Loading

தேவ்,குகன் இருவரும் வீட்டில் இருந்து கிளம்பவே லேட் ஆகியதால், மித்ராவை பார்க்க முடியாது என்பதால், குகனை இறக்கி விட்டு விட்டு கிளம்பி விட்டான்.

 

அன்று மாலை எப்பொழுதும் போல் அவள் ஒரு கதை சொல்லி முடிக்க,” இன்னிக்கு யாராவது கதை சொல்றீங்களா ?” என்றாள் ஆர்வமாக..

 

முதல் ஆளாக குகன் கையை தூக்கி “நான் சொல்றேன்  மிஸ்” என்றான்.

 

ஆச்சரியமாக பார்த்தாள். சுற்றி மற்ற குழந்தைகளையும் பார்க்க,

 

இன்னொரு மாணவன் கை தூக்கினான் .இருவரிடமும் கதையை கேட்டாள். 

 

இரு குழந்தைகளையும் அள்ளிக் கொஞ்சியவள் ” யார் சொல்லி கொடுத்தார்கள் ?”என்று கேட்க,

 

அந்த இன்னொரு மாணவன் தன்னுடைய தாய் என்று சொல்ல.

 

” உங்க அம்மா சூப்பரா சொல்லி கொடுத்து இருக்காங்க.டெய்லி டைம் இருந்துச்சுன்னா அம்மா கிட்ட கேட்டு வாங்க சரிங்களா? நீங்களும் சூப்பரா சொன்னீங்க?” என்று அந்த குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சி விட்டு,

 

குகனிடம் திரும்பி,”  உனக்கு யாருடா சொல்லிக் கொடுத்தா?”என்று கேட்க ,

 

திருட்டு முழியுடன்,”தேவ்” என்றான் மெல்லிய குரலில்,

 

அவன் தலையை கலைத்தவள். கன்னம் கிள்ளி கொஞ்சி,” சித்தப்பானு சொல்ற பழக்கமே  இல்ல” என்று சிரிக்க..

 

“இல்ல”என்று தலையசைத்தான்.

 

“அது சரி. நல்லா சொல்லிக் கொடுத்திருக்காரு உங்க சித்தப்பா.டெய்லி இந்த மாதிரி டைம் இருந்தா கதை கேட்டுட்டு வா சரியா?” என்று அனுப்பி வைத்தாள்.

 

அன்று மாலை தேவ் குகனை அழைக்க வரும் பொழுது, மித்ரா யாரிடமோ போனில் பேசிக்கொண்டு வந்தாள்.

 

தேவை பார்த்தவள்.” அப்புறமா பேசறேன்” என்று விட்டு போனை கட் பண்ணி விட்டு, தேவ் அருகில் வர..

 

” என்ன மிஸ் எங்க பக்கம் காத்தடிக்குது “என்றான் சிரித்த முகத்துடன் ..

 

“இல்ல நீங்க சொல்லிக்கொடுத்த ஸ்டோரி நல்லா இருந்துச்சு. குகனும் சூப்பரா சொன்னான். அதான் நல்லா இருக்குன்னு சொல்றதுக்காக வந்தேன் “என்றாள் புன்னகையுடன்..

 

” பாருடா ராங்கிக்கு நல்லா இருக்குன்னு சொல்ல கூட மனசு வந்துருக்கு”

 

  அவனை முறைத்துக் கொண்டே “நல்லதை சொல்றதுக்கு எதுக்கு தயங்கனும்”

 

  “ஆனா, அன்னைக்கு தேங்க்ஸ் சொல்ல யோசிச்ச இல்ல”

 

கையெடுத்து கும்பிட்டவள். “அன்னைக்கு ஒரு அவசரத்தில் இருந்தேன் சரியா? திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் காட்டாதீங்க, அன்னைக்கு ஃபர்ஸ்ட் டே நானே லேட். எங்க அம்மா வேற டென்ஷன் பண்ணிடுச்சு,இதுல பைக் வேற மக்கர் பண்ணிட்டுச்சு அதான், எனக்கு புடிச்ச ஜாப் என்ற  ஆர்வத்துல ஆசையாக வந்துட்டு இருக்கும் போது சிக்னல் விழுந்துட்டதால கொஞ்சம் பதட்டமும் ஆயிடுச்சு ,அவ்வளவுதான் மத்தபடி உங்களுக்கு தேங்க்ஸ் சொல்ல கூடாது என்ற எண்ணம் எல்லாம் இல்ல போதுமா ? இப்ப சொல்றேன்.அன்னைக்கு என் வண்டியை சரி பண்ணி கொடுத்ததற்கு தேங்க்ஸ்! தேங்க்ஸ்! தேங்க்ஸ்! தேங்க்ஸ்! “என்று அவள் சொல்லி கொண்டே போக,

