“எனக்கு புரியுது மித்ரா புரியாமல் இல்ல .அப்போ இருந்த சூழ்நிலைக்கு நான் அண்ணிகிட்ட உரிமை எடுத்து செஞ்சேன். அதுக்கப்புறம் அண்ணி அதிலிருந்து வெளிவர ஆரம்பிச்சதுக்கு பிறகு, நானாவே அவங்க கிட்ட இருந்து கொஞ்சம் கொஞ்சமா விலக ஆரம்பிச்சேன். மொத்தமா விலகல என்றாலும் கணவன் ,மனைவிக்குள்ள நான் போயிடக் கூடாது. அதேபோல வேலு கொடுக்க வேண்டிய நம்பிக்கையை,அவனுக்கு வேண்டிய இடங்கள் எல்லாத்தையும் நான் நிரப்பிட்டேன் என்ற உறுத்தலில் விலக ஆரம்பித்தேன்.வேலு கிட்ட நான் போய் மன்னிப்பும் கேட்டு அழுதேன்.ஆனா, அவன் என்கிட்ட சொன்ன ஒரு விஷயம்” என்றவன் அமைதியாக இருக்க.
” அவர் என்ன சொன்னாரு?”
” நீ செஞ்சது தப்போ? சரியோ? ஆனா, இப்போதைக்கு என் வித்யா எனக்கு கிடைக்க ஏதோ ஒரு வகையில் நீ தாண்டா காரணம். எனக்கு வலி இருந்துச்சு ,இருக்கு. இல்லன்னு சொல்ல மாட்டேன். ஆனா, இப்போ நீ அவகிட்ட இருந்து விலக ஆரம்பிச்சனா சப்போஸ் உங்க உறவை நீயே தப்பா நினைச்சிட்டியோ ?என்ற மாதிரி அவளுக்கு தோணலாம். இல்ல அப்படின்னா ,நான் உங்க உறவை சந்தேகப்படறேன் என்று கூட தோணலாம். இது ரெண்டுமே இல்லனாலுமே கூட அவளுக்கு எல்லாத்தையும் கொடுத்துட்டு இப்போ, அவகிட்ட இருந்து புடுங்குற மாதிரி ஒரு உணர்வு வந்துரும்.
ஆரம்பத்திலேயே நான் அவளுக்கு எல்லா இடத்திலும் துணையா நின்றிருந்தனா? ஓகே. ஆனா, ஒரு சில இடத்துல நீ அவளுக்கு துணையாக நின்று இருக்க. இப்போ அதிலிருந்து அவ வெளியே வரும்போது தனக்கு ஒரு சில நேரத்துல அப்பாவா ,அம்மாவா, தம்பியா துணை இருப்பேன்னு சொன்னவன். இப்ப தானே விட்டு விலகிட்டானே ?என்று எண்ணும்போது அவ பழைய நிலைமைக்கு போயிட்டானா? என்ற பயம் இருக்கு.
எப்படி குகன் விஷயத்துல அவனுக்கு ஏதாவது ஆகிடும் என்ற பயம் இருக்கோ? அதே போல தான்…”
“வேலு இது உன்னோட வாழ்க்கை”
“ஆமாம். என்னோட வாழ்க்கை தான்.நான் இல்லைன்னு சொல்லல. ஆனா, இது உன்னோட வாழ்க்கையும் சம்பந்த பட்ட விசியம் தான டா..உன்னுடைய சின்ன சின்ன ஆசையை கூட எனக்காக ,என்னால விட்டுக் கொடுக்கிற மாதிரி ஆகுதே.இது என்னோட விதி என்று, சொல்றதை தாண்டி வேற எதுவும் சொல்ல முடியாது.”
” இதெல்லாம் என்னால நடந்தது டா. இது எப்படி விதினு சொல்லுவ?”
“அதே உன்னால தான எனக்கு என் வித்யா கிடைச்சா. அதே உன்னால தான என் பையன் அழுதுட்டு அம்மாவுக்காக ஏங்கி தவிச்சப்ப அவளையும் என்னால பாக்க முடியாம, இவனையும் பார்க்க முடியுமா தடுமாறினேன். அப்போ நீ தோல் கொடுக்காமல் ,நீ கை கொடுக்காமல் இருந்திருந்தால், எனக்கு இதெல்லாம் இவ்வளவு சீக்கிரம் சாத்தியமும் கிடையாதுடா. அப்பா ,அம்மாவும் நீயும் எனக்கு கை கொடுக்க போய்தான். என்னால இதுல இருந்து அவங்க ரெண்டு பேரையும் வைத்துக்கொண்டு சிக்கிரம் வெளிய வர முடிஞ்சிடுச்சு .
