Loading

வேலுவை  தனியாக அழைத்து சென்ற தேவ் “காசை எதிர்பார்த்து வேலைக்கு போகணும்னு நினைக்கல டா. அண்ணி இதிலிருந்து முழுசா வெளியே வரணும். குகன் இப்ப அண்ணி கிட்ட போக மாற்றான். அதுல அண்ணிக்கு கொஞ்சம் கவலை. தான் பெத்த மகன் தன்னோட மனநிலையால இப்ப தன்  கிட்ட வருவதையே தவிர்கிறான் என்று அவங்களுக்கு கஷ்டமா இருக்கு.

 

குகன் அவங்க கிட்ட போகல.. என்னாலயும் “என்றவனுக்கு.. பேச்சு வரவில்லை . அவனுக்கு இப்பொழுது குகனை விட்டு தரும் மனநிலை  இல்லை .தன் உடல் சூட்டில் அப்பொழுது இருந்த சூழ்நிலைக்கு வைத்துக் கொண்டான்.இப்பொழுது குகனும் அவனை விட்டு பிரிவதில்லை. இந்த ஆறு மாதத்தில் தேவும் குகனிடம் அவ்வளவு அட்டாச்மெண்ட் ஆகிவிட. அவனை பிரிவது கடினமாக இருக்க, வித்யாவும் வருத்தத்தில் இருக்க,

 

மனமில்லாமல், குகனை வேலு, வித்யாவிடம் இரவு பொழுது அனுப்பி இருந்தான்.ஆனால்,அவன் தேவ் உடன் இருக்க வேண்டும் என்பது போல் ,அழுக..அவனை பார்த்து பார்த்து உதடு துடிக்க தேம்பி தேம்பி அழுது அடம்பிடிக்க..இரவில்  ஜுரம் வந்துவிட..வித்யாவும் தேவிடமே குகனை விட்டுவிட்டாள். ஆனால், தாய் மனமாக இப்பொழுது தன் மகனை தன் அருகில் வைத்துக் கொள்ள உள்ளம் ஏங்கியது. எவ்வளவு தேவ் முயற்சி செய்து குகனை விட்டு விட்டு வந்தாலும்,  தேவின் உடல் சூட்டையே குழந்தையான குகன் எதிர்பார்க்க.

 

அதுவும் பகலில் அவன் விளையாடும் போது வித்யாவிடம் விளையாடுவான்.ஆனால்,இரவு பொழுது யாரிடமும் செல்லாமல் அழுது ஆர்ப்பாட்டம் செய்து அடம் பிடித்தான். 

 

 

தன் பெற்றவர்கள் இறப்பில் இருந்து வெளியில் வந்தவள். இப்போது தனது மகனின் அருகாமையை தேடி வேதனை அடைந்தாள்.பகலில்  தன்னுடன் இருப்பவன். இரவு தேவையே தேட..எல்லாம் தன்னால் தானே என்று எண்ணி வருந்தினாள். வேலுவிடமும் ,வீட்டில் உள்ளவர்களிடம் அதை சொல்லி அழவும் செய்தாள்.

 

பகலில் எல்லோரிடமும் எப்பொழுதும் போல சிரித்து பேசி விளையாடுபவன். இரவில் தூங்கும் போது தேவின் அருகாமையை மட்டும் தேட.. தேவும் எவ்வளவோ முயற்சி செய்தான் .வீட்டில் உள்ளவர்களும் ஏதேதோ செய்தார்கள். ஆனால், அவன் அப்படியே அழுது ,ஆர்ப்பாட்டம் செய்து சளி பிடிப்பது ,ஜுரம் வருவது என்று இப்படியே சென்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் தான் .. வீட்டில் இல்லாம அண்ணி வேலைக்கு போறது நல்லது. அவங்களுக்கு கொஞ்சம் மன மாற்றம் தேவை. பணம் காசு நமக்கு முக்கியம் இல்லை” என்றான்..

