Loading

இரு குடும்பத்தினரும் திருமணத்திற்கு பட்டு எடுக்க சென்றார்கள்.

 

தேவ் ஓர விழியாலே அவளை சிவக்க வைத்தான்.

 

ரியா தான் பொறுமை தாங்காமல், “அட ச்சீ தூர போங்க! உங்க தொல்லை தாங்கல!,  மாம்ஸ் எப்படி தான் வீட்ல இவரை வச்சு சமாளிக்கிறீங்க ?”

 

“என்ன பண்ண எல்லாம் என் தலையெழுத்து, கூட பொறந்து தொலைச்சிட்டானே !”என்றான் கவலை போல,

 

வித்யா இருவரின் காதையும் திருகினாள்.

 

” நீங்க பண்ணாததை ஒன்னும் அவன் பண்ணலயே?  என்று வேலுவிடமும் ,ரியாவிடம் திரும்பி” உனக்கு கல்யாணம் நடக்கும் போது தெரியும் டி “என்றாள்.

 

” சரி சரி விடுங்க! எங்க மாம்ஸ் கிட்ட பேச ஆரம்பிச்சாலே உங்களுக்கு மூக்கு வேர்த்து வந்து நின்னுடுறீங்க எப்படின்னு தான் தெரியல ?”என்று வாயை கோணித்த படி சொல்ல..

 

“அடியே! இன்னொருமுறை மாம்ஸ் நோம்ஸ்னு  சொன்னன்னு வச்சுக்கோ மவளே !அடுத்த டைம் பேச நாக்கு இருக்காது, இழுத்து வச்சு தச்சிடுவேன்”

 

ரியா சிரித்தபடியே,” ஹலோ! அவர் என்னோட மாம்ஸ் தான் ! அப்படி தான் கூப்பிடுவேன், நீங்க என்ன பண்றீங்க நானும் பாக்குறேன்” என்றாள் ஏட்டிக்கு போட்டியாக,

 

ரியா தலையில் கொட்டி சிரித்த வித்யா  அவள் கன்னத்தில் இதழ் பதிக்க,

 

பதறியவளாக, “என்ன பண்றீங்க? கா” என்று கன்னத்தை தேய்த்தவள்.

 

சிரிப்புடன்,” பப்ளிக் பிளேஸ்ல இருக்கோம். அவளா நீங்க ?” என்றாள் மேலும் கீழும் பார்வையை பதித்த படி,

 

“அடிங்க!” என்று அவள் கையில் கிள்ளிவிட்டு” பக்கி  எப்படி பேசுது பாரு” என்று முனகினாள். 

 

வேலு வயிறு குலுங்க சிரித்தான். அவன் சிரிப்பில் கண்களும் கலங்கி இருந்தது..

 

“மாம்ஸ் என்ன அக்கா இப்படி எல்லாம் பேசிட்டு இருக்காங்க? நீங்க கேள்வி கேட்காம சிரிச்சிட்டு இருக்கீங்க?” என்று  இதழ் பிதுக்க,

 

அவள் கையை பிடித்துக் கொண்டு,” உண்மையா உங்க அக்கா ரொம்ப வருஷம் கழிச்சு இப்போதான் பழையபடி எனக்கு கிடைச்சிருக்கா ரியா”

 

அவளோ, ஒன்றும் தெரியாதவள் போல் “அப்படியா?” என்று கண்கள் விரிய ஆச்சரியமாக கேட்பது போல் கேட்க.. 

 

“நீ எங்களுக்காக தான். எல்லாம் பண்றேன்னு தெளிவா தெரியுது. அது கூட புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு நான் கிடையாது. அப்போ சுத்தி நடக்கிறது தெரியாம தான் இருந்தேன். ஆனா, இப்ப அப்படி இல்லையே?” என்று சிரித்தாள்.

 

“சந்தோஷமாக இருந்தா சரிக்கா!  ஆனா,என்னோட மாம்ஸை நீங்க இப்படி எல்லாம் ஐஸ் வச்சா விட்டுக் கொடுத்துருவேன் என்று மட்டும் நினைக்காதீங்க” என்று சிரித்தாள்.

