருக்குன்னு பீல் பண்றாருடி .அவன் வயசு பசங்க எல்லாருக்கும் கல்யாணம் ஆகி குழந்தையே ஒரு சிலருக்கு இருக்கு டி”..

 

” புரியுது  வேலு.ஆன, அவன்தான் தனக்கானவளை பார்க்காம கல்யாணம் பண்ண மாட்டேனு சொல்லிட்டு இருக்கானே !”

 

“அதான் இப்ப பாத்துட்டானே டி “

 

அவளோ,இடுப்பில் கை ஊன்றி முறைக்க.

 

“அவனா சொல்லணும்.இவளை தான் லவ் பண்றேன்னு சொன்னாவாச்சி நம்ம மேற்கொண்டு பேசலாம்.ஆன அவன் எதுவுமே சொல்லாமா?..”

 

“அவன் எப்போ அந்த பொண்ணு கிட்ட சொல்லி, அதுக்கப்புறம் நம்ம கிட்ட சொல்லி “என்றவன்… அந்த பொண்ணு கிட்ட சொல்றதுக்கு முன்னாடி உன் கிட்ட சொல்லிடுவான் .அப்படி இல்லனாலும் ,அந்த பொண்ணு கிட்ட சொல்லிட்டு வந்த அன்னைக்கே உன்கிட்ட வந்து சொல்லிடுவாண்டி”..

 

” இருக்கட்டும். வேலு அவனா சொல்ற வரை அமைதியா இருப்போம்” என்று அவனது மீசையை முறுக்கி விட..

 

அவனும், அவள் மடியில் படுத்துக்கொண்டான் ..

 

“ஆனாலும் ,உன் மகன் இதெல்லாம் நோட் பண்ணிட்டு வந்து உன்கிட்ட போட்டு கொடுத்துடுறான் பாத்தியா?” என்று சிரித்தான் .

 

“எல்லாம் உங்கள மாதிரி தான் இருப்பான். உங்க பையன் வேற எப்படி இருப்பான்”.

 

“என்ன மாதிரியா? அவன் கூட தான் பொழுதனைக்கும் சுத்துறான்..”

 

“அவன் என்ன தான் தேவ் கூடவே இருந்தாலும், உங்களோட ஆக்டிவிட்டி தான் அவனிடம் நிறைய இருக்கு..இத தேவ் கூட  பல முறை சொல்லி இருக்கான்” என்று மென் புன்னகையை உதிர்த்தாள்.

 

” இப்ப கூட உன் பெரிய மகன பத்தின் தான் பேசுற… மேடமுக்கு..நான் கண்ணுக்கு தெரியுறதே இல்ல..வர வர என்ன எல்லாம் கண்டுக்கறது கூட இல்லை ” என்று முகத்தை திருப்ப…

 

அவனை தன் புறம் திரும்பியவள்..”வேலு உங்கள நான் கண்டுகல” என்றாள் கண் சிமிட்டி, தலை சாய்த்து சிரித்தபடி,

 

புடவை மறைவில் இருக்கும் அவள் இடையில் முகத்தை வைத்து உரச,

 

கூச்சத்தில், நெளிந்து கொண்டே அவனது தலையை கோதி கொண்டிருந்த கையில் அழுத்தம் கொடுத்து இன்னும் இறுக்கி பிடித்தாள்…அவனும் அவளது கழுத்தை வளைத்து தன்னை நோக்கி இழுத்தான்.. அதன் பிறகு, அங்கே அவர்களுக்கான நேரம் ஆகியது..

 

நாட்கள் அழகாக உருண்டோடியது..

 

ஒருநாள் மாலை வேளையில் ஸ்கூல் முடிந்து மாணவர்களுடனே வெளியில் வந்த மித்ரா அங்கு நின்று கொண்டிருந்த தேவ்,குகன் இருவரையும் பார்க்காமல் வேகமாக நடந்தாள் .

 

“என்ன தேவ் மிஸ் நம்மள பாக்காத மாதிரி போறாங்க” என்றான் பொடியன்.. கவலையாக..