 

அதை உணர்ந்த வேலு”சரி” என்று தலையாட்டி இருந்தான்.

 

வித்யாவிற்கு அவளுக்கு பிடித்தபடி ஒரு வேலையும் பார்த்து கொடுக்க, வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். 

 

குகனும் வளர வளர இவளுடன் இணக்கம் ஏற்பட ஆரம்பித்தது. ஆனால், தூங்கும் பொழுது தேவை தாண்டி யாரிடமும் செல்லவில்லை. காலப்போக்கில் அவ்வபோது வித்யா ,வேலு உடனும் ,எழில் ,தனத்திடமும் என்றாவது ஒரு நாள் தூங்குவான்  ஆனால் ,அதிகப்படியாக தேவை விட்டு நகர மாட்டான்.

 

தேவ் குகனை அழைத்து கொண்டு ஒரு நாள் பைக்கில் வெளியே சென்று இருக்க. அப்பொழுது ஒரு பொம்மையை பார்த்து குகன் வேண்டும் என்பது போல் அழுக.. அந்த பொம்மையை வாங்கி தர சென்றான். அப்பொழுது அங்கு ஒரு சிறுவன் இருக்க,”அண்ணா எந்த பொம்மை வேண்டும் ?”என்று கேட்டான் அச்சிறுவன். 

 

அவனுக்கு குகன் கைகாட்டியதை வாங்கி கொடுத்தான்..

 

அவனிடம் கொடுத்து விட்டு ,”எத்தனாவது  டா படிக்கிற? அப்பா அம்மா இல்லையா நீ மட்டும் இருக்க? என்று கேட்டான். 

 

 

“இல்லன்னா நான் ஸ்கூலுக்கு போயிட்டு தான் இருந்தேன் ஆனா இப்ப ஸ்கூலுக்கு போகல”

 

“ஏன் டா  உடம்பு சரி இல்லையா இன்னைக்கு லீவ் போட்டு இருக்கியா?”

 

“இல்லன்னா .ஒரு  மூணு மாசம் முன்னாடி தான் அப்பா இறந்துட்டாங்க. அம்மா மட்டும்தான். அப்பா இருந்தவரை இந்த மாதிரி ரோட்ல தான் பொம்மை போட்டு விப்பாங்க. அம்மா மட்டும் இப்ப தனியா இருக்கும் போது ஒரு சிலர் வந்து அம்மா கிட்ட தப்பா நடந்துக்கிறாங்க. அதனால தான் “என்றான்.

 

அவனுக்கு புரிந்தது.  “அதுக்காக நீ ஏன்டா ஸ்கூலுக்கு போகாம இருக்க?”

 

” அம்மாவை அப்படியே விட்டுட்டு போக முடியாது.அண்ணா, எங்களுக்கு வேற எதுவும் வேலை  தெரியாது”

 

“டேய் நீ ஸ்கூலுக்கு போவதற்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம் “

 

“காசு தரோம்..கொஞ்ச நேரம் எங்க கூட இருனு அம்மா கிட்ட தப்பு தப்பா ஏதோ ஏதோ பேசுறாங்க. அது மட்டும் இல்லாம இங்கவே வந்து நின்னுகிட்டு, வியாபாரம் பண்ண விட மாற்றாங்க .அப்படி யாராவது பொம்மை வாங்க வந்தாலும் ஏதாவது பேசி அடிச்சு துரத்தி விடுறாங்க” 

 

“என்ன? வியாபாரம் நடக்க விடாம கெடுக்குறாங்களா ?”

 

“ஆமாம்.அதான் நான், அம்மா கூட இருக்கேன்.”

 

“”சுத்தி இருக்கவங்க யாரும் எதும் கேட்க மாட்டாங்களா? உனக்கு சொந்தக்காரங்க யாரும் இல்லையா?உன்ன  ஸ்கூலுக்கு போக சொல்லி உங்க அம்மா சொல்லலையா?” 