வித்யா எனக்கு தரவேண்டிய எல்லா உரிமையும் கொடுக்க தான் செய்றா .கொடுக்காம இல்ல. ஆனா, ஏதோ ஒரு இடத்துல, ஒரு சில நேரங்களில், அவ உன் கிட்ட வந்து ஒரு சில விஷயத்தை முதலில் சொல்லணும்னு தேடும் போது ,ஒரு சின்ன வலி இருக்கு. இல்லன்னு பொய் சொல்ல மாட்டேன். அதையே தான் குகன் விஷயத்திலும் அப்பாவா என்ன தேடுறான். என்கிட்ட எல்லாமே சொல்றான். இல்லன்னு சொல்ல மாட்டேன்.
என்ன விட இப்ப வித்யா கிட்ட கூட அவன் ஒட்டிக்கிட்டான். ஆனா, ஒரு சின்ன விஷயம் அவன் உன்ன பத்தி சொன்னாலும் எனக்கு வலிக்குது.அதுக்காக, நீ அவன்கிட்ட காட்டுற நெருக்கமோ, அவன் உன்கிட்ட காட்டுற நெருக்கமோ தப்புன்னு நான் சொல்லவும் இல்லை.
அதை நான் தப்பா நினைக்கவும் இல்ல .ஆனா, எனக்கு என் பொண்டாட்டியும் ,பிள்ளையும் முழுசா வேணும். எதோ ஒரு வகையில, வலியையும் தாண்டி எனக்கு பயம் இருக்கு. அவங்க ரெண்டு பேரையும் எந்த இடத்திலும் இழந்திட கூடாதுன்னு..
பழைய நிலைமைக்கு இரண்டு பேரும் போய்ட கூடாதுன்னு. அவங்க என்னோட உணர்வுகளை புரிஞ்சிக்கிற நாள் வரும் தேவ். அன்னைக்கு அவங்களா என்னை தேடி வருவாங்க. அதுவரைக்கும் நான் வெயிட் பண்றேன். அப்படின்னு சொல்லிட்டான் .”
“சரி அப்போ இதுவரைக்கும் குகன் அவர்கிட்ட ..”
“இல்லடி! அவனே இப்ப க்ளோஸ் ஆகிட்டான். ஆனா, இவன் தான் அவன விட்டு ஒரு ஸ்டெப் பேக் போறான். பல நாள் அவங்க ரூம்லயும் போய் தூங்குறான். இவனவே ஓடிப்போய் படுத்துப்பான். அது பிரச்சனை கிடையாது. பகல்லையும் நார்மலா இருப்பான். நான் இந்த பக்கம் வேலைக்கு வரதால, அவனை நான் ஸ்கூலுக்கு கூட்டிட்டு வரேன். அதுதான் உண்மை.
அவன் என் கூட எப்படி தூங்குறானோ ?அதேபோல அவங்க ரெண்டு பேர் கூடவுமே தூங்குவான். ஒரு சில நாள் அம்மா, அப்பா கூடவும் போய் தூங்குவான். அதெல்லாம் பிரச்சனை இல்லை.”
” சரி எனக்கு இன்னொரு சந்தேகம் இருக்கு?”
” என்னடி உங்க அண்ணிக்காக, உங்க அண்ணன் வாழ்க்கைக்காக பாத்தீங்க இல்லையா ? அப்போ உங்க அப்பா ,அம்மாவை பத்தி யோசிச்சீங்களா?”
கண்களை சுருக்கி அவளைப் பார்த்தான்.
” கேட்பது புரியலையா ?இல்ல, தெளிவா கேட்கலையா? “
“நீ என்ன கேட்க வர என்பதை கேளு ?”