 

மூவரும் சிரித்துக்கொண்டே, தேவ், மித்ரா இருக்குமிடம் வந்தார்கள்.

 

“டேய் இன்னுமா எடுத்து முடிக்கிறீங்க ?அப்பா போன் பண்ணிட்டே இருக்காரு டா” என்று புலம்பினான்.

 

குகனையும் பெரியவர்களிடம் விட்டுவிட்டு சிறியவர்கள் மட்டும் மேலே பார்ப்பதாக பொய் சொல்லி வந்தார்கள்.

 

உண்மையாகவே மேலே துணி எடுக்க தான் வந்தார்கள். ஆனால், தேவ் தான் தனிமை வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

 

தினமும் மித்ராவை பார்த்து பழகியவனுக்கு, இப்பொழுது வீட்டில் தனம் கரராக கொஞ்ச நாளைக்கு நீ ஒன்னும் ஸ்கூலுக்கு இவனை விட போக வேணாம். மூவரில் யாராவது போவாங்க, இல்லனாலும் நான் போய் கூட்டிட்டு வந்துக்கிறேன் என்று சொல்லிவிட..

 

தன் தாயை பாவமாக பார்த்தான்.

 

” அவர் என்னடா நினைச்சுட்டு இருக்க ? இன்னும் ஒரு மாசத்துல கல்யாணத்தை வெச்சுகிட்டு”என்று அதட்டியவுடன் அமைதியாகி விட்டான்.

 

ஆகையால், இப்பொழுது ஒரு மாத காலமாக அவளை பார்க்க முடியாமல் தவிக்கிறான். அவ்வப்போது, திருட்டுத்தனமாக ஸ்கூலில் வைத்து சிறிது நிமிடம் மட்டும் பேசிவிட்டு செல்கிறான்.

 

வெளியே போகக்கூடாது என்று  இரு வீட்டிலும் சொல்லிவிட்டார்கள். கல்யாண தேதி வச்சாச்சு ,இனி வெளிய சுத்தற வேலை இருக்க கூடாது என்று சொன்னதால், அமைதியாகி விட்டார்கள்.

 

ஆகையால், இருவருக்கும் தனிமை தர எண்ணி, மற்ற மூவரும் தனியா நின்று கொண்டார்கள். 

 

” இது ஓகேவா ?”என்று மூவரிடமும் மித்ரா ஒரு டிரஸ் காமிக்க .

 

“இது என்னடி அவங்க மூணு பேருக்கும் ஒரே மாதிரி, நம்ம மூணு பேருக்கும் ஒரே மாதிரி.உங்களுக்கு தான் கல்யாணம் மறந்துடாதீங்க?” என்றாள் ஒன்றும் புரியாமல் ரியா .

 

வித்யாவும் அதையே கேட்க.

 

” கல்யாணத்துக்கு தானே ஒரே மாதிரி டிரஸ் போட கூடாது. அதுக்கப்புறம் நம்ம ஒரே மாதிரி டிரஸ் போடலாம் இல்ல.அதான் இவங்களுக்கும் அதே மாதிரி டிரஸ் நல்லா இருக்கா?  குகனுக்கு சின்ன வேஸ்டி சட்டை செமையா இருக்கும் அக்கா” என்றாள் புன் சிரிப்புடன்,

 

வேலு ,வித்யா ,ரியா மூவரும் சிரிக்க .

 

அதன் பிறகு, அந்த டிரஸ் எடுத்துக்கொண்டு கீழே இறங்கி வந்தார்கள்.

 

” இந்த துணி எடுக்கறதுக்கா இவ்ளோ நேரம் ?” என்றார் சத்யா தன் இரு மகள்களையும் மேலும் கீழும் பார்த்தபடி..

 

” போச்சு இந்த மம்மி நம்மள நோட்டம் விட்டுட்டே இருக்குதே!” என்றாள் காதை குடைந்த படி ,

 

வேலுக்கு அதில் சத்தமாகவே சிரித்து விட்டான்.