 

“கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல தான் படிச்சிட்டு இருந்தேன். அம்மா போக தான் அண்ணா சொல்றாங்க.. ஆனா அதுக்கும் காசு வேணும் இல்லையா ?அம்மா ஒருவேளை சாப்பாடு சாப்பிடாம இருந்து எனக்கு தேவையான செலவு பார்க்குறாங்க”

 

 

“கவர்மெண்ட் ஸ்கூலுக்கு எதுக்குடா காசு அங்க ஃப்ரீ தானே!”

 

“ஸ்கூல் பீஸ் தான் இல்ல அண்ணா.ஆன, அங்கயும் நோட்டு எல்லாம் ஃப்ரீயா தர மாட்டாங்களே?”

 

” என்னடா சொல்ற கவர்ன்மென்ட் ஸ்கூலுக்கு எதுக்குடா காசு”

 

” கவர்மெண்ட் ஸ்கூல்ல புக் மட்டும்தான் ஃப்ரீயா தருவாங்க. நோட்டு நாங்கதான் வாங்கணும். அதுக்கு நிறைய செலவாகும். பேனா ,பென்சில் நிறைய செலவு இருக்கே ,அம்மா என்ன படிக்க வைக்கணும்னா ஒருவேளை சாப்பாடு எதுவும் சாப்பிடாமல் இருக்கிற மாதிரி சூழ்நிலை வருது. அப்பா இருந்த வரைக்கும் பெருசா எதுவும் தெரியல, நான், அம்மா மட்டும் தனியா இருக்கும்போது கஷ்டமா இருக்கு.”

 

 

அவன் சொன்னதை நினைவில் வைத்துக் கொண்டவன்.” சரிடா தம்பி இங்க தான் எப்பவும் இருப்பீங்களா ?”என்று கேட்டுக்கொண்டு சென்றிருந்தான். 

 

அவனும் “ஆமாம்” என்று சொல்லிவிட.

 

வீட்டிற்கு சென்றவுடன், குகனுடன் சென்று தன் அண்ணியின் மடியில் படுத்துக் கொண்டான். 

 

“என்னடா ஆச்சு ?”என்று கேட்டாள்.

 

எப்பொழுதும், தனது அண்ணியின் மடியில் படுக்க மாட்டான். தனக்கு ஏதாவது கஷ்டம் என்று நேரம் பொழுது, அழ வேண்டும் இல்லை, சந்தோஷமான விஷயம் என்று வரும்போது மட்டும் தான் அவளின் மடியில் படுப்பான்.

 

அப்பொழுது அவளை அதிலிருந்து கொண்டு வருவதற்கு ஆரம்பத்தில் தினமும் படுத்துக் கொண்டு பல விஷயங்களை நினைவுகூர்ந்து இருந்தான் .ஆனால், அதன் பிறகு, என்னதான் வெளியில் உள்ளவர்கள் எதுவும் பேசினாலும் பரவாயில்லை என்றாலும் , அது தன் அண்ணன்,அண்ணியின் வாழ்க்கை சுமத்தப்பட்ட விஷயம் .அது மட்டும் இல்லாமல் வளர்ந்தவனாக தான் மடியில் தினமும் படுக்கும் போது தன் பெற்றவர்களுக்கும் ,சரி அண்ணன் அண்ணிக்கும் சரி,மன சங்கடமாக இருக்கும் என்பதால் அவ்வப்போது சந்தோஷமான சூழ்நிலையோ இல்லை ,வருத்தப்படுவது போல சூழ்நிலையோ இந்த மாதிரி ஏதாவது உணர்வுபூர்வமான, உணர்ச்சிகரமான சூழ்நிலையில் மட்டும் தனது அண்ணியின் மடியில் படுப்பான் .

 

“என்ன ஆச்சு ?”என்று கேட்க.

 

அவனும் நடந்ததை சொல்ல.

 

”  அதுக்கு இப்ப என்னடா பண்ணனும்னு சொல்ற? “என்றாள் வித்யா.

 

“அதுக்கு என்ன பண்ண முடியும் அது அவங்களோட விதி “என்றான் வேலு.

