Loading

மித்ரா இருவரையும் முறைத்து விட்டு ,தன் வண்டியை எடுத்துக் கொண்டு வேகமாக செல்ல..

 

சிறிது தூரம் தான் சென்று இருப்பாள்.காலை வெயிலில் நின்று மேலும் கீழுமாக தனது வண்டியை பார்த்துக் கொண்டிருக்க ,

 

“தேவ் உன்னை இடிச்சிட்டு போனாங்களே ,அவங்க  மாதிரியே இல்லை.ஆனா, அவ்வளவு வேகமாக வந்தாங்க, இங்க நிக்கிறாங்க?”என்றான்.

 

“தெரியலடா !அம்புட்டு வேகமா அடிச்சு முடிச்சு மோதிட்டு போச்சு , அப்புறம் ஏன் இங்க நிக்குதுனு தான் தெரியல”  என்று விட்டு பைக் ஹாரன் அடித்தான்.

 

அவள் திரும்பவில்லை என்றவுடன், அருகில் வந்து நின்று பைக் ஹாரன் அடிக்க,

 

அருகில் கேட்ட சத்தத்தில் திரும்பியவள். இருவரையும் முறைத்தப்படி பார்க்க ,

 

“ஏன் மா? நீ வேற முறை பசங்களை பாக்குற மாதிரி எந்த நேரமும் முறைச்சிக்கிட்டே இருக்க “என்று நக்கல் அடிக்க, குகனோ வாய் பொத்தி சிரித்தான்.

 

அவளோ முகத்தை திருப்பிக் கொள்ள, 

 

“பார்த்து கழுத்து சுளிக்கிக்க போகுது, சரி,அவ்வளவு வேகமாக அடிச்சு புடிச்சு வந்து இங்க வேகாத வெயில்ல நிக்கிற “

 

 

“வேண்டுதல் பாருங்க”என்றாள் முனகலாக ..

 

“எந்த கோவிலுக்கு “என்றான் அவனும் விடமால்,

 

அவளோ, வாய் திறக்காமல் ,திரும்பவும் தனது வண்டியை ஆராய்வதில் குறியாக இருக்க,

 

அவள் செயலில்,லேசான எரிச்சல் உண்டாக,” உன்ன தானே கேக்குறேன்? என்ன ஆச்சுன்னு?”

 

“இப்ப என்ன வேணும் உங்களுக்கு ,  தனியா வந்துட்டு இருக்க பொம்பள புள்ளை கிட்ட வம்பு பண்றீங்களா ?” என்றாள் ஒற்றை விரல் நீட்டி எச்சரித்து, 

 

அவனோ, புன்னகையுடன் “இங்கே யாருடா பொம்பள புள்ள இருக்காங்க? கண்ணுக்கு எட்டின தூரம் யாரையும் காணோம்? உனக்கு தெரியுதா?என்ன?”என்றான் நக்கலாக, குகனிடம்..

 

“நக்கலு” ..

 

” இல்ல விக்கல், என்னன்னு கேட்டா பதில் சொல்லுமா, அதைவிட்டுட்டு,தனியா நிக்கிறியே?அதும் இல்லாம அவ்வளவு அவசரமா அடிச்சு ,புடிச்சு  வந்தியேனு என்னன்னு கேட்டா,நீ என்னவோ உன்ன வம்பு இழுகிற போல பேசுற அப்புறம்?”

 

“பச்! என்னன்னு தெரியல வண்டி மக்கர் பண்ணுது “என்று காலை உதறினாள்.

 

அவனோ, பெட்ரோல் டேங்க் எட்டிப் பார்க்க,

 

“பெட்ரோல் எல்லாம் ஃபில் பண்ணி தான் வச்சு இருக்கேன். ஃபர்ஸ்ட் நாள் வேலைக்கு போகணும்னு அவசர அவசரமா வந்தேன், ஏற்கனவே வீட்ல லேட் ஆயிடுச்சு, அதனாலதான் உங்களையும் இடிச்சு மோதிட்டு வந்தேன்..இப்போ வண்டி என்னை வச்சு செய்து”என்று புலம்பினாள் 

 

“ஃபர்ஸ்ட் நாள் வேலைக்கு போகணும்னா சீக்கிரம் வரணும்னு தெரியாதா?” என்று சொல்லிக் கொண்டே, பைக் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு ,கீழே இறங்கினான்.