 

” எதுக்கு  பெரிய மாப்பிள்ளை  சிரிக்கிறீங்க?” என்றார்  சத்யா.

 

 

ரியா அவனை முறைக்க..வித்யா,தேவும் கூட வாய் பொத்தி சிரித்தார்கள். 

 

“இல்லத்த எங்களுக்கு புடிச்ச மாதிரி எடுக்கணும் இல்லையா? அதான்” 

 

இப்போது தேவ் சத்தமாக சிரிக்க..

 

வேலு முறைத்தான்.

 

” இ..இல்லத்த அ..அது “என்று அவன் இழுக்க..

 

” நீங்களும் இந்த கூட்டுக் களவாணிங்க கூட சேர்ந்துட்டீங்களா? உங்கள எல்லாம் திருத்தவே முடியாது. இதுக்கு தான் உங்களை மட்டும் தனியா விட்டு இருக்க கூடாது”என்றார் சத்யா புலம்பலாக..

 

“சரி விடு சத்யா. எந்த நேரம் பார்த்தாலும் ஹெட் மாஸ்டர் மாதிரியே இருக்காத” என்றார் இளவரசன். 

 

” ஆமா நான்தான் ஹெட் மாஸ்டர் மாதிரி இருக்கேன். உங்க மக தான் டீச்சர் வேலைக்கு போயிட்டு இருக்கா. ஆனா,ஒன்னும் இல்ல முழுசா களிமண்ணு தான் இருக்கும் போல!”என்றவர் முனகி கொண்டே அமைதியாகி விட்டார்.

 

அவர் களிமண் என்றவுடன்,குகன் சிரிக்க..அனைவரும் சிரித்து விட்டார்கள்..

 

மித்ரா அனைவரையும் முறைத்தவள். காலை உதறியபடி, “இந்த அம்மா எப்போ பாரு என் காலை வாருவதையே  ஒரு வேலையா வச்சுட்டு இருக்கு!” என்று புலம்பினாள்.

 

“சரி விடுடா மித்ரா குட்டி! உன் அம்மாவ பத்தி உனக்கு தெரியாதா?” என்று தன் மகளை தன் தோளோடு அணைத்துக் கொண்டார் இளவரசன்.

 

அனைவருக்கும் துணி எடுத்து கொண்டு வீட்டிற்கு கிளம்பி விட்டார்கள். 

 

நாட்கள் வேகமாக சென்று ,நாளை திருமணம் என்று வந்து நின்றது. ரிசப்ஷன் நன்றாக முடிய,இரவு ரிசப்ஷன் முடிந்தது பிறகு, எப்படியோ தனது அண்ணன் ,அண்ணி, ரியா மூவரையும் பிரைன் வாஷ் செய்து மித்ராவை பார்க்க வேண்டும் என்றான்.

 

மூவரும் முறைத்துக் கொண்டு இருக்க..

 

” ப்ளீஸ்!” என்று கெஞ்சினான்.

 

அதன் பிறகு, சரி என்று வித்யா மித்ராவை அழைப்பது போல் சொல்லிவிட்டு ரியா. அவளை அழைத்துக் கொண்டு வந்து ஒரு ரூமில் விட்டுவிட்டு மற்ற மூவரும் ஒரு ரூமில்  இருந்து கொண்டார்கள்.

 

“எதுக்கு தேவ் இப்படி பண்றீங்க? நாளைக்கு காலைல கல்யாணம் தானே! நாளையிலிருந்து நான் உங்க கூட தானே இருக்க போறேன் அப்புறம் என்ன? இந்த ஒரு நைட்ல உங்களுக்கு?”

 

” நாளைக்கு நீ என்னோட பொண்டாட்டியா  ஆகிடுவ டி!” என்று அவளை தன் அருகில் இழுத்துக் கொண்டான்.

 

“தேவ்  என்ன பண்றீங்க?”என்று கூச்சத்தில் நெளிந்தாள்.