 

“டேய் பாக்காத மாதிரி போகல,உங்க மிஸ் நம்பல உண்மையாவே பாக்கல போல.. பார்த்திருந்தால் ஒரு வார்த்தையாவது மரியாதைக்கு நின்னு பேசி இருப்பாங்க இல்ல”என்றான் புன்னகையுடன்

 

வேகமாக போறளை பார்த்து “ஹலோ மிஸ் !”என்றான் சத்தமாக..

 

அவள் காதில் விழவில்லை…ஆகையால் வேகமாக செல்ல..

 

“ஹலோ! மித்ரா மிஸ்” என்று கைத்தட்டி அழைத்தான்.

 

தன்னுடைய பெயர் என்றவுடன் ஒரு நிமிடம் நின்று திரும்பியவள்..

 

அங்கு, குகன் ,தேவ் இருவரும் இருப்பதை பார்த்துவிட்டு, ஒற்றை கண் முடி ,நாக்கை கடித்துக் கொண்டு ,”சாரி தேவ் கவனிக்கல”என்று கண்ணை சுருக்கி அவர்கள் அருகில் வர..

 

” கவனிக்கலையா?”என்றான் ஒரு  மார்க்கமாக புருவத்தை உயர்த்தி,

 

“உண்மையாவே அவசரமா  போனதில் உங்களை பார்க்கல தேவ்” என்றாள் அசடு வழிய,

 

“சாரி எங்கேயோ கிளம்பிட்டீங்க தான் போல ! நான் தான் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?”என்றான் சங்கடமாக, 

 

” கொஞ்சம் வெளியே போறேன்”என்று சிரித்தாள்.

 

” சரி சரி நீங்க போங்க”..

 

” அந்த அளவுக்கு இம்பார்ட்டன்ட் கிடையாது. தங்கச்சி வெளியே போலாம்னு சொல்லி இருந்தா, சோ அதுக்காக வேற ஒன்னும் கிடையாது “என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது  பிரியாவிடம் இருந்து போன் வந்திருக்க.

 

” கூப்பிட்டுட்டா குட்டி சாத்தான்” என்று சொல்லிக் கொண்டே “சொல்லு ரியா!”.

 

“எங்கடி இருக்க. நீ என்கூட வெளிய வரதே ஆடிக்கு ஒருநாள் அமாவாசை  ஒரு நாள் ..அதுக்கு இவ்வளவு பில்டப் தர பாத்தியா? கேட்டா என் உத்தியோகம் தான் எனக்கு முக்கியம்னு பசங்களுக்கு கிளாஸ் எடுக்குற போல எனக்கு எடுக்க ஆரம்பிச்சிடுவ,உனக்கு என்ன தெரியும் டீச்சிங் பத்தி அப்படின்னு ஒரு பில்டப் வேற கொடுக்க வேண்டியது,இதுல ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு ரைட் அப் வேற கொடுப்ப, நீ நம்ம அப்பா இளவரசனையே மிஞ்சிடுவ டி அம்மா ஆத்தா மகமாயி மித்ரா சீக்கிரம் வந்து சேரு, உனக்கு அனுப்புன லொகேஷனுக்கு ,நான் வந்து பத்து நிமிஷம் ஆகுது, வெட்டியா உட்கார்ந்துட்டு இருக்கேன். ரெண்டு மூணு டைம் வந்து பேரர் வேற என்ன வேணும்னு கேட்டுட்டு போயிட்டாங்க, ஏதாவது வாங்கி திங்கலாம்னா என்கிட்ட காசு கூட இல்லடி, நீ வராம போயிட்டேனா இங்க மாவட்ட விட்ற போறாங்க, சீக்கிரம் வந்து தொலை “என்று  பட பட பட்டாசாக வெடிக்க, 

 

  இந்த பக்கம் சிரித்த,மித்ரா “நடிக்காத டி. உன்கிட்ட காசு இல்லனு,நீ காலைல அப்பா பாக்கெட்ல இருந்து பணத்தை ஆட்டைய போட்டதை நானே என் கண்ணால பார்த்தேன் என்கிட்டயே உன் கேடித்தனத்தை காட்டாதே வை வந்து தொலையுறேன் “என்று சிரித்த முகமாகவே ஃபோன் கட் பண்ணி விட்டு “உஃப். இவளை வச்சுக்கிட்டு”என்று வாயால் காற்றை ஊதியவாறு  வேகமாக மூச்சி இழுத்து விட்டாள் ..

