மறுநாள் விடியலில் தேவின் விசில் சத்தத்தில் கண் விழித்தாள் அவனின் ‘இம்சை ராட்சசி மித்ரா’..
“என்ன தேவ் விசில் சத்தம் எல்லாம் பலமா இருக்கு “என்று சோம்பல் முறித்தபடி கேட்க.
கள்ள சிரிப்பை உதட்டில் தேக்கி, கண்ணாடி வழியாக,அவளை ரசித்தபடியே இருக்க ..
“நான் கேட்டுட்டு இருக்கேன். பதிலையே காணோம் “என்று எழுந்து கொள்ள.
” அச்சச்சோ “என்று பதறியவளாக, வேகமாக போர்வையை எடுத்து தன் மீது சுற்றிக்கொள்ள ..
திரும்பி நின்று கலகலவென்று, முத்துப்பற்கள் தெரிய, சில்லறையை சிதற விட்டது போல் சிரித்தவன்.. கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு, சுவற்றில் சாய்ந்தபடி அவளை ரசனையாக பார்க்க..
அவனின் பார்வையில், நாணம் சூடிக்கொள்ள.. “தேவ்” என்று சிணுங்கினாள்.
” இப்போ என்னடி ஆச்சு! எதுக்கு பதறுற ,எதற்கெடுத்தாலும் எதுக்கு இவ்வளவு பதட்டம்..நான் தானே!” என்று அவள் அருகில் நெருங்கி வர..
” இல்ல வேணாம் தேவ்! அங்கேயே நில்லுங்க!”என்று ஒரு அடி பின்னோக்கி அவள் நகர,
” ஒன்னும் இல்லடி! குளிச்சிட்டு வா!” என்றான் அவள் தலையை வருடியபடி,
“இப்படியே வா?”
” பின்ன நான் வந்து குளிக்க வைக்கவா?” என்றான் குறும்பு புன்னகையுடன் புருவம் உயர்த்தி..
“இல்ல வேணாம்” என்று போர்வையை இன்னும் இறுக்கிக் கொள்ள.
மென் புன்னகையுடன்,”நீ போய் குளி டி டிரஸ் எடுத்து தரேன்” என்றான் ..
“ஹம்”என்றவள் வேகமாக பாத்ரூமுக்குள் நுழைந்து கொள்ள..
இவனும், அவளுக்கு மாற்று உடை எடுத்துக் கொடுக்க,
குளித்துவிட்டு ஜாக்கெட், பாவாடை சகிதம் வெளியில் வந்தாள். புடவையை மேலே போர்த்தியபடி..
“நீங்க கொஞ்சம் வெளியே போங்க!”என்றாள் தலையை கீழே கவிழ்த்த படி,
“உனக்கு ஓகே வா. நான் வெளியே போகட்டா. தனியா வந்துருவியா?”
” ஏன் இங்க என்ன மிருகமா இருக்கு ? நான் காட்டுலையா இருக்கேன்?” என்றாள் வேகமாக..
அவளை பார்த்து கண் சிமிட்டியவன்.” மிருகம் இல்ல தான். ஃபர்ஸ்ட் டே இல்லையா ஒருவேளை உனக்கு கீழே தனியா இறங்கி வர தயக்கமா இருந்தால் அதான்”என்றான் கண்களை சுருக்கி..
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க இங்க இருக்கிறது தான் எனக்கு அன் கம்ஃபர்ட்டபிள்” என்றாள் தயக்கமாக அதே சமயம் மெதுவாக..
“ஓ! நான் இருந்தா அன் கம்ஃபர்டபுளா?”என்று நாக்கை உள் கன்னத்தில் வைத்து சுழற்றியபடி , கள்ள சிரிப்புடன்,ஒரு அடி முன்னோக்கி நகர்ந்து வர..
“தேவ் ப்ளீஸ்!”என்றாள் அவஸ்தை யாக,
“நேத்தே மொத்தமா பாத்தாச்சு! இன்னைக்கு மூடி இருக்க பாதி பகுதியை காட்டுறதுக்கு மேடமுக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கோ ?”என்றான் அவளை பார்வையால் விழுங்கி கொண்டு,சீண்ட எண்ணி…
“உங்கள,அது நேத்து”..
“ஏன்? இன்னைக்கு என்னவாம்?”
“தேவ் அது ராத்திரி”என்று சிணுங்கினாள்..