 

“என்னடி உன்னை பண்ணாங்க” என்றான் அவளை பார்வையால் வருடியபடி..

 

அவனது பார்வை தாக்கத்தை தாங்க முடியாமல், அவள் தடுமாற.. அவளை பார்த்து புன்னகைத்தபடி.. அவளது நாடியை பிடித்து நிமிர்த்தி தன்னை பார்க்குமாறு செய்தவன்.

 

” என்ன பார்த்து பேசுடி ராங்கி!” என்றான் மென்னகையுடன். 

 

” உங்கள” என்று அவள் அவனுக்கு ஒரு சில அடிகளை பரிசாக வழங்க ..

 

“ஒரு மாதிரி இருக்கு தேவ்.போலாம். சுத்தி சொந்தக்காரங்க எல்லாம் இருக்காங்க, தப்பா நினைச்சிட போறாங்க”

 

“கொஞ்ச நேரம் தாண்டி ப்ளீஸ்!” என்றவன்..

 

“மேடம் இப்பல்லாம் ரொம்ப பிஸி போல, என்னை கண்டுக்கறது கூட கிடையாது .போன் பண்ணா கூட ரெண்டு மூணு வார்த்தை பேசிட்டு  அவசர அவசரமா வச்சிடறீங்க, ஸ்கூலுக்கு பார்க்க வந்தாலும் அவாய்ட் பண்றீங்க? ஹம் என்ன? “என்றான் புருவத்தை ஏற்றி இறக்கி..

 

“ஆமாம்.இப்போல்லாம் சார் கூட போன் பண்ணா வீடியோ கால் தான் வரீங்க, நேர்ல பார்த்தாலும் முன்னெல்லாம் என் கண்ணை பார்த்து பேசுவீங்க.ஆனா இப்ப என் கண்ணை தவிர வேறு எங்கங்கோ உங்க பார்வை போகுதே அப்புறம் எப்படி பேச” என்றாள்.. தவித்தபடி நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக்கொள்ள நா குழற..

 

குறும்பு புன்னகையுடன், கள்ள சிரிப்பை உதட்டில் தேக்கி, நாக்கை உள் கன்னத்தில் வைத்து ஒற்றை கண் சிமிட்டினான் .

 

அவளோ, நெளிந்தபடி, “தேவ்”என்று அவனிடமே ஒன்றினாள்.

 

அவளது அருகாமையில் உள்ளுக்குள் என்ன என்னவோ வேதியியல் மாற்றங்கள் நிகழ்வதை தடுக்க முடியாமல், தலையை அழுத்தமாக கோதியபடி,குறும்பு சிரிப்பு கொப்பளிக்க,பார்வையால் வருடியபடி ,அவளது பட்டு கன்னத்தில் பட்டும் படாமல் இதழ் பதித்தான்…

 

அவளோ, கூச்சமும் நாணமும் போட்டி போட,விழிகள் விரிய

அவனை பார்க்க..

 

“அப்படி பாக்காத டி ராட்சசி..இப்படி பார்த்து பார்த்து தான் மொத்தமா உன்கிட்ட கவுந்துட்டேன்..இம்சை ராட்சசி “என்றான் மென் புன்னகையுடன்…

 

“நான் உங்களுக்கு இம்சையா?”என்றாள் எகிறி கொண்டு,

 

“பின்ன இல்லையா? என்ன அனுதினமும் உள்ள உட்கார்ந்திட்டு எந்த வேலையிலும் கவனத்தை செலுத்தி விடாமல் இம்சை பண்ற இம்சை ராட்சசி இல்லையா?” என்று மீண்டும் ஒருமுறை அவள் கன்னத்தில் அழுத்த முத்தமிட்டான்.

 

 

அவளோ கண் மூடிய நிலையில் இருக்க..அவளை பார்வையால் விழுங்கினான்.அவனின் மனமெங்கும் மல்லிகை வாசம்..

 

“கண்ணை திற டி ராங்கி!”என்றான் குழைவாக..

 

அவளோ தலையை இட வலமாக ஆட்டினாள். முடியாது என்பது போல். 

