Loading

தேவ் அன்று முழுவதும் யோசனையில் இருந்தான் .

‘இவள் என்ன சொல்கிறாள்? இவள் மீது எனக்கு நம்பிக்கை இல்லையா ?’என்று யோசித்தான்.ஆனால், ஒன்றும் புலப்படவில்லை.

மாலை ஸ்கூலில் வைத்து பேச முடியாது .வெளியே கூப்பிட்டால் வருவாளா? என்று தெரியவில்லை. அதுவும் நிச்சயம் செய்த மறுநாளே என்றால் சரியாக வராது என்று யோசித்தான்.

போனில் தான் பேச வேண்டும் .இல்லையென்றால், நேரில் செல்ல வேண்டும் என்று யோசனை உடனே இருந்தான்.

மாலைப்பொழுது தேவ் அவளை நேராக பார்க்க காத்துக் கொண்டிருந்தான். ஆனால், உண்மையாகவே மித்ராவிற்கு வேலை இருக்க.

குகன் வந்து சொன்னான். “வெயிட் பண்ண வேணாம்னு மிஸ் சொன்னாங்க தேவ்”.

“என்ன டா இப்போ தான் நீ ஸ்கூல் விட்டு வெளியே வந்துட்டியே இப்பவும் எதுக்கு மிஸ்னு  சொல்லிட்டு இருக்க?நேத்து எதோ மிதுனு கூப்பிடட்டானு   கேட்ட”

” இப்போ கூப்பிட தோணல “என்றான் வாண்டு 

“சரி “என்று உதட்டை பிதுக்கியவன். அமைதியாக இருந்தான்..

” சரி என்ன சொன்னாங்க  உங்க மிஸ்?”

“உன்னை வெயிட் பண்ணாம  வீட்டுக்கு போக சொன்னாங்க, உண்மையாவே அவங்களுக்கு வேலை இருக்கு” என்ற குகனை அவன் குறுகுறுவென பார்க்க.

“உண்மையாகவே தான்”

” சரி” என்று குகனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றிருந்தான்.

இரவு 7:00 மணி போல அவளிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது. “நைட் பேசணும்!” என்று அதைப் பார்த்தவன்.. கண்கள் மின்ன “சரி” என்று சொல்லி இருந்தான்.

அதேபோல், இரவு குகன் தூங்கிய பிறகு அவளுக்கு அழைத்தான்.

இங்கு ரியாவும் தூங்கி இருந்தாள். தனியாக சென்று பேசினாள்.

” நான் என்னடி உன் மேல நம்பிக்கை இல்லாம இருந்தேன்?” என்று எடுத்து  எடுப்பில் கேட்டான்.

இவ்வளவு நேரம் அதை மறந்து இருந்த மித்ரா.. இப்பொழுது,” ஓ! அப்போ சாருக்கு என் மேல ரொம்ப நம்பிக்கை இல்லையா?” என்றாள்.

அவளது தோனியே மாறி இருக்க,

” ராங்கி எனக்கு என்னனு புரியல. நீ உண்மையாவே ஏதோ என் மேல கோவமா இருக்கன்னு புரியுது. ஆனா அதை தாண்டி எனக்கு வேற எதுவும் புரியல”

” சரி. சார் நேத்து எதுக்கு என்ன முறைச்சி பார்த்தீங்க?”

” இல்லடி.அண்ணி அழுதாங்களா? அதான்..”

“அவங்க அழுததற்கு நான் என்ன பண்ண முடியும்?.  நான அவங்களை  அழ வச்சேன்”

” இல்ல. அவங்க அழுவுறாங்க.. நீ வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்னு”

” சரி”..

“என்னடி சரி..”

” சரின்னு  சொல்லாம வேற என்ன சொல்லணும் நினைக்கிறீங்க..? நீங்க இந்த நிமிஷம் வரைக்கும் என்கிட்ட எதாவது சொல்லி இருக்கீங்களா?”

” என்னடி சொல்லணும்?”என்றான் எகிறி  கொண்டு,

“எதுவுமே சொல்ல வேணாம். சரி உங்க அண்ணி அழுததுக்கு அழ வேணாம்னு சொல்லி அவங்க கண்ணை துடச்சி  விட வேண்டுமா? இல்ல வேற  என்ன பண்ணனும்?” என்றாள் அமைதியாக.