“ஓ! அப்போ ராத்திரி பிரச்சனை இல்ல..பகல் தான் பிரச்சனை ராங்கிக்கு அப்படியா?”
“உங்களை ஏன்? இப்படி அசிங்கமா பேசுறீங்க?”
“எதே! இது அசிங்கமா? அடியே ஒரு புருஷன் தன் பொண்டாட்டி கிட்ட பேசறது எந்த ஊர்லடி அசிங்கமா ஆச்சு?”என்றான் குழைவாக..
“மூச்சு முட்டுது தேவ் பிளீஸ்!”அவனின் அருகாமையில் அவஸ்தையாக, அவள் நெற்றியில் வேர்வைத் துளிகள் முத்து முத்தாக பூத்திருந்தது.
அவளை இனியும் சோதிக்க விரும்பாமல்,”சரிடி உனக்கு அதான் கம்ஃபர்ட்டபிள் என்றால், எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல! தனியா வந்துருவா இல்ல?” என்றான் மீண்டும் ஒருமுறை,
அவளும் கண் மூடி சிரிக்க..
” சரி” என்று பதற்றத்தில் அவள் முகத்தில் அரும்பிய வேர்வை முத்துக்களை துடைத்து விட்டு படி, அவள் முடிகளை காதின் ஓரம் ஒதுக்கி விட்டவன்..
” ரிலாக்ஸா இருடி! பர்ஸ்ட் மூச்சை இழுத்து விடு! அடிக்கடி இப்படி பதட்ட படாத! நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு ,இனி ஒரே ரூம்ல தான் இருப்போம்.இனி இது சகஜம் ” என்று அவள் நெற்றியில் இதழ் பதித்த படி, கண்களாலே தன் காதலை கடத்தி, அவளை சீண்டி சிவக்க வைத்து,காதில் சமரசம் பேசி அவளை கூச்சத்தில் நெளிய வைத்தான்.
அவளது ஒவ்வொரு செயலையும் ரசித்தான்.அவளது வெட்கத்தையும் கூடுதலாக ரசிக்க செய்தான்.
அவளது நாணத்தில் ,கிறங்கி நின்றான்..
அவனை பார்த்து அவள் மென் புன்னகை புரிய..
வேகமாக அவளை இழுத்து அணைத்து அவள் இதழோடு இதழ் பொருத்தி உறவாட விட்டிருந்தான்.
அவனின் இதழ் முத்தத்தில் கிறங்கி, கண் சொக்கி பிடரி முடியை அழுத்தி பிடித்தாள்..
அவளின் செயலில் இன்னும் இன்னும் மோகத்தீ கொழுந்து விட்டு எரிய, தாபத்தில் அவளின் இரு ஆரஞ்சு சுளைகளையும் மென்று சுவைத்தான்…
மூச்சு வாங்க அவளிடம் இருந்து விலகியவன். கள்ள சிரிப்பை உதட்டில் தேக்கி,மென் புன்னகையுடன்,கண் அடிக்க..”தேவ் “என்று அவனுக்கு சில பல அடிகளை பரிசாக வழங்கினாள்..
“சரிடி சீக்கிரம் வா!”என்று தலையில் முட்டி விட்டு, தன் சட்டியை சரி செய்தபடி, கலைந்த கேசத்தை கோதியபடி.. காலை உயர்த்தி வேட்டி நுனியை பிடித்து கொண்டு வெளியே சென்றான்
ஆண்மையில் மிளிரும் அவனது அழகை கண் இமை சிமிட்டாமல் பார்த்தாள் அவனின் ராங்கி ரங்கம்மா..
காதை குடைந்த படி ,காது மடலை தேய்த்தபடி ,கழுத்தை வருடியபடி,
சிரித்துக் கொண்டே, கீழே இறங்கி சென்றான்..
வேலு அவனை அப்படி பார்த்தவன் புன்னகைத்து கொண்டே, “என்னடா தனியா வர, மித்ரா எங்க?”
“அவளே ,வரேன்னு சொன்னா இன்னும் ரெடி ஆகல”
” ஓ! ஓகே டா. ஃபர்ஸ்ட் டைம்ல அன் கம்ஃபர்ட்டபிளா ஃபீல் பண்ணலாம்” என்று சிரித்தான் வேலு …
தேவும் சிரிப்புடன், அதோடு நிறுத்திக் கொண்டான்.