 

அவளது கன்னங்களை கையில் ஏந்தி கொண்டான் அவளின் வசியக்காரன்..

 

“மிது!” என்று வார்த்தைக்கு வலிப்பது போல் மொத்த காதலையும்,நேசத்தையும் திரட்டி அவன் அழைக்க..

 

கண் மூடிய நிலையில்,இமைகளை உருட்டிக் கொண்டு இருந்தவள்.. பட்டென்று இரு கண்களையும் விழிகள் விரிந்த படி திறந்து உருட்டினாள்.

 

அவனோ,அவளது பார்வையில் கட்டுண்டு இருந்தவன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து வைக்க..

 

அதில் மேலும் சிவந்தாள் பெண்ணவள்..

 

“அய்யயோ! என் ராட்சசி என்னன்னவோ பண்ணி, இம்சை பண்றாளே ! .. மூச்சு முட்டுதடி!”என்றான் கிறங்கிய குரலில்,

 

அவள் சிரிக்க.. “இந்த லிப்ஸ் கூட என்ன என்னென்னமோ பண்ணுது டி,நல்லவனையும் கெட்டவனாக்குது” என்று விரல் கொண்டு அவள் இதழ்களை வருட..

 

“தேவ்” என்று சிணுங்கினாள். “உஷ்!கொஞ்ச நேரம் அமைதியா இருடி!” என்று விரல் கொண்டு வருடியவன்.. அவளது கண்களை உற்று நோக்க.. அவள் கண் மூடிய நிலையில் இருக்க..

 

வேகமாக, அவளது இரு ஆரஞ்சு சுளைகளையும் தன் இதழோடு உறவாட விட்டிருந்தான்.

 

மூச்சு வாங்கியபடி அவளிடம் இருந்து விலகியவன்.அவள் நெற்றியோடு நெற்றி முட்டி சிரித்தான்.மேலும் அவனோடு ஒன்றினாள்.அப்போது,ரூம் கதவு தட்டப்பட்டது ..

 

“கரடி வந்துட்டான் “என்றபடி கதவைத் திறக்க.

 

அங்கு  ரியா முறைத்துக் கொண்டு நின்றாள்.” நான் கூட வேலுனு நினைச்சேன்”

 

“தோ பாருங்க! நாலு முறை வந்து எங்க அம்மா கேட்டுட்டு போயிடுச்சு! எவ்வளவு நேரம் தான் வித்யாக்காவும் அந்த ரூம்ல அடைந்து கிடப்பாங்க” என்று முறைத்தாள்.

 

அசடு வழிய மித்ரா வெளியே வர ..

 

“அட ச்சீ தொடச்சிக்கோ! வா போலாம் “என்று அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு  ரியா நகர..

 

“ரியா”என்றான்  பாவமாக தேவ்.

 

” அவ்வளவு தான் உங்களுக்கு மரியாதை. எங்க அம்மா கிட்ட இதுக்கு மேல என்னால பாட்டு வாங்க முடியாது” என்றவள் வேகமாக மித்ராவை அழைத்து கொண்டு அங்க இருந்து ஓடி இருந்தாள்.

 

சத்யாவிடம் சில வசவுகளையும் வாங்கிக் கொண்டாள். சத்யா முறைக்க ..இருவரும் கண்டுக்காமல் அமைதியாகி விட்டார்கள். 

 

மறுநாள் காலையில் 6:00 டு 7:30 முகூர்த்தமாக இருக்க,சிவப்பு கலர் புடவையும்,பச்சை கலர் பிளவுஸிலும் தேவ லோகத்திலிருந்து இறங்கி வந்த தேவதை போல் மித்ரா ஜொலிக்க.வித்யா, ரியா இருவரும் அவளை மேடைக்கு அழைத்து வந்தார்கள் ..

 

குகன் இங்கு தேவின் அருகில் பூச்செண்டை கையில் வைத்தபடி, மித்ரா எடுத்துக்கொடுத்த வேஷ்டி சட்டையில் கன்னக்குழி விழ முத்துப்பற்கள் தெரிய சிரித்த முகத்துடன் பேசிக்கொண்டிருந்தான்.