“மித்ரா” என்றான் வேகமாக.. ராங்கியிலிருந்து அவள் முழு பெயரை வைத்து கூப்பிட.

” நான் தான் மித்ரா. சொல்லுங்க?”

” அ..அது இ..இல்லடி” என்று ஒரு சில நொடி தயங்கினான்.

“தேவ் ஃபர்ஸ்ட் விஷயம். ஏதோ ஒரு இடத்துல நான் அங்க அக்காவை  அழ விடாம பார்த்து இருக்கணும்னு உங்க மனசு ஏங்குது இல்லையா? ஆனால், அதை நீங்க  இந்த நிமிஷம் வரைக்கும் என்கிட்ட சொன்னீங்களா ? “

“இல்லடி நீயா புரிஞ்சிப்பனு “

“நானா புரிஞ்சுக்கணுமா? எப்படி  புரிந்துகொள்வது சொல்லுங்க ?உங்க அண்ணி தான் உங்க அண்ணிக்கு நீங்க தான் அப்பா ,அம்மாவா ரத்த உறவா இருந்தவங்களுக்கு பதில் நீங்க இருக்கீங்க என்பதை.. என்கிட்ட சொன்னாங்க? நீங்க?”

அவனிடம் அமைதி.. “சொல்லணும்னு தான்.ஆனா, ஒவ்வொரு  நேரமும் சொல்ல விடாம ,நடுவுல ஒவ்வொரு விஷயமா வந்து தடுத்துருச்சு. உன்கிட்ட காதலை சொன்னதுக்கு அப்புறம் முழுசா எல்லாத்தையும் சொல்லணும்னு நினைச்சேன். அது கொஞ்ச நாள்ல ரியா விசியம்,உடனே உன் கைல அடிபட்டது ,உன் கைல அடி பட்ட உடனே, உன்னை பக்கத்துல வச்சுக்கணும்னு தோனின என்னோட மனசு.இதுக்கு நடுவுல சொல்ல தோணல”

” சரி. நான் உங்களை உண்மையா தப்பு சொல்லல. என்கிட்ட நீங்க ஏன் சொல்லவில்லை என்று கேட்கல. ஆனா, எந்த இடத்தில உங்க நம்பிக்கை வீண் போச்சு?”

” லூசு மாதிரி பேசாதடி! உன்மேல நம்பிக்கை வைக்க பொய் தானே அண்ணி அழும்போது நீ அமைதியா இருந்தேன்னு நான் நினைச்சேன்.இந்த விஷயம் எல்லாம் உன்கிட்ட சொல்லமா இருந்ததுக்குக்கு காரணம் உன் மேல நம்பிக்கை இல்லாம இல்லடி! லூசு மாதிரி பேசாத! என்னோட மொத்த வாழ்க்கையும் நீ தானு நினைச்சுட்டு இருக்கேன்.”

“ஏன் இவ்வளவு  நாள் கல்யாணம் பண்ணாம இருந்தீங்க?”

“லூசு! என் மனசுக்கு புடிச்ச பொண்ணை தான் கல்யாணம் பண்ணனும்னு இருந்தேன்.அவ்வளவுதான்”

” அப்படியா? ஆனா, அக்கா சொன்னது வேற மாதிரி இருந்துச்சே?”

“அண்ணியா அப்படி நினைச்சு பீல் பண்ணிட்டு இருக்காங்க?”

” அப்போ உங்க மனசுல அப்படி ஒரு எண்ணம் இல்லை”

அவனிடம் அமைதி.

“தேவ் இப்ப நீங்க வெளிப்படையா பேசணும்”

“இருந்திருக்கு டி. இல்லன்னு சொல்ல மாட்டேன். ஏன்னா வேலு கண்ணுல பொசசிவா அதை தாண்டி ஒரு சில வலியை கூட நான் பார்த்திருக்கேன். எப்படி சொல்ல,அண்ணி எனக்கு  இம்பார்ட்டண்ட் தராங்க .ஆனா, குகனோட முழு உரிமையும்  அவங்ககிட்ட இல்லன்ற வலி இரண்டு பேருக்கும் இருக்கு” என்று சொல்லும்போதே அவன் குரல் உடைந்து இருந்தது.