தேவின் சத்தம் கேட்டு, கிச்சனிலிருந்து வெளியில் வந்த சத்யா.
“மாப்பிள்ளை மித்ரா எங்க?” என்று கேட்க..
அவன் பதில் கூறுவதற்கு முன்பாகவே,முகத்தில் புது பொலிவுடன் ,புது பெண்ணிற்கே உரிய நாணத்துடன் கீழே இறங்கி வந்தாள் மித்ரா..
தன் மகளை அப்படி பார்த்தவர். பூரிப்புடன், கன்னம் வழித்து நெட்டி முறித்தார்.
“என்னமா பண்ற?” என்றாள் கூச்சமாக,
“ஒன்னும் இல்லடி!”என்று மென் நகை புரிந்தார்.
அவளின் சத்தம் கேட்டு, பெண்கள் படை அனைத்தும் சமையலறையில் இருந்து வெளியில் வர..
இருவரையும் அழைத்து சென்று சாமி கும்பிட்டார்கள். அதன் பிறகு, அவள் கையில் காபி கொடுக்க.. இருவரும் குடித்துக் கொண்டிருக்க,
மித்ராவின் அருகில் வந்த வித்யா, “மித்துமா உனக்கு ஃபர்ஸ்ட் டே இல்ல, வீட்ல ஸ்வீட் ஏதாவது செய்றியா ?”என்றாள்.
“செய்யலாமே!” என்றாள் கண்கள் பளிச்சிட..
” சரிவா “என்று அவளை சமையலறைக்கு அழைத்துச் சென்று எங்கெங்கு என்ன இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்க..
” அக்கா நான் தனியா செய்றேனே ப்ளீஸ்!” என்றாள் கண்கள் சுருக்கி,
” உனக்கு என்னன்ன எங்க இருக்குன்னு தெரியுமா?”
” தெரிஞ்சிக்கிறேன்.இனி தெரிஞ்சுக்கணும் இல்லையா ?நீங்க மட்டும் தான் கிச்சன் யூஸ் பண்ணனுமா? அப்படி எதும் இருக்கா?” என்றாள் புருவம் உயர்த்தி,
“அடிங்க! வரவர நீயும் ரியா கூட சேர்ந்து அவளை மாதிரி பேச கத்துக்கிட்ட “என்று சிரித்தாள்.
” ஆமா ஆமா! அப்படித்தான் நினைக்கிறாங்க போல மித்து.. கிச்சனை நீ உன் கைக்குள்ள போட்டுக்குவ என்ற பயம் வித்யா அக்காவுக்கு” என்று சிரித்த படி ரியா வர.
” உன்ன”என்று ரியாவை அடிக்க வர..
“சரி சரி ரெண்டு பேரும் வெளிய போய் அடிச்சுக்கோங்க! அப்பதான் நான் சீக்கிரம் செய்ய முடியும்” என்று புன்னகைத்தாள் இந்த வீட்டின் இளைய மருமகளாக மித்ரா.
“பாரு டா!”என்று சிரித்து கொண்டே வித்யா ரியாவுடன் வெளியில் வர..
அடுத்த 20 நிமிடத்தில் மணக்க மணக்க கோதுமை அல்வாவை அனைவருக்கும் சிறிய கிண்ணத்தில் போட்டுக் கொண்டு மித்ரா வெளியில் வர..
அதை சாப்பிட்டவர்கள்.” நல்லா இருக்கு” என்றார்கள்.
“நான் கூட நீ கேசரி செய்வ நெனச்சேன் மித்து மா பரவாயில்லை.புதுசா இருக்கு, கோதுமை அல்வா நல்லா இருக்கே,சிக்கிரமும் செஞ்சிட்ட” என்று நாக்கில் வைத்தவுடன் கரையும் அல்வாவை சுவைத்தபடி எழில் சொல்ல..
ரியா,தனத்தின் தோளில் கை போட்டவள்,” அத்தை பார்த்துக்கோங்க! இப்படியே எங்க மித்து நல்லா சமைச்சு போட்டு ,கிச்சனை அவ கைக்குள்ள போட்டுக்குவா பார்த்து இருந்துக்கோங்க.. இவ்வளவு நாள் உங்க கையில் இருந்த கிச்சன் அவ கைக்கு போய்டும்..கிச்சன் மட்டும் இல்லை, உங்க சின்ன பையனும் தான் இப்படியே சமைச்சு போட்டு அவ கைக்குள்ள வச்சுப்பா”..