 

தனது அண்ணனை  முறைத்தவன்.

 

வேகமாக எழுந்து கொண்டான்.

 

“தேவ் நீ என்ன சொல்ல வந்த?”என்றாள் வித்யா.

 

” அண்ணி  நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன். ஆனா, அது எந்த அளவுக்கு சரின்னு தெரியல “என்றவன் தனது அப்பா அம்மாவையும் பார்த்தான்.

 

இருவரும் அவனைப் பார்க்க.  வித்யா எழுந்து தண்ணீர் எடுத்துட்டு வந்து கொடுக்க.

 

குடித்துவிட்டு, குகனை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டவன் .”நான் அந்தப் பையனை படிக்க வைக்கலாம்னு நினைக்கிறேன்”

 

“இவ்வளவு நாள வீட்டு சூழ்நிலையால் ஏதோ சின்ன சின்ன வேலை செஞ்சுட்டு இருந்த,இப்போ தான்  படிச்ச வேலைக்கு போகணும்னு நினைச்சுட்டு இருக்க, அதை மறந்துடாத !”

 

“உண்மை தான்! படிச்சு வேலைக்கு தான் போகணும்னு இவ்ளோ நாள் சொல்லிட்டு இருந்தேன். விளையாட்டுத் தனமாகவே இருந்துட்டேன். இனி கொஞ்சம் பொறுப்பா நடந்துக்க நினைக்கிறேன்”

 

தன் தம்பி ஏற்கனவே தனக்காக தன் மனைவிக்காக என்று நிறைய இழந்து விட்டான் என்பதை வேலு அறிவான். நண்பர்களுடன் தினமும் சுற்றுவதை நிறுத்தி இருந்தான் .குகனையும் பார்ப்பதற்காக, தங்களுக்காக என்று அவனது சிறுசிறு ஆசைகளை கூட குறைத்துக் கொண்டான் என்பதை உணர்ந்தவன். இப்பொழுது அவன் விருப்பப்படி வேலை செய்வதற்கு கூட தடையா? என்று வருந்தினான். 

 

“வேணாம் டா ” என்றான் குரல் கம்ப..

 

தனக்காக தான் தன் அண்ணன் யோசிக்கிறான் என்று உணர்ந்து,அவன் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டவன்.” எனக்கு அதுல ஒன்னும் கஷ்டம் இல்லடா, அந்த பையன் பேசும்போது அந்த பையனோட கண்ணுல அவ்ளோ வலி இருந்துச்சு,  இந்த வயசிலேயே தன்னோட அம்மாவை யாரும் தப்பா பேசிட கூடாதுன்னு நினைக்கிறான். அவங்க அம்மாவுக்கு உறுதுணையா இருந்து அவங்களை பாத்துக்கணும்னு நினைக்கிறேன். நான் அவங்களுக்கு  எதாவது செய்யணும்னு நினைக்கிறேன். அவனுக்கு இந்த வயசுல இருக்க  பொறுப்பு ,எனக்கு இப்ப கூட இல்லையே வேலு”

 

” டேய் உனக்கு எல்லாம் பொறுப்பு இருக்குடா” என்றார் எழிலும் ..

 

 

“நீ என்ன செய்ய நினைக்கிறியோ செய். நான் உனக்கு துணையாக இருக்கேன் ” என்றாள் வித்யா.

 

“என்னடி அவன் தான் ஏதோ பேசுறான் என்றால், நீயும் அவனுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி பேசுற?”

 

” அப்பா ,அம்மா இல்லாமல் இருப்பது எந்த அளவுக்கு வலிக்கும் என்று  எனக்கு தான் தெரியும் வேலு” என்றவள் ரூமுக்குள் போய் புகுந்து கொள்ள ..

 

“ஏண்டா இப்படி பண்ற ?” என்றார்கள்..