“அவன் போக மாட்டேன்னு அடம் பண்றான். நான் என்ன பண்ணுவேன்? சரின்னு அவனை அழ அழ அண்ணி கிட்ட விட்டுட்டேன். அப்போ அழுதழுது தான் அவனுக்கு வீசிங் ப்ராப்ளம் ஸ்டார்ட் ஆச்சு.வீசிங் வந்து ஒரு முறை உடம்பு கிரீன் கலர்ல ஆகிடுச்சு.அந்த பயத்துல அவனை தன்னுடனே வைத்து கொள்ளனுமா? இல்ல தன் புள்ள உசுரோட வேண்டுமா? என்ற எண்ணத்துக்கு இரண்டு பேருமே வந்துட்டாங்க.

என் கூடவே இருந்ததால நான் அம்மாவை தனம்னு கூப்பிடறது போல அவனும் கூப்பிட ஆரம்பிச்சிட்டான்.நான் அண்ணி கூட க்ளோசா இருக்க அவனும் க்ளோசா இருந்துட்டான்.எந்த ஒரு விஷயத்தையும் மறைக்காம முதல்ல அண்ணி கிட்ட வந்து சொல்றது போல.ஆனா, வேலு கிட்ட குகன்  க்ளோசா ஆக கொஞ்ச நாள் ஆச்சு .ஆன இப்பவும் அவன் தன் பையன் தன் கிட்ட பெருசா அட்டாச்மெண்ட் இல்லைன்னு நினைக்கிறான். ஏன் எனக்கும் , வேலுக்குமான  அட்டாச்மெண்ட் கூட குறைஞ்சிடுச்சு என்று ஃபீல் பண்றான். நான் பழைய படி அவன் கூட இல்லனு பீல் பண்றான்..”

” அதுக்கு நீங்க குகனை தானே அவர்கிட்ட விடனும்”

அவன் எப்பவாவது தாண்டி அவங்க கூட தூங்க போறான். தினமும் போகமாட்டான். என்னாலையும் அவன விட்டுட்டு இருக்க முடியல, தப்பு என்று எனக்கும் புரியுது. வளர்ந்த நானே அவனை அனுப்ப கவலைப் படுறப்ப. சின்ன பையன் அவனுக்கு கஷ்டமாக இருக்கும் இல்லையா? இதை விட பல மடங்கு கஷ்டம் வேலுக்கும் ,அண்ணிக்கும் இருக்க தான் செய்து. 

ஆனா, அவனுக்கு வீசிங் ப்ராப்ளம் இருக்குறதால கொஞ்சம் அக்சப்ட் பண்ணிக்கிட்டாங்க.அவனாக அவங்களை தேடி போற நேரமோ ?இல்ல  அவங்க கூப்பிடும்போது அவன் போனாலும் அமைதியா விட்டு விடுறாங்க. ஆனால், வேலு மனசுல ஏதோ ஒரு மூலையில்  வலி இருக்கு. அவன் வேலு கிட்ட பேசும் போது  நார்மலா என்ன பத்தி பேச செஞ்சா கூட அவன் எனக்கு தான் அதிக இம்பார்டன்ட் தருகிறான் என்பது போல, இன்னும்  வேலு மனசுல பதிஞ்சிடுச்சு! 

தன்னோட குழந்தையை தன்னிடம்  கூட்டிட்டு வந்தா,அவன் அழுது அவனுக்கு வீசிங் ப்ராப்ளம் வந்து ஏதாவது ஆகிடும்னு பயம் வந்து ,அவனாவே இப்போ எல்லாம் அவனை என் கூட வா, என் கூட தூங்கு என்று கூப்பிடுவதை நிறுத்தி விட்டான். அது எந்த அளவுக்கு ஒரு பெத்த அப்பனா அவனுக்கு வலிக்கும் என்று எனக்கும் புரியுது.

மகனுக்கும் தான் முதன்மை  இல்லையா? மனைவிக்கும் தான் முதன்மை இல்லையா ?என்று கூட மனதளவில் எண்ணி வருந்துகிறான்”.

“இப்போ , நீங்க என்னதான் சொல்ல வரீங்க?”