 

“போதும் !”என்று கை காண்பித்தவன் சிரித்துக் கொண்டே ,”சரி சரி தினமும் ஒரு ஸ்டோரி சொல்ல சொல்லி இருக்கீங்க போல.. நீங்க நேத்து  சொல்லி குடுத்த ஸ்டோரி கூட நல்லா இருக்கு” என்றான் ஆத்மார்த்தமாக,

 

“எப்படி உனக்கு இப்படி ஒரு எண்ணம் வந்துச்சு?”

 

“தெரியல. சின்ன வயசுல இருந்து அப்பா ஸ்டோரி சொல்லி கொடுத்து வளர்த்துட்டாங்களா. அதனால, அது அப்படியே பழக்கம் ஆயிடுச்சு “என்றாள் தோளை குலுக்கி,

 

“நல்ல பழக்கம். நல்ல அப்பா ,நல்ல பொண்ணு.நல்லா தான் வளர்த்து இருக்காரு. சரி ஓகே பாய் “என்று கிளம்பினான்.

 

இருவரும் ஒருமுறை திரும்பி பார்த்துக் கொண்டார்கள். ஒரு தலையசைப்புடன் விடை பெற்றுக் கொண்டார்கள். அவர்களது நாட்கள் தினமும் இப்படியே சென்றது.. 

 

குகன் சொன்ன கதையை வீட்டில் சென்று சாப்பிடும் பொழுது மித்ராவும் தன் வீட்டில் சொல்ல.

 

அந்த கதையில் மெய்மறந்து மித்ராவின் அப்பா இளவரசன் “நல்லா இருக்கே மித்ரா குட்டி யார் சொன்னா? இந்த கதை?”.

 

” இது என் கிளாஸ்ல இருக்க ஒரு மாணவன் “சொன்னதாக சொல்ல.

 

” பரவால்ல அவனோட அப்பா ,அம்மா அந்த பையனுக்கு நல்ல கதையை சொல்லிக் கொடுத்திருக்காங்க “

 

” அவனோட அப்பா ,அம்மா இல்ல ப்பா. அவங்க சித்தப்பாவாம்” என்றாள் புன்னகையுடன்..

 

” பரவாயில்லையே. இப்ப இருக்க வயசு பிள்ளைங்க எல்லாம் நல்ல கதையை சொல்றதே பெரிய விஷயம் தான் “என்று சாப்பிட்டார்.

 

சத்யாவும் ,”நல்லா இருக்குடி. தினமும் அந்த பையன் கதை சொன்னா வந்து சொல்லு, உங்க அப்பா உங்களுக்கு சொல்லும் போது கேட்டு கேட்டு எனக்கும் பழகிடுச்சு” என்று சிரித்தார் 

 

“சரிமா “என்றாள்.இங்கு நம் மித்ராவின் குடும்பமும் ஜாலியான குடும்பம் தான். தினமும் கதை பேசிக்கொண்டே இரவு உணவை முக்கியமாக ஒன்றாக உட்கார்ந்து தான் சாப்பிடுவார்கள்.

 

இளவரசன் வேலைக்கு செல்கிறார். சத்யா ஹவுஸ் வைஃப் வீட்டில் இருக்கிறார். மித்ராவின் தங்கை பிரியா இப்பொழுது காலேஜ் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள்.

 

அங்கு எப்படி அண்ணன், தம்பி இருவரும் நண்பர்களாக ,வித்யாவுடனும் நண்பர்களாக இருக்கிறார்களோ? அதே போல் தான் இங்கு பிரியா மித்ரா இருவரும்..

 

இருவருக்கும் இரண்டு , மூன்று வருடம் வித்தியாசம் இருந்தாலும் ,இருவரும் நண்பர்கள் போல் தான் பழகுவார்கள்.

