தேவ் இருவரையும் முறைத்துக் கொண்டு நிற்க.
” என்னடா அதுல இருக்கு” என்றார் எழில்.
“அதை ஏன் என்ன கேக்குறீங்க? உங்க மகனையும் , மருமகளையும் பார்த்து கேட்க வேண்டியதுதானே!” என்றான் கோபத்துடன்..
“என்ன பேச்சு டா தேவ் இது, இவ்வளவு நாள அண்ணா ,அண்ணியா இருந்தாங்க ,இப்ப என் மகனும் ,மருமகளுமா? குடு டா அந்த பேப்பரை அப்படி என்ன தான் அதுல இருக்குன்னு பாக்குறேன்” என்று வாங்கியவர்..
அதை பிரித்து படித்துவிட்டு, “என்னம்மா இது ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாம்ல” என்றார் ..
ஆனால்,கணவன் ,மனைவி இருவரும் புன்னகை முகத்துடன் நிற்க.
ஒன்றும் புரியாது தனம் தான்.. “ஏங்க நீங்களாவது என்னனு சொல்லுங்களேன். இவன் என்னைக்கும் இல்லாத திருநாளா ரெண்டு பேர் கிட்டையும் சத்தம் போட்டு குதிச்சுக்கிட்டு இருக்கான்..இவங்க சிரிச்சிட்டு இருக்காங்க ,நீங்களும் ஏதும் சொல்லாமல் ஏதோ கேள்வி கேக்குறீங்க?விஷயம் என்னன்னு சொல்லாம எனக்கு மண்டை காயுது “
” நான் சொல்றேன் அத்தை ” என்ற வித்யா..தனத்தின் கையை பிடித்துக் கொண்டு,” நம்ம தேவ்க்கு ரொம்ப நாளா ஒரு ஆசை இருக்கு இல்ல “என்றாள். பீடிகையாக..
அவரும் ஒரு சில நொடி யோசித்து விட்டு,” எனக்கு புரியல மா வித்யா”.
“அத்தை படிக்க வசதி இல்லாமல் இருக்க பசங்கள டிரஸ்ட் மூலமா படிக்க வச்சிட்டு இருக்காங்க இல்ல..அது போல டிரஸ்ட் நடத்துற அளவுக்கு நமக்கு வசதி இல்ல .இருந்தாலும், நம்மளால முடிஞ்ச அளவுக்கு ஒரு ரெண்டு மூணு பசங்களோட படிப்பு செலவை ஏத்துக்கிட்டு, அவங்களுக்கு ஸ்பான்சர் பண்ணலாம்னு யோசிச்சி இருந்தான் இல்லையா தேவ்”
“ஆமா.அதான் ஏற்கனவே ரெண்டு பசங்களை படிக்க வச்சுட்டு தான இருக்கான்”.
“ஆமாம். ஆனா இப்ப ,மேலும் 5 பசங்களோட படிப்பு செலவை இவன் பாக்குற போல, அவங்களுக்கு ஸ்பான்சர் இனி இவன் தான்” என்று சிரிக்க..
” என்ன ?”என்றார் அதிர்ச்சியாக..
” ஆனா, அவ்ளோ பணத்துக்கு எங்க போவான். பாதி சம்பளம் வீட்டில் கொடுத்துடுறான். மீதி சம்பளத்தில் தான் 2 பசங்களை படிக்க வைக்கிறானே?”என்றார் கேள்வியாக.
“அதை உன் மருமக கிட்டவே கேளு” என்றான் எரிச்சலாக..
” டேய்” என்று வேலு அவன் தோளில் கை போட,
அவன் கையை எடுத்து விட்டவன்.. இருவரையும் இன்னும் முறைத்துக் கொண்டே நிற்க.
” எனக்கு புரியிற மாதிரி சொல்லு வித்யா” என்றார் .
“தனம்..உன் மகனும் ,மருமகளும் இவ்வளவு நாள் சம்பாதிச்ச காசுல ஒரு இடம் வாங்கி வைத்திருந்தார்கள் இல்லையா”..
“ஆமாண்டா அதுக்கு என்ன இப்போ?”
“அதை வித்துட்டு வந்து என் ஆசையை ,கனவை நிறைவேற்றி இருக்காங்க ரெண்டு பேரும்..இப்போ அந்த பணத்தை வைத்து 5 பசங்களோட படிப்பு செலவை ஏத்துக்கிட்டாங்க. “
“ஏத்துக்கிட்டீங்க சரி.. அதை உங்க பேர்லையோ இல்ல, குகன் பேர்லையோ பண்ணி இருக்கலாம் இல்ல? எதுக்கு என் பேர்ல ?”..
“என்னடா புதுசா பிரிச்சு எல்லாம் பேசுற” என்றான் வேலு.