 

ஐயரோ ,”இங்க மந்திரத்தை சொல்லுப்பா!” என்று சொல்ல..

 

சிரித்தபடி மந்திரத்தை சொல்லிக்கொண்டு இருந்தான்.

 

குகன் தானும் மத்திரத்தை சொல்ல..

 

” டேய் கொஞ்ச நேரம் அமைதியா இருடா, மானத்தை வாங்கிடாத” என்றான் வேலு கீழே குனிந்த படி,

 

மித்ராவும் வந்து உட்கார.. அவளைப் பார்த்து கண்ணடித்தான். அவளும் இவனை பார்த்துவிட்டு, வேறு புறம் பார்வையை பதிக்க.

அவளை சீண்டி சிவக்க வைத்தான்.

 

நல்ல நேரத்தில் ஐயர் தாலி எடுத்து கொடுக்க..அவளைப் பார்த்து கண் சிமிட்டியபடி ,அவளது கண்களை ஊடுருவ.. அவளும் தலையாட்டி சிரிக்க.. அதன் பிறகு, அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னில் சரி பாதி ஆக்கி இருந்தான்..

 

வேலு விசில் அடிக்க ..திருமணமும் நல்ல முறையில் முடிந்திருந்தது. ஒரு சில சடங்குகளையும் முடித்துக் கொண்டு நல்ல நேரத்தில் மணமக்களை வீட்டிற்கு அழைத்து சென்று விளக்கேற்ற வைத்தார்கள்.

 

பகல் பொழுது முழுவதும் சொந்த பந்தங்கள் சூழ்ந்து இருக்க. மாலை 6:00 மணி போல், தனம் ரூமுக்குள் வித்யா ,ரியாவுடன் மித்ராவை விட்டுவிட்டு இரவு உணவு செய்தார்கள்.

 

சீக்கிரமாகவே சாப்பிட்டுவிட்டு மித்ராவை தேவ் ரூமுக்கு அனுப்பி வைக்க,

 

பயமும் பதற்றமும் தொற்றி கொள்ள…முகத்தில் வேர்வை முத்துக்கள் பூக்க… ரூமுக்குள் நுழைய..

 

குகன் அங்குதான் அமர்ந்திருந்தான். அவனை அங்கு பார்த்தவள், இவ்வளவும் நேரம் இருந்த பதற்றம் விலக,சிரித்துக் கொண்டே ரூமுக்குள் நுழைந்தாள்.

 

“ஏன்டா ரெண்டு இட்லியோட எழுந்துட்ட”என்றாள் அவன் அருகில் உட்கார்ந்த படி,

 

ஒரு வேலை அந்த ரூமில் குகன் இல்லாமல் இருந்திருந்தால் அவளிடம் சிறிது தடுமாற்றம் இருந்திருக்கும். குகனை பார்த்தவுடன், அதுவரை இருந்த தடுமாற்றமும் ,தயக்கமும் நீங்கி எப்போதும் போல் பேசினாள். அந்த ரூமே தனக்கு பழக்க பட்டது போல் கட்டிலில் உட்கார்ந்து படி ,அவனை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டாள்.

 

“நான் அவ்வளவுதான் மிது சாப்பிடுவேன் “என்று அவனும் சிரிக்க..

 

அவன் நெற்றியில் முட்டி சிரித்துக்கொண்டு,சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள்.

 

இருவரையும், அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான் தேவ்.

 

சிறிது நேரத்திற்கு பிறகு, மித்ராவின் மடியில் இருந்து இறங்கினான் குகன்.

 

” ஏண்டா தூக்கம் வந்துருச்சா?”

 

” இல்லை” என்று தலையாட்டினான்.

 

” அப்புறம் ஏண்டா?”

 

மித்ராவின் கன்னத்தில் இதழ் பதித்தவன்.தேவின் கன்னத்திலும் இதழ் பதித்து விட்டு “பாய் தேவ்,மிது! என்று கீழே இறங்கி ஓடி விட்டான்.