 

அக்கா ,தங்கையின் சம்பாஷனைகளை  கேட்டுக் கொண்டிருந்த குகன்,தேவின் புறம் திரும்பியவள் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த இருவரையும் சங்கடமாக பார்த்தாள் ..

 

“நீ போ ராங்கி நான் சும்மாதான் கூப்பிட்டேன்”.

 

“உண்மையா ஏதும் விஷயம் இல்லையா?”என்று ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டாள்.

 

“இல்லை” என்பது போல் அவன் தோலை குலுக்கி ‘ நீங்க போகலாம்!’ என்பது போல் கை காண்பிக்க..

 

சில்லரையே சிதற விட்டது போல் சிரித்தவள்.. “ஓகே பாய்” என்று குகன் கன்னம் கிள்ளி கொஞ்சி விட்டு , இருவருக்கும் ஒரு தலையசைப்பை கொடுத்துவிட்டு வேக எட்டுடன் நடந்தாள்.

 

அவள் கிளம்பியுடன், குகன்,” தேவ் மிஸ் அவங்க தங்கச்சி கிட்ட பேசுனத கேட்டியா?”

 

” டேய் ஒட்டி கேக்குறியா?”

 

” நான் எங்க ஒட்டு கேட்டேன். அவங்க பேசுனது தான் நமக்கு கேட்டுச்சே! இல்ல இல்ல, என்று முத்துப்பற்கள் தெரிய சிரித்தவன், ஊருக்கே மைக் செட் வச்சு பேசினாங்க அவங்க ” என்றவுடன் தேவும் சிரித்து விட்டான்..

 

உண்மை தானே !அப்படித்தான் இருந்தது ரியாவின் பேச்சு. 

 

அருகில் தான் நின்று கொண்டிருப்பதால் ,வெளியில் கேட்க செய்தது..

 

“பாரு டா..இந்த ராங்கிக்கு படபட பட்டாசாக பொரிந்து  தள்ளுற தங்கச்சி.. இவளுக்கு மேல தான் போல இவ தங்கச்சி”என்று அதரங்களில் புன்னகை தவழ தேவ் கூற, 

 

  “ஏன்? எங்க மிஸ்ஸுக்கு என்ன?” என்றான் வேகமாக..

 

“ஆனாலும் ,நீ அவளுக்கு ஓவரா சப்போர்ட் பண்ற டி மகனே!” என்று அவன் தலையை கலைத்து விட்டு, வீட்டிற்கு கிளம்பினார்கள். 

 

வீட்டிற்கு செல்லும் வழியில் சிறிது தூரம் சென்ற பிறகு, ஒரு பேக்கரியை கடக்கும் போது ,”தேவ்” என்று அவன் கையையை சுரண்டினான் குகன். 

 

“என்னடா “

 

” ப்ளீஸ்”..என்றான் கெஞ்சலாக..

 

  “டேய் மரியாதையா வா நம்ப இங்க போனோம்னு தெரிஞ்சுச்சு ஹிட்லர் பெரம்பெடுத்து பின்னிடுவாரு! ஏற்கனவே உன் மேலையும், என் மேலையும் கொலை காண்டுல தான் இருக்காரு…

 

“ப்ளீஸ் தேவ்! உன்னால அவரை சமாளிக்கவா முடியாது?”

 

அவனை நக்கலாக பார்த்து சிரித்தவன்,”பயம் விட்டு போச்சு உங்க தாத்தா மேல”..

 

“என் தேவ் இருக்க  எனக்கு ஏன் பயம்?” என்று கையை நெஞ்சின் குறுக்கே கட்டி தலை சாய்த்து அவன் கூற,

 

“பாவி பயலே !, நல்லா ஐஸ் வைக்கிற டா. இப்பவே சொல்றேன் ஐஸ் கிரீம் நோ. ஏற்கனவே லைட்டா அண்ணியும் ஃபீல் பண்ணிட்டு இருக்காங்க, உனக்கு லைட்டா கோல்ட் இருக்கு,அது மட்டும் இல்லாம எனக்கும் தலை வலிக்குது”என்றான் கரராக

 

“மம்மி ப்ராமிஸ்! தேவ்”என்றான் தொண்டையை பிடித்துக் கொண்டு ..