 

ரூமுக்கு வந்தவுடன்,” நீ டெய்லி சொல்லுவ இல்ல குகன் அவன் தானே?” என்றாள் கண்களை சுருக்கி, தலை சாய்த்து பிரியா .

 

“ஹம்” என்று அவள் சிரிக்க..

 

” அவங்க சித்தப்பா ஹாண்ட்சமா இருப்பாரா?” என்றாள் கண் சிமிட்டி,

 

” அடி வாங்க  போற”என்று தன் தங்கையின் தலையில் கொட்டினாள்.

 

மறுநாள் மாலை குகனிடம் பேசி, சிரித்து கொண்டே அவனின் தலையை கலைத்து விளையாடிய படி , அவனுடனே  வெளியில் வந்தாள்.

 

தேவ் அப்பொழுதுதான் குகனை அழைத்துக் கொண்டு செல்வதற்கு  வந்து நின்றான்.

 

தேவின் அருகில் வந்தவுடன், “நல்லா பேசுறான் .எப்படி தான் வீட்ல வச்சு சமாளிக்கிறீங்களோ?”என்று முத்து பற்கள் தெரிய சிரிக்க…

 

“மிஸ் எங்க தேவை வச்சு தான் சாமாளிக்க முடியலனு எங்க தாத்தா சொல்வாரு”என்று அவன் காலை வார..

 

“வாடி நீ என் கூட தான வீட்டுக்கு வரணும்! “என்று சைகையால் மிரட்ட,

 

“உங்க தாத்தாவுக்கு உங்க சித்தப்பா பயப்படுவாரா ?” என்றாள் குகனிடம் தலை சாய்த்து.

 

” நீங்க வேற மிஸ் எங்க  தாத்தாவுக்கு பயப்படுற ஆளா தேவ்”

 

“அப்புறம் என்னடா இப்போ தான சொன்ன?”

 

“அப்படியெல்லாம் கிடையாது. எங்க தேவ் பயப்படுற ஆளு அப்படின்னா அது எங்க அம்மா மட்டும் தான். அது கூட பயம் கிடையாது” என்று சிரிக்க ..

 

அவள் கேள்வியாக அவனை பார்க்க..

 

“அவன் சும்மா சொல்றான்” என்று அவன் தலையை கலைத்து விளையாடிக் கொண்டே, “தப்பு பண்ணா தான பயப்படனும். அப்பா ஸ்ட்ரிக்ட் அப்படி எல்லாம் கிடையாது ,அப்போ அப்போ சின்ன சின்னதா ஏதாவது அவருக்கு பிடிக்காத சில விஷயங்கள் பண்ணா சத்தம் போடுவார் அவ்வளவுதான், மத்தபடி, என்னோட அப்பா ஸ்வீட் டாடி “என்றான் அவனது கண்கள் கூட சிரித்தது.. 

 

“அப்போ உங்க அண்ணி” 

 

“அண்ணின்னா கொஞ்சம் இஷ்டம், சம் கேர் ஆஃப் லவ்,சோ அண்ணி சொன்னா எந்த ஒரு விஷயமும் கேட்பேன், அந்த மாதிரி வச்சுக்கலாம்”

 

” அப்போ ரெண்டு பேருமே வீட்டில் வாலு தான்” என்றாள் புன்னகையுடன்..

 

அவனும் முத்துப்பற்கள் தெரிய புன்னகைக்க ,

 

“உங்க வீட்ல எத்தனை பேர் ?” என்றான் தேவ்..

 

“நான், என் தங்கச்சி பிரியா”

 

” ஓ!ரியா! ” என்று சொல்லி பார்த்தான்…

 

அவனை முறைத்தவள்,” ரியா இல்ல பிரியா, காது கேட்கலையோ ?”என்றாள் .

 

“அது எல்லாம் கேட்கும். நாங்க ஒன்னும் செவிடு கிடையாது பிரியாவை சுருக்கி ரியானு கூப்பிட்டு பார்த்தேன் நல்லா தான் இருக்கு..”

 

“நானுமே அவளை அப்படித்தான் கூப்பிடுவேன்”என்று புன்னகைத்தவள்.

 

” சரி ஓகே பாய்” என்று கிளம்பினாள்.

 

தினமும் இருவரும் பார்த்துக் கொள்ளும் வேலையில் இப்படியே பேசி சிரித்துக் கொண்டார்கள்.