தனம் அதிர்ச்சியுடன் ..”என்னடா சொல்ற ?” என்றார்..
எழிலும் “ஆமாம் தனம் ” என்றார்.
அந்த இடத்தை எதற்காக விற்க வேண்டும் என்பது போல ,இப்போது, எழிலும் ,தனமும் கூட பார்க்க ..
“அது நம்ம குகனுக்காக பின்னாடி யூஸ் ஆகும்னு வாங்குன இடம் அண்ணி.. அதை இப்போ எதுக்காக எனக்காக வித்தீங்க? என்றான் கவலையாக..
“நீ என்ன டா தனியா எல்லாம் பிரிச்சி பேசுற? அந்த இடத்தை நாங்க அந்த மாதிரி எண்ணத்துல எல்லாம் வாங்கல “..
“சரி இருக்கட்டும்..ஆனா, இப்ப எதுக்காக நீங்க வித்தீங்க , அதுக்கு அப்படி என்ன அவசியம் வந்துச்சு?”என்றான் கோபத்துடனே,
“ஏண்டா அவன் மட்டும்தான் எங்களுக்கு மகனா ?அப்போ நீ எங்களுக்கு புள்ள இல்லையா?”..
அவனுக்கு கண்கள் கலங்கியது.. தன் அண்ணியின் தோளில் சாய்ந்து கொண்டு,”அண்ணி இதெல்லாம் பண்ணா தான் நான் உங்களுக்கு மகனா ?”.
“அப்படி இல்ல.. இது முழுக்க முழுக்க உன் சந்தோசத்துக்காக பண்ணது சரியா ?எங்களுக்கும் அதில் விருப்பம் தான்.. எங்களோட முழு விருப்பத்தோட தான் இந்த விஷயத்தை ரெண்டு பேரும் செஞ்சோம்” .
“சரி. ஆனா, அதை ஏன் என் பேர்ல ?”
“இங்க பாரு தேவ்.இப்படி ஒரு எண்ணம் எங்களுக்கு இருந்ததே கிடையாது. சரியா? அதுக்காக நாங்க சுயநலவாதி அப்படின்னு கிடையாது. ஆனால் ,எங்களுக்கு படிக்க முடியாத பசங்களை படிக்க வைக்கணும் என்ற எண்ணம் பெருசா இருந்தது இல்லை. ஆனா, அதை நீ பண்ணனும்னு ஆசைப்பட்ட, இப்போ கொஞ்ச நாளா ரெண்டு பசங்களை மட்டும் படிக்க வைக்கிற. இன்னும் மூணு,நாலு பேரை படிக்க வச்சா பரவால்லனு நீ யோசிச்சு ரொம்ப நாளா என்கிட்ட புலம்பிக்கிட்டு தான் இருக்க, நீ அதுக்காக அமௌன்ட் சேர்த்து வச்சுட்டு தான் இருக்க, நிறைய செலவும் பண்றது இல்லடா இப்போலாம் ..உன் பிரண்ட்ஸோட கூட நீ எங்கேயும் பெருசா வெளிய சுத்தறது கிடையாது . உன் வயசுல இருக்க பசங்க இருக்க போல நீ எந்த வீண் செலவுமே பண்றது இல்ல, உன்னோட முக்காவாசி நேரம் கூட நீ எங்க கூட தான் டா டைம் ஸ்பென்ட் பண்ற, உனக்காக நாங்க பண்றதுல என்னடா இருக்கு ?”என்று அவனது இரு கன்னத்தையும் தாங்கி கண்களை நேருக்கு நேர் பார்த்து கேட்க..
“என்னமோ போங்க. ஆனா, உங்களுக்காக நீங்க சேர்த்து வச்ச இடத்தை விற்று இருக்க வேண்டாம் என்று தோணுது “
“ரெண்டு பேருமே சம்பாதிக்கிறோம் டா. இனி வாங்க முடியாத என்ன?”
” விக்கிற விலைவாசில சம்பாரிச்சு இனி வாங்கி”..