“இருக்கட்டுமே! அவ வீடு, அவ புருஷன் கைக்குள்ள வச்சுக்கிட்டா எனக்கு சந்தோசம் தான் “என்றார் மன நிறைவாக..முகத்தில் மகிழ்ச்சி மிளிர..அவருக்கு தன் இளைய மகனை முழுமையாக புரிந்து கொண்டவள் மருமகளாக இன்னொரு மகளாக வந்ததில் அப்படி ஒரு ஆனந்தம்..
“உங்க சின்ன பையனை மட்டும் இல்ல, இப்போ மாமா கிட்ட பாராட்டு பத்திரம் வாங்கி இருக்கா.. அடுத்து வேலு மாமா, குகனு வீட்ல இருக்க ஒவ்வொரு ஆளா கைக்குள்ள போட்டு அப்புறம் உங்களை டம்மி பீசா உட்கார வச்சிருவா, வித்யாவையும் பார்த்து சூதானமா நடந்துக்கோங்க மாமியாரும் ,மருமகளும்” என்று பயமுறுத்துவது போல சிரிப்புடன் சொல்ல..
“என்னடி பேச்சு இது?” என்றார் சத்யா கண்டிப்புடன்..
” அண்ணி விடுங்க! அவ விளையாட்டு தனமா தானே சொல்ற”
“எதே! நடக்க போறத முன் கூட்டியே உங்களுக்கு எச்சரிக்கை பண்றேன். எனக்கென்ன வந்தது?”என்றாள் போலியாக வருத்தப்படுவது போல,
“கிச்சனை அவ கைக்குள்ள போட்டா போட்டுட்டு போகட்டுமே டி உனக்கு என்ன வந்துச்சு ?”என்றாள் வித்யா புன் சிரிப்புடன்.
” எங்க அக்கா உங்களுக்கு போட்டியா வரப்போறா ?பார்த்து” என்றாள்..
” அடிங்க!” என்று அவள் முதுகில் ஒன்று போட்டு சிரிக்க ..
“மாம்ஸ் என்ன இப்பவே மெய் மறந்து இருக்கீங்க போல ? அவ சமையல்ல..”என்று இப்போது அவனை சீண்ட ..
“பின்ன இல்லையா? எவ்வளவு டேஸ்டா இருக்கு” என்றான் நாக்கில் எச்சு ஊற வேலும் குதூகலமாக..
“பாத்தீங்களா? இப்பவே உங்க புருஷன் பாதி அவுட் .இன்னும் போக போக என்ன நடக்குமோ யார் கண்டா?” என்று வித்யாவை சீண்டி விட ,
வேலு சத்தமாக சிரிக்க..வித்யா முறைத்தாள்.
“அது என்ன அவனை மட்டும் வார்த்தைக்கு வார்த்தை மாம்ஸ் மாமான்னு கூப்பிடுற? என்ன மட்டும் தேவ்னு சொல்ற?” என்றான் வருத்தம் தோய்ந்த குரலில் தேவ்..
“ஏன்?உங்களையும் மாமானு கூப்பிடனுமோ?” என்றாள் ஏற்ற இறக்கமாக..
“இல்லையா ? பின்ன அவனை மாமானு கூப்பிட்டா என்னையும் அப்படி தான அப்போ கூப்பிடனும்” என்றான் கண்களை சுருக்கி..
” மித்ரா கேட்டுக்கோ?” என்றாள் இப்போது இவர்களுக்குள் நெண்டி விட்ட படி,
“நீ அவரை ஒன்னும் மாமானு கூப்பிட வேணாம்.. எப்பவும் போல தேவ்னே கூப்பிடு “..
“ஏனாம்? மேடம் மட்டும் தான் மாமானு கூப்பிடணுமோ? நாங்க கூப்பிட்டா ஆகாதோ ?”என்று வம்பு இழுத்தாள்.
“அதான பாரு டா..அது என்ன உன் புருஷனை மட்டும் மாமனு சொல்ல கூடாது..ஆன, என் புருஷனை மட்டும் இவ மாமனு கூப்பிடுவாளா ?”என்று வித்யாவும் சண்டைக்கு வர.