“நீங்க அக்கா மடியில படுக்கிற விஷயம். அன்னைக்கு இருந்த நிலைமைக்கு அவங்களுக்கு பஸ்ட் பியாரிட்டி கொடுக்கணும்னு, அவங்க அதிலிருந்து வெளியே வரணும் அதுக்காக படுக்க ஆரம்பிச்சீங்க இல்லையா? அப்போ ,உங்க அம்மாவுக்கு வலிக்கும் என்று உணரவில்லையா? “
லேசாக சிரித்தான் ..சிரித்தது மட்டும் இல்லாமல் , வேகமாக அவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்து கொண்டு ,அவள் நெற்றியில் இதழ் பதித்தான்..
” தேவ் நான் என்ன கேட்டுட்டு இருக்கேன்? நீங்க என்ன பண்றீங்க ?”என்றாள்.
அவன்தான் உணர்ச்சி மிகுதியில் அவளுக்கு முத்தமிட்டு இருந்தான். ஆனால், மித்ரா அதை பெரிதாக உணராமல் ,நான் ஏதோ கேட்க ?இவர் ஏதோ பண்ணுகிறார் ?என்பது போல் எண்ணினாள்.
சிரிப்புடனே,” வலிக்கும் தான். வலிக்காமல் எப்படி இருக்கும். குகன் என்கிட்ட இருக்கும்போது ,அண்ணிக்கு வலிக்கும்னு நினைச்சேன் இல்லையா ? ஒன்றரை வயசு புள்ள தன் கிட்ட வரலைன்னு அண்ணிக்கு வலிக்கும் போது ,20 ,25 வருஷம் என்னை தூக்கி வளர்த்து ,சீராட்டி வளர்த்த என் அம்மாவுக்கு வலிக்காமல் போயிடுமா?”
” அப்ப அந்த வலியை அத்தைக்கு கொடுக்கும்போது உங்களுக்கு தப்பாவே தோணலையா ?கஷ்டமாவே இல்லையா ?”
“இருந்துச்சி. ஆரம்பத்துல “
“புரியல ?”
“நான் தனம் கிட்ட “என்றவனின் வார்த்தை ..”அம்மாகிட்ட பேசிட்டேன்”என்று திருத்தினான்..
” நீங்க என்கிட்ட அத்தையை பேர் சொல்லி கூப்பிடலாம். ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் ஒன்னும் வெளி ஆள் இல்லையே ?”
புன்னகையுடன்,” நீ எனக்கானவ டி எப்படி? வெளி ஆளா ஆகுவ ? முதல் முதல்ல அண்ணி மடியில போய் படுத்த அன்னைக்கே, அண்ணிகிட்ட பேசி முடிச்சுட்டு ,அண்ணிகிட்ட மாற்றம் வர ஆரம்பிச்சிருச்சுன்னு அப்பா, அம்மாவை தனியா கூப்பிட்டு பேசிட்டேன் .எப்படி வேலு கிட்ட அவன் தப்பா எடுத்துக்குவானோ? என்று நினைத்து பேசும்போதே, அவங்க கிட்டையும் பேசிட்டேன்”
” என்னன்னு பேசினீங்க?”
அவளது கண்களை பார்த்தவன். அவள் கையை இறுக்கி பிடித்தான். அவளும் அழுத்தம் கொடுத்தாள்.
“அம்மாவுக்கு முதல்ல நான் அண்ணி மடியில படுத்த உடனே பதறிடுச்சு. அவங்க எங்க உறவை தப்பா எடுத்து கிட்டாங்கன்னு கிடையாது .வேற யாரும் தப்பா எடுத்துடக்கூடாது. முக்கியமா வேலு ,அண்ணியோட வாழ்க்கையில பிரச்சனை வந்துரக்கூடாதுன்னு.. பயந்தாங்க.
ஏற்கனவே அண்ணி இப்படி இருக்கும்போது, இப்ப நான் இதுபோல பண்ணி அவங்க வாழ்க்கையில சிக்கலாகிட கூடாதுன்னு பயந்தாங்க. அப்போ தான் அவங்களை தனியா பார்த்து நான் அண்ணி மடியில படுத்தது உனக்கு பிடிக்கலையா ?”என்று கேட்டேன்.
” புடிக்கலைன்னு சொல்ல முடியாது டா. ஆனா, நம்ம வாழ்ந்து கிட்டு இருக்க ,வளர்ந்த சூழ்நிலையில் சூழலில் இது எதுவுமே சரியானதா? நாகரீகமான செயலா ?இருந்தது இல்லையே?”