 

“நான் என்ன மா பண்ணேன். நம்ம இப்ப பேசுற விஷயத்தை பத்தி பேசிட்டு இருந்தா இவ எதையோ உளறிட்டு போறா” 

 

“அப்படி இல்ல வேலு நமக்கெல்லாம் இழப்போட வலி தெரியாது .நம்ம கூடவே நம்மளோட எல்லாரும் இருக்கும்போது, நமக்கு பெருசா தெரியாது. அந்த பையன் பேசும் போது எனக்கு அண்ணி தான் நினைவில் வந்து போனாங்க, சாதாரணமா இருந்திருந்தால் எனக்கு எதுவுமே அந்த பையன் சொன்னது பெருசா தோனிருக்காது . அண்ணி பட்ட வலி எல்லாம் கண்ணு முன்னாடி வந்து  போகவும் தான், எனக்கு அந்த பையன் பேசினது, சொன்ன விஷயம் எல்லாமே வலியையும் ,அதில் அவன் படும் கஷ்டமும் புரிந்தது. இப்போ தான் அண்ணி அதில் இருந்து கொஞ்ச கொஞ்சமா வெளியே வராங்க” 

 

எதுவும் பேசாமல் வேலு தன்னுடைய ரூம் கதவை தட்ட, அவளும் திறக்க ,அவன் வேகமாக உள்ளே புகுந்திருந்தான் 

 

“அப்போ இவ்ளோ நாளா அவன் பட்ட கஷ்டத்துக்கு என்னடி பலன்? அவனை விடு! அப்போ நான்  உன்கிட்ட உண்மையான பாசத்தை காட்டலையாடி . அம்மா ,அப்பா உன்ன தன்னோட சொந்த பொண்ணா தானே பார்த்துக்கிட்டு இருக்காங்க!  உனக்கு எல்லாமுமாக நான் இருக்கேன் என்று நினைச்சேன் டி..அப்போ அப்படி இல்லையா?”என்றான் கண்ணீர் மல்க ..

 

“வே..வேலு அப்படி இல்ல வேலு “

 

“அது என்னடி வார்த்தை சொல்லிட்டு வர.. உன்னோட இழப்பு பெருசு தான். நானே ஒத்துக்குறேன். இல்லன்னு சொல்லல, உன்ன அவங்க மக  மாதிரி தானே அப்பாவும், அம்மாவும் பாக்குறாங்க, அப்பா அம்மா விட்டுடு டி. என்ன கூட விட்டுடு நான் உன்னை காதலிச்சேன், கல்யாணம் பண்ணி உன் கூட வாழ்ந்து இருக்கேன் நமக்கு ஒரு பையன் இருக்கான்..உன் மேல அன்பு காட்டுறதுக்கோ , அக்கறை வைக்கிறதுக்கோ ஒரு காரணம் இருக்கு. ஆனா, தேவ் ஏண்டி உனக்கு இவ்ளோ பண்ணனும். எவ்வளவு எபெக்ட் போட்டு இருக்கான். என்ன வார்த்தை சொல்லிட்டு வர ?  எங்களை எல்லாம் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது?  அப்ப எங்களை எல்லாம் நீ உறவாகவே நினைக்கலையா ? உனக்கு மொத்தமும் எல்லாம் உறவுமாக  இருக்கணும்னு நினைக்கிறேன்..ஆன நீ எங்களை பிரிச்சு பாக்குற இல்லையா?”என்றான் ஆதங்கமாகவும் வேதனையுமாக..

 

அவனை கட்டி அணைத்து கொண்டு அழுதாள்.

 

சிறிது நேரத்திற்கு பிறகு, தன்னை சமப்படுத்திக் கொண்டு வெளியில் வர ,

 

தேவ் அமைதியாக உட்கார்ந்து இருந்தான்.. எழிலும், தனமும் கூட அமைதியாக இருக்க. “சாரி அத்தை , சாரி மாமா, சாரி டா” என்று அனைவரிடமும் மன்னிப்பு கேட்டவள் “நான் இனி இதுபோல பேச மாட்டேன் .ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன்” என்று தன்னிலை உணர்த்தினாள்.