“நேத்து ரியா வேலுவை மாமா என்று அழைத்து உரிமை கொண்டாடிய உடனே அண்ணியோட கண்ணுல பொசசிவ் ,ஒரு உரிமை வந்துச்சுல்ல ..”

“ஆமாம்.அது வந்தா தான் புருஷன் பொண்டாட்டி “என்றாள் பட்டென்று..

” அது வேலுக்கும் பொருந்தும் இல்லையா ? எல்லா நேரமும் அவனால எங்களுடைய பாசப்பிணைப்பை ,பாண்டிங்கை  ஏத்துக்க முடியல.. ஏத்துக்கவும் முடியாது மித்ரா “என்றான்..

இப்பொழுது மித்ராவுக்கு முழுவதாக புரிந்தது.

” சரி. ஆனா”

” வேலு  பிரச்சனையோட ஆரம்பத்திலிருந்தே பாத்துட்டு இருக்கான். அவனாலையே ஏத்துக்க முடியாது என்ற போது,புதுசா வர ஒரு பெண்ணால்  இல்ல , உன்னால அந்த ஒரு விஷயத்தை ஏத்துக்க கஷ்டமா இருக்கும். இருக்கணும் அப்படி இருந்தா தான் உனக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப் ,பாண்டிங் ,க்ளோசா இருக்குன்னு அர்த்தம். அது எதுவுமே இல்லாம இருந்தா தப்பா ஆயிடும். ஏதோ ஒரு இடத்துல எனக்காக என்று எண்ணி அண்ணியும் தப்பா எந்த ஒரு முடிவும் எடுத்துற கூடாது. எனக்கு என்று வர போற பொண்ணும் எங்க உறவை தப்பா எடுத்துடக்கூடாது என்ற எண்ணம் எனக்கு இருந்துச்சு, பயந்தேன் .ஆனா, உன்ன பார்த்ததிலிருந்து அந்த பயம் எனக்கு இல்லடி போயிடுச்சு! நான் அண்ணி  பத்தி பல நாள் சொல்லி இருக்கேன்.குகன் மூலமா நீயும் ஒரு சில விசியம் கேட்டு தெரிஞ்சி இருந்து இருக்க. ஆனா ,உன் கண்ணுல ஒரு நேரம் கூட  நான் பொறாமையை பார்த்ததில்லை.”

” அப்படியா? சப்போஸ் என் கண்ணுல  பொறாமையோ? இல்ல உங்களுக்கும் ,அக்காவுக்கும் இருக்க உறவு தப்பா  தெரிஞ்சிருந்தா என்கிட்ட உங்க விருப்பத்தை சொல்லி இருக்க மாட்டீங்களா?” என்றாள் பட்டென்று..

” மித்ரா “என்று கத்தினான்.

இப்பொழுது அவளிடம் குரல் அடங்கி இருந்தது.

” லூசு மாதிரி யோசிக்காத மித்ரா சரியா? அண்ணி இன்னைக்கு உனக்கு புரிய வைக்கணும்னு நினைச்சு சொல்லியிருக்காங்க. நான் சொல்லுவேன்னு அவங்க வெயிட் பண்ணிட்டு இருக்கலாம்.  ஆனா, அவங்க பக்கம் இருந்து அவங்க சொல்லணும்னு யோசித்து சொல்லி இருக்காங்க”

“நான் கேட்டதுக்கு பதில் இது  இல்லையே ?”

“உன்ன  நேரில்  பார்க்கணும் டி! உன் கண்ணை பார்த்து மட்டும் தான் சொல்ல முடியும், புரிய வைக்க முடியும்” என்றான் குரல் கம்ம..

அவளிடம் அமைதி.

”  ராங்கி” என்றான் உருகும் குரலில், 

“ஹம்” என்றாள் ஒற்றை வார்த்தையில்…

” உண்மையா உன்னை நேரில் பார்த்து பேசணும். இதை போன்ல பேச முடியாது, உன்னால நாளைக்கு” என்றவன் வார்த்தை நின்றது..

” எங்க வரணும் “என்று கேட்டாள்..

அவனும் இடத்தை சொல்ல..

“சரி  தூங்குங்க” என்று போன் வைத்திருந்தாள்.