 

கையெடுத்து கும்பிட்டவள்.” அது கூட தெரியாம இங்க யாரும் இருக்க மாட்டாங்க சார். என்ன பெத்த ஆத்தா என்ன வச்சி சோதிச்சிடுச்சு ,என் மேல எத்தனை நாள் வன்மமோ தெரியல ,அதை மனசுல வச்சு இன்னைக்கு என்ன வச்சு செஞ்சுடுச்சு ,ஃபர்ஸ்ட் நாள் வேலைக்கு போறன்னு சொல்லி ,கோயிலுக்கு கூட்டிட்டு போய் ஊர்ல இருக்க எல்லா சாமியையும் கும்பிட்டு என் நெத்தியில ஒரு இடம் விடாமல்  பட்டையையும் ராமத்தையும்  போட்டு அனுப்பிவிட்டு இருக்கு பாருங்க”என்றவுடன் இருவருக்கும் அவளது செய்கையிலும், வார்த்தைகளும் புன்னகை தாண்டவம் ஆடியது இதழ்களில்..

 

இருவரும் அவளது நெற்றியை பார்க்க, அவள் சொன்னது போல் பட்டை ராமம் என்று போடவில்லை என்றாலும் ,இரண்டு மூன்று கீற்றுக்களாக திருநீர் ,குங்குமம் சந்தனம் என்று வைத்திருப்பதை பார்த்தவுடன் அவளது தாயின் செயலை எண்ணி  சிரிப்புதான் உண்டாக்கியது ..

 

“சார் என்ன பாத்தா எப்படி தெரியுது?” என்று சிணுங்கினாள்..

 

 

“மாரியாத்தா கோயிலுக்கு ஆடி மாசம் கூழ் ஊத்த போற மாதிரி தெரியுது “என்று நக்கல் அடித்தான்.

 

அவளோ,”எல்லாம் உன்னால தான் வீட்டுக்கு வந்து உன்ன வச்சுக்கிறேன் என்ன பெத்த பேயே!”என்று வாய்விட்டே முனக,

 

சிரிப்புடன் ,”சரி நகரு.என்ன என்று பார்க்கிறேன் “என்று வண்டியை சரி பண்ணிக் கொடுத்தான்..

 

அவள் ஸ்டார்ட் செய்ய.வண்டியும் ஸ்டார்ட் ஆனவுடன் “ஸ்டார்ட் ஆயிடுச்சு” என்று துளி குதித்து “சரி எனக்கு நேரம் ஆகுது” என்று எதுவும் பேசாமல் வண்டியை எடுத்துக் கொண்டு நகர,

 

“ஏய் இந்த மா! ” என்றான்.

 

அவளோ,திரும்பி முறைக்க,

 

“எதுக்கு எடுத்தாலும் முறைச்சிகிட்டே இருக்க முட்ட கண்ணை போட்டு”

 

“இப்படித்தான் முன்ன பின்ன தெரியாத பிள்ளை கிட்ட   பேசுவீங்களா?” என்றாள் கோபமாக..

 

“சரி தப்புதான் சாரி ,வண்டியை சரி பண்ணி கொடுத்ததுக்கு ஒரு ஃபார்மாலிட்டிக்கு  தேங்க்ஸ் கூட சொல்லாம போற “என்று வம்பு இழுத்தான்..

 

“நான் உங்களை கேட்டேனா ? என் வண்டியை சரி பண்ணி குடுங்கனு?நீங்களே வந்து ஹெல்ப் பண்ணதுக்கு நான் ஏன் தேங்க்ஸ் சொல்லணும் ?”என்றாள் தோரணையாக,

 

“அது சரி. ராங்கி “என்று அவன் முனக..