 

அவர்களது நாட்கள் அழகாக சென்றது.

 

தேவ் அவ்வபோது வித்யாவிடம் அவளைப் பற்றி சொல்வான். வித்யா அதை அமைதியாக கேட்டுக் கொள்வாள்..

 

 

அவன் அவளை பற்றி பேசும் பொழுதெல்லாம் அவனது கண்களை ஒரு சில நொடி உற்றுப் பார்த்துவிட்டு அமைதி ஆகி விடுவாள்.

 

  ‘அப்படி ,ஒரு வேலை அவனுக்கு அந்த பெண்ணை பிடித்திருந்தால் அவனாக சொல்வான்  ‘ என்ற எண்ணம்.

 

 

ஒரு மாதங்களுக்கு மேல் கடந்திருந்தது. அன்று சாப்பிட்டுவிட்டு இரவு தேவும் ,குகனும் ரூமுக்கு சென்று ஹோம் ஒர்க் செய்ய தொடங்கினார்கள் .

 

அப்போது குகனின் ஒரு நோட் இல்லாமல் இருக்க. 

 

” எங்கடா உன்னோட நோட்” என்றான்.

 

  தனது பேக்கில் தேடி பார்த்து விட்டு,”தெரியல” என்று உதட்டை பிதுக்கினான்.

 

“என்னடா இப்படி உதட்டைப் பிதுக்கினா என்ன அர்த்தம் ?”

 

 

“இல்ல தேவ். அது கிளாஸ் ரூம்லயே மிஸ் பண்ணிட்டேன் போல, அங்க தான் இருக்கும் பேக்ல இல்ல” என்றான் தலையை சொரிந்த படி.கண்ணை சுருக்கி ,

 

“அடிவங்க”என்று அவன் தலையில் கொட்டியவன். 

 

“ஹோம் ஒர்க் குடுக்குற சப்ஜெக்ட் நோட் என்ன இருக்குனு பாத்துட்டு வீட்டுக்கு வராம, கிளாஸ் ரூம்ல வச்சுட்டு வந்துட்டேனு சாவகாசமா பதில் வேற சொல்றியா ?”

 

“வேணும்னேவா தேவ் வச்சுட்டு வருவேன் மறந்துட்டேன்”என்று இடுப்பில் கை ஊன்றி முறைத்தான் .

 

” இந்த முறைப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லடி, நோட் வச்சிட்டு வந்துட்டு திமிர பத்தியா ? வேணாம்னு தான் வச்சுட்டு வந்து இருப்ப”..

 

“தேவ்”என்று சிணுங்கினான்.

 

அவனை நக்கலாக பார்த்துக் கொண்டே,”உங்க அம்மா  கிட்ட சொல்லட்டா ?”என்றான் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி,

 

வேகமாக அவனது கையை பிடித்த குகன்,”தேவ் என்ன பண்ற ?”

 

“நீ பண்ணத உங்க அம்மா கிட்ட சொல்ல போறேன். ஹோம் ஒர்க் கொடுத்த  சப்ஜெக்ட் நோட்ட உங்க பையன் கிளாஸ் ரூம்லையே வச்சுட்டு வந்து இருக்கானு”என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன் ..

 

அவனோ, பாவமாக பார்த்து விட்டு, முகத்தை திருப்பிக் கொள்ள,

 

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை .சரி இப்போ எப்படி ஹோம் ஒர்க் பண்ணுவ? நாளைக்கு ஹோம் ஒர்க் பண்ணலன்னா கிளாஸ் ரூம் விட்டு வெளியே நிக்க வைப்பாங்களே அப்போ என்ன பண்ணுவ?”என்றான் நக்கல் தோணியில்,

 

“ப்ளீஸ்! ப்ளீஸ்! ஏதாவது ஹெல்ப் பண்ணு தேவ்”

 

” ஹெல்ப் பண்ணுனா எப்படி டா பண்றது ?”

 

“மிஸ்ஸுக்கு கால் பண்ணி கேளு பிளீஸ்!”

 

“எந்த மிஸ்ஸுக்கு?”என்றான் கேள்வியாக,

 

“ப்ச்! , மித்ரா மிஸ்கு தான் தேவ்.அவங்க சப்ஜெக்ட் தான்”

 

“ஓ! ராங்கி சப்ஜெக்டா?”