 

தனம் அவளை தன் தோளில் சாய்த்து கொண்டார்.

 

” இல்ல அண்ணி . உங்க நிலைமையில் இருந்து எனக்கு புரியுது “என்றவன் அமைதியாகி விட்டான்.

 

‘தன்னையும் கருத்தில் கொண்டுதான் இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கிறான், தான்  அவதிப்பட்டது போல் வேறு யாரும் அவதிப்பட்டு விடக்கூடாது ‘என்று யோசிக்கிறான் என்பதை உணர்ந்தவள்  அவனுக்கு  தோள் கொடுத்தாள் .

 

“உனக்கு என்ன வேணும் சொல்லு! என்னால் முடிந்ததை நான்  பண்றேன்”

 

” நீங்க எனக்கு எதுவும் பண்ண வேணாம். நான்  புடிச்ச வேலைக்கு போகணும்னு நினைச்சேன். இப்ப கிடைச்ச வேலைக்கு போறேன்.”

 

அனைவருக்கும் அதிர்ச்சி .”எதுக்குடா இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்க” என்றார்கள். 

 

“பிடிச்ச வேலைக்கு போனா எனக்கு மட்டும்தான் சந்தோஷம். ஆனா அது கிடைக்க கொஞ்ச நாள் ஆகும். நேரம் எடுக்கும். அதுவரை நான்  கிடைச்ச வேலைக்கு போனா என்னால ஒரு நாலு பேருக்கு சந்தோஷத்தை தர முடியும் .. கொஞ்ச நாள் போனதுக்கு அப்புறம் எனக்கு புடிச்ச வேலைக்கு போகிறேன், இப்போதைக்கு கிடைத்த வேலையை செய்கிறேன்”என்றவன் 

 

அந்த பையனை மறுநாள் பார்த்து தனது அப்பா ,அம்மா உதவி உடன் தங்களுக்கு தெரிந்த ஒரு இடத்தில் வாடகைக்கு இவர்களுக்காக தரும்படி பேசி அவர்கள் ரோட்டில் வைத்திருந்த கடையை அங்கு வைத்துவிட,

 

அந்த பெண்ணிற்கு பாதுகாப்பை எண்ணி, அவனுக்கு நோட் ,பேனா, பென்சில் வாங்கி கொடுத்து பள்ளியில் சேர்த்து விட்டான்.

 

அந்த அம்மாவும், அந்த பையனும் கையெடுத்து கும்பிட,

 

” நீ நல்லா படிச்சு அம்மாவை பார்த்துக்கணும் “என்று அந்த சிறுவனிடம் ஆயிரம் பத்திரம் சொல்லி விட்டு வந்தான்.

 

அதன் பிறகு தான் அவனுக்கு கவர்மெண்ட் ஸ்கூலில் படிக்கும் மாணவர்களில், நோட், பேனா ,பென்சில் இன்னும் இதர தேவைகளை வாங்க இயலாமல் இருக்கும் மாணவ மாணவிகளை படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணமே உதிர்த்தது.

 

இவனை மட்டும் இல்லை ,இது போன்று இருக்கும் ஒரு சிலரை தன்னால் பிரைவேட் ஸ்கூலில் படிக்க வைக்க முடியாது, அந்த அளவிற்கு வசதியும் இல்லை என்பதை உணர்ந்தவன். கவர்ன்மென்ட் ஸ்கூலில் படிக்கும் பசங்களுக்கு நோட்புக்கு வாங்க முடியாமல் தாய் தகப்பனை இழந்து நிற்பவர்களுக்கு உதவி செய்ய முன் வந்தான்.

 

அதற்காகவே கிடைத்த வேலையில் சேர்ந்தான். இப்படியே மாதங்கள் செல்ல, வேலு அவனுக்கு பிடித்ததாக ஒரு வேலையை நல்ல சம்பளத்தில் பார்த்து  சேர்த்து விட்டான்.அதன் பிறகு இன்னும் வருமானம் கூட, இரண்டு பிள்ளைகளின் படிப்பு செலவை எடுத்துக் கொண்டான்.