 

” டேய்!” என்று இருவரும் அழைக்க, காதில் வாங்காமல்,”நான் அப்பா, அம்மா கூட தூங்க போறேன்” என்று கிளம்பி இருந்தான்.

 

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவளுக்கு  பதட்டம் தொற்றிக் கொள்ள .தேவை அவஸ்தையுடன் பார்க்க,

 

அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே ,கதவை தாழ்ப்பாள் போட்டவன். அவளின் அருகில் வந்து சிறிது இடைவெளி விட்டு உட்கார்ந்தபடி பார்வையால் அவளை விழுங்கினான்.

 

அவளோ,அவனின் பார்வையை எதிர்கொள்ளவும் முடியாமல், ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்பதுபோல் அவஸ்த்தையாக உணர்ந்தாள்.

 

கட்டிலில் இருந்த,அவள் கையை பிடிக்க..

 

அடுத்த நொடி, உடலில் லேசாக அதிர்வலை .. அவளது பதற்றத்தை எண்ணி சிரித்தவன் .

 

“ராங்கி என்னவோ புதுசா இன்னைக்கு தான் பாக்குற மாதிரி பண்ணாதடி! உள்ளுக்குள்ள ஏதோ பண்ணுது!” என்றான் கிறக்கமாக..

விழிகள் விரிய அவள் பார்க்க.. 

 

அவள் அருகில் நெருங்கி உட்கார்ந்து ,அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். “இப்ப எதுக்கு இவ்ளோ பதட்டம் “

 

“அ..அ..அது” என்று  வார்த்தை தந்தி அடிக்க..

 

“மேடம் பர்மிஷன் இல்லாம எதுவும் பண்ணிட மாட்டேன்” என்று நாக்கை உள் கன்னத்தில் வைத்து சுழற்றிய படி , இதழில் கள்ள சிரிப்புடன் அவன் கூற,

 

“தேவ்” என்று சிணுங்கினாள்..

 

“பின்ன என்னடி! ஏதோ, ரேப் சீன் நடக்க போறது போல அப்படி முகம் ஃபுல்லா வேர்த்து கொட்டுது அப்படியே கடிச்சா தின்னுடுவேன்”..

 

கோபமோ? என்று பயந்து அவள் அவன் முகம் பார்க்க..

 

முத்துப்பற்கள் தெரிய சிரித்தான்..”ஒன்னும் இல்லடி! முதல்ல மூச்சை நல்லா இழுத்து விடு! நான் உன் கூட தானே இருக்கேன்.”

 

“ஹம்”என்றவள் மூச்சை இழுத்து விட்டு,”குகனை பார்த்த உடனே கொஞ்சம் நார்மலா தான் இருந்தேன் தேவ். அவன் போன உடனே ஒரு மாதிரி ஆயிடுச்சு”

 

” ஏன் என்ன பண்ணிடுவாங்களாம் ?”என்றான் கண்ணை சுருக்கி,

 

அவளோ,வேறு எங்கோ பார்த்துக் கொண்டே பதில் சொல்ல..

 

” என்ன பார்த்து பேசுடி!” என்று நாடியை பிடித்து தன் புறம் திருப்ப..

 

“தேவ் என்ன ஏன் சீண்டி பாக்குறீங்க? அதான் முடியலனு தெரியுது இல்ல” என்றாள் சிணுங்களாக..

 

“ஓ!மேடம் இப்படியே என்ன பாக்காமலே இருந்திருவீங்களோ?” என்று அவள் முகத்தில் முத்து முத்தாக பூத்திருக்கும் வேர்வைத் துளிகளை கைக்கொண்டு துடைத்து விட,

 

கூச்சத்தில் நெளிந்து கண்களை இறுக்க மூடி இருந்தாள்.

 

“ராட்சசி கண்ணை திற டி”என்றவுடன் வேகமாக கண்ணை திறந்தவள்.