” இதே விக்கிற விலைவாசில தாண்டா அதையும் வாங்கினோம்.நான் ஒன்னும் தனியா சமாளிக்க போறது இல்லல.. சாப்பிடறதுக்கு இப்போ வரைக்கும் எங்களோட காசை கூட நாங்க இங்க பெருசா போடறது கிடையாது. முக்காவாசி வீட்டு செலவு, மளிகை சாமான் எல்லாமே அத்தையும் ,மாமாவும் தான் பார்க்கிறார்கள் .உன்னோட சம்பளத்தை உன்னோட கல்யாணத்துக்கு சேர்த்து வச்சிட்டு தனியா வராங்க ,எங்க சம்பளத்தை குகனுக்கும், எங்க செலவையும் பார்த்துக்க சொல்லி விட்டுடறீங்க, நாங்க அப்பப்ப கொடுக்கிறது கூட பெருசா வாங்குறது இல்ல ,அப்புறம் என்ன டா..ஏண்டா எங்களை பிரிச்சு பாக்கறீங்க ?”என்று விட்டு கவலையாக தனது அத்தையும், மாமாவையும் பார்க்க ,
வேகமாக அவளது அருகில் வந்து தலையை வருடி விட்டு,” என்ன வித்தி மா இப்படி பேசுற? நாங்க உன்னை என்னைக்கு பிரித்து பார்த்து இருக்கோம் ” என்றார் எழில்.
“அப்ப நீங்க பேசுறது அப்படித்தானே மாமா இருக்கு”
” இல்லடா மா. இருந்தாலும், வாங்கி வச்ச சொத்தை விக்கணுமா? என்ற ஒரு ஆதங்கம் அவ்வளவுதான்”.
” இது போனா. இன்னைக்கு இல்லனாலும் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வேற வாங்கிக்கலாம் மாமா”
” பொறுமையா அவன் ஆசையை அவன் நிறைவேத்திப்பான்ல “
“நிறைவேற்றி இருப்பான் தான் மாமா. ஆனா , அவனோட இந்த பிறந்தநாளுக்கு இதை பண்ணனும்னு தோணுச்சு எங்களுக்கு அவ்வளவுதான் “
” அண்ணி சொன்னா உனக்கு எங்கடா புத்தி போச்சு ?”என்று தனது அண்ணனை முறைக்க.
“நான் சொன்னேன்னு உனக்கு யார் டா சொன்னா? இது உங்க அண்ணன் முடிவு தான் “.
“அண்ணி இப்படி அவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வராதீங்க?”
“உண்மையா உங்க அண்ணன் எடுத்த முடிவு தான் டா”
” சரி அவன் சொன்னாதா கூட இருக்கட்டும். நீங்க ஏன் இதுக்கு ஒத்துக்கிறீங்க ?”
“டேய் இப்ப தானே சொன்னேன். திரும்ப திரும்ப சொல்ல வைக்கிற.. நீயும் எங்க புள்ள தான் சரியா? எங்க புள்ளைக்கு அவன் ஆசைப்பட்டதுக்கு என்ன செய்யணுமோ அதை தான் செஞ்சுருக்கோம் “என்று, அவனது தலையை கலைத்துவிட்டு “நேரமாகுது, போய் தூங்கு “என்றாள்.
இப்படி ஒரு மருமகள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எழில்,தனத்திற்கு..
என்னதான் தன் மகன் கூட பிறந்தவனுக்காக என்று யோசித்தாலும் , அவ்வப்போது தோல் கொடுக்கும் தோழியாக,தலை கோதி ,தாங்கி நிற்கும் அன்னையாக, தனது இளைய மகனுக்கு இருக்கும் மருமகளை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது. இருவராலும் ,அதே போல் இன்றும் வியந்து அவளை தனம் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் பதித்து, ” சரி போய் தூங்குங்க” என்றார்.
“சரி” என்ற தேவ் படிகளில் ஏற ..
“தேவ்” என்றான் குகன் .
இவ்வளவு நேரம் இவர்களது செயலில் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தவன்..
அவனும் “வாடா” என்று கண் சிமிட்டி அழைக்க ,
வேகமாக சென்று தேவின் கால்களை கட்டிக்கொண்டான் குகன் .
அதன் பிறகு, அவனை அள்ளிக் கொஞ்சிக் கொண்டே, படியில் ஏறி விட்டான் .
அன்றைய பொழுது அப்படியே கழிய..
மறுநாள் காலை உணவின் போது, தட்டில் தாளம் போட்டு கொண்டு இருந்தார்கள் சித்தப்பனும் ,மகனும்..
அப்பொழுது தனம் தான் தேவின் தலையில் கொட்டினார்.” இது என்னடா பழக்கம்? எத்தனை நாள் சொல்லி இருக்கேன், சாப்பிடுற தட்டுல தாளம் போடு கூடாதுன்னு”
“அத்தை அதுக்கு வாயால சொல்லுங்க”என்று அவனது தலையை தேய்த்து விட்டாள்.
“ஆமா வந்துருவா இவனுக்கு சப்போர்ட்டுக்கு, அவனை ஒன்னும் சொல்லிட கூடாது .தப்பே செய்து இருந்தாலும் ,அவன் பக்கம் தான் நிப்பா” என்று வேலு முனக..
தன் கணவனை முறைத்தாள் அவனின் விது பேபி..
அவனோ, கண்ணடித்து சிரிக்க..