 

அப்பொழுதுதான் வித்யாவும் வேலும் தங்களது சம்பளத்தில் வாங்கி இருந்த ஒரு இடத்தையும் அவனுக்கு கொடுக்க முன் வந்தார்கள். அதற்கு தான் அவன் சத்தம் போட்டான். குகன் இருக்க நீங்க ஏன் இப்படி எல்லாம் செலவு பண்றீங்க என்று ,

 

குகனுக்கு நாங்க சேர்த்து வைக்கணும்னு அவசியம் கூட இல்ல தேவ். உனக்கு நாங்க சொல்ல வேண்டியது இல்லை என்று கூறியிருந்தாள். அவன் அமைதியாகி இருந்தான் .

 

“இல்ல கா..எனக்கு இன்னும் சில விசியம் புரியல “என்றாள் ரியா இப்பொழுது இடை மறித்து ,

 

“என்ன ரியா உனக்கு புரியல”. 

 

“அக்கா உங்களுக்கு பிரச்சனை இருந்துச்சு இல்லையா? மாமா கிட்ட வந்தா பயப்படுறது ,தம்பி அழுவது கூட உணராமல் ,அப்போ நீங்க ஹாஸ்பிடலுக்கு போகலையா ?”

 

தனம் தான் .”ஹாஸ்பிடல் கூட்டிட்டு  போனோம் ரியா. அவளுக்கு உடல் ரீதியா எந்த பிரச்சினையும் இல்ல ,மன ரீதியா தான் பிரச்சனை அப்படின்னு சொல்லிட்டாங்க. பால் கிடைக்கவில்லை என்று சொல்லி டாக்டர் பார்த்தோம். அவளுக்கு அதிர்ச்சியில் ,அது இல்லாம அவனுக்கு முதல் ரெண்டு  நாளுமே பால் கொடுக்க வைக்கல, அவளே அதிர்ச்சியில ,சோகத்துல இருக்கா அது இல்லாமல் மயங்கி வேற இருந்தான்னு ,அந்த ரெண்டு நாளும்  பவுடர் பால் கொடுத்து அட்ஜஸ்ட் பண்ணேன். அதுமே அவனுக்கு ஒத்துக்கல தான். இரண்டு நாள் பால் கொடுக்காமல் இருந்ததாலும், அதிர்ச்சியிலும் அவளுக்கு பால் வத்திடுச்சு. பால் கிடைக்கல. அதுக்கப்புறம் நானும் நிறைய நாட்டு வைத்தியம், இவளுக்கு பால் ஊறுவதற்கு பவுடர் என்று எல்லாம் வாங்கி கொடுத்து பார்த்தோம் .அப்போதும் கிடைக்கவில்லை.அதே மாதிரி அவளோட அந்த பிரச்சனையை சரி பண்றதுக்கு, மனரீதியான பிரச்சினை  என்பதால், நீங்க தான் சரி பண்ணனும் ..அவங்களுக்கு யாரெல்லாம் க்ளோஸோ ,அவங்க எல்லாம் அவங்க கிட்ட பேசுங்க அவங்களோட பழைய நினைவுகளை ஞாபகப்படுத்துங்க ன்னு சொல்லிட்டாங்க . அதை தான்  நாங்க எல்லாருமே செஞ்சோம்.”

 

“சரி, ஆன குகனுக்காக உங்க எதிர்காலத்துக்காக வாங்கின இடத்தை எதற்காக விக்கணும் கா?”.

 

வித்யா சிரித்துக் கொண்டே ,”எனக்கும் அவருக்கும் லவ் மேரேஜ் ரியா.” 

 

“அதான் தெரியுமே கா .”

 

“எங்க வீட்டுல முதல்ல எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கல. நாங்க “என்று நிறுத்த,

 

தனம் சிரித்துக் கொண்டே, “கொஞ்சம் வசதியான இடம் டா. சொந்தமா வீடு, காரு , இடம் , சொத்து பத்து எல்லாம் இருக்கு “என்றவுடன்..