” நீ சொல்ற எல்லா சூழலும் , அண்ணியை இப்ப காப்பாற்ற வில்லையே ம்மா? இதே மாதிரி ஏதோ ஒரு சூழல் தானே அண்ணி இப்போ இந்த நிலைமையில் இருக்க காரணம்.
“
” அது எல்லாம் சரி தான்டா. ஆனா, வேலு “..
“அவன்கிட்ட பேசிட்டேன் மா நான். புரிந்து கொண்டான் .”
“சரிடா அவன் கூட புரிந்து கொள்ளட்டும். ஆனால், அக்கம் பக்கம் இருக்கவங்க ?சொந்தக்காரங்க? அவனோட பிரண்ட்ஸ் ,உன்னோட ப்ரெண்ட்ஸ்,வித்யா சொந்தக்காரங்க இப்படி எல்லாம் இருக்குல்ல ..வித்யா கிட்ட நீ இப்படி நடந்து கொள்வதை வேற யாராவது பார்த்து தப்பா பேசினா ?வேலுவுக்கு கஷ்டமா இருக்கும் இல்லையா?”
” அப்போ உனக்கும், அப்பாவுக்கும் கஷ்டமா இருக்காதாமா ?”
“இருக்கும் டா. என் புள்ளையை நான் தப்பா வளர்த்துட்ட மாதிரி பேச மாட்டாங்களா?”
“அப்போ உன் புள்ளையை நீ ஒழுங்கா வளர்கல என்று நினைக்கிறாயா? “
“நான் அப்படி சொல்லல. என் புள்ளையை நான் ஒழுங்கா வளர்த்ததால தான் அவன் கூட பிறந்தவன் தடுமாறி நிக்கும் போது தோள் கொடுக்க செய்கிறான்” என்று கண்ணீர் சிந்தினார் தனம் ..
“அப்புறம் என்னம்மா?” என்றவன் தன் அப்பாவின் கையை பிடித்தான்.
அவர் இவன் தோலை தட்டி கொடுத்து,” உன் அம்மா சொல்ற மாதிரி ஒரு பதட்டம் எனக்கு இருந்துச்சு. ஆனா, உன் அம்மா அளவுக்கு யோசிக்கல.ஏன்னா என்கிட்ட வந்து யாரும் நேரடியாக கேட்க மாட்டாங்க,உன் அம்மாகிட்ட நிறைய கேள்வி கேப்பாங்க? இது எல்லாத்தையும் தாண்டி ,நான் வெளியே வேலைக்கு போயிடுவேன். ஆனா, உன் அம்மா பொழுதுக்கும் வீட்ல இருப்பா, அக்கம்பக்கம் இருக்கவங்க பேசறது எல்லாம் கேக்கணும்”
சிரித்தான் .”அக்கம் பக்கம் இருக்கிறவங்க எல்லாம் பேச மட்டும் தானேப்பா செய்வாங்க, நம்ம நல்லா இல்லனா நம்மள தப்பு தப்பா பேச தான் வருவாங்க. ஆனா, நமக்காக துணைக்கு வர மாட்டாங்க.. அண்ணியோட அப்பா,அம்மா இல்லன்னு தெரிஞ்சப்ப வந்து எட்டி பார்த்தாங்க ,அதுக்கப்புறம் இத்தனை நாள்ல அண்ணியை வந்து எப்படி இருக்காங்கன்னு பார்த்தார்களா? வருத்தப்பட்டாங்களா? இப்படி உன் மருமகளுக்கு ஆயிடுச்சு ,பெத்த பிள்ளையை கூட தெரியாம இருக்கே அப்படின்னு குறையா தானப்பா சொல்லிட்டு போனாங்க! வேற ஏதாவது நல்ல வார்த்தையா பேசினாங்களா? சொந்த பந்தம்னா நாலு நல்லவங்க இருந்தா, அதுல 40 கெட்டவங்க இருக்க தான் பா செய்வாங்க. அவங்க எல்லாரையும் பார்த்தா நம்ம வாழ முடியாது”..
” இப்ப என்ன தான்டா சொல்ல வர ?”
“மா! உனக்கும், அப்பாவுக்கும் நான் அண்ணி மடியில படுத்தது தப்பா தெரியுதா ?”
“தப்பா தெரியல. ஆனா, “என்றவர் அமைதியாக .
“எனக்கு புரியுது” என்றான்.