மறுநாள் கிளம்பும்போது ரியாவிடம் மேலோட்டமாக ,”நான் கொஞ்சம் தேவ் கிட்ட பேசணும். நீ”என்றவள் அவளை அமைதியாக பார்க்க…

“காலேஜ் முடிஞ்சு நான் உங்க ஸ்கூலுக்கு வந்துடறேன் மித்து “

மித்ரா, சிரித்த முகத்துடன் தன் தங்கையை கட்டி அணைத்துக் கொண்டாள்.

” லூசு மாதிரி எதையாவது யோசிக்காத மித்து “

“நான் எதுவும் யோசிக்கவில்லை”

” இங்க பாரு! இப்பவும் ஒன்னே ஒன்னு தான். எனக்கு வித்யா அக்கா சொன்னதிலிருந்து எந்த அளவுக்கு வித்யா அக்காவுக்கும் ,தேவுக்கும் இருக்க பாண்டிங்  தெரிய வந்ததோ ,அதே அளவுக்கு யாருமே உணராத ,கண்ணுக்கு தெரியாத வேலு மாமாவோட  பொசசிவ்னஸ், வலி தெரிந்தது.. அப்போ தான் அவர் உள்ளே வரவும், அவரை உரிமையா கூப்பிட்டு ,வித்யா அக்காவை சீண்டி  பார்த்தேன். அக்காவும் அவங்க உரிமையை நிலை நாட்ட..வேலு மாமா கண்ணுல சின்ன  சந்தோஷம் இருந்துச்சு.. அது என் கண்ணுக்கு தெரிஞ்சுச்சு ..அது இனியும் அவருக்கு கிடைக்கணும்னு நினைச்சேன். அந்த ஒரே காரணத்துக்காக தான் அவரை அத்தனை பேர் முன்னாடியும் கண் அடித்தது..உரிமையா பேசியது எல்லாம். அப்போதான் வித்யா அக்காவுக்கு “என்ற அவள் நிறுத்த..

தன் தங்கையை கட்டியணைத்து ,”எனக்கு அது நேத்தே புரிஞ்சிடுச்சு ரியா. அதனாலதான் நானும் அமைதியா இருந்தேன்” என்று தன் தங்கையின் நெற்றியில் முத்தமிட்டு சிரித்தாள்.

“நீயும் ப்ரீயா இருடி”என்றாள் ரியா.

“எனக்கு தேவை நேர்ல பார்த்து பேசி தெரிஞ்சிக்க ,புரிஞ்சிக்க  நிறைய விஷயம் இருக்கு.ஆனா, அது எதையும் ஃபோன்ல பேச முடியாது. ஆனா,கல்யாணத்துக்கு முன்னாடி இவ்வளவு விஷயத்தையும் மனசுல போட்டு குழப்பிகிட்டு நான் அவரோட பொண்டாட்டியா அவர் வீட்டுக்கு போக முடியாது ரியா” என்றாள் மனம் விட்டு அவளிடம்..

ரியாவுக்கும் புரிந்தது. மித்ராவின் மனநிலை.

” சரி ஈவினிங் நான் வரேன்” என்று விட்டு அமைதியாக கிளம்பி விட்டாள்.

மாலை சொன்னது போலவே ரியா வந்திருந்தாள். காலையில் இருவரும் பார்த்துக் கொள்ளவில்லை. மாலை நான்கு பேரும் ஸ்கூலுக்கு பக்கத்தில் உள்ள அந்த ஐஸ்கிரீம் பார்லருக்குள் நுழைந்தார்கள்.

குகனை ரியா உடன் விட்டு விட்டு தேவும், மித்ராவும் தனியாக சென்றார்கள்.

அவள் அமைதியாக இருக்க .”உனக்கு என்ன தெரியும் மித்ரா கேளு?”

“நீங்க தானே நான் கேட்டதுக்கு நேர்ல பேசுறேன்னு சொன்னீங்க ?இப்போ திரும்ப என்ன தெரியணும்னு கேக்குறீங்க?”

அவளது வார்த்தையில் லேசாக கோபம் எழுந்தாலும், தன்னை சமன் செய்து கொண்டவன்.