 

ரியா அமைதியாக கேட்டுக்கொண்டாள் .

 

வித்யா ஆரம்பித்தாள். அப்பா ,அம்மா இறந்த உடனே நான் கொஞ்சம் அதிலிருந்து வெளியே வந்து உடனே, அப்பா ,அம்மாவுக்கு ஒரே வாரிசு நான் தான் சொல்லி சர்டிபிகேட் வாங்கி,எல்லா சொத்துக்களையும் குகன் பேருக்கு தேவ் தான் மாத்தினான்.அதுக்கு கார்ட்டியனாக  மட்டும் என்னையும், அவரையும் போட்டான் .

 

அம்மா ,அப்பா இருந்த வீட்டை வாடகைக்கு விட்டு, அந்த காசு குகன் பெயரில் பேங்குக்கு போயிடும், அதுக்கு கார்டியன் மட்டும்  நான். இன்னும் இருக்க கடை ,இடம் எல்லாமே குகன் பெயரில் தான் இருக்கு. இருக்க அந்த இடத்தை அப்படியே குகனுக்கு பிற்காலத்தில் யூஸ் ஆகும்னு வச்சிருக்கான்.அதை தொடக்கூடாது, தொடவும் முடியாது. நான் எந்த காலத்திலும் அதை எதையும் தொடக்கூடாது என்பதற்காகத்தான் முழுக்க முழுக்க குகன் பெயர்லையே எல்லாத்தையும் மாத்திட்டான். அனைத்து சொத்துக்களையும் நான் அனுபவிக்கலாம். ஆனால், எதையும் விற்கவோ இல்லை ,யாருக்கும் எழுதி தரவும் எனக்கு உரிமை இல்லை.”

 

நான் .”ஏன் டா எல்லாமே அவன் பெயரில் எழுதுற .. இப்போ இருக்க சூழ்நிலைக்கு நமக்கு தேவைப்படும் இல்லையா ?எனக்கே இப்போ நிறைய செலவு பண்ணி இருக்கீங்க ,அதுக்கு யூஸ் பண்ணிக்கலாம். அவர் கூட வேலைக்கு போகாம ரொம்ப நாள் வீட்டில் இருந்தாரு என் கூட” என்று கேட்டேன்.

 

அவன் அந்த சொத்து வேணும்னு நினைக்கல. என்ன மட்டும் தான் அவன் உறவா நினைச்சான்  என்றவளுக்கு கண்ணில் குளம் கட்டியது..

 

இப்பவும் குகனுக்கு தேவையான எல்லாமே இருக்கு. அம்மாவோட நகையெல்லாம் பேங்க் லாக்கர்ல இருக்கு ,கொஞ்சம் பணமும் பேங்க்ல இருக்கு ,எல்லாமே குகன் பேரில் இருக்கு.

 

“அந்த வீடு,இடம் ,இன்னும் இதர சொத்துக்களும், அதிலிருந்து வரும் பணத்தையோ ,நம் வீட்டு தேவைக்கு என்று எடுக்க வேண்டாம் .உங்களுக்கு ஏதாவது தேவைனா பேங்கில் இருக்கும் பணத்தை எடுத்துக்கோங்க. மற்றபடி, எந்த ஒரு இடத்திலும் இப்போதைக்கு கை வைக்க வேணாம். அவன் வளர்ந்து ஒரு ஆளா நிக்கும்போது ,அவனுக்கு என்ன தேவையோ ?அவன் படிப்பு செலவுக்கோ, அவன் எதிர்காலத்துக்கோ அதுக்கு மட்டும் இதில் கை வைங்க” என்று சொல்லித்தான் முழுக்க முழுக்க அனைத்தையும் அவன் பெயரில் எழுதி வைத்து எங்களை கார்டியனாக மட்டும் போட்டான். 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
13
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்