அவர் கண்கள் கலங்க அவனைப் பார்க்க,
” இதுவரை ஒரு சின்ன சின்ன விஷயத்தை கூட உன் மடியில படுத்து சொல்லிட்டு இருந்தவன். இப்போ அவங்க மடியில படுக்கும் போது உனக்கு கஷ்டமா தான் இருக்கும். சப்போஸ் எனக்கு கல்யாணம் ஆகி என் பொண்டாட்டி மடியில நான் படுத்து இருந்தாலே !அது ஏதோ ஒரு வகையில உன்ன பாதிக்க தான் செய்யும். இவ்வளவு நாள் நம்மகிட்ட இருந்த உரிமை வேற ஒரு பொண்ணுக்கு போயிடுச்சுன்னு .ஆனா, இது எதுவுமே இல்லாம அண்ணி மடியில் நான் படுக்கும்போது உனக்கு கஷ்டமாவும் இருக்கும், வலிக்கவும் தானே செய்யும்”
அவனின் தோளில் சாய்ந்து கொண்டார்.
” சாரிமா! நான் வேணும்னு செய்யல. ஆனா, வேலுவை பழையபடி பார்த்த உடனே அண்ணி முகத்தில ஒரு சின்ன வெளிச்சத்தை பார்த்தேன்.குகன் கீழே விழுந்திட கூடாதுன்னு தாங்கி பிடிச்சதுல, ஒரு சில விஷயம் உணர்ந்தேன்.அதனால, அவங்களோட பழைய நினைவுகளை கொஞ்சம் கொஞ்சமா மீட்டெடுக்கனும்னு நினைச்சேன். நான் பேசுற மூலமா அவங்க அப்பா ,அம்மாவ நெனச்சு அவங்க வருத்தப்படவும் கூடாது .அதே சமயம் அதில் இருந்து அவங்க வெளியவும் வரணும் .
அதுக்காக ,அவங்க அப்பா ,அம்மா பத்தி அவங்க என் கிட்ட சொன்ன விஷயத்தை மட்டும் சொன்னேன். இது வேலு கூட பண்ணலாம் தான். ஆனா, அவனே உடைந்து போய் இருக்கான். தடுமாறி போய் இருக்கான்.அண்ணி பக்கத்துல போனாலே தள்ளி விடுறாங்கன்னு பயப்படுறான். அப்படி இருக்கப்ப அவன் முயற்சி செய்யப் போய் ,இன்னும் ஏதாவது ,அண்ணி அவன் கிட்ட இருந்து விலக முயற்சி செஞ்சா ,அவனுக்கு இன்னுமும் வலியை தான தரும். ஏற்கனவே, வலியில் இருக்கவனுக்கு மேற்கொண்டு வலியை தரக்கூடாதுனு தான் மா இதுபோல பண்றேன்”
” ஆனா. இது உனக்கு எந்த அளவுக்கு வலியை தரும்”
” எனக்கும் புரியுது “என்றான்.
சிரித்தவர். அவனின் தோளில் தட்டி கொடுத்தார்.
தன்னை சமன் செய்து கொண்டவன்.. “தனம்” என்றான் கரகரத்த குரலில்,
” ஒன்னும் இல்லடா வலி இருக்கு. இல்லன்னு சொல்ல மாட்டேன்.ஆனா, இப்போ இருக்க சூழ்நிலைக்கு என் பையனோட வாழ்க்கை முக்கியம். அது எல்லாத்தையும் விட பச்ச பிள்ளை குகன். பெத்தவளே தன் பிள்ளையை உணர முடியாத சூழ்நிலையில் இருக்கா? எல்லாத்தையும் இழந்து நிக்கிறவளுக்கு தாயும் ,தந்தையுமா நானும் அப்பாவும் இருக்கணும். என்னால முடிஞ்சதை நான் செய்வேன்.
உன்னால முடிஞ்சதை நீ செய். என் பையனோட வாழ்க்கை பழையபடி திரும்ப கிடைக்க நான் என்ன செய்யணுமோ ?அதை செய்றேன். உன் அண்ணனோட வாழ்க்கை பழையபடி மாற நீ செய்ற எல்லாமே பின்னாடி உன் வாழ்க்கையை பாதிக்கும் என்று தெரிஞ்சும் நீ ஒரு அடி எடுத்து வைக்கும் போது, என் கண்ணு முன்னாடி தான் என் பையன் இருக்கான்.