 

அவனோ,முறைக்க,

 

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லடி. ஆன,என்கிட்ட உங்க மி … மித்ரா மி… மிஸ்..ஸ் ….ஸ்…. ஸ்..ஸ் நம்பர் இல்லையே ?”என்று , அந்த மிஸ்ஸுக்கு அழுத்தம் கொடுத்தான்.

 

” உன்கிட்ட மிஸ் நம்பர் இல்லையா?” என்றான் நம்பாத பார்வையாக…

 

“என்கிட்ட ஏன் டா..உங்க மிஸ் நம்பர் இருக்கும்”

 

 

” உண்மையாவே இல்லையா தேவ்” என்றான். பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, முகத்தை சுருக்கி, 

 

“இல்லடா.சரி இப்போ என்ன பண்ண?”. 

 

” சரி. இரு!” என்று தனது டைரியை எடுத்து மித்ராவின் நம்பரை சொன்னான்..

 

“பாருடா! படவா !இங்க நம்பர் வச்சுக்கிட்டு தான், இவ்வளவு நேரம் என்கிட்ட வேற பாவமா முகத்தை வச்சுட்டு கேட்டியா ?”என்று அவன் வயிற்றில் கிச்சு கிச்சு மூட்டினான்…

 

அவனும் சிரித்துக் கொண்டே ,”சரி தேவ் கால் பண்ணு” என்றான்.

 

அவனும் போன் செய்ய, முழுமையாக ரிங் சென்று அடங்கியது..ஆனால் எடுக்கவில்லை.

 

” போன் எடுக்கல டா.மத்த ஹோம் ஒர்க் பண்ணு “

 

“திரும்ப கால் பண்ணு தேவ்”என்று நச்சரித்தான்.

 

“டேய் அவங்க ஏதாவது வேலையா இருப்பாங்க போன் பண்ணி இருக்கோம் இல்ல நம்பர் பாத்துட்டு கூப்பிடுவாங்க?

 

“இப்பதான் அவங்க நம்பர் இல்லன்னு சொன்ன” என்று அவனை குறுகுறுவென பார்த்தான் பொடியன்.

 

அவன் கழுத்தை நெறிப்பது போல் வந்தவன் ” உதை வாங்க போற! மிஸ்டு கால் பாத்துட்டு கூப்பிடுவா அந்த ராங்கி வெயிட் பண்ணு. மிஸ்டு கால்னு சொல்றதுக்கு பதிலா நம்பர்ன்னு தெரியாம சொல்லிட்டேன் போதுமா? நீ இதுதான் சாக்குனு ஹோம் ஒர்க் பண்ணாம டேரா  போட்டுடலாம்னு நினைக்காத!”என்று அவனை மற்ற ஹோம் ஒர்க் செய்ய வைத்தான்.

 

சிறிது நேரத்திற்கு பிறகு ,மித்ராவாக போன் செய்தாள்.

 

“உங்க மிஸ் தாண்டா” என்று சொல்லிக்கொண்டே போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தான்.

 

அந்தப் பக்கம் இருந்து மித்ரா “ஹலோ”என்றாள்.

 

“மித்ரா மிஸ்ஸா?” 

 

” எஸ். நீங்க?

 

“நான் குகனோட பேரண்ட் பேசுறேன்”

 

” ஓ!.ஆனா குகனோட பேரண்ட்ஸ் அப்பா, அம்மா நம்பர் என்கிட்ட இருக்கே” என்றவளின் வார்த்தை பாதியில் நின்றது… நாக்கை கடித்துக்கொண்டு ,”தேவ் “என்றாள் 

 

அவளது  வார்த்தையில் இந்த பக்கம் இதழ்களில் ,புன்னகையை தவழ விட்டவன்..

 

“ஆமாம்”என்றான் அதரங்களில் புன் சிரிப்புடன்..