அவள் முகத்தை நேருக்கு நேராக பார்த்து, கைகளை பிடித்தான். அவள் அமைதியாக அவனது கண்களை பார்க்க.” உண்மையா உனக்கு நீ சொன்னது போல எங்க உறவை ஏத்துக்க முடியாமலோ ?இல்ல, பொறாமை பட்டு இருந்தாலோ? இல்ல, தப்பா எடுத்து இருந்தாலும் உன்கிட்ட என்னோட விருப்பத்தை சொல்லி இருக்க மாட்டேன் என்று நினைக்கிறாயா?”

“நான் கேட்ட கேள்வியை நீங்க திரும்ப என்கிட்ட கேக்குறீங்க தேவ்?”

கண்ணை மூடி திறந்தவன்.” இது என்னோட தனிப்பட்ட வாழ்க்கை. என்னோட மொத்த உலகமும் நீ தானு நினைச்சுட்டு இருக்கேன். இது வேற, அது வேற ,அப்போ நான் எடுத்த எல்லா முடிவும் என் அண்ணனோட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம்.

யாரோ தெரியாத ஒருத்தரே தனக்கு ரத்த உறவாக இருந்தவங்கள மொத்தமா ஒரே நேரத்தில் இழந்து நிற்கும் போது, நமக்கு ஏதோ ஒரு மூலையில் சின்ன வலியாவது ஏற்படும். மனிதாபிமானத்தோடு, ஆனா, அவங்க என்னோட அண்ணி, என் அண்ணனோட சரி பாதி, அது எல்லாத்தையும் தாண்டி அவங்க கிட்ட ஒரு அளவுக்கு நான் க்ளோசா பழகிருக்கேன். அந்த இன்ஸ்டன்ட் நடக்கிறதுக்கு முன்னாடி வரைக்கும் அண்ணி, கொழுந்தன் என்ற உறவு கூட ஓரளவுக்கு அவங்க என்ன வாடா போடான்னு கூப்பிடுற அளவுக்கு தான் இருந்தது.

  ஆனா, அவங்களுக்கும் எனக்குமான வயசு நிறைய விஷயங்கள்ல தடையாக தான் இருந்துச்சு. ஆனால் ,அவங்க எல்லாத்தையும் இழந்து, தன்னை சுத்தி நடக்குற எதுவுமே தெரியாம ,தன்னுடைய கணவரையும் தெரியாம ,தான் பத்து மாசம் சுமந்து பெத்த புள்ள அழுகுறது கூட சுயநினைவு இல்லாமல் இருந்ததால , அதிலிருந்து அவங்களை வெளியே கொண்டு வரணும்னு அந்த நிமிஷம் நினைச்சேன். 

இன்னொன்னு அப்போ என்னோட அண்ணன் வேலுவோட மனநிலை  ரொம்ப மோசமா இருந்துச்சு.அவனுக்கு பக்க பலமா இருக்கணும்னு நினைச்சேன். அவனுக்கு தோள் கொடுக்கணும்னு நினைச்சேன். 

அதுக்காக அவங்களை அதிலிருந்து வெளியே கொண்டு வர நான் பண்ண எல்லா விஷயமும் என்னை அண்ணியோட ரொம்ப பாண்டியா கிளோசா , பாசப்பிணைபோட ஆக்கிடுச்சு.. அதுதான் உண்மை. 

ஆனா, இது எல்லாத்தையும் நான் சொல்லும்போது எல்லாராலையும் ஏத்துக்க முடியுமான்னு எனக்கு தெரியாது. உன்னை பார்க்கும் போது ,உன்கிட்ட பேசும் போது ,என் மனதை பறிகொடுத்தேன்.அது எப்படி இருந்தாலும், உன்கிட்ட என்னோட விருப்பத்தை நான் சொல்லித்தான் இருந்திருப்பேன். 

அது என்னோட தனிப்பட்ட விஷயம். ஆனால், என்ன ஏத்துக்க முடிஞ்ச ஒரு பொண்ணால என்றான்.. அவள் முறைத்துப் பார்க்க, உதட்டில் புன்னகையுடன் உன்னால என்று திருத்தம் செய்தான் .எங்களுடைய உறவை ஏத்துக்க முடியாம போனா  அவள் இப்பொழுதும் முறைக்க..