அவனது செயலில் கூச்சம் ஏற்பட்டு நெளிந்தவள். வேறு புறம் திரும்பி புன்னகைக்க..
“அண்ணி காலையிலேயே ரொமான்ஸ் அஹ”என்று அவளது காதில் கிழே குனிந்து கிசுகிசுக்க..
” அமைதியா இருடா. ஏற்கனவே உனக்கு சப்போர்ட் பண்றேன்னு தான். உன் அண்ணன் என்கிட்ட சண்டைக்கு வராரு “
“விடுங்க அண்ணி.ஆனாலும் என்ன சாக்கு வச்சு நீங்க ரெண்டு பேரும் அடிக்கடி ரொமான்ஸ் பண்றீங்க பாத்தீங்களா ?”.
” போடா” என்று அவனது கன்னத்தில் லேசாக தட்டி விட்டு ,” இருங்கடா தோசை சுட்டு எடுத்துட்டு வரேன்” என்று நகர்ந்தாள்.
அதன் பிறகு ,அனைவரும் சாப்பிட்டுவிட்டு கிளம்பினார்கள்.
“பாய் பா, பாய் மா “என்று இருவரது கன்னத்திலும் இதழ் பதித்தவன் ..தனது தாத்தா பாட்டி இடமும் செல்லம் கொஞ்சி விட்டு தேவ் உடன் ஸ்கூலுக்கு கிளம்பினான் குகன்.
தேவ் தான் குகனை தினமும் ஸ்கூலுக்கு அழைத்து கொண்டு சென்று ,அழைத்துக் கொண்டு வருவான். அவனது ஆபிஸும் இவன் ஸ்கூலை தாண்டி இருப்பதால், அது அவனுக்கு பெரிதாக கஷ்டமாக இல்லை.
இருவரும் வீட்டில் இருந்து லேட்டாக கிளம்பியதால், டிராபிக்கில் மாட்டிக் கொண்டார்கள் .
உன்னால் தான், உன்னால தாண்டா என்று இருவரும் மாற்றி மாற்றி போட்டி போட்டு,சண்டை இட்டுக் கொண்டிருந்தார்கள்.
பிறகு ,தங்களது செயலால், மாற்றி மாற்றி சிரித்துக் கொண்டார்கள்.
அப்போது ஒரு பெண் ட்ராஃபிக்கில் கிடைத்த கேப்பில் சந்து பொந்துக்குள் புகுந்து, தேவின் தோலை இடித்துக் கொண்டு போனாள்.
“இந்த மா ஏய்!எதுக்கு இவ்வளவு வேகமா போற? சிக்னல் போட்டு இருக்கு, நீ இப்படி அடிச்சு புடிச்சு போனாலும் சிக்னல் விழுந்தவுடனே ,சுத்தி இருகவங்க எல்லாம் உன்னை இடிச்சு தள்ளிட்டு வேகமா போயிடுவான்.. அப்ப என்ன பண்ண போற?”என்றான் நக்கலாக..
திரும்பியவளோ ,அவனை முறைத்து பார்த்துவிட்டு ,அவன் பேசியதை கூட காதில் வாங்காமல் செல்ல..
“என்ன தேவ் அவங்க அப்படி முறைச்சிட்டு போறாங்க பத்திரகாளி மாதிரி “
அவனது வார்த்தையில் தேவ் சில்லறையை சிதற விட்டது போல் சிரிக்க .
குகனின் வார்த்தையை கேட்ட அந்த பெண் திரும்பி நின்று ஒரு நிமிடம் சித்தப்பன், மகன் இருவரையும் முறைத்து விட்டு, ‘இந்த வயசிலேயே எப்படி பேசுது பாரு இந்த குட்டி சாத்தான்..அதை கேட்டு அந்த மலமாடும் பல்ல காட்டுது ‘என்று அவள் முனக..
“எங்கள முறைச்சி, வாய் குள்ள எங்கள அரவை மிசின் இல்லமா அரைச்ச வரைக்கும் போதும், அதை விட்டுட்டு சிக்னல் விழுந்துடுச்சு பாரு ,கெளம்பு அங்குட்டு பார்த்து, அவசர அவசரமா இடிச்சுகிட்டு போன இல்ல,”என்று அவன் சொல்லி வாயை மூடவில்லை..
அதற்கு முன்பாகவே, அவளை மோதியது போல் ஒரு கார் செல்ல ,
“ஏய் !”என்று திட்ட வாய் எடுத்தாள்…
தேவ் இப்போது வேகமாக வாய் விட்டே சிரிக்க,
இருவரையும் முறைத்து விட்டு ,காலையும் உதறி, முனகிக் கொண்டே தனது வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் மித்ரா.
சூப்பர்