 

“ஓவர் பர்ஃபார்மன்ஸ் பண்ணாத,நடிக்காத வாடி”என்று பைக்கை ஓரம் கட்டி நிறுத்தியவன். அவனை உள்ளே அழைத்துக் கொண்டு செல்ல,

 

இருவரும் ஒரு இடத்தில் சென்று உட்கார்ந்து விட்டு  அங்கு வேலை செய்பவரை அழைத்து தங்களுக்கு  பிரெஞ்ச் ஃப்ரை ,சிக்கன் ரோல் என்று சொல்லிவிட்டு உட்கார்ந்து இருக்க.

 

“தேவ். உனக்கு எதுவும் சொல்லிக்கலையா ?”என்றான் சாவகாசமாக சேரில் சாய்ந்து கொண்டு,

 

“ஓ சாருக்கு தான் இரண்டு ஐட்டமும் நினப்போ”என்றான் அவனும் அவன் தலையில் கொட்டி,

 

உதட்டை பிதுக்கியவன் முகத்தை திருப்பிக் கொள்ள,

 

” நீ தின்னுடா எனக்கு எதுனா வேணும்னா நான் வாங்கிக்கிறேன். தலை வலிக்குதுன்னு தானே சொன்னேன்”அவன் வேண்டாம் என்று சொல்ல சொல்ல அவனுக்கும் சிறிது கொடுத்து தானும் உண்டான் குகன்.

 

அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்பது போல் இருந்தது.’ என்ன சொல்லி ஏமாற்றி வாங்கி சாப்பிடலாம் ‘என்று யோசனையில் ஆழ்ந்திருந்தான் .

 

அப்பொழுது அருகில் சிரிப்பு சத்தம் சத்தமாகவே கேட்க திரும்பிப் பார்த்தான் குகன்.

 

அவனது செயலை தான் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான் தேவ்.அவனைப் பற்றி தெரியாதா ?ஏதாவது காரணத்தை சொல்லி ஐஸ்கிரீம் வாங்கி தர சொல்லி என் மூளையை கழுவி விடுவான் என்பதால் அவன் மீது பார்வை பதித்திருக்க..

 

“தேவ்”என்று அவன் ஒருபுறம் கை நீட்டி “அங்க பாரேன்” என்றான்.

 

‘ஏதோ கேட்கிறான் ‘என்று எண்ணி ,இவனும் எரிச்சலாக, “என்னடா இருக்கு அங்க “

என்றான்..

 

” மித்ரா மிஸ் தேவ்”என்றான் குதூகலமாக, 

 

“அந்த ராங்கி எப்படிடா இங்க வருவா ?அவ தான். அவ தங்கச்சி கூப்பிட்டானு நம்மள கூட பாக்காம தானே வேகமாக போனா”

 

  “இல்ல தேவ மிஸ் தான்” என்றான்.

 

“ப்ச்! உனக்கு எந்த பக்கம் திரும்புனாலும் உங்க மிஸ் மாதிரி தாண்டி தெரியும் “என்று அவன் விரல்களில்  நெட்டி முறிக்க,

 

“அங்க உக்காந்து இருக்காங்க பாரு! அவங்கதான் .கூட இருக்கிறது,அவங்க தங்கச்சி போல, அவங்க தான் சத்தம் போட்டு சிரிக்கிறாங்க! நீ சொன்ன மாதிரி பேசுறது மட்டும் பட்டாசு இல்ல …சிரிக்கிறது கூட ஊருக்கே கேட்கிற மாதிரி சிரிக்கிறாங்க பாரேன்”

 

“டேய்!”என்று அவன் தலையில் கொட்டி விட்டு ,அவன் காட்டிய திசை பக்கம் திரும்பினான்.அங்கு பிரியாவும் மித்ரவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க,

 

“தேவ் நம்ம அங்க போகலாமா?”என்றான் கேள்வியாக.