நான் என் பையனை யார்கிட்டயும் விட்டுக் கொடுக்கல. என்ன? என் முன்னாடியே என் பெரிய மருமகளுக்கு கொஞ்சம் உரிமையை கொடுக்கப் போறான். அதை பார்த்துட்டு அமைதியா வேடிக்கை பாக்கணும். கஷ்டம் தான். ஆனா, அதை சந்தோஷமாவே ஏத்துக்கிறேன் டா.
ஏன்னா எனக்கு என் பெரிய பையனோட வாழ்க்கையும் முக்கியம். அதேசமயம் உன்னோட வாழ்க்கையும் முக்கியம். தேவ் இதால உன் வாழ்க்கை எந்த வகையிலும் பாதிக்கப்படாத அளவுக்கு நடந்துக்கணும். அது மட்டும் தான் இப்போ என்னோட வேண்டுதல் பயமும்”என்றவுடன் ..
தன் தாயை கட்டி அணைத்தான் .அவன் சொல்லி முடிக்க,
” அப்போ இப்ப வரைக்கும் அத்தைக்கு வலி இருக்கும்னு உங்களுக்கு தெரியும்”
சிரித்தான் .”இல்லடி நான் இப்பவும் அம்மா மடியில கொஞ்ச நேரம் படுத்து கதை பேசிட்டு தான் வருவேன்.தினமும் இல்லை என்றாலும் கூட ,எனக்கு தோணும் போது போய் அம்மா மடியில படுத்து,அப்போ அப்போ நடந்த விஷயத்தையும் சொல்லுவேன். அண்ணிக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு நினைச்சேன். அதே சமயம் அம்மாக்கு கொடுக்க வேண்டிய இடத்தை பறித்து அண்ணிகிட்டு தரணும்னு நினைக்கல.
அண்ணி எந்த இடத்திலும் தன்னுடைய ரத்த உறவு யாரும் இல்லன்னு நினைச்சிட கூடாதுன்னு நினைச்சேன். அதுக்காக நான் என்னோட ரத்த உறவை விட்டுக் கொடுக்கணும்னு எந்த ஒரு இடத்திலும் நினைக்கல.
அம்மா என்ன தான் மனசு வந்து நான் அண்ணி மடியில படுகிறது பிரச்சனை இல்லை என்று சொன்னாலும், அவங்களுக்கும் வலிக்கும்ன்றதால அவங்களுக்கு எப்பவும் தர இடத்தை கொடுத்தேன்.ஆன என்ன? தனியா அவங்க ரூம்ல”
“சரி.ஆனா,நீங்க அக்கா கிட்ட தானே நம்ம விஷயத்தை முதல்ல சொன்னீங்க? “.
சிரித்தான் .”ஆமாம். அவங்க கிட்ட தான் சொன்னேன்.அண்ணியை வச்சுட்டு வீட்ல இருக்க எல்லார்கிட்டயும் சொல்லனும்னு நினைச்சேன். மத்தபடி அண்ணி கிட்ட மட்டும் தான் சொல்லணும்னு நினைக்கல? வேலு பயந்த மாதிரி ஒரு மூலையில் எனக்கும் பயம் இருக்கு மித்ரா. சப்போஸ் இந்த விஷயத்தை நான் அம்மாகிட்ட தனியா சொல்லி இருந்தா? அப்போ இந்த வீட்ல ஒருத்தியா ? தன் அண்ணன் மனைவியா? மட்டும் தான் என்ன பார்க்கிறானோ? என்ற எண்ணம் அண்ணிக்கு வந்துரக்கூடாதுன்னு நெனச்சேன். அவங்களுக்கு அவங்க இழந்த உறவாக இருப்பேன்னு சொல்லி இருந்தேன். சப்போஸ் அவங்க தம்பி இருந்திருந்து அவன் லவ் பன்ற விசியத்தை தன் கிட்ட முதல்ல வந்து சொல்லுவான் என்ற ஒரு எண்ணத்துல அண்ணி இருந்து, அதை நான் பொய்யாக்கிட கூடாது இல்லையா? அதான் யோசிச்சேன்.”
” அப்போ அத்தைக்கு என்று ஒரு ஆசை இருந்திருக்கும் இல்ல அதை பொய்யா ஆகிட்டிங்க இல்லையா?”