“இந்த கண்கொள்ள காட்சியை பார்க்கும் போது எவ்வளவு சந்தோஷமா இருக்கு “என்றான் வேலு.. புன்னகை மாறாமல்,
“என்ன டி என் இரண்டு மருமகளுக்கு நடுவுல சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்க்கலாம்னு பாக்குறியா ?”என்றார் தனமும் சிரிப்புடன்..
“ஆமா ஆமா சண்டை மூட்டி விடுறாங்க போவீங்களா? இந்த ரெண்டு ஓல்ட் பீஸ்சையும் வச்சிகிட்டு இவங்க தான் சண்டை போடுறாங்கனா நான் இதுல மூட்டி வேற விடுறேன் பாருங்க?”
“எதே! ஓல்ட் பீஸ்ஸா அப்புறம் எதுக்குடி? என் புருஷனை மாமனு” சொல்ற..என்று வித்யாவும்,” அப்ப என் புருஷனை ஏன்டி சீண்டி விளையாடுற “என்று மித்ராவும் சண்டைக்கு வரிந்து கட்டிக் கொண்டு வர ..
இங்கு மித்ரா என்னோட புருஷன் என்று முதல் முறையாக உரிமையாக சொல்ல..உள்ளுக்குள் காதல் பெருக்கெடுத்து ஓடியது தேவுக்கு..காதலுடன் அவளைப் பார்க்க.. அவளோ ,தன் தங்கையிடம் சண்டைக்கு மல்லுக்கட்டிக் கொண்டு இருந்தாள்..
“உங்க ரெண்டு பேரோட புருஷனும், ஓல்ட் பீஸ், ஓல்ட் பீஸ் ஓல்ட் பீஸ் தான் மா..நான் ஏன் ?உங்க புருஷனை மாமனு சொல்லப் போறேன்.. எனக்கு ஃப்ரெஷ் பீஸ் தான் வேணும் ” என்று முகம் கொள்ளா புன்னகையுடன் சிரிக்க..
“ஓல்ட் பீஸ்” என்றவுடன் அண்ணன் ,தம்பி இருவரும் அவளை அடிக்க துரத்த..
அங்கு சிரித்துக் கொண்டிருந்த குகனை தூக்கிக்கொண்டு வெளியில் ஓடினாள் ரியா..
அவள் வெளியே சென்றவுடன், அண்ணன் ,தம்பி இருவரும் அப்படியே நிற்க..
” சரி ஓல்ட் பீஸஸ்! நான் இவனை கூட்டிட்டு கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்” என்றாள் மென் சிரிப்புடன்..
“எங்கடி போற இந்த நேரத்துல?” என்று சத்யா கத்த..
“வரேன் மா.கத்தாத..” என்றவள் வேகமாக குகனை தூக்கிக் கொண்டு நகர்ந்தாள்
“அண்ணி எப்படி அண்ணி இவளை வச்சு வீட்டில் மேய்க்கிறீங்க?” என்று சிரித்தார் தனம்.
” பெருசு உம்முனு இருந்தே சாகடிக்கும் ,சின்னது தொன தொணன்னு பேசிய சாகடிக்கும்” என்றார் சிரித்துக் கொண்டே சத்யா..
“நீ உம்முனு இருப்பியாடி ? திறந்த வாயை முடுறதே! கிடையாது..”என்று கீழே குனிந்து அவள் காதில் கிசுகிசுத்து விட்டு, யாரும் பார்க்காத நேரத்தில், புடவை மறைவில் தெரிந்த அவள் மாநிற இடுப்பை கிள்ள ..
“ஏய்!”என்று வேகமாக கத்திய படி துள்ளி குதித்தாள்..
சுற்றியுள்ள அனைவரின் பார்வையும் ,அவள் மீது பட..
கன்னத்தை தேய்த்தபடி சிறிது நகர்ந்து நின்று கொண்டான் அவளின் வசியகாரன் தேவ்..
“உங்கள வச்சுட்டு என்னதான் பண்றதுன்னு தெரியல, மானம் போகுது!” என்று முனகி கொண்டே தலையை கீழே கவிழ்ந்து கொண்டாள்.
அனுபவசாலிகளாக அவர்களது சேட்டைகளை உணர்ந்தவர்கள் புன்னகையுடன் அமைதியாகி விட்டார்கள்.