 

  ஒரு நிமிடம் திரும்பி நின்று முறைத்து விட்டு , புன்னகை முகத்துடன் “தேங்க்ஸ் ” என்றவள்  சிட்டாக பறந்து விட்டாள்.

 

” பாருடா ராங்கி வாயிலிருந்து தேங்க்ஸ் கூட வருது ..அது கூட கேட்டு வாங்க வேண்டியதா இருக்கு?, இந்த  முட்ட கண்ணிக்கு சிரிக்க கூட வரும் போல “என்று குகனுடன் பேசிக்கொண்டே தனது வண்டியையும் கிளப்பினான் நேரமாகுவதை உணர்ந்து..

 

போகும் வழியில் குகன் “தேவ்! தேவ்! உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லவே மறந்துட்டேன் “என்றான்..

 

“அப்படி என்ன டா மறந்த?”என்று அவன் தலையை கலைத்து விட, 

 

“இன்னைக்கு எனக்கு கூட புது ஸ்டாப் வர போறாங்க தெரியுமா? இப்போ அவங்க சொன்னதுக்கு அப்புறம் தான் ஞாபகம் வருது” என்றான்.

 

” இந்த ராங்கியா உனக்கு புது ஸ்டாப்” என்று குகனை வம்பு இழுக்க,

 

குகனோ முறைத்தான் .கண்ணாடி வழியே அவன் முறைப்பை  பார்த்தவன். “பின்ன என்னடா ?”என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்..

 

“அவங்க இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டே வேலைக்கு போறாங்கன்னு சொன்ன உடனே எனக்கு ஞாபகம் வந்தது .நீ வேற ?”

 

“ஏன் உங்க பழைய மிஸ்க்கு என்ன ஆச்சு ?”

 

அவன் தொடையில் கிள்ளிய குகன்.” ஏற்கனவே சொன்னேன் தானே ! அவங்களுக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சு இல்ல ,போன வாரம். அதனால் அவங்க கிட்டத்தட்ட இப்ப 15 நாளைக்கு மேல வரல தானே ,இவ்ளோ நாளா சப்ஸ்டியூட் தானே வேற மிஸ் வந்துட்டு இருந்தாங்க. அதான், இன்னைக்கு புது மிஸ் வர போறாங்களே !ஜாலி! ஜாலி!”என்று குதுகளித்தான்.

 

” பாத்துடா. ஓவரா ஆட்டம் போடாத, புது மிஸ் எப்படி நடத்துக்குவாங்களோ யார் கண்டா?” என்று இருவரும் பேசி சிரித்துக்கொண்டே வர , ஸ்கூலும் வந்திருந்தது. 

 

  அவனை இறக்கி விட்டு,தானும் இறங்கியவன் “சரி டா பார்த்து சமத்தா இரு. புது மிஸ் எப்படின்னு பாத்துட்டு சொல்லு ,நான் இன்னைக்கு சாயங்காலம்  இல்லன்னா ரெண்டு நாள் கழிச்சு அந்த மிஸ் பார்த்து பேசுறேன் சரியா ?”என்று அவனது கலைத்துவிட்ட தலையை தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து சீப்பு எடுத்து நேர்த்தியாக சீவி விட்டவன், அவனது சட்டையை சரி செய்து விட்டு ,அவனது கன்னத்தில் இதழ் பதித்து , “பார்த்து போயிட்டு வா பாய் “என்றான்.

 

குகனும் தேவை குனிய வைத்து, அவன் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு,” பாய் தேவ்”என்று வேகமாக ஓடிவிட்டான் .

 

சிரித்துக் கொண்டே ,வண்டி எடுத்தவனுக்கு ஏனோ, குகன் ‘ புது மிஸ் வருகிறார்கள் என்றவுடன், அவளும் இன்னைக்கு தான புதுசா வேலைக்கு போறாதா சொன்னா ‘ என்று தன்னையும் மீறி மித்ராவின் ஞாபகம் வர, இதழ்களில் புன்னகையை தவழ விட்டவன்.. அவளை பற்றி எண்ணிக்கொண்டே தன் அலுவலகத்திற்கு கிளம்பினான்.