 

” இப்ப என்ன சொன்னீங்க ?தேவ்” என்றாள் கண்கள் மின்ன..

 

” நானாவது  இரண்டு  ,மூணு முறை சொல்லி இருக்கேன்.மேடம் இதுவரைக்கும் வாயை திறந்து சொன்னதில்லையே ?”என்றான் புருவத்தை உயர்த்தி..

ஏற்ற இறக்கமாக ..

 

“தே..தேவ்..  அ…அது “என்று அவள் தடுமாற,

 

“உனக்கு எப்ப கூப்பிட தோணுதோ? அப்ப கூப்பிடு. ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றவன் அவள் நெற்றியில் ஆழ்ந்த முத்தமிட்டான்.

 

இருவருக்கும் உடல் சிலிர்த்து அடங்கியது.. இதற்கு முன்பு ஒரு சில முறை முத்தமிட்டு இருக்கிறான். ஆனால், இன்று தன்னவனாக, தன்னவளாக முழு உரிமையுடன் கணவன், மனைவியாக முதல் முத்தம் ..

 

இருவரிடமும் சிறு அமைதி..திருமணத்திற்கு பின்பான முதல் முத்தத்தில் ஆழ்ந்து  இருந்தார்கள். அவள் கண் மூடிய நிலையில் இருக்க. 

 

சிரிப்புடன்..” மேடமுக்கு இன்னும் வேணுமோ ?”என்று குரலில் குதூகலத்தை காட்டியபடி கேட்க.

 

” உங்கள “என்று சிணுங்கினாள்.

 

“அப்புறம் என்னடி?” என்றான்..

 

அவளோ,உதட்டை கடிக்க..

 

“அது என்னடி பாவம் பன்னுச்சு?.. “என்றபடி ..அதற்கு விடுதலை கொடுக்க எண்ணி ,அவளின் பற்களில் இருந்து விடுதலை அளித்தான்..

 

அவள் உதடுகள் துடிக்க, அவனை நேருக்கு நேர் பார்த்தாள் ..

 

அவனும் புருவத்தை உயர்த்தி பார்க்க, 

 

கூச்சமும் நாணமும் போட்டி போட,அவள் கண் மூடிய நிலையில் இருக்க ..

 

அவளது இதழ்களை சிறை செய்திருந்தான்..

 

சிறிது நேரத்திற்கு பிறகு, இருவரும் விலகிக் கொள்ள.. அவனது கை அவளின் அங்கங்களை ஆராய ஆரம்பித்தது..

 

புடவை மறைவில் உள்ள அங்கங்களை விரல் கொண்டு வீணை மீட்ட தொடங்க. ..அவளும் அவனுக்கு இசைந்து கொடுக்க.

 

இருவரும் ஒருவரை ஒருவர் பின்னிப்பிணைந்து தங்களது இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்தார்கள்.

 

அனைத்தும் இனிதாக நிகழ்ந்து முடிய.. மூச்சு வாங்கிய படி, அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு அவள் நெற்றியில் இதழ் பதித்தவன்..” இம்சை ராட்சசி” என்று அவள் காது மடலை கடித்து,கழுத்தில் வாசம்  புரிய..

 

“தேவ்” என்று சிணுங்கியவள்.. 

“அடிக்கடி இம்சை சொல்றீங்க?”என்று முறைக்க..

 

அவளை இழுத்து தன்னோட இறுக்கி அணைத்து கொண்டவன்..” ஆமா டி இம்சை தான்..என் இதயத்தில் சிம்மாசனம் போட்டு உக்காந்துட்டு இம்சை பண்ற ராட்சசி ,எந்த வேலையும் ஓட மாட்டேங்குது ..எந்த நேரமும் உன் நினைப்பு தான்” என்று முத்துப்பற்கள் தெரிய சிரிக்க.

 

அவனை கட்டி அணைத்தபடி அசதியில் கண் அயர்ந்தாள்.

அவனும் இனிமையான நினைவுகளை சுமந்த படி, தூங்கி இருந்தான்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
11
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்