 

“ஓ! சாரி சாரி தேவ்.என்கிட்ட அவங்க அப்பா ,அம்மா நம்பர் தான்  இருக்கு. அது மட்டும் இல்லாம குகன் பேரண்ட் நம்பர்னு அவங்க ரெண்டு நம்பர் தான் கொடுத்து இருக்காங்க அதான்”

 

சிரித்தவன்.” இல்ல.நான் தான் அட்மிஷன் போடும்போது அவங்க நம்பர் கொடுத்திருந்தேன். மத்தபடி கிளாஸ் டீச்சர் கிட்ட என்னோட மொபைல் நம்பர் கொடுத்துடுவேன் உங்ககிட்ட மறந்துட்டேன்.மேக்ஸிமும் என்னோட நம்பர் தான் ஸ்கூல்ல கொடுப்பேன்.அட்மிஷன் ஃபார்ம்ல மட்டும் அவங்க நம்பர் இருக்கும். நீ புதுசா வந்ததால உன் கிட்ட அட்மிஷன் ஃபார்ம்ல இருக்க நம்பர் மே பி கொடுத்து இருக்கலாம். டைரியில என்ன நம்பர் தான் இருக்கும்.இல்ல ஏதாவது இம்பார்டன்ட்னா எனக்கு தான் கால் பண்ணுவாங்க, அவனும் எல்லா இடத்திலும் என்னோட நம்பர் தான் சொல்லுவான் .நீ புதுசா ஜாயின் பண்ணதால என் நம்பர் நோட் பண்ணி இருந்திருக்க மாட்ட” அவனும் விவரத்தை சொல்ல,

 

” ஓ! சரி ஓகே.என்ன விசியம் தேவ்”

 

“அது குகன் கிளாஸ் ஒர்க் நோட் கிளாஸ்ல வச்சிட்டு வந்துட்டான். அதான் ஹோம் ஒர்க் பண்ண போட்டோ காப்பி அனுப்புனா ஹோம் ஒர்க் பண்ண வச்சுடுவேன், உன்னோட சப்ஜெக்ட் தான் “

 

“ஓ!என்றவள்.தோ நான் அனுப்புறேன். ஆனா, ஹோம் ஒர்க் குடுக்குற சப்ஜெக்ட்ட கிளாஸ் ரூம்ல வச்சுட்டு போற அளவுக்கு சார் அவ்வளவு கவனக்குறைவா இருக்காரோ ?நாளைக்கு கிளாஸ்க்கு வரட்டும் இருக்கு அவனுக்கு “என்றாள்.

 

“பாருடா! ஸ்டிக்டான டீச்சர் போல!”

 

“பின்ன இல்லையா?” என்று சிரித்தாள்..

 

தானும் சிரித்தவன்…”சாப்பிட்டாச்சா ?” என்றான்.

 

“இப்போதான். அதனால்தான் நீங்க கால் பண்ணப்ப எடுக்க முடியல”

 

” ஒன்பது மணிக்கு மேல தான் சாப்பிடுவீங்களா ?”

 

“இல்ல.உட்கார்ந்து பேசி சிரிச்சிட்டே சாப்பிடுவோம் நைட் சாப்பாடு மட்டும்  நானும் என்னோட தங்கச்சி பிரியாவும் தான் மேக்ஸிமம் செய்வோம்.இன்னிக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு,  அவளும்,நானும் போட்டி போட்டுட்டு சண்டை போட்டு செஞ்சோமா சோ லேட் ஆயிடுச்சு” என்றாள் புன்னகையுடன்…

 

“அது சரி.ஓகே லேட் ஆயிடுச்சு நீ பாரு ! நான் அவனைப் படிக்க வைக்கிறேன்” என்று வைத்து  விட்டான்.

 

போன் வைத்தவுடன் போட்டோ காப்பி அனுப்பி இருந்தாள்.

 

தேவ் குகனை அதை படிக்க வைத்து ,பார்க்காமல் எழுத வைத்தான். பிறகு, அவனை தட்டி தூங்க வைத்துவிட்டு,தன்  போனை எடுத்தான்.

 

அவளது நம்பரை ” மித்ரா மிஸ் “என்று சேவ் செய்தவன், ஒரு சில நொடி நிறுத்தி ,முழுவதுமாக பெயரை அழித்துவிட்டு, வேறு  ஏதோ ஒன்றை டைப் பண்ணி சேவ் செய்தவன் ..” ராங்கி “என்று சொல்லி தன் நெற்றியில் போனால் அடித்துக் கொண்டான். 

 

தேவ் அவள் நம்பரை எப்படி சேவ் செய்து இருப்பான் என்று யாருக்காவது கணிப்பு இருக்கிறது..இருந்தா சொல்லுங்க நண்பர்களே..

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
19
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மித்து சேவ் செய்து இருப்பான்