 

குகன் புதிதாக வரும் மிஸ்ஸுக்காக ஆவலாக காத்துக் கொண்டு, தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தான்.

 

அப்போது மித்ரா அந்த கிளாஸ் ரூம்குள் நுழைய,

 

அங்கு  மித்ராவை பார்த்தவன். பேந்த  பேந்த முழித்துக் கொண்டு, திருட்டு முழி முழிக்க,

 

அருகில் உள்ள தனது நண்பனிடம் “இவங்க தான் நம்ப புது மிஸ்சா ?” என்று கேட்க ,

 

“எனக்கும் தெரியல டா..என்ன கேட்டா எனக்கு மட்டும் எப்படி தெரியும் .அப்படித்தான் போல புது மிஸ் வர்றதா தானே சொன்னாங்க” என்று  பேசி கொண்டிருக்க…

 

 

அனைத்து மாணவர்களும் “குட் மார்னிங் மிஸ்” என்று எழுந்து நிற்க.

 

“சிட் டவுன் பிளீஸ் “என்று விட்டு, “என்னுடைய பெயர் மித்ரா. நான் தான் உங்களுக்கு நியூ கிளாஸ் டீச்சர், நீங்களும் உங்க பேர் எல்லாம் சொல்லுங்க ,அதுக்கப்புறம் நம்ம அட்டனன்ஸ் எடுக்கலாம் சரிங்களா?” என்று சிரிப்புடன் லைன் வைசா ஒவ்வொருத்தவங்களா எழுப்பிவிட்டு நேம் கேட்டாள்.

 

ஒவ்வொரு மாணவர்களாக எழுந்து தங்களது பெயரை சொல்ல ஆரம்பித்தார்கள்.

 

குகனின் முறை வரும்போது ,குகன் எழுந்து நின்று “என்னோட பேர் குகன்” என்று திருட்டு முழி முழித்து கொண்டே  சொல்ல ,

 

அவனை பார்த்தவுடன் லேசாக சிரிப்பு அரும்பியது அவளது அதரங்களில்.. இருந்தும் ,தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு அவனை அமைதியாக பார்த்தாள்.

 

அனைவரும் சொல்லி முடித்தவுடன், குகனை அருகில் அழைத்தாள்.

 

அவனும் பயத்துடன் அவள் அருகில் வர,

 

” நீ இந்த ஸ்கூல் தான?”

 

” ஆமாம்” என்று அவன் தலையசைக்க ,

 

“என்னடா வெளியே அவ்ளோ பேச்சு பேசின? உன் கூட வந்தவர் கூட சேர்ந்து அப்படி பேசி சிரிச்சா.இப்போ அப்படியே ஆப்போசிட்டா சைலன்ட்டா இருக்க? அவ்வளவு நல்ல புள்ளையா நீ?” என்றாள் கண்ணை சுருக்கி, தலையை சாய்த்து,

 

ஏனோ ,அவளது பேச்சில் தைரியம் வந்தவுடன் ,”அது வெளியே பேசினேன் .இங்க நீங்க என் கிளாஸ் டீச்சர் இல்லையா ?”என்றான்.

 

” பரவாயில்லையே !குட்டி பையனுக்கு நல்ல விஷயம் எல்லாம் தெரிஞ்சு இருக்கே!” என்று அவன் கண்ணம் கிள்ளி கொஞ்சினாள்.

 

“சாரி மிஸ்” என்றான்  தொண்டையைப் பிடித்துக் கொண்டு.

 

அவன் கையை எடுத்து விட்டு, “உங்க அப்பாவா அவரு?” என்றாள்.

 

” இல்ல தேவ்! என்றவன் .நாக்கை கடித்துக் கொண்டு, என்னுடைய சித்தப்பா” என்றான்.

 

” பர்ஸ்ட் பேர் சொன்ன போல?”என்றாள் கேள்வியாக .

 

“இ..இல்ல பேர் சொல்லி கூப்பிட்டு பழகி விட்டேன் .அதனால தான்”என்றான் திணறலாக, 

 

“ஓ! சார் ரொம்ப செல்லமா வீட்ல ?”