 

“இது என்னடா பழக்கம். அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்காங்க ,அவங்க பிரைவேசிகுள்ள போலாமான்னு கேக்குற?”

 

“நமக்கு தெரிஞ்சவங்க தானே”

 

” உங்க மிஸ் மட்டும் தான் நமக்கு தெரியும் சரியா? அவங்க தங்கச்சியை நமக்கு தெரியாது.இன்னொரு விஷயம் அங்க போய் நம்ம நின்னா உங்க மிஸ் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரியாது? இந்த மாதிரி பழக்கம் வச்சுக்க கூடாது “என்றான் கண்டிப்பாக .

 

தேவ் எல்லா விஷயத்திலும் கண்டிப்பா என்றால்,அப்படி இல்லை தான்.ஆனால், தவறு செய்தாலோ இல்லை ஏடா குடமாக ஏதாவது பேச செய்தால் அப்போது தேவியிடம் இருந்து ஒரு சிறிய கண்டிப்பும் கண்கள் அதிராது கைகள் மிரட்டாது கண்களாலே ஒரு சிறு அசைவை கொடுப்பான் அதுவே அவனது கண்டிப்பாக இருக்கும். 

 

  ‘தான் ஏதோ தவறாக கேட்டு விட்டோம் போல ‘என்று எண்ணி குகனும் அமைதியானன்.

 

” சரி சரி ஓகே சாரி வேண்டாம்”என்று தொண்டையில் கை வைத்து  தன் மன்னிப்பை கேட்க..

 

“சரி வா நேரம் ஆகுது வீட்டுக்கு போகலாம்” என்றான் தேவ்.

 

” ப்ளீஸ் தேவ்!” என்க .

 

“அடி பின்னி எடுத்து விடுவேன். என்னை அந்த ஹிட்லர் கிட்ட கோர்த்து விடாமல் விட மாட்ட போல”

 

“உங்க அண்ணிக்கு மட்டும் காலிஃப்ளவர் சில்லி சொல்லி இருக்க”

 

அவன் காதை பிடித்து திருகியவன்.”அது எங்க அண்ணி அதனால சொல்லி இருக்கேன்”

 

“அப்ப மட்டும்  அவங்க புருஷன் திட்ட மாட்டாரா?”என்றான்.

 

“யாரை எப்படி சமாளிக்கணும் எனக்கு தெரியும். நீ ஓவரா பில்டப் கொடுக்காதடி வா ,நீ எப்படி பேசினாலும் உனக்கு ஐஸ்கிரீம் கிடையாது.ஏற்கனவே லைட்டா உனக்கு கோல்டு இருக்கு, எனக்கும் தலை வலி இருக்கு,இருந்தும் உன்ன உள்ள கூட்டிட்டு வர்றதுக்கு முன்னாடியே என்ன சொல்லி கூட்டிட்டு வந்தேன். மத்ததெல்லாம் நீ கேட்டது வாங்கி கொடுத்தேன் இல்ல. வா பிஸ்கட் ,இல்ல வேற ஏதாச்சும் வேணும்னா பாரு, கேக் கூட வாங்கி தரேன்.நோ ஐஸ் கேக் “என்றான்.

 

வாயை சுழித்து ,முகத்தை திருப்பியவன்.” அதுக்கு நீ ஒண்ணுமே எனக்கு வாங்கி தந்து இருக்க வேணாம். வண்டியை இங்கே நிறுத்தி இருக்க வேண்டாம். அதுக்கு நீ வீட்டுக்கே போய் இருக்கலாம்” என்று முனகி கொண்டே எழுந்து கொள்ள.

 

இருவரும் சாப்பிட்டதற்கு பில் கட்டுவதற்கு பில் கவுண்டர் அருகில் வந்தார்கள். 

 

தங்களுக்கு ஃபலூடா ஆர்டர் பண்ண எழுந்து வந்தாள் பிரியா.

 

அப்பொழுது இருவரும் பில் செக்ஷனில் நிற்க .தேவ் ,குகன் இருவரும் தங்களுக்கு தேவையானது வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

 

திரும்பவும் இறுதியாக விடாமல், “அப்போ எதுவுமே வாங்கித் தர மாட்டியா?” என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு, கேட்டான்.அவனை புன்னகையுடன் பார்த்தவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்க. 

 

அப்போது,அவர்கள் அருகில் வந்த ரியா ,”மித்து உனக்கு என்ன பிளேவர் ?”என்றாள் சத்தமாக 

 

 

ரியாவின் பக்கம் திரும்பிய மித்ராவும் ,தனக்கு தேவையானதை சொல்லிக் கொண்டே ,திரும்ப, ரியாவின் அருகில் நின்று கொண்டிருந்த, தேவ் ,குகன் இருவரையும்  பார்த்துவிட்டு எழுந்து வந்து,

“டேய்! இங்க என்ன பண்ற ?வீட்டுக்கு போகலையா ?”என்றாள் குகனிடம்.

 

அவனோ ,முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு,” சும்மாதான் மிஸ்” என்றான்.

 

ரியா, மித்து  கையை சுரண்டினாள் “யார் ?”என்பது போல,

 

  “குகன்”என்றாள் குதூகலமாக.

 

“ஓ! “என்ற ரியா.அவன் உயரத்திற்கு கீழே உட்கார்ந்து ,அவன் கன்னத்தை பிடித்து கொஞ்சி விட்டு ,தலையோடு தலை முட்டி, மூக்கோடு மூக்கு உரசி “ஹாய் குகன் குட்டி !என்னோட பெயர் பிரியா. உங்க மிஸ் வோட ஒன் அண்ட் ஒன்லி தங்கச்சி” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு அவனிடம் கை கொடுக்க ..

 

அவனும் தேவை பார்த்துவிட்டு கை கொடுத்தான்.

 

” ஏன்  டா சைலன்ட்டா இருக்க. நீ நிறைய பேசுவனு  உங்க மிஸ் சொன்னாங்க? ஆனா இப்போ அமைதியா இருக்க” என்று கேட்க.

 

” ரொம்ப நேரமா ஐஸ்கிரீம் கேட்கிறேன். தேவ் வாங்கி தரல”என்று உதட்டை பிதுக்கி புதிதாக பார்த்தவளிடம் குற்ற பத்திரிகை வாசித்தான். 

 

இப்பொழுது தான் அருகில் இருந்த தேவை நிமிர்ந்து பார்த்தவள். அவனை கண்களால் ஸ்கேன் செய்தாள்.

 

அவனும் அவளை பார்த்து புன்னகைக்க..

 

” ஹாய் தேவ்! ஐ அம் பிரியா” என்றாள் கண் சிமிட்டி.

 

அவளது செயலில் இதழ்களில் புன்னகையை சிதற விட்டவன்..

“என்ன உங்களுக்கு தெரியுமா?”என்றான்.

 

மித்ரா,தன் தங்கையை முறைக்க,

 

தேவ் இப்போது, மித்ராவை தான் பார்த்தான். அவள் முறைப்பில் உதட்டுக்குள் சிரிப்பை அடக்கியவன் இப்பொழுது ரியாவின் புறம் பார்வையை பதிக்க, 

 

“உங்களை பத்தி எனக்கு தெரியும் பாஸ் !”என்றாள் இதழ்களில் புன்னகை மாறாமல், 

 

ஒன்றும் புரியாமல்,தேவ்  அதிர்வாக மித்ராவை பார்க்க.

 

அவளோ, தனது தங்கையை பார்த்து பல்லை கடித்தாள். அதை அசட்டை செய்த ரியா, மித்ராவையே பார்த்துக் கொண்டிருந்த ,தேவின் முகத்தின் முன்பு கைகாட்டி, “பாஸ்!” என்று கை நீட்டினாள்.

 

அவனும் கைகுலுக்கி ,”தேவ்!”என்க..

 

“அதான். ஏற்கனவே, தெரியுமே !” என்றாள் தோள்களை குலுக்கி,

 

தேவ், மித்ராவை பார்க்க, அவளோ சங்கடமாக அவனை தான் பார்த்தாள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
18
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்