தப்பா நினைக்கிறதுக்கும் ,ஏத்துக்க முடியாம போறதுக்கு வித்தியாசம் நிறைய இருக்கு ராங்கி. நீ தப்பா நினைப்பேன்னு சொல்லல. ஆனா ஏத்துக்க முடியாம போன ..ஏன்னா வேலுவே இத்தனை வருஷத்துல நிறைய தடுமாற தான் செய்யுறான்.ஏத்துக்க முடியல ..

இதுல நான் அவனை தப்புனு.. இப்ப இல்ல ,எப்பவும் சொல்ல மாட்டேன்.ஏனென்றால், அண்ணிக்கு எல்லாமா இருக்க வேண்டியது அவன் தான். ஆனா,அதை விட்டுட்டு நான் குறுக்க புகுந்து அண்ணியை அதிலிருந்து வெளியே கொண்டு வரணும்னு நினைச்சேன். அது அவனுக்கும் ,அண்ணிக்குமான நெருக்கத்தையே குறைச்சிடுச்சு. ஏதோ, ஒரு வகையில அவனுடைய ஒரு சில இடத்தை நான் தட்டி பறிச்சிட்டேன். அதுதான் உண்மை .அவன் அதை தப்பா நினைக்கல.. அந்த நேரம், அந்த சூழ்நிலை அதிலிருந்து அவங்களை வெளியே கொண்டு வர மட்டும் நினைச்சேன். அது என் அண்ணனுக்காக தான் நான் செஞ்சேன். என்னோட அண்ணி எங்க வீட்டுக்கு வந்த ஒருத்தவங்க, எங்களை நம்பி வாழ வந்தவங்க, இப்படி எல்லாம் யோசிச்சு தான் செஞ்சேன். ஆனா, அதுக்கப்புறம் நான் செஞ்ச ஒவ்வொரு விஷயமும் அதுல இருந்து அவங்க வெளியே வர்றதுக்காக எடுத்துக்கிட்ட மெனக்கிடலும் என்ன அவங்களோட இணைஞ்சுருச்சு.ஒரு சில நேரத்துல நான் அவங்களுக்கு அப்பாவா ,அம்மாவா ,தம்பியா இருக்க முயற்சி பண்ணிட்டேன். இதெல்லாம் வேலு பண்ணி இருக்கணும்.அந்த நேரத்துல அவன் உடைந்து இருந்தான்.அண்ணியையும், குகனையும் நினைச்சு உடைஞ்சி போயிருந்தான்.அந்த நேரத்துல இதெல்லாம் சரி பண்ணனும்னு நான் எடுத்த எல்லாம் முடிவும் ஏதோ ஒரு வகையில சரியா இருந்தாலும், அவங்களுக்குள்ள இருக்க நெருக்கம் குறையறதுக்கு நான் காரணமாயிட்டேன். அவன் நிற்க வேண்டிய ஒரு சில இடத்துல நான் நின்னுட்டேன்.அதெல்லாம் தப்பு ..”

“தப்பு தானே! அதை உணர்ந்துட்டீங்க இல்ல. ஆனாலும், இப்பவும் எதுக்காக அந்த இடத்தை இழுத்து பிடித்து வச்சிட்டு இருக்கீங்க? உங்க அண்ணிக்காக உங்க அண்ணிக்காக சொல்றீங்களே ,அவங்களுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கு இல்ல ?அவங்க ஆசைப்பட்டு, விருப்பப்பட்டு கல்யாணம் பண்ணவர் தானே வேலு மாமா! அப்போ அவருக்குனு சில ,பல ஆசைகள் ,கனவுகள் தன் பொண்டாட்டி தன்னை மட்டும்தான் எதிர்பார்க்கணும் என்று ஒரு சில இடங்கள் இருக்கும் இல்லையா ?அது எல்லாத்தையும் நீங்க பறிச்சு கிட்டபோது வேலு மாமா ஓட மனநிலை எந்த அளவுக்கு இருந்திருக்கும்”

அவள் கையை நெற்றியில் வைத்துக்கொண்டு அழுதான்.

மித்ரா பதறினாள் என்ன பண்றீங்க ? தேவ்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
12
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்