 

“ஹம்!”என்று அவனும் தலையசைத்து புன்னகைக்க,

 

அவன் தலையை கலைத்து விட்டவள்,” சரி போய் உட்காருங்க கிளாஸ் கவனிக்கலாம்” என்று அவனை அனுப்பி விட்டு ,அதன் பிறகு ,தன்னுடைய வேலையில் கவனத்தை செலுத்தினாள்.

 

மாலை தேவ் ,குகனை அழைக்க வந்திருக்க,

 

குகனும் தேவ் உடன் வண்டியில் ஏறி உட்கார்ந்தவன்.” உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?” என்று ஆரம்பித்தவன்.. “காலையில  நாம ரோட்ல  பார்த்தோம்ல ஒருத்தங்க”..

 

” ஆமா! அந்த ராங்கிக்கு என்ன இப்ப ?”என்றான்.

 

வாயில் விரல் வைத்து “ஷு! அப்படி சொல்ல கூடாது” என்றான்.

 

“என்னடா அவளை ராங்கின்னு சொன்னா உனக்கு கோபம் வருதா?”என்று அவன் தலையை கலைத்து விட,

 

“இல்ல அவங்க தான் எனக்கு கிளாஸ் டீச்சர்,அவங்க தான் என்னோட புது மிஸ்” என்றவுடன்..

 

சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்திவிட்டு, அவனை கண்ணாடி வழியாக பார்க்க,

 

 

அவனும் ,”ஆமாம்” என்று தலையசைத்தான்.

 

“ஃபர்ஸ்ட் நாளே ,லேட்டா வருதே கிளாஸ் ஒழுங்கா எடுத்தாளா? அந்த ராங்கி ” 

 

அவனை இடுப்பில் கை ஊற்றி முறைத்தான் குகன்.

 

“என்ன எதுக்குடா முறைக்கிற ?”

 

“அவ  இவனு பேசுற, மிஸ் தான !அப்படி பேசலாமா ?”

 

“இதோ பாருடா!” என்று அவன்  குமட்டில் ஒரு குத்து குத்தியவன்.

 

” உனக்குத்தான் அவ மிஸ், எனக்கு மிஸ் இல்ல சரியா?இன்னொரு விஷயம் அப்படியே ,அவளை நான் டீச்சரா மதிக்கணும் என்றாலும் அது ஸ்கூலுக்குள்ள தான், அங்க தான் அந்த மரியாதையை கொடுக்க முடியும் .வெளியே வந்து விட்டால் அவ எனக்கு ராங்கி தான் சரியா? என்ன திமிரா சொல்லிட்டு போனா நானா ஹெல்ப் கேட்டேனா ?நீங்களா  தானே செஞ்சிங்கனு”

 

“அது ஒரு டென்ஷன்ல சொல்லி இருப்பாங்க”

 

” பாருடா! பார்த்து ஒரே நாள்ல அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வரதை.. நைட் நீ என்கூட தாண்டி தூங்கணும் அதை மறந்துடாத” என்று சிரித்து பேசிக்கொண்டே சென்றான்.

 

” லேட்டா வந்ததுக்கு இவ்வளவு பில்டப் தர..அவங்கதான் சொன்னாங்க தானே !அவங்க அம்மா கோயிலுக்கு கூட்டிட்டு போயி “என்று சொல்லும் போதே, குகனுக்கும் சிரிப்பு வந்துவிட… தேவும்  சிரித்து விட்டான்.

 

அவளது செயலிலும் ,கையை ஆட்டி ஆட்டி பேசிய விதத்திலும் இருவருக்குமே புன்னகை தான் தோன்றியது ..

 

“பட்ட இராமம்  ” என்று  குகனே சொல்லி சிரித்தான்..

 

“யாரோ இப்பதான் கலாய்க்க கூடாதுன்னு சொன்னாங்க” என்று அவன் காலை வார, 

 

இப்படியே பேசி சிரித்துக் கொண்டே சித்தப்பனும், மகனும் வீட்டிற்கு சென்று இறங்கினார்